சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல் Khan11
ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல் Www10

ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Go down

Sticky ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by சுறா on Wed 15 Oct 2014 - 11:46

4. ஈவது விலக்கேல்


ஒருவர் பொருளோ பணமோ எதுவாக இருந்தாலும் பிறருக்கு கொடுக்கின்ற காலத்தில் அதை நடுவில் நின்று தடுக்காதே என்பது இதன் பொருள்.

ஒருவருக்கு அவர் விரும்பின பொருளை மற்றொருவர் மனமொப்பி கொடுக்கின்ற காலத்தில் வேறொருவர் குறுக்கிட்டுத் த‌டுத்தால் அப்படி செய்தவர் இரண்டு பாவங்களை செய்தவராகிறார்.

தருமம் செய்தவருக்கு வரவேண்டிய புண்ணியத்தை வரவொட்டாமல் தடுப்பது முதல் பாவம்,இரண்டாவது பாவம் ஒருவர் விரும்பின பொருளை அடையப் போகும் காலத்தில் அவருக்கு அது கிடைக்கவிடாமல் தடுத்தது.

இப்படி தடுப்பவர் செய்த பாவம் அவரைச் சேர்வதோடு அவரது சுற்றத்தாருக்கும் அது சேரும்.கொடுப்பதை தடுக்கும் கொடியவரோடு அவரின் உறவுகளும் உண்ண உணவில்லாமல் உடுக்க உடையில்லாமல் தவிப்பார்கள் என்றும்,அந்த பாவத்தால் உண்டாகும் தீமைகள் பற்றியும் அக்காலத்தில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

மகாபலி என்ற சக்ரவர்த்தி சுவர்க்கம்,மத்தியம்,பாதாளம் எனமூன்று உலகங்களை ஆண்டு வந்தான்.இவனால் துரத்தப்பட்ட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகாபலியால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைச் சொல்லி அவற்றை நீக்க முறையிட்டுக் கொண்டார்கள்.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி விஷ்ணுவும் ஒரு குட்டை பிரம்மச்சாரியாய் உருவமெடுத்து வாமனன் என்ற பெயருடன் சக்ரவர்த்தி மகாபலியிடம் வந்து தாம் அமர்ந்து ஜபம்செய்ய தமது காலடியால் மூன்றடி மண் யாசகம் கேட்டார்.

தொடரும்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by சுறா on Wed 15 Oct 2014 - 11:46

தொடர்கிறது.....

அப்பொழுது மகாபலியின் குருவாகிய சுக்கிராச்சாரியார் சக்ரவர்த்தியிடம்"அரசே உங்களிடம் யாசிக்கின்ற இவரை சாமன்யராக நினையாதீர் கெட்டவர்களை க‌ண்டித்து நல்லவர்களைக் காக்கும் கடவுளே உங்களை ஏமாற்ற வந்திருக்கிறார் அவர் கேட்டபடி தானம் செய்யாதீர்கள்"என்று தடுத்தார்.மகாபலியோ"எனக்கு எப்படிப்பட்ட தீங்கு நேரிட்டாலும் அவர் கேட்டதைத் தருவேன்"என்ற மன உறுதியோடு வாமனர் கேட்டபடி மூவடி மண் தானம் செய்ய தீர்மானித்தான்.

அப்பொழுது வாமனரும் தன் கையில் இருந்த கெண்டியை மகாபலி கையில் கொடுத்து தமக்கு மூவடி மண் தானம் செய்ய வேண்டினார்.மகாபலியும் கெண்டியில் உள்ள‌ நீரை வாமனர் கையில் வார்த்து தானம் செய்ய தொடங்குகையில் சுக்கிராச்சாரியார் மிகச்சிறிய உருவெடுத்து கெண்டியின் மூக்கில் நுழைந்து நீரை வரவிடாமல் தடுத்தார்,இதையறிந்த வாமனர் தன்னிடமுள்ள‌ தருப்பை ஒன்றால் கெண்டியின் மூக்கினுள் குத்தி மகாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவர் உணவும் உடையும் இன்றி கஷ்டப்படவேண்டும் என்று சாபமும் கொடுத்தார்.இதனால் கண்ணில் காயமடைந்து மிகுந்த வருத்தத்துடன் சுக்கிராச்சாரியார் விலகி நிற்க மகாபலியும் வாமனருக்கு மூன்றடி மண் தானம் செய்தார்.

அதுபோது வாமனர் திரிவிக்கிரமராய் பெரிய உருவெடுத்து ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும் மற்றோரடியால் மாகாபலியை பாதாளத்தில் அழுத்திவிட்டார்.
தானம் கொடுப்பதை தடுத்த சுக்கிராச்சாரியார் கண்ணிழந்த நிலையில் உணவும் உடையும் இன்றி வருந்தி கஷ்டப்பட்டார்.

நன்றி ஆத்திசூடி கதைகள் ப்ளாக்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by சுறா on Wed 15 Oct 2014 - 11:50

இது கதையானாலும். இதில் உள்ள கருத்து என்பது மிகவும் சிந்திக்க வைப்பது.  ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவியை நடுவில் நின்று தடுப்பவர்கள் தீராத சாபத்திற்கு ஆளாக நேரிடும்..

சுறா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by ahmad78 on Wed 15 Oct 2014 - 11:50

இதைத்தான் நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் அண்ணா.

தினம் அலுவலகம் வருவதற்கே மனமில்லாமல் வேறு வழியில்லாமல் நாங்கள் வேலை பார்த்து வருகின்றோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by Nisha on Wed 15 Oct 2014 - 11:51

ஆத்தி சூடி கதைகளிட்டு கலக்கு சுறாவுக்கு நன்றி. 

நல்ல பாடம் சொல்லும் கதைதான் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by Nisha on Wed 15 Oct 2014 - 11:52

சுறா wrote:இது கதையானாலும். இதில் உள்ள கருத்து என்பது மிகவும் சிந்திக்க வைப்பது.  ஒருவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவியை நடுவில் நின்று தடுப்பவர்கள் தீராத சாபத்திற்கு ஆளாக நேரிடும்..

சுறா

இது கரெக்ட்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by சுறா on Wed 15 Oct 2014 - 11:54

Nisha wrote:ஆத்தி சூடி கதைகளிட்டு கலக்கு சுறாவுக்கு நன்றி. 

நல்ல பாடம் சொல்லும் கதைதான் .

உங்கள் ஊக்கம் தான் என்னை மென்மேலும் பதிவுகள் இட வைக்கிறது நிஷா  *_
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: ஆத்திச்சூடி கதைகள் - 4. ஈவது விலக்கேல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum