Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
4 posters
Page 1 of 1
மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
சகோதரர் ரூபன் மற்றும் திரு. யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய சிறுகதை மூன்றாம் பரிசுக்குரிய கதையாக தேர்வாகியிருக்கிறது. அடிக்கடி போட்டிகள் நடத்தினாலும் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களாக சிறப்பாக பணியாற்றிய திரு. ரமணி ஐயா, திரு.புவனேந்திரன், திண்டுக்கல் தனபாலன் அண்ணா ஆகியோருக்கும், கில்லர்ஜி அண்ணன், திரு. அ.பாண்டியன், திரு. இராஜமுகந்தன், திருமதி. அ,இனியா உள்ளிட்ட ஆலோசனைக் குழுவுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சென்றவார பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்து இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையில் தொடர்ந்து நான்காவது வாரமாக எனது எழுத்து இடம் பிடித்திருக்கிறது. மக்கள் மனசு பகுதியை சிறப்பாகத் தொகுத்துவரும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள்.
மீண்டும் அபுதாபிக்கு வந்தாச்சு... அலைனில் இருக்கும் போது ஏழு மணிக்கு அலுவலகம் சென்றால் மூணு மணிக்கெல்லாம் அறைக்குத் திரும்பிவிடுவேன். நிறைய நேரமிருந்தது. இங்கு இந்த இரண்டு மாதத்தில் ஒரு பாகிஸ்தானியும் மலையாளியும் சேர்ந்து எல்லாத்தையும் மாற்றி வைத்துவிட்டார்கள். இங்கும் காலை 8 மணி முதல் 5 மணி வேலை செய்கிறோம் என்று சொல்லித் தொலைத்து விட்டார்கள். அங்கிருந்து வந்த முதல் நாள் எப்பவும் போல் 7 மணிக்குச் சென்றால் எவனையும் காணோம். நம்ம பயலுக 8 மணிக்கு மேல் வர, எகிப்துக்காரனுங்க எல்லாம் 9 மணிக்குத்தான் வந்தானுங்க. வந்ததும் அவனிடம் கேட்டால் இங்கு 8 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றான். மதியம் சாப்பிடப் போனால் என்றதும் 6 மணி வரைக்கும் இருக்கணும் என்றான். எனக்கும் அவனுக்கும் சண்டை... முடிஞ்சதைப் பாருடா என்று சொல்லிவிட, பின்னர் மெதுவாக சமாதானம் ஆனான்.
அவனது பணிகளையும் கடந்த இரண்டு வருடமாக நான் செய்வதால் இப்போது என்னிடம் மட்டும் கொஞ்சம் குழைந்து பேசுவான். சென்ற வாரத்தில் ஒரு நாள் சான்றிதழ் பணிக்காக அபுதாபி கல்வி அமைச்சகம் சென்று வந்தேன். எங்கே போனாய் என்றான். இண்டர்வியூ போனேன்... தேர்வாகிவிட்டேன். வேலை ஓகேதான்... கத்தாராச்சும் சவுதியாச்சும் போகச் சொல்றான் என்றதும் ஏன் போறே... அங்கெல்லாம் செலவு அதிகம்... அப்படியிப்படின்னு புலம்பித் தீர்த்துட்டான். எனக்கு மேலே இருக்கும் எகிப்துக்காரன் கொஞ்சம் நல்லவன்... கொஞ்சம் கெட்டவன்... சில நேரம் அவனுக்காக பரிவு தோணும்.. சில நேரம் நம்ம பிறவிக்குணம் அவனுக்கிட்ட எகிறும். உடனே உனக்கு ரொம்பக் கோபம் வருது. குறைச்சிக்க என்று வந்து தடவிக் கொடுப்பான். இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கு.
கடந்த ஒரு வாரகாலமாக விஷாலுக்கு காய்ச்சல்... மதுரை வந்திருக்கிறார்கள்... மருத்துவமனையில் காட்டியும் 101-ல் இருந்து குறையவேயில்லை. நேற்று மருத்துவமனையில் சேர்த்தாச்சு. மருத்துவ பரிசோதனையில் டைபாயிடு காய்ச்சல் என்பது உறுதியாக நேற்று முதல் மருத்துவமனையில் குளூக்கோஸ் ஏறி வருகிறது. மருந்துகளை எல்லாம் நரம்பில் செலுத்தி வருகிறார்கள். அவனுக்கு முடியாமல் வந்ததில் இருந்து வலைப்பக்கமும் முகநூல் பக்கமும் அதிகம் வரவில்லை. இன்று காலை என்னிடம் பேசினான். இப்போது பரவாயில்லை.
அஜீத்துக்கு ஆண் குழந்தை பிறந்த அன்று சகோதரர் ஒருவர் போன் பண்ணி பேசினார்... நீங்க தல ரசிகருல்ல ட்ரீட் கொடுங்க என்றார். ஒன்றும் சொல்லாமல் நான் எதுக்கு ட்ரீட் தரணுமின்னு சில வார்த்தைகளைச் சொல்லிட்டு விட்டுட்டேன். அன்று மாலை ஒரு நண்பர் போன் பண்ணி ட்ரீட் எப்போ என்றார். எதுக்கு என்றேன்.... என்ன உங்க தலக்கு பிள்ளை பிறந்திருக்கு... அதுவும் ஆம்பளைப் பிள்ளை... பெரிய ட்ரீட்டாக் கொடுங்க என்றார். என்னோட பிள்ளைங்க ஸ்கூல் போகுதுங்க... அதுகளுக்கு இப்போ பிறந்தநாளும் இல்லையே என்றேன் சிரிக்காமல்... நீங்க தலயோட தீவிர ரசிகர்... அவரோட படத்துக்குத்தான் போவீங்க... அப்ப குழந்தை பிறந்ததுக்கு டீரீட் கொடுக்கலைன்னா எப்படி என வசனம் பேசினார்... ஏலே... நீ திங்கணுமின்னா வா... போயி தின்போம்... எவனுக்கோ பிள்ளை பொறந்துக்கு எனக்கிட்ட ட்ரீட் கேக்குறே... கொய்யால... என்னவோ எனக்குப் பிள்ளை பிறந்த மாதிரின்னு கொஞ்சம் சப்தமாகப் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை இறக்கவும்... ஐயா... எனக்கு ட்ரீட்டே வேண்டாம்.. தெரியாமக் கேட்டுட்டேன்... ஆளை விடுங்க சாமி என்று போனை வைத்தவர்தான் அதன் பிறகு கூப்பிடவேயில்லை.
காக்கிச் சட்டை படம் பார்த்தேன். இணையத்தில் வந்த நல்லாயிருக்கு என்ற விமர்சனங்கள்தான் படத்தைப் பார்க்க வைத்தது. விறுவிறுப்பு இல்லாத கதை... நர்ஸாக இருக்கும் நாயகி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். இந்தளவுக்கு விவரமான நர்ஸை எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. சிவகார்த்திகேயன் இந்தக் கெட்டப்பு, இந்தப் பேச்சு, இந்த நடனம் என எல்லாவற்றையும் எப்போ விட்டொழித்து தன்னாலும் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்று காட்டப் போகிறாரோ தெரியவில்லை. அதிலும் சட்டையில் பட்டன் போடாமல் பாடலுக்கு ஆடுவதை நிறுத்தவே மாட்டாரு போல... முடியலை... விஜய் சேதுபதி மிகச் சிறந்த நடிகன்... ஆனால் எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சிவகார்த்திகேயனைத்தான் என்பது வருத்தமான விஷயம் என்பதை இந்தப் படம் பார்க்கும் போது உணர்ந்தேன். என்னை அறிந்தால்படத்தின் கதையை ஒத்த கதையாக இருந்தாலும் அதில் இருந்த ஒரு விறுவிறுப்பு இதில் இல்லை. சிவகார்த்திகேயன் தன்னை மாற்றிக் கொண்டால் நிலையான இடத்தைப் பிடிக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
arumai arumai kumar
makkal manasu unga pathil romba
pakya puththagam padikka nalla irukkum. vaanganumnu ninaipen maranthuruven.
cinema vimarsanam nalla solringa
makkal manasu unga pathil romba
pakya puththagam padikka nalla irukkum. vaanganumnu ninaipen maranthuruven.
cinema vimarsanam nalla solringa
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
KUMAR KAVANMAKULANTHAIYA PARUNGA ENGA PARTHALUM VIRUS FEEVER IRUKKU .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
அட, பானு விசாலும் ஸ்ருதியும் குமாரின் குழந்தைகள்ப்பா! மூத்தவள் ஸ்ருதி. இளையவன் விசால்.! அப்படித்தானே குமார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
வணக்கம் சகோதரி...பானுஷபானா wrote:arumai arumai kumar
makkal manasu unga pathil romba
pakya puththagam padikka nalla irukkum. vaanganumnu ninaipen maranthuruven.
cinema vimarsanam nalla solringa
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
வணக்கம் அக்கா...Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
டைபாய்டு காய்ச்சல்... நாளை வரை ஹாஸ்பிடலில் இருக்கணும்.
மதுரையில் அவங்க அம்மா வீட்டுக்கு வந்தோது காய்ச்சல் என்பதால் அங்கு மாமாவுக்கு தெரிந்த நண்பரின் மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள்.
காலையில் பேசினான்... இப்போ காய்ச்சல் குறைந்திருக்கிறதாம்... இன்னும் குளுக்கோஸ் போய்க்கொண்டிருக்கிறது. அக்கா...
தங்கள் மைந்தரின் உடல் நலம் பாருங்கள் அக்கா...
விசாரித்ததற்கு நன்றி அக்கா....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
குமார் என்ன எழுதினாலும் கதைதான் எழுதுவான்னு நினைச்சிட்டீங்களே சகோதரி :)பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
நேற்று எல்லாச் செக்கப்பும் செய்தாச்சு... டைபாய்டு ரத்தத்தில் கலந்திருக்காம்... அதனால் நரம்பில் மருந்து ஏற்று கிறார்கள். இப்போ நல்லாயிருக்கான்.... என்னிடம் பேசினான்... படம் வரைந்து கொண்டு இருக்கிறார்...பானுஷபானா wrote:KUMAR KAVANMAKULANTHAIYA PARUNGA ENGA PARTHALUM VIRUS FEEVER IRUKKU .
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
ஆமா அக்கா...Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
அட, பானு விசாலும் ஸ்ருதியும் குமாரின் குழந்தைகள்ப்பா! மூத்தவள் ஸ்ருதி. இளையவன் விசால்.! அப்படித்தானே குமார்!
நம்ம செல்லங்களில் மூத்தது நித்யா (எப்பூடி), இடையில் ஸ்ருதி, கடைக்குட்டி விஷால்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
ஓஹோ மூத்தது நித்தியாவா?
பையனுக்கும் சீக்கிரம் சரியாகிரும் பா! இங்கே குளிருக்கு வருடா வருடம் வரும் வைரஸ் பிரச்சனை . ஒருத்தருக்கு வந்தால் அடுத்தவருக்கு தொடர்ந்து உயிரை வாட்டி விட்டுத்தான் போகும். இப்ப எங்க வீட்டில் மகனுக்கு கடைசியா வந்திருக்கு .
பையனுக்கும் சீக்கிரம் சரியாகிரும் பா! இங்கே குளிருக்கு வருடா வருடம் வரும் வைரஸ் பிரச்சனை . ஒருத்தருக்கு வந்தால் அடுத்தவருக்கு தொடர்ந்து உயிரை வாட்டி விட்டுத்தான் போகும். இப்ப எங்க வீட்டில் மகனுக்கு கடைசியா வந்திருக்கு .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
ஆமாம் அக்கா...Nisha wrote:ஓஹோ மூத்தது நித்தியாவா?
பையனுக்கும் சீக்கிரம் சரியாகிரும் பா! இங்கே குளிருக்கு வருடா வருடம் வரும் வைரஸ் பிரச்சனை . ஒருத்தருக்கு வந்தால் அடுத்தவருக்கு தொடர்ந்து உயிரை வாட்டி விட்டுத்தான் போகும். இப்ப எங்க வீட்டில் மகனுக்கு கடைசியா வந்திருக்கு .
நித்யா மனைவி... மூத்த பிள்ளைதானே...
விஷால் நலம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
அட, பானு விசாலும் ஸ்ருதியும் குமாரின் குழந்தைகள்ப்பா! மூத்தவள் ஸ்ருதி. இளையவன் விசால்.! அப்படித்தானே குமார்!
oh appadiyaa enaku theriyathu nisha.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
சே.குமார் wrote:குமார் என்ன எழுதினாலும் கதைதான் எழுதுவான்னு நினைச்சிட்டீங்களே சகோதரி :)பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
ungalaip patri theriyathau athanaal keten kumar .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
கடந்து வந்த பாதை சிறப்பாக அமைகிறது
சினிமா விமர்சனம் இன்னும் சிறப்பு
சிவாவின் வளர்ச்சி இன்னும் மேலே செல்லும் என்பது உறுதி
சினிமா விமர்சனம் இன்னும் சிறப்பு
சிவாவின் வளர்ச்சி இன்னும் மேலே செல்லும் என்பது உறுதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
நானும் சும்மாதான் கேட்டேன் சகோதரி.பானுஷபானா wrote:சே.குமார் wrote:குமார் என்ன எழுதினாலும் கதைதான் எழுதுவான்னு நினைச்சிட்டீங்களே சகோதரி :)பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! விசால் இப்ப எப்படிப்பா இருக்கின்றான்?
இப்பவும் ஹாஸ்பிடலில் தானா இருக்கின்றான். கவனமா பார்த்துக்க சொல்லுங்கப்பா!
குழந்தைகளுக்கு வருத்தம் வந்தாலே நம்மால் ஏதும் செய்ய முடிவதில்லைத்தான். இங்கே என் மகனுக்கும் கொஞ்சம் உடல் நலமில்லைத்தான்.
VISHAL AVAR KULANTHAIYA YETHO KATHAI PATRI THAN SOLKIRAARNU NINAICHEN... :(
ungalaip patri theriyathau athanaal keten kumar .
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்
தங்கள் கருத்துக்கு நன்றி.நண்பன் wrote:கடந்து வந்த பாதை சிறப்பாக அமைகிறது
சினிமா விமர்சனம் இன்னும் சிறப்பு
சிவாவின் வளர்ச்சி இன்னும் மேலே செல்லும் என்பது உறுதி
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|