சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:26 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Khan11

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

3 posters

Go down

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Empty உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

Post by ஹம்னா Wed Feb 16, 2011 11:08 pm

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  E_1295120787

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நன்றாக இல்லாவிட்டாலும் பொறுத்து கொள்பவர்கள், வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தை பொறுத்து கொள்ள மாட்டர். “ஹாலிடோசிஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த வாய் துர்நாற்றத்திற்கு வாய், மூச்சுப்பாதை, உணவுப்பாதை ஆகியவற்றில் பெருகும் நுண் கிருமிகளே காரணம். வாயிலிருந்து என்ன வாடை வருகிறது என்பதை ஆராய்வதைவிட, வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முதற்காரணமான பற்களை, சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இன்று நாம் உபயோகிக்கும் பலவிதமான பற்பசைகளில், உயிருக்கே உலை வைக்கும் பல அபாயகரமான பொருட்கள் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டால், பலரும் நம் பாரம்பரிய பற்பொடியை பயன்படுத்த ஆரம்பித்து விடுவர். துணி துவைக்க பயன்படும் காஸ்டிக் சோடா என்ற டிடர்ஜென்ட் பொடி, ஆய்வகங்களில் கிருமிநாசனியாக கண்ணாடி கலன்களை கழுவ பயன்படும் பார்மால்டிஹைடு, பெட்ரோலியம் சுத்திகரிக்கும் பொழுது, கழிவாக கிடைக்கக் கூடிய பாரபின் மெழுகு மற்றும் கிளிசரின், கரும்பலகைகளில் எழுத பயன்படும் சாக்பீஸ், பெயின்ட் தயார் செய்ய பயன்படும் டைட்டானியம், கேக் தயார் செய்ய பயன்படும் சாக்கரின், துணிகளின் சாயத்திற்கு பயன்படும் சாய நிறமிகள். இது மட்டுமின்றி, இவற்றை அடைத்து வைக்க பயன்படும் ககீயம் பூசப்பட்ட அலுமினிய அல்லது பிளாஸ்டிக் குப்பி ஆகியவை தான், நாம் உபயோகிக்கும் பற்பசையிலுள்ள அபாயகர பொருட்கள். பாரம்பரியமாக நாம் பயன்படுத்திய பற்பொடிகளில், இது போன்ற அபாயங்கள் இருப்பதில்லை. கவர்ச்சியான, வண்ணமில்லாத, செயற்கை வாசமில்லாத இயற்கை மணத்துடன் கூடிய பெரும்பாலான மூலிகை பற்பசைகள், நமக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதுபோன்ற மூலிகை பற்பசைகளில் பயன்படும் சிறப்பான மூலிகை தான் “தேஜாவதி!’ “சேந்தோசைலம் அலாட்டம்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “ரூட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த தேஜாவதி, பல்வலி மரம் மற்றும் தும்புரு என்ற பெயர் கொண்டது. வடமாநிலங்களில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகையான மரங்களின் பழம் மற்றும் பட்டைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.


இவற்றிலுள்ள லினாலூன், சிட்ரால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், தம்புலின், தம்புலால் போன்ற பொருட்கள், பல் மற்றும் ஈறுகளில் வளரும் கிருமிகளை அழித்து வாய் துர்நாற்றத்தை நீக்கி, பற்களை சுத்தம் செய்கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமண எண்ணெய் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. உலர்ந்த தேஜாவதி பழங்கள், கருவேலம்பிசின், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல், வாய்விடங்கம், நொச்சிப்பட்டை, வேம்புபட்டை, ஓமம், கிராம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடித்து, சலித்து பல் துலக்கி வர வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறில் ரத்தம் வடிதல் ஆகியன நீங்கும். சித்தா ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும் இமாலயா மூலிகை டென்டல் கிரீம் மற்றும் பல்வேறு வகையான மூலிகை பற்பசைகளில் தேஜாவதி சேர்க்கப்படுகிறது.


உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Empty Re: உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

Post by ஹம்னா Wed Feb 16, 2011 11:16 pm

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் குறையுமா?

முட்டைகோசை பச்சையாகவோ அல்லது ஆவியில் வேகவைத்தோ உட்கொள்வதால் பசி குறையும். பெரும்பாலும் முட்டை பொரியல், அசைவ வறுவல், குழம்புகள் செய்யும் போது வதக்க வேண்டிய வெங்காயத்திற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவதால் எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியம் குறைகிறது. ஆனால், அடிக்கடி முட்டைகோஸ் உண்பதால் யூரிக் அமில மாறுபாடு, மூட்டுவலி, சிறுநீரக கற்கள் உண்டாகலாம். ஊட்டச்தச்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி, உங்கள் உடல் பருமனுக்கான காரணத்தை அறிந்து எடையை குறையுங்கள். நம் உடலில் இடப்பக்கம் இதயமும், வலப்பக்கம் கல்லீரலும் என அனைவருக்கும் இட, வலப்பக்கங்களில் உறுப்புகள் ஒரே மாதிரி அமைந்துள்ளன. ஆனால், சிலருக்கு இடப்பக்கத்திலுள்ள உறுப்புகள் அனைத்தும் வலப்பக்கத்திலும், வலப்பக்கத்திலுள்ள உறுப்புகள் இடப்பக்கத்திலும் பிறவியிலேயே அமைந்து விடுகின்றன. “சைட்டஸ் இன்வர்சஸ் டோட்டாலிஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிலை 25 ஆயிரத்தில் ஒரு பிறவிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவில் இருக்கும் பொழுதே இந்த மாற்றம் ஏற்படுகிறது. வளர்ச்சிக்கான ஜீன்கள் மற்றும் சில ஆட்டோசோம் குரோமசோம்களின் மாறுபாடுகள் போன்றவற்றால் இந்த குறைபாடு தோன்றுகிறது. இது போன்றவர்களுக்கு அப்பன்டிசைட்டிஸ், கோலிசிஸ்டைட்டிஸ், பான்கிரியாடைட்டிஸ் போன்றவற்றால் வலி ஏற்படும்பொழுது, சாதாரணமானவர்களுக்கு தோன்றும் இடங்களில், இந்த வலி தோன்றாமல் அதற்கு எதிர்பக்கத்தில் தோன்றுவதால், தவறான மருத்துவ கணிப்பு செய்யவும் வாய்ப்புள்ளது. எக்ஸ்-ரே, அல்ட்ராசோன் மற்றும் மருத்துவரின் நேரடி பரிசோதனையின் மூலம் சைட்டஸ் இன்வர்சஸ் என்ற உடல் உள்ளுறுப்புகளின் மாறுபட்ட இட அமைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை



உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Empty Re: உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

Post by அர்சாத் Wed Feb 16, 2011 11:21 pm

நல்ல பதிவுக்கு நன்றி
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Empty Re: உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

Post by விஜய் Wed Feb 16, 2011 11:41 pm

நன்றி மேடம் பதிவிற்க்கு
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”  Empty Re: உங்கள் “”பேஸ்ட்”ல் தப்பு இருக்கா ? தீர்வுக்கு இருக்கு “”தேஜாவதி !”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum