சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Khan11

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

4 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty காதல் வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 0:22

First topic message reminder :

உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!

இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:04

மீன்கள் வானத்தில் நீந்துகின்றன
நிலத்தில் முழுநிலா உதிக்கிறது
சிட்டுக்குருவிகள் முகிலில் கூடுகட்டுகின்றன
சாரைப்பாம்பு படமெடுக்கிறது
காகம் வெள்ளையாகிறது
கொக்கு கறுப்பாகிறது
ஏன் இந்தமாற்றம் என்று கேட்கிறேர்களா ?
இலங்கையில் அரசியல் தீர்வு வரப்போகிறதாம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:12

உன்னை 
தேவதையென நினைத்து காதலிக்கிறேன் ... 


நீ தினம் 
தோறும் கட்சிதருவாய் என்றுகாதலிக்கிறேன் 


நீயோ .. 
என்னைக்கண்டவுடன் பேசாமல் போகிறாய் 
தூரத்தில் நின்று திரும்பி பார்க்கிறாய்... 
தூரப்பார்வை குறைபாடு வந்தாலும் வரலாம் 
உன்பார்வையை வீச மறுக்கிறாய் 
ஒரு புன்னகை கூட தர மறுக்கிறாய் 
சரி போகட்டும் விடு ... 


ஒரு கல்லையாவது எடுத்து வீசி ஏறி 
அதுவாவது என்மீது வந்து படட்டும் 
நீ தரும் 
எதையும் ஏற்க தயாராக இருக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:17

என்னிடம் எது வேணும் என்றாலும் கேள்
தருவதற்க்கு தயாராக இருக்கிறேன்
உன்னிடம் ஒன்றே ஒன்றை கேட்பேன்
மறுத்து விடாதே ..
காதலை ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:19

இன்று 
சந்திர கிரகணமாம்
மற்றவர்களுக்குத்தான் 
சந்திர கிரகணம்
எனக்கு நீ வந்தால் பூரணை
வாராவிட்டால் 
 சந்திர கிரகணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:21

நானோ உன்னை ....?
சாகும் வரை காதலிக்கிறேன்
நீயோ என்னை ....?
சாகடிக்கவே காதலிக்கிறாய் .
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:23

உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:25

உன்னை 
மட்டும் இவ்வளவு அழகாக ;;
படைத்துவிட்டு.......
என்னை இவ்வளவு அசிங்கமாக ..
படைத்த கடவுளுக்கு -என்ன ?
தண்டனை கொடுப்பது ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:28

அருகில் 
வந்தால் முறைத்து பார்க்கிறாய் ...
எனக்கு இரத்தக்கொதிப்பு வருகிறது ..!

தூரத்தில் நின்று சிரித்துவிட்டு போவதால் ..
தூரப்பார்வை குறைகிறது ...

திடீரென ஒருநாள் கிட்ட வந்து சிரித்தாய் ...
தலையே சுற்றியது ..

ஒருவார்த்தை பேசினாய் -நான்
ஊமை யாகி விட்டேன் ...

உன்னை சுமந்து சுமந்து ...
இருதய நோயாளி ஆகிவிட்டேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:35

அழகிழந்து 
முகமிழந்து 
பூ போட்டு இழந்து 
இருகிறாய் 
 

மூன்று பிள்ளைகளும் 
உன் புருசனும் 
நான் அறிவேன் 

உன் 
ஆசைகள் ஆரவாரங்கள் 
எல்லாம் 
அஸ்தமித்து விட்டன . 

என்றாலும் 
நான் இருக்கிறேன் 
என்னிடம் அழகு இல்லை .
ஓரளவு பணமுண்டு 
முழுமையாக இருக்கிறேன் 

விதவைக்கு வாழ்கை கொடுத்த 
பாக்கியம் என்றாலும் கிடைக்கட்டும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:38

நீ குறிக்கோளுடன் சென்றால் 
தூர நோக்கங்கள் (கனவு ) நிஜமாகும் 
காலம் உனக்கு துணையாகும் ... 
வாழ்கை ஒருநாள் வளமாகும் 
வானம் கூட வசமாகும் ...!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:43

இதயக்காதல் 
உலகம் முழுவதும் வந்தால் 
உலகில் கற்பழிப்புக்கு இடமே இல்லை 
இதயகாதல் ஒன்றால் மட்டுமே வரமுடியும் 
கவிதை ..கவிதை..கவிதை.. !!!

கவிதை எழுதக் கற்றுக்கொள் 
இதய காதல் தோன்றும் 
மரண தண்டனையால் 
ஆயுள் தண்டனையால் 
கற்பழிப்பை குறைக்கலாம் தடுக்க முடியாது ...!!!

காரணம் வெளியில்  
வராத கற்பழிப்புகள் நிறைய உண்டு ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:47

இதயத்தால் 
விரும்பும் காதல் தான் காதல் .. 

இதயக்காதல் தூது இன்றி வரும் 
தேவை இன்றி வரும் ..
எதிர்பார்க்கை இன்றி வரும் . 
நிபந்தனை இன்றி வரும் ..
மன்னிக்கும் தன்மை உடையது 
பிழைகளை தாங்கும் பழிவாங்க துடிக்காது ...!!!

தோல்வி ஏற்பட்டாலும் சுகமாக எடுக்கும் 
மனத்தால் மட்டும் ஏற்படும் 
காதல் எதிர் மாறானது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:51

நீங்கள் இன்னும் கொஞ்சம் .....
விட்டுக்கொடுங்கள் ... 
வாய்ப்பை கொடுங்கள் ...
நம்பிக்கையை கொடுங்கள் ...
நம்பிக்கையை நீங்கள் பெறுங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 6:56

கண்களைத் திறந்து பார் 
அனைவரும் தெரிவார்கள். 
கண்களை மூடிப் பார். 
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் தயக்கம்! 
வெற்றியின் அடையாளம் துணிச்சல்! 
துணிந்தவர் தோற்றதில்லை 
தயங்கியவர் வென்றதில்லை....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 7:00

பள்ளி பருவத்தில் உன்னைக்கண்டேன் .. 
பருவமகள் ஆனேன் அப்போது ... 
கண்டதும் காதல் கொண்டேன் 
கொண்டதே கோலம் என்றேன் .. 
பூ என்று நினைத்தாயோ என்னை .. 
பட்டம் பூச்சிபோல் பறந்து விட்டாய் .. .!!!

என் தோழிகளின் குழந்தைகள் ''' 
அத்தை என்று அழைக்கிறார்கள் .. 
உன்னால் என்னும் விதவையாகதான் 
இருக்கிறேன்.....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 14 Aug 2015 - 7:03

நிச்சயம் 
செய்த பெண் என்று தெரிந்தும் .. 
வீசினாய் என்மீது கண் வீச்சை .... 
என்மனமும் தடுமாறியது ..-
விளைவு ....?

நீயும் இல்லை
இருந்த வாழ்வும் இல்லை ;; 
நிறுத்து உன் கண் வீச்சை ... 
மற்ற பெண்கள் வாழட்டும் ..!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 7:56

வாய்  பேசுகிறது -ஆனால் அதற்கு பெயர் கைபேசி
உடம்புக்கு மறுபெயர் -மெய் (உடம்பே பொய் )
திரை ப்படத்தில் கதாநாயகனுக்கு பதிலாக சண்டை
இடுப்பவருக்கு பெயர் -டூப் (இவர் தானே உண்மை )
+
+
உலகின் மகா பொய்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:03

எவை எல்லாம் மறைந்திருக்கிறதோ
அவற்றை எல்லாம் தேடுவோம் ...இதனால் தான்
கடவுளையும் தேடுகிறோம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:06

முதல் ஹைக்கூ

உலகத்தில் முதல் தோன்றிய ஹைக்கூ
திருக்குறள் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:09

ஆறு கல் தொலைவில் ஒரு ஆலமரம்
ஆண்டுகள் அறுபது ஆகியும்
அறுதியுடனும் உறுதியுடனும்
நிமிர்ந்து நிற்கின்றது

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்

அவை
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டு
தூண்களாகி
துணையாக நிற்கின்றன

இங்கேயும்
ஒரு அறுபது வருட ஆலமரம்
அதன் பெயர் குடும்பம்

பத்து வருடங்களில்
ஆறு விழுதுகள்
அவற்றின் பெயர் குழந்தைகள்

அவையும்
நீண்டு நிமிர்ந்து
நிலத்தைத் தொட்டன

ஆனால்
தூண்களாகவில்லை
அதனால்
துணையும் ஆகவில்லை

மாறாக
மரங்களாகி விலகிச் சென்றன

இருப்பினும்
விழுதுகள் மரங்களாகி
விலகிச் செல்லும் விந்தையை ஏற்று
தூண்களும் இன்றி
துணைகளும் இன்றி
வாழ்ந்துகொண்டிருக்கின்றது
குடும்ப ஆலமரம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:12

எழுது எழுது ....
எனக்கு ஒரு கவிதை எழுது
உன்னை நான் விரும்பவில்லை
உன்னால் வரும் கவிதையை 
எழுதுகிறேன் என்றாவது எழுது....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:18

தமிழை 
வளர்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான்
கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? 
தமிழை பெற்றாய் ?

தமிழை பாதுகாப்போம் வாருங்கள் ..
என்பவரிடம் நான் கேட்டும் ஒரு கேள்வி ? நீயா ? 
தழிழுக்கு காவல் துறை ?

தமிழுக்கு உரமிடுங்கள் போதும் 
கவிதை கட்டுரை வெண்பா ...
போன்றவற்றை ஈர்க்கும் 
படி எழுத்து அது போதும் ...

முடிந்தால் ஒரு நாள் முழுவதும் 
பிறமொழி சேராமல்
தமிழை பேசு எழுத்து அதுவே நீ 
செய்யும் காணிக்கை
தமிழ் தாய் காணிக்கையை விரும்புகிறாள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:33

நினைத்து பார்த்தால் எல்லாம் உண்மை!

யாருக்கும் 
யாரும் இங்கே நண்பனில்லை
யாருக்கும் யாரும் 

இங்கே பகைவனில்லை
ஏட்டினில் எழுதி வைத்தான்
இறைவன் அன்றோ! 

பொம்மையாய் நாமும் வந்தோம்
உலகில் இன்றோ!
( யாருக்கும் யாரும் ... ) 


பஞ்சபூதமும் அவனே படைத்தான்
ஐம்புலனும் அவனே கொடுத்தான்
ஆசை,கோபம் இரண்டுமிங்கே
ஆயுள் முழுதும் படைத்தானே!
ஜீவராசி அவனே படைத்தான்

ஜீவனதை அவனே கொடுத்தான்
இன்பம்,துன்பம் இரண்டுமிங்கே
வாழ்க்கை முழுதும் படைத்தானே!
மெய்கள் ஒன்று இருந்தாலே
பொய்கள் ஒன்று இங்குண்டு
உண்மையாவும் கண்டு கொள்ள
ஆறாம் அறிவை படைத்தானே!
( யாருக்கும் யாரும் ... ) 


ஜனனமென்ற தண்டனை கொடுத்தான்
மரணமென்ற விடுதலை வைத்தான்
புரியாத புதிர்களுக்கிங்கே விடைகள்
ஒன்றை வைத்தானே! 


பொய்களென்ற சரீரம் கொடுத்தான்
மெய்களென்ற உயிரை வைத்தான்
பொய்களில்லா மெய்களுக்கிங்கே கேள்வி
ஒன்றை வைத்தானே! 


நவத்துவாரம் உடலில் கொடுத்தான்
நாட்கள்தோறும் திறந்தே வைத்தான் 

உடலிலிருக்கும் உயிர்களுக்கிங்கே பூட்டு
ஒன்று வைத்தானே!
பூட்டி அவனும் நின்றானே!
(யாருக்கும் யாரும் ... )
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:37

காதலில் விழுந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

காதலில் வீழ்ந்தவன்
ஒருவன் சொன்னான்
காதல் அழகானது என்றான்
ஏற்றுக்கொண்டது என் இதயம்
அவன் உண்மையான நேசம் மட்டுமன்றி
அந்த காதலையும் தான்

வெற்றி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
நம்ப மறுத்தது - என் நெஞ்சம்

தோல்வி பெற்றவன்
ஒருவன் சொன்னான்
கடவுள் இருக்கிறார் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் நம்பிக்கையை மட்டுமன்றி
அந்த கடவுளையும் தான்

ஆத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
நாத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொள்ளவில்லை - என் நெஞ்சம்

நாத்திகனாக இருப்பவன் கூட
ஓர் நொடி
ஆத்திகனாக மாறினான் என்றான்
ஏற்றுக்கொண்டது - என் இதயம்
அவன் உண்மை அறிந்ததற்காக மட்டுமன்றி
அவனின் உள்ளத்தையும் தான்

உன் மனமென்பதை
நிலையாக வைத்திருக்காவிடில்
விடை அறியா
கேள்வியாகி விடுமே உன் வாழ்க்கை ?.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 15 Aug 2015 - 8:41

பசிக்கும் பருவம் இது
ஆனால் பசியோ எடுப்பது இல்லை.
ரசிக்கும் கண்கள் இங்கே
ஆனால் அவளோ என் கண்ணுள்

பல மணி நேரம் பேசினேன்
பேசியது நினைவில் இல்லை.
பல மணி நேரம் தூங்கினேன்
அவளோ என் கண்ணுள்ளே.

குடித்தேன் வெறித்தேன்
அவளை மறக்க முடியவில்லை
விலகினேன் வெறுத்தேன்
அப்போதும் முடியவில்லை.

அவள் தந்த அற்புத இன்பம்
அவளுக்கு மட்டுமே தெரிந்த
ஆரோக்கிய இன்பம்.
மறைந்த கதிரவனை எதிர்பார்த்தேன்
அவன் மறு நாள் வந்தான்
ஆனால் மறைந்த என் காதலி
எப்போது திரும்பி வருவாள்.

ஏன் இந்த விளையாட்டு!
எல்லாம் விதியின் விளையாட்டா?
இல்லை
எல்லாம் காதலின் விளையாட்டா!?...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! - Page 3 Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum