சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Today at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Khan11

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Go down

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Empty நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உறுதி

Post by ராகவா Mon 26 May 2014 - 18:52

புதுடில்லி: இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையில் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்ற பின், பிரதமர் அலுவலக இணையதளம் வழியாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 16ம் தேதி இந்திய மக்கள் தங்களுடைய தீர்ப்பை அளித்துள்ளனர், நாட்டின் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அவர்கள் வாக்களித்துள்ளனர். நாடு இதுவரை காணாத புதிய உச்சத்தை அடைவதற்கான பயணத்திற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம். அதற்காக நாட்டு மக்களின் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். ஒன்றிணைந்து நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம். வலிமையான, வளர்ச்சியுடைய மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கும் நமது கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்.
பிரதமர் அலுவலக இணையதளம், பிரதமருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையேயான மிக முக்கியமான ஊடகம். தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் சமுதாய ஊடகங்களின் சக்தியில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த இணையதளம் வழியாக, எனது உரைகள், பணி திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், மத்திய அரசின் சார்பில் துவங்கப்படும் திட்டங்கள் குறித்தும் இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மோடி தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Empty நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Post by ராகவா Mon 26 May 2014 - 18:54

புதுடில்லி: இது வரை இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று பா.ஜ., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி பீடத்தில் அமர்கிறது. பா.ஜ.,வில் குஜராத்தை சேர்ந்த நரேந்திரமோடி இன்று மாலை 6.10 மணிக்கு பிரதமராக பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளி பந்தலில் மோடியுடன் அமைச்சர்களாக 44 பேர் பொறுப்பேற்று கொண்டனர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மோடி பதவியேற்பு விழாவில் , மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரதீபாபாட்டீல் , துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல், பதவிக்காலம் முடிந்த சபாநாயகர், மீராகுமார், பூட்டான் மன்னர், மொரிஷீயஸ் அதிபர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, வாழும் கலை குரு ரவிசங்கர்ஜி, அனில் அம்பானி, கோகிலா அம்பானி, நடிகர் சல்மான்கான், ஹேமா மாலினி, இசையமைப்பாளர் பப்பி லஹிரி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும் மன்மோகன்சிங்கிற்கு வணக்கம் தெரிவித்தனர்.

இது வரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இந்திய பிரதமர் பதவியேற்கும் விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களான ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, நேபாள் பிரதமர் கொய்ராலா, மாலத்தீவு அப்துல் கயூம், வங்கதேச சபாநாயகர் , ஆகியோர் பங்கேற்கின்றனர். உலகம் முழுவதும் இருந்து தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


ஏழை தாயின் மகன்: * கடந்த வாரத்தில் பா.ஜ., கட்சி கூட்டத்தில் நடந்த கூட்டத்தில் மோடி கண்ணீர் விட்டு கலங்கியபடி பேசுகையில், நான் ஒரு ஏழைத்தாயின் மகனாக உங்கள் முன்நிற்கின்றேன். இந்நாட்டு ஏழைகளை காக்கும் அரசாக எனது புதிய அரசு இருக்கும் என்றார்.

* மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இது போன்ற வரலாற்று புகழ் வாய்ந்த வெற்றியை அளித்துள்ளனர். மக்களின் எண்ணமும், நம்பிக்கையும் ஈடேறும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்.


* ஆட்சி குறித்து நான் ரிப்போர்ட் கார்டு தருவேன் என்றும் உறுதியளித்தார்.


இன்று மாலை பொறுப்பேற்ற பின்னர் முதல் பணியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் சார்க் நாடுகளின் தலைவர்களை சந்தித்து அண்டைய நாடுகளின் உறவு குறித்து விவாதிக்கிறார்.


புதிய உறவை ஏற்படுத்தும் : மோடி பதவியேற்பு விழாவிற்காக, தான் இந்தியா வந்திருப்பதை சிறந்த தருணமாக கருதுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப் கூறியதாவது, தற்போதைய அளவில் இருநாடுகளுக்கிடையே நிலவி வரும் வேறுபாடுகள், அவநம்பிக்கை உள்ளிட்ட எதிர்மறையான அம்சங்களை களைவதற்கான சிறந்த வாய்ப்பாக, இப்பயணத்தை நான் கருதுகிறேன். கலை , பாரம்பரியம் உள்ளிட்டவற்றில் இருநாடுகளும் ஒன்றுபட்டு விளங்கும் நிலையில், அனைத்து விவகாரங்களிலும் இணைந்து செயல்படும் பொருட்டு, ஒரு புதிய உறவை, இப்பயணம் ஏற்படுத்தும் என்று தான் கருதுவதாக ஷெரீப் கூறியுள்ளார்.


44 பேர் அமைச்சர்கள் : நரேந்திரமோடி அமைச்சரவையில் மோடி உள்பட 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பாகவும் பதவி வகிப்பர்.


7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து : மோடி தலைமையில் பொறுப்பேற்கும் அமைச்சரவையில் 7 பெண்களுக்கு காபினட் அந்தஸ்து அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தர்கண்ட், இமாச்சல், கேரளா, மாநிலத்திற்கு மத்தியஅமைச்சர் யாருமில்லை. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு அமைச்சரவையில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.


தமிழகத்திற்கு ஒரு அமைச்சர்: தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சரானார்.


தமிழக முதல்வர் ஜெ., புறக்கணிப்பு: இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெ., பங்கேற்கவில்லை. இது போல் ம.தி.மு.க., தரப்பில் டில்லியில் கறுப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

மோடி பதவியேற்பு விழாவில் திரை நட்சத்திரங்கள் , பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், பங்கேற்பதாக இருந்தது. ஆனால் லதா மங்கேஷ்கர் உடல் நலம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் இலங்கை தமிழர்கள் விவகாரம் தொடர்பாக பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டார். மோடியின் வேட்பு மனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரர் கிரன்மகிதா பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Empty 'ரயில் நிலையங்களில் டீ விற்றவர் '- பிரதமராகும் நரேந்திரமோடிவரலாறு

Post by ராகவா Mon 26 May 2014 - 18:56

ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் அனைத்து மக்களும் சமம்; மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்வர். இதன்படி சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலான முடிவு, நேர்மறை எண்ணம் ஆகியவற்றால் நாட்டின் 15வது பிரதமராக இன்று பதவி ஏற்கிறார். இந்தியாவின் மேற்கில் குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில் 1950, செப்.17ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் மோடி பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி -ஹீரா. பள்ளியில் படிக்கும் போதே "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பங்கேற்க தொடங்கினார். இளம் வயதில் சகோதரருடன் இணைந்து "டீ' கடை நடத்தினர். ரயில் நிலையங்களில் டீ விற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் "அரசியல் அறிவியலில்' முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.


பொறுப்புகளுக்கு அசராதவர்: 1987ல் பா.ஜ., வில் சேர்ந்தார். 1995ல் ஐந்து மாநிலங்களுக்கு பா.ஜ., தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். பின் 1998ல் குஜராத் மற்றும் இமாச்சலில் நடந்த தேர்தலில், பா.ஜ., ,சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இப்பணியை திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


"ஹாட்ரிக்' வெற்றி : மோடி முதல்வராக பதவியேற்ற போது, பூகம்பத்தின் பாதிப்பால் மாநிலம் பின் தங்கிய நிலையில் இருந்தது. பின் அடுத்தாண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவமும் மாநில வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைந்தது. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர், நாட்டிலேயே குஜராத்தை பல துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். 2002 , 2007, 2012 என தொடர்ந்து வெற்றி பெற்று, 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே.


காந்திநகர் டூ டில்லி ; 2012 சட்டபை தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்ற தொண்டர்கள், இவரை "அடுத்த பிரதமர்' என்று கோஷமிட்டனர். அவர்களின் நம்பிக்கையின் படி, 2013 செப்., 13ம் தேதி, கோவாவில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கினார். இடைவிடாத பிரசாரம் மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்தார். சாதாரணமாக இருந்த 2014 அரசியல் களம், மோடி அலையாக மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "நமோ' கோஷம் ஒலித்தது. மே 16ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மோடி இன்று பிரதமராகிறார்.


நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் Empty Re: நாட்டின் 15 வது பிரதமரானார் நரேந்திரமோடி! ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum