சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை… Khan11

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…

Go down

மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை… Empty மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…

Post by ராகவா Sun 10 Aug 2014 - 15:46

தன் வீட்டிற்கு வரும் மருமகள் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அனுசரித்து வாழ வேண்டும் என்று பிள்ளையை பெற்ற ஒவ்வொருவரும் நினைப்பது இயல்பு.

அது சரியான கருத்துதான்….இருப்பினும் பெண்னை பார்க்கும் போதே நல்ல ஜாதக அம்சமுள்ள ஒரு பெண்னை பார்த்தால் ஒரு பிரச்னையும் இல்ல பாருங்க…..

நீங்க பார்க்கும் பெண்ணுக்கு இந்த அம்சம் எல்லாம் இருக்கானு பாருங்களேன்………

* பெண்ணின் ஜாதகத்தில் லக்னம் எனும் முதல் வீடு எந்த விதத்திலும் பாதிக்கபட கூடாது, அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது லக்னம் நன்றாக இருந்தால் மட்டுமே ஜாதகி மிகசிறந்த நல்ல குணங்களை பெற்று இருப்பாள், மேலும் உடல் நிலை எப்பொழுதும் நன்றாக இருக்கும், மற்றவர்களை அனுசரித்து செல்லும் தன்மை ஏற்படும். கணவனின் குறிப்பறிந்து செயல்படும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும், கணவனின் சொல்படி அடங்கி நடக்கும் தன்மையும், கணவனிடம் பாசமும் பற்றும் கொண்டவளாக இருப்பாள். வருமுன் உணரும் தன்மை ஜாதகிக்கு இயற்கையிலே அமைந்திருக்கும். சமயோசித புத்திசாலித்தனம் கொண்டவளாகவும், சரியான நேரத்தில் கணவனுக்கு நல்ல யோசனை சொல்லும் புத்திசாலியாகவும் இருப்பாள் .

* ஜாதகிக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கபட கூடாது, அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகி கணவனின் மனம் அறிந்து செயல்படும் தன்மை வாய்க்கும், தன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பிரயோகிக்கும் தன்மை ஏற்படும், இனிமையாக பேசி கணவனை எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை உண்டாகும். பொருளாதார ரீதியாக கணவனுக்கு ஏற்படும் பிரச்னைகளை கூட ஜாதகி தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக காணப்படுவாள். சேமிக்கும் பழக்கம் சிறு வயது முதலே ஜாதகிக்கு அமைந்திருக்கும். தனது கணவனின் வருமானம் அறிந்து சிக்கனமாக செலவு செய்பவளாக இருப்பாள். குடும்பத்தை அனுசரித்து செல்லும் தன்மை கொண்டவளாகவும், எவ்வித சூழ்நிலையிலும் தனது கணவனை விட்டு பிரியாத குணம் கொண்டவளாக இருப்பாள்.

* ஜாதகிக்கு சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்கபட கூடாது. சுக ஸ்தானம் எனும் நான்காம் வீடு நல்ல நிலையில் இருந்தால் ஜாதகி பெரியவர்கள் போற்றும் குணம் கொண்டவளாகவும், கற்பு நெறியில் சிறந்து விளங்குபவளாகவும், சகல வசதிகளையும், நிறைவான மனமும், மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும், சொத்து சுக சேர்க்கை கொண்டவளாகவும் இருப்பாள். தன் கணவனின் மதிப்பிற்கும் கௌரவத்திற்கும் இழுக்கு வராத செய்கையை கொண்டவளாக இருப்பாள். குழந்தைகளை பேணி பாதுகாக்கும் தன்மை கொண்டவளாகவும் அன்பால் குழந்தைகளை ஆதரிக்கும் தன்மை கொண்டவளாக காணப்படுவாள். அன்பை மட்டுமே மூலதனமாக கொண்ட பன்புடைய சிறந்த பெண்ணாக காணப்படுவாள் .

* ஜாதகிக்கு பூர்வ புண்ணியம் ஸ்தானம் எனும் ஐந்தாம் வீடு எக்காரணத்தை கொண்டும் பாதிக்க பட கூடாது. பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் வீடு நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே பிறக்கும் குழந்தை நிறைந்த யோக சாலியாக இருக்கும். தனக்கு பிறக்கும் குழந்தை பல உயரிய பண்புகளையும், இறைநிலை அருளை எப்பொழுதும் தன்னகத்தே கொண்ட குழந்தையாகவும் இருக்கும், ஜாதகிக்கு உதவி செய்ய உறவினர்கள் பலர் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். நல்ல குடும்பத்தை சார்ந்தவராக ஜாதகி இருப்பார்.

* களத்திர பாவகம் எனும் ஏழாம் வீடு எந்த விதத்திலும் பாதிப்படை கூடாது. அதாவது லக்னம் 6, 8, 12ம் வீடுகளுடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ சம்பந்தம் பெறக்கூடாது, இந்த களத்திர பாவகம் நன்றாக இருந்தால் மட்டுமே கணவனுடன் எப்பொழுதும் சேர்ந்திருக்கும் தன்மை ஏற்ப்படும். கணவன் செய்யும் தொழில் அதிக பங்களிப்பை செய்யும் குணமும், கணவனுக்கு எப்பொழுதும் உறுதுணையாகவும், தன்னம்பிக்கை அளிப்பவளாகவும் ஜாதகி இருப்பார். குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் மனப்பான்மை உள்ளவராக இருப்பார். கணவனின் ஒரு பாதியாக உணரும் தன்மை ஜாதகிக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். கணவனின் முன்னேற்றத்தில் அதிக பங்கு வகிக்கும் பேரு பெற்றவர்கள், களிமண்ணையும் சிலையாக மாற்றும் சக்தி படைத்தவர்கள். சமுதாயத்தில் தனது கணவனை மிகசிறந்தவனாக மாற்றும் ஆற்றல் கொண்டவர்கள்.

* ஜாதகிக்கு 8ம் வீடு தனது கணவனின் உடல்நிலையையும், மன நிலையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த 8 ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருப்பது மிக முக்கியம் கணவனுக்கு நீண்ட ஆயுளை தருவதே இந்த பாவகம் தான், ஆண்கள் எவ்வளவு பாவம் செய்தாலும் அவர்களின் உயிரை காப்பாற்றி வைப்பதே பெண்களின் 8ம் வீட்டை பொறுத்தே அமையும்.

* ஜாதகிக்கு 12ம் வீடு 100 சதவிகிதம் நன்றாக இருக்க வேண்டும். கணவனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷங்களை தரும் அமைப்பு இந்த பாவக வழியில் இருந்தே செயல்படும் தன் கணவனுக்கு நல்ல மன நிம்மதியை எந்த சூழ்நிலையிலும் தரும் அமைப்பை பெற்றவளாக இருப்பாள்.

மேற்கண்ட ஸ்தானங்கள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில், ஜாதகியை தனது மருமகளாக நிச்சயம் ஏற்றுகொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு இருவரும் வாழையடி வாழையாக வளமுடன் வாழ்ந்திருப்பார்கள். ஜாதகி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் நிறைந்து நிலைத்து நிற்கும்.

நன்றி:சக்திவேல்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum