சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


இது இன்னொரு கேன்சர் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
இது இன்னொரு கேன்சர் Khan11
இது இன்னொரு கேன்சர் Www10

இது இன்னொரு கேன்சர்

Go down

Sticky இது இன்னொரு கேன்சர்

Post by ahmad78 on Thu 22 Jan 2015 - 10:57

தைராய்டு
இது இன்னொரு கேன்சர் Ld3084
‘எனக்கு தைராய்டு பிரச்னை இருக்கு. அதனால்தான்  திடீர்னு குண்டாகிட்டேன்...’ ‘பீரியட்ஸ் சரியாக வரலை’ என்று சில பெண்கள் பேசும்போது கேட்டிருப்போம். தைராய்டு ஹார்மோன் ஒரு பக்கம் பயமுறுத்திக் கொண்டிருக்க, இப்போது லேட்டஸ்ட்டாக தைராய்டு கேன்சர்  விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தைராய்டு கேன்சர் பற்றிப் பேசுகிறார் கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீபிரகாஷ் துரைசாமி. ‘‘தைராய்டு சுரப்பி கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்திருக்கும். இதில் இருந்து சுரக்கும் தைராய்டு ஹார்மோன் மன வலிமைக்கும் உடல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. பெண்களின் உடல் வளர்ச்சியில் தைராய்டு ஹார்மோன் பெரிய பங்கு வகிக்கிறது.  பெண்களின் மாதவிடாய் சுழற்சியிலோ, கருத்தரித்தலிலோ ஏதாவது பிரச்னை இருந்தால் தைராய்டு ஹார்மோனின் அளவைத்தான் பரிசோதிக்க சொல்வார்கள். 

தைராய்டு ஹார்மோன் கூடுதலாக சுரந்தால் ‘ஹைப்பர் தைராய்டிசம்’ என்னும் பிரச்னையும், குறைவாக சுரந்தால் ‘ஹைப்போ தைராய்டிசம்’ என்னும் பிரச்னையும் வரும். இக்குறைபாடுகளை மாத்திரை, மருந்துகள் கொடுத்தே சரி செய்துவிடலாம். உடலில் தைராய்டு சரியான அளவில் உள்ளதா என்பதை ரத்தத்தில் ஜி3,ஜி4,ஜிஷிபி ஹார்மோன்களின் அளவை பரிசோதித்து கண்டறியலாம். EU THYROID என்று பரிசோதனையில் முடிவு வந்தால் தைராய்டு ஹார்மோன் சரியாக இயங்குகிறது என்று அர்த்தம்.உலகளவில் அதிகம் வரும் கேன்சர் தாக்குதல்களில் 9வது இடத்தை தைராய்டு புற்றுநோய் பிடிக்கிறது. தைராய்டு புற்றுநோய்க்கான காரணத்தை மட்டும் இன்னும் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

கதிரியக்கத்தில் வேலை செய்பவர்களுக்கு தைராய்டு கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற உபகரணங்களில் அதிக வருடங்கள் பணிபுரிபவர்களுக்கும் தைராய்டு கேன்சர் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. மார்பக எக்ஸ்ரே அதிகமாக எடுத்துக்கொண்டவர்களுக்கும் இவ்வகை கேன்சர் வரலாம். பரம்பரை வழியாகவும் வர வாய்ப்புகள் உள்ளன. மரபியல் ரீதியாக ஜீன்களில் ஏதாவது பிரச்னை என்றாலும் தைராய்டு கேன்சர் வருகிறது. RET ,BRAF போன்ற ஜீன்களில் வரும் பிரச்னைதான் தைராய்டு கேன்சரை வரவழைக்கிறது என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 

அயோடின் சத்து குறைவாக இருந்தாலும்  உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டாலும் இந்த கேன்சர் வரலாம் என்கின்றன சில ஆய்வுகள். இந்திய மருத்துவ ஆய்விதழின் அறிக்கைப்படி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் (Cervix), மார்பகம், சினைப்பை போன்ற பாகங்களை தாக்கும் புற்றுநோய்களுக்கு அடுத்து தைராய்டு புற்றுநோய் அதிகம் வருகிறது. பெண்களை இது  தாக்குவதற்கான காரணமும் இன்னும் தெரியவில்லை. தைராய்டு கேன்சரின் அறிகுறிகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். குரல் கடினமாக மாறும். உணவுகளை விழுங்குவதில் சிரமம் இருக்கும். வறட்டு இருமல் அதிகம் வரும். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் கூட ஏற்படும்.   கழுத்தில் சிறிய கழலை அல்லது கட்டி உருவாகி இருக்கும். தண்ணீர் குடிக்கும் போது இது மேல்நோக்கி செல்லும். 

இப்படி கழுத்தில் கட்டி தென்பட்டால் காது, மூக்கு, தொண்டை நிபுணரையோ அல்லது கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணரையோ பார்த்து பரிசோதித்துக் கொள்ளல் அவசியமாகும். அதை அவர்கள் பயாப்சி சோதனைக்கு உட்படுத்தி அது கேன்சர் கட்டியா?  சாதாரணக் கட்டியா  என்பதை உறுதிப்படுத்துவார்கள். அல்ட்ரா சவுண்ட் உபகரணத்தின் மூலமும் சோதனை செய்து தைராய்டு கேன்சரை கண்டுபிடிக்க முடியும். பாப்பிலரி தைராய்டு கேன்சர், பாலிகுலார் தைராய்டு கேன்சர், மெடுல்லரி தைராய்டு கேன்சர், அனாபிளாஸ்டிக் தைராய்டு கேன்சர் என தைராய்டு  கேன்சரில் நான்கு வகை உள்ளன. இதில் அனாபிளாஸ்டிக் தைராய்டு கேன்சர் தவிர மற்ற வகை தைராய்டு கேன்சர்களை சிகிச்சை மூலம் எளிதாக குணப்படுத்தலாம். அனாபிளாஸ்டிக் வகை வரும் போதே வளர்ந்த நான்காவது நிலையில் இருக்கும். 

ஆனால், இவ்வகை மிக அரிதாகவே வரும். தைராய்டு கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல் 20 வருடங்கள் வாழலாம். முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக குணப்படுத்திவிடலாம். காது, மூக்கு, தொண்டை நிபுணர், கட்டிகள் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க சிகிச்சை நிபுணர் என ஒரு குழுவாக இணைந்து சிகிச்சை அளிப்பது மிகுந்த பயனை அளிக்கும். 90 சதவிகிதம் தைராய்டு கேன்சரை குணப்படுத்தி விடலாம். அறுவை சிகிச்சை செய்து கேன்சர் கட்டியை அகற்றிவிட்டு, அயோடின் கதிரியக்க சிகிச்சை முறையை பயன்படுத்தி தைராய்டு கேன்சரின் பாதிப்பை சரி செய்து விடலாம்...’’
 
 
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3086


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: இது இன்னொரு கேன்சர்

Post by பானுஷபானா on Thu 22 Jan 2015 - 11:57

பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum