Latest topics
» ஒற்றை மலர்!by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
உங்க போதைக்கு நாங்க ஊருகாய்!
3 posters
Page 1 of 1
உங்க போதைக்கு நாங்க ஊருகாய்!
தெளியத் தெளிய சரக்கடிக்கிற மந்தையில சரக்கே அடிக்காம, ஒத்தையா மாட்டிக்கிட்டு திருதிருனு முழிக்கும் ஓர் ஆட்டின் குமுறல் அப்டேட்ஸ்கள்தான் பாஸ் இவை...
குழுவுல பத்து பேர் இருந்தாலும், அம்புட்டு பேருமே சரக்கடிக்காத நம்மளை பாவ மன்னிப்பு கொடுக்கிற பாதிரியார் மாதிரிதான் பார்ப்பாய்ங்க. முதல் ரவுண்டு முடிஞ்சு, லைட்டா போதை ஏறின உடனே, ஒவ்வொருத்தனும் தனித்தனியா அவிய்ங்களோட சின்ன வயசு காதல்ல ஆரம்பிச்சு பக்கத்து வீட்டு ஆன்ட்டியோட கடலை போட்ட வரைக்கும் அநியாயத்துக்கு உண்மை, நேர்மைகளோடு கலந்து கட்டி நம்மகிட்ட புலம்பி வைப்பாய்ங்க. 'இதெல்லாம் ஏன் இவன் நம்மகிட்ட சொல்றான்’கிற மாதிரியான ஜென் நிலையிலேயே நாமளும் அதைக் கேட்டுக்கிட்டு இருப்போம்.
புரோட்டா வாங்கிக் கொடுத்து, பொரணி கேட்கிற கூட்டத்துல, இலவசமாவே ஒரு என்ஜாய்மென்ட் வருதுனா விட்டுட முடியுமா..? கடைசியில, 'மாப்ள, இந்த மேட்டர்லாம் உன்கிட்ட மட்டும்தான் சொல்றேன். கடுகளவு வெளியே கசிஞ்சாலும் கைப்புள்ளையை உயிரோட பார்க்க முடியாது’ன்ற கண்டிஷன்ஸ் அப்ளைடு ஸ்டார் மார்க்கோட முடிப்பாய்ங்க. லைட்டா ஜெர்க்காகி, கைப்புள்ளை யாருன்னு நமக்கு டவுட்டாகிரும்.
முதல் ரவுண்டு ஆரம்பிக்கும்போது, 'மச்சி... எங்ககூட சேர்ந்து சரக்குதான் அடிக்க மாட்டேங்கிற... கம்பெனிக்குக் கொஞ்சம் சைடு டிஷ்ஷாவது சாப்பிடுடா’ங்கிற கனிவான பார்வை, நாலாவது, அஞ்சாவது ரவுண்டுக்கு எகிறும்போது கொலைவெறிப் பார்வையா மாறும். அந்தப் பார்வைக்கு எல்லா டிக்ஷனரிகள்லேயும் ஒரே அர்த்தம்தான். 'மவனே...இனிமே நீ சைடு டிஷ்ல கையை வெச்ச... மொதல் டெட்பாடி நீதான்டி!’
வனவாசம் எழுதினது கண்ணதாசனா, சின்னப்பதாஸானு குழப்பத்துல இருக்கிற ஒருத்தன், ஆஃப் உள்ள போனவுடனே, 'என்னதான் இருந்தாலும் இசைஞானியும் வைரமுத்துஜியும் பிரிஞ்சிருக்கக் கூடாது மாப்ள... நட்டம் யாருக்கு. நமக்குத்தானே’னு ஆரம்பிப்பான். 'அடேய் ஆர்மோனியம் வாயா, அவங்க பிரிஞ்சப்போ நீ பிறந்திருக்கக்கூட மாட்டியேடா’னு மைண்ட் வாய்ஸ் மனசுக்குள்ள சப்டைட்டில் ஓட்டும்.
அடுத்து வர்றதுதான் மொழி சார் முழிப் பிதுங்கல். இங்கிலீஷ்ல இருக்கிறதே 26 எழுத்து. இவன் மலையேறுன பிறகு, பேசுவான் பாருங்க இங்கிலீஷ்... மொத்த எழுத்து இருபத்தாறா இல்ல இருநூறானு குழம்பி நிற்போம். பேசுறவன் ஒரு ரகம்னா, எட்டு மணிக்கு அப்பறம் பாடுற வெள்ளைச்சாமி கணக்கா பாட்டு பாடுற பயபுள்ள இன்னொரு ரகம். ’அவழ் என்ன்ழ்ன்னழ்த் தேழ்டி வழ்ந்தழ் அழ்ஞ்சழ்ழை’னு பெருங்குரலெடுத்து ஆரம்பிச்சு ஒரு வழியா சுதி சேரும்போது, தமிழ் மொழியில, 'ல’கரம் 'ள’கரமெல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸாகி, 'ழ’கரம் மட்டும்தான் மிஞ்சியிருக்கும்.
என்னதான் இவ்வளவு டிசைன் டிசைனா வன்கொடுமைகளை வளைச்சு வளைச்சு அனுபவிச்சாலும் அடுத்த சனிக்கிழமையும் அவிய்ங்ககூடதான் பட்டறையைப் போடுவீங்க. அவிய்ங்களும் உங்களைத்தான் ஹெவியா லைக் பண்ணுவாய்ங்க. ஏன்னா சரக்கடிக்கிறவனுக்கு சைடு டிஷ், அவன் சாப்பிடுற பொருள் இல்லை பாஸ்; சரக்கடிக்கப் பழகாத அவனோட உத்தம நண்பனும்தான்!
நன்றி விகடன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க போதைக்கு நாங்க ஊருகாய்!
தலைப்பிலயும் ஊறுகாய் ஊருகாயா தான் ஊருது. ஊற எவ்வளவு நாளாகுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்க போதைக்கு நாங்க ஊருகாய்!
Nisha wrote:தலைப்பிலயும் ஊறுகாய் ஊருகாயா தான் ஊருது. ஊற எவ்வளவு நாளாகுமோ?
அங்க அப்படித் தான் இருந்துச்சு. காமெடிக்காக எழுதி இருப்பாங்களோனு நானும் திருத்தல;
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்க போதைக்கு நாங்க ஊருகாய்!
இதுதான் காமெடி ஹா ஹாபானுஷபானா wrote:Nisha wrote:தலைப்பிலயும் ஊறுகாய் ஊருகாயா தான் ஊருது. ஊற எவ்வளவு நாளாகுமோ?
அங்க அப்படித் தான் இருந்துச்சு. காமெடிக்காக எழுதி இருப்பாங்களோனு நானும் திருத்தல;
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» போதைக்கு ஏங்கும் மனம்
» போதைக்கு எதிராக போராடும் அமீர்
» நாங்க எல்லாம் எப்பவுமே இப்படி தான்
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» போதைக்கு ஏங்கும் மனம்
» போதைக்கு எதிராக போராடும் அமீர்
» நாங்க எல்லாம் எப்பவுமே இப்படி தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|