சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Khan11

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

2 posters

Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by சே.குமார் Fri 24 Jul 2015 - 7:57

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Liquer1


து...

என்னடா இவன் இப்பத்தான் மது பற்றி ஒரு கட்டுரை போட்டான் அதுக்குள்ள மீண்டும் மதுவான்னு நீங்க யோசிக்கலாம். ஆனா மதுவில் விழுந்தவர்கள் மீண்டு வரவில்லை என்பதால்தான் மீண்டும் மீண்டும் மதுவுக்கான பகிர்வு அவ்வளவே. சரி விஷயத்துக்கு வருவோம். அதுக்கு முன்னாடி கீழ இருக்கும் அட்டவணையைப் பாருங்கள். காமராஜர் கல்விச் சாலைகளை அமைத்து மக்களை நல்வழிப்படுத்தினார். இன்றைய அரசியல்வாதிகளோ மதுவை ஊற்றி மல்லாக்க படுக்க வைக்கின்றனர். நம் மாநிலத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட உயர்ந்து நிற்கிறது அரசு மதுபானக் கடைகளின் எண்ணிக்கை... சிந்திக்க விடாமல் சிந்தை அளிக்கும் மதுவுக்கே மரியாதை...

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Tasmac-Today-status


மதுவினால் மாண்டோரும் அவர்களால் தெருவில் வீழ்ந்த குடும்பங்களும் என்ற நிலை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் என்ன ஒரு வேதனையான விஷயம் என்றால் மக்களுக்கு படிப்பறிவு கூடக்கூட மதுவின் பிடிக்குள் அதிகமானோர் விழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அன்று ஏழைகளின் தோள் மீது ஏறிக் கொண்டு பல குடும்பங்களை கழுத்தறுத்த மது இன்று குடும்ப உறவுகள் மூலமாக குழந்தைகளிடமும் நட்பின் மூலமாக மாணாக்கர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Gallerye_001541612_964118

மதுவினால் அரசுக்கு வருமானம்... அதுபோக மது பானங்களைத் தயாரிப்போர் எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ஏதோ ஒரு வகையில் வேண்டப்பட்டோர் என்பதுடன் சில அவர்களின் பினாமியாகவும் இருக்கலாம். ஒரு குடும்பத்தை அழித்துத்தான் தங்கள் வீட்டில் சாப்பிட வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்றாலும் கோடி கோடியாக சம்பாதித்து வாரிசுகளுக்கு சொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் எவன் குடி கெட்டால் என்ன நமக்கு கோடிகள் ஏறினால் போதும் என்ற எண்ணமே மது தயாரிப்பாளர்களின் மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

கர்நாடகாவில் இருக்கும் மதுத் தொழிலதிபர் ஒரு கிரிக்கெட் அணியையும் விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு போட்டி நடக்கும் இடங்களில் ஆட்டம் போடும் சியர்ஸ் பெண்களுடன் பொது இடத்தில் கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறான். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லை என்று சொல்லி, வங்கியில் வாங்கிய 400 கோடியை சுவாகா போட்டுவிட்டான். அவனது நானூறு கோடியை தள்ளுபடி செய்தது மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நாம் பெரிதும் நம்பிய தற்போதைய மத்திய அரசு. எத்தனை குடும்பங்களை அழித்து கோடிகளில் புரள்கிறான். அவனுக்கு தள்ளுபடி, வங்கியில் நானூறு ரூபாய் கட்ட முடியாத ஏழை விவசாயியை இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. எல்லாம் அரசியல் என்ன செய்வது..?

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Inipum%2Bmiga%2Bkasakum_4

இவனுக்கு மட்டுமல்ல அதானிக்கும் கோடிகளில் விலக்கு, அவன் மனைவியின் பாதத்தில் பாரதப் பிரதமர் நமஸ்காரம்... ம்... பேச்சு எங்கிட்டோ போகுது... தண்ணியடிச்சவன் மாதிரி எல்லாப் பக்கமும் சுத்துது... சரி வாங்க நம்ம கதைக்கு வருவோம்....

இப்போ அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் எல்லாக் கட்சிகளுமே தங்களின் மாநாட்டுக்கு பிரியாணியும் சாராயமும் கொடுத்துத்தான் ஆட்களை சேகரித்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு போராட்டம் என்றாலும் போராடியவர்களுக்கு வலி நிவாரணியாக மதுதான் பரிமாறப்படுகிறது. மெட்ரோ இரயிலைக் கொண்டு வந்தது நாங்கதான் என்று அடித்துக் கொள்ளும் அரசியல்கட்சிகள் இன்று மதுக்கடைகளை அடைக்கும் கோஷத்தை நாங்கள்தான் முதலில் கையிலெடுத்தோம் என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். 

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Tamil-Daily-News_91683161259

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே இருக்கும் மதுக்கடைகளை மூடச் சொன்னதற்கே மூடாத அரசு, இலவசங்களைக் கொடுப்பதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை கூட்டிய அரசு, எவன் குடி கெட்டால் என்ன அரசுக்கு வருமானம் கோடிகளில் வருகிறதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருந்த அரசு, இன்று மக்களை முட்டாளாக்கி தங்கள் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. இங்கே அரசு என்றதும் ஆளும் கட்சி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆளும், ஆண்ட, ஆளுவோம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிற எல்லாமே இதில் அடக்கம். 

இங்கே எங்களது அறை நண்பர் ஒருவர் பாட்டாளி மக்கள் கட்சிதான் இதை முதலில் கையில் எடுத்தது. இந்த முறை அம்மா இதை செய்யவில்லை என்றால் பா.ம.க. ஆட்சியைப் பிடிக்கும் என்கிறார். என்னத்தைச் சொல்வது..? இருக்கும் சாதிகளைவிட சாதிக்கட்சிகள் இங்கே அதிகம். சாதிக்கட்சிகள் எல்லாம் ஆட்சியைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லைதான். அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று குதிக்கும் இவர்கள் எல்லாம் எதையும் செய்வதில்லை. இவர்கள் எல்லாரும் ஒரே பாதையில் பயணிக்கும் காரணமே செம்மறி ஆட்டுக் கூட்டமாய் இருக்கும் நம்மளை முட்டாளாக்கி லாபம் பார்க்கும் செயல் மட்டுமே.

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Large_230108நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்று சொல்லியே அரசியல் பண்ணும் இவர்கள் கையில் இப்போது எடுத்திருக்கும் ஆயுதம்தான் இந்த மது ஒழிப்பு. இவர்களை இந்த ஆயுதம் எடுக்க வைத்த அந்த புண்ணியவான்கள் வேறு யாருமல்ல... குழந்தைகளுக்கு ஊற்றிக் கொடுத்த மதுவெறியர்களும் குடித்துவிட்டு கூறுகெட்டுப் போன மாணவர்களும்தான். இனி இவர்கள் மதுவை ஒழிக்கிறேன் என்று அடித்துக் கொள்வார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்லி நம்மை அசர வைப்பார்... ஆளும் காவிரித்தாய் திடீரென கடைகளை மூடி மதுவிலக்கை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இவர்கள் செயல்கள் எல்லாமே அரசியல் நாடகம்தான்... இவர்கள் படாடோப வாழ்க்கை வாழ அந்தந்த சூழலுக்கு ஏற்ப மேடையேற்றும் நாடகங்களில்.. தேர்தல் நேரத்தில் நாம் ராஜபார்ட்... இவர்கள் சகுனிகள்... தேர்தலுக்குப் பிறகு அதே நாடகத்தில் இவர்கள் பரிவாரங்களுடன் பவனி வரும் ராஜபார்ட்.... நாமெல்லாம் பபூன்.


காந்தி ஜெயந்தி என்றாலும் கடைக்குப் பின்னே வைத்து விற்பவனும் காலையிலேயே கட்டிங் அடிக்கும் மனிதர்களும் எப்பவும் போல் தங்கள் அன்றாட நிகழ்வை நடத்தி வருகிறார்கள்... வருவார்கள். இதில் எதுவுமே மாறப் போவதில்லை. அப்படியே மூடினாலும் கடைகளில் பார் நடத்துகிறேன் என்று அராஜகம் நடத்தும் உள்ளூர் ரவுடிகள் கள்ளச்சாராய அதிபதிகளாகி கொல்லும் தொழிலை நேர்த்தியுடன் செய்வார்கள். மேலும் தேர்தல் நேரத்தில் தேவைக்காக மூடிவிட்டு மீண்டும் குடிகெடுக்க வருவார்கள் என்பதே உண்மை. இதுதான் நடக்கும். கோடிகளைப் பார்த்த அரசு கோமாவில் கிடக்குமா என்ன?

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... 11774515_1191203934239156_1533419149_n


அப்புறம் இன்னொரு விஷயங்க... சாதி, சாதியின்னு இப்ப எல்லாரும் கிளம்பியாச்சு.... இதைப் பற்றி பேசணும்... மற்றுமொரு மனசு பேசுகிறது பகிர்வில் பேசலாம்.

நன்றி : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty Re: மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by Nisha Fri 24 Jul 2015 - 22:15

தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க வக்கில்லை என்று சொல்லி, வங்கியில் வாங்கிய 400 கோடியை சுவாகா போட்டுவிட்டான். அவனது நானூறு கோடியை தள்ளுபடி செய்தது மாற்றங்களைக் கொண்டு வரும் என்று நாம் பெரிதும் நம்பிய தற்போதைய மத்திய அரசு. எத்தனை குடும்பங்களை அழித்து கோடிகளில் புரள்கிறான். அவனுக்கு தள்ளுபடி, வங்கியில் நானூறு ரூபாய் கட்ட முடியாத ஏழை விவசாயியை இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது. எல்லாம் அரசியல் என்ன செய்வது..?

இந்தியாவில் மட்டுமா? உலகமெங்கும் இதே நிலை தான். ஏழைகளை , சின்ன தொழில் செய்பவர்களை வரி எனும் பெயரில் சுரண்டி சுரண்டியே சாவடிப்பார்கள். 

கோடி கோடியாய்  சம்பாதிப்பவர்களுக்கு கோடி க்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யவும் தெரியிது.  அதை எப்படி கறுப்பில் சேர்ப்பது எனவும் தெரியிது. பணம் செய்யும் பாடு!என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty Re: மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by Nisha Fri 24 Jul 2015 - 22:16

எல்லாக் கட்சிகளுமே தங்களின் மாநாட்டுக்கு பிரியாணியும் சாராயமும் கொடுத்துத்தான் ஆட்களை சேகரித்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ஏதாவது ஒரு போராட்டம் என்றாலும் போராடியவர்களுக்கு வலி நிவாரணியாக மதுதான் பரிமாறப்படுகிறது. 

தொட்டிலையும் கிள்ளி பிள்ளையையும் ஆட்டுவது என்பது இதைத்தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty Re: மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by Nisha Fri 24 Jul 2015 - 22:18

மனசோடு பேசினாலும்  நிஜமான ஆதங்கம் தான்குமார். சாதியும், மதுவும்  மதமும்  மனிதனை மதம் பிடிக்க வைக்கும் வரை  இந்த மாதிரி அரசியல் வாதிகள் காட்டில் மழை தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty Re: மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by சே.குமார் Sat 25 Jul 2015 - 7:18

தங்களது அருமையான கருத்துக்களுக்கு நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்... Empty Re: மனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசியல்வாதிகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum