சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

குறுக்கங்கள் என்றால் என்ன? Khan11

குறுக்கங்கள் என்றால் என்ன?

3 posters

Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:51

குறுக்கங்கள் 

சார்பு எழுத்துகளில் நான்கு குறுக்கங்கள் உள்ளன.அவை,

1. ஐகாரக்குறுக்கம் 
2. ஒளகாரக்குறுக்கம் 
3. மகரக்குறுக்கம் 
4. ஆய்தக்குறுக்கம் 
என்பவை ஆகும். 

1 ஐகாரக்குறுக்கம்
ஐ என்கிற உயிர் எழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும்இறுதியிலும் வரும். 

ஐப்பசி, வைகல் - முதல் கடைசி, இறைவன் - இடை மழை, நகை , கடை- இறுதி 

மேலே ஐ என்ற எழுத்து, சொல்லின் மூன்று இடங்களிலும்வந்திருப்பதைக் காணலாம். ஐ என்பது நெடில் எழுத்து என்றுமுன்பே கூறப்பட்டது. நெடில் எழுத்து என்பதால் ஐகாரம்இரண்டு மாத்திரை நேரம் ஒலிக்கும். தனியே இருக்கும் ஐகாரம்மட்டுமே இவ்வாறு இரண்டு மாத்திரை ஒலிக்கும். சொல்லின்முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் ஐகாரம் இரண்டுமாத்திரையில் குறைந்து ஒரு மாத்திரையாக ஒலிக்கும். இதைஐகாரக் குறுக்கம் என்று கூறுவர்.

மேலே காட்டியுள்ள எடுத்துக் காட்டுகளில் உள்ள ஐகாரம்,இரண்டு மாத்திரையில் இருந்து குறைந்து ஒரு மாத்திரையாகவேஒலிக்கும். ஐகாரம் அளபெடுக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை,

நசைஇ,அசைஇ 

இந்த இடத்தில் ஐகாரத்திற்கு இரண்டு மாத்திரையும் இகரத்திற்குஒரு மாத்திரையும் வரும்.

2 ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரைபெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்துஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம்என்பர். ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்

ஒளவையார், மௌவல், வௌவால். 

ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை. 

தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும் நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
(நன்னூல் 95) 

பொருள்:ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்றஇடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்)குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில்வரும்போது குறைந்து ஒலிக்கும். 

3. மகரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் என்பது மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக்குறிக்கும். மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்

தனிமொழி 
ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து, குறைந்து ஒலிக்கும். 
மருண்ம், உண்ம் போன்ம், சென்ம் 

புணர்மொழி 
இரண்டு சொற்கள் சேரும்போது, முதல் சொல்லின்இறுதியில் மகர ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல்எழுத்தாக வகரம் வந்தால் மகர ஒற்று, குறுகும். 

தரும் வளவன் வாழும் வகை 

மகர ஒற்று அரை மாத்திரை ஒலிக்க வேண்டும். மேற்கண்டஇடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால் மாத்திரையேபெறும். 
ண, ன முன்னும், வஃகான் மிசையும் மக் குறுகும்,(நன்னூல் 96) 

பொருள்: வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப்பின்பும் மகர ஒற்று, குறைந்து ஒலிக்கும். 

4 ஆய்தக்குறுக்கம்
இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின்இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள் வந்து இரண்டாம்சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவைஆய்த எழுத்தாக மாறிவிடும். 

அல் + திணை = அஃறிணை 
முள் + தீது = முஃடீது 
இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால்மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம்என்று கூறுவர். ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் 
(நன்னூல் 97)

பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும்.அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும்.

முத்தமிழ் மன்றத்தில் நான் இட்டது மீள் பதிவாக இங்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:25

ஐகாரக்குறுக்கம் மற்றும் ஔகாரக்குறுக்கம் எளிமையாக புரிந்தது.  அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:22

மகரகுறுக்கமும், ஆய்தகுறுக்கமும் புரியவில்லயா? இருங்க இன்று இன்னும் கொஞ்சம் விளக்கமாய் எழுதுகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by சுறா Thu 13 Nov 2014 - 12:01

Nisha wrote:மகரகுறுக்கமும், ஆய்தகுறுக்கமும் புரியவில்லயா? இருங்க இன்று இன்னும் கொஞ்சம் விளக்கமாய் எழுதுகின்றேன்!

சரியா புரிஞ்சிக்கிட்டீங்களே )(


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:42

இனி எல்லாம் அடுத்த வாரம் தான்!

மன்னிக்கவும்.!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by Nisha Sat 15 Nov 2014 - 1:49

குறுக்கம் என்றால், தன்னுடைய இயல்பான அளவிலிருந்து குறைதல் என்று அர்த்தம்.

ஐ, ஔ, ம், ஃ என்ற நான்கு எழுத்துகளும், சில நேரங்களில் தங்களுடைய இயல்பான மாத்திரை அளவிலிருந்து சற்றே குறைந்து ஒலிக்கும். அதைதான்   நான்கு வகைக் குறுக்கங்களாகக் தமிழ் இலக்கணத்தில் குறிப்பிடுகிறோம்.

* ஐகாரக் குறுக்கம் (சொல்லின் முதலில், நடுவில், நிறைவில்)

* ஔகாரக் குறுக்கம் (சொல்லின் முதலில்மட்டும்)

* மகரக் குறுக்கம் (ண்ம், ன்ம், ம் வ)

* ஆய்தக் குறுக்கம் (தனிக்குறில் + ல் + தகரக் குடும்ப எழுத்து)



* மகரக் குறுக்கம் --------- ம்’க்கு இருப்பதே அரை மாத்திரைதான், அதில் இன்னும் குறுகி ஒலித்தல்... மகரக்குறுக்கம் ஆகும்.

‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக  குறுகி ஒலிப்பதே மகரக்குறுக்கம்.

‘ணன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும்’ என்கிறது நன்னூல்.


1. ண் (அல்லது) ன் ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து ‘ம்’ வரவேண்டும்.
உதாரணம்-- ‘மருண்ம்’,‘போன்ம்’.
மருண்ம், போன்ம் இரண்டுமே ந்டைமுறையில் இல்லாத  செய்யுளுக்கு உரிய சொற்கள்.

2. முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ எழுத்து இருக்கவேண்டும்

பெரும் வளையல்’ என்றுசத்தமாக சொன்னால்  ம் எனும் உச்சரிப்பு குறுகி வருவதை  உணர்வீர்கள். ம் எனும் எழுத்து இருப்பதே தெரியாது குறுகி ஒலிக்கும். இது மகரக்குறுக்கம்

உதாரணம்--
வரும் வண்டி
தரும் வளவன்




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by பானுஷபானா Sat 15 Nov 2014 - 14:14

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றீ நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குறுக்கங்கள் என்றால் என்ன? Empty Re: குறுக்கங்கள் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum