சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கோபம் Khan11

கோபம்

+3
*சம்ஸ்
Nisha
சே.குமார்
7 posters

Go down

கோபம் Empty கோபம்

Post by சே.குமார் Tue 24 Mar 2015 - 20:51

''எதற்கெடுத்தாலும் கோபப்படுறதை முதல்ல நிப்பாட்டுங்க...'' என்றபடி அவன் தேடித்தேடி கடைசியில் கோபமடைய வைத்த நகவெட்டியை நீட்டியபடி சொன்னாள் சீதா. 

''வச்ச இடத்துல இருந்தா நான் ஏன் கோபப்படப் போறேன்'' 

''ம்... நம்ம குழந்தைங்க சின்ன வயசுங்க. விளையாட்டுத்தனமாக எடுத்து எங்கயாவது போட்டுடுங்க... பொறுமையா தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது. இல்லைன்னா அதுகளை கூப்பிட்டு அனுசரணையா கேட்டா சொல்லப் போறாங்க...  அதவிட்டுட்டு வீடே ரெண்டாப் போற மாதியா கத்துறீங்க. உங்க அம்மா சொல்ற மாதி உங்களுக்கு மூக்கு மேல தாங்க கோபம் வருது. சரி... சரி... நகத்தை வெட்டிட்டு குளிச்சுட்டு வாங்க சூடா தோசை வார்த்துத் தாரேன்...'' 

''ம்... நகத்தை வெட்டிட்டு ஷேவ் பண்ணிட்டுத்தான் குளிக்கப்போறேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... ஆபீசுக்குப் போற மாதி பறக்குறே...'' என்றான் மீண்டும் கோபமாக. 

''இப்பத்தானே சொன்னேன் அதுக்குள்ள எதுக்கு டென்ஷன். உங்களுக்கு லீவு தாங்க. ஆனா எனக்கு எல்லா நாளுமே ஒண்ணுதான். அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான் எனக்கு வேலை ஜாஸ்தி... தெரியுமில்ல... கொஞ்சம் சீக்கிரம் வாங்க'' 

''ம்... வர்றேன்...வர்றேன்...''

லுவலகத்தில் அவரவர் அரக்கப்பறக்க வேலை செய்து கொண்டிருந்தனர். 

''மிஸ்டர் சம்பத்... உங்களை எம்.டி. வரச் சொன்னார்'' என்றபடி வந்தார் எம்.டி.யை பார்த்துவிட்டு வந்த நாராயணன். 

''ம்... எதுக்கு...?'' 

''எனக்கென்னங்க தெரியும்... போய் பாருங்க...'' 

''மே ஐ கம் இன் சார்?''

''எஸ்... கம் இன்'' என்ற அழைப்புக்கு,  அவன் உள்ளே நுழைய...

''வாங்க... சம்பத் உட்காருங்க...'' என்றார் எம்.டி.

''தாங்க்யூ சார்'' என்றபடி அமர்ந்தான். 

''அந்த பான் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய கொட்டேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா...?'' 

''பண்ணிட்டேன் சார்...'' 

''ஓ.கே. அதை நம்ம பன்னீர்கிட்ட கொடுத்து ஒருதடவை சரிபார்த்துட்டு எங்கிட்ட தரச்சொல்லுங்க...'' 

''ஓ.கே. சார்...'' 

''அப்புறம் ஒரு விஷயம்.... நேத்து பியூன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டீங்களாமே...'' 

''ஆமா சார்... அவன் நடந்துக்கிட்ட விதம் அப்படி... காபி வாங்கிட்டு வந்து டேபிள் மேல வைக்கிறப்ப கொட்டிட்டான் சார். அப்ப எனக்கு வந்த கோபத்துல அவனை அறையணும் போல இருந்தது சார். ஆபீசாச்சேன்னு திட்டுனதோட நிறுத்திட்டேன்.'' 

''என்ன சம்பத்... வேணுமின்னா அவரு அப்படி செய்தாரு... ஏதோ கை தவறிடுச்சு... அவருக்கு உங்க அப்பா வயசிருக்கும்... அவரைப் போயி அவன் இவன்னு விளித்துப் பேசுறது நல்லா இல்ல... பர்ஸ்ட் கன்ட்ரோல் யுவர் செல்ப்... கோபத்தை குறைங்க. நானும் உங்க வயசுல உங்களை மாதித்தான் கோபப்பட்டேன்... அதனால நான் நிறைய இழந்தேன்... ஒரு நாள் எதுக்கு கோப்படுறோம்ன்னு தனிமையில யோசிச்சேன். அப்புறம் என்னை நானே மாத்திக்கிட்டேன்... இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கேன்னா அதுக்கு என்னை நானே மாத்திக்கிட்டது கூட ஒரு காரணம்... இப்ப நான் என்னோட அணுகுமுறையையே மாத்திக்கிட்டேன்.'' 

சந்துருவுக்கு மனசுக்குள் எவன் எவன் மீதோ கோபம் வந்தது. ஏன் தனக்கு முன்னால் லெக்சர் அடிக்கும் எம்.டி. மீது கூட கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு ''சாரி சார்... இனிமே இது மாதிரி நடக்காது சார்'' என்றான். 

''தட்ஸ் குட். அப்புறம் ஒரு விஷயம். இதை உங்க மனதைப் புண்படுத்தனும்ன்னு நெனச்சி சொல்லலை. உங்க கோபம் குறையணும்ன்னு தான் சொல்றேன். போன வாரம் நீங்க ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணி கொடுத்தீங்கல்ல ஞாபகம் இருக்கா... அதுல ரெண்டு மூணு இடத்துல மிஸ்டேக் இருந்தது... அதை உங்ககிட்ட கேக்காம நானே கரெக்ட் பண்ணி அனுப்பிட்டேன்...'' 

''சார்... என்னை கூப்பிட்டு சொல்லியிருக்கலாமே... கரெக்ட் பண்ணித் தந்திருப்பேனே. அது என்னோட தவறுதானே...'' 

''என்ன... உங்களை கூப்பிட்டு டோஸ் விடலையேன்னு கேக்குறீங்களா...? நான் கோபப்பட்டிருந்தா என்ன நடக்கும். அடுத்த தடவை நீங்க செய்யிற வேலையில அதிக சிரத்தை எடுக்கிறேன்னு தப்பு பண்ணிடுவீங்க... ஒரு தடவை தப்பு வர்றது சகஜம் தானே... உங்க வேலையில இதுவரைக்கும் தப்பே வந்தது கிடையாது. உங்க வேலையில நீங்க காட்டுற சிரத்தைய பார்த்து நான் நிறையத் தடவை பிரமிச்சிருக்கேன். நீங்க முதல் தடவை தப்பு பண்ணிருக்கீங்க. உங்க மனசில் ஏதாவது குழப்பம் இருந்திருக்கலாம். அதனால அதை நான் பெரிசா எடுத்துக்கலை''

சம்பத்துக்கு எங்கோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மனைவி, நண்பர்கள் என எல்லோரும் சொல்லியும் உறைக்காத ஏதோ ஒன்று உறைத்தது. 

எம்.டி.யிடம் விடை பெற்று வெளியே வந்தவன் எதிர்ப்பட்ட பியூனிடம் 'ஸாரி' என்று கையைப் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் வியப்பாய் பார்த்தனர்.

(2009-ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது மீள் பதிவாய்)

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by Nisha Tue 24 Mar 2015 - 20:58

ஆமாமா கோபம் தான் எல்லாத்துக்கும் எதிரி! எனக்கும் ரெம்ப கோபம் வரும். ஆனால் இப்ப கன்ரோல்’ பண்ணிக்கொண்டேன். முன்னர் சட்டென கோபம் வந்திரும்.

சின்னதப்புக்கும் கோபப்பட்டும் சத்தம் போடும் ஆட்களுக்கு நல்ல சாட்டையடிதரும் கதைப்பகிர்வு குமார்.

அருமையான எழுத்து நடையுடன் நல்ல படிப்ப்னை தரும் கதையை தந்தமைக்கும் நன்றிப்பா.!

இன்னும் எழுதுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by *சம்ஸ் Wed 25 Mar 2015 - 7:57

முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சார்.

 காரணம் என்னவென்றும் சொல்கிறேன்.  நான் அதிகமான கோபப்படுவேன்.  என் மனைவி எப்பவும் எனக்கு சொல்லும் ஒரு விடயம் உங்க கோபத்தை குறைங்க அது உடபிற்கு  நல்லதில்லை என்பது தான். 

நான் அதை கேட்பதில்லை என் நண்பர்கள் என்னிடம் சொல்லி உள்ளார்கள் கேட்டதில்லை இன்று உங்களின் கதை படித்ததும் எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்  நான் மாறவேண்டும் என்று என் மனசு சொல்கிறது என் கோபம் குறைய வேண்டும் நான் நல்லவனாக இருக்க வேண்டும் இன்ஷா  அல்லாஹ் நடக்கும் நடக்கனும்.

அருமையான கதை அறிவுப்பூர்வமான கதை நன்றி சார்.
 இன்னும் தொடருங்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் 
வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 18:47

Nisha wrote:ஆமாமா கோபம் தான் எல்லாத்துக்கும் எதிரி! எனக்கும் ரெம்ப கோபம் வரும். ஆனால் இப்ப  கன்ரோல்’ பண்ணிக்கொண்டேன்.  முன்னர்  சட்டென கோபம் வந்திரும்.  

சின்னதப்புக்கும் கோபப்பட்டும் சத்தம் போடும் ஆட்களுக்கு நல்ல சாட்டையடிதரும் கதைப்பகிர்வு குமார்.

அருமையான எழுத்து நடையுடன் நல்ல படிப்ப்னை தரும் கதையை தந்தமைக்கும் நன்றிப்பா.!

இன்னும் எழுதுங்கள்!
வணக்கம் அக்கா....
ஹா... ஹா... எனக்கும் இப்ப அதிகமா கோபம் வரத்தான் செய்யுது...
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by சே.குமார் Wed 25 Mar 2015 - 18:48

*சம்ஸ் wrote:முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சார்.

 காரணம் என்னவென்றும் சொல்கிறேன்.  நான் அதிகமான கோபப்படுவேன்.  என் மனைவி எப்பவும் எனக்கு சொல்லும் ஒரு விடயம் உங்க கோபத்தை குறைங்க அது உடபிற்கு  நல்லதில்லை என்பது தான். 

நான் அதை கேட்பதில்லை என் நண்பர்கள் என்னிடம் சொல்லி உள்ளார்கள் கேட்டதில்லை இன்று உங்களின் கதை படித்ததும் எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்  நான் மாறவேண்டும் என்று என் மனசு சொல்கிறது என் கோபம் குறைய வேண்டும் நான் நல்லவனாக இருக்க வேண்டும் இன்ஷா  அல்லாஹ் நடக்கும் நடக்கனும்.

அருமையான கதை அறிவுப்பூர்வமான கதை நன்றி சார்.
 இன்னும் தொடருங்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் 
வாழ்த்துக்கள்.
வாங்க சகோதரா....
முதலில் கோபத்தைக் குறைக்க நினைத்ததற்கு நன்றி.
தங்கள் கருத்துக்கும் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by நண்பன் Thu 26 Mar 2015 - 12:17

*சம்ஸ் wrote:முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சார்.

 காரணம் என்னவென்றும் சொல்கிறேன்.  நான் அதிகமான கோபப்படுவேன்.  என் மனைவி எப்பவும் எனக்கு சொல்லும் ஒரு விடயம் உங்க கோபத்தை குறைங்க அது உடபிற்கு  நல்லதில்லை என்பது தான். 

நான் அதை கேட்பதில்லை என் நண்பர்கள் என்னிடம் சொல்லி உள்ளார்கள் கேட்டதில்லை இன்று உங்களின் கதை படித்ததும் எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்  நான் மாறவேண்டும் என்று என் மனசு சொல்கிறது என் கோபம் குறைய வேண்டும் நான் நல்லவனாக இருக்க வேண்டும் இன்ஷா  அல்லாஹ் நடக்கும் நடக்கனும்.

அருமையான கதை அறிவுப்பூர்வமான கதை நன்றி சார்.
 இன்னும் தொடருங்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் 
வாழ்த்துக்கள்.

கோபம் என்ற தலைப்பில் அருமையான விழிப்புணர்வான கதை படித்தேன் மகிழ்ந்தேன்

சம்ஸ் சார் இப்போதெல்லாம் நீங்கள் கோபப்படுவது குறைவு என்பதை அன்று இரவு நான் அறிந்தேன் உங்கள் கோபம் இன்னும் குறைந்தால் அது எனக்கு சந்தோசமே நன்றி சம்ஸ்

சிறந்த கதைக்கும் குமார் அண்ணனுக்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by பானுஷபானா Thu 26 Mar 2015 - 13:44

nalla kathai kumar

enakum kovam athikama varum .... kattupaduththa thaan mudyala
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 15:08

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சார்.

 காரணம் என்னவென்றும் சொல்கிறேன்.  நான் அதிகமான கோபப்படுவேன்.  என் மனைவி எப்பவும் எனக்கு சொல்லும் ஒரு விடயம் உங்க கோபத்தை குறைங்க அது உடபிற்கு  நல்லதில்லை என்பது தான். 

நான் அதை கேட்பதில்லை என் நண்பர்கள் என்னிடம் சொல்லி உள்ளார்கள் கேட்டதில்லை இன்று உங்களின் கதை படித்ததும் எனக்குள் ஒரு மாற்றம் உணர்ந்தேன்  நான் மாறவேண்டும் என்று என் மனசு சொல்கிறது என் கோபம் குறைய வேண்டும் நான் நல்லவனாக இருக்க வேண்டும் இன்ஷா  அல்லாஹ் நடக்கும் நடக்கனும்.

அருமையான கதை அறிவுப்பூர்வமான கதை நன்றி சார்.
 இன்னும் தொடருங்கள் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் 
வாழ்த்துக்கள்.

கோபம் என்ற தலைப்பில் அருமையான விழிப்புணர்வான கதை படித்தேன் மகிழ்ந்தேன்

சம்ஸ் சார் இப்போதெல்லாம் நீங்கள் கோபப்படுவது குறைவு என்பதை அன்று இரவு நான் அறிந்தேன் உங்கள் கோபம் இன்னும் குறைந்தால் அது எனக்கு சந்தோசமே நன்றி சம்ஸ்

சிறந்த கதைக்கும்  குமார் அண்ணனுக்கு நன்றி

நிச்சயமாக நண்பா நீங்கள் மட்டுமன்றி என் குடும்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே இன்ஷா அல்லாஹ் அந்த கோபத்தை குறைக்கதான் முயற்சி செய்கிறேன் கண்டிப்பாக அல்லாஹ் எனக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். அல்லாஹ் மிகவும் கிருபையாளனாக இருக்கிறான், என்ற உண்மை உள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by Nisha Thu 26 Mar 2015 - 22:58

எனக்கொரு டவுட்டு. யாரும் தப்பாக புரிந்துக்காதிங்க!  கடவுள் நம்பிக்கை கட்டாயம் அவசியம் என்பது ஏனக்கு தெரியும்.  அதற்காக கடவுளை நம்பாதவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் எனவும் சொல்ல மாட்டேன். அப்படி இருக்க.. கோபப்படும் ஒருவர் தற்பொழுது கோபப்படவில்லை எனில் அதற்கான காரணங்களாய் வயது, அனுபவமுதிர்ச்சி, உலகறிவு என பல வரும்.  கடவுள் பொறுமையானவர்களுடன்  இருக்கின்றார் எனில் பொறுமை இல்லாத்வர்களை விட்டு விலகி விடுவாரோ? 

முற்காலத்தில் கோபப்பட்டபோது  கடஃவுள் அவருடன் இருக்கவில்லை என்றாகுமோ!?  மனித சுபாவங்கள் இயல்பானது எனும் போது  இப்படி  அனைத்தையும்  ஒரே நோக்கில் பார்ப்பது ஏன் என எனக்கு நிஜமாக புரியல்லப்பா!

கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிங்கள். இது தான் அடிப்படை. எனக்கும் கோபம் வரும். 
அநியாயம் ,, நீதியற்ற , நேர்மையற்ற காரியங்கள் நடக்கும் போது  ரெம்ப கோபம் வரும். புரியாமல்  தெரிந்தே தப்பு செய்பவர்களை கண்டால் கோபம் வரும்.   

அதே நேரம் இப்போது என்னில் நிரம்ப நிதானம் வந்தது உண்மையெனில் அதன் காரணம் என் அனுபவ முதிர்ச்சி.  உலகறிவு என்று தான் சொல்வேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by கமாலுதீன் Fri 27 Mar 2015 - 12:26

தவறாக புரிந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை. உங்களது கருத்தை தாங்கள் சொல்லியுள்ளீர்கள்.

இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்பதற்கு அவன் மற்றவர்களுடன் இல்லை என்பத பொருள் இல்லை. இறைவன் எங்கும் இருக்கிறான், எதிலும் இருக்கிறான். அவனை வணங்குபவர்களுக்கும் வணங்காதவர்களுக்கும், நிராகரிப்பவர்களுக்கும் அருள் புரிகிறான்.

ஒருவர் கோபப்படும் போதோ அல்லது பொறுமையை இழக்கும் போதோ அவனிடம் நற்குணங்கள் (இறைத்தன்மைகள்) அகன்றுவிடுகின்றன என்பதே அதன் பொருள்.

கோபப்படுவதில் தவறில்லை.அது எதற்கு எந்த அளவிற்கு என்பது அவசியம்.
வாழ்க்கையில் ஒரு சிறிதளவேனும் கோபமே கொள்ளாமல் 100% சகிப்புத்தன்மையுடன் வாழ்வது என்பது மிகமிக கடினம். ஒருவர் அவ்வாறு வாழ்ந்தால் அவரை இறைக்குணம் உடையவர் என்றோ, துறவி அல்லது சூஃபி என்றோ சொல்வோம்.

இறைத்தூதர்கள் கூட கோபப்பட்டுள்ளார்கள். ஆனால் அது அவர்களது சொந்த விஷயத்திற்காக அல்ல, அதர்மத்திற்கு எதிராகத்தான்.

கோபப்படும் மனிதர்களை இறைத்தூதர் நபியவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கின்றார்கள்.

முதல் வகையினர்; மிகத் தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவர்கள். ஆனால் வெகுவிரைவிலேயே நிதானநிலைக்குத் திரும்பி விடுவார்கள். இது ஒரு ரகம்.

இரண்டாம் வகையினர், மிக வேகமாக கோபத்திற்கு உள்ளவர்கள். ஆனால் வெகு தாமதமாகவே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இப்படியொரு ரகம்.

மூன்றாம் வகையினர், மிகவேகமாக கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல மிக விரைவிலேயே நிதான நிலைக்குத் திரும்புவார்கள். இது வேறொரு ரகம்.

நான்காம் வகையினர், மிக தாமதமாகவே கோபத்திற்கு உள்ளாவார்கள். அதே போல் வெகு தாமதமாகவே நிதான நிலைக்கு திரும்புவார்கள்.

இவர்களில் யார் மிக விரைவில் கோபப்பட்டு, வெகு தாமதமாக நிதான நிலைக்குத் திரும்புகிறாரோ, அவர் மனிதர்களில் ரொம்ப மோசமானவர். 

ஆனால் யார் மிக தாமதமாக கோபப்பட்டு உடனேயே அதற்காக வருத்தப்பட்டு மீண்டும் பழைய சகஜநிலைக்குத் திரும்பி விடுகிறாரோ, அவர் தான் இறைவனின் பார்வையில் தலைசிறந்தவர் ஆவார்.

(மனிதன் மிக பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளான் என இறைவனே வேதத்தில் குறிப்பிடுகிறான். அதில் யார் படைத்தவனிடம் சரணடைந்து தம்மை சீர்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறாறோ அவரே இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுகிறார்.)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 7:43

நன்றி கமாலுதீன் சார் புரியும் படியும் சிறப்பாக பதில் எழுதியுள்ளீர்கள் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 7:50

Nisha wrote:எனக்கொரு டவுட்டு. யாரும் தப்பாக புரிந்துக்காதிங்க!  கடவுள் நம்பிக்கை கட்டாயம் அவசியம் என்பது எனக்கு தெரியும்.  அதற்காக கடவுளை நம்பாதவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் எனவும் சொல்ல மாட்டேன். அப்படி இருக்க.. கோபப்படும் ஒருவர் தற்பொழுது கோபப்படவில்லை எனில் அதற்கான காரணங்களாய் வயது, அனுபவமுதிர்ச்சி, உலகறிவு என பல வரும்.  கடவுள் பொறுமையானவர்களுடன்  இருக்கின்றார் எனில் பொறுமை இல்லாத்வர்களை விட்டு விலகி விடுவாரோ? 

முற்காலத்தில் கோபப்பட்டபோது  கடஃவுள் அவருடன் இருக்கவில்லை என்றாகுமோ!?  மனித சுபாவங்கள் இயல்பானது எனும் போது  இப்படி  அனைத்தையும்  ஒரே நோக்கில் பார்ப்பது ஏன் என எனக்கு நிஜமாக புரியல்லப்பா!

கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிங்கள். இது தான் அடிப்படை. எனக்கும் கோபம் வரும். 
அநியாயம் ,, நீதியற்ற , நேர்மையற்ற காரியங்கள் நடக்கும் போது  ரெம்ப கோபம் வரும். புரியாமல்  தெரிந்தே தப்பு செய்பவர்களை கண்டால் கோபம் வரும்.   

அதே நேரம் இப்போது என்னில் நிரம்ப நிதானம் வந்தது உண்மையெனில் அதன் காரணம் என் அனுபவ முதிர்ச்சி.  உலகறிவு என்று தான் சொல்வேன்.

இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை உங்களுக்கு இருந்த சந்தேகத்தை கேட்டீர்கள். அந்த பதில் உங்களுக்கு புரியும்படி உள்ளதா? இல்லை இதில் ஏதேனும் தப்பாக தெரிகிறதா? நீங்கள் எதிர் பார்த்த பதில் கிடைத்ததா?புரிதலுக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by நண்பன் Sun 29 Mar 2015 - 14:00

கமாலுத்தீன் பய்யா உங்கள் விளக்கத்திற்கு நன்றி அருமையாக உள்ளது விளக்கம் நன்றி நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by சுறா Sun 29 Mar 2015 - 19:48

மிக மிக அற்புதமான கதை குமார்.

கோபம் தான் மனிதனின் எதிரி. கோபம் வரும்போது அதை அடக்குவது பக்குவப்பட்ட நிலைதான்.

சம்பத்தின் எம்.டி இவ்வளவு பொறுமையாக சொல்லி புரியவைத்த விதம் அழகு

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கோபம் Empty Re: கோபம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum