சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இப்படியும் சில மனிதர்கள் Khan11

இப்படியும் சில மனிதர்கள்

2 posters

Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty இப்படியும் சில மனிதர்கள்

Post by Nisha Thu 19 Mar 2015 - 23:19

ரமேஷ் : இல்ல... நீ என்னை மறந்துட்டு, வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கணும்! பெண் : அப்படி சொல்லாதடா ரமேஷ்; எனக்கு நீ வேணும்டா!


ரமேஷ் : இங்க பாரு... நீ என் மேல வைச்சிருக்கிற அன்பு உண்மைன்னா, மறுக்காம சத்தியம் பண்ணு!


பெண் : (உடைந்து அழுகிறார்)


சென்னையை சேர்ந்த 28 வயது ரமேஷ், ஆசை ஆசையாய் காதலித்த பெண்ணிற்கு திருமணமாகி, 4 மாதங்கள் ஆகிறது!


எப்படி ரமேஷ், இப்படி ஒரு முடிவுக்கு உங்களால வர முடிஞ்சது?


'அவளாவது நல்லா இருக்கட்டும்'னு நினைச்சேன் சார்.

மெலிந்த தேகம், கலைந்த கேசம், மஞ்சள் பூத்த கண்கள், உப்பிய வயிறு, வீங்கிய கால்கள்... மூச்சுவிட சிரமப்பட்டபடி பரிதாபமாய் அமர்ந்திருக்கிறார் ரமேஷ். கலங்கி நிற்கும் அந்த கண்களில், இன்னும் அந்த காதல் மிச்சமிருக்கிறது! 'வாரத்துக்கு ரெண்டு நாள், 'டயாலிசிஸ்' பண்ணணும். இந்த வாரத்துல, இது ரெண்டாவது தடவை...' ரமேஷின் தோள் தொட்டு, ஆறுதலாய் சொல்கிறார் அவரது நண்பர் சண்முகம்.

கடந்த, 2013 பிப்ரவரி வரை, 26 வயது இளைஞனுக்கு உரிய எல்லா சந்தோஷங்களும், ரமேஷிடமும் இருந்தன. எமனாய் வந்தது, பின்னந்தலையில் அந்த வலி! மருத்துவ பரிசோதனையின் முடிவு, இரண்டு சிறுநீரகங்களும் தானாகவே செயலிழந்து விட்டதாக சொல்ல, ரமேஷின் வாழ்க்கையை இருள் சூழ்ந்தது. இரண்டே தீர்வுகள்தான்! ஒன்று, மரணம் வரைக்கும், 'டயாலிசிஸ்' எனப்படும், 'ரத்த சுத்திகரிப்பு' செய்து கொள்ள வேண்டும்; மற்றொன்று, 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை' மேற்கொள்ள வேண்டும் - மருத்துவர்கள் இப்படிச் சொன்னதும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறார் ரமேஷ். ஆனால், அதற்கான செலவு அவரை மிரள வைத்திருக்கிறது. அதனால், 'டயாலிசிஸ்' தொடர்ந்து கொண்டிருக்கிறது; நோயும் முற்றிக் கொண்டே இருக்கிறது.

* இந்த நோய் வந்ததுக்கப்புறம்...?


'பணம் இருந்தா மட்டும்தான் வாழ்க்கை'ன்னு தெரிஞ்சுக்கிட்டேன் சார்! 2008ல, கல்லூரி படிப்பு முடிச்சதுக்கப்புறம், சென்னை, பெங்களூரு, டில்லின்னு வேலை பார்த்தேன். மாச சம்பளம் 25 ஆயிரம் ரூபாயை, தண்ணியா செலவு பண்ணினேன். அப்ப தெரியலை, இது மாதிரி ஒரு பிரச்னை வரும்னு! சேமிக்கணும் சார்... சம்பாதிக்கிற காசுல கொஞ்சமாவது சேமிக்கணும். இல்லேன்னா, பெத்த தாய், தகப்பன் கூட மதிக்க மாட்டாங்க; உடல்ரீதியா இப்ப நான் அனுபவிக்கிற வேதனையை விட, மனரீதியா நான் அனுபவிக்கிற அந்த வேதனை தான் அதிகம்!

கடந்த 2011ல், ரமேஷின் அம்மா, கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்திருக்கிறார். அவரது சிகிச்சைக்காக செலவு செய்து, அவரை காப்பாற்ற முடியாமல் போன விரக்தியில், ரமேஷின் மருத்துவ சிகிச்சைகளை, 'அர்த்தமற்றது' என்று நினைக்கிறாராம் அவரது அப்பா. உடன் பிறந்த அண்ணனின் சொற்ப வருமானமோ, அவரது குடும்ப செலவுகளுக்கே சரியாக இருக்கும் நிலையில், சண்முகம் உள்ளிட்ட உயிர் நண்பர்கள் தரும் பணம்தான், 'டயாலிசிஸ்' செய்ய வரும் ரமேஷின் போக்குவரத்து செலவிற்கு பயன்படுகிறது. 'முட்டை, பால் எல்லாம் சேர்த்துக்கணும்னு டாக்டர் சொல்றாங்க; ஆனா, அதுக்கு வசதியில்லை சார்' விரக்தியாய் சொல்கிறார் ரமேஷ்.

* ஆக, மனுஷனால விதியை ஜெயிக்க முடியாது இல்ல?


அப்படி இல்ல சார்... இந்த மாதிரி நண்பர்கள் இருந்தா நிச்சயம் ஜெயிக்கலாம்; ரெண்டு வருஷமா என் மரணத்தை தள்ளிப் போட்டுட்டு வர்றது என் நண்பர்கள் தான்!

சொல்லி முடிக்கும் முன்பே, ரமேஷின் கண்களில் எட்டிப் பார்க்கிறது கண்ணீர். உடனே துடைத்து விட, கைநீட்டுகிறது சண்முகத்தின் நட்பு.

* இந்த நிமிஷம் ரமேஷ் மனசுல என்னென்ன ஆசைகள் இருக்கு?


பெருசா ஒண்ணும் இல்லை; எனக்காக இப்படி கஷ்டப்படுற என் நண்பர்களுக்கு, நான் ஏதாவது திருப்பி செய்யணும். ஆனா, முடியுமான்னு தான் தெரியலை.

பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியுற்ற தன் நண்பன் சண்முகம், மீண்டும் தேர்ச்சி பெற்று வரும் வரை, தன் ஒரு வருட கல்லூரி படிப்பை தியாகம் செய்திருக்கிறார் ரமேஷ். அந்த தியாகம், அவர்களின் நட்பை ஆழமாக்கியிருக்கிறது. இன்று, தன் ஒரு சிறுநீரகத்தை தர முன் வருகிறார் சண்முகம். 'வேண்டாம்; நீ நல்லா இருக்கணும்' என, நட்போடு மறுக்கிறார் ரமேஷ்.

* எல்லாம் சரி ரமேஷ்... காதலை தியாகம் பண்ணினது சரியா?


எனக்கு உடம்பு முடியாத நேரத்துல, ஒரு தாயா இருந்து அவதான் பார்த்துக்கிட்டா; அப்படிப்பட்ட தாயை, வாழ்க்கை முழுக்க கஷ்டப்படுத்தி பார்க்கணும்னு நினைக்கிறது நியாயமா சார்?

ரமேஷின் இந்த கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை; கூடவே, இன்னொரு கேள்விக்கும்...


ஒரு 28 வயசு பையனுக்கு என்னென்ன ஆசைகள், கனவுகள் இருக்கும்னு, ஏன் சார் அந்த கடவுள் புரிஞ்சுக்க மாட்டேங்குறார்?

ஒரே ஒரு வார்த்தையில்...


யாராவது உங்களை குணப்படுத்த வந்தால்...?


ரமேஷ்: வருவாங்களா?

பா. ரமேஷ் 97910 10234
http://www.dinamalar.com/news_detail.asp?id=1210449


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty Re: இப்படியும் சில மனிதர்கள்

Post by Nisha Thu 19 Mar 2015 - 23:19

இப்படியும் சில மனிதர்கள் 11071505_935421633157081_4924476411798798254_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty Re: இப்படியும் சில மனிதர்கள்

Post by சே.குமார் Sat 21 Mar 2015 - 20:57

வருத்தமான விஷயம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty Re: இப்படியும் சில மனிதர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum