சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Khan11

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:36

பாட்டி வைத்தியம்:-

* சாணி வரட்டியை பற்ற வைத்து அது எரியும் போது மஞ்சள் தூளை தூவி வரும் புகையை நுகர்ந்தால் மூக்கடைப்பு தீரும்.

* தணல் மூட்டி அதில் ஏலக்காய் போட்டு வரும் புகையை நுகலாம்.

* ஓமத்தை துணியில் கட்டி அடிக்கடி நுகர்ந்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* ஓமத்தை காட்டன் துணியில் கட்டி தயணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்.

* துளசி, பூண்டு, மிளகு, இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து, அதை நான்கில் ஒரு பங்காக காய்ச்ச வேண்டும். பின்னர் வடிகட்டி தேன் கலந்து குடித்தால் சளி தீரும்.

* உடல்சூடு காரணமாக சிலருக்கு மூக்கில் ரத்தம் வடியும். அப்போது எலுமிச்சை சாறு சில சொட்டுகளை மூக்கில் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

* அதுபோல மல்லி இலைச்சாறு சிறு சொட்டுகளையும் மூக்கில் விடலாம்.

* மூக்கில் துர்நாற்றத்தை உணர்ந்தால், பரங்கிக்காயை அரைந்து சாறு எடுத்து சில சொட்டுகள் மூக்கில் விடலாம். உணரு செரிமானத்தை சரிபடுத்துவதும் முக்கியம்.

* நெல்லிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, வடிகட்டிய தண்ணீரை அருந்தலாம். நீரில் ஊறிய நெல்லிக்காயை அரைத்து நெற்றில் பற்று போடலாம்.

நன்றி :FB
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:37

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10402613_638412346227341_4072484692592161049_n

எளிய இயற்கை வைத்தியம்:-

அஜீரணசக்திக்கு

அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.

அம்மைநோய் தடுக்க!

அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.

அறுகம் புல்

இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.

அம்மைநோய் வேகத்தை தணிக்க!

பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.

அகத்திக்கீரை

உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.

ஆறு சுவையின் செயல்!

காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.

கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.

இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.

புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.

துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.

உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்

அன்னாசிப்பழம்

இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.

அரைக்கருப்பன் சரியாக!

இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:38

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10372025_638411832894059_3405801039597854808_n

மூட்டு வீக்கம் குணமடைய சில வழிகள்? - இயற்கை வைத்தியம்:-

முருங்கைப் பட்டை, மூக்கரட்டை வேர், ஊமத்தன் இலை, பூண்டு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து, அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப் போட்டால், மூட்டு வீக்கம் கரையும். மூட்டு வலி குறையும். மூட்டு சம்மந்தப்பட்ட வாயு நோய் குணமாகும்.

வாயு தொல்லை நீங்க?

முருங்கைக் கீரையை கைப்பிடி அளவு எடுத்து இடித்து, அத்துடன் மிளகு, கொட்டை நீக்கிய கடுக்காய் பாதி, சீரகம், சேர்த்து, ரசம் வைத்து (சூப் போல) வடிகட்டி, ஒரு டம்ளர் குடித்து வந்தால் பேதி நின்று விடும். மேலும் மலக்கட்டு, வாயு, வயிறு உப்புசம், உடல் பளு, உடல் உஷ்ணம், உடல் அசதி ஆகிய பிரச்னைகள் நீங்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க?

முருங்கைக் கீரை, முருங்கைக் காய், முருங்கைப்பூ இம்மூன்றையும் உணவில் சேர்த்து, அடிக்கடி உண்டு வந்தால், நரம்பு தளர்ச்சி நோய் குணம் ஆகும்.

நரித்தலை வாதம் பிரச்னைக்கு தீர்வு?

நரித்தலை வாதமென்பது கால் மூட்டுகளில் நரித்தலை போன்று வீங்கி வலி எடுக்கும். இந்தநோய்க்கு நரித்தலை வாதம் என்று பெயர் முருங்கைக் கீரைகளை நீக்கி விட்டு, அதன் ஈர்க்கு மட்டும் எடுத்து கொண்டு, அதில் சிறிது முருங்கைப்பட்டை, மிளகு சேர்த்து அரைத்து, 3 டம்பளர் தண்ணீரில் கலந்து, அது ஒரு டம்ளராகும் வரை சுண்டக் காய்ச்சி கசாயமாக ஆகும் வரை காய்ச்ச வேண்டும். காலை, மாலை இரு வேலைகளில் 250 மிலி வீதம் சாப்பிட்டு வந்தால், கால் முட்டுகளில் ஏற்படும், வாதமும், நரித்தலை வாதமும் நீங்கும்.

முழங்கால் வாதம் ?

ஒருசில மனிதர்களுக்கு முழங்காலில் வாதநீர் தங்கியிருந்து தொந்தரவு கொடுக்கும். முழங்கால் வலிக்கிறது என்று கூறுவார்கள். அவர்கள் வாரம் இருமுறை முருங்கைக்காயைக் சமையல் செய்து, நன்கு மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் முழங்காலில் உள்ள, வாதம் நீங்கும். முழங்காலில் வாத நீர் தங்காது. காலில் தொந்தரவு இருக்காது.

எலுமிச்சை இலையை வெண்ணெய் சேர்த்து நன்கு அரைத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் சுளு வலி குறையும். அத்தி காயை நன்கு அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி வலி குறையும். கால்கள் மிருதுவாகும்.

மூட்டு வலி குறைய விளக்கு எண்ணெய்யை நன்கு காய்ச்சி, ஒரு கப் ஆரஞ்சி பழச்சாற்றில் கலந்து தினமும் காலை யில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி மறையும். பாதப்படை குறைய வினிகரை வெது வெதுப்பான நீரில் கலந்து பாதத்தை சுத்தம் செய்த பிறகு வினிகர் நீரை பாதத்தில் ஒத்திரம் கொடுத்து வந்தால் பாதப்படை வராது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:39

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10450432_748459818509669_5886036672229116248_n

பூண்டு மருத்துவம்:-
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பூண்டின் மருத்துவ பங்கு முதன்மையானது.

ஜீரணமின்மை, ஜலதோஷம், காதுவலி, வாயுத்தொல்லை, முகப்பரு, ஊளைச்சதை, இரத்த சுத்தமின்மை, புழுத்தொல்லை, இரத்த அழுத்தம் சம்பந்மான நோய்கள், மூலநோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் பூண்டு அவசியம்.

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் வந்தால் வெள்ளைப்பூண்டு சாறை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்கு தேய்த்தால் காய்ச்சல் இறங்கும். இரவில் படுக்க போகும் முன் பூண்டு விதைகளைப் போட்டுக் காய்ச்சி பூண்டையும், பாலையும் சாப்பிட்டால் விடாது இருமல் வருவது நிற்கும்.

அலர்ஜியால் ஏற்படும் இருமல் உடனடியாக நிற்கும். இரத்தக்காயம் ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும், சம அளவு அரைத்து காயத்தில் வைத்துக் கட்டினால் ஒட்டிக்கொள்ளும், காயம் ஆறின பின் தானாகவே அது விழுந்துவிடும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:42

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10365734_748459681843016_7756936595439899769_n
உடலை புத்துணர்சியாக்கும் பிளம்ஸ் பழம்- மருத்துவ பயன்கள்:-

நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ். நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.

மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும். சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.

ரத்தத்தை சுத்தப்படுத்த

ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

ஜீரண சக்கியைத் தூண்ட

உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

உடல் புத்துணர்ச்சிக்கு

உடலும் மனமும் சேர்வடையாமல் புத்துணர்சியுடன் இருக்க தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் அதிக சோர்வடைகிறது. இதனால் இளவயதிலேயே முதியவர்கள் போல காட்சியளிக்கின்றனர். இந்த குறைகள் நீங்கி உடல் புத்துணர்வடைய பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம். பிளம்ஸ் பழத்தை உலர்த்தி காய வைத்தும் சாப்பிடலாம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:44

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10380313_637983172936925_9029672237827654970_n

இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம்:-

1. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.

2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.

3. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரத்த விருத்தி

பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி உண்டாக்கும்.

இரத்தக் குறைவு

இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.

இரத்த ஓட்டம்

தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:44

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10300221_637981366270439_3623515344227193752_n
குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை:-

அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..

மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:45

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10390176_747484961940488_891653204761506203_n

நரம்பு தளர்ச்சியை போக்கும் மாம்பழம் :-

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான். அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை கொண்டது. இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும். மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:46

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10451678_747485081940476_3050403705050141872_n
செம்பருத்தி இலைகளில் உள்ள உடல்நல நண்மைகள்!!!

செம்பருத்தி என்ற பூச்செடி, உலகத்தில் உள்ள வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல வட்டாரங்களில் அதிகமாக காணப்படும். இதனை "மார்ஷ் மாலோ" என்றும் அழைக்கின்றனர். செம்பருத்தி இலைகள் என்பது நம் இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். பல ஆண்டு காலமாக பலவித சிகிச்சைக்காக இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதே போல் உலகத்தில் உள்ள பலரும் செம்பருத்தி இலைகளை சூடான அல்லது குளிர்ந்த தேநீரிலும் கலந்து குடிக்கின்றனர். இது நம் உடலுக்கு மிகவும் நல்லதாக விளங்குகிறது.

செம்பருத்தி இலைகளில் இன்னும் பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது. மேலும் உணவிற்கு நிறத்தை சேர்க்கும் பொருளாகவும் இது சந்தையில் விற்கப்படுகிறது.

ம்பருத்தி இலைகளால் செய்யப்படும் தேநீர் நம் உடலுக்கு மிகவும் நல்லது. அதனை உலகத்தில் உள்ள பல நாடுகளாலும் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து வருகிறது.

புற்றுநோயை எதிர்த்து போராடும் செம்பருத்தி இலைகள் :-

புற்று நோயை எதிர்த்து போராடுவதால், முக்கியமான உடல்நல பயனாக இது பார்க்கப்படுகிறது. அதற்கு இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களின் மீதும் தடவலாம்.

சளி மற்றும் இருமலை குணமாக்கும் :-

செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுதால், இதுவும் அதன் முக்கிய உடல்நல பயனாக உள்ளது.

ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :-

செம்பருத்தி இலை உங்கள் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் :-

மெட்டபாலிச வீதத்தை அதிகரித்து உடலில் உள்ள நீர்ம சமநிலையை மேம்படுத்த செம்பருத்தி இலைகள் பெரிதும் உதவுவதால், இதுவும் ஒரு முக்கிய உடலநல பயனாக கருதப்படுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, உடலிலுள்ள தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுவது செம்பருத்தி இலையின் மற்றொரு உடல்நல பயனாகும்.

சிறுநீரக பிரச்சனைகளை போக்கும் :-

செம்பருத்தி இலை கலந்த தேநீர் நம் உடலுக்கு மிகவும் நன்மையானது. செம்பருத்தி இலையால் கிடைக்கும் ஊட்டச்சத்து பயன்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் தேநீரை பருகுவதற்கு முன்பாக, அது இரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளதா, பதப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா, நல்ல தரத்துடன் பதப்படுத்தப்பட்டதா போன்றவைகளை கவனமாக இருங்கள். சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகலாம். சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் இது உதவும்.

உடல் எடையைக் குறைக்கும் :-

செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், முக்கியமாக மாதவிடாய் காலத்தில் பெண்கள், அந்நேரத்தில் ஏற்படும் வழியை போக்கும். மேலும் செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:47

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10325209_746995251989459_185079235533488908_n

பழங்களின் மருத்துவ பலன்கள் :-

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது.

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் சத்துகளும் வைட்டமின் சி 260 மில்லி கிராமும் உள்ளது. கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக, ஜெல்லியாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிற்றில் புண்களை நீக்கும், நீரிழிவை குறைக்கும், விந்துவை பெருக்கும். அடிக்கடி ஏற்படும் விக்கலை குணப்படுத்தும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். உடல் வளர்ச்சி கூடும். கொய்யா பழம் சாப்பிடுவதால் குடல், ஜீரண பை, கல்லீரல் மண்ணீரல் புத்துணர்வு பெற்று பலம் பெறும். கொய்யா காய் வயிற்று போக்கை குணமாக்கும். கொய்யா இலை வயிற்று புண்ணுக்கு மருந்தாகிறது.

கொய்யா பழத்துக்கு அடுத்து மிகவும் சிறந்த பழம் மாதுளம் பழம். மாதுளம் பழம் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. மாதுளம் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். ஜீரணத்தை அதிகரித்து ரத்த விருத்தி பெற வைக்கும். பித்தம் நீக்கும். எலும்பு, பற்களுக்கு உறுதி தரும். குடல், வயிற்று புண் ஆற்றும். நெஞ்சு எரிச்சலை குறைக்கும். மலச் சிக்கலை தீர்க்கும். புதிய ரத்தத்தை உருவாக்கும். மாதுளம் பழ சாறுடன் கற்கண்டை கலந்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மூல நோய் தீரும்.

மாதுளம் பழ சாறுடன் அருகம் புல் சாறு கலந்து சாப்பிட்டால் அறுந்த மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மாதுளம் பழ தோலை இடித்து சாறு எடுத்து மிளகு பொடியை கலந்து சாப்பிட்டால் போதை மயக்கம் தீரும். மாதுளம் பூவை கொதிக்க வைத்து குடித்தால் பித்த கோளாறு நீங்கும். வேர் பட்டையை அரைத்து நீர் சேர்த்து கசாயமாக காய்ச்சி மூன்று வேளை குடித்தால் வயிற்று பூச்சிகள் ஒழியும். மாதுளம் பூவை உலர வைத்து பொடியாக்கி தூளை நீரில் கலந்து குடித்தால் இருமல் தீரும். பூவை இடித்து சாறு எடுத்து அத்துடன் ஓரிரு துளி இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி, இருமல் தீரும். பூச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும். கோடை துவங்கி விட்டதால் நாளும் ஒரு பழத்தை சாப்பிட்டு உடல் நலனை பேணி பாதுகாப்போம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:48

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10401475_637447609657148_5611740247481734688_n

உடல் எடையைக் குறைக்க எளிய வழிகள் - இயற்கை மருத்துவம் :-

உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், சில விஷயங்களை தினம்தோறும் செய்து வர வேண்டும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 ஸ்பூன் (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து 1/4 ஸ்பூன் (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு 1/2 -3/4 மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும்.

காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும். மதியம் புழுங்கலரிசி சாதத்தை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1/2 கிளாஸ் (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1 ஸ்பூன் (5 மி.லி.) தேன் கலந்து பருகவும்.

மாலையில் 1 கிளாஸ் (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:49

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 1526763_636899746378601_6314132263536544352_n
இளம் வயதிலேயே ஆண்களுக்கு வழுக்கை தலை ஏற்படுவதைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்கள் :-

ஆண்கள் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் வழுக்கை தலையைப் பெறுவது. பொதுவாக இத்தகைய வழுக்கை தலையானது முடி உதிர்வதால் ஏற்படும். சாதாரணமாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50-100 முடியானது உதிரும். ஆனால் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்வது போன்று தோன்றும். அப்படி உங்களுக்கு முடி உதிர்வது அளவுக்கு அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் முடி உதிர்வது ஒருசில நோய்களுக்கும் அறிகுறியாக இருப்பதால், உடனே கவனிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு தான் வழுக்கை தலை சீக்கிரம் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் பரம்பரை, ஊட்டச்சத்து குறைபாடு என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். இவற்றில் பரம்பரை காரணமாக ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் தள்ளிப் போட முடியும்.

அதுவும் ஒருசில செயல்களைப் பின்பற்றுவதன் மூலம், மயிர்கால்களை வலுவுடன் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். அதில் முதலில் செய்ய வேண்டியது வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களுடன், போதிய முடிக்கான பராமரிப்பும் மேற்கொள்ள வேண்டும்.

ஆயில் மசாஜ் :-

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேங்காய், பாதாம், ஆலிவ் போன்ற எண்ணெய்களைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமானால் இரண்டு மூன்று எண்ணெய்களை ஒன்றாக சேர்த்தும் முடிக்குப் பயன்படுத்தினால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி வளர்ச்சி அதிகரிக்க ஆரம்பிக்கும்.

தேங்காய் பால் :-

தேங்காய் பால் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், அது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களைக் கொடுத்து, அதனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும். இந்த முறையை ஆண்கள் தவறாமல் வாரம் 2-3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மருதாணி இலைகள் :-

மருதாணி இலையில் கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை. இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்க வல்லது. அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். இதன் மூலம் முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.

நெல்லிக்காய் :-

முடி வளர்ச்சியைத் தூண்டும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது முடி உதிர்வதை உடனே தடுத்து நிறுத்திவிடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, அதனை இரவில் படுக்கும் போது, தலையில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் எழுந்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரித்து, வழுக்கை ஏற்படாமல் இருக்கும்.

வெந்தயம் :-

வெந்தயம் உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்த உதவுவதில்லை. முடி உதிர்வதைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. எப்படியெனில் வெந்தயத்தில் ஆன்செடென்ட்ஸ் என்னும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும், பாதிப்படைந்த மயிர்கால்களை குணப்படுத்தும் பொருள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு அவசியமான புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் ஆசிட் உள்ளது. எனவே வாரம் ஒரு முறை வெந்தயத்தில் நீரில் நன்கு ஊற வைத்து, பின் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும்.

வெங்காய சிகிச்சை :-

வெங்காயத்தில் முடி உதிர்வதைத் தடுக்கும் சல்பர் என்னும் பொருள் உள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதுடன், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே வாரம் 1-2 முறை வெங்காயத்தை அரைத்து, அதன் சாற்றினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து, தலையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:50

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10426583_637447062990536_3682638013597021228_n

தினமும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நண்மைகள் :-

நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். ஒவ்வொரு காய்கறியிலும் பல விதமான பயன்கள் குவிந்து கிடக்கிறது. காரட், தக்காளி போன்ற காய்கறிகளை நற்பதத்துடன் பச்சையாக உட்கொண்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது.

ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். காய்கறிகளில் பல வகைகள் உண்டு. அவைகள் விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள், வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள், இலை வகை காய்கறிகள் மற்றும் பூக்கள் வகை காய்கறிகள். ஒவ்வொன்றிலும் பல பயன்களும் அடங்கியுள்ளது.

வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள் :-

வேர் சம்பந்தப்பட்ட காய்கறிகள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும். அவைகளில் கேரட், முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பீட்ரூட், பூண்டு மற்றும் நூல்கோல் என பல வகைகள் உண்டு. இவைகளில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து வளமையாக இருக்கும்.

* இவ்வகை காய்கறிகளில் இருக்கும் வைட்டமின்கள் புண்ணை ஆற வைக்கும்.

* கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, கண் பார்வையை மேம்படுத்த உதவும் கேரட்.

பச்சை இலை வகை காய்கறிகள் :-

இலை வகை காய்கறிகள் நம் உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படும். இவ்வகையான காய்கறிகளில் நார்ச்சத்தும், கரோட்டினாய்டுகளும் வளமையாக உள்ளது.

* 32-38 F டிகிரி தட்ப வெப்ப நிலையில் இலை வகை காய்கறிகளை பதனப்படுத்த வேண்டும்.

* சமைப்பதற்கு முன், அவைகளை நற்பதமான தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். பின் அதனை உலரச் செய்ய வேண்டும்.

* நுரையீரல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற சில வகை புற்றுநோய்கள் வளராமல் இவை தடுக்கும்.

பூக்கள் வகை காய்கறிகள் :-

பூக்கள் வகை காய்கறிகளில் அதிகமான நார்ச்சத்து, குறைந்த கலோரிகள் மற்றும் வளமையான வைட்டமின்களை காணலாம். காலிஃப்ளவர், தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் பச்சைப் பூக்கோசு என பல வகையான பூக்கள் சம்பந்தப்பட்ட காய்கறிகள் உள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது.

* அணுக்கள் வளர்ச்சி, அணுக்களின் புதுபித்தல், நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, தசை வளர்ச்சி போன்றவைகளுக்கு வைட்டமின்கள் தேவைப்படும். இரையக குடல் பிரச்சனைகளை போக்க நார்ச்சத்து உதவும்.

* நாம் உண்ணும் உணவின் அளவு தான் கலோரி. பொதுவாக ஒரு நாளைக்கு 2200-2800 கலோரிகள் வரை ஆண்கள் உட்கொள்கின்றனர். அதுவே பெண்கள் என்றால் 1600-2000 கலோரிகள் வரை உட்கொள்கின்றனர். சுறுசுறுப்புடன் இருந்தால் இந்த அளவில் சற்று மாற்றங்கள் ஏற்படும்.

விதை சம்பந்தப்பட்ட காய்கறிகள் :

பட்டர் பீன்ஸ், கொத்தவரங்காய், உளுத்தம் பருப்பு, பாசிப்பயறு, துவரை, சோயா பீன்ஸ், பிஜியன் பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அனைத்தும் விதை சம்பந்தப்பட்ட காய்கறி வகைகளே.

* இவ்வகை விதை சம்பந்தப்பட்ட காய்கறிகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் மக்னீசியம் வளமையாக உள்ளது. * இவைகளில் அதிக கலோரிகள் அடங்கியிருக்கும்.

* இவ்வகை காய்கறிகளில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்திருக்கும். இது மெதுவாக உறிஞ்சும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:51

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10472736_636898996378676_2061750209297805953_n

ரத்தத்தில் சர்க்கரையை கட்டுபடுத்தும் கொய்யா :-

கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது.கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்மியமாக இருக்கும். இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக்கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யாதான்.

மருத்துவப் பயன்கள்

மலச்சிக்கல் தீரும்: நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. நன்கு கனித்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

கல்லீரல் பலப்படும்: உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால், உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதை சாப்பிடக் கூடாது இதை சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்ப்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.

ரத்தச்சோகை மாறும்: ரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் ரத்தச்சோகை உண்டாகிறது. இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் ரத்தச்சோகையை மாற்றும் தன்மை கொண்டது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு: குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.

கொழுப்பைக் குறைக்கும்: அதிக ரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:51

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10455922_636463289755580_2501183744583281550_n
இயற்கை மருத்துவம் - ரத்த விருத்தி தரும் வாழைக்காய் :-

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:52

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10156165_636463883088854_3837348942837944798_n

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள் :-

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

· * தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.

· * பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.

· * நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

* புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

* மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.

* சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

· * தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:53

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10411290_746505728705078_4900424772738318591_n

கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்:-

மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி

தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.

தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)

பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம்.

மருத்துவப்பயன்கள் :-

சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த,

இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.

கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.

கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.

கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:54

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10372147_746505992038385_8720209626072477497_n

மூலிகைத் தாவரம் மிளகும் அதன் மருத்துவ குணங்களும் :-

1. மூலிகையின் பெயர் -: மிளகு.

2. தாவரப் பெயர் -: PIPER NIGRUM.

3. தாவரக்குடும்பம் -: PIPERACEAE.

4. வகைகள் -: மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

5. வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.

6. பயன் தரும் பாகங்கள் -: கொடி, இலை மற்றும் வேர் முதலியன.

7.வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று. 16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும். இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச் செய்யப்படுகிறது.

4. மருத்துவப் பயன்கள்- "பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்." என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. தவிர, உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள விடத்தைப் போக்குவது.

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:55

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10460735_636002759801633_243537887997504599_n

பாட்டி வைத்தியம் :-

1. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

2. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

3. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

4. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

5. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

6. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

7. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசனி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

8. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:56

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10360407_634360876632488_3263687935443920910_n
தாங்க முடியாத தலைவலிக்கு உடனடி இயற்கை வைத்தியம்:-

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்.
கிராம்பும் உப்பும் கலந்த கலவை :

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

சூடான பால் அருந்துதல் :

டான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

பட்டையை அரைத்துத் தடவுதல் :
தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :

ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.
சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.

இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :

வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.

சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல் :

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும். அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நன்றாக தூங்குதல் :

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்கள்.


இவற்றை நீங்களும் பின்பற்றி, தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:57

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10396276_636001986468377_7514919341387444803_n

துளசியின் பல அற்புத மருத்துவ குணங்கள்:-

1) வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்:- தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.

2. விஷஜுரம்குணமாக.

3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.

4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.

5. காது குத்துவலி குணமாக.

6. காது வலி குணமாக.

7. தலைசுற்றுகுணமாக.

8. பிரசவ வலி குறைய.

9. அம்மை அதிகரிக்காதிருக்க.

10. மூத்திரத் துவாரவலி குணமாக.

11. வண்டுகடி குணமாக.

12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.

13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.

14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.

15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.

16. அஜீரணம் குணமாக.

17. கெட்டரத்தம் சுத்தமாக.

18. குஷ்ட நோய் குணமாக.

19. குளிர் காச்சல் குணமாக.

20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.

21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.

22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.

23. காக்காய்வலிப்புக் குணமாக.

24 .ஜலதோசம் குணமாக.

25. ஜீரண சக்தி உண்டாக.

26. தாதுவைக் கட்ட.

27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.

28. இடிதாங்கியாகப் பயன்பட

29. தேள் கொட்டு குணமாக.

30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.

31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.

32. வாதரோகம் குணமாக.

33. காச்சலின் போது தாகம் தணிய.

34. பித்தம் குணமாக.

35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.

36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.

37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.

38. மாலைக்கண் குணமாக.

39. எலிக்கடி விஷம் நீங்க.

40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.

41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.

42. வாந்தியை நிறுத்த.

43. தனுர்வாதம் கணமாக.

44. வாதவீக்கம் குணமாக.

45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.

46. வாய்வுப் பிடிப்பு குணமாக.

47. இருமல் குணமாக.

48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.

49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.

50. இளைப்பு குணமாக.

51. பற்று, படர்தாமரை குணமாக.

52. சிரங்கு குணமாக.

53. கோழை, கபக்கட்டு நீங்க.

54. சகல காய்ச்சல் மாத்திரை.

55. சகல வித காய்ச்சலுக்கும் துளசி மாத்திரை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:58

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10314453_746058605416457_5741429450928645193_n

குப்பைமேனி - மருத்துவக் குணங்கள் :-

1) நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

2) சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலை ஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

3) வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவு கொடுக்கவும்.

4) இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

5) இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்

6) இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

7) மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள் நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டு வகை எனவும், கூறுவர். அவை இவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில்2 – 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும். மோரில் சாப்பிடவும். புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

8) குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகியவற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

9) குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியனவற்றில் கடிவாயில் தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

10) ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இளஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

11) இந்த இலையின் பொடியை மூக்கில் பொடி போல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனே குணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

12) குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்து வர சொறி சிரங்கு படை குணமடையும்.

13) எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:59

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10351840_745913048764346_7928251647914334764_n
வெந்தயம்: ரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குணமாக்கும்.

துளசி: தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

பூண்டு: வயிற்றில் உண்டாக்கும் வாயு கோளாறுகள் அனைத்தையும் போக்கும் தன்மை கொண்டது.

இளநீர்: உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கும். காலரா, சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்களுக்கு சிறந்த பானம்.

வெண்ணெய்: வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்.

மிளகு : ரத்த குழாய்களில் படியும் கொழுப்பை கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு.

சோம்பு: இது செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

காளான்: தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

சிவப்பு முள்ளங்கி: வயிற்று புண்ணை அகற்றும், மஞ்சள்காமாலைக்கு மிகவும் சிறந்த மருந்து.

வாழைத்தண்டு: சிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்கும். உடல் பருமனை குறைக்கும். சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்.

முட்டைக்கோஸ்: புற்றுநோய் வராமல் தடுக்கும். தொற்று நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

பாகற்காய்: சர்க்கரை வியாதிக்கு நல்லது. வாய்நாற்றம் போக்கும். வயிற்றுப்பூச்சியை கொல்லும்.

பச்சைபட்டாணி: உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியையும் தரும். குடல் புண்களை ஆற்றும், களைப்பை நீக்கும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by ராகவா Mon 16 Jun 2014 - 18:00

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! 10445136_746058908749760_3688495598334697296_n

காய்ச்சல், ஜலதோஷம், இருமல் குணமாக - இயற்கை வைத்தியம்:-

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இடித்து வைத்துக்கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின்போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவரவேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்பாட்டுக்கு வரும்.

துளசி:

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச்சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். சளி இருமல் மாயமாய் மறைந்துவிடும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by jaleelge Mon 16 Jun 2014 - 21:05

நாட்டு வைத்தியர் அனுராகவா...

நீங்க  எங்கேயோ போய்ட்டீங்க சார்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்! Empty Re: இயற்கை அளிக்கும் நிவாரணங்கள் & தெரிந்துக்கொள்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum