சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தெரிந்துக் கொள்ளுங்கள் Khan11

தெரிந்துக் கொள்ளுங்கள்

3 posters

Go down

தெரிந்துக் கொள்ளுங்கள் Empty தெரிந்துக் கொள்ளுங்கள்

Post by ராகவா Sun 9 Feb 2014 - 13:16

எச்சரிக்கை!

அக்காலத்தில் சுரங்கங்களில் வேலை செய்பவர்களுக்காகப் பாதுகாப்பான விளக்கு ஒன்றை 1815-ஆம் ஆண்டு சர் ஹம்ஃப்ரி டேவி என்பவர் கண்டுபிடித்தார். இவர் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியாவார். இந்த விளக்கு சுரங்கத்திற்குள் அணைந்துவிடாமல் இருக்கும். வெடிவிபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் சுரங்கத்தில் இருந்தால், இந்த விளக்குச்சுடர் பெரிதாக எரிந்து எச்சரிக்கை செய்யும். இந்த விளக்கை உருவாக்கிய ஹம்ஃப்ரி டேவிதான் மயக்க மருந்தையும் கண்டுபிடித்தார். கால்சியம், போரான் பேரியம் போன்ற மூலகங்களையும் கண்டுபிடித்தார்.
-அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.

தெரியுமா?

• "குட் பை' என்று ஒருவரை வழியனுப்பும்போது சொல்கிறோம். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ‘எர்க் க்ஷங் ஜ்ண்ற்ட் ஹ்ர்ன்’ என்பதாகும்.
• "உதாரணமாக' என்பதை ‘ங்.ஞ்’ என்று குறிப்பிடுகிறோம். இந்த லத்தீன் சொல்லின் விரிவு "எக்ஸம்ப்ளி கிரேஷியா' என்பதாகும்.
• "கிரிபெஸ்' என்னும் பறவை உணவு கிடைக்காதபோது தன்னுடைய இறகுகளையே உணவாக உண்ணும்.
• ஒரு கிராம் நைட்ரஜனில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை தெரியுமா? 6-க்குப் பக்கத்தில் 23 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண்தான்.
-அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.

நீளக் கால்வாய்

• உலக நாடுகளில் உள்ள தேசியக் கொடிகளில் 46-இல் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது. 9 கொடிகளில் வளர்பிறை சின்னம் இடம்பெற்றுள்ளது.
• கொசுக்கள், ஈ போன்றவை உடலின் மீது உட்கார்ந்ததும் யானை தன் தோலைச் சுருக்கும். அப்போது அவை தோலின் மடிப்புகளில் சிக்கி இறந்துவிடும்.
• உலகிலேயே மிக நீளமான, பழமையான கால்வாய் சீனாவில் உள்ள "கிராண்ட்' கால்வாய் - நீளம் 1,608 கி.மீ.
• கடல்வாழ் விலங்கினங்களில் ஆக்டோபஸ் மிகவும் தைரியம் வாய்ந்தது. மிகப் பெரிய திமிங்கலத்தைக்கூட ஆக்டோபஸ் எதிர்க்கும்.
-பிரியதர்ஷினி, திருநெல்வேலி.


தெரியுமா?

• மீன் இனங்களில் அதிக ஆண்டுகள் வாழ்வது ஸ்டர்ஜியன் என்னும் மீன். அது 100 ஆண்டுகள் வாழும்.
• திமிங்கலத்தின் மூளையின் எடை 250 பவுண்டு.
• பின்பக்கமாக நீந்தும் ஒரே மீனினம் இறால்.
• முதன்முதலாக மனிதனால் பிடித்து வளர்க்கப்பட்ட மீன் ""கோல்டு ஃபிஷ்''
• முதலையால் எலும்புகளையும் செரிக்க முடியும்.
-ரா. பாலாஜி, திருநெல்வேலி.

பெயர் வகைகள்!

1. ஆட்டோநிம் - இயற்பெயர்
2. கோக்னோநிம் - அடைபெயர்
3. கிரிப்டோநிம் - மறைபெயர்
4. ஹிப்போகோரிசம் - செல்லப் பெயர்
5. சூடோநிம் - புனை பெயர்
6. பாலினிமஸ் - பல பெயர்கள்
7. சூடான்டரி - ஒரு பெண் ஆணின் பெயரை
புனைபெயராக வைத்தல்.
8. சூடோக்னி - ஒரு ஆண் பெண்ணின் பெயரை புனைபெயராக வைத்தல்.
-ரா. பாலாஜி, திருநெல்வேலி.

இந்திரா காந்தியின் கைப்பை

காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தியின் கரத்தில் நீங்கா நிழல்போல எப்பொழுதும் கைப்பை ஒன்று இருக்கும். அந்தப் பையில் புனிதமானது என அவரால் கருதப்படும் பகவத்கீதை பத்திரமாக அடங்கியிருக்கும்.

கிளிகளும் மாரடைப்பு நோயும்

வான மண்டலத்தில் பறந்தபடி மரக்கிளைகளில் வாசம்புரியும் கிளிகளுக்கு மாரடைப்பு நோயே வராது. ஏனென்றால், அவைகள் சூரியகாந்தி விதைகளை அதிக அளவில் உணவாக உண்ணுகின்றன.
சூரியகாந்தி விதைகளில் அமைந்துள்ள ""லினோலீக்'' என்ற அமிலத்திற்கு ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகின்ற சக்தி இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இதைச் சாப்பிடுபவர்கள் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
-கலவை
பா. வரதன்.

ஹோவர்க்ராப்ட் ஊர்திகள் (HOVER CRAFT)

ஹோவர்க்ராப்ட் என வழங்கப்படும் ஊர்தி, உருவில் கப்பலைப்போன்று இருக்கும். இதன் சிறப்பு யாதெனில் இவ்வகை ஊர்தி நீரிலும், நிலத்திலும் இயங்கும் என்பதே.
இந்த ஊர்தியின் அடிப்பாகத்தில் சிறப்பு விசை இயக்கிகள் உள்ளன. இந்தச் சிறப்பு விசை இயக்கிகளை இயக்கியவுடன் ஊர்தியின் அடியில் தேவையான அளவு சக்தி வாய்ந்த காற்று பீய்ச்சப்படுகின்றது. இந்தக் காற்றுப் படுக்கையில் மிதந்தவாறு
ஹோவர்க்ராப்டு ஊர்தி தன் இலக்கை நோக்கிச் செல்கிறது. ஊர்தி இயங்குகின்றது. ஊர்தியில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஊர்தியினை முன்னோக்கிச் செலுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும் உதவுகின்றன.
ஹோவர்க்ராப்ட் ஊர்திகள் இரு வகையானவை: முதல் வகை ஊர்திகளில் காற்றுப் படுகை தரை அல்லது நீர்மட்டத்திலிருந்து சில அங்குல உயரமே உள்ளது. இவ்வகை ஊர்திகள் சீரான மேற்பரப்பு உள்ள நில அல்லது நீர்ப் பரப்புகளின் மீது இயங்க உபயோகமானவை. இரண்டாம் வகை ஊர்திகளில் காற்றுப்படுகை பல அடி உயரத்திற்கு இருப்பதால் இத்தகைய ஊர்திகளை நீர், கரடுமுரடனான நிலம், பனிப்பிரதேசம் போன்ற எத்தகைய நிலைமைகளிலும் இயக்க முடியும்.
ஹோவர்க்ராப்ட் ஊர்தி படகுகளைவிட வேகமாகச் செயல்படுவதுடன் சிறிய வளைவுகளில் திருப்ப முடிவதால் இத்தகைய ஊர்திகள் பரவலாக சிறு கடல் உல்லாசப் பயணங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
-தங்க. சங்கரபாண்டியன்,
சென்னை.

NEWS என்றால் NORTH EAST WEST SOUTH

இதேபோல் -

COLD = CHRONIC OBSTRUCTIVE  LUNG DISEASE

JOKE = JOY OF KIDS ENTERTAINMENT

CHESS = CHARIOT HORSE ELEPHANT SOLDIERS

AIM = AMBITION IN MIND

EAT = ENERGY AND TASTE

PEN =  POWER ENRICHED NIB

SMILE = SWEET MEMORIES IN LIP EXPRESSION

DATE = DAY AND TIME EVOLUTION

BYE = BE WITH YOU EVERY TIME

-மு. அகமது அபுனாலஃபான், திருச்சி.
நன்றி:சிறுவர்மணி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்துக் கொள்ளுங்கள் Empty Re: தெரிந்துக் கொள்ளுங்கள்

Post by ahmad78 Sun 9 Feb 2014 - 16:32

தகவல்கள் தெரிந்துகொண்டேன். பதிவிற்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தெரிந்துக் கொள்ளுங்கள் Empty Re: தெரிந்துக் கொள்ளுங்கள்

Post by மீனு Sun 9 Feb 2014 - 16:46

மிக்க நன்றி அச்சலா அரிய தகவல் :”@: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தெரிந்துக் கொள்ளுங்கள் Empty Re: தெரிந்துக் கொள்ளுங்கள்

Post by ராகவா Sun 9 Feb 2014 - 16:47

மீனு wrote:மிக்க நன்றி அச்சலா அரிய தகவல் :”@: 
 !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்துக் கொள்ளுங்கள் Empty Re: தெரிந்துக் கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum