சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Khan11

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

3 posters

Go down

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Empty புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

Post by ராகவா Tue 8 Jul 2014 - 21:56

ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இல்வாழ்கையை சுவர்க்கமாக்குவதும் சுடுகாடு ஆக்குவதும் இல்லத் தலைவியில் தங்கியுள்ளது


* இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள்.

* நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

* கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள்.

* உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில் பதித்துக் கொள்ளுங்கள்.

* பிறந்த வீட்டாரைப் போல், புகுந்த வீட்டாரையும் மதித்து, பணிந்து நடக்கத் தவறாதீர்கள்.

* கணவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யத் துணியாதீர்கள்.

* கணவனுக்கு பிடித்தமான உணவுகளை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் சமைத்து பரிமாறத் தவறாதீர்கள்.

* கணவனுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அடம்பிடித்து வேலைக்குப் போக துணியாதீர்கள்.

* கிழமையில் ஒருநாளைக்காவது அப்பா, அம்மா, மாமா, மாமியயைக் கண்டு சுகதுக்கம் கேட்கத் தவறாதீர்கள்.

* எதுவித காரணம் கொண்டும், புகுந்த வீட்டு குறை குற்றங்களை உற்ற நண்பிகளிடத்தோ, அல்லது உங்கள் பெற்றோரிடத்தோ அல்லது, உறவுகளிடத்தோ கூறாதீர்கள்.

* கணவன் வீட்டாரை பெருமையாக பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்கு விவாகம் செய்ததால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதாக பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.

* உங்கள் அப்பா, அம்மா, உறவினரின் மரியாதையை பேணுவதைப்போல் உங்கள் மாமா, மாமி உறவினர்களின் மரியாதையை பேணுங்கள்

* உங்கள் மாமா, மாமி, உறவினர்களைப் பற்றி உங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள் உங்களுக்கு கூறுவதை உங்கள் கணவனுக்கு கோள்மூட்டாதீர்கள்

* உங்கள் கணவரை விட நீங்கள் கல்வித் தகமை கூடியவராக அல்லது பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும்கூட உங்கள் தகமையைப் பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் யாரிடமும் கூறாதீர்கள்.

* உங்கள் கணவனிடத்து உங்கள் அன்பையோ, அழகையோ மறைக்காதீர்கள்.

* உங்கள் கணவனிடத்து, எதையும் மறைக்காதீர்கள். பொய் சொல்லுவதையோ, உண்மையை மறைப்பதையோ, திருடுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் கணவனுக்கு ஆலோசனை கூறுவதில் நல்ல மந்திரியாகவும், உணவு தயாரிப்பதில் அன்னையைப் போலவும், உபசரிப்பதில் நல்ல சேவகியாகவும், தாம்பத்திய உறவில் தாசிப் பெண்போலவும் நடக்க பழகிக் கொள்ளுங்கள்

* பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

* முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

* சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

* அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

* கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

* உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடாதீகள்.

* உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

* வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

* கணவனின் துணிவகைகளை துவைத்து அவரை அழகான ஆடை அணிந்து அழகு பாருங்கள்.

* எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”.

* உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

* ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

* தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள். உலக விஷயத்திலேயே மூழ்கிவிடாதீகள்.

* உங்கள் செலவை குறைத்து அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் காட்டுங்கள்.

* அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித் தரும்படி கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

* செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் உங்கள் சொத்துக்களாகும். அவற்றைப் பேணி நல்லமுறையில் வளர்த்தெடுக்க உங்கள் முழு முயற்சிகளையும் முன்னெடுங்கள்.

* உங்கள் கணவர் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

* உங்கள் கணவரின் நன்றியை நீங்கள் மறக்கும்போது, உங்கள் கணவர் "ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”.

* உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்” கொடுங்கள்.

* உங்கள் கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

* நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

* கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

* வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

* அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

* "என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

* நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்).

* தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

* குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

* வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

* கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

* உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

* கணவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

* கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

* வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போதும் இறைவனின் வேண்டிக்கொள்ளுங்கள்.
* உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

* உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

* உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

* வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

* பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

* தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

* அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

* பணத்தை கணவனுடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

* வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

* குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகளை புகட்டுங்கள்.

* கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

* கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

* கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

* ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். தீர்க்க சுமங்கலியாவாள்

நல்ல மனைவி இல்லத்தையும் சுவர்க்கமாக்குவாள். கோள்மூட்டும் மனைவி உறவை பிரித்து சுடுகாடு ஆக்குவாள்

நன்றி:http://www.panippulam.com/index.php?option=com_content&view=category&layout=blog&id=91&Itemid=456&limitstart=6
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Empty Re: புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

Post by ahmad78 Wed 9 Jul 2014 - 12:41

பெண்கள் அவசியம் பார்த்து நடந்துகொள்ளவேண்டிய பதிவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Empty Re: புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

Post by Nisha Wed 9 Jul 2014 - 12:44

அப்படியே மனைவியோடு வாழப்போகும் ஆணே என ஒரு கட்டுரை போடுங்க..

அப்புறம் ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டியது என நானும் பின்னூட்டம் போட்டு விடுவதற்கு வசதியாய் இருக்கும்.  i* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Empty Re: புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

Post by ராகவா Wed 9 Jul 2014 - 15:15

Nisha wrote:அப்படியே மனைவியோடு வாழப்போகும் ஆணே என ஒரு கட்டுரை போடுங்க..

அப்புறம்  ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டியது என நானும் பின்னூட்டம் போட்டு விடுவதற்கு வசதியாய் இருக்கும்.  i* 
என் அண்ணன் அஹமத் தேடி பிடித்து போடுவார்...அப்பறம் நீங்க பின்னோட்டம் போடலாம்.. :dance:  :dance:  :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள் Empty Re: புருசனோடு (தனியாக) வாழப்போகும் பெண்ணே !! - சில புத்திமதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum