சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Khan11

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.

3 posters

Go down

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Empty ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.

Post by *சம்ஸ் Wed 1 Dec 2010 - 22:17

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Snakegod

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க

சீக்கிரம்..!'' எங்கே எந்தப் பாம்பைப் பார்த்தாலும் இதுபோன்ற கூக்குரல்கள் எழுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். "பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்று ஒரு பழமொழியும் இருக்கிறதே! மக்கள் வேறெதைக் கண்டும் அஞ்சுவதைவிட, பாம்பிற்குத்தான் மிக அதிகமாகப் பயப்படுகிறார்கள். நெடுங்காலமாகவே பாம்புகளை வணங்கி வருவது இந்த அச்சத்தின் காரணமாகத்தான். பாம்புகளுக்குப் பூஜை செய்வதை நீங்கள் நிறையப் பார்த்திருக்கலாம். பாம்பைப் பற்றிய மாயக் கதைகளும் நம்மிடையே நிறைய உண்டு.

சில பாம்புகள் விஷமுள்ளவை. அவை கடித்தால் மரணம்கூட ஏற்படலாம். இதன் காரணமாகத்தான் பாம்புகளைப் பற்றிய நிறைய கட்டுக்கதைகள் உருவாகியிருக்கின்றன. பயத்திற்கும் இதுவே காரணம். இது மட்டுமல்ல, பாம்புகள் மிகவும் விசித்திரமான உருவ அமைப்புடன் இருக்கின்றன அல்லவா? இதனாலும், மனிதர்கள் பாம்புகளை வெறுக்கின்றனர்.

ஆனால், பாம்புகள் மிகவும் பரிதாபமான பிராணிகள். பெரும்பாலும் இவை, எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காகவும், தங்கள் இரையைக் கொல்வதற்காகவும்தான் விஷத்தைப் பயன்படுத்துகின்றன. மேலே கூறியதுபோன்று, சில பாம்புகளிடம் மட்டுமே விஷம் உண்டு. பெரும்பாலானவை விஷமற்றவை என்பதுதான் உண்மை. உலகில் ஏறத்தாழ எல்லா இடங்களிலும் பாம்புகள் உண்டு என்றாலும், வெப்பப் பிரதேசம்தான் அவற்றின் மகிழ்ச்சியான வாழிடமாகும். வட துருவத்திலும், அயர்லாந்திலும், நியூசிலாந்திலும் பாம்புகள் இல்லையென்றே சொல்லலாம்.

பாம்புகள், எலிபோன்ற சிறிய பிராணிகளைக் கொன்று தின்று மனிதனுக்கு உதவி செய்கின்றன. பாம்பு நஞ்சைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பல மருந்துகள் மனிதர்களுக்கு புற்று நோய் மற்றும் இதய நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. நம் சுற்றுப்புறச்சூழலின் சமன்பாட்டைப் பராமரிப்பதில் பாம்புகளுக்கும் பங்கு உண்டு. மனிதர்களைக் கண்டால் அஞ்சி ஒதுங்கிச் செல்வது பாம்புகளின் இயல்பு. தாங்கள் தொல்லைப்படுத்தப்பட்டாலோ, காயப்படுத்தப்பட்டாலோதான் மனிதர்களைக் கடிக்கின்றன. பாம்புகளெல்லாம் மனிதர்களைக் கடிப்பதற்கென்றே பிறந்தவை என்பதும், அவை மனிதர்களின் எதிரிகள் என்பதும் மிகப்பெரிய முட்டாள்தனமாகும்.

பாம்பினங்கள் ஏறத்தாழ 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அவற்றின் முன்னோர்களான ஊர்வன இனங்களிலிருந்து பரிணமித்தவையாகும். ஆனால், மனிதக் குரங்கு முழு மனிதனாக உருமாறி 10 லட்சம் ஆண்டுகளே ஆகின்றன. பல்லிகள், ஓணான்கள், பாம்புகள், ஆமைகள், முதலைகள் ஆகியவையெல்லாம் ஊர்வன (RE​P​T​I​L​ES) இனத்தைச் சேர்ந்தவை. இவற்றிற்குப் பொதுவான சில அம்சங்கள் உள்ளன. இவை எல்லாமும் தரையில் ஊர்ந்துதான் செல்கின்றன. பாம்பைத் தவிர மற்ற ஊர்வனவற்றிற்கு (பல்லி, ஆமை, முதலை ஆகியவை) சிறிய கால்கள் உண்டு. ஆயினும், அவை இடம் பெயர்ந்து செல்லும் செயலில் கால்கள் பெரிய அளவில் பயன்படுவதில்லை. அவற்றின் முழு உடல் எடையையும் தாங்குவதற்கு அந்தச் சிறிய கால்களுக்கு வலு இல்லை என்பதுதான் காரணம்.

பல்லிகளிலிருந்தே பாம்புகள் பரிணமித்துள்ளன. பல்லிகளின் பல பழக்கவழக்கங்கள், பாணிகள் யாவும் இன்றும் எல்லாவிதப் பாம்புகளிலும் காணப்படுகின்றன. ஊர்வன இனத்தில் "ஒபிடியன்' என்ற பிரிவைச் சேர்ந்தவையே பாம்புகள். உலகில் இன்று 3,000 வகைப் பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நம் நாட்டில் காணப்படுபவை ஏறத்தாழ 270 வகைப் பாம்புகள். இத்தனை வகைகளில் ஏறத்தாழ 4 இனப் பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை. சராசரியாகப் பாம்புகள் 10 முதல் 20 ஆண்டுகாலம் வாழும். அரிதாக 30 ஆண்டுகள்கூட வாழும். பொதுவாகப் பாம்புகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்ந்தாலும், அவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். (புறச் சூழலுக்கேற்ப தனது உடல் வெப்ப நிலையை மாற்றிக்கொள்ளுதல்). 40 டிகிரி சென்டி கிரேடுக்கு அதிகமான வெப்பத்தில் பாம்புகளால் வாழ முடியாது. அதேபோல, 2 டிகிரி சென்டி கிரேடுக்கு கீழான வெப்பத்திலும் இருப்பதில்லை. மழைக்காலம் என்றால் பாம்புகளுக்கு மிகவும் பிடிக்கும்.

உலகிலேயே நீளமான பாம்பு ஆசிய மலைப்பாம்புதான். 10 மீட்டர் நீளமுடைய இது நமது கானகத்திலும் உண்டு. சிறு பாம்பு (WO​RM SN​A​KE OR TH​R​E​AD SN​A​KE) என்று அழைக்கப்படுவதுதான் உலகிலேயே சிறிய பாம்பு. இதன் அதிகபட்ச நீளம் ஏறத்தாழ 17 சென்டி மீட்டராகும்.

பாம்பு, "படம் எடுத்து' நிற்பது என்பது, பகைவர்களிடம் கோபம்கொண்டு அச்சுறுத்துவதற்கேயாகும். மற்றபடி, தமது இரையைப் பிடிப்பதற்கோ, பிறவற்றுக்கோ படத்தை விரித்துக் காட்டுவதில்லை. இவை நுனி பிளந்த நாக்கைக் கொண்டவை. உண்மையில் இது நாக்கு அல்ல. வாசனையின் மூலமாகவும், வெப்ப அலைகள் மூலமாகவும், இரையைக் கண்டறியும் உணர் கொம்புகளாகும். பாம்புகளின் முதுகுத் தண்டில் 400 இணைப்பு எலும்புகள் இருக்கின்றன. இவையே பாம்புகளுக்கு உடலைச் சுருட்டவும், எளிதில் நகர்ந்து சென்று இரையைப் பிடிக்கவும், தப்பிக்கவும் உதவுகின்றன. தண்ணீர்ப் பாம்புகள் மட்டுமல்ல, எல்லா வகையான பாம்புகளும் நன்கு நீந்துகின்றன. தண்ணீர் குடிக்கின்றன.

சிறிய பாம்பும் பெரிய இரையை விழுங்கிவிட இயலும். காரணம், பாம்பின் தாடை எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை அல்ல. மேலும், பாம்பின் பல் தொகுதியும் தனித்தனியே அசைந்து இரையை உள்ளே இழுக்கக்கூடியவை. பாம்பின்தோல் இடைவெளியோடு இணைந்த இரண்டு அடுக்குகளாக இருக்கும். இந்த இரண்டு தோல்களுக்கும் இடையில் ஒருவித நீர்மத்தைச் சுரக்கச் செய்து வெளிப்புறத் தோலை பாம்பு கழட்டுகிறது. பெண் பாம்புகள் முட்டையிடும் முன்பும் அல்லது குட்டிகளை ஈனுவதற்கு முன்பும் தனது தோலைக் கழட்டிக் கொள்கின்றன. உரிபட்ட சட்டை என்ற பாம்பின் தோல், பாம்பின் நீளத்தைவிட 20 விழுக்காடு அதிகமாக இருக்கும். இந்த செயல் பாம்பின் ஆயுள் முழுக்க நடைபெறுகிறது. பாம்பின் உடல் வளர்வதால்தான் சட்டை உரித்தல் நடைபெறுகிறது.

பாம்பின் சினைக்காலம் 4-லிருந்து 12 வாரங்களாகும். பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். பொதுவாக, ஆண் பாம்புகளே அடைகாக்கும். விரியன் போன்ற ஒரு சில பாம்புகள் குட்டிகளாகவே ஈனும். முட்டையிடும் பாம்புகள் 10 முதல் 100 முட்டைகள்வரை இடுகின்றன. பல்லிகளிலிருந்து உருவான பாம்புகள் பெருங்கடல், மலை,மரம், மணல் என எங்கும் வாழக்கூடிய அளவுக்கு வெற்றிகரமான உடலியங்கியலைக் கொண்டுள்ளன. பாம்புகளுக்கு உதடு, கண் இமை, காது, நாக்கு, முடி, வேர்வைச் சுரப்பி ஆகியவை கிடையாது. அதிர்வலைகளை உணர்ந்தே பாம்புகள் செயல்படுகின்றன. 100 முதல் 700 அதிர்வெண் வரை ஓலியை உணரும் சக்தி படைத்தவை பாம்புகள். நன்கு முகரக்கூடிய ஆற்றலும் பெற்றிருப்பவை.

பாம்பு விஷத்திற்கான விஷமுறிவு மருந்தை "எதிர் விஷம்' (அசபஐயஉசஞங) என்று சொல்கிறார்கள். முதலில், நான்கு விஷப் பாம்புகளின் விஷத்தின் கலவையை மிகவும் நீர்க்கச் செய்து குதிரைகளுக்குச் செலுத்துகிறார்கள். செலுத்தும் அளவை சிறுகச்சிறுக அதிகப்படுத்துகிறார்கள். அவ்வாறு, குதிரையின் ரத்தத்தில் விஷ எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. ஒரு நிலையை அடைந்த பிறகு குதிரையிடமிருந்து கொஞ்சம் ரத்தத்தை எடுக்கிறார்கள். அதில் உள்ள நீர்மத்தை பிரித்தெடுத்து உறையவைத்த பிறகு உலர வைக்கிறார்கள். பரிசோதனைக்குப் பிறகு இது 10 மி.லி. அளவில் பாட்டிலில் அடைக்கப்படுகிறது. இதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலேயே ஐந்து வருடங்கள் வரை வைத்திருக்கலாம்.

வாழும் இடத்திற்கேற்ற உரு மறைப்புகள் (இஞஙஞமஊகஅஎஉ), உயிரினங்களிலேயே பாம்புகளில்தான் அதிநுட்பமான முறையில் அமைந்துள்ளன. இலை, சருகு, குச்சி, புல், கல், மண், மணல் ஆகிய எல்லாவற்றின் பின்புலத்திலும் மறைந்துகொள்ளத் தக்கவாறு பாம்புகளின் உடலில் கோடுகள், விழி வடிவம், வட்டம், புள்ளி, நீள்வட்டம், சதுரம், அறுகோணம், முக்கோணம், பட்டைபோன்ற ஏராளமான வடிவ அமைப்புகள் காணப்படுகின்றன. பாம்புகள் மற்ற எல்லா உயிர்கள் செய்யக்கூடிய செயல்களையும் செய்வது பெரிதும் வியப்பிற்குரியது. பாம்புகள் நீந்துகின்றன, தவழ்கின்றன, பறக்கின்றன (பாம்புகள் உண்மையில் பறப்பதில்லை. பறக்கும் பாம்புகள் என்றழைக்கப்படும் ஒரு வகைப் பாம்புகள், காற்றில் சறுக்கிச் செல்கின்றன. இவை கிளைகளில் ஏறிச் சென்று மர உச்சியை அடைகின்றன. பிறகு தமது உடலில் உள்ள காற்றை வெளியேற்றி உடலைத் தட்டையாக ஆக்கிக்கொண்டு பாய்ந்து, கீழ்நோக்கி காற்றில் சறுக்கிச் சென்று மற்றொரு மரக்கிளையில் தொற்றிக்கொள்கின்றன. அதிகபட்சம் 50 மீட்டர். இது தமிழ் நாட்டிலும் உண்டு), பாய்கின்றன, மரமேறுகின்றன, நிற்கின்றன, உருமுகின்றன, புறளுகின்றன, தள்ளுகின்றன, இழுக்கின்றன, நடிக்கின்றன, விளையாடுகின்றன, சண்டையிடுகின்றன.

பாம்பின் எச்சில்தான் அதன் நஞ்சாக மாறியிருக்கிறது. நல்லப் பாம்பிடம் நாக மாணிக்கம் இல்லை. இது பொய். மாணிக்கம் என்பது நிலத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு வகைக் கல்லாகும். பாம்பு பால் குடிக்கும் என்பது உண்மையில்லை. சில பாம்புகளுக்கு இரு பக்கமும் தலை இருக்கும் என்பதும் தவறானது. மண்ணுளிப் பாம்பைப் பார்த்து இந்த எண்ணம் தோன்றியிருக்கலாம். இரையைப் பிடிக்க அதற்கு உருவான தகவமைப்பே இரு புறமும் தலை போன்று காணப்படுவதற்குக் காரணம். நல்ல பாம்பு மகுடிக்கு மயங்கி ஆடுவது இல்லை. பார்ப்பதற்கு அப்படித் தோன்றினாலும், மகுடியின் அசைவிற்கேற்ப தனது படத்தை விரித்து எதிரியை எச்சரிக்கும். விலங்குகளிலேயே பாம்புகளின் மீதுதான் உலக மக்கள் மிக அதிகமான மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.

பாம்பு கடித்ததால் ஏற்படும் மரணத்தைவிட பயத்தில் இறப்பவர்கள்தான் அதிகம். மேலும், நஞ்சுடைய பாம்புகள்கூட முதலில் பொய்க் கடிதான் கடிக்கின்றன. கடியின் தன்மை, நஞ்சின் அளவு, கடிபட்டவரின் மனோபலம் இவற்றிற்கு ஏற்பவே மரணம் நிகழ்கிறது. எனவே, எதிர்பாராத விதமாக பாம்பால் கடிபடும்போது, எந்த வகையான பாம்பு கடித்தது என்று உடனே அதன் முக்கிய அடையாளத்தைக் கவனிக்க வேண்டும். பெயர் தெரியாவிடில் அதன் வண்ணம், உடல் அமைப்பு, இயக்கம் இவற்றைக் கவனிக்க வேண்டும். இது, மருத்துவர் எந்த மருந்து தேவையென தேர்ந்தெடுப்பதற்கு உதவும். கடிபட்ட இடத்திற்கு ஒரு சாணுக்கு மேல் துணி அல்லது கைக்குட்டையால் சற்று இறுக்கமாக ஒரு கட்டுபோட வேண்டும். இந்த கட்டை குறிப்பிட்ட நேர இடைவெளியில் சற்று தளர்த்தி, தளர்த்தி ரத்த ஓட்டம் இயங்குவதற்கு வழி செய்ய வேண்டும். கை வைத்தியத்திலோ, சடங்கு சம்பிரதாயத்திலோ நேரத்தை வீணாக்கக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கடி பட்ட இடத்தை வாயில் வைத்து உறிஞ்சுவதோ, கத்தியால் கீறுவதோ முறையல்ல.

லட்சக்கணக்கான பாம்புகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. மனிதர்களின் கொடுஞ்செயலால் பல பாம்பினங்கள் அழிந்து போகின்றன. பாம்புகள் விவசாயிகளின் நண்பர்கள். ஏனெனில், அவை எலிகளைக் கொன்று விவசாயத்திற்குத் துணைபுரிகின்றன. இயற்கையின் சமநிலைக்குத் தகுந்த பங்காற்றுகின்றன. பாம்புகளின் வாழ்க்கை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். நமது உயிர் நமக்கு மிக முக்கியம். அதைப்போலத்தான், பாம்புகளுக்கும் இப் புவியில் வாழ உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாம்புகள் குறித்த அச்சமளிக்கும் கட்டுக்கதைகளையும் மூட நம்பிக்கைகளையும் ஒழிக்கவேண்டும். பாம்புகள் நம்மோடு வாழும் நம் நண்பர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Empty Re: ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.

Post by kalainilaa Thu 2 Dec 2010 - 11:44

:];:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Empty Re: ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.

Post by நண்பன் Thu 2 Dec 2010 - 14:05

படித்தேன் பல விசயம் அறிந்தேன் நன்றிகள் உரித்தாகட்டும் பாஸ் உங்களுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க. Empty Re: ஐயோ..! பாம்பு... பாம்பு... ஓடிப்போங்க.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum