சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Khan11

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 12:12

அன்புள்ள நண்பர்களே! வணக்கம். இன்றைய மாணவர்கள் மனநிலையை பற்றி நாம் இங்கு விரிவாக அலசுவோமா? ஆம் எல்லாருடைய வீட்டிலும் ஒரு மாணவன் நிச்சயம் இருப்பான். மாணவ பருவத்தில் உள்ள குழந்தைகளின் நடவடிக்கைகளை சரியாக கண்காணிக்கின்றோமா? அவனது நண்பர்களின் பழக்கவழக்கங்களையும் கண்காணிக்கின்றோமா? என இதுபோன்ற பல கேள்விகளுக்கு இங்கு விடை காண்போம். நான் ஒரு ஆசிரியன் தினமும் 2000 மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உள்ளது. ஓருநாளைக்கு குறைந்தது 100 மாணவர்களிடமாவது பேசும் சந்தர்ப்பம் ஏற்படும். இதில் 10 பிரச்சனைகளையாவது தினமும் சந்திப்பேன். அவற்றை தீர்க்கவும் செய்கிறேன். நான் சந்தித்த வித்தியாசமான மாணவர்களின் அனுபவங்கள் அனுகுமுறைகள் பற்றியும் சொல்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளுடன் இதை ஒப்பிட்டு பார்த்து ஒப்பீடு செய்துக்கொள்ள இது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். மற்ற நண்பர்களும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளலாம்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 12:19

போன ஆண்டில் ஒருநாள் எனது பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம். பதினோராம் வகுப்பு கடைசி தேர்வுகள் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்களை (எங்களை) பார்க்க வந்தார்கள். அப்போது ஒரு மாணவன் "ஏன் சார் உங்க பைக்கை இப்படி வழியில் நிறுத்தியிருக்கீங்க" என்றான். அதற்கு நான் "அது எனது பைக் இல்லைடா, என்னோடது அதோ அங்கிருக்கு பாரு பேஷன் புரோ எண்....................." என்றேன். பிறகு மற்ற பாட விசயங்களை பேசியபின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மாலை வீடு திரும்பும் போது எனது பைக்கை பார்த்தால் புது சீட்டில் பிளேடால் ஒரு கோடு விழுந்திருக்கிறது  . பிறகு மீண்டும் அந்த சீட்டை சரிசெய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அந்த மாணவன் எப்படியும் அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்பு (சூன்) படிக்க வருவான். அப்போது இதுபற்றி கேட்டால் அவன் கூலாக "சாரி சார்" என்பான். மாணவர்களிடையே இப்போது சாரி சொல்லும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால் அவர்கள் உணர்ந்து அதை சொல்வது கிடையாது. இதைபற்றி இன்னும் விரிவாக விவரிக்கிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 12:23

நான் பள்ளி பயின்ற காலத்தில் பள்ளிக்கு காலதாமதமாக சென்றால் எங்க உடற்கல்வி ஆசிரியர் இரண்டு கையிலும் இரண்டு இரண்டு அடி பிரம்பால் கொடுப்பாரு. பின்பு மாலை டிட்டென்ஷன் கிளாஸ் வைப்பாரு... சீருடை சரியாக இல்லாமை, மற்றும் வீட்டுப்பாடம் செய்யாமை இவற்றக்கெல்லாம் தக்க தண்டனை கிடைத்தது அந்தக்காலம். இப்போது அரசாங்கம் பசங்க மேல கைய வச்சாலே தப்பு என்று சொல்கிறது. அதேவேளையில் காயம் ஏற்படுத்தும் நோக்கில் அடிக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை அவசியம் தேவைதான். ஆனால் தவறுக்கு தண்டனை கூடாது என்று சொல்லுவது சரியாகாதே? இன்று மாணவன் லேட்டாக வந்தால் அவனை வெளியில் நிறுத்தினால் பெற்றோர் போராட்டம் செய்கின்றனர், பீஸ் கட்ட தவறிய மாணவனை கேட்கக்கூடாது, பெற்றோர் கொடுக்கும் செக். பவுண்ஸ் ஆனாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றால் எப்படி? மற்றவர்களும்இந்த திரியில் கருத்து பகிரலாமே?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by பானுஷபானா Mon 13 Oct 2014 - 12:32

சுறா wrote:போன ஆண்டில் ஒருநாள் எனது பள்ளியில் நடந்த ஒரு சுவையான சம்பவம். பதினோராம் வகுப்பு கடைசி தேர்வுகள் முடிந்து மாணவர்கள் ஆசிரியர்களை (எங்களை) பார்க்க வந்தார்கள். அப்போது ஒரு மாணவன் "ஏன் சார் உங்க பைக்கை இப்படி வழியில் நிறுத்தியிருக்கீங்க" என்றான். அதற்கு நான் "அது எனது பைக் இல்லைடா, என்னோடது அதோ அங்கிருக்கு பாரு பேஷன் புரோ எண்....................." என்றேன். பிறகு மற்ற பாட விசயங்களை பேசியபின் அவர்கள் அங்கிருந்து சென்றனர். மாலை வீடு திரும்பும் போது எனது பைக்கை பார்த்தால் புது சீட்டில் பிளேடால் ஒரு கோடு விழுந்திருக்கிறது  . பிறகு மீண்டும் அந்த சீட்டை சரிசெய்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அந்த மாணவன் எப்படியும் அடுத்த ஆண்டு 12 ஆம் வகுப்பு (சூன்) படிக்க வருவான். அப்போது இதுபற்றி கேட்டால் அவன் கூலாக "சாரி சார்" என்பான். மாணவர்களிடையே இப்போது சாரி சொல்லும் பழக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால் அவர்கள் உணர்ந்து அதை சொல்வது கிடையாது. இதைபற்றி இன்னும் விரிவாக விவரிக்கிறேன்.

உங்க மேல உள்ள கோவத்தை பைக்கிடம் காட்டனும்னு புத்திசாலித்தனமா கேட்டு சீட்டை கிளிச்சிருக்கான். இதை ஜாலியாக பிரண்ட்சிடம் சொல்லி சந்தோஷப்பட்டிருப்பான்.

தொடர்ந்து எழுதுங்கண்ணா படிக்கக் காத்திருக்கிறோம்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 13:08

இதெல்லாம் பழய மேட்டர் தான். இன்னும் நிறைய கதைகள் உண்டு. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். தொடர்ந்து தருகிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 13:11

குழந்தைகள் சட்டப்படி கார்பரல் பனிஷ்மென்ட் குற்றம் ஆகும்.

கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by பானுஷபானா Mon 13 Oct 2014 - 13:26

சுறா wrote:குழந்தைகள் சட்டப்படி கார்பரல் பனிஷ்மென்ட் குற்றம் ஆகும்.

கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.

எல்லாப் பள்ளியிலும் இந்த முறை இருந்தால் பெரும்பாலான குழந்தைகள் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள் சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by ahmad78 Mon 13 Oct 2014 - 13:31

தொடருங்கள் அண்ணா

அறியக்காத்திருக்கிறோம்....................

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 13:36

நன்றி Guest நிறைய இருக்கிறது தொடர்ந்து எழுதுகிறேன்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. விசயம் கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

ஒருமுறை வகுப்பறையில் இரு மாணவர்கள் தவறான செயல் ஒன்றை செய்துக்கொண்டிருக்க அதை அருகில் இருந்து மற்ற மாணவர்கள் பார்த்துவிட்டு அந்த வகுப்பு ஆசிரியரிடம் சொன்னார்கள்.  அந்த ஆசிரியர் பெண் என்பதால் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த இரு மாணவர்களையும் மற்ற மாணவர்களின் துணைகொண்டு திருடனை பிடித்து வருவது போல என்னிடம் அழைத்து வந்தார்கள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by பானுஷபானா Mon 13 Oct 2014 - 13:38

அப்புறம் என்னாச்சு?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 14:18

பானுஷபானா wrote:அப்புறம் என்னாச்சு?

சொல்றேன்ப்பா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by பானுஷபானா Mon 13 Oct 2014 - 14:30

ம்ம்ம் சரி :)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 14:54

சுறாவுக்குள் இருக்கும்  சிறப்பை ஊருலகம் மட்டுமல்ல இந்த நிஷாவும் அறியும் வாய்ப்பாய் அருமையாய் ஒரு திரி தொடங்கியமைக்காக நன்றி  !

மிக மிக அருமையும் ஆவசியமானதொரு திரி இது! 

இன்றைய மாணவர்கள் தான் எதிர்கால நாட்டின் கண்கள்! அவ்ர்களை ஆசிரியர்களும் ஆசிரியர்களை  அவர்களும் உணர்ந்திட்டால்   அருமையான தொரு சமுதாயம் நமக்கு பின் உருவாகும், 

இன்னும் இன்னும் தொடருங்கள் !

Last edited by Nisha on Mon 13 Oct 2014 - 18:27; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 15:03

சுறா wrote:குழந்தைகள் சட்டப்படி கார்பரல் பனிஷ்மென்ட் குற்றம் ஆகும்.

கார்பரல் பனீஷ்மென்ட் சட்டப்படி குற்றம். ஆனாலும் நாங்கள் இப்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம். ஆமாம் அதுதான் கவுன்சிலிங். பிரச்சனை உள்ள மாணவர்கள் மட்டுமன்றி நன்கு படிக்கும் மாணவர்களையும் இந்த முறை கொண்டு ஊக்கப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாணவனை பற்றிய கேஸ் இஸ்டரி தயார் படுத்தி அவனை வருடம் முழுவதும் பின்தொடர்ந்து நல்வழிபடுத்துகிறோம்.

இந்த முறை நான் படிக்கும் காலத்திலும் இருந்தது ஜானி! ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முதல் இரு வகுப்பில்  மிக கெட்டிக்கார மாணவர்களை கொண்டு பின் வரும் வகுப்பில்  பின் தங்கும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதும், வழி நடத்துவதுமிருக்கும். 

நான்  ஆறாம் ஏழாம் வகுப்பிலிருந்தே  எனக்கு கீழே படித்த நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  டீச்சராக இருந்திருக்கேன்! வருடா வருடம்  அது தொடர்ந்தது.

ஒரு வகுப்போ இரு வகுப்போ மேலே படிக்கும் மாணவர்கள்  தாங்கள் படித்ததை மீட்டுப்பார்க்கவும்,  அதே நேரம் வீண் பொழுதாய் போகாது  பயன் தருவதோடு சின்ன வயதில் நீதான் இவர்களுக்கு வழி காட்டி என ஏத்தி வைப்பதால்  தப்புக்கள் செய்யவும் தோணாமல் எப்போதும் முன் மாதிரியாய் இருக்கணும் எனவும் தோன்ற வைக்கும். 

அஃ தே போல்  எங்களூரில் யூனிவசிட்டிக்கு எடுபடும் மாணவர்கள் விடுமுறைக்கு வரும் போது  பத்தாம்,பன்னிரண்டாம் வகுப்பி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பார்கள்! 

இலங்கையில் அதிலும் கிழக்கு மாகாண்ம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீதம் கல்வியறிவு கொண்ட ஊராக எங்களூர் இருக்க காரணம்  இந்த ஆர்ம்ப கால முயற்சி தான்!பெயரே கல்விஆறுதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 15:16

அதிலும்  நான் படிக்கும் காலத்தில் என் ஆசிரியர்கள்  எனக்கு கிடைத்த வரமாய் அமைந்தார்கள்!

தப்பு செய்யும் மாணவர்களை தண்டிப்பதை விட  ஒழுங்காய் வீட்டுப்பாடம் செய்யும்  மாணவனை,  பிழையில்லாமல்  ஒழுங்காக அழகாக எழுதும் மாணவனை, ஆசிரியர் சொல்வதை புரிந்து நடக்கும் மாணவர்களை  எல்லோர் முன்னாலும் தட்டிக்கொடுத்து பாராட்டுதல்  பின் தங்கி இருக்கும் மாணவர்களும் தமக்கு முன்மாதிரியாய் எடுக்கும் வாய்ப்பாய் இருக்கும் ஜானி! 

கண்டிக்கும் போது எல்லோர் முன்னால் கண்டிப்பதும், தடியால் அடிப்பதும், பாராட்டை மனமுவந்து நான்கு பேரறிய பாராட்டாததும்  சின்ன மனதில் விசமாய்  தங்கு கின்றது என்பதற்கு நானே சாட்சி தான்!

என் ஆசிரியர்கள் எத்தணை முறை  வகுப்பிலும் அசெம்பிளியிலும் என்னை பாராட்டி இருப்பார்களோ அத்த்னை அத்தனை ஊக்கமும், உற்சாகமும் அடைந்து ஸ்கூலுக்கு முதல் ஆளாய் நான் போவேன்,  வகுப்பறை கூட்டி, பெருக்கி பூக்களாய் அலங்கரித்து அன்றைய பாடங்களை  நோட்டிஸ் போட்டில் எழுதி என இன்னும் இன்னும் பாராட்டு பெறணும் என ஊக்கம் தந்திருக்கின்றார்கள். 

இந்த விடயம் இன்றைய ஆசிரியர்களிடம் மிஸ்ஸிங்க்! 

உன்னால் முடியாது, நீ எதுக்குமே இலாயக்கில்லை என்பது போல் சொன்னதப்புக்கும் அடிப்பது கண்டிப்பதும் அதிகமாகி வருகின்றது! 

எனக்குள் இன்றும் நினைவில் இருக்கின்றது! ஸ்போர்ஸ்ட் டே க்கு  மாச்சிங்க் தலைமைக்கு  நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்னை தலைமை தாங்க டீச்சர் சொல்ல நான் என்னை விட பெரிய ப்சங்களை பார்த்து மாட்டேன் என மறுத்தேன்! அழுதிட்டேன்!  உடனே டீச்சர் அதற்கு முன்மாதம் ,வை, எம் சீ,ஏ யால் நடந்த மாலை வகுப்பு ஸ்போட்ஸ் டேக்கு நீதானே  டிரில் , மாட்ஸ்ஸிங்க்  கப்டனாய் அழகாய் செய்தே! ஸ்கூலில் உன்னால் முடியாதா என  எல்லோர் முன்னாலும் பாராட்டுவது போல் திட்டியே என்னை ஊக்கம் செய்திருக்காங்க!

இத்தனைக்கும் அக்காலத்தில் எந்த செல்வாக்கும் இல்லாத, ஏழைகுடும்பம் எங்களோடது!

இன்றைக்கு அது சாத்தியமா ஜானி! பணம் கொண்டு மதிக்கும்  மதிப்பீடு திறமைக்கான இழப்பீடாய் ஆவது தானே கண்கூடு!

Last edited by Nisha on Mon 13 Oct 2014 - 17:45; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 15:25

அத்தோடு ஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களின் தனிப்பட்ட  பராமரிப்பு விடயங்களிலும் சிறிது அக்கறை காட்டினால்  நலமாயிருக்கும்!  

சீருடை சீராய் அணியவேண்டும் என கண்டிக்கும் ஆசிரியர் அவன் திறமை உணர்ந்து அவனால் ஏன் சீருடை சரியாக அணிய முடியாத சூழல்  என  கண்டிக்கும் முன் கேட்பதில் தப்பில்லை. அவன் இயலாமை ஏழ்மை கூட அதற்கு காரணமாயிருக்கும்!

புதிய கொப்பியில் அட்டை போடாவிட்டால் உள்ள்ங்கையை நீட்டி அடி போட முன்னர் ஏன் அட்டை முடியாத சூழல் வீட்டில் எப்படியான சூழலில் அந்த மாணவன் இருக்கின்றான், இருக்கின்றார் என கேட்டு முடிந்த வரை சின்ன சின்ன உதவிகள்..புத்தக அட்டைகள் இலவசமாக கிடைக்ககூடிய இடம் சொல்லி ஆலோசனை தருவது  சில பல போட்டிகளில் பங்கேற்றால் பரிசாய்  வீணாக அலங்கார பொருட்களை வாங்க செலவு செய்யாமல் அந்த சூழலுக்கு ஏற்ப சீருடைதுணி, அவ்வருட கல்விக்காக உபகரணங்கள்  வாங்கி பரிசளிப்பது என  செய்யலாம்!

இது அத்தனையும் நான் படிக்கும் காலத்தில் எனக்கு பாடசாலை அதிபரால்  கிடைத்தது. ஒவ்வொரு வருட பாடசாலை சீருடைக்கும்  ஏதேனும் போட்டியில் ஜெயித்து  சீருடைதுணி, பேனா, பெஞ்சில்  கொப்பி போன்றவை பெற்று விடுவோம். நானும் என் தங்கைகளும்,

புத்தக அட்டையும்  அவர் வீட்டில் அக்காலத்தில் கட்டிடம் கட்ட வந்த சிமெந்து போன்ற  வற்றை கட்டி வந்த பார்சல்களை பத்திரபடுத்தி வைத்திருந்து தேவைக்கு வாங்கிக்க சொல்வார்! வருட ஆரம்பத்தில் அட்டை போட்டால் வருடம் முடிவில் புத்தகம் ஸ்கூலுக்கு திரும்பி ஒப்படைக்கும் வரை பளிச்சென இருக்கும் கனமான அட்டை அது! 

நன்றாக பாடும் மாணவியை காலையில் அசெம்பிளியில் இறை வணக்கம் பாட சொல்வதில் தப்பே இல்லை! ஆனால் எல்லோரையும் ஒரே மாதிரி பாவித்து அனைவருக்கும் சந்தர்ப்பம் கொடுத்து  என் மகள் என் நண்பர் மகள் என  ஸ்பெசல்  கவனிப்பு கொடுக்ககூடாதுஎன்பது என்  அனுபவம்!

Last edited by Nisha on Mon 13 Oct 2014 - 17:49; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 15:30

தினம் நன்றாய் படிக்கு மாணவன் சோர்ந்தமர்ந்து இருந்தால் அல்லது வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் என்ன் செய்யல்லை என கண்டிக்கு முன்னர் அவர் உடல் நிலை,  வீட்டில் வசதி வாய்ப்பு,  உணவு விடயங்கள் குறித்து  ஆராய்ந்தறிந்து அவனை  தோழனாய் அணைத்து காலையில் வீட்டில் சாப்பிடா விட்டால் ஒரு பிஸ்கட் வாங்கி கொடுத்து கவனிப்பதால்  குறைந்தா போய் விடுவார்கள் இக்கால ஆசிரியர்கள்! 

ஆசிரியர்களை தெய்வமாய்  மதித்த காலம் ஒன்றிருந்தது!  அக்காலம் எங்கே போனது!? எப்போதும் தடியுடன் கண்டிக்கும் வாத்தியாருக்கு மாணவர்கள் பயப்படுவதும் மரியாதை தருவதும் இல்லை, வெளியில் கைகைட்டி கொண்டு உள்ளே கிண்டல் செய்வார்கள். 

அதே நேரம் அன்பாய் அரவணைப்பாய் நடத்தும் ஆசிரியரை  மறந்தும்  மரியாதைக்குறையாய் நினைக்கவும் செயல்படவும் மாட்டார்கள் என்பதும் நிச்சயம்!  

இன்னும் பேசலாம் ஜானி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 21:37

நிறைய தகவல்கள் தந்திருக்கீங்க. யப்பா நீங்க ஒரு எதிர்நீச்சல் பெண்மணி.

பெருமையாக உள்ளது
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Mon 13 Oct 2014 - 21:47

சுறா wrote:நிறைய தகவல்கள் தந்திருக்கீங்க. யப்பா நீங்க ஒரு எதிர்நீச்சல் பெண்மணி.

பெருமையாக உள்ளது

எல்லாம் வாழ்க்கை தரும் அனுபவம் தான் ஜானி! என் வீட்டில் அம்மா படிக்கல்லை. ஆனால் உலக் ஞானம் அதிகம், அப்பா இலங்கையில் முதல்  பாடசாலை செல்வந்தர்கள் அரசியல் வாதிகாளின் பிள்ளைகள் படித்த கொழும்புரோயல் கொலேஜுக்கு  ஸ்கொலசிப்பல எடுபட்டவர். அத்தனை திறமை சாலி! அப்பாவுக்கு அப்பா அம்மா இல்லாததால் ஏழமையான் சூழலில் அவரை வளர்த்த மாமாவால் படிக்க வைக்க முடியவில்லை என  இடையில் விட்டு வேலை செய்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை  செக் செய்யும்கன்ரோல் வேலை கிடைக்க படிப்பை விட்டார்.

ஆனால் ஒரு நாளும் பாடம் சொல்லித்தர மாட்டார். எனக்கு ஆசிரியர்கள் சொல்லி தருவது தான் எல்லாம்!ஆசிரியர்கள் சரியாய் அமைந்தால் குடும்ப சூழல் எப்படி எதிராய் இருந்தாலும் ஜெயிக்கலாம் ஜானி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Mon 13 Oct 2014 - 21:57

இன்னும் நிறை உங்களிடமிருந்து அறிந்துக்கொள்கிறேன். அருமையான திரி. இதை நாளை தொடர்கிறேன். எனது மாணவர்களுடனான கவுன்சிலிங் தகவல்களுடன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:19

சுறா wrote:நன்றி Guest நிறைய இருக்கிறது தொடர்ந்து எழுதுகிறேன்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. விசயம் கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

ஒருமுறை வகுப்பறையில் இரு மாணவர்கள் தவறான செயல் ஒன்றை செய்துக்கொண்டிருக்க அதை அருகில் இருந்து மற்ற மாணவர்கள் பார்த்துவிட்டு அந்த வகுப்பு ஆசிரியரிடம் சொன்னார்கள்.  அந்த ஆசிரியர் பெண் என்பதால் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார். அந்த இரு மாணவர்களையும் மற்ற மாணவர்களின் துணைகொண்டு திருடனை பிடித்து வருவது போல என்னிடம் அழைத்து வந்தார்கள்.

தொடர்கிறேன்.....

அந்த இரண்டு மாணவர்களையும் என்னிடம் அழைத்துவந்தார்கள். நான் மற்றவர்களை அனுப்பிவிட்டு இந்த இருவரையும் தனித்தனியே வரசொல்லி பேசினேன். பிறகு அவர்களை பிரின்சிபாலிடம் கொண்டு செல்லும் முன் அவர்களுக்கான தண்டனையை முடிவு செய்துக்கொண்டேன். அதை முதலில் தவறு செய்தவர்களிடமே சொல்லி ஒப்புதல் பெற்றேன். 
விசயத்தை வெளியில் தெரியாதவண்ணம் பார்த்துக்கொண்டேன். இருவரும் சுயஇன்ப பழக்கத்தை முதன் முதலில் அன்று தான் கற்றிருந்தனர் 9ஆம் வகுப்பு மாணவர்கள் என்பதால் கவனமுடன் கையான்டு அவர்களை நல்வழிபடுத்தி அவர்களுக்கு அதனால் ஏற்படும் தீங்குகளை சொல்லி புத்தி புகட்டினேன்.

அவர்கள் தன் ஆன்மாவுக்கு எதிராக பாவம் செய்வதை சொன்னேன். இதுபோன்ற தவறு செய்கிறவர்கள் தன் தாய் தங்கையை நேராக கண்ணுக்கு கண் பார்க்க முடியாது.  பிறகு அவர்கள் ஒருவழியாக அதை இனி செய்வதில்லை என்ற உறுதிமொழியினை கோவில் ஆல்டரில் வைத்து சத்தியம் வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தேன் தண்டனைக்கு. என்ன தண்டனை தெரியுமா?

பிரின்சிபாலின் ஒப்புதலுடன் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டு சனிக்கிழமைகள் அவர்கள் முதியவர் இல்லங்களில் பணியாற்றி சான்றிதழ் பெறவேன்டும். இன்று அவர்கள் 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். நல்ல மாணவர்களாக இருக்கிறார்கள். என்னை அடிக்கடி சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள்

சுறாவின் பயணம் தொடரும்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:44

நல்ல விடயம் ஜானி! ஆனால் இந்த விடயத்தில் நம்மிடம் நிரம்ப தவறான் புரிதலும் உண்டு. சரியான நேரம் சரியாக ஆலோசனையுடன் நல் வழிபடுத்தி விட்டால்  போதும். சிறுவர்கள் புரிந்திடுவார்கள். 

தண்டனை எனும் பெயரில் பலர் முன்  திட்டுவதும் கண்டிப்பதும் அவர்களை மேன்மேலும் தப்பு செய்ய தூண்டும்.  கடவுள் பார்வை என்பதை விட அவர்கள் மனதிலும் குற்ற உணர்வை ஒரு வகை தாழ்வுணர்வை தோற்று வித்து உடல் ஆரோக்கியத்தோடு  மன் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் இம்மாதிரி விடயங்களில் கவனமாய் ஆலோசனை தர வேண்டும். 

  நன்று  ஜானி சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by சுறா Sat 18 Oct 2014 - 22:15

இந்த விசயங்களில் நான் மிகுந்த கவனமாய் தான் இருப்பேன் அக்கா! என்னை தவறி பள்ளியில் மற்ற ஆசிரியர்கள் பசங்களை திட்டினாலோ கண்டித்தாலோ உடனே பெற்றோர் வந்த பிரச்சனை செய்வார்கள். என்னிடம் மட்டும் அதிகம் பேசி ஷேர் செய்வார்கள். தனிப்பட்ட முறையில் கவனிக்க சொல்வார்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by நண்பன் Sun 26 Oct 2014 - 16:47

மதிற்பிற்குரிய சுறா சார் உங்களுக்கு முதற் கண் வணக்கம்

13 நாட்கள் முன்பு ஆரப்பித்த திரி இன்றுதான் படிக்க கிடைத்தது
ஆரம்பம் முதல் படித்து முடித்தேன்

உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் இன்னும் அதிகமாகவே வருகிறது சார் நகைச்சுவையாக அனைவரையும் சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் என்று மட்டும்தான் நான் அறிந்திருந்தேன்

இப்போதுதான் உங்கள் மனதின் ஆளத்தைப் புரிந்து கொண்டேன்

உங்கள் பைக் சீட்டைக் கீறிய மாணவனைத் தண்டிக்காது அவன் உணரட்டும் என்று விட்டது எங்கயோ போய் விட்டீர்கள் சார் ~/ ~/

மாணவர்கள் செய்த அசிங்கமான ஒரு செயலை எவ்வளவு அழகாய் கையாண்டுள்ளீர்கள் இதற்கே உங்களுக்கு தேசிய விருது தரலாம் சார் என் மனதால் தந்து விட்டேன் பெற்றுக்கொள்ளுங்கள் ~/ ~/

இந்தக் காலத்தில் இப்படியான ஆசிரியர்கள்தான் உலகிற்குத் தேவை இப்படியான ஆசிரியர்களால்தான் ஆசிரியர் குலத்திற்கே பெரிமை
அருமையான திரியைத் தொடங்கி அழகாய் கொண்டு செல்கிறீர்கள்
உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள் சார் இன்னும் தொடருங்கள்
என்றும் நன்றியுடனும்
பெருமையயுடனும்
உங்கள் நண்பன்
~/ ~/ ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Nisha Sun 26 Oct 2014 - 16:53

ஏற்கனவே சும்மாவே விண்ணில் பறக்கின்றார். இதை கேட்டு  செவ்வாய்க்கே போகபோறார்.  ஹய்யோ சுறா சார் எங்கே போயிட்டிங்க சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்  Empty Re: மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum