சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..! Khan11
பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..! Www10

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Go down

Sticky பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Nisha on Mon 9 Jun 2014 - 13:11

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!


பெண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார்..? ஏவாளை முதலில் படைத்து, பின் அவளின் விலா எழும்பிலிருந்து ஆதாமை படைத்திருக்கக்கூடாதா..?' என்பதான கருத்துக்கள் கூட புதிதில்லைதான். 'ஆண்தான் முதலில்' என்ற கருத்தாக்கம் மனதெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்கும். அதில் வியப்பேதும் இல்லை. அந்த வரலாற்றின் வீதிகளிலிருந்து, நடைமுறை வாழ்வு வரைக்கும் பெண் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருப்பது குடும்பம் என்னும் அமைப்புதான்.

அதிகாலை தூக்கத்தின் சுகம்(?) குறித்து சிலாகிக்கும் கவிதைகள், கதைகள் நிறைய படிக்கிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆனால், 95 % பெண்கள் அதிகாலை தூக்கம் துறந்து பல தலைமுறைகளாகிவிட்டது. கிராமமென்றால் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, வீட்டு முற்றம் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரம் விளக்கி, மாட்டுக் கொட்டகை கூட்டி, சாணம் அள்ளி எருக்குப்பையில் போட்டு, குடிக்க நல்ல தண்ணீரும், புழங்க உப்புத்தண்ணீரும் எடுத்து வைத்து, பிள்ளை மற்றும் கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து... அவள் நிமிரும்போது காலை சாப்பாட்டு நேரம் வந்து நிற்கும். அப்போதும் குடும்பத்தினரின் பசியாற்றிய பின்னரே தன் வயிற்றைப் பற்றி சிந்திக்கிறாள்.

நகரமென்றால் மேற்சொன்ன வேலைகளில் பெரும்பாலானவையோடு, பிள்ளைகளைப் பள்ளிக்கும், கணவனை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் சேர்ந்துகொள்கிறது. அவர்களுக்குண்டான காலை, மதிய உணவை தயார்செய்துகொடுத்துவிட்டு நிமிரும்போது அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் ஏதோ ஒன்று குடும்பத்தில் காத்திருக்கிறது. தன்னைப்பற்றி சிந்திக்க விடாமல், எப்போதும் குடும்பத்தின் நலன் நோக்கியே சிந்திக்கும் இயந்திரமாக பெண்ணை மாற்றி வைத்திருக்கிறோம்.

வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து உணவு உண்ணுகிறோம். எல்லோருக்கும் பறிமாறிவிட்டு தானும் அமர்ந்து சாப்பிடுகிறாள் அம்மா. சாப்பிட்டபிறகு தகப்பனும், மகனும் சாப்பிட்டத் தட்டை அப்படியே வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அம்மாவும், மகளும் அனைத்து எச்சில் தட்டுகளையும் எடுத்து உள்ளே வைக்கின்றனர்.

நெருங்கிய உறவினர் வீட்டுக்குக் கணவன், மனைவி இருவரும் செல்கின்றனர். சாப்பிட்டு முடித்ததும் கணவன் கை கழுவச் சென்றுவிடுகிறான். மனைவி மட்டும் தான் உண்ட இலையை/தட்டை தானே எடுக்கும்போது, அது விருந்தினர் வீட்டின் பெண்களுக்கும் இயல்பானதாகவே தெரிகிறது. ஏனெனில் அவர்கள் நாளை இன்னொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது இதையேதான் செய்வார்கள்.

கணவன், மனைவி, குழந்தைகள் அனைவரும் ஹோட்டலொன்றில் சாப்பிடுகின்றனர். அது, சாப்பிட்டவர்களே இலையையும் எடுத்துப்போட வேண்டிய வழக்கம் உள்ள ஹோட்டலாயின், மனைவிதான் அனைத்து இலைகளையும் எடுத்துப் போடுகிறாள்.


இவை அனைத்தையும் நாம் இயல்பென ஏற்றுக்கொள்கிறோம். பெண்ணையும் அப்படியே நம்ப வைத்திருக்கிறோம். இயல்பை மீறும் பெண்களை திமிர் பிடித்தவளென்கிறோம். நிலவி வரும் நியதிகளை மீறி ஒரு பெண், இயல்பான தன்னுணர்வோடு ஒரு முடிவை எடுக்கும்போது, அது குறித்து அவளைக் குற்றவுணர்வடையச் செய்யும்விதமாகவே சுற்றத்தின் நடவடிக்கைகள் உள்ளன.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Nisha on Mon 9 Jun 2014 - 13:14

காலம், காலமாக பெண் சமைத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், ஒரு நாள் சமைக்காவிட்டாலும், 'என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இல்லையோ..' என்று குற்றவுணர்வடைகிறேன்.." என்று சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் கவிஞர் இளம்பிறை. இது நுணுக்கமானது. 'இன்னென்ன வேலைகள் பெண்ணுக்கானவை. அதை செவ்வனே செய்து முடிக்கவில்லையெனில் நான் குற்றம் செய்தவளாகிறேன்..' என்று பெண்ணையே உணர வைப்பதில்தான் சூது ஒழிந்திருக்கிறது.

இந்த கட்டுப்பாடுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கற்றுத்தரவும் பெண்களையே பழக்கி வைத்திருக்கிறோம். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் ஆண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், பெண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீதி போதனை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. பத்து, பன்னிரண்டு வயதில் ஆண் பிள்ளைகள் கவலைகளற்று விளையாடும்போது, பெண் பிள்ளைகள், சின்னச்சின்ன வீட்டு வேலைகளுக்குப் பழக்கப்படுகின்றனர். உடையணிவது, உண்ணுவது, எத்தனை இஞ்ச் காலை அகற்றிவைத்து நடப்பது, எப்படி உட்காருவது, என்ன விதமாக அழுவது, எந்த டெஸிபலில் சிரிப்பது... என்று அனைத்துக்கும் பெண்ணுக்கென்று தனியான முன் தீர்மானங்களை வைத்திருக்கிறது குடும்பம். அவள் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பதை தீர்மானிப்பதும் குடும்பம்தான். நஞ்சை, புஞ்சை என்பவை எப்படி அசையா சொத்துக்களோ, அதுபோல பெண் என்பவள் குடும்பத்தின் அசையும் சொத்து.. அவ்வளவே. ஆனாலும், அன்பு, பாசம், கருணை, கடமை, பொறுப்பு என்ற சர்க்கரை கயிறுகளால் பெண்ணை, குடும்பத்தோடு பலமாக இறுக்கி வைத்திருக்கிறோம்.

இது காதலின் காலமென்று சிலாகிக்கிறோம். இருந்தாலும் இந்திய சமூகத்தில் பெற்றோர் பார்த்து வைக்கும் ஏற்பாட்டு திருமணங்களே இன்றளவும் அதிகம் நடக்கின்றன. அத்தகையை ஏற்பாட்டுத் திருமணங்களில், தனக்கு வரப்போகும் மனைவி எப்படிப்பட்ட புற/அக அழகுள்ளவளாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது ஆண்தான்.

இதை, பெண்ணின் தரப்பில் அவளது பெற்றோரே தீர்மானிக்கின்றனர். திருமண விஷயத்தில், ஆணை விட பெண் உயரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் கிட்டத்தட்ட எல்லோருமே உறுதியாக இருக்கின்றனர். மனைவி உயரமாகவும், கணவன் குள்ளமாகவும் உள்ள தம்பதிகளை நான் வெகு அரிதாகவேப் பார்த்திருக்கிறேன்.

காதலில் கூட இந்த உயரம் ஒரு காரணியாக இருக்கிறது. ஆண், பெண் பேதத்தின் ஆதி சாட்சியாக இதைச் சொல்லலாம்.

இந்த பேதம் உயரத்தோடு மட்டும் நிற்பதில்லை...

மணமகனை விட மணமகள் ஒரு படியேனும் குறைவாகப் படித்திருக்க வேண்டும்,

அவனை விட அவள் நூறு ரூபாயேனும் குறைவான சம்பளம் வாங்க வேண்டும்,

அவனது வயது அவளது வயதை விட இரண்டு, மூன்று வயதாவது அதிகமாக இருக்க வேண்டும்...

என்றெல்லாம் இந்தக் கட்டுப்பாடுகள் நீள்கின்றன. திருமணத்திற்குப் பிறகு எந்த கணவனும் வேலைக்குப் போகாமல் இருப்பதில்லை.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Nisha on Mon 9 Jun 2014 - 13:16

மண வீடுகளில் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் நிறைய கேள்விகள் எனக்குள் துடிக்கும். அந்தப்பெண் இதுவரை, தான் வளர்ந்த வீட்டை, பழகிய உறவை, சொந்தங்களை, நண்பர்களை, ஓடித்திரிந்த மண்ணை, மாற்றிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இனி அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் இல்லை.. கணவன்தான். ஒரு நாள் இடம்மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை. எனில் காலமெல்லாம் தன் அனைத்து அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு வாழப்போகும் அந்தப்பெண்ணின் மனநிலை என்ன...?

எங்கேயோ, எப்போதோ 'வீட்டோடு மாப்பிள்ளைகளாகும் ஒரு சிலரை ஏளனப்பார்வை பார்க்கிறோம். வீட்டோடு மாப்பிள்ளையானால் ஏற்படும் சங்கடங்களை 'தலைகீழ் விகித'மாக்குகிறோம். 'சொல்ல மறந்த கதை' என்கிறோம்.

ஆனால், 'வீட்டோடு மருமகள்'களின் சங்கடங்களை நாம் ஒருபோதும் யோசித்ததில்லை. அந்த வார்த்தை பிரயோகமே நமக்கு புதியதாக இருக்கிறது.

இப்போதிருக்கிற நமது குடும்ப அமைப்பு பெண்ணின் சித்ரவதைக்கூடமாக இருக்கிறது.

சொல்லாலும், செயலாலும், கருத்தாலும் எல்லா கணப்பொழுதிலும் அவள் மீது வன்கொடுமை ஏவப்படுகிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் குடும்பத்திற்குள்ளிருந்துதான் பெண்ணுரிமை குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும். இதன் பொருள் குடும்பம் என்னும் அமைப்பை உடைப்பது அல்ல. அது வலுவான செண்டிமெண்ட் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டிருக்கும் நிறுவனம். அதை உடைப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை. தவிரவும், கூடி வாழ்தலின் மிச்சமாக மனித சமூகத்தில் எஞ்சி நிற்கும் ஒரு சில அடையாளங்களில் குடும்பமும் ஒன்று. அது மறு சீரமைக்கப்பட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள குடும்பமே நமக்குத் தேவையானது.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Nisha on Mon 9 Jun 2014 - 13:19

மேற்சொன்னவையெல்லாம் குடும்பத்திற்குள் நடப்பது. சமூக வீதிகளில் மட்டும் பெண்கள் உரிமைகளோடு இருக்கிறார்களா என்ன..? உரிமைகளை விடுங்கள்.. குறைந்தபட்ச சுதந்திரமாவது இருக்கிறதா..?

இரவு பத்து மணிக்கு ஒரு பெண் சாலையில் தனித்து நடந்துபோனாள் நல்ல எண்ணத்தோடு பார்ப்பவர்கள் குறைவு. செல்போனில் சத்தமாக சிரித்துப் பேசினாள் சில புதிய பட்டங்கள் அவளைத் தேடிவரும். சாலையில் நடக்கும் ஒவ்வொரு பெண்ணையும் குறைந்தபட்சம் இரண்டு கண்களாவது உற்றுப் பார்க்கின்றன. எந்த ஒரு பொது இடத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு பெண் காத்திருப்பதன் சங்கடங்களை பெண்கள் நன்றாக அறிவார்கள். ஒரு இளம்பெண், தனியாகவோ, தோழிகளோடோ டீ கடைக்குச் சென்று டீ குடிப்பது இயல்பென ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எல்லா இடங்களிலும் ஆணின் சார்பு பிராணியாகவே பெண்ணை வைத்திருக்கிறோம்.

இன்னமும் பத்திரிகைகளில் ஆண் சமைப்பதென்பது நகைச்சுவையாகவே வருகிறது.

எப்போதும் 'அழகி'கள் மட்டுமே பிடிபடுகிறார்கள். 'அழகன்'கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.

விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக பெண்ணுரிமை பேசுபவர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் 'மூளை வீங்கிகள்' என்று ஏளனம் செய்யப்படுகின்றனர். 'ஒரு பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கனும்..' என்று இப்போதும் சினிமா நாயகர்கள் உபதேசம் செய்கிறார்கள். "பொம்பளை உனக்கே இவ்வளவு இருக்குன்னா.. ஆம்பளை எனக்கு எவ்வளவு இருக்கும்..?" என்ற திமிர் வார்த்தைகளை ஏறத்தாள எல்லாப் பெண்களுமே ஏதோவொரு சந்தர்ப்பத்தில் கேட்க நேர்ந்திருக்கும்.

ஆம்பளை என்பதால் அவனுக்கு உடம்பில் உபரியாக என்ன இருக்கப்போகிறது - சில உறுப்புகளைத் தவிர..? இந்த வார்த்தை சவடால் ஆண்களின் ஜீன்களில் ஊறியிருக்கிறது.

குடும்பம், அலுவலகம் என அனைத்து இடங்களிலும் தன் உரிமைகளை உரத்தக் குரலில் கேட்கும் பெண்களை அடக்கிப் போடுவதற்கு ஆண்கள் எடுக்கும் ஆயுதம் ஒழுக்கம். பெண்ணின் ஒழுக்கத்தால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்பதுபோலவும், பெண்ணின் ஒழுக்கம் கெட்டால் சகலமும் கெட்டுவிட்டதாகவும் இவர்கள் அடிக்கும் கொட்டம் மிகுந்த ஆபாசமாக இருக்கிறது.

பெண்கள், எத்தனை ஆண்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை சுற்றமே தீர்மானிக்கிறது. ஒரு ஆண், காதல் தோல்வி ஏற்பட்டுவிட்டால், அடுத்தடுத்து காதலிக்கலாம்.. தப்பில்லை.. அது இயல்பானது. அதையே ஒரு பெண் செய்தால், அவளுக்கு பெயர் வேறு. (தான் காதலித்த பெண்களுக்கெல்லாம் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் செல்லும் 'ஆட்டோகிராஃப்' சேரனின் கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை கற்பனை செய்து பார்க்கச்சொல்லி முன்பொருமுறை ஞாநி எழுதியிருந்த கட்டுரை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது).

இந்த சமூகத்தின் சகல ஒழுக்க விதிகளும், பெண்ணின் தொடையிடுக்கில் ஒழித்து வைக்கப்பட்டிருப்பதாக, முன்பொருமுறை பூங்குழலி சொன்னது மிகச்சரியானது. இளம்பிராயத்திலிருந்து அவ்விதமே பெண் பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர். ஒரு பெண், தான் ஒழுக்கமுள்ளவள் என்று சுற்றத்திற்கு பறைசாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

"பொம்பளைப்பிள்ள கண்டமேனிக்கு டிரஸ் பண்ணிட்டுப்போறது.. அப்புறம் 'அவன் கிண்டல் பண்றான், இவன் கையைப் பிடிச்சு இழுக்குறான்'னு சொல்றது.." என்ற பொதுப்புத்தியின் வார்த்தைகள் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. ஒழுக்கம், பெண்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறதா என்ன..?

ஆண்களுக்கு உறுப்புகளே இல்லையா..? சமயத்தில் ஏன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற எரிச்சலான கேள்வியும் வருகிறது. 'சமூகம் என்பது மனித இனத்தின் கூட்டுத் தொகுப்பு. கூட்டு வாழ்க்கைக்கென்று ஒரு வாழ்வியல் நெறி இருக்கிறது..' என்ற பதில் வருமாயின் அந்த நெறி ஆண்களைக் கட்டுப்படுத்தாதா..?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Nisha on Mon 9 Jun 2014 - 13:21

பெண்ணை ஒடுக்குவதில் மதங்களின் பங்கு மகத்தானது.

'1,800 ஆண்டுகளுக்கு முன்பே குர்-ஆனில் பெண்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன..' என்று இஸ்லாமிய சகோதரர்கள் பெருமைப்பேச்சு பேசுகின்றனர். ஆனால், உயிரற்ற பிணத்தை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கும் அவர்கள், பெண்ணை அனுமதிப்பதில்லை. வழிபாட்டு உரிமைக்கூட பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது. அதே குர்-ஆனில்தான் மணப்பெண்ணுக்கு, மணமகன் மஹர்(வரதட்சணை) கொடுத்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நடப்பது என்ன..? பெயருக்கு 1,000 ரூபாய், 2,000 ரூபாய் பெண்ணுக்கு மஹராகக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டாராரிடமிருந்து அதிக அளவுக்கு வரதட்சனை வாங்குகின்றனர்.

திருமணம் நடந்தபோது உடனிருந்த பெரியவர்களின் முன்னிலையில்,சீரான இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்ல வேண்டும். இதைத்தான் முத்தலாக் என்கிறது குர்-ஆன். ஆனால், நடைமுறையில் தொடர்ச்சியாக மூன்று முறை தலாக் சொன்னால் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். இப்படித்தான் நடக்கிறது.

இந்து மதம், பெண்ணுரிமை மறுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'வேலைக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் ஒழுக்கக்கேடானவர்கள்' என்று கருத்துச் சொல்கிறார் இந்து மத மடாலயமொன்றின் தலைவர் இருள்நீக்கி சுப்ரமணி. எல்லாப் புராணங்களிலும் பெண்கள், ஆண்களின் அடிமைகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இப்போது கூட சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை விடுவது குறித்தான சர்ச்சைகள் கேரளாவில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

'கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிச் சுவர் (glass-ceiling ) ஒன்று பெண்ணைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் மேலே செல்லும்போதுதான் அது தலையில் இடிக்கும். அப்போதுதான் சுவர் இருப்பதையும் உணர முடியும்' என்று ஒரு தியரி சொல்வார்கள். ஆனால் நம் ஊரில் பெண்களுக்கு எதிராக கண்ணுக்கு தெரிந்தே கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றை கண்ணாடிச் சுவர் போன்று மென்மையானவையாக பெண்களை உணர வைத்துக்கொண்டிருக்கிறோம்.

குடும்பம், சமூகம், மதம் என்று பெண்ணை அடக்குவதில் மட்டும் எல்லோரும் ஒரே விதமாகத்தான் உள்ளனர். ச. தமிழ்செல்வன் சொல்வதைப்போல, 'குடும்பம் என்னும் பலிபீடத்தில் காலங்காலமாக தன்னை விருப்பத்தோடு பலி கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் பெண்'. இதை மாற்றுவதற்கான குறைந்தபட்ச எண்ணத்தை மனதுக்குள் உருவாக்கி, அதை தனது குடும்பத்திற்குள் மட்டுமாவது செயல்படுத்திப் பார்க்காத வரைக்கும் நாம் அனைவரும் குற்றவாளிகள்தான். தீங்கிழைப்பது மட்டுமல்ல.. அதை வேடிக்கை பார்ப்பதும் குற்றம்தானே..!

Posted by ஆழியூரான் (நடைவண்டி வலைப்பூ)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by jaleelge on Mon 9 Jun 2014 - 13:29

Nisha wrote:மண வீடுகளில் பெண்களைப் பார்க்கும்போதெல்லாம் நிறைய கேள்விகள் எனக்குள் துடிக்கும். அந்தப்பெண் இதுவரை, தான் வளர்ந்த வீட்டை, பழகிய உறவை, சொந்தங்களை, நண்பர்களை, ஓடித்திரிந்த மண்ணை, மாற்றிக்கொள்ள வேண்டும். குல தெய்வத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இனி அவளுக்கான அடையாளம் அவளது பெற்றோர் இல்லை.. கணவன்தான். ஒரு நாள் இடம்மாறி படுத்தால் தூக்கம் வருவதில்லை. எனில் காலமெல்லாம் தன் அனைத்து அடையாளங்களையும் மாற்றிக்கொண்டு வாழப்போகும் அந்தப்பெண்ணின் மனநிலை என்ன...?

எங்கேயோ, எப்போதோ 'வீட்டோடு மாப்பிள்ளைகளாகும் ஒரு சிலரை ஏளனப்பார்வை பார்க்கிறோம். வீட்டோடு மாப்பிள்ளையானால் ஏற்படும் சங்கடங்களை 'தலைகீழ் விகித'மாக்குகிறோம். 'சொல்ல மறந்த கதை' என்கிறோம்.

ஆனால், 'வீட்டோடு மருமகள்'களின் சங்கடங்களை நாம் ஒருபோதும் யோசித்ததில்லை. அந்த வார்த்தை பிரயோகமே நமக்கு புதியதாக இருக்கிறது.

இப்போதிருக்கிற நமது குடும்ப அமைப்பு பெண்ணின் சித்ரவதைக்கூடமாக இருக்கிறது.

சொல்லாலும், செயலாலும், கருத்தாலும் எல்லா கணப்பொழுதிலும் அவள் மீது வன்கொடுமை ஏவப்படுகிறது. அனைத்து உரிமைகளும் மறுக்கப்படும் குடும்பத்திற்குள்ளிருந்துதான் பெண்ணுரிமை குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும். இதன் பொருள் குடும்பம் என்னும் அமைப்பை உடைப்பது அல்ல. அது வலுவான செண்டிமெண்ட் சிமெண்ட் வைத்து கட்டப்பட்டிருக்கும் நிறுவனம். அதை உடைப்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் இல்லை. தவிரவும், கூடி வாழ்தலின் மிச்சமாக மனித சமூகத்தில் எஞ்சி நிற்கும் ஒரு சில அடையாளங்களில் குடும்பமும் ஒன்று. அது மறு சீரமைக்கப்பட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சம உரிமையுள்ள குடும்பமே நமக்குத் தேவையானது.


உங்கள்  அருமையான கருத்துக்கு பாராட்டுக்கள்.......
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ................
”சம உரிமையுள்ள குடும்பமே நமக்குத் தேவையானது“.
அதன்படி நாமும் நடப்போம்..!!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum