சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Khan11

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

2 posters

Go down

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Empty குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 22:03

தற்போது பிஞ்சு மழலைகளை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாட வைத்து ரசிப்பதில் பெற்றோர்கள் பெரிதும் ஆசைப்படுகிறார்கள். அவ்வாறான குழந்தைகளை நாமே பாழ்படுத்துகிறோம் என்பதை விளக்கும் கட்டுரையே இது.....

ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள்.
இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல" என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.

குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனங்குகிறார்கள்.

ஒருசில நிகழ்ச்சிகளில், "நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்" என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.


குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இம்மாதிரியான தொலைக்காட்சி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர்.
சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம் தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் இது ஒரு சாதாரணம் தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.

மேலும் சில தொலைக்காட்சிகளும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர்.

அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதை தொலைக்காட்சியோ அல்லது பெற்றோர்களோ சிறுதும் கவலைப்படுவதில்லை.

வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் தற்போதும், எதிர்காலத்திலும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள், குத்துப் பாடல்கள், விரசா வரிகள் - சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!. 

இந்த குழந்தைகள் பாடும் பாடல்களில் இவைகளும் சில
1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா
இம்மாதிரியான பாடல்களை தங்களது குழந்தைகள் பாடுவதை பெருமையுடன் தந்தையும், தாயும் உட்கார்ந்து பார்ப்பது தான் இன்னும் வேதனை.


Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Dec 2014 - 22:32; edited 3 times in total


குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Empty Re: குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 22:04

இந்தக் கட்டுரையில் உண்மை இருப்தாகவே உணர்கிறேன் நானும் அவதானித்திருக்கிறேன் இவை உணர்த்தப்பட வேண்டிய விடயம்


குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Empty Re: குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

Post by Nisha Thu 18 Dec 2014 - 22:11

இக்கட்டுரை வெளிவந்து ரெம்ப நாள் ஆச்சே ஹாசிம்.  விஜய் ரீவி சூப்பரி சிங்கரை குறி வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது. 

இக்கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் தீ சுடும் என தெரிந்து  தீக்குள் விரலை வைப்பவரை நாம் என்ன சொல்வது? 

இன்றைக்கு  தவறு என சொல்லும் நாமோ  நம் குழந்தைகளுக்கும் அம்மாதிரி  வாய்ப்பு வந்தால் மறுப்போமா என நமக்கே தெரியாது! சந்தர்ப்பம் எப்ப்டி வேண்டும்னாலும்  நம்மை பேச வைக்கும்!

குழந்தைகளை குழந்தைகளாக அவர்கள் இயல்போடு ஓடி விளையாடு பாப்பா.. நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என வளர விட்டு ரெம்ப காலம் ஆனதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...  Empty Re: குழந்தைகள் மனதை நாமே பாழ்படுத்தலாமா.... பெற்றோர்களே சிந்திக்கவும்!...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum