சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!! Khan11

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!!

Go down

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!! Empty பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!!

Post by ராகவா Wed 25 Jun 2014 - 22:01

பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!! 27-20-friends

அரட்டையடித்தல், டைம் பாஸ், ஷாப்பிங், திருவிழா, அல்லது பண்டிகைக் கொண்டாட்டம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பெண்ணுக்கும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கேற்ப ஒவ்வொரு தோழியர் பட்டியல் இருக்கும்.


அண்மையில் ஒரு இணையதள நிறுவனம் நடத்திய ஆய்வின் வழியே, ஒவ்வொரு பெண்ணுக்கும் 10 வகையான தோழியர் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நண்பர்கள் நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவே இருக்கலாம். இருப்பினும் நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் 10 வகையான நண்பர்களைக் கொண்டிருப்பார்கள்.

இங்கு அத்தகைய 10 வகையான நண்பர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

1. திடமான சிந்தை கொண்டவர்கள்

மிகவும் நம்பகத் தன்மை கொண்டவர்கள். அனைத்து நண்பர்களுக்கு மத்தியிலும், நம்பிக்கைக்கு உரியவர்கள். இரவு நேர பார்ட்டியாக இருந்தாலும், ஷாப்பிங் ஆக இருந்தாலும், எந்த நிகழ்ச்சிக்கும் இத்தகைய நண்பர்களுடன் ஒரு பெண் தைரியமாக வெளியில் செல்லலாம். இத்தகைய நண்பர்கள் ஒரு பெண்ணுக்கு பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்களது தொலைபேசி எண் அந்த பெண்ணின், செல்ஃபோனின் ஸ்பீட் டயலில் பதிவாகியிருக்கும். சொல்லப்போனால், இருவரும் ஒருவருக்கொருவர் மணமகள் தோழிகள் போல இணைந்திருப்பார்கள்.

2. ஷாப்பிங் செய்ய உடன் வரும் தோழியர்

இவர்கள் நல்ல உடல் வலிமையும், ஆடை அலங்கார வடிவமைப்பை எடை போடும் திறனும், கடன் கொடுத்து உதவும் எண்ணமும் நிறைந்தவர்கள். இவர்களுடன் ஷாப்பிங் சென்றால் நாம் வாங்கும் ஆடைகள், அலங்காரப்பொருள்கள் போன்ற பொருள்களைப்பற்றிய அவர்களது கருத்தினை தயங்காமல் மறைக்காமல், மிகவும் சரியாக சொல்வார்கள்.

தள்ளுபடி விற்பனைகளின் போது இவர்களை அழைத்துச் சென்றால், தரமான, தகுதியான மற்றும் நமக்குப் பிடித்தமான பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள்.

3. பேச்சுத் துணைவர்கள்

பொதுவாக வயதானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் இவர்கள் அம்மா போல இருப்பார்கள். அம்மாவிற்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் மற்றும் அம்மாவிடம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கூட இவர்களிடம் பேசலாம். இவர்களுக்கு வாழ்க்கையில் நிறைய அனுபவம் இருக்கும். இவர்களும் நம்மிடம் பேசுவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.

4. புலம்பித் தீர்ப்பவர்கள்

ஒரு பெண்ணின் தோழியரில் ஒரு சிலர் எப்போதும் தமது பிரச்சனைகளை அந்தப் பெண்ணிடம் புலம்பித் தீர்ப்பார்கள். அவர்கள் எந்தப் பிரச்சனை என்றாலும் தோளில் சாய்ந்து அழுவதற்கு இந்தப் பெண்னையே தேடி வருவார்கள். பொதுவாக இந்தப் பெண் அவர்களுக்கு குப்பைத் தொட்டி போலாகிவிடுவார். அவர்களது மனக்கவலைகள், மனக்குமுறல்கள் அனைத்தும் மனம் திறந்து ஒப்படைத்து விட்டு அவர்கள் மனம் லேசாகிவிடும். மிகவும் இக்கட்டான நேரங்களில் இவர்களது தொலைபேசி அழைப்பு வந்து தொல்லை செய்யும் அல்லது அவர்கள் ஏதாவது மது அருந்திவிட்டால் போதும். தொலைபேசியை எடுத்து இந்தப் பெண்ணின் எண்ணுக்கு பேசத் தொடங்கிவிடுவார்கள்.

5. சமந்தாவைப் போன்றவர்கள்

"செக்ஸ் அண்ட் தி சிட்டி" என்னும் தொலைக்காட்சித் தொடரில் கிம் கார்ட்டல் ஏற்று நடித்து, உயிர் பெற வைத்த கதாபாத்திரமான "சமந்தா"வைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதே போன்ற ஒரு சமந்தா ஒவ்வொருவருக்கும் இருப்பார். சமந்தா என்பவர் எதையும் செய்வார், எதைப் பற்றியும் பேசுவார், எப்படியும் இஷ்டம் போல இருப்பார்.

ஆனால், சில நேரங்களில் எதையாவது கட்டுப்பாடின்றி செய்து விட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்வார். மாலை நேர பார்ட்டிகளுக்கோ அல்லது வெளியில் எங்காவது செல்வதற்கோ உடன் அழைத்துச் செல்ல மிகவும் தகுதியான நண்பராக இருப்பார். இவருடன் சென்றால், கேளிக்கைக்கும் கூத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எதையும் ஒரு வரம்புக்குள் நிறுத்திக் கொள்ள இவருக்குத் தெரியாது.

6. நிகெல்லாவைப் போன்றவர்

நிகெல்லா லூசி லாசன் என்பவர் ஆங்கில பத்திரிகையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் மற்றும் சமையல் சார்ந்த புத்தகங்கள் எழுதுபவர். மேலும் இவர் நன்கு சமைப்பவர். இல்லத்தை இனிமையாக பராமரிப்பவர். விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்பவர்.

உங்கள் நண்பர்களுக்காக பார்ட்டிகள் ஏற்பாடு செய்வதில் ஆர்வமுள்ளவரா? உங்கள் வீட்டில் நீங்கள் மேற்கொண்ட புதிய அமைப்புகளைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த நண்பர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பவரா? அப்படியானால் நீங்கள் தான் நிகெல்லா.

7. தோழியின் தோழி

இவர்களை ஒரு பெண் ஒரு சில சமயங்களில் சந்தித்திருப்பார் அல்லது ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் பொதுவான விஷயங்கள் எதுவும் இருக்காது. எனினும், பரஸ்பர அறிமுகம் மட்டுமே இருந்திருக்கும். தெருவிலோ, சாலையிலோ, வழியில் எங்காவது பார்த்துக் கொண்டாலோ, சிறு உரையாடல் மட்டுமே இருக்கும். இருவரும் மற்றவர் பெயரைக் கூட மறந்திருப்பார்கள்.

8. திருமணமாகி குழந்தையுடன் இருப்பவர்கள்

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகும் வரை, திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் பெண்களுடன் நன்றாக நேரம் போகும். அதன் பின் வெளியில் செல்வதோ, இரவு நேர கேளிக்கைகளோ இருக்காது. உரையாடல்கள் கூட அளவுடன் தான் இருக்கும். இவர்கள் தனது தோழிக்கு நடந்த திருமணத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் பழைய நட்பினை எண்ணி, அது மீண்டும் துளிர்க்காதா என்று எண்ணுபவர்கள் இவர்கள்.

9. மாற்று ஏற்பாட்டு நண்பர்கள்

ஒவ்வொருவருக்கும் ஒருசில சமயங்களில் ஏதாவது நிகழ்ச்சிகளில் உடன் இருக்க வேண்டிய நண்பர்கள் வரமுடியாத சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தை நிரப்ப ஆபத்பாந்தவனாக ஒருவர் இருப்பார். இதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். இவர்கள் "ரிசர்வ்" வில் உள்ள நண்பர்கள் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

ஆனால் இவர்களை ஏன் முதலிலேயே அழைக்க முடியவில்லை என்று விளக்கி மன்னிப்பு கேட்க தகுந்த காரணத்தினைத் தயாராக வைத்திருப்பார்கள். ஒருவரை இதேப்போல மீண்டும் மீண்டும் காலியிடத்தை நிரப்ப அழைக்கும் நிலை வந்தால், "நான் உன்னை முன்பே அழைக்க நினைத்தேன். ஆனால், நீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன்" என்பார்கள். அப்படியென்றால் அவர்கள் தான் மாற்று ஏற்பாட்டு நண்பர்கள்.

10. ஆல் இந்தியா ரேடியோ நண்பர்கள்

இவர்கள் வதந்திகளைப் பரப்பிவிடுபவர்கள். மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், என்ன செய்தார்கள், அவர்களது நடவடிக்கை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் பேசத் தயக்கம் காட்ட மாட்டார்கள். மேலும் லேட்டஸ்ட் தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களை அணுகினால் போதும். ஆனால் தம்மை பற்றிய தகவல்களை வெளியில் விடாமல் கவனமாக இருப்பார்கள்.


நன்றி:http://tamil.boldsky.com
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum