சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Khan11

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

3 posters

Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 10:46

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது.

இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல…அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் கடைபிடிக்கின்றனர். அதை ஒரு பண்டிகையாக கொண்டாடுகின்றனர்

இப்ராஹிம் நபிக்கு, ஸாரா மற்றும் ஹாஜிரா என இரண்டு மனைவியர் இருந்தனர். அவருக்கு நீண்ட நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவருக்கு 85 வயது இருக்கும்போது, ஹாஜிரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்மாயில் நபி. அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு பிள் ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்ஹாக் நபி.இஸ்லாமிய சரித்திரம் ஆண்டு துவக்கமான முஹர்ரம் மாதமும், இறுதி மாதமான துல்ஹஜ் மாதமும், மாபெ ரும் தியாகங்களை உள்ள டக்கிய மாதங்களாகும். கருணை மிக்க ரஹ்மானாகிய அல்லாஹ், ஒருமுறை நபி இப்ராஹிம் (அலை) உடைய கனவில் தோன்றி, “உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு என்று கட்டளையிட்டார். இறைத் தூதர் களுக்கு வரும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல; அவை கடவு ளின் கடிதங்கள். உலகத் தையே படைத்து பரிபாலிக்கும் இறைவ னின் கட்டளையை நிறை வேற்ற, இப்ராஹிம் நபி (அலை) தன் கனவை பற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் கூறுகிறார்.


அதற்கு அந்த பிள்ளை, “தங்களுக்கு அல்லாஹ் என்ன கட்டளையி ட்டாரோ, அதை நிறைவேற்றுங்கள். நான் நிச்சயமாக பொறுமை யோடு இருப்பேன்… எனக் கூறுகிறார்.என்ன ஒரு நம்பிக்கை பாரு ங்கள்…பிறகு, இப்ராஹிம் நபி (அலை) தன் மகன் இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு, மினா எனும் மலையடிவாரத்தில், பிள்ளைப் பாசம் தடுக்காமலிருக்க, தனது கண்களை துணியால் கட்டிக் கொண் டு, மகனது கழுத்தில் கூரிய கத்தியை வைத்து, “அல்லாஹ் மிகப் பெரியவன் எனக் கூறியதும், மகன் இருந்த இடத்தில் ஒரு கொழுத்த ஆடும், மகன் விலகியிருந்த காட்சியையும் காண்கிறார்.””எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே… அனைத்தின் மீது ஆற்றல் கொண்டவன் அவனே… அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறில்லை. நீயே என் அதிபதி, என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) “இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடு த்து, அதன் கறியை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து கொண்டா டுங்கள் என்று சொன்னார்.


“நீங்கள் அறுத்த ஆட்டின் ரத்தமோ, இறைச்சியோ என்னை வந்து அடைவதில்லை. ஆனால், உங்கள் உள்ளங்களில் உள்ள எண்ணங் களை நான் நன்கு அறிந்தவனாக இருக்கிறேன் என, இறைவன் கூறு கிறான்.குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. குர்பானி கொடுக்கும் நாளில், குர்பானி கொடுப்பதைவிட, அல்லா ஹ் இடத்தில் வேறு சிறந்த வணக்கம் எதுவும் கிடையாது. குர்பானி க்காக பிராணியை அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னாலேயே, அல்லாஹ் இடத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டதாகி விடுகிறது.எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார். ஒரு தடவை நாயகத்திடம் தோழர்கள், “குர்பானி என்றால் என்ன? என்று வினவியதற்கு, “”அது, உங்களின் தந்தையாகிய நபி இப்ராஹிம் (அலை) உடைய வழிமுறை, என நாயகம் (ஸல்) பதிலளித்தார்.

அதற்கு அந்த தோழர்கள், “அதனால் நமக்கு என்ன நன்மை இரு க்கிறது எனக் கேட்டனர்.”குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்கும், நன்மை இருக்கிறது என, நாயகம் (ஸல்) பதிலளித்தார்.குர்பானி, குறிப்பாக மூன்று நாட்களில் மட்டு மே கொடுக்க வேண்டும். அவை துல்ஹஜ் மாதத்தின் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில், எப்பொழுது நாடுகிறோமோ அப்போது கொடுக் கலாம். ஆனால், துல்ஹஜ் மாதத்தில் 10வது நாளில் குர்பானி கொடுப்பது மிகச் சிறந்தது.குர்பானிக்காக அறுக்கப்படும் பிராணி யின் கறியை, மூன்று பங்காக பிரிக்க வேண்டும். ஒரு பங்கை தன் குடும்பத்திற்காக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பங் கை, நண்பர்கள், உறவினர்களுக்கு பங்கிட்டுத் தரவேண்டும். மூன் றாவது பங்கை, ஏழை, எளியவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு தர வேண்டும்.இப்ராஹிம் நபி (அலை) கட்டிய இறை இல்லாமே மக்கா வாகும் அங்கு துல்ஹஜ் மாதத்தில் செல்வது ஹஜ் என்றும், மற்ற காலங்களில் செய்வது உம்ரா என்றும் சொல்வார்கள்.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஐந்து முக்கிய கடமைகளை வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அவை: கலிமா, தொழு கை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகும்.


ஹஜ் எனும் புனிதப் பயணம் வசதிபடைத்த அனைவர் மீதும் கட் டாய கடமையாகும். இந்த பள்ளிவாசலை புதுப்பித்து, அங்கு தொழுகையையும், மார்க்க சொற்பொழிவையும் நடை முறைப் படுத்தியவர் முஹம்மத் நபி (ஸல்)ஹஜ் காலங்களில் உலகத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும், இனம், நிறம், மொழி, தேசம் என்ற எந்த பேதமுமின்றி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற, அங்கே கூடுவது கண்கொள்ளாத காட்சி…”லப்பைக் அல்லாஹகம்மா லப்பைக், லப்பைக் லாஷரிகலக லப்பைக் இன் னல் ஹம்தவல் நியமத லகவல்முல்க் லாஷரீகலக்…”இதோ வந்து விட்டோம் இறைவா… உன் அழைப்பை ஏற்று உன் இடத்திற்கு இதோ வந்து விட்டோம் இறைவா… உன் அருட்கொடைகளுக்கு நன்றி கூற என்று, புனிதப் பயணம் மேற்கொள்பவர்களின் நா அசை ந்து கொண்டிருக்கும்!இப்ராஹிம் நபி (அலை)யின் வாழ்க்கை தியாகமின்றி வெற்றி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. நாம் எதை தியாகம் செய்வது? எப்படி வெற்றி அடைவது?
இந்த உலக வாழ்க்கையை இறைவன் எந்த ஒரு அர்த்தமும் இல்லா மல் வெறுமனே படைக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். நமக்கு சிந்திக்கின்ற ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கிறான்.

இறைவனுடைய படைப்பிலேயே ஆகச் சிறந்த படைப்பு மனிதன் தான். அவனால் படைக்கப்பட்ட இன்னொரு மனிதனை நாம் பரிகாசம் செய்வது, இறைவனையே நாம் பரிகாசம் செய்வது போலாகும்.நம் மனதில் மறைந்திருக்கும் கேடுகளை, ஆடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். நம் மனதில் மறைந்து கிடக்கும் நானே மேலானவன் என்கிற மமதையை, மாடுகளுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம். செல்வம், அகம் பாவம், ஆடம்பரம் இவற்றின் ஆணவக் கூடுகளை ஒட்டகங் களுடன் சேர்த்து இந்த பக்ரீத்தில் தியாகம் செய்வோம்.இத்தியாகத் திருநாளில் எல்லாரும் இறைவனிடம் கையேந்துவோம்… இவ்வு லகை படைத்து பரிபாலிப்பவனே… அளவற்ற அருள் பொழிப வனே… நிகரற்ற அன்புடையோனே… தீர்ப்பு நாளின் அதிபதியே… உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவாயாக.

அன்பு, பாசம், பரிசு, சகோதரத்துவம் ஓங்கச் செய்து, உலகமெங்கும் சுபிட்சம், அமைதி, சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் ஏற்படுத்துவாயாக ஆமீன்! நோய் நொடியற்ற வாழ்வு, இல்லாமை, கல்லாமை, இல்லை என்ற நிலை ஏற்படுத்தி, இந்த நல்ல நாளில் மட்டுமன்றி இனிவரும் நாட்களிலும் எல்லாருக்கும் சிறப்பான வாழ் வளிக்க உன்னையே வேண்டுகிறோம். எல்லாம் வல்ல இறைவனே.. உன்னிடமே உதவி கேட்கிறோம். ஆமீன்!நன்றியும், கரு ணையும், நட்பும், உதவும் மனோபாவமும் நம்மனங்களில் சுரக் கச் செய்வாயாக அல்லாஹ்… ஆமீன்…யா ரப்புல் ஆலமீன்…

அல்ஹாஜ்  எம்.ஏ.ஆர்.அப்துல்லாநிர்வாகி, பெரியமேடு பள்ளிவாசல்


Last edited by பானுஷபானா on Sat 4 Oct 2014 - 11:11; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Nisha Sat 4 Oct 2014 - 10:57

நீயே என் அதிபதி, என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) “இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடு த்து, அதன் கறியை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து கொண்டா டுங்கள் என்று சொன்னார்.
“உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு என்று கட்டளையிட்டார். 

புரிந்தது பானு! ஆனால்  இறைவன் பலியிட சொல்லி கேட்டது  ஈஷாக்கைத்தானே’! சாராயின் மகனைத்தான் பலியிடசொன்னதாக பைபிளில் இருக்கின்றது. 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by பானுஷபானா Sat 4 Oct 2014 - 11:14

Nisha wrote:
நீயே என் அதிபதி, என, தன்னை சோதித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.இதன் நினைவாகவே, இறுதி நபி முஹம்மத் (ஸல்) “இந்நாளில் நீங்கள் அனைவரும் அந்த தியாகத்தை நினைவில் கொள்ள, உங்களில் வசதியுள்ளவர்கள் ஓர் ஆட்டை குர்பானி கொடு த்து, அதன் கறியை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்து கொண்டா டுங்கள் என்று சொன்னார்.
“உம்முடைய மகன் இஸ்மாயிலை என் பெயரால் அறுத்து பலி இடு என்று கட்டளையிட்டார். 

புரிந்தது பானு! ஆனால்  இறைவன் பலியிட சொல்லி கேட்டது  ஈஷாக்கைத்தானே’! சாராயின் மகனைத்தான் பலியிடசொன்னதாக பைபிளில் இருக்கின்றது. 

தெரியலையே பைபிள் நான் வாசித்ததில்லை நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by சுறா Sun 5 Oct 2014 - 20:16

பைபிளில் ஈசாக் என்றும் குர்ரானில் இஸ்மாயில் என்றும் இருக்கிறது :(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Nisha Sun 5 Oct 2014 - 21:27

சுறா wrote:பைபிளில் ஈசாக் என்றும் குர்ரானில் இஸ்மாயில் என்றும் இருக்கிறது :(

இல்லை ஜானி! 

சாராளுக்கு  பிறந்த மகன்  பெயர் ஈஷாக் 
ஹாகிரா என  சொல்லப்பட்ட பணிப்பெண்ணுக்கு பிறந்த மகன்  பெயர் இஸ்மவேல். 

சாராளுக்கு ஆப்ரகாம் எனும் இபராகிமுக்கும் திருமணமாகி முதிர் வயதில்  பிறந்த மூத்தவர் இஸ்மவேலாயிருந்தாலும் ஆப்ரகாமிம் மனைவியாம் சாராளின் மகன் ஈஷாக் வழி வந்தோர் தான் கிறிஸ்தவர்களும், யூதர்களும்,  ஈஷாக்கின் மகன் யாக்கோபின் வம்சத்தில் வந்தோர் ! 

ஆப்ரகாமில் பணிபெண்னின்  மூலம் பிறந்த மூத்த மகன் இஸ்மவேல் வழி வந்தோர் தான் அராபியர்!  நான் அறிந்த சரித்திரம் இது!

ஆபிரகாமின் 100 வயதில்  ஈஷாக் பிறந்த தால் அவ்ன் விசுவாசத்தை சோதிக்க ஈஷாக்கை தனக்கு பலியிட கேட்கின்றார் இறைவன். ஆபிரகாம் ஏன் எதற்கென கேட்காமல்  கர்த்தரே  கொடுத்தார்,, அவரே கேட்கின்றார் என நம்பி  மகனிடம் கூட சொல்லாமல்  பலியிடும் மலைக்கு அழைத்து சென்று அவனை பலியிட முயலும் போது  கர்த்தரின் சத்தம் நிறுத்தும் படி கேட்டதாம்! 

 உன் மகனையே  எனக்கு பலிபிட வந்த உன் விசுவாசத்தினைசோதிக்கவே நான்  இப்படி சொன்னேன். என சொல்லி  ஈஷாக்கையும் ஆபிரகாமையும் ஆசிர்வதித்து விட்டு கூடவே கொண்டு போன ஆட்டுக்கிடாவை பலி இட சொல்வார். ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை என அழைக்கபட்டவர்.! 

ஈஷாக்கை தான் பலியிட  சொன்னார்! இஸ்மவேலை  வேறிடம் அனுப்பி விட்டார். 

அக்காலத்தில்  குழந்தைகள் பிறந்தால் விருத்த சேதனம் பண்ணுவதும்  ஆண் பெண் என்பதற்கேற்ப ஆடு அறுத்து பலியிடுவதும் நடை முறையாயிருந்தது,  அதை இக்காலத்திலும்  நம் இஸ்லாமிய உறவுகள் தொடர்கின்றார்கள். 

இந்த நாளை  ஒரு பெரு நாளாக கொண்டாடுவது எனக்கு  இப்போது தான்  தெரியும்.  ஹஜ்ஜூப் பெருனாளென கேள்விப்பட்டாலும் அதன் காரணம் என்னவென இப்போதான் புரிந்தேன். 

அவருக்கு 85 வயது இருக்கும்போது, ஹாஜிரா மூலமாக ஒரு பிள்ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்மாயில் நபி. அதற்குப் பின் சில ஆண்டுகள் கழித்து, ஸாரா மூலமாக ஒரு பிள் ளை பிறந்தது. அவருடைய பெயர் இஸ்ஹாக் நபி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by சுறா Mon 6 Oct 2014 - 9:34

ஆனால் குர்ரானில் இஸ்மாயிலை தான் பலியிட கடவுள் கேட்டதாக இருக்கிறது.  அதுவும் மகனிடம் இப்ராகீம் சொன்னதாக இருக்கிறதே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Nisha Mon 6 Oct 2014 - 18:54

ஆதாம் ஏவாளின் மூலம் வந்த சந்ததியில்  நோவாவின் குடும்பம் தவிர அனைவரையும்  ஜலத்தினால் அழித்த பின் நோவாவின் சந்ததியிலிருந்து வந்தவர் ஆபிரகாம்!

ஆபிரகாம் விசுவாசத்தின் தந்தை! கடவுளால் தெரிந்து ஆசிர்வதிக்கப்ட்டவர்! கிறிஸ்தவ, யூத மக்களோடு இஸ்லாமியர்களும்  இவரை தீர்க்க தரிசியாகவே கொள்கின்றார்கள்! 

நோவாவின் வழி வந்த தேராகுக்கு   3 பிள்ளைகள்.
ஆபிராம், நாகோர், ஆரான் 

ஆபிராமின் மனைவி சாராள்... திருமணமாகி முதிர் வயதாகியும் குழந்தை இல்லாத மலடியாய் இருந்தாள்!

குழந்தை இல்லாததால் எகிப்திய பணிப்பெண் ஆகாரை மனைவியாக  கொடுத்தார்! ஆகாரின் அதாவது ஹாகிராவின்  86 ஆவது வயதில் ஆபிரகாமுக்கு பிறந்த முதல் மகன் இஸ்மவேல்! 

தான் கர்ப்பமானதை உணர்ந்த ஹாகிரா சாராளை  ஏளனம் செய்ய .. அதனால் கோபம் கொண்ட சாராள்  அவளை கொடுமைப்படுத்த ஹாகிரா  இஸ்மவேலை  தூக்கி கொண்டு அவர்களை விட்டு போனார்.. அல்லது போக வைக்கப்ப்ட்டார்! 

ஆகார் எனும் ஹாகிரா குழந்தையுடன்  பாலைவனத்தினூடாக சென்ற போது தாகத்தினால் இஸ்மவேல் அழ ஆகாரும் அழும் போது குழந்தையின் சத்தம் கேட்டு தேவனுடைய தூதன் தோன்று கிறார்.  குழந்தைக்கு நீர் கொடுக்க நிலத்தினை அடிக்க அவ்விடத்தில் ஒரு ஊற்று தோன்றுகின்றது! அது  தான் இன்றைய  ஷம் ஷம் மகிமையான நீரென சொல்கின்றார்கள். !

இதன் பின் தான் சாராளுக்கும் ஆபிரகாம் மூலம் ஈஷாக் பிறந்தார்!  பொதுவாக தலைமுறை என பார்த்தால் இஸ்மவேல் தான்மூத்தவர். விருத்த சேதனத்துக்குரிய மட்டுமலல் பட்டத்துக்குரியவர்! ஆனால் ஈசாக் குறித்து  வானத்து நட்சத்திரங்களை போல் பெருகபண்ணுவேன் எனும் வாக்குறுதி குறித்தெல்லாம்  பார்த்தால் மூல மொழிபெயர்ப்பு  எங்கோ தவறி ஆளாளுக்கு த்ம் இஷ்டப்படி  எழுதி இருப்பது புரியிது! 

பைபிளில் ஈசாக்கை முதன்மை படுத்து வது போல்  இஸ்லாமியர் இஸ்மவேலை முதன்மை படுத்துவதனால் மூல மொழிபெயர்ப்பு மாற்றம் வந்திருக்கலாம். 

 உன் மூத்த மகனை எனவும் உன் ஒரேமகனை எனவும் சொல்வதாய் பைபிள்  பலரால் மொழிபெயர்க்கப்பட்டதனால் அவரவர் இஷ்டத்துக்கு மொழிமாறி இருக்கலாம் !

இஸ்லாமியர் மொழி பெயர்ப்பில்  ஆராபியிலிருந்து நேரே படிப்பதால் மூலவார்த்தை சரியாய் இருக்கலாம்! 

ஏனேனில் கடவுள் குறித்த விவாதங்களுக்குள் நான் அதிகமாய் செய்ய விரும்புவதில்லை! என்னைப்பொறுத்த வரை நாங்கள் அனைவரும் ஆதாம், ஏவாளிலிருந்து வந்ததால் ஒரே தாய் தகப்பன் வயிற்று பிள்ளைகள் தான்.

ஒன்றோடொன்ராய் இணைந்து  தொடரும் சங்கிலி உறவுகள் தான்! 

இந்துவோ, கிறிஸ்தவரோ, இஸலாமியரோ எல்லாம் நாம் நமக்குள் இட்ட பிரிவினை.  ஆனால் உலக மதத்தில் மிகப்பழமையானதும்  உலக மக்கள் தொகையில் இரண்டாவதும் கொண்டதுமான மதம் இஸ்லாம் மதம்! 

முதல் மதம் கிறிஸ்தவம்! இந்து மதம்  பிற்காலத்தில் சாலோமோன்  காலத்தோடு உருவாகிய மதம் என்பதாய்  நான் வரலாறோடு அறிந்த புரிதல்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Nisha Mon 6 Oct 2014 - 19:11

முடிந்தால் இங்கு சென்று இதை படித்து விட்டு நிதானமாய் யோசித்து பாருங்கள்!

http://www.chenaitamilulaa.net/t47046-topic#414573

இஸ்மவேல் குறித்த முன் கூட்டிய அறிவிப்பு இன்றைக்கு எத்தனை மெய்யானது என அறிய முடியும். 

 நாம் அனைவரும் முக்கியமாக ஒரு விடயம் தெரிந்து புரிந்து கொள்ளணும்! 

கடவுள் நம்மை படைக்கும் போது ஐந்தறிவுள்ள மிருகமாய் படையாது மேலுமொரு அறிவை தந்து அதில் ஞானம், அறிவும் , புத்தி, நிதானம் என பலதை  சேர்த்திருக்கின்றார்! 

ஏன் தெரியுமா? கண்டது.. கேட்டது. படித்தது.. சொன்னது என அனைத்தினையும் அப்படியே  கண்ணை மூடி நம்பாமல் நம்மை நாமே நிதானித்து ஆராய்ந்தறிந்து இந்த விடயம் சரியானதாய் இருக்குமா என தெளிவாய் முடிவெடுத்து பின்பற்றுவதற்காகத்தான் நமக்கு ஆறறிவு! 

ஆனால் நாம் அதை சரியாக பயன் படுத்துவதில்லை! அதனால் தான் ஆதாம் ஏவாளினை  ஏமாத்தவும் முடிந்தது அவர்கள் வழி வந்த நம்மையும் ஏமாத்த முடிகின்றது. 

சில நம்பிக்கைகளை நாம் மாற்றுவது இலகு அல்ல! ஆனால் நாம் கொண்டது தான் சரி எனும்  அசட்டு தனம் செய்யாமல் இருக்கலாம்.  

யோசிக்கும் போது.. ஈசாக்கா.. இஸ்மவேலா எனில் .. ஆபிரகாமின் 86 ஆம் வயதில்’ இரண்டாம் மனைவிக்கு  பிறந்த இஸ்மவேலா...  99 ஆவது வயதில் முதல் மனைவிக்கு பிறந்த  ஈசாககா .. எனில் இறைவன் பாராபட்சம் காட்டாதவர் என நாம் நம்பினால்  அவர் பலியிட கேட்டது????

ஆபிரகாமின் மூத்தவனை என பைபிளும் சொல்கின்றது. அதுவும் சரி எனில் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் சரியாய் தானிருக்கும்!

ஆனாலும் நான் இயேசுவின் பிள்ளை! அவர் என் ஒரே தேவன் என விசுவாசிக்கின்றேன். நம்புகின்றேன். மீண்டும் அவர் வருகைக்கும் காத்திருக்கின்றேன்.


Last edited by Nisha on Mon 6 Oct 2014 - 19:15; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by சுறா Mon 6 Oct 2014 - 19:11

இதற்கு முடிவு என்ன? நம் அறிவுக்கு எட்டா இறைவனை பற்றி நாம் விமர்சிக்கவேன்டாமே. அவரவர் புரிதலிலேயே விட்டுவிடுவோம். அருமை நிஷா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Nisha Mon 6 Oct 2014 - 19:14

சுறா wrote:இதற்கு முடிவு என்ன? நம் அறிவுக்கு எட்டா இறைவனை பற்றி நாம் விமர்சிக்கவேன்டாமே. அவரவர் புரிதலிலேயே விட்டுவிடுவோம். அருமை நிஷா

அதே தான் என் கருத்தும்! அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு! நம் நம்பிக்கை நமக்கு! ஆனாலும் நாம் ஒரே இரத்தம் கொண்ட சகோதரர்கள் தான்! 

நான் விமர்சிக்க வில்லை என புரிந்திருப்பீர்கள்... சரித்திரத்தை கொஞ்சம்  மீள நினைவு செய்தேன்! வரலாற்றை  சொன்னேன்! வரலாறு என்றும் பொய்யாகாது அல்லவா?

அன்பால் அனைவரையும் வென்று புரிந்திட்டால் போதும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு) Empty Re: தியாகத் திருநாள் (நிஷா கவனத்திற்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum