சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அபுதாபியில் அபூர்வராகம் - 1 Khan11

அபுதாபியில் அபூர்வராகம் - 1

2 posters

Go down

அபுதாபியில் அபூர்வராகம் - 1 Empty அபுதாபியில் அபூர்வராகம் - 1

Post by சே.குமார் Sun 15 Feb 2015 - 21:18

சென்ற வெள்ளிக்கிழமை மாலை அபுதாபி இந்தியன் சமூக மற்றும் கலாச்சார அரங்கில் பாரதி நட்புக்காக அமைப்பு பொங்கல் மற்றும் ஆண்டுவிழா நிகழ்வாகஇயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விதமாக அபூர்வராகம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா, கலைமாமணி திரு. டெல்லிகணேஷ், திரு. யூகிசேது, கேபியின் நிழல் என்றழைக்கப்படும் திரு, மோகன், வீணையில் ஜாலம் புரியும் ராஜேஷ் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபுதாபியில் அபூர்வராகம் - 1 ?ui=2&ik=23e15ed7b4&view=fimg&th=14b8c916cd6c6d4e&attid=0
(தலைவர் திரு.ராமகிருஷ்ணன் உரை, செயலர் திரு.கலீல் ரஹ்மான் அமர்ந்திருக்க பாரதியின் தூண்கள் நிற்கிறார்கள்)

விழா 6.45 மணிக்கு ஆரம்பமாகும் என்று அழைப்பிதழில் போட்டிருந்திருக்கிறார்கள். நாங்கள் சரியாக கவனிக்காமல் ஆறு மணிக்கு என நினைத்து அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றோம். நாங்கள் ஐ.எஸ்.சியை அடையும் போது பாரதி நட்புக்காக தலைவர் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் சில அங்கத்தினர் வெளியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 'என்னடா இது அழைப்பிதழில் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கும் என்று போட்டிருந்தார்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லையோ?' என்ற நினைப்புடன் உள்ளே சென்றால் அரங்கம் பாதி நிரம்பியிருந்தது. புரஜெக்டர் திரையில் விழா அழைப்பிதழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஆறே முக்காலுக்கு என்று போட்டிருந்ததைப் பார்த்து அட மெதுவாக வந்திருக்கலாமோ என்ற நினைப்புடன் இருக்கையில் அமர, ஆறே முக்கால் ஆவதற்குள் அரங்கம் நிரம்பி இடமில்லாமல் ஆங்காங்கே நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

6.45க்கு மேல் திரையில் 60...59...58 என நொடிகள் ஓடி... சிங்கம் ஒன்று பாரதி ஆனது. பின்னர் மேடைத் திரை விலக,  அங்கே ராஜேஷ் வைத்யா அவர்களின் வாத்தியங்கள் தயாராக இருக்க, என்ன இந்த முறை குழந்தைகள் நடனமில்லையா என்று நினைத்தபோது பின்னால் இருந்தவர் 'பிள்ளைங்க டான்சை தூக்கிட்டாங்க போல' என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அறிவிப்பாளர் திருமதி. சித்ரா அவர்கள் மேடையேறி தமிழ்த்தாய் வாழ்த்து என்றதும் அரங்கம் முழுவதும் எழும்பி நின்று மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவருடன் சேர்ந்து பாடியது. பின்னர் செயலாளர் திரு. கலீல் ரஹ்மான் அவர்களின் வரவேற்பு உரைக்குப் பிறகு, விழா மேடைக்கு தலைவர் திரு. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட, அவரும் செயலாளாரும் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகி உள்ளிட்ட ஒரு சிலருக்கு மரியாதை செலுத்தினர். தலைவர் அவர்கள் சில வார்த்தை பேசினார். மரியாதை செலுத்தப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் சில வார்த்தைகள் பேசினார். மேடை ராஜேஷ் வைத்யாவிடம் கொடுக்கப்பட்டது.

ஆர்ப்பரித்த ராஜேஷ்:

பாரதி நட்புக்காக அமைப்பின் விழா என்பதால் 'பாரதிக்கு கண்ணம்மா...' என வீணையில் ராகமிசைக்க ஆரம்பித்து ஜாதி மல்லி பூச்சரத்தைத் தொடுத்து சிப்பி இருக்குது முத்தும் இருக்குதுவில் அரங்கத்தை ஆட வைத்து இன்றைக்கு இரவு அங்கே இரவா என அமைதியாய் ஆர்ப்பரித்து பாரதிராஜாவுக்காக செந்தூரப்பூவேயில் ராகமிசைத்து என் காதலே என் காதலேயில் மயக்கி பாடறியேன் படிப்பறியேன்னு அரங்கத்தை அசர வைத்து என்ன சத்தம் இந்த நேரத்தில் சத்தமின்றி ரசிக்க வைத்து... இன்னும்... இன்னும்... என பாலச்சந்தரின் படங்களின் ராகங்களை அரங்கத்துக்குள் அசரடிக்கும் வீணை இசையால் ஆர்ப்பரிக்க வைத்து 'வரவு எட்டணா.. செலவு பத்தணா' பாடல் எனக்கு முழுமையாகத் தெரியாது இருந்தாலும் தெரிந்தவரை வாசிக்கிறேன் என்று சொல்லி முடிந்தவரை அழகாய் வாசித்து சிவசம்போவில் அரங்கத்தை ஆர்ப்பரிக்க வைத்து முடித்தார். 

அபுதாபியில் அபூர்வராகம் - 1 ?ui=2&ik=23e15ed7b4&view=fimg&th=14b8c916cd6c6d4e&attid=0
(இசை வெள்ளத்தில் நீந்த வைத்த திரு.ராஜேஷ் வைத்யா)

நிகழ்ச்சியின் இடையில் 'என்னை சினிமாவில் அறிமுகம் செய்து நடிக்கவும் வைத்து அழகு பார்த்தவர்' எனது குருநாதர் கே.பி அவர்கள் என்றும் 'என்னை வீணை வாசிக்கச் சொன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாசிப்பேன். நடிக்க வராது சார்' என்று சொல்லியும் 'அதைச் செய்யி போதும்' என்று நாடகத்தில் நடிக்க வைத்தார் என்றும் சொன்னார். ராஜேஷின் ஒவ்வொரு வாசிப்புக்கும் அவருக்கும் பக்க இசைகளாக வந்த நால்வரும் கலக்கிட்டாங்க... ஒண்ணேகால் மணி நேரம் அனைவரும் ரசித்து கேட்க வைத்தது அவரின் வீணை இசை.... ஒவ்வொரு பாடலுக்கும் அவரின் கைகள் புரிந்த ஜாலங்கள் அப்பப்பா... என்ன ஒரு கலைஞன். பாரதிராஜா சொன்னது போல் அவரோட முகத்தில் எத்தனை எக்ஸ்பிரசன்ஸ்... அவரது முகத்தில் இருந்து எனது விழிகளை அவர் ஆர்ப்பரித்து முடிக்கும்வரை எடுக்கவே முடியவில்லை. அப்படி ஒரு ஆனந்தராகம்... அவரின் வீணை இசை அபூர்வராகம்.

ராஜேஷின் இசை ஓய்ந்ததும் மீண்டும் சட்டையிட்டுக் கொண்டது மேடை, இப்போது புரஜெக்டரில் ஜெட் ஏர்வேய்ஸ்  விளம்பரம் பத்து பதினைந்து நிமிடம் ஓடியது. பொறுமையாகப் பார்த்த நண்பர் ஒருவர், 'பாருங்க.. விளம்பரத்தில் ஒரு இந்தியனையும் காண்பிக்கலை... எல்லாமே பாரினர்ஸ்' என்று ஆதங்கப்பட, அதற்கு இன்னொருவர் சொன்னதுதான் கிளாஸ்... 'நாமெல்லாம் எக்கனாமி கிளாஸ்லதானே போவோம்... இங்க காட்டுனதெல்லாம் பிஸினஸ் கிளாஸ் மாப்ள' என்றாரே பார்க்கலாம் அப்போது சிரித்தாலும் அதுதானே உண்மை. அதன்பின் கே.பி. அவர்களைப் பற்றியதொரு நீண்ட தொகுப்பு... மிக அருமையாக தொகுக்கப்பட்டிருந்தது. அருமை... அதற்காக பாரதி நட்புக்காக குழுவை பாராட்டலாம். மீண்டும் திரை விலக, குழந்தைகளின் நடனம் இல்லையா என்ற ஏக்கம் போக்க குழந்தைகளின் நடனம் ஆரம்பமானது.

'கவிதை கேளுங்கள்' என்ற புன்னகை மன்னன் பாடலுக்கு வெஸ்டர்னும் கிளாஸிக்கும் கலந்து அருமையானதொரு நடனம். பிள்ளைகளுக்கான டிரஸ் செலக்சன் கலக்கல். அதேபோல் மேக்கப்பும் சூப்பர். நடனமாடி 14 (சரியானதுதானா தெரியவில்லை) குழந்தைகளும் கலக்கல் நடனத்தால் பார்வையாளர்களைக் ஈர்த்துவிட்டார்கள். குட்டீஸூக்கு வாழ்த்துக்கள். அடுத்து 'தாம்... தரிகிட... தாம்... தரிகிட...' என நம் பாரதி மழையின் வரவைப் பற்றி பாடிய பாடல் வரிகளுக்கு மூன்று பேர் முத்தாய்ப்பாய் நடனமிட, கடைசியில் மயிலாக வந்து மனம் கவர்ந்தான் ஒரு சிறுவன். ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் இடையில் நேரம் எடுக்காமல் பாடலின் முடிவில் அடுத்த பாடலை ஆரம்பித்து நேரச் சிக்கனம் செய்தார்கள் என்பதை விட இந்த முறை சிறப்பாக இருந்தது என்றே சொல்லலாம். மயில் நடனத்துக்கு இசை மட்டுமில்லாது எதாவது பாடலுடன் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். முத்தான மூன்று நடனத்தில் எல்லோரையும் கொள்ளை கொண்டது முதல் நடனமே. நடனமாடியவர்களுக்கும் அருமையாக நடனம் அமைத்துக்கொடுத்த திருமதி. ஆஷா நாயருக்கும் வாழ்த்துக்கள்.

அபுதாபியில் அபூர்வராகம் - 1 ?ui=2&ik=23e15ed7b4&view=fimg&th=14b8c916cd6c6d4e&attid=0
(கவிதை கேளுங்கள் என்று மனதைக் கொள்ளை கொண்ட குழந்தைகள்)

நடனம் முடிந்த உடன் மேடைக்கு முக்கிய விருந்தினர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். பின்னர் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினரைப் பற்றி பேசி, முதல்முறையாக இந்த விழா நிகழ்வுக்காக பாடுபட்ட நண்பர்களை மேடைக்கு அழைத்தார். திரு.கலீல், திரு.முரளி, திரு. முனீஸ்வரன் உள்ளிட்ட ஐவர்(மற்றவர்கள் பெயர் ஞாபகம் இல்லை) மேடை ஏறினர். எங்கும் ஜெகன்... எதிலும் ஜெகன் என அதிகம் கேள்விப்பட்ட திரு. ஜெகன் அவர்கள் அழைக்கப்படவில்லை.. டெல்லிகணேஷ் அவர்கள் இதை சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். பின்னர் முக்கிய விருந்தினர்கள் வசம் மேடை கொடுக்கப்பட்டது.

வெள்ளந்தியாய் பேசிய நிழல்:

மேடைக்கு அழைக்கப்பட்ட கே.பியின் நிழல் திரு. மோகன் அவர்கள் பேசும்போது வார்த்தைகள் வாயளவில் வராமல் மனசில் இருந்து வந்தன. மதுரைப் பேச்சு வழக்கில் கேபியை அழகாய்... தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். 26 வருடங்கள் அவருடன் நிழலாக இருந்திருக்கிறார். 'எங்க சார் இல்லாம நான் வந்திருக்கும் முதல் நிகழ்ச்சி... அதுவும் பெரிய ஆட்களுடன் என்னையும் அழைத்திருக்கிறார்கள்' என்றார். 

'கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னவனை, புஷ்பா அம்மா, ஐயாவின் மருமகள்கள் என எல்லோருடனும் பேசி எனக்குப் பெண் பார்த்து என் மாமனாரிடம் என்னோட ஒரு மணி நேரம் வேலை பாக்க முடியாது... இவன் எங்கூட இத்தனை வருசமா இருக்கான். அதனால உங்க பொண்ணை நல்லாப் பாத்துப்பான்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தார்' என்றார். 

அபுதாபியில் அபூர்வராகம் - 1 11009542_10204958198529063_1978185065_o
(கே.பியின் நிழல் திரு. மோகன் அவர்கள்)

'அவரு கூட காலையில ஏழு மணியில இருந்து இரவு அவர் உறங்கும் வரை அருகில் இருப்பேன். அதுவும் அவுட்டோர் சூட்டிங் என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் அவரோடு இருப்பேன்.' என்றவர் 'பாரதிராஜா சார் கூட உன்னைய மாதிரி ஒரு ஆள் எனக்கு இல்லையேய்யான்னு சொல்லுவாங்க.' என்று சொல்லி பாரதிராஜாவை நோக்கினார் அவரும் ஆமோதிப்பது போல் தலையாட்டினார். 

ஐயா முடியாம இருக்கும்போது 'இதுவரை நீங்க பாத்தது எல்லாம் முக்கியமில்லை. இப்ப அவரு மருத்துவமனையில இருக்கார்... அவர் எழுந்து வரும்வரை நீங்க அங்கயே இருக்கணும்... இதுதான் முக்கியம் என்று என் மனைவி சொன்னாள் என்றார். 'ஐயாவை நான் கைபிடித்து அழைத்துச் சென்றேன். இனி நான் தனியா... என்னைய ஐயா கைபிடிச்சி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்ன்னு நம்புறேன் என்றவர் பேசும்போதே உடைந்தார். இன்னும் சில நினைவுகளைச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று மேடையில் இருந்து கீழிறங்கினார்.

எக்ஸ்பிரஸ் யூகிசேது :

கல்லூரி தமிழ் புரபஸர் போல கையில் ஒரு பேக்குடன் பேச வந்து பேப்பர்களைத் தேடி எடுத்ததும் 'இவரு என்ன கிளாஸ் எடுக்கப் போறாரா?'ன்னு எங்களுக்குப் பின்னால் இருந்து கமெண்ட் வந்தது. முதலில் பாரதி நட்புக்காக அமைப்பு நண்பர்களுக்காக அழகாக எழுதி சிலவரிகள் சொன்னவர், நான் ஏன் ரொம்ப மெதுவாகப் பேசுறேன்னா வேகமாப் பேசுறீங்க... மெதுவாப் பேசுங்கன்னு கலீல் சொல்லியிருக்காரு அதான் ரொம்ப மெதுவாப் பேசுறேன்னு ஆரம்பித்தார். உள்ளூர் விஷயங்கள் முதல் உலக விஷயங்கள் வரை விரல் நுனியில் வைத்திருக்கும் அறிவாளி யூகி சேது. இவரின் பேச்சு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கும். ரொம்ப நுணுக்கமாகக் கேட்டால்தான் விஷயம் புரியும். இங்கும் மெதுவாகப் பேசுகிறேன் என்று ஆரம்பித்தவர் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தார். 

அபுதாபியில் அபூர்வராகம் - 1 ?ui=2&ik=23e15ed7b4&view=fimg&th=14b8c916cd6c6d4e&attid=0
(திரு. யூகி சேது அவர்கள் கௌரவிக்கப்பட்ட போது)

பாலச்சந்தருக்கு நான் தூரத்து உறவினன் என்பதை பேச்சின் ஊடே ஓரிரு முறைகள் சொன்னார். சினிமா சம்பந்தமான பழமையான பொருட்களை சேகரித்து வைப்பதாகவும்  1944ல் வந்த ஒரு தமிழ்ப் படத்தின் பிலிம் சுருளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகச் சொன்னார். ரத்தக்கண்ணீர் பிலிம் சுருளை பாதுகாத்து அது பாழாய்ப்போனதால் தூக்கி எறிந்துவிட்டதாகவும் கமல் கூட நம்மவர் பிலிம் ரோல் இருக்கான்னு கேட்டதாகவும் சொன்னார்.

 பஞ்சதந்திரத்தில் நடித்தவர்களில் நான்கு பேர் கும்பகோணம் பக்கம் என்றும் சொன்னார். மேலும் பஞ்சதந்திரம் படம் கே.பி. அவர்கள் பார்த்துவிட்டு தனக்குப் போன் பண்ணி அப்பா பேசுறேன்டா என்றதும் எதற்கோ திட்டத்தான் கூப்பிடுறார் என்று நினைக்க, நீ நல்லா நடிச்சிருக்கேடா... காலையில வீட்டுக்கு வாறேன் என்றார். அதேபோல் காலையில் வந்து வசனமெல்லாம் நல்லா பேசியிருக்கேடா என்று சந்தோஷப்பட்டார். நான் எழுதுன வசனத்தை நான் நல்லா பேசமா வேற யார் பேசுவா என்றதும் கட்டிப்பிடித்து வாழ்த்தினார் என்றும் சொன்னார்.  

100 கலைஞர்களை அறிமுகம் செய்தவர் அவர், அவரின் அறிமுகங்கள் எல்லாம் நூறு படங்களுக்கு மேல் நடித்து ஸ்டார் ஆனவர்கள். என்னையும் நடிக்க வைத்தவர் அவர்தான். 1981-ல் 9 படங்கள் எடுத்தவர் பாலச்சந்தர் என்ற விபரத்தையும் சொன்னார். மூன்றுமுடிச்சு படத்துல மேலிருந்து இறங்கி வரும் ரஜினியை கீழிருந்து மேலே போவது போல் காட்டுவார். கமலுக்கு 35 படங்கள்... கமலைப் பட்டை தீட்டி பட்டை தீட்டி... செதுக்கியவர். ரஜினியை எம்.ஜி.ஆராகவும் கமலை சிவாஜியாகவும் மாற்றிக் காட்டுறேன் என்று சொல்லிச் செய்தவர் அவர். ஒரு படியில் முன்னுக்கு வந்தவர் ரஜினி.... படிப்படியாக முன்னுக்கு வந்தவர் கமல் என்றும் முத்தாய்ப்பாய்ச் சொல்லி வைத்தார். 

நையாண்டி தர்ப்பார் என்னைப் பண்ணச் சொன்னவரே அவர்தான் என்றவர் சினிமாவில் கேமராவைத் தூக்கிக் கொண்டு நகரத்தில் இருந்து கிராமத்துக்குப் போனவர் பாரதிராஜா, எங்களைவிட அவருக்கு கேபி பற்றி இன்னும் நெருக்கமாய்த் தெரியும் என்றார். திரைப்படம் சம்பந்தமான நிறைய உலக விஷயங்கள் பற்றிப் பேசினார்.. எங்களுக்கு அருகே குழந்தைகள் விளையாண்டு கொண்டிருந்த சப்தத்தில் அவரின் வேகமான பேச்சை கேட்கமுடியவில்லை. கேட்டவரை ஓரளவுக்கு இங்கு கொடுத்திருக்கிறேன். என்னை பேச விட்டால் பேசிக் கொண்டேயிருப்பேன் ஆனால் நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன் என்று தனது அறிவுப்பூர்வமான பேச்சை முடித்து அமர்ந்தார்.

பதிவின் நீளம் கருதி, திரு. டெல்லிகணேஷ் மற்றும் பாரதிராஜாவின் பேச்சுக்களின் தொகுப்பு அடுத்த பகிர்வுகளாக...


அபுதாபியில் அபூர்வராகம் - 1 10988744_10204958276131003_1375741272_o
(அரங்கத்தில் மக்கள் வெள்ளம்)

மனசின் துளிகள் சில :

மிகச் சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்யும் பாரதி நட்புக்காக அமைப்புக்கு முதலில் பாராட்டுக்கள்.

*  ரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்... விழாக்குழுவினரை அபுதாபி இந்தியன் பள்ளியில் நடத்தியிருக்கலாமோ என்று சிந்திக்க வைத்திருக்கும்.

* ண்ணன் கில்லர்ஜி விழாவுக்கு வந்திருந்தார்... நண்பரின் குழந்தைகளுக்காக விழா முடியுமுன்னரே கிளம்பிவிட்டார். சந்தித்தோம் என்றாலும் இருவரும் அதிகம் பேசிக் கொள்ள முடியவில்லை. இங்கதானே இருக்கார்... அப்புறம் பார்க்கலாம் என நானும்... அவசரமாகப் போகிறேன் என அவரும்... இருந்த சூழலால் இருவரும் இணைந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை.

*  ராஜேஷ் வைத்யாவின் இசைக்கு ஆண், பெண் என்றில்லாமல் அனைவரும் தலையாட்டி சில சமயங்களில் எழுந்து கைதட்டி ரசித்தனர். பெரும்பாலும் கர்நாடக சங்கீதம் வீணை இசையெல்லாம் குறிப்பிட்டவர்களே ரசிப்பார்கள் என்ற நிலை இன்னும் இருக்கிறது. ஆனால் இங்கு வீணையில் ராஜா, ரஹ்மானின் ராகங்கள் வந்தபோது அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். 
(துளிகள் தொடரும்)


-திரு. டெல்லி கணேஷின் உரை நாளை மாலை பகிரப்படும்.

அழகிய படங்கள் உதவி : திரு. சுபஹான் அண்ணன்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அபுதாபியில் அபூர்வராகம் - 1 Empty Re: அபுதாபியில் அபூர்வராகம் - 1

Post by Nisha Tue 24 Feb 2015 - 1:15

அழகான அரங்கம்,  இயல்பான லைட்டிங்க் வசதியோடு மாடிவசதியுமாய்  அனைத்தையும் ஒரே பிரேமுக்குள் கொண்டு வந்த  புகைப்படக்காரருக்கு என் பாராட்டுகள். 

வாராவாரம் விழாக்கள், விருந்துகள் என  வெவ்வேறு பட்ட விழா மண்டபம் செல்வதனாலோ என்னமோ  இப்படியான அரங்குகள், மேடைகள் என்னை சட்டென கவர்ந்து விடும். 

 குமார் இருக்கும் வேலைப்பழுவிலும் இம்மாதிரி நிகழ்வுகளை கண்டு ரசிக்க செலவதோடு  அதை குறித்த பக்கம் பக்கமாக விமர்சனமும் எழுத முடிகின்றதே என  உங்களை குறித்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.  இணைய நட்பில்  எனக்கு அறிமுகமானவர்களில் நீங்கள் வித்தியாசமாய் என் இலக்கிய தாகம் தீர்க்கும்  திறனோடு  இருப்பதை  காண்கின்றேன் . 

தனிப்பட உங்களுடன் உரையாட நேரம் அமையாத படியாய்  சூழல் இருக்கின்றது. பேசணும்பா, நேரமும் காலமும் வாய்க்குமானால் நாம் பேசுவோம். 

விழா குறித்த ஆரம்ப விமர்சனம் அருமை, அசத்தல் என ஒரு வரியில் சொல்லிட இயலாதபடி  மிகசிறப்பாய் இருக்கின்றதுப்பா!

 நன்றி! நன்றி.. இன்னும் இன்னும் எழுதுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அபுதாபியில் அபூர்வராகம் - 1 Empty Re: அபுதாபியில் அபூர்வராகம் - 1

Post by சே.குமார் Tue 24 Feb 2015 - 15:27

Nisha wrote:அழகான அரங்கம்,  இயல்பான லைட்டிங்க் வசதியோடு மாடிவசதியுமாய்  அனைத்தையும் ஒரே பிரேமுக்குள் கொண்டு வந்த  புகைப்படக்காரருக்கு என் பாராட்டுகள். 

வாராவாரம் விழாக்கள், விருந்துகள் என  வெவ்வேறு பட்ட விழா மண்டபம் செல்வதனாலோ என்னமோ  இப்படியான அரங்குகள், மேடைகள் என்னை சட்டென கவர்ந்து விடும். 

 குமார் இருக்கும் வேலைப்பழுவிலும் இம்மாதிரி நிகழ்வுகளை கண்டு ரசிக்க செலவதோடு  அதை குறித்த பக்கம் பக்கமாக விமர்சனமும் எழுத முடிகின்றதே என  உங்களை குறித்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.  இணைய நட்பில்  எனக்கு அறிமுகமானவர்களில் நீங்கள் வித்தியாசமாய் என் இலக்கிய தாகம் தீர்க்கும்  திறனோடு  இருப்பதை  காண்கின்றேன் . 

தனிப்பட உங்களுடன் உரையாட நேரம் அமையாத படியாய்  சூழல் இருக்கின்றது. பேசணும்பா, நேரமும் காலமும் வாய்க்குமானால் நாம் பேசுவோம். 

விழா குறித்த ஆரம்ப விமர்சனம் அருமை, அசத்தல் என ஒரு வரியில் சொல்லிட இயலாதபடி  மிகசிறப்பாய் இருக்கின்றதுப்பா!

 நன்றி! நன்றி.. இன்னும் இன்னும் எழுதுங்கள்.
வணக்கம் அக்கா...
தங்களின் நீண்ட மடலுக்கு நன்றி...
உங்களது நட்பும் அன்பும் கிடைத்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம்...
கண்டிப்பாக பேசுவோம் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அபுதாபியில் அபூர்வராகம் - 1 Empty Re: அபுதாபியில் அபூர்வராகம் - 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum