சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:- Khan11

உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-

Go down

உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:- Empty உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் ஈழத் தமிழர்கள்: யுனிசெப்: உலகில் 9கோடி அகதிகள்:-

Post by Nisha Mon 22 Jun 2015 - 8:24

உலகில் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தீவைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற ஐ.நாவின் உப அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது. 

போர், உள்நாட்டுப் பிரச்சினை  வன்முறை, இனக்கலவரம் காரணமாக உடமைகள், உறவுகள் மற்றும் உரிமைகளை இழந்து, எவ்வித ஆதரவும், வசதியும் இன்றி வாழும் மக்களே அகதிகள். இவர்கள் சொந்த நாட்டுக்கு உள்ளேயோ அல்லது நாடு கடந்தோ இடம்பெயரும்போது அகதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். 

உலகில் எல்லா நாடுகளிலும் அரசியல், பொருளாதாரம், உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். பசி, பட்டினி தாங்க முடியாமல், உயிருக்குப் பயந்து அகதிகளாக அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயருகின்றனர்.

ஆப்ரிக்க கண்டத்தில்தான் முதன்முறையாக ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு, டிசம்பர் 4-ம் தேதியன்று ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பல்வேறு காரணங்களால் இடம்பெயரும் மக்களுக்கு ‘அகதிகள்’ அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்துதான், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.சமீபத்தில் வங்கதேசம், மியான்மரில் நடந்த இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக குடியேற முயன்றபோது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.5 லட்சம் மக்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இந்தியா உட்பட பல்வேறு ஆசிய நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

இவ்வுலகில் உள்ள 54 நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 4.5 லட்சம் இலங்கை மக்கள் அகதிகளாக உள்ளனர்.உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத் தமிழர்கள் என்று ஐ.நா.வின் உப அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

உலக அளவில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் சொந்த நாடுகளை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டிருப்பதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இலங்கை தமிழர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால், அவர்களின் உயர்கல்வி, பிரஜா உரிமை போன்ற விஷயங்களில் தேக்க நிலை உள்ளது.

இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுமார் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக 113 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர். 

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி வரை, மற்ற இந்தியர்களைப் போலவே அரசு செலவில் இலவசமாகப் படித்தாலும், அதற்குமேல் உயர்கல்வியைத் தொடர அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவு கிடைக்காததால், அவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

இது தவிர, இந்தியர்களைத் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தி, குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரப்படாத நிலை  பிரச்னையைத் தோற்றுவிக்கிறது.அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், உரிய பயண ஆவணம் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. 

ஆனால், முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு மான்ய உதவித் தொகை மற்றும் ரேஷன் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இவ்வாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நிலை குறித்து சர்வதேச குடிபெயர்வு நிறுவனம் (ஐ.ஓ.எம்) சார்பாக, லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் வழக்கறிஞர் ஒருவர் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

உலகளவில் 2014-ம் ஆண்டு வரை சுமார் 9 கோடி மக்கள் அகதிகளாகவும், நாடோடிகளாகவும் உயிர் வாழ்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், அதிகளவு அகதிகளை உருவாக்கி வரும் நாடாக சிரியா உள்ளது.ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்தே மொத்த அகதிகளில் 60 சதவிகிதம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

மேலும், அதிகளவு அகதிகளை (85%) உள்வாங்கும் நாடுகளாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே திகழ்கின்றன. இது 10 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட 14 சதவிகிதம் அதிகமாகும்.உலகில் அதிக அகதிகளைத் தோற்றுவிக்கும் நாடாக 32 வருடங்களாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருகிறது. இதில் 95 சதவிகித ஆப்கான் அகதிகள் ஈரானிலும் பாகிஸ்தானிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதற்கடுத்து 2-ம் இடத்தில் சோமாலியாவும், 3-ம் இடத்தில் ஈராக்கும், 4-வது இடத்தில் சிரியாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இடம்பிடித்துள்ளன.அதே வேளையில், 2014-ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 3 கோடி மக்கள் சிரியா மற்றும் உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம்.இவர்களில் கணிசமானோர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு முறை நாம் கண் சிமிட்டும் போதும் அதாவது, 5 நொடிகளுக்கு ஒருமுறை ஒரு அகதி தற்போது உருவாகி வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, ‘தங்கள் நாட்டில் அடிப்படை வாழ்வாதார வசதிகளுடன் வாழ வழியில்லாத காரணத்தால்தான், அங்குள்ள மக்கள் அருகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்கின்றனர். 

அந்தந்த நாடுகளில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்த, சம்மந்தப்பட்ட நாடுகளின் அரசியல் ரீதியான முரண்பாடுகளை களைய, அந்தந்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, அத்தகைய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என்று ஐ.நா. பொது செயலாளர் பான்-கீ-மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 Srilankan News


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!
» ஈழத் தமிழர்கள் தயாரித்த உச்சிதனை முகர்ந்தால்
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு : சரத்குமார் அறிக்கை
» இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum