சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? Regist11


Latest topics
» காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பதில்லை...!!
by rammalar Sat 18 May 2019 - 13:06

» உலகப் புகழ்பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா'...
by rammalar Sat 18 May 2019 - 11:07

» அஞ்சு பன்ச்-செல்வராகவன்
by rammalar Sat 18 May 2019 - 11:05

» தமிழ் சினிமா வெர்ஷன் 2.0
by rammalar Sat 18 May 2019 - 11:03

» தர்பார்’ படத்தில்ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
by rammalar Sat 18 May 2019 - 10:55

» என்னுடன் நடிக்க பிரியா பவானி சங்கர் பயந்தது ஏன்?-எஸ்.ஜே.சூர்யா விளக்கம்
by rammalar Sat 18 May 2019 - 10:53

» அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
by rammalar Sat 18 May 2019 - 10:51

» விஷ்ணுவர்த்தனின் ஹிந்திப்படம் ஷேர்ஷா
by rammalar Sat 18 May 2019 - 10:50

» லட்சுமியின் என்டிஆர்’-திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:49

» வைரலாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபோட்டோ இதுதான்!
by rammalar Sat 18 May 2019 - 10:48

» இளையராஜாவுடன் பிரம்மாண்டமான இசைத் திருவிழா!
by rammalar Sat 18 May 2019 - 10:46

» ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
by rammalar Sat 18 May 2019 - 10:45

» சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்
by rammalar Sat 18 May 2019 - 10:44

» கடல போட பொண்ணு வேணும்
by rammalar Sat 18 May 2019 - 10:41

» மனங்கவர்ந்த திரைப்பட பாடல்கள் - காணொளி
by rammalar Wed 15 May 2019 - 7:01

» சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி
by rammalar Mon 13 May 2019 - 5:55

» ஐ.பி.எல். கிரிக்கெட்:மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக ‘சாம்பியன்’
by rammalar Mon 13 May 2019 - 5:39

» தேனிலவுக்காக இலங்கை சென்ற புதுப்பெண் சாவு - கணவர் திரும்பிச்செல்ல தடை
by rammalar Mon 13 May 2019 - 5:32

» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
by rammalar Mon 13 May 2019 - 5:27

» ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி: மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
by rammalar Mon 13 May 2019 - 5:24

» வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
by rammalar Mon 13 May 2019 - 5:21

» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
by rammalar Mon 13 May 2019 - 5:18

» காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபு!
by rammalar Sat 11 May 2019 - 21:35

» விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு
by rammalar Sat 11 May 2019 - 21:29

» பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்களா?
by rammalar Sat 11 May 2019 - 21:28

» உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:45

» தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும், SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!
by ஜுபைர் அல்புகாரி Sat 11 May 2019 - 10:43

» இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டேனா? – நடிகை கஸ்தூரி விளக்கம்
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:17

» ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:16

» பல்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
by பானுஷபானா Fri 10 May 2019 - 13:14

» சுசீலா பாடிய பாடல்கள்
by rammalar Thu 9 May 2019 - 21:12

» மலையாள நடிகர்களுக்கு நயன்தாராவைவிட சம்பளம் குறைவு - நடிகர் சீனிவாசன் தகவல்
by rammalar Thu 9 May 2019 - 21:08

» நோ ஃபில்டர் நோ மேக்கப்பா? பாலிவுட் நடிகைகளின் முகங்களை பாருங்கப்பா!
by rammalar Thu 9 May 2019 - 21:07

» பிக் பாஸ் 3: மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்!
by rammalar Thu 9 May 2019 - 21:04

» நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
by rammalar Thu 9 May 2019 - 21:03

.
உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? Khan11
உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? Www10

உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Go down

Sticky உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by rammalar on Fri 17 Oct 2014 - 19:15

உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? E_1413289040
-
சத்குரு பதில்கள்
-
———–உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? M9G4wkNGT6yPC5VAjTw2+Ashramflower_01
-
நீங்கள் கேட்பதைப் பார்த்தால் அது இறந்த
காலமாகத்தான் இருக்க வேண்டும் எனறு முடிவு
செய்து விட்டது போலிருக்கறதே?
-
உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனு
தினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறேன்.
கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும்
காணவில்லை.
-
எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச்
சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்
பட்டிருக்கும் இந்த பிரமாண்டத்தை உருவாக்கிய
சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம்தானே?
-
அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில், உங்களில்,
என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எ
தை நீங்கள் காணமுடியும்?
-
காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள்
உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த
அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர்
தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா
செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா
செய்கிறார்? அப்படியானால் கடவுள் உஙகளுள் இருக்கிறார்
அல்லவா?
-
ஒவ்வொரு படைபபிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான்
என்று புரிந்துகொண்டதால் தினம் தினம் கணத்துக்குக்
கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும்
கடவுளைக் காண்கிறேன். கண்டுகொண்டே இருக்கிறேன்.
-
—————————————————
நன்றி– குமுதம் பக்தி செய்திகள்:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15478
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by Nisha on Fri 17 Oct 2014 - 19:56

ஒவ்வொரு படைபபிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான்
என்று புரிந்துகொண்டதால் தினம் தினம் கணத்துக்குக்
கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும்
கடவுளைக் காண்கிறேன். கண்டுகொண்டே இருக்கிறேன்.

என் நம்பிக்கையும் இதுவே தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 6:35

படைத்தவனையன்றி படைக்கப்பட்ட பொருளுக்கு முக்கியத்துவம் கூடாது என்று இருக்கிறதே


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 7:08

சுறா wrote:படைத்தவனையன்றி படைக்கப்பட்ட பொருளுக்கு முக்கியத்துவம் கூடாது என்று இருக்கிறதே

படைக்கப்ட்ட பொருளை வணங்கக்கூடாது! வானத்தில் மேலும் பூமியின் மேலும்  படைக்கப்ட்ட எதன் மேலும் சத்தியம் செய்யகூடாது. அதை வணங்கக்கூடாது!  இது சரி!

ஆனால் ஏழைக்கு இரங்குகின்றவன் எனக்கு கடன் கொடுக்கின்றான் என்பதுவும்,  இதோ  நீங்கள் புறப்பட்டு போங்கள்.. உங்களுடனே நான் இருக்கின்றேன்.. உங்களை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்க்ன்றான். உங்களை மறுதலிக்கின்றவனை நானும் மறுதலிப்பேன் என்பதும்...தேவனுடைய வாசஸ்தலமாய் நம் உடல் இருக்கின்றது என்பதால்  தேவாலயத்துக்குரிய பரிசுத்தத்தை நம் உடலுக்கு உணர்வுக்கும் கொடுத்து அசுத்தமானதை சிந்தித்து, செயல்படுத்தி நம் சரிரத்தை  அசுத்தமாக்காது பரிசுத்தமானதாய் வைத்திருங்கள் என்பதும்... நான் தங்கும் வாசஸ்தலமாய் உன் சரீரம் இருக்கும் என்பதும் என்ன சுறா சார்!

இதோ இந்த சிறியரில் ஒருவரை ஏற்கின்றவன் என்னை எற்கின்றான்.. நான் அவனில் வாசம் செய்வேன் என பைபிளில் இருக்கின்றதே சார்.. 

நம் சரீரம் தேவன் தங்கும் கூடாரம் எனில்  நம் சக மனிதரும் அப்படித்தானே சார். வணங்கசொல்லவில்லைசார்.. மதிக்க  சொல்கின்றார். நேசிக்க சொல்கின்றார். இறைவனை தேடி ஆறு குளம், கல் மண்,என அலைவதை விட நாம்காணும் அனைத்திலும் இறைவனை உணர்ந்து நேசிக்க சொல்கின்றார். 

கண் முன்னே இருக்கும் தன் சக மனிதனை நேசிக்க முடியாதவன் கண் காணா தேவனை எப்படி நம்புவான்? நேசிப்பான்? 

நான் உங்களையும் நேசிக்கின்றேன். என்னை சூழ உள்ள அனைவரையும், அனைத்தையும் நேசிக்கின்றேன்.. அன்பை மட்டும் யாதித்தாலும் என் ஒரே முழுமுதற்கடவுளாய்  எனை படைத்தவனை வணங்குகின்றேன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 18 Oct 2014 - 13:33

படைப்புகள் அத்தனையும் அழியச்கூடியது அழிவில்லாத ஒரு சக்திதான் கடவுள் படைப்புகளில் கடவுளைக் காணமுடியாது காணப்படத் தகுதியற்றவன் கடவுள்


உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 14:19

நீதிமொழிகள்:19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
 
அடுத்தது  இறைவன் தன் சாயலாய் எம்மை படைத்ததோடு....  எமக்காக சுவாசத்தை தன் வாயினால் ஊதினார் எனத்தான் சொல்லப்பட்டிருக்கின்றது.  தன்  சாயலாய் படைத்து தன்  மூச்சை எமக்குள் ஊதியபின் எமக்குள் இருக்கும் இறைவனை விட்டு நாம் எங்கெங்கோ அலைந்து தேடிவது குருடன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் நிலை தான்!

பைபிளில் இன்னும் தெளிவாய் சொல்லப்ட்டிருக்கின்றது. 
உங்களை  ஏற்றுகொள்கிறவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். உங்களை மறுதலிக்கிறவனை நானும் மறுதலிப்பேன் என சொல்லித்தான் புறப்பட்டு போய் சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்கிறார். 

உன்இறைவனாகிய நாயனை உன்முழுஉள்ளத்தாலும், உன்முழுஆத்துமாவாலும்,உன்முழுமனதாலும்நேசிப்பாயாக”
உன்னைப்போல்உன்அயலானைநேசிஎன்பதே”.

கண் காணும் மனிதரை நம்பாதவன் கண் காணா இறைவனை எப்படி நம்புவான்.  

என்னை பொறுத்த வரை... நான் காணும் ஒவ்வொன்றிலும்  என் இறைவனை காண்கின்ரேன். அவரின் சிருஷ்டியை எண்ணி வியக்கின்றேன். இறைவன் வந்து வாசம் செய்யும் ஸ்தலமாக என் உடலும் உள்ளமும் இருப்பதால் கறைகள், களங்கங்கள் அற்றதாக அவருக்கேற்ற தேவாலயமாக என் சரீரத்தினை பாதுகாக்கின்றேன்! 

எலிசா எனும் தீர்க்கதரிசி பட்டினியாய் இருந்த போது இறைவன் நேரில் வந்ததில்லை. விதவைபெண்னை கொண்டும், காகத்தினை கொண்டும் போசித்தார் என த்தான்  பைபிள் சொல்கின்றது.  

நமக்கு ஒரு பிரச்சனை எனும் போது இறைவன் தன் சாயலாய் படைக்கபட்ட மனிதனைத்தான் நமக்கு உதவ அனுப்புவார். 

என் நம்பிக்கை எனக்கு! உங்கள் நம்பிக்கை உங்களுக்கு! என் நம்பிக்கை என்றுமே வீண் போனதில்லை என்பதை நான் நன்குணர்வேன்! நானே அதற்கு சாட்சி தான். என் வாழ்வும் சாட்சி தான்!:)

அவ்வளவு தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 19:17

நீதிமொழிகள்:19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
 


அருமை அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by கவிப்புயல் இனியவன் on Thu 1 Jan 2015 - 5:07

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கீர்களா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum