சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Khan11

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

+6
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
சே.குமார்
கமாலுதீன்
சுறா
10 posters

Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by சுறா Sun 29 Mar 2015 - 19:14

மரணத்தை வேண்டி....!!

பூசை  முடித்து வெளியே வந்த வனிதாவிடம்,. அம்மா உங்களுக்கு போன் என்றபடி வேலைக்காரப்பெண் கனகம் ரிசீவரை கொடுக்க, “ ஹலோ, ஆமா வனிதாதான் பேசறேன்.. ஓ அப்படியா...?? எப்போ...!!  ம்ம் என்றவாறே போனை வைத்தவள்,அப்பா கடவுள் கண்ணைத் திறந்திட்டார்..... என நிம்மதிப்பெருமூச்சு விட்டாள்.

என்னம்மா யாரு போன்ல..? ஒரு நிமிசம் அதிர்ச்சியானீங்க, பிறகு கடவுளுக்கு நன்றின்னு சொன்னீங்க என்னமா விசயம்.?  நடப்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் கனகா கேட்க, என் ஃப்ரண்ட் சுஜா காலையில் இறந்துட்டாளாம் அவளோட கணவர்தான் போன் செய்தார்.”  அதிர்ந்தாள் கனகா..!!! ஃப்ரண்டு சொல்றீங்க இப்படி நிம்மதிப்பெருமூச்சு விடறீங்களே வனிதாவை சற்றே வித்தியாசமாக உற்றுநோக்க... அவளின் பார்வையைப்புரிந்த வனிதா.. ஏய் என்ன அப்படி பார்க்கற.. தோழியோட சாவுக்கு சந்தோசப்படறேன்னா..??

ம்ம்..
 
அதுக்குக்காரணம் இருக்கு கனகா என்றவள் தன் தோழி சுஜா பற்றி கூறத்தொடங்கினாள். 

சுஜா ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் பெங்களூரில்.  அம்மா,அப்பாவிற்கு ஒரே பெண்.  நல்ல வசதியான குடும்பம்.  தாய் உமா வெளி உலகம் அறியாதவள்.    சுஜாவிற்கு  பிறப்பிலேயெ முதுகு சற்றே புடைத்திருப்பதை உமா கவனிக்கவே இல்லை. எடுத்துக்கூற பெரியவரும் இல்லை. சுஜா அனைவரையும்போல் பள்ளிப்படிப்பு  முடித்து, கல்லூரிக்கு செல்லும்பொழுது  கூண் அதிகம் தெரியவே மருத்துவரிடம் கேட்க சிறு வயதிலேயே சரி செய்திருக்க வேண்டும் இப்ப ஒன்னும் செய்யவியலாது என்று கைவிரித்து விட்டனர்.  அப்பப்ப எல்லாரும் நிமிந்து நட சுஜா என்பார்கள் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு சென்றுவிடுவாள்.  வயது வந்த காரணத்தினால் வெட்கத்தில் கூண் போடுவதாக அனைவரும் நினைத்து  அதைக்கண்டு கொள்ளவில்லை.  சுஜா இருக்கான்னு அந்தத் தெருவுக்கு வரும்போதே தெரியும் எப்பவும் ஒரே சிரிப்பு சத்தம் கேட்கும் அப்படி ஒரு கலகலப்பு.  தன்னைச்சுற்றி அனைவரும் எப்பவும் மகிழ்ச்சியா இருக்கனும் என்பதில் கவனமா இருப்பா. தன் கவலை, உடல்நிலை ஒருபோதும் பகிரமாட்டாள்.

சில காலங்களில் பணிக்கு சென்று விட்டாள்.  அனைவரிடமும் அன்பாகப் பழகும் அவளுக்கு.  பெற்றோர்கள் நிச்சயித்தபடி திருமணமும் நிகழ்ந்து ஊரை விட்டே சென்றுவிட்டாள்.  அப்பப்போ போனில் பேசுவோம்.  குழந்தை பிறந்த பொழுதுகூட சென்றுபார்க்க முடியவில்லை.  கணவன் அரவிந்த நல்ல அனுசரனையானவன். அதிகம் பேசாவிட்டாலும் கூடமாட ஒத்தாசை செய்வது என உதவியாக இருப்பான். அடிக்கடி கணவர் பற்றி என்னிடம் பெருமைபட்டுக்கொள்வாள். மாமியார் மாமனார் உடன் இல்லை எனினும் அவ்வப்போது அந்த பதவிக்கே உரித்தான முறையில் அலைபேசியிலேயே அனைத்து வில்லங்கமும் வந்துசெல்லும். 2 வருடத்தில் ஒரு மகனும் பிறக்க மகிழ்ச்சியாகவே இருந்தாள் சுஜாதா. குழந்தைக்கு 10 வயது இருக்கும்போது திடீரென நெஞ்சுவலிக்க துடித்துப்போனாள்.  மருத்துவரிடம் காண்பித்து அனைத்து பரிசோதனையும் செய்ய, ஒன்றுமே இல்லை ஆன்சைட்டிதான் காரணம் கவலையில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறி அப்போதைக்கு மருந்துகள் பரிந்துரைத்தனர்.
இப்படி அடிக்கடி நெஞ்சுவலி வருவதைக்கண்ட அவள்   கணவன் அர்விந்த் அப்படி என்னதான் வியாதியோ கவலைபட காரணம்  எதுவுமில்லை…டாக்டரும்ஒன்றுமில்லையென சொல்லிட்டார்… .ஆனால் இந்த நெஞ்சுவலி உனக்கு எதனாலதான் வருதோவென ஒருநிலநேரம் சலித்துக்கொள்வான். அதன்பிறகு நெஞ்சுவலிச்சாகூட யாரிடமும் சொல்லாமல் தனக்குத்தானே வலியை அனுபவிக்கத் தொடங்கினாள்.  10 முறை வலிச்சா ஒருமுறை மட்டும் சொல்லுவா.  ஒருநாள் வேற ஒரு பிரச்சினைக்காக முழு செக் அப் செய்ய,எக்ஸ்ரேவில் முதுகுத்தண்டு பெண்ட் ஆகி ஒரு பக்க லங்க்ஸ் கம்ப்ரஸ் ஆகி இருப்பதாகவும், தற்போதைக்கு பிரச்சினை இல்லை ஆனா வயதாக வயதாக மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும் என்றும்  மருத்துவர்கள் கூறிவிட்டதை சுஜா என்கிட்ட போன்ல சொல்லி வருத்தப்பட்டாள். நானும் ஆறுதல் சொன்னேன்.

அதைப்பெரிதும் பொருட்படுத்தாதவர்கள் அந்த நேர மருத்துவ உதவி பெற்று சரியானதும் மறந்தேபோயினர்.  மகிழ்ச்சியாய் காலங்கள்  உருண்டோட ஒருநாள் வழக்கமான நெஞ்சுவலி அதிகரிக்க மூச்சுவிடவே சிரமப்பட்டவளை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய,  டாக்டர்கள் இனி இப்படித்தான் இருக்கும் எனக்கூறிஏதேதோ மருந்துகள் பரிந்துரைத்து அனுப்பிவிட்டார்.
 
இரண்டுமாதத்திற்கு முன் ஒருநாள் திடீரென  சுஜா போனில் அழைத்து, ”வனீ  நா உன்ன பார்க்கனும் உடனே வா என்றாள்.” நானும்  அவளை சென்று சந்தித்தேன். படுக்கையில் இருந்த சுஜா, என் கையைப்பற்றிக்கொண்டவள், ”வனிதா எனக்கு இப்ப எல்லாம் ரொம்ப முடியல இதுவரை உன்னத்தவிர யார்கிட்டயும் மனம் பகிர்ந்தது இல்ல.  என் வாழ்க்கை இனி இப்படித்தானு டாக்டர் சொல்லிட்டாரு.  ஆனா எனக்கு இதில விருப்பம் இல்ல.  கணவரும், குழந்தையும் என்னைப் பரிதாபமா பார்க்கறமாதிரி ஒரு ஃபீல்.   நான் தான் வலில கஷ்டப்படறேன்னா என்னப்பார்த்து அவங்க வருத்தப்படறது இன்னும் அதிகமா வலிக்குது. இப்படி அடிக்கடி மூச்சு விட சிரமப்பட்டு நானும் வலி அனுபவித்து மற்றவர்களுக்கும் ஒரு சலிப்பு ஏற்படுத்தி என்மேல் ஒரு வெறுப்பும், பச்சாதாபமும் வருவதற்குள் நல்லமுறையில் என் மரணம் நிகழனும்.  ”படுத்தபடுக்கையா அதுவும் ஒரு பெண் எல்லா நேரத்திலும் பிறரின் உதவியை எதிர்நோக்கியிருப்பது எவ்வளவு கொடிதுன்னு உனக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.” வனிதா, ”எப்பவும்போல வீடே அதிர சிரித்து மகிழ்ந்து என் சாவு இருக்கனுமே தவிர நோயாளியா படுக்கையிலேயே இருக்கக்கூடாது” என்றவளின் கரம்பிடித்து, ”உன் மனசுபோல அமையும் கவலைப்படாத” என்று ஆறுதல்படுத்த.. ”இல்ல நீ சும்மா என்ன சமாதானம் செய்யாத எனக்கு ஒரு வாக்கு கொடு என்றவளிடம், என்ன என்பதுபோல் நெற்றி சுருக்க...”ஒவ்வொரு நாளும் நீ எனக்காக என் மரணத்தைவேண்டி பிரார்த்திக்கனும்.” சுயநலமற்ற வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.  என்மீதான உன் அன்பு எனக்குத்தெரியும். நான் வலியில் துடிப்பதை உன்னால் தாங்க முடியாது.உன்னாலதான் இது முடியும்” என்றவளிடம் மனதை திடப்படுத்திக்கொண்டு சத்தியம் செய்துட்டு வந்தேன்.
 
அவள் மீதான அன்பும், அவள் வேண்டலில் இருந்த உண்மையும் புரிய தோழியிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவளின் வலியற்ற மரணத்திற்கு  நித்தமும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு செய்தி.  தோழியின் கதையைக்கூறி முடித்தாள் வனிதா.
 
இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..?மகிழ்ச்சிதானே கனகா..?  அதான் கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார்னு சொன்னேன் என்ற வனிதாவை வியப்பாய் பார்த்தாள் கனகா.
 
சரி சரி நேரமாச்சு நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கனும்.  சார் வந்தா நீ விசயத்த சொல்லிடு. அவர் போன் ஆஃப்ல இருக்கு. முக்கியமான வேலையில இருப்பார். வந்தவுடன் சொல்லு என்றுகூறிச்செல்லும் வனிதாவையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனகா.

சுஜா வீட்டில் அனைவரும் இவளுக்காக காத்திருக்க கடைசி யாத்திரைக்கு தோழிக்கு மாலை அணிவித்து அவளை  முத்தமிட்ட வனிதா, சுஜாவின் சிரிப்பு சத்தத்தை உணர்ந்தாள்...!!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by கமாலுதீன் Tue 31 Mar 2015 - 7:35

த‌ன் அன்புக்குரியவர்களின் நலன், அவர்களின் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் தான் ஒருவர் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். மரணம் என்பது அனைவராலும் விரும்பப்படாத ஒன்று. மரணம் யாரை அடைந்தாலும் அது அவரது உற்றார் உறவினர்களுக்கும், சுற்றத்திற்கும் நட்புகளுக்கும் கவலையையும் துக்கத்தையும் கொடுக்கும். ஆனால் அந்த மரணத்தில் தான் ஒருவருடைய துன்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது எனும் போதும், தன் அன்பிற்கும் நட்பிற்கும் உரியவர் உயிரோடு இருந்து படும் வேதனையை கண்டு ஏற்படும் துக்கத்தை விட அவரது மரணத்தால் வரும் துக்கம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது. அதை மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. மகிழ்வான துக்கம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by சே.குமார் Tue 31 Mar 2015 - 21:09

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 12:31

கமாலுதீன் wrote:த‌ன் அன்புக்குரியவர்களின் நலன், அவர்களின் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் தான் ஒருவர் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். மரணம் என்பது அனைவராலும் விரும்பப்படாத ஒன்று. மரணம் யாரை அடைந்தாலும் அது அவரது உற்றார் உறவினர்களுக்கும், சுற்றத்திற்கும் நட்புகளுக்கும் கவலையையும் துக்கத்தையும் கொடுக்கும். ஆனால் அந்த மரணத்தில் தான் ஒருவருடைய துன்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது எனும் போதும், தன் அன்பிற்கும் நட்பிற்கும் உரியவர் உயிரோடு இருந்து படும் வேதனையை கண்டு ஏற்படும் துக்கத்தை விட அவரது மரணத்தால் வரும் துக்கம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது. அதை மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. மகிழ்வான துக்கம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.

உண்மைதான் அண்ணா என் தந்தை மரணப்படுக்கையில் பட்ட துன்பங்களைப் பார்த்து நான் இறைவனிடம் வேண்டினேன் இறைவா என் தந்தைக்கு ஏன் இந்த சோதனை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இப்படி சோதிப்பதை விட என் தந்தைக்கு மரணமே மேல் என்று இறைவனிடம் மனதால் வேண்டினேன்
என் தந்தையின் மனதும் அப்படித்தான் இருந்தது ஒரு நொடியில் உயிர் பிரிந்து விடும் ஆனால் வியாதியால் படும் வேதனை கொடியது இப்போது நினைத்தாலும் மனது கனக்கிறது கண்ணீர் வருகிறது இறைவன் என் தந்தைக்கு சுவனத்தை நல்கட்டும் ஆமீன்

கதாசியரியருக்கு நன்றி அருமையான கதை இந்தக் கதை என் தந்தையை என் கண் முன் நிறுத்தியது அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 10:40

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ...
மரணம் கூட இறைவன் தரும் " அற்புத கொடை" அது எல்லோருக்கும் அழக்காக கிடைப்பதில்லை 

மரணத்தை விரும்புபவன் தான் ஞானி 
மரணத்தை  உருவாக்குபவன் (தற்கொலை ) பாவி ...

ஒரு மரணத்திலும் "மரணசுகம் " உண்டு 

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 15:17

மரணம் என்பது இயற்கை அனைவரும் அதை சுவைத்துதான் ஆகவேண்டும்! என்ற உண்மை தெரிந்தும் மரணம் நிகழும் போது அதை நம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது அந்த வலியும் வேதனையும் நம்மை வாட்டிவிடும் அப்படி இருந்தும் நெறுங்கிய  தோழி அவலுக்கா தினமும் வேண்டும் போது மனநிலை எப்படி இருந்திருக்கும் அது மாத்திரம் அன்றி அன்பையும் பாசத்தையும் உணர்வுபூர்வமாக சொன்ன  விதம் அருமை.

கதையை படித்து கொண்டு வரும் போது என்னாவாகுமோ ஏதாகுமோ என்ற அச்சதில் படித்து வந்தேன் இறுதியில் கதை முடியும் வரிகள் படிக்கும் போது சோகம் என்னை சூழ உடல் சிளிர்த்தது.

அருமையான கதை 
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by நேசமுடன் ஹாசிம் Mon 6 Apr 2015 - 11:49

நட்பு ஒன்றுதான் அனைத்துவிதமான விடயங்களையும் பகிர்ந்து கொள்ள ஏதுவான உறவு உடலின் குறை உணரப்படாத வாழ்வின் பெறுமதி அதிகம் அதை உணர்கின்றவர்களுக்குப் புரியும் இவ்வாறான குறைகளின் வாயிலாக நேசிக்கின்றவர்களுக்கு நோவினை தர விரும்பாமல் படுகின்ற அவஷ்தை மிகவும் கொடியது 

இறப்பையும் நாடுகின்றார்கள் என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே 

அருமையான கதை ஆசியருக்கு பாராட்டுகள்

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by Nisha Mon 6 Apr 2015 - 18:13

இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..

மனதை கலக்கும் கதையானாலும் சில நேரம் நானுமே இம்மாதிரி நினைப்பதுண்டு. உலகில் வாழணும் என வலி வேதனையோடு பாடு படுவதை விட ஒரு நொடியில் மரணம் வருவதும் இறைவனின் பரிசு தான் போலும். 

 தோழிக்கான என்னன்னமோ வேண்டிய நட்பின் அன்பை  தோழியின் விடுதலைதான்  நல்லது என உணர  வைத்து  இதுவும்  பாசம் தான் என உணர வைத்தமைக்கு பாராட்டுகள். 

 கதைபோட்டியில் கலந்துகொண்டமைக்கும் கதைக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் என்றும் தொடரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by சுறா Tue 14 Apr 2015 - 19:03

இந்த கதையை இன்று தான் படித்தேன். கண் கலங்க வைத்துவிட்டது என்று சொல்ல வந்தேன். கடைசியில் தோழியின் சாதாரணமான நடவடிக்கையால் கதையின் முக்கியத்துவம் பெரிதும் மாறிவிட்டது.

சரி வா கடைக்கு போகலாம் என்றது போல அவர் சாவுக்கு செல்ல நினைப்பது நெருடுகிறது.  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி

என் கருத்து தவறாக இருந்தால் கதையாசிரியர் மன்னிக்கவும்.

வெற்றிபெற வாழ்த்துக்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by Nisha Tue 14 Apr 2015 - 19:31

சுறா wrote:இந்த கதையை இன்று தான் படித்தேன். கண் கலங்க வைத்துவிட்டது என்று சொல்ல வந்தேன். கடைசியில் தோழியின் சாதாரணமான நடவடிக்கையால் கதையின் முக்கியத்துவம் பெரிதும் மாறிவிட்டது.

சரி வா கடைக்கு போகலாம் என்றது போல அவர் சாவுக்கு செல்ல நினைப்பது நெருடுகிறது.  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி

என் கருத்து தவறாக இருந்தால் கதையாசிரியர் மன்னிக்கவும்.

வெற்றிபெற வாழ்த்துக்கள்

எனக்கும் இந்த  உணர்வு தோன்றியது! ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என புரியாமல் விட்டேன்.  என்னதான் விடுதலையை விரும்பி இருந்தாலும்  ஒரு உயிர் இனி இல்லை.. இனி காணவே முடியாது எனும் போது மனசில் மிகப்பெரிய வலி வரும்.  வெறுமை சூழும். அதிலும் நன்கு பழகிய உயிர்த்தோழி எனும் போது...?

 மரணம் விடுதலை ஆனாலும்  பிரிவு தரும் வலியை  வெளிப்படுத்தவே இல்லை கதை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by சுறா Tue 14 Apr 2015 - 20:21

ஓ உங்களுக்கும் தோன்றியதா இந்த உணர்வு. சரி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by ahmad78 Wed 15 Apr 2015 - 11:17

கதை இப்பத்தான் படித்தேன்.

நன்றாக உள்ளது

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:19

கமாலுதீன் wrote:த‌ன் அன்புக்குரியவர்களின் நலன், அவர்களின் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் தான் ஒருவர் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். மரணம் என்பது அனைவராலும் விரும்பப்படாத ஒன்று. மரணம் யாரை அடைந்தாலும் அது அவரது உற்றார் உறவினர்களுக்கும், சுற்றத்திற்கும் நட்புகளுக்கும் கவலையையும் துக்கத்தையும் கொடுக்கும். ஆனால் அந்த மரணத்தில் தான் ஒருவருடைய துன்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது எனும் போதும், தன் அன்பிற்கும் நட்பிற்கும் உரியவர் உயிரோடு இருந்து படும் வேதனையை கண்டு ஏற்படும் துக்கத்தை விட அவரது மரணத்தால் வரும் துக்கம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது. அதை மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. மகிழ்வான துக்கம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.
மிக்க நன்றி நண்பரே..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:22

சே.குமார் wrote:மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
 கதை எழுதுவதில் அகரம் படிக்கத்துவங்கியிருக்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும் தம்பிக்கு நன்றி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:23

ahmad78 wrote:கதை இப்பத்தான் படித்தேன்.

நன்றாக உள்ளது
மிக்க நன்றி..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:25

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:த‌ன் அன்புக்குரியவர்களின் நலன், அவர்களின் மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ஆகியவற்றில் தான் ஒருவர் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும். மரணம் என்பது அனைவராலும் விரும்பப்படாத ஒன்று. மரணம் யாரை அடைந்தாலும் அது அவரது உற்றார் உறவினர்களுக்கும், சுற்றத்திற்கும் நட்புகளுக்கும் கவலையையும் துக்கத்தையும் கொடுக்கும். ஆனால் அந்த மரணத்தில் தான் ஒருவருடைய துன்பத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது எனும் போதும், தன் அன்பிற்கும் நட்பிற்கும் உரியவர் உயிரோடு இருந்து படும் வேதனையை கண்டு ஏற்படும் துக்கத்தை விட அவரது மரணத்தால் வரும் துக்கம் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு நிம்மதி பெருமூச்சு ஏற்படுகிறது. அதை மகிழ்ச்சி என்று சொல்ல முடியாது. மகிழ்வான துக்கம் என்றே சொல்ல வேண்டும்.

அந்த உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்திய கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.

உண்மைதான் அண்ணா என் தந்தை மரணப்படுக்கையில் பட்ட துன்பங்களைப் பார்த்து நான் இறைவனிடம் வேண்டினேன் இறைவா என் தந்தைக்கு ஏன் இந்த சோதனை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இப்படி சோதிப்பதை விட என் தந்தைக்கு மரணமே மேல் என்று இறைவனிடம் மனதால் வேண்டினேன்
என் தந்தையின் மனதும் அப்படித்தான் இருந்தது ஒரு நொடியில் உயிர் பிரிந்து விடும் ஆனால் வியாதியால் படும் வேதனை கொடியது இப்போது நினைத்தாலும் மனது கனக்கிறது கண்ணீர் வருகிறது இறைவன் என் தந்தைக்கு சுவனத்தை நல்கட்டும் ஆமீன்

Code:
கதாசியரியருக்கு நன்றி அருமையான கதை இந்தக் கதை என் தந்தையை என் கண் முன் நிறுத்தியது 

மிக்க நன்றி நண்பன்....
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:27

கவிப்புயல் இனியவன் wrote:ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ...
மரணம் கூட இறைவன் தரும் " அற்புத கொடை" அது எல்லோருக்கும் அழக்காக கிடைப்பதில்லை 

மரணத்தை விரும்புபவன் தான் ஞானி 
மரணத்தை  உருவாக்குபவன் (தற்கொலை ) பாவி ...

ஒரு மரணத்திலும் "மரணசுகம் " உண்டு 

மிகச் சிறப்பான கதை...
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
மரணத்திலும் சுகமுண்டென்பதை அழகா சொல்லி ஊக்குவிக்கும் நண்பருக்கு நன்றி.. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:28

*சம்ஸ் wrote:மரணம் என்பது இயற்கை அனைவரும் அதை சுவைத்துதான் ஆகவேண்டும்! என்ற உண்மை தெரிந்தும் மரணம் நிகழும் போது அதை நம் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது அந்த வலியும் வேதனையும் நம்மை வாட்டிவிடும் அப்படி இருந்தும் நெறுங்கிய  தோழி அவலுக்கா தினமும் வேண்டும் போது மனநிலை எப்படி இருந்திருக்கும் அது மாத்திரம் அன்றி அன்பையும் பாசத்தையும் உணர்வுபூர்வமாக சொன்ன  விதம் அருமை.

கதையை படித்து கொண்டு வரும் போது என்னாவாகுமோ ஏதாகுமோ என்ற அச்சதில் படித்து வந்தேன் இறுதியில் கதை முடியும் வரிகள் படிக்கும் போது சோகம் என்னை சூழ உடல் சிளிர்த்தது.

அருமையான கதை 
கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சம்ஸ்...
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:30

நேசமுடன் ஹாசிம் wrote:நட்பு ஒன்றுதான் அனைத்துவிதமான விடயங்களையும் பகிர்ந்து கொள்ள ஏதுவான உறவு உடலின் குறை உணரப்படாத வாழ்வின் பெறுமதி அதிகம் அதை உணர்கின்றவர்களுக்குப் புரியும் இவ்வாறான குறைகளின் வாயிலாக நேசிக்கின்றவர்களுக்கு நோவினை தர விரும்பாமல் படுகின்ற அவஷ்தை மிகவும் கொடியது 

இறப்பையும் நாடுகின்றார்கள் என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே 

அருமையான கதை ஆசியருக்கு பாராட்டுகள்
மிக்க நன்றி தம்பி..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:31

Nisha wrote:
இறப்பு நிச்சயம்.  அதை மாற்றவோமறுக்கவோ இயலாது.  ஆனா, என் தோழி அதிகம் துன்பப்படாமல் இறக்கவேண்டும் என எண்ணியதில் என்ன தவறு..

மனதை கலக்கும் கதையானாலும் சில நேரம் நானுமே இம்மாதிரி நினைப்பதுண்டு. உலகில் வாழணும் என வலி வேதனையோடு பாடு படுவதை விட ஒரு நொடியில் மரணம் வருவதும் இறைவனின் பரிசு தான் போலும். 

 தோழிக்கான என்னன்னமோ வேண்டிய நட்பின் அன்பை  தோழியின் விடுதலைதான்  நல்லது என உணர  வைத்து  இதுவும்  பாசம் தான் என உணர வைத்தமைக்கு பாராட்டுகள். 

 கதைபோட்டியில் கலந்துகொண்டமைக்கும் கதைக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் என்றும் தொடரும்.
மிக்க நன்றி நிஷா..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 17 Apr 2015 - 9:40

சுறா wrote:இந்த கதையை இன்று தான் படித்தேன். கண் கலங்க வைத்துவிட்டது என்று சொல்ல வந்தேன்.
Code:
கடைசியில் தோழியின் சாதாரணமான நடவடிக்கையால் கதையின் முக்கியத்துவம் பெரிதும் மாறிவிட்டது.

Code:
சரி வா கடைக்கு போகலாம் என்றது போல அவர் சாவுக்கு செல்ல நினைப்பது நெருடுகிறது.  இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி

எமது பார்வையிலான விளக்கம்... மரணம் என்பதை வேண்டுவதே ஒரு வகையான மனமுதிர்ச்சி. அப்படி முதிர்ச்சியுடன் இருப்பவர்களை பொதுவா எந்த ஒரு உணர்வுகளும் (விருப்புவெறுப்பு, துக்கம் மகிழ்ச்சி...இப்படி) 
பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது. .அந்த மரணத்திற்கான அதிர்வை வெளிப்படுத்தாது நிகழ்வை அப்படியே ஏற்று அடுத்தது என்ன என கடந்து செல்ல வைக்கும்படியான ஒரு பக்குவம். 
பக்குவத்தின் வெளிப்பாடே  அந்த சலனமற்ற சாதாரண நடவடிக்கை.  இங்கு இந்த கதையின் கருவே மனமுதிர்ச்சியடைந்த தோழி இன்னொரு தோழியின் மரணத்தை வேண்டுவதுதான்.  எனவே இதுதான் என தெரிந்தவிசய்த்தை இன்னொருவர் கூறும்பொழுது எந்த உணர்வின் வெளிப்பாடும் இருக்காது.  இது எமது பார்வையில் பகிர்ந்துள்ளேன்.  இதுவே சரியெனக்கூறவில்லை. :)
 
Code:
என் கருத்து தவறாக இருந்தால் கதையாசிரியர் மன்னிக்கவும்.

தவறுகளை சுட்டிக்காட்டும்பொழுதுதானே ஒரு எழுத்தாளன் தன்னை மெருகேற்றிக்கொள்ள முடியும்.  எனவே தாங்கள் கூறியதில் எந்தத்தவறும் இல்லை.  மகிழ்ச்சியே அளிக்கிறது.  குறைகளை நிறைகளாகக் கூறுவதை விட, குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளாக்கிக்கொள்ள வழிவகுத்திருக்கிறீர்கள்.

Code:
வெற்றிபெற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே.. :) தவறுகளை தயங்காது சுட்டிக்காட்டுங்கள். தொடர்ந்து.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by சுறா Fri 17 Apr 2015 - 10:52

உங்கள் வாழ்க்கையில் இந்த கதையில் வருவது போல யாரையாவது பார்த்திருக்கிற அல்லது அனுபவம் உண்டா? தத்ரூபமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி Empty Re: சிறுகதை எண்.3 - மரணத்தை வேண்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum