சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

கால் மாறி ஆடிய கதை! Khan11

கால் மாறி ஆடிய கதை!

Go down

கால் மாறி ஆடிய கதை! Empty கால் மாறி ஆடிய கதை!

Post by rammalar Sat 7 Jun 2014 - 16:30

கால் மாறி ஆடிய கதை! Panja_sabai3-
விராலிமலை திருப்புகழில்
"சீரான கோல கால நவமணி'' என்று துவங்கும்
பாடலில் "ஏராரு மாட கூட மதுரையில் மீதேறி
மாறியாடு மிறையவர்'' என்ற அடியில் ஒரு
புராணக் கதையைச் சுட்டுகிறார் அருணகிரி நாதர்.
-
மதுரையை ஆண்ட விக்கிரம பாண்டியனின்
புதல்வன் ராஜசேகர பாண்டியன் சோமசுந்தரக்
கடவுள் மேல் தீவிர பக்தி கொண்டவன்.
நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த அவன் ஆய
கலைகள் அனைத்திலும் பெரும் பயிற்சியும்,
திறமையும் பெற்று விளங்கினான்.
ஆனால், நடனக் கலை பற்றிய பரத சாத்திரத்தை
அவன் பயிலவில்லை.
-
அந்தச் சமயம் சோழ நாட்டிலிருந்து ஒரு புலவன்
பாண்டியன் பேரவைக்கு வந்தான். அவன்
கரிகாற்சோழனின் அவைப்புலவன். அவன்,
"பாண்டிய வேந்தே! எமது மன்னர் 64 கலைகளிலும்
வல்லவர். ஆனால், நீங்களோ ஏனைய 63
கலைகளிலும் வல்லவராய் இருந்தும்
சிவபெருமானுக்கு உகந்த நடனக் கலையை மட்டும்
பயிலாது இருப்பதன் காரணம் புரியவில்லை!''
என்றான்.
-
ஆமாம். பாண்டியனுக்கும் அது புரியவில்லைதான்!
இத்தனை நாள் நடனக் கலையை ஏன் தான் கற்க
வில்லை என்று தன்னையே கேட்டுக் கொண்டான்.
பின்பு அந்தக் கலையையும் கற்று அதிலும்
பாண்டித்தியம் பெற்று விடுவது என்று உறுதி பூண்டு
பரதக் கலை வல்லுநர்களை வரவழைத்து
அவர்களுக்குத் திரண்ட பொன்னும் பொருளும் தந்து
ராப்பகலாய் உழைத்து பரதக் கலையைப் பயின்றான்.
-
ஒருநாள் நெடுநேரப் பயிற்சிக்குப் பின் அவனுக்குக்
கால் மிகவும் வலித்தது. அப்போது அவன் மனதில்
ஒரு எண்ணம். சிறிது நேரப் பயிற்சிக்கே நமக்குக்
கால் இப்படி வலிக்கிறதே.. நடராஜமூர்த்தி
அனவரதமும் ஓயாது நடனம் புரிந்தவாறே இருக்கிறாரே.
அவருக்குக் கால் எப்படி வலிக்கும்?
ஆனால், அவர் கால் வலிக்கிறது என்று நடனமாடுவதை
நிறுத்திவிட்டால் உலக இயக்கமே நின்று விடுமே.
அதனால் காலை மாற்றி ஆட வேண்டுவோம் என்று
நடராஜ மூர்த்தியை விழுந்து வணங்கி,

"பெருமானே! எப்போதும் நீங்கள் வலது காலை
ஊன்றியே நடனம் புரிகின்றீர்கள். இப்படி ஓய்வேயின்றி
வலது காலை ஊன்றி நீங்கள் நடனமாடுவதைக்
கண்டு எனக்குக் கால் வலிக்கிறது! பெருமானே!
அருள்கூர்ந்து இடது காலை நிலத்தில் ஊன்றி
நடனமாடுங்கள். வலது காலுக்குச் சற்று ஓய்வு
தாருங்கள். நீங்கள் அப்படிக் கால் மாறி ஆடித்
தரிசனம் தரவில்லை என்றால் இதோ இந்த
வாளின் மீது விழுந்து உயிர் விடுவேன்!'' என்று
ஆவேசமாகக் கூறித் தன் உடைவாளை உருவிச்
செங்குத்தாய் நிறுத்தினான் பாண்டியன்!
-
பாண்டியனின் தீவிர பக்தியைக் கண்டு உள்ளூர
வியந்து இறைவன் தன் இடக்காலை ஊன்றி வலது
காலைத் தூக்கி மாறி நடனம் புரிந்தார்! பாண்டியன்
அக்காட்சியைத் தரிசித்து மனம் மகிழ்ந்து இந்த
அற்புதத் திருநடனத்தை எல்லோரும் கண்டு மகிழ
இதுபோலவே வெள்ளியம்பலத்தில் விளங்க வேண்டும்
என்று வரம் கேட்க இறைவனும் அப்படியே அருள்
பாலித்தான்.
-
அன்று முதல் இன்றளவும் மற்ற தலங்களில்
விளங்கும் நடராஜப் பெருமான் வலக்காலை ஊன்றி
இடது காலைத் தூக்கி விளங்க, மதுரை நகராகிய
வெள்ளியம்பலத்தில் மட்டும் இடது காலை நிலத்தில்
ஊன்றி வலது காலைத் தூக்கி நடனம் புரிவதைக்
காணலாம்!
-
-----------------------------------

>மயிலைசிவா

நன்றி: வெள்ளி மணி



_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum