சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவளே பேரரழகி...!
by rammalar Today at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Today at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Today at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Today at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Today at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Today at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Yesterday at 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Yesterday at 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Yesterday at 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Yesterday at 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Yesterday at 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Khan11

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு

2 posters

Go down

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Empty தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு

Post by *சம்ஸ் Tue 29 Oct 2013 - 8:22

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு 07ba396a-3103-476d-b942-4c5f2a1db27d_S_secvpf


ராமநாதபுரம், அக்.29–
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாராகிளைடிங் மற்றும் ஆள் இல்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நேற்று தொடங்கி உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன்னில் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு தேவரின பக்தர்கள் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்நாள் ஆன்மீக விழாவாக முடிந்த நிலையில் 2–வது நாளான இன்று அரசியல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பிரவேசம் போன்றவை சொற்பொழிவாக நிகழ்த்தப்பட்டன. நாளை (30–ம்தேதி) குருபூஜை தினம் என்பதால் அரசியல் கட்சியினர், சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் தலைமையில் போலீசார் பல பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார்சிங் முகாமிட்டுள்ளார்.
வெளிமாவட்டங்களில் இருந்து டி.ஐ.ஜி.க்கள், கண்காணிப்பாளர்கள், கூடுதல் உதவி கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டு மாவட்டத்தின் பதற்றமான பகுதிகள் உள்பட பல பகுதிகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக சிறப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதன் ஒரு முயற்சியாக வானில் பறந்து கண்காணிக்கும் வகையில் பாராகிளைடிங் பாராசூட் வரவழைக்கப்பட உள்ளது. சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த மணிக்கண்ணன், தான் பாராகிளைடிங் மூலம் கண்காணிப்பு பணியை செய்ய உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகணன் கூறியதாவது:–
பாராகிளைடிங் பாராசூட் இயக்க கற்றுத் தரும் பயிற்சியாளராக மணிக் கண்ணன், தனது பாரா கிளைடிங் பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வானில் பறப்பார். அவரது தலையில் அணிந்திருக்கும் ஹெல்மெட்டில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாழ்வாக பறக்கும் அவர் காமிரா மூலம் பதட்டம் ஏற்படும் இடங்கள், கூட்டம், போக்குவரத்து நெரிசல் போன்றவை பற்றி வயர்லெஸ் மூலம் தகவல் கொடுப்பார். அதனை வைத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று குற்ற நிகழ்வுகளை தடுப்பார்கள். இதுதவிர ஆள் இல்லா விமானமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பாரா கிளைடிங் பாராசூட் செயல்பாடு குறித்து அனைவருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பசும்பொன் செல்பவர் களை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச் சேத்தி, மானாமதுரை வழியாக செல்லும்போது அங்கு அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட ஆள் இல்லா விமானம் மூலம் அந்த பகுதியில் போலீசார் கண்காணிக்கிறார்கள். இந்த விமானம் மூலம் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியும். ரிமோட் மூலம் இந்த விமானத்தை இயக்க சென்னை அண்ணா பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் முதுகலை தகவல் தொழில் நுட்ப மாணவர்கள் 6 பேரும் வந்துள்ளனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதூகப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னையில் இருந்தே கண்காணிக்கும் வகையில், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் 'வெப்' காமிராவும் பொருத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு Empty Re: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 'பாராகிளைடிங்'–ஆள் இல்லா விமானம் மூலம் கண்காணிப்பு

Post by பானுஷபானா Tue 29 Oct 2013 - 12:44

:”@: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)
» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
» அணையை பாதுகாக்க செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு
» பஞ்சத்தால் வாடும் சோமாலியாவுக்கு ஐ.நா. விமானம் மூலம் நிவாரண உதவி
» இங்கிலாந்தில் சமையல் எண்ணை மூலம் இயங்கிய பயணிகள் விமானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum