சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!? Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!? Khan11
வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!? Www10

வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Go down

Sticky வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Thu 13 Nov 2014 - 3:46

வருமொழி இடைச்சொல்லாகவோ, உரிச்சொல்லாகவோ, வடமொழி போன்ற பிறமொழிச் சொல்லாகவோ இருந்தால், அங்கே வலி மிகுவதில்லை என்பது அறிந்த ஒன்று. இந்நிலையில், பன்மை குறித்த "கள்' என்பது இடைச்சொல். ஆதலால் எழுத்துகள், கருத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே ஏற்புடையதாகும்.

""வன்தொடர் அல்லன முன்மிகா அல்வழி'' என்னும் விதியால், வன்தொடர் குற்றியலுகரத்தின் பின் வருமொழி முதலில் வரும் வல்லினம், அல்வழி வேற்றுமையாகிய இரண்டு இடங்களிலும் மிகும்.

""சுக்குக் கடிது, பதக்குப் பெரிது (எழுவாய்த் தொடர்கள்) என வன்தொடரால் வலி மிக்கதைக் காண்க'' என்பார் மயிலைநாதர்.
""கொக்குப் பறக்கும் புறாப்பறக்கும்
குருவி பறக்கும் குயில்பறக்கும்
நக்குப் பொறுக்கி களும்பறப்பர்
நானே பறப்பன் நராதிபனே!''
(இராம கவிராயர்)

கொக்குப் பறக்கும் என அல்வழியிலும், நக்குப் பொறுக்கிகள் என வேற்றுமையிலும் வலி மிகுவது ஏனெனில், பொருள் புணர்ச்சிக் கருதி அங்கே வலி மிகுந்தனவாம். விகுதிப் புணர்ச்சிக்கு அவ்விதியைப் பயன்படுத்துதல் கூடாது.

"வாழ்த்துக்கள்' என்று தவறாக எழுதுகின்ற பலர், தம்மை அறியாமலேயே "வாழ்த்துகிறோம்' என்று சரியாக எழுதுகின்றனர். காரணம் என்ன? "வாழ்த்துகின்றோம்' என்னும் சொல்லைப் பகுபதங்களாகப் பிரிக்கும்போது, வாழ்த்து+கின்று+ஓம் எனப் பிரிக்கிறோம்.

வாழ்த்து என்பது வன்தொடர் குற்றியலுகரமாயினும், பொருள் புணர்ச்சி விதியின்படி "வாழ்த்துக்கின்றோம்' என எழுதுவதில்லை. காரணம், "கின்று' என்பது இடைச்சொல். எனவே, இப்புணர்ச்சியில் வலி மிகவில்லை.

""இடைஉரி வடசொல்லின் இயல்பிய கொளாதவும்
போலியும் மரூஉம் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே''
(நன்னூல்-239)
விதி விலக்கான விதிகள்
8 ஓரெழுத்து ஒருமொழியின் பின் வலி மிகும். ஆ-ஆக் கள்; ஈ-ஈக்கள்; ஊ-ஊக்கள்; ஏ-ஏக்கள்; கா-காக்கள்.

8 ஓரெழுத்து ஒருமொழி அடையெடுத்து அமைந்தாலும் அங்கு வலி மிகும். தேனி-தேனீக்கள்; பூங்கா-பூங்காக்கள். கை-கைகள்; தை-தைகள் என வலி மிகாது இருக்கின்றன. ஏனெனில், கை, தை, பை - "ஐ' கூட்டுயிர். ஆதலால் அங்கே வலி மிகவில்லை.

8 அகர ஈறு: அகர ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். கள-களக்கள்; விள-விளக்கள்.
8 ஆகார ஈறு: ஆகார ஈற்றுச் சொற்களின் பின் வலி மிகும். ஆலா-ஆலாக்கள்; கனா-கனாக்கள்; பலா-பலாக்கள்.

8 உகர ஈறு: உகரத்தை இறுதியாகக்கொண்ட குறிலிணைச் சொற்களின் பின் வலி மிகும். அணு-அணுக்கள்; உடு-உடுக்கள்; கரு-கருக்கள்; தெரு-தெருக்கள்.

8 ஊகார ஈறு: ஊகார ஈற்றுச் சொல்லின் பின் வலி மிகும். கொண்மூ-கொண்மூக்கள்.
"புள்' என்னும் ஒருமைச் சொல்லுக்குப் "புட்கள்' என்பது பன்மையானது போன்று, "நாள்' என்பதன் பன்மையை "நாட்கள்' என்றே பலர் தவறாக எழுதக் காண்கிறோம். நாள்கள் என்பது வேறு; நாட்கள் என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள பொருள் வேறுபாடு தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். "நாள்கள்' என்பது, "நாள்' என்பதன் பன்மையைக் குறிக்கும். "நாட்கள்' என்பதோ, அன்று இறக்கிய "கள்' (மது) என்னும் பொருளைத் தரும்.

""நாட்கள் உண்டு நாண்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேரீ தல்லே''
(புறநானூறு-123)

""அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில், தேரைப் பரிசாகக் கொடுத்தல் யார்க்கும் எளிது'' என்பது இவ் அடிகளின் பொருளாகும். பல்லோராலும் தவறாகப் பயன்படுத்தப்படுவது "நாட்கள்' எனும் சொல். நம் முன்னோர்கள் "நாள்கள்' என்றே எங்கும் பயன்படுத்தக் காணலாம்.

""நடத்தல்அரிது ஆகும்நெறி நாள்கள் சிலதாயர்க்கும்''
(கம்ப.சுந்தர காண்டம்-547)

""நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே''
""தோள்கள் இருந்த வாகாணீரே சுரிகுழலீர் வந்துகாணீரே''
(திவ்யப் பிரபந்தம்-பெரியாழ்வார்-211)

""உரையா தார்இல்லை ஒன்றுநின் தன்மையைப்
பரவா தார்இல்லை நாள்களும்''
(சம்பந்தர் தேவாரம்-596)

""நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது''
""நீந்துவார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறைவிளைத்தார்''
(பெரியபுராணம்-1067,1296)

""கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?''
(திருவெம்பாவை-8)

""தமையன்எம் ஐயன் தாள்கள்பாடி''
(திருவாசகம்-207)

மேற்கூறிய இவ்வரலாறுகளின் வழி, நம் முன்னோர்கள் எதை எப்படிச் சொன்னார்களோ, அதை அப்படிக்
கூறுவதே சால்புடையதாகும். பவணந்தி முனிவரும்
இந்நோக்கில்,
""என்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே''
(நன்னூல்-388)

என்று கூறியுள்ளார். மரபின் பெருமையை உணர்ந்து, நமக்கு அதனை உணர்த்தவே தொன்னூலாசிரியர் தொல்காப்பியர் தம் நூலில் மரபு என்னும் சொல்லை 75 இடங்களுக்கு மேற்பட்டுக் கையாண்டிருப்பதைக் காணலாம். மரபுவழி கூறவில்லையெனில் பொருள் வேறுபடும் என்றுணர்ந்து அதற்கென விதி செய்தார்.

""மாற்ற அரும்சிறப்பின் மரபு இயல் கிளப்பின்''
""மரபு நிலை திரியின் பிறிது பிறிது ஆகும்''
(தொல்.-1500,1591)

எனவே, மரபுவழி நிற்றலே நமக்கு உரிய - உயரிய மாண்பு என்பதை உணர வேண்டும். வாழ்த்துக்கள், கருத்துக்கள், எழுத்துக்கள், நாட்கள், பொருட்கள் என எழுதுவது தவறு. வாழ்த்துகள், எழுத்துகள், கருத்துகள், நாள்கள், பொருள்கள் என எழுதுவதே சரி!

தினமணியில் என்றோ படித்தது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Thu 13 Nov 2014 - 4:03

வரவேற்புகள் என எழுதாமல் வரவேற்புக்கள் என எழுதினால் வரவேற்பின் போது தரும் கள் என புரிந்திடவும்!

இனிமேல் வரவேற்புகள்  என எழுதுவோம்
வாழ்த்துகள் என க்  தவிர்த்து வாழ்த்துவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 6:26

இதில் இன்னும் நிறைய விசயங்கள் சொல்கிறேன். விவாதத்திற்கு உரிய விளக்கங்களுடன் வருகிறேன்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Thu 13 Nov 2014 - 9:26

வாங்க வாங்க, பேசலாம்! விவாதிக்கலாம்! 

அதைத்தான் நானும் விரும்புகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by நண்பன் on Thu 13 Nov 2014 - 9:31

இது வரைக்கும் நான்

வாழ்த்துக்கள்
எழுத்துக்கள்
கருத்துக்கள்
நாட்கள்
பொருட்கள்

நான் தமிழன்தான் ஆனால் இன்னும் தமிழ் கற்க வில்லை
இன்னும் நிறைய கற்க வேண்டும்
விவாதங்கள் தொடரட்டும்
வாங்க சுறா சார் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்

நான் சொல்லுவது வழ்த்துக்கள்தான் சரி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by கவிப்புயல் இனியவன் on Thu 13 Nov 2014 - 9:51

வாழ்த்துக்கள்  என்பதுதான் சரி 

காரணம் ஒரு உதாரணம் ...
பூ + செடி = பூச்செடி தான் சரி  இங்கு ச் வருவதுபோல் ..
வாழ்த்து + கள் என்று வராது ..
வாழ்த்துக்கள் என்பதுதான் சரி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by பானுஷபானா on Thu 13 Nov 2014 - 11:00

வாழ்த்துகள் வரவேற்புகள் தான் சரி என எங்கேயோ படித்திருக்கிறேன். அதிலிருந்து நான் எழுதுவதை மாற்றிக் கொண்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 11:23

க்' வராது என்று நீங்க எடுத்துரைத்த வாதம் மிகவும் அருமை அக்கா

உங்கள் பதிவின் படி பார்த்தால் க்' வரக்கூடாது தான். வாழ்த்துகள் தான் சரி.

இதோ நானும் சிலவற்றை படித்தேன் தருகிறேன் பாருங்க

1) "க்" மிகலாம்...

* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

வாழ்த்து: த் வல்லின ஒற்று => மிகலாம் = வாழ்த்துக்கள்!
இரும்பு: ம் வல்லின ஒற்று அல்ல => மிகாது = இரும்புகள்!
கொலுசு: ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

(மூவெழுத்துக்கும் அதிகமான "உ"கரச் சொற்கள்... வல்லின ஒற்றோடு வரும் போது மட்டுமே மிகும்)
------------

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்

இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை: கை = கைகள் தான்! கைக்கள் அல்ல!)
------------

3) "க்" மிகவே கூடாது

ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 11:28

வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!? Vaazthukkal

இதையும் கொஞ்சம் பாருங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Thu 13 Nov 2014 - 11:36

வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை! 

நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!

இனியவன் அவர்கள் சொன்னது  போல் பூச்செடி உதாரணம்  தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 11:39

Nisha wrote:வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை! 

நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!

இனியவன் அவர்கள் சொன்னது  போல் பூச்செடி உதாரணம்  தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!

இரண்டுமே சரி என்ற விளக்கத்தைதானே தந்திருக்கேன். {_

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Thu 13 Nov 2014 - 11:39

தொடருங்கள் சுறா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 12:04

Nisha wrote:தொடருங்கள் சுறா!

அதானே உங்களை யாரு விட்டது. இதோ இன்னும் அதிக செய்திகளை தருகிறேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by பானுஷபானா on Thu 13 Nov 2014 - 12:31

சூப்பர் சுறாண்ணா *_ *_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by நண்பன் on Thu 13 Nov 2014 - 17:06

சுறா wrote:
Nisha wrote:வாழ்த்துகள் எனத்தான் எழுத வேண்டும். இதை குறித்து விளக்க, விவாதம் செய்ய எனக்கு நேரம் இல்லை! 

நேரம் இருக்கும் போது எழுதுகின்றேன்!

இனியவன் அவர்கள் சொன்னது  போல் பூச்செடி உதாரணம்  தமிழ் இலக்கணத்துடன் வரும் அனைத்து சொற்களுக்கும் பொருந்தாது!

இரண்டுமே சரி என்ற விளக்கத்தைதானே தந்திருக்கேன். {_
நானும் அதை வழி மொழிகிறேன் காரணம் நீண்ட நாட்களாக நான் அப்படித்தான் எழுதி வருகிறேன் ^)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Thu 13 Nov 2014 - 17:24

பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_

என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by பானுஷபானா on Fri 14 Nov 2014 - 10:35

சுறா wrote:
பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_

என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*

ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Fri 14 Nov 2014 - 11:18

பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_

என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*

ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)

அதென்னமோ எத்தனை பெயரில் வந்தாலும் அந்த மகாபிரபு எனும் பெயரும் அவதாரையும் போல் வராது சார்! அதுக்காக பெயரை மாத்துவதில்லை. {_  

சுறா எனும் பெயர் மாறணும் எனில் அது ஜானி எனும் உண்மை பெயரை மாற்றுவதானால் மட்டுமே! கள்வர்கள் தான் அடிக்கடி பெயரை மாற்றுவார்கள். நீங்கள் எதை எவரை எங்கிருந்து திருடப்போகின்றீர்களாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by இன்பத் அஹ்மத் on Sun 16 Nov 2014 - 19:50

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Sun 16 Nov 2014 - 19:56

Nisha wrote:
பானுஷபானா wrote:
சுறா wrote:
பானுஷபானா wrote:சூப்பர் சுறாண்ணா *_ *_

என் பெயரை சூப்பர் சுறா என்று மாற்றிவிடவா? i*

ம்ம்ம் மாத்துங்க நல்லா இருக்கும் ^)

அதென்னமோ எத்தனை பெயரில் வந்தாலும் அந்த மகாபிரபு எனும் பெயரும் அவதாரையும் போல் வராது சார்! அதுக்காக பெயரை மாத்துவதில்லை. {_  

சுறா எனும் பெயர் மாறணும் எனில் அது 000000 எனும் உண்மை பெயரை மாற்றுவதானால் மட்டுமே! கள்வர்கள் தான் அடிக்கடி பெயரை மாற்றுவார்கள். நீங்கள் எதை எவரை எங்கிருந்து திருடப்போகின்றீர்களாம்?

நான் ஒரு திருடன்னு உங்களுக்கே தெரியுமே? (_ ))& )(

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Nisha on Mon 17 Nov 2014 - 0:42

யாரு? நீங்கள் திருடனா?_*_*

அம்மாடியோவ்! நம்பிட்டேன் சார்! 

நேரில் காணாவிட்டால் எப்படி நம்பி இருப்பேனோ தெரியாது! ஆனால் நேரில் கண்டபின் சான்ஸே இல்லை ஜானி!

நீங்கள் என் மதிப்புகுரிய நல்ல  பிரெண்ட்  ஜானி!  எனக்கு சிரம்ம் தரகூடாது என நினைக்கும் என் நலனில், மகிழ்வில் அக்கறை காட்டும் உங்களை  திருடன் என நான் சொல்வேனோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by சுறா on Mon 17 Nov 2014 - 9:25

Nisha wrote:யாரு? நீங்கள் திருடனா?_*_*

அம்மாடியோவ்! நம்பிட்டேன் சார்! 

நேரில் காணாவிட்டால் எப்படி நம்பி இருப்பேனோ தெரியாது! ஆனால் நேரில் கண்டபின் சான்ஸே இல்லை ஜானி!

நீங்கள் என் மதிப்புகுரிய நல்ல  பிரெண்ட்  ஜானி!  எனக்கு சிரம்ம் தரகூடாது என நினைக்கும் என் நலனில், மகிழ்வில் அக்கறை காட்டும் உங்களை  திருடன் என நான் சொல்வேனோ?

அப்பாடா நம்மள நல்லவன்னு நம்பிட்டாங்க  :}

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா!?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum