சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை Khan11

முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை

Go down

முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை Empty முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை

Post by ahmad78 Tue 17 Feb 2015 - 10:15

கூந்தல் :என்சைக்ளோபீடியா: ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை Ld3158

அதென்ன ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா?

முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னைக்காக சிகிச்சைக்கு வருகிறவர்களில் 100ல் 80 பேருக்கு  ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா பிரச்னை  இருப்பதைப் பார்க்க முடிகிறது. முடி உதிர்வு என்பது சிலருக்குப் பரம்பரையாகத் தொடரும். இது ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியா என்கிற  பிரச்னையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இந்தப் பிரச்னை உறுதி செய்யப்பட்டால் தீவிரமான, தொடர்ந்த சிகிச்சையின் மூலம் சரி செய்ய  முடியும். இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்னை.

இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு முன்னந்தலை நெற்றிப் பகுதியில் வழுக்கை விழ ஆரம்பிக்கும்.  கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்கி, அதிலிருந்து  வெளிக் கிளம்பும் முடியானது மெலிந்து, உயிரே இல்லாமல் இருக்கும். நமக்கு தலையில் உள்ள முடிகளை டெர்மினல் ஹேர் (Terminal hair)  என்றும், உடலின் மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை வெலஸ் ஹேர் (Vellus hair) என்றும் சொல்கிறோம். தலையில் உள்ள முடியானது  அடர்த்தியாகவும், உடல் ரோமங்கள் மெலிந்தும் காணப்படுவது இயற்கை. மேலே குறிப்பிட்டபடி கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்கி, முடி மெலியத்  தொடங்கும் போது தலையில் உள்ள முடியும் உடல் ரோமங்களைப் போலவே மெலிய ஆரம்பிக்கும்.

கூந்தல் உதிர்வுக்கான காரணங்களை சீக்கிரமே கண்டுபிடிப்பதும், முறையான சிகிச்சைகளைத் தொடங்குவதும் கூந்தல் உதிர்வைத் தீவிரமாக்காமல்  தடுக்கும். முடி உதிரும் அளவு, அதற்கான சிகிச்சையைத் தொடரக்கூடிய மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தே அதன் வெற்றி அமையும்.  ஆண்ட்ரோஜெனிக் அலோபேஷியாவை பொறுத்தவரை வெளிப்புற சிகிச்சை எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இயற்கை பொருட்களால்  செய்யப்பட்ட சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும்  அவசியமாகும். வைட்டமின், பயோடின், அமினோ அமிலங்கள், கஃபைன்,  மெலட்டோனின், தாதுச் சத்துகள், ஆன்ட்டி ஆண்ட்ரோ ஜெனிக் அல்லது ஈஸ்ட்ரோஜெனை தூண்டும் மூலிகைகள் போன்றவற்றை உள்ளுக்கு
எடுத்துக் கொள்ளச் சொல்வதே முதல் கட்ட சிகிச்சையாக இருக்கும்.

மினாக்சிடில், ஃபினாஸ்டெரைட் போன்ற மருந்துகள் இந்தப் பிரச்னைக்கு ஓரளவுக்குப் பலன் தரும். ஃபினாஸ்டெரைட் எடுத்துக் கொள்ளும் போது சில  பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியாது. கிரேப் சீட் எனப்படுகிற திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் சாரத்துக்கு ஆண்ட்ரோஜெனிக்  அலோபேஷியாவுக்கு எதிராகப் போராடும் குணம் உண்டு. நாம் திராட்சை சாப்பிடும் போது அதன் விதைகளைத் துப்பிவிடுவோம். அப்படித் துப்பும்  விதைகளுக்குத் தான் எத்தனை மகத்துவம் எனப் பாருங்கள்...

அடுத்தது கிரீன் டீ  வைட்டமின் சியில் உள்ளதைவிட 20 மடங்கு அதிக ஆன்ட்டி ஆக்சிடேஷன் சக்தி கொண்டது கிரீன் டீ. இதில் உள்ள ணிநிசிநி  (Epi Gallo Catechin Gallate) and ECG (Epi Catechin Gallate) ஆகிய என்சைம்களுக்கு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் குணம் உள்ளது  நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கூந்தலின் வேர்க்கால்கள் சுருங்குவதைத் தவிர்த்து, உள்ளிருந்து கிளம்பும் முடியையும் அடர்த்தியாக வளர வைக்கும்.

மினாக்சிடில் மற்றும் புரோட்டின் சீரம் போன்றவற்றை வெளிப்புறமாக தடவிக் கொள்வதும் பலனளிக்கும். மீசோதெரபி போன்ற சிகிச்சைகளில் மருந்து  மற்றும் வைட்ட மின்கள் கன் போன்ற ஒரு கருவியின் மூலம் அல்லது டெர்மா ரோலர்கள்   மூலம் மண்டைப் பகுதிக்குள் செலுத்தப்படும். இந்த  சிகிச்சையும் மிகப் பெரிய பலனைக் காட்டும். சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வருகிற பிஆர்பி (பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா) சிகிச்சையும் கூந்தல்  உதிர்வுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். ட்ரைகாலஜிஸ்ட் ஆலோசனையின் பேரில் அதையும் முயற்சி செய்யலாம்.

ஊசி மூலம் ஸ்டெம் செல்களைச் செலுத்தி கூந்தலின் வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிக்கிற சிகிச்சையும் ரொம்பவே லேட்டஸ்ட். லோ இன்டென்சிட்டி  டியோட் லேசர், லைட் எமிட்டிங் டியோட் மற்றும் ஹை ஃப்ரீக்வன்சி சிகிச்சைகளும் இந்தப் பிரச்னையில் ஓரளவு உதவும். லோ லெவல் லேசர்  ஸ்டிமுலேஷன் எனப்படுகிற சிகிச்சையில் உமிழப்படுகிற ஒளியானது மண்டைப் பகுதியைப் பாதிக்காதது. அதனாலேயே அதற்கு ‘கோல்ட் லேசர்’  என்கிற பெயரும் உண்டு. இதிலிருந்து வெளியேறுகிற கண்களுக்குத் தெரியாத சிவப்பு ஒளியானது திசுக்களின் பல அடுக்குகள் வரை  ஊடுருவக்கூடியது. அது சருமத்தை எந்த வகையிலும் பாதிக்காதது.

அதிலிருந்து வெளியேறுகிற ஒளியானது செல்களால் கிரகிக்கப்பட்டு, பழுதடைந்த செல்கள் சீரடையும் வேலை தூண்டப்படும். இந்த சிகிச்சையானது  செல்களின் ஆற்றலைத் தூண்டி, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தும். இத்துடன் கூடவே சில ஊட்டங்களும் ஆக்சிஜனும் சேர்த்துக்  கொடுக்கப்படும். லேசர் சிகிச்சை கொடுக்கும் போது ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும். கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். காலையில்  எழுந்ததும் நீங்கள் முதலில் கண்ணாடியில் உங்கள் தோற்றத்தைப்  பார்க்கும் போது உங்களுக்கு கவலையோ, வருத்தமோ மேலிடக் கூடாது.  புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் உணர வேண்டும். அப்போது தான் உங்கள் மனம் கவலையின்றி, பதற்றமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக  அர்த்தம். மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க மண்டைப் பகுதி முடியற்ற மைதானமாக மாறிவிடும். எனவே DON’T WORRY, BE HAPPY.


http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3160


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum