சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Khan11

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

3 posters

Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by சே.குமார் Fri 26 Jun 2015 - 16:43

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Article-2505060-0B22502B000005DC-342_634x422
ந்த முறை ஊரில் இருந்து வரும்போது கொண்டு வந்த பெட்டி மாறிய கதையை பகிர்ந்துக்கலாம் என்றுதான் இந்தப் பகிர்வு.

எப்போது ஊருக்குச் சென்றாலும் திரும்பி வரும்போது சந்தோஷ மனநிலை இருப்பதில்லை என்பதை குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழும் எல்லோரும் மறுப்பதில்லை. எனக்கும் எப்போதும் அதே நிலைதான் என்றாலும் இந்த முறை இங்கு... அங்கு... என கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் குடும்பத்துடன் செலவிட்டு விட்டு தனியாக திரும்புவதென்பது மிகப்பெரிய கஷ்டமாக இருந்தது. எப்பவும் கைப்பை போக, லக்கேஜில் எனக்கு உறவினர்களுக்கு என பொருட்கள் கொண்டு வருவேன். இந்த முறை சோகமே உருவாக வரும் நிலை என்பதால் எதுவும் வாங்கவில்லை. மனைவி வற்புறுத்தியும் எதுவும் வாங்க விரும்பவில்லை.

எனவே கைப்பையில் எனக்கும் உறவுகளுக்குமான பொருட்களை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு ஐத்தானுடன் வந்து சேர்ந்தேன். உள்ளே நுழைந்ததும் மிஷினில் பையை சோதனை செய்த அதிகாரி உள்ள என்னமோ இருக்கு... திறங்க பாக்கணுமென்றார். மாம்பழம், டிரஸ், இனிப்புக்கள் என்னோட சான்றிதழ்கள் இருக்குன்னு சொன்னாலும் திறக்கச் சொல்லி நின்றார். எனவே திறந்து காண்பிக்க, மின்சாதனம் எதுவும் வச்சிருக்கீங்களா? காட்டுதே... அப்படின்னு மறுபடியும் கேட்டார்... இல்லைங்க இதுதான் இருக்கு என்று சொல்லவும் சரி போங்க என்றார். 

எடை போட்டு நமக்கான பயணச்சீட்டு கொடுக்குமிடத்தில் எடை போட்ட பையன் கையில கொண்டு போறதை விட கொஞ்சம் எடை கூடுதலா இருக்கு நீங்க லக்கேஜ்ல போட்டுடுங்க என்றதும் எப்பவும் போல் சரி என்று சொல்லிவிட்டேன். அது பூட்டியிருப்பதால் சான்றிதழ்களுக்கு பிரச்சினை இல்லை என்ற தைரியத்தில் கொடுத்துவிட்டு ஐத்தானுக்கு கைகாட்டி போகச் சொல்லிவிட்டு இமிக்கிரேஷன் பக்கம் சென்றேன். திருச்செந்தூருக்கு மொட்டை போட்டிருந்ததால் அடையாளம் தெரியலைன்னு திருப்பி விடமாட்டானான்னு ஒரு நப்பாசையுடன் இரவு ஒரு மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்காக 11.30 முதல் காத்திருந்தேன்.

ஒரு வழியாக ஒரு மணிக்கு விமானம் கிளம்பியது. பின்னர் தூக்கம்தான்... திடீரென விமானப் பணிப்பெண் எல்லோரையும் உசுப்பி விட்டு சாப்பிட கொஞ்சம் இடியப்பம், ஒரு லட்டு, சின்ன பப்ஸ், குருமா மாதிரி கடலை போட்டது கொஞ்சம்... அப்புறம் இமயமலை அடிவாரத்தில் எடுத்த தண்ணீர் என்ற கதையுடன் பெயர் பொறிக்கப்பட்ட, குடிக்கவே முடியாத அலண்ட தண்ணீர் கொடுத்தார். அந்த நேரத்தில் எவன் சாப்பிடுவான்... அதுவும் இடியப்பம்... பெரும்பாலானோர் வாங்கி வச்சிட்டு மீண்டும் தூங்க ஆரம்பிக்க நானும் அப்படியே.

இறங்கியாச்சு... பஸ்ஸில் ஏறி இமிக்கிரேஷன் போனா சந்தையில நிக்கிற மாதிரி கூட்டம்... அதுல நீந்தி எல்லாம் முடிந்து லக்கேஜ் எடுக்கப் போனா... கன்வேயர் பெல்ட்டில் வந்தவற்றை பேர் பார்த்து நிறையப் பேர் எடுத்துக்கிட்டுப் போக... பலர் காத்திருந்தோம்... ஒவ்வொரு ஆளாகப் போக ஆரம்பிக்க... எனக்கு என்னடா இது இன்னும் நம்ம பேக் வரலையே என்ற குழப்பத்துடன் காத்திருந்தேன். கூட்டம் காலி... அப்போதுதான் ஒரு பேக் வந்தது... என்னோட பேக் போல... இருந்தாலும் இது நம்ம பேக் இல்லையே என ஒரு முறை சுத்த விட்டேன்.. பின்னர் எதுவும் வராததால் ஒரே மாதிரி இருக்கவும் மாத்தி எடுத்துக்கிட்டுப் போயிட்டானுங்களோன்னு அந்த பேக்கில் ஒட்டியிருந்த ஏர்போர்ட் பேப்பரில் பேரைச் பார்க்க குருசாமி திவாகர்ன்னு இருந்துச்சு... ஆஹா.... மாத்திக் கொண்டு பொயிட்டான்டான்னு பார்த்தா... பேக்குல திவாகர்ன்னு கொட்டை எழுத்துல எழுதி வச்சிருக்கான் அந்த அறிவாளி.

சான்றிதழ்கள் எல்லாம் இருக்கேன்னு ஒடிப்போயி ஒரு அரபிக்கிட்ட என்னோட பேக் மிஸ்ஸாயிடுச்சுடான்னு சொன்னே... ஒகே... நோ பிராப்ளம்ன்னு சொல்லிட்டு ஒருத்தனைக் காட்டி அவன் இந்தியன் அவனுக்கிட்ட கேளு உதவுவான்னு சொன்னான். உடனே அந்த மலையாளிக்கிட்ட போயிச் சொன்னேன். அவன் அருகிருந்த நம்ம தமிழனிடம் சொல்ல, ஒண்ணும் பயமில்லைங்க... தினம் தினம் இது நடக்கிறதுதான்... தெரியாம மாத்தி எடுத்திருப்பாங்க... வந்துரும்... அந்தா அந்த ஆறாவது பெல்ட் இருக்குல்ல அதுக்குப் பக்கத்துல ஆபீஸ் இருக்கு... அங்க புகார் பண்ணுங்க... என்றார். சான்றிதழ் எல்லாம் இருக்குங்க அதான் பயமா இருக்கு என்றதும் ஒண்ணும் பிரச்சினை இல்லை... அந்தாளோட பேக் இங்கதானே இருக்கு... கண்டிப்பா வருவாங்க... போங்க போயி புகார் பண்ணிட்டுப் போங்க என்றதும் ஒண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

(மீதிப் பகிர்வு மாலை...)
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி...கிடைத்ததா?

Post by சே.குமார் Sat 27 Jun 2015 - 10:44

ண்ணாம் நம்பர் பெல்ட்டின் அருகில் நின்ற நான் வேகவேகமாக ஆறாம் நம்பர் பெல்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் ஒருவித பதட்டம் கலந்த பயத்துடன்...

அங்கே ஒரு சிறிய அலுவலகம்... நடுநாயகமாக சூடான் பெண் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு அருகே பிலிப்பைனைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் பக்கத்தில் ஒரு அரபிப்பெண் அமர்ந்திருந்தார்கள். நான் நேராக சென்று சூடானியிடம் என்னோட பெட்டி காணாமப் போச்சு... யாரோ மாத்தி எடுத்துக்கிட்டுப் பொயிட்டாங்க... அதே மாதிரி பெட்டி ஒண்ணு அங்க இருக்குன்னு சொன்னேன். உடனே இப்பத்தானே வந்தே... பதட்டப்படாதே... புகார் கொடுத்துட்டுப் போ... வந்துரும் என்றார். புகார் கொடுத்துட்டுப் போறது பிரச்சினை இல்லை... அதுல என்னோட சான்றிதழ் இருக்கு... நான் அபுதாபி போகணும்... திரும்ப எப்ப வந்து... எப்ப வாங்குறது என்றேன். உடனே இங்க யாராவது சொந்தக்காரங்க இருந்தா புகார் பேப்பரைக் கொடுத்துட்டுப் போ... அவங்க வாங்கிக் கொடுத்துருவாங்கதானே என்றார். சரி என ஆமோதித்தேன்.

மீண்டும் அவர் ரெண்டும் ஒரே மாதிரி பேக்கா? என்று கேட்டு ஒண்ணு செய்யி வெளியில போயிப் பாரு... யாராவது வச்சிருப்பாங்க... இல்லேன்னா திரும்பி வா என்றார். உடனே வெளியே ஓடினேன். அந்தக் கடைசியில் இருந்து இந்தக் கடைசி வரைக்கும் ஓடினேன்... எல்லோரும் நிக்கிறானுங்க.. என்னோட பெட்டியை எடுத்த புண்ணியவானை மட்டும் காணோம். சரி இனி இங்க நின்னு வேலையில்லையென மறுபடியும் சூடானியை தேடிப் போனா செக்யூரிட்டி உள்ள போகமுடியாதுன்னு சொல்லிட்டான். அப்புறம் அவனுக்கிட்ட விவரம் சொல்ல, அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த போனைக்காட்டி அதை போயி எடுத்தியன்னா அவங்களுக்கு ரிங்க் போகும். உன்னைய வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க என்றார். 

அங்கிருந்து அவன் காட்டிய இடத்துக்கு ஓடி போனெடுக்க அவர்கள் பேச, அவர்களிடம் மீண்டும் கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் அதற்கு அருகில் இருந்த வாயிலின் வழியாக ஒருவர் வந்து கூப்பிட மீண்டும் பாதுகாப்புச் சோதனைகளைக் கடந்து உள்ளே சென்றேன். அப்போது அந்த தமிழர் வந்து என்ன இல்லையா என்றார். இல்லைங்க மறுபடியும் ஒரு பார்வை பார்க்கட்டுமா என்றேன் ஒரு நப்பாசையில்... இல்லைங்க நான் உள்ளயே போயிப் பார்த்துட்டு வந்துட்டேன். உங்க பேக் இல்லை. நீங்க புகார் கொடுத்துட்டுப் போங்க என்றார்.

சரி ஆனது ஆச்சு... இனி என்ன செய்ய புகார் பண்ணிட்டுப் போவோம் என அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன கிடைக்கலையா என்றவர், சரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆபீசுக்கு போன் பண்ணி தொடர்பு எண் இருக்கான்னு கேட்போம் என்றார். அருகிலிருந்த பெண்ணிடம் சொல்ல அவரோ டேக் (Tag) நம்பர் வேண்டும் என்று சொல்லி என்னை அந்தப் பெட்டியில் இருக்கும் நம்பரைக் குறித்து வா என்றார். உடனே ஒண்ணில் இருந்து ஆறுக்கு ஓடினேன். பேரையும் நம்பரையும் எழுதிக் கொண்டு ஓடிவந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தேன். அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்து விசாரிக்க அவர்களோ இன்னொரு நம்பர் அதாவது Sequential Number வேணுமின்னு சொல்லிட்டாங்க. உடனே ஓடிப்போயி பேக்கையே தூக்கிக்கிட்டு வந்தேன். போன் செய்த பெண்ணைக் காணோம். அங்கே ஒரு லெபனானி அதிகாரி அமர்ந்திருந்தார்.

நான் சொல்லும் முன்னே பிலிப்பைனிப் பெண் விவரம் சொல்ல, அவர் ஏர் இந்தியாவுக்கு அழைத்தார். அவர்கள் துபாய் தொடர்பு எண் இல்லை என்றும் இந்தியா எண்தான் இருக்கு என்றும் சொல்லி நம்பரைக் கொடுத்தார்கள். என்னிடம் உனது போனில் இருந்து தொடர்பு கொள் என்றார். ஐயா சாமி ஊருக்குப் போயி நாப்பது நாளைக்கு மேலாச்சு. போன்ல இங்க கூப்பிடத்தான் காசிருக்கு.. ஊருக்கெல்லாம் கூப்பிடணுமின்னா கார்டு போட்டாத்தான் முடியும்ன்னு சொல்ல, அப்ப புகார் கொடுத்துட்டுப் போ என்றார். பின்னர் என்ன நினைத்தாரோ அவரே போன் பண்ணிட்டு சுவிட்ச் ஆப்ல இருக்கு... புகார் கொடுத்துட்டு போ என்று சொல்லி அதில் என்னென்ன இருந்தது என விவரமாகக் கேட்டு  எனது போன் நம்பர் விவரம் எல்லாம் போட்டு புகார் பதிவு பண்ணி ஒரு பேப்பரைக் கொடுத்து உங்க பெட்டி வந்ததும் போன் பண்றோம். வந்து வாங்கிக்கிட்டுப் போங்க என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு கிளம்ப, அந்த சூடானி வெளியில மறுபடியும் போய்ப்பாரு... ஒருவேளை அவங்க வந்திருந்தா கூட்டிக்கிட்டு வா... என்று சொல்லி அனுப்பினார். என்னடா இப்படி ஆச்சே... சான்றிதழ் எல்லாம் இருக்கேன்னு கவலையோட வந்தேன். வெளியே வந்து எவனாவது நிக்கிறானான்னு தேடினா ரெண்டு பேரு நம்ம பேக்கை வச்சிக்கிட்டு திருவிழாவுல காணாமப் போன பிள்ளைங்க மாதிரி நின்னானுங்க... போயி புடிச்சி ஏன்யா நீ பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் பொயிட்டே... ரெண்டு மணி நேரமா நாயா அலையிறேன்னு சொன்னதும் இல்லைங்க எந்தம்பி அவசரத்துல மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டான்... சாரிங்க என்றான் அண்ணன்காரன். ஏங்க உங்க தம்பிதான் கொட்டையெழுத்துல பேரெழுதி வச்சிருக்காரே பின்ன எப்படிங்க... நல்ல ஆளுங்க... சரி விடுங்க... நல்ல நேரத்துல வந்தீங்க... இல்லேன்னா கவலையோட அபுதாபி போயிருப்பேன்னு சொல்ல எப்படி உள்ள போறதுன்னு கேட்டானுங்க... வாங்கன்னு மீண்டும் போன்... அந்தத் தமிழர் வந்து சொன்னேன்ல கெடச்சிருச்சு பாருங்க என்று கூட்டிச் சென்றார்.

அந்த சூடானி பாத்துட்டு கிடைச்சிருச்சா... சேம் சேம் பேக்கா... என்று சொல்லிச் சிரித்தவர். உம்பேரை எழுதிட்டு இப்படி எடுத்துக்கிட்டுப் பொயிட்டியே என்று அவனைப் பார்த்து சத்தம் போட்டார். சாரிங்க அவசரத்துல மாறிடுச்சு என்றான். இனிமே வரும் போது அவசரப்படாம உன்னோட பேக்கை எடுத்துக்கிட்டுப் போகணும் அடுத்தவங்க பேக்கை எடுக்கக்கூடாது என்றார் சிரித்துக் கொண்டே. பின்னர் புகாரை திரும்பப் பெற்று கையொப்பம் இட்டுக் கொடுக்க, அவனிடம் பேக்கை திறந்தியா என்று அந்த சூடானி கேட்க இல்லை என்றான். உடனே நீ திறந்து உன்னோட பொருட்கள் இருக்கான்னு பாரு... குறிப்பா சான்றிதழ் பைல் இருக்கான்னு பாரு என்றார். 

நானும் திறந்து பார்த்து இருக்கு என்று சொல்லவும் அவனைப் பார்த்து நீ போ என்றார். உடனே அவன் நன்றி சொல்லிக் கிளம்ப, எங்களுக்கு நன்றி சொல்றது இருக்கட்டும் அவருக்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டுப் போ... ரெண்டு மணி நேரத்துக்கு மேலாச்சு இந்நேரம் அபுதாபியே போயிருப்பாரு...  என்று சொல்லி என்னிடம் எங்கிருந்து வாறீங்க என்று கேட்டார். இந்தியா, தமிழ்நாடு என்றதும் மத்த ஆளுங்க மாதிரி கிருகிருன்னு (பேசிக்கிட்டே இருப்பது) கத்தாமல் ரொம்பப் பொறுமையா இருந்தாரு... இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப நல்லவருன்னு சொல்ல அவனும் மன்னிப்புக் கேட்டுவிட்டுச் சென்றான். 

இதுக்கு இடையில ஊருக்கும் வேற சொல்லியாச்சா... மனைவியிடம் இருந்து போன் மேல போன் பெட்டி கிடச்சிருச்சும்மான்னு சொன்னதும்தான் அவருக்கு நிம்மதி. பின்னர் நான் பஸ் மாறி.. மாறி... அபுதாபி வந்து சேர பதினோரு மணி ஆயிருச்சு... வந்ததும் குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடினேன்.

நம்ம நிலைதான் இப்படின்னா... ஊருக்கு வந்திருந்த அண்ணன் சிங்கப்பூருக்கு திங்கள்கிழமை போச்சு... அதோட பெட்டியும் இதே கதையில மாறி, புகார் பண்ணி... இவனுக வந்து வாங்கச் சொன்னானுங்க... அவனுங்க அழகா அன்று மாலையே அலுவலகத்துக்குக் கொடுத்து விட்டுட்டானுங்க... நான் என்னண்ணே போயாச்சான்னு கேட்டா உன்னைய மாதிரியே நானும் பெட்டியை தொலச்சிட்டேம்ப்பான்னு சொல்லிச் சிரிக்கிறார். இது எப்படியிருக்கு...

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Nisha Sat 27 Jun 2015 - 19:56

இரு திரிகளையும் ஒன்றாக்கினேன் குமார். 

படிக்கும் போது  தொடர்ச்சியா ய்படிக்க கருத்திட இலகுவாயிருக்கும். 

 காணாமல் போன பெட்டி திரும்ப கிடைத்தது என்றறிந்த பின் தான்  மனசு அமைதியானது.   சான்றிதல்கள் மற்றும்  முக்கியமான பொருட்களை நம் கையோட வைத்திருப்பது போல குட்டி பையில் வைத்து தோளில் தொங்க விட்டுக்கணும்.  நம் கையோடவே இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by *சம்ஸ் Sat 27 Jun 2015 - 19:59

நான் பாதி படித்துவிட்டேன் மிகுதியை படித்துவிட்டு பதில் எழுதுகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by சே.குமார் Sat 27 Jun 2015 - 21:08

Nisha wrote:இரு திரிகளையும் ஒன்றாக்கினேன் குமார். 

படிக்கும் போது  தொடர்ச்சியா ய்படிக்க கருத்திட இலகுவாயிருக்கும். 

 காணாமல் போன பெட்டி திரும்ப கிடைத்தது என்றறிந்த பின் தான்  மனசு அமைதியானது.   சான்றிதல்கள் மற்றும்  முக்கியமான பொருட்களை நம் கையோட வைத்திருப்பது போல குட்டி பையில் வைத்து தோளில் தொங்க விட்டுக்கணும்.  நம் கையோடவே இருக்கும்.
வாங்க அக்கா.
வணக்கம்.
ஒரு திரியில் கொண்டு வந்தீர்களா? நான் என்னாச்சு என குழம்பி மீண்டும் தனித்தனியாக இட்டு வைத்தேன்.
எல்லாம் ஒரே பெட்டியில் கையில் கொண்டு வரலாம் என கொண்டு வந்தது...
கருத்துக்கு நன்றி அக்கா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by சே.குமார் Sat 27 Jun 2015 - 21:11

*சம்ஸ் wrote:நான் பாதி படித்துவிட்டேன் மிகுதியை படித்துவிட்டு பதில் எழுதுகிறேன்.
வாங்க சகோ.
தங்கள் கருத்துக்கு நன்றி...
முழுவதையும் படித்துவிட்டு வாருங்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Nisha Sun 28 Jun 2015 - 0:46

சே.குமார் wrote:
Nisha wrote:இரு திரிகளையும் ஒன்றாக்கினேன் குமார். 

படிக்கும் போது  தொடர்ச்சியா ய்படிக்க கருத்திட இலகுவாயிருக்கும். 

 காணாமல் போன பெட்டி திரும்ப கிடைத்தது என்றறிந்த பின் தான்  மனசு அமைதியானது.   சான்றிதல்கள் மற்றும்  முக்கியமான பொருட்களை நம் கையோட வைத்திருப்பது போல குட்டி பையில் வைத்து தோளில் தொங்க விட்டுக்கணும்.  நம் கையோடவே இருக்கும்.
வாங்க அக்கா.
வணக்கம்.
ஒரு திரியில் கொண்டு வந்தீர்களா? நான் என்னாச்சு என குழம்பி மீண்டும் தனித்தனியாக இட்டு வைத்தேன்.
எல்லாம் ஒரே பெட்டியில் கையில் கொண்டு வரலாம் என கொண்டு வந்தது...
கருத்துக்கு நன்றி அக்கா.

அடடா! அப்படியா? நான் தான் இரவு சரியாக திரி இணைப்பை கவனிக்கவில்லையோ என நினைத்து  காலை மீண்டும் இணைத்தேன்பா. 

அது சரி உங்களால் திரியை பிரிக்க முடித்ததா குமார்?  

லக்கேஜ்  ஒரு பெட்டி மட்டும் தான் கொண்டு வந்தீர்களா? உணவுப்பொருட்கள் எதுவும் கொண்டே வரலையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by சே.குமார் Sun 28 Jun 2015 - 6:34

Nisha wrote:

திரியில் ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் தனியாக போஸ்ட் பண்ணினேன் அக்கா...
வருத்தமாய் வந்ததால் 10 கிலோவுக்குள்தான் கொண்டு வந்தேன்.
ஒன்றும் வாங்கி வரவில்லை... லக்கேஜ் எல்லாம் கொண்டு வரவில்லை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by *சம்ஸ் Sun 28 Jun 2015 - 9:06

ரெம்ப கவலையுடன் நகர்ந்தது கதை அவசரம் எதுக்கும் ஆகாது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரம் ஆபத்தை விளைவிக்கும் இந்த கதையில் இருந்து நிதானம் அவசியம் பொருமை வெற்றியளிக்கும் என்று உணர்ந்தேன்.

எப்படியோ தங்களின் பேக் கிடைத்ததும் மனசு அமைதியானது.தாங்கள் கடந்து வந்த பயணத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Nisha Sun 28 Jun 2015 - 11:16

*சம்ஸ் wrote:ரெம்ப கவலையுடன் நகர்ந்தது கதை அவசரம் எதுக்கும் ஆகாது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரம் ஆபத்தை விளைவிக்கும் இந்த கதையில் இருந்து நிதானம் அவசியம் பொறுமை வெற்றியளிக்கும் என்று உணர்ந்தேன்.

எப்படியோ தங்களின் பேக் கிடைத்ததும் மனசு அமைதியானது.தாங்கள் கடந்து வந்த பயணத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

இது கதை என எங்கே  சார்  எழுதி இருக்கின்றார். சுட்டுத்தள்ளு.!!    என்ன கொடுமை  

குமாரின் சொந்த அனுபவத்தை எப்படி கதை என சொல்லலாம். அதை விட  குமார்  ஒன்றும் அவசரப்பட்டதாக தெரியவில்லையே.... லக்கேஜ் அதிகம் இல்லாததால் கையில்  மட்டும்  ஒரு பையோட புறப்பட்டிருக்கார்.  அந்த ப்பை  கையில் கொண்டு செல்லும் அளவை விட அதிகமென்பதால்  விமான லக்கேஜில் போடப்பட்டிருக்கின்றது. இதில் அவசரம் எங்கே இருந்து வருமாம்? அவர் பொறுமையாக கையாண்டிருப்பதாகத்தான் தெரிகின்றது.

முக்கியமான சான்றிதல்கள், மத்திரை, மருந்துகள், இன்கோலர்கள், ஒரு மாற்று உடை,  ரவல் என  எடுத்து தனியே வைத்து  தோளில்  போடும் படியாய் குட்டிப்பை  வைத்திருப்பது எப்போதுமே நல்லது. நான் எங்கள் பயணத்தில் எப்போதும்  அவசரத்தேவைக்கு என தனியே  தேவைப்படுவதை எடுத்து வைத்து விடுவேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Nisha Sun 28 Jun 2015 - 11:20

சே.குமார் wrote:
Nisha wrote:
சே.குமார் wrote:
Nisha wrote:இரு திரிகளையும் ஒன்றாக்கினேன் குமார். 

படிக்கும் போது  தொடர்ச்சியா ய்படிக்க கருத்திட இலகுவாயிருக்கும். 

 காணாமல் போன பெட்டி திரும்ப கிடைத்தது என்றறிந்த பின் தான்  மனசு அமைதியானது.   சான்றிதல்கள் மற்றும்  முக்கியமான பொருட்களை நம் கையோட வைத்திருப்பது போல குட்டி பையில் வைத்து தோளில் தொங்க விட்டுக்கணும்.  நம் கையோடவே இருக்கும்.
வாங்க அக்கா.
வணக்கம்.
ஒரு திரியில் கொண்டு வந்தீர்களா? நான் என்னாச்சு என குழம்பி மீண்டும் தனித்தனியாக இட்டு வைத்தேன்.
எல்லாம் ஒரே பெட்டியில் கையில் கொண்டு வரலாம் என கொண்டு வந்தது...
கருத்துக்கு நன்றி அக்கா.

அடடா! அப்படியா? நான் தான் இரவு சரியாக திரி இணைப்பை கவனிக்கவில்லையோ என நினைத்து  காலை மீண்டும் இணைத்தேன்பா. 

அது சரி உங்களால் திரியை பிரிக்க முடித்ததா குமார்?  

லக்கேஜ்  ஒரு பெட்டி மட்டும் தான் கொண்டு வந்தீர்களா? உணவுப்பொருட்கள் எதுவும் கொண்டே வரலையா?
திரியில் ஒன்றை அழித்துவிட்டு மீண்டும் தனியாக போஸ்ட் பண்ணினேன் அக்கா...
வருத்தமாய் வந்ததால் 10 கிலோவுக்குள்தான் கொண்டு வந்தேன்.
ஒன்றும் வாங்கி வரவில்லை... லக்கேஜ் எல்லாம் கொண்டு வரவில்லை...

திரியை அழிக்க முடிந்ததா என்பது தானேப்பா என் கேள்வி?

திரியை தொடங்க   முடிவது போல்   தொடங்கிய திரியை அழிக்க முடிகின்றதா குமார்?

அடடா  நாம எல்லாம் விமானத்தில் புறப்பட்டால்  எங்க நான்கு பேரின் பொருளுக்கான லக்கேஜ் அளவும் தாண்டி போஸ்ட்டிலும் போட்டு விடும்படி தானப்பா பொருட்கள் சேரும். இங்கிருந்து புறப்பட்டால் அளவோடு கொண்டு செல்வேன். அங்கிருந்து வரும் போது பெட்டி தாங்காது.  அப்படி துணி மணி சேரும்.  ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by *சம்ஸ் Sun 28 Jun 2015 - 12:23

Nisha wrote:
*சம்ஸ் wrote:ரெம்ப கவலையுடன் நகர்ந்தது கதை அவசரம் எதுக்கும் ஆகாது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரம் ஆபத்தை விளைவிக்கும் இந்த கதையில் இருந்து நிதானம் அவசியம் பொறுமை வெற்றியளிக்கும் என்று உணர்ந்தேன்.

எப்படியோ தங்களின் பேக் கிடைத்ததும் மனசு அமைதியானது.தாங்கள் கடந்து வந்த பயணத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.

இது கதை என எங்கே  சார்  எழுதி இருக்கின்றார். சுட்டுத்தள்ளு.!!    என்ன கொடுமை  

குமாரின் சொந்த அனுபவத்தை எப்படி கதை என சொல்லலாம். அதை விட  குமார்  ஒன்றும் அவசரப்பட்டதாக தெரியவில்லையே.... லக்கேஜ் அதிகம் இல்லாததால் கையில்  மட்டும்  ஒரு பையோட புறப்பட்டிருக்கார்.  அந்த ப்பை  கையில் கொண்டு செல்லும் அளவை விட அதிகமென்பதால்  விமான லக்கேஜில் போடப்பட்டிருக்கின்றது. இதில் அவசரம் எங்கே இருந்து வருமாம்? அவர் பொறுமையாக கையாண்டிருப்பதாகத்தான் தெரிகின்றது.

முக்கியமான சான்றிதல்கள், மத்திரை, மருந்துகள், இன்கோலர்கள், ஒரு மாற்று உடை,  ரவல் என  எடுத்து தனியே வைத்து  தோளில்  போடும் படியாய் குட்டிப்பை  வைத்திருப்பது எப்போதுமே நல்லது. நான் எங்கள் பயணத்தில் எப்போதும்  அவசரத்தேவைக்கு என தனியே  தேவைப்படுவதை எடுத்து வைத்து விடுவேன்.

 மேடம் கதை என்று சொன்னது தப்பா? சொந்த கதை சோகக் கதை அனுபவம் இப்படி சொல்வது வழக்கம் அதனால் அப்படி சொல்லி விட்டேன் மேடம். 

நான் குமார் சார் அவசரப்பட்டு விட்டார் என்று சொல்ல வில்லை மேடம்+ குமார் அவர்களின் பையை எடுத்து சென்றவர் அவசரப்பட்டு விட்டார். அதைச் சொன்னேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Nisha Sun 28 Jun 2015 - 14:20

ஹாஹா!

அப்படித்தெளிவாக சொல்லணுமாக்கும்.  

 சொந்தக்கதை, சோகக்கதை நியாயம் நல்லா இருக்கு சம்ஸ்!  அவ்வூ! ஐஸ் சாப்பிடுங்க

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by *சம்ஸ் Sun 28 Jun 2015 - 20:51

புரிதலுக்கு நன்றி மேடம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி Empty Re: விமான நிலையத்தில் தவிக்க வைத்த பெட்டி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்
» சென்னை விமான நிலையத்தில் ரஜினியை அவமதித்தார்களா?
» ரூ 2 கோடி சீன செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!
» சென்னை விமான நிலையத்தில் தீவிபத்து : விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
» சென்னை விமான நிலையத்தில் ஆற்றின் குறுக்கே பிரமாண்ட, ரன்வே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum