சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Khan11

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

3 posters

Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by சே.குமார் Fri 14 Aug 2015 - 21:12

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.


மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? 14-1376458678-indian-flags-600


ந்திய சுதந்திர தினம் குறித்து முகநூலில் சிலர் மோசமான கருத்தைப் பகிர்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். அரசியல்வாதிகள் செய்யும் அசிங்கங்களுக்கு நம் தாயைப் பழிப்பது நியாயமா என்ன..? இந்தியா என் நாடு... என் தாய் நாடு... என்ற எண்ணம் ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்க வேண்டும். கேலி கிண்டல் செய்யும் மனிதர்களை எல்லாம் இவ்வளவு சுதந்திரமாக இருக்க வைத்திருக்கும் நாடு நம் நாடு என்பதை மனதில் கொள்ளுங்கள். அரசியல் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் நம் நாட்டை கூறு போட்டு குதறி வைத்திருக்கலாம். இவர்களை விரட்டி அடிப்பதை விட்டுவிட்டு நாட்டின் பெருமையை, ஒரு சிறப்பான தினத்தை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு அற்ப சந்தோஷம் என்றால் செய்து கொள்ளுங்கள்... ஏனென்றால் நாம் சுதந்திர நாட்டின் பிள்ளைகள். நமக்கு எதுவேண்டுமானாலும் பேச, எழுத சுதந்திரம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எங்கிருந்தாலும் என் நாடு இந்தியா என்று சொல்வதையே பெருமையாகவும் கர்வமாகவும் நினைக்கிறேன். என் தாய் நாட்டின் சுதந்திர தினத்தில் ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து எல்லோரும் ஓர் குலம்...  எல்லோரும் ஓர் இனம்... என்ற அன்புள்ளத்தோடு ஒற்றுமையாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.


மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap


லுவலகத்தில் உடனே முடிக்க வேண்டிய முக்கிய பணியின் காரணமாக கடந்த பத்து நாட்களாக அதிகமான வேலை... ஊருக்குப் பேசுவது.. எழுதுவது... படிப்பது என எல்லாவற்றிலுமே தடங்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக அந்த வேலையை முடித்து விட்டோம்... இரண்டு நாட்களாக  வேலையில்லாமல் கொஞ்சம் பொழுதைப் போக்கினோம். நேற்று மாலை கிளம்பும் சமயத்தில் மீண்டும் ஒரு வேலை... ஒருவேளை இந்த வேலை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் மீண்டும் இரவு பகல் வேலை இருக்கும். இங்கும் தற்போது கம்பெனிகளின் நிலை சரியில்லை. எங்கள் கம்பெனிக்கும் இதுவரை வேறு புதிய வேலைகள் கிடைக்கவில்லை என்பதாலும் வேறு கம்பெனி சென்றாலும் புதிய வேலையில் எவ்வளவு நாள் தொடருவோம் என்று அறியாத நிலை... அதனால் எங்கள் கம்பெனி எத்தனை மணி நேரம் வேலை செய்யச் சொன்னாலும் செய்ய வேண்டிய நிலை.  

போன வார வியாழன் அன்று இரவு முழுவதும் பணி இருக்கும் என்பதால் சாப்பாடு வாங்கி வருகிறேன் என்று எங்க இன்சினியர் சொன்னான். நான் வியாழன் அன்று சாய்பாபாவிற்காக விரதம் இருக்கிறேன் என்பதால் என்னிடம் நீ என்ன சாப்பிடுவே என்று கேட்க, இரவு பனிரெண்டு மணிக்கு மேல ஆச்சு எதாயிருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன். அவனும் வாங்கி வந்தான்... என்ன தெரியுமா?

மாட்டுக்கறி போட்ட பீட்சா... பார்த்ததுமே என்ன இது... மாட்டுக்கறியா என்றதும் ஏன் சாப்பிட மாட்டியா...? உங்கிட்ட கேட்டுத்தானே வாங்கியாந்தேன் என்றான். மாட்டேன் என்றதும் ஆடு, கோழி சாப்பிடுவே ஆனா மாடு சாப்பிடமாட்டே... என்னடா இது என்றான். எனக்கு வேண்டாம்... என்று சொன்னதும் ஓ உன்னோட மதத்தின் காரணமாக சாப்பிட மாட்டாயோ என்றவன் ஒரு சீஸ் பிரட்டும், இலைகளைப் போட்ட சாலட்டும் கொடுத்து இதை சாப்பிட்டுட்டு எப்படி வேலை பாக்கப்போறே என்றான் வருத்தமாய். நான் சொன்னேன் இந்த எட்டு வருசத்துல எத்தனையோ முறை இரவு வேலை பாத்திருக்கிறேன்... ஒரு பைசாவுக்கும் பிரயோசனம் இல்லை என்றாலும் இரவு சாப்பாடு கூட நாமதான் சாப்பிட்டுக்கணும்... இன்னைக்குத்தான் நீ வாங்கியாந்தே... அதையும் சாப்பிட முடியலைபாரு என்றதும் சிரித்துக் கொண்டே எழுந்து சென்றான்.

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap


மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Kalki%2Bpottiணையாழி இந்த மாத குறுநாவல் போட்டிக்கு ஒரு கதையை மிகவும் கஷ்டப்பட்டு குறுநாவலாக்கி அனுப்பிவிட்டேன். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் கணக்கில் எடுக்கவில்லை... கணையாழி போன்ற பத்திரிக்கைகளுக்கு போட்டிக்கென அனுப்பும் போது மிகச் சிறந்த நபர்கள் வாசிக்க கூடும். அவர்கள் மனதில் இவர் நல்லா எழுதியிருக்கிறான் என்ற எண்ணம் வந்தாலே போது மனசுக்குள் நல்லா வருவேடான்னு வாழ்த்துவாங்கதானே... அது போதும். அடுத்து கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுத ஆரம்பிக்கணும். தேனம்மை அக்கா கூட தனது பதிவில் கல்கி போட்டியில் எழுதுங்க என நிறையப் பேரை குறிப்பிட்டிருந்தார். அதில் அடியேன் பெயரும் இருந்தது. முயற்சி திருவினையாக்கும் என்பதால் நானும் முயற்சிக்க இருக்கிறேன். நீங்களும் கலந்துக்கங்க நட்புக்களே...

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap


சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு வக்கீல்கள் கொம்பன் படத்தில் கார்த்தி நடித்திருக்கும் கதாபாத்திரம் எங்க ஜாதிக்கானது... இல்லை எங்க ஜாதிக்கானது என சுற்றுலா போன இடத்தில் முட்ட ஆரம்பித்து... அதை தினமும் ஊதி... ஊதி... வன்மத்தை வளர்த்து ஒரு நாள் இரவு மீண்டும் சுற்றுலாவுக்குச் செல்ல கோர்ட் வளாகத்துக்கு வந்த போது பெரும் மோதலாக உருவெடுத்து ஒரு வக்கீல் மற்றொரு வக்கீலை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு போலீஸில் போய் சரணடைந்திருக்கிறார். 

சினிமா என்பது பொழுது போக்குச் சாதனமே... இரண்டு மூன்று மணி நேரம் பார்த்து ரசிக்கலாம்.  அதன் பிறகு அது குறித்த தாக்கத்தை மனசுக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது. எதற்காக அதைத் தூக்கிச் சுமக்க வேண்டும். கேவலம் ஒரு சினிமாக் கதாபாத்திரம் ஏற்ற சாதிக்காக ஒரு உயிரை எடுத்திருக்கிறான் படித்த வக்கீல் ஒருவன்... உயிர் என்ன அந்தளவுக்கு மலிவாகப் போச்சா... செத்தவனுக்கு இப்போத்தான் திருமணமாகி இரண்டு மாதக் குழந்தை இருக்கிறதாம்... என்ன சொல்வது? இவர்கள் எல்லாம் திருந்துவது எப்போது? அவன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தாலும் வெட்டுவோம் என்கிறார்கள் செத்தவனின் உறவுகள். இந்தப் பழிக்குப்பழி இனி தொடரத்தானே செய்யும். பழிக்குப்பழி என்றதும் எங்கள் சொந்தத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. இந்த விவரங்களை வைத்து பழிக்குபழி குறித்து தனிப்பதிவாக விரிவாக எழுதுகிறேன்.

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap


துபாய்க்கு சுற்றுலா வந்து கடலில் குளிக்கும் போது  தண்ணீருக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடி காப்பாற்றுங்கள் என்று கத்திய 20 வயது மகளை தனது கண்ணெதிரே சாகவிட்டிருக்கிறார் ஒரு தந்தை. ஆம்... காப்பாற்றச் சொல்லி கத்திய அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பணியில் இருக்கும் காவலர் குழு தண்ணீருக்குள் இறங்கும் போது என் மகளை அந்நிய ஆடவன் தொடக்கூடாது என அந்தத் தந்தை சண்டையிட்டு அவர்களை இறங்க விடாமல் தடுத்து அந்தப் பெண்ணை இறக்க விட்டிருக்கிறார். இப்போது தந்தை கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு உயிரைக் காப்பாற்றும் போது எந்த சாதி, எந்த மதம் என்று ஏன் பார்க்கிறீர்கள்... மனிதத்தை மட்டுமே பாருங்கள்... இருபது வருடம் வளர்த்த பெண்ணை ஒருவன் காப்பாற்றும் பொருட்டு இருபது நிமிடம் தொடுவதால் மதமும் அழிந்து விடாது... அவளின் கற்பும் கெட்டுவிடாது... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் மதங்களையும் அந்த மூட நம்பிக்கைகளையும் தூக்கிச் சுமப்பார்களோ தெரியவில்லை.... அநியாயமாய் ஒரு உயிர் போய்விட்டது. திருந்துங்கள் மனிதர்களே... அடுத்த மதத்துக்காரனோ ஜாதிக்காரனோ ஆபத்து நேரத்தில் தொடுவது ஒண்ணும் தீட்டு அல்ல என்பதை உணருங்கள் மனிதர்களே...

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap


செல்பி மோகத்தால் துபாயில் ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. நம்ம ராமநாதபுரத்துக்காரர் நண்பர்களுடன் ஹோட்டலுக்கு போயிருக்கிறார். இவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜைக்கு அருகே ஒரு அரபி இளைஞன் காதலியுடன் அமர்ந்திருக்கிறான். இவர்கள் சந்தோஷமாக சாப்பிட்டு செல்பி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அரபியோ இவர்கள் செல்பி எடுப்பது போல் தனது காதலியை போட்டோ எடுக்கிறார்கள் என அவர்களிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் சண்டை வலுக்க, அவன் இவனைத் தலையில் தாக்கியிருக்கிறான். ஆள் அங்கேயே மூச்சை விட்டுட்டான். போலீஸ் வந்திருக்கிறது... ஆஸ்பிடல் கொண்டு போயிருக்கிறது... எதுவும் நடக்கவில்லை... மகன் சம்பாரிக்கிறான் என்று இருந்த பெற்றோருக்கு பிணம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அடித்த அரபியோ ஜெயிலில் கிடக்கிறது. செல்பி மோகம் கொலையில் போய் முடிந்தாலும் நம்ம எல்லோரும் செல்பிக்குள் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம்.

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap



ன்பு அண்ணன் கில்லர்ஜி இன்று என்னைத் தேடி வந்திருந்தார். எப்போதும் அவர்தான் தேடி வருவார்... நான் போவதில்லை என்பது வேறு விஷயம்... நிறைய விஷயங்கள் பேசினார்... ஒரு காபியுடன் ஒரு மணி நேரம் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாடு, மற்றும் எழுத்துக்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். நிறையப் பேசிய நிறைவான சந்திப்பு... அண்ணா... வாராவாரம் வந்துருங்க...:)

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap



னதருமை அண்ணன் குடந்தையூர் சரவணன் அவர்கள் 'அகம் புறம்' என்ற தனது இரண்டாவது குறும்படத்தை நாளையும் எடுக்கவிருக்கிறார். சில நொடி சிநேகம் என்ற தனது முதல் குறும்படத்தில் மிகச் சிறப்பான கருத்தைக் கையாண்டிருந்தார். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவு மக்களைச் சென்றடையவில்லை என்பதில் எனக்கு வருத்தமே. இந்த முறை திரில்லர் கதையை கையிலெடுத்திருக்கிறார். மிகச் சிறப்பாக... எல்லோரையும் கவரும் வண்ணம் கண்டிப்பாக எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.  அண்ணனின் கையில் வெற்றிக் கோப்பை கிடைக்க வாழ்த்துகிறேன்... நீங்களும் வாழ்த்துங்கள் நட்புக்களே....

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap



புதுக்கோட்டையில் வலைப்பதிவர் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்பதை திரு.முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவுகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மேலும் புதுக்கோட்டை வலைப்பதிவு சகோதர, சகோதரிகள் எல்லாரும் முனைப்புடன் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்ற வருடம் மதுரையில் நடந்த போது கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம் இந்த முறையும் தொடரும் போல்தான் தெரிகிறது... விழாவுக்கு செல்ல வேண்டும் என்று முயற்சித்தாலும் இப்போது இருக்கும் அலுவலகச் சூழல் அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கலந்து கொள்ள முடியாவிட்டாலும் 'மனசு' அங்குதான் இருக்கும். விழா மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.


மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? India%2Bmap

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by நண்பன் Sat 15 Aug 2015 - 7:40

முதலில் உங்களுக்கும் இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

காலையில் வந்து முதலி்ல் படித்தது குமார் அண்ணா நீங்கள் கடந்து வந்த பாதையினை மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக எழுதியுள்ளீர்கள்

அரசியல் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் நம் நாட்டை கூறு போட்டு குதறி வைத்திருக்கலாம். இவர்களை விரட்டி அடிப்பதை விட்டுவிட்டு நாட்டின் பெருமையை, ஒரு சிறப்பான தினத்தை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு அற்ப சந்தோஷம் என்றால் செய்து கொள்ளுங்கள்...

வருத்தமான செய்தி போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் விட்டு விடுங்கள்

இருபது வயது மகள் சாகும் வரை யாரையும் தொட விடாமல் இருந்த தந்தையின் செய்தி கவலையும் ஆத்திரமும் ஊட்டியது

செல்பி எடுத்து உயிரை மாய்த்த சம்பவம் இன்னும் கவலையாக்கியது கொஞ்சம் விசாரித்து பொறுமையாக கையாண்டிருக்கலாம் அவசர யுகம் அனைத்திற்குமே அவசரம் போய் சேர்ந்து விட்டது ஒரு உயிர். அது கவலை

அகம் புறம் குரும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஏக்கங்கள் நிறமியதுதானே வாழ்க்கை ஏக்கங்களும் கனவுகளும் மத்திய கிழக்கில் வாழும் மக்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்
சிறப்பாக பல கதை சொன்ன உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by Nisha Sat 15 Aug 2015 - 13:28

சுதந்தின தினம்,  இந்தியாவைக்குறித்த கிண்டல்களை மன்ம் விட்டு பேசிய விதம் அருமை.  நிஜமான ஆதங்கம் தான். யாரோ ஒரு சிலர் செய்யும் செய்யும் செயல்களை வைத்து நாட்டையே கேவலப்படுத்துவது மிகத்தவறான காரியம் தான். அப்படி எழுதுவதன் மூலம் அவர்களை விட அதிகமாய் நாம்  இழிவு செய்கின்றோம் என உணர வேண்டும்.

செத்தாலும் பரவாயில்லை. அடுத்தவர் கை படக்கூடாது, அடுத்த ஜாதிக்காரனை தொடவிடக்கூடாது என உயிரில் மதம் பேசும் மனிதர்களை  நடுத்தெருவில் நிற்க வைத்து சுடணும். படித்ததும் ஐயோன்னு இருந்தது. 

இன்றைய உலகில் இந்த செல்ஃபி  பலருக்கு  உயிராபத்தை தானே தருகின்றது. இருந்தும் யாரும் திருந்துவதாயில்லை. அதிலும்  பொது இடங்களில் செல்ஃபி என்ன போட்டோ எடுக்கும் போது மிக கவனமாய்  இருக்கணும் என எப்போது கற்கபோகின்றோமோ?

கணையாழி குறு நாவல் போட்டியில் வெல்ல வாழ்த்துகள் குமார். கல்கிக்கும் எழுதி போடுங்க.. உங்களால் முடியும்!

மொத்தத்தில் மனதோடு பேசியது மனதை தொட்டது.  மனம் தொடர்ந்து பேசட்டும். பேசுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by சே.குமார் Sat 15 Aug 2015 - 21:48

Nisha wrote:சுதந்தின தினம்,  இந்தியாவைக்குறித்த கிண்டல்களை மன்ம் விட்டு பேசிய விதம் அருமை.  நிஜமான ஆதங்கம் தான். யாரோ ஒரு சிலர் செய்யும் செய்யும் செயல்களை வைத்து நாட்டையே கேவலப்படுத்துவது மிகத்தவறான காரியம் தான். அப்படி எழுதுவதன் மூலம் அவர்களை விட அதிகமாய் நாம்  இழிவு செய்கின்றோம் என உணர வேண்டும்.

செத்தாலும் பரவாயில்லை. அடுத்தவர் கை படக்கூடாது, அடுத்த ஜாதிக்காரனை தொடவிடக்கூடாது என உயிரில் மதம் பேசும் மனிதர்களை  நடுத்தெருவில் நிற்க வைத்து சுடணும். படித்ததும் ஐயோன்னு இருந்தது. 

இன்றைய உலகில் இந்த செல்ஃபி  பலருக்கு  உயிராபத்தை தானே தருகின்றது. இருந்தும் யாரும் திருந்துவதாயில்லை. அதிலும்  பொது இடங்களில் செல்ஃபி என்ன போட்டோ எடுக்கும் போது மிக கவனமாய்  இருக்கணும் என எப்போது கற்கபோகின்றோமோ?

கணையாழி குறு நாவல் போட்டியில் வெல்ல வாழ்த்துகள் குமார். கல்கிக்கும் எழுதி போடுங்க.. உங்களால் முடியும்!

மொத்தத்தில் மனதோடு பேசியது மனதை தொட்டது.  மனம் தொடர்ந்து பேசட்டும். பேசுங்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...
கல்கிக்கு எழுதணும்.... இன்னும் ஒன்றும் தோணலை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by Nisha Sat 15 Aug 2015 - 21:53

நண்பன் wrote:முதலில் உங்களுக்கும் இந்திய நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

காலையில் வந்து முதலி்ல் படித்தது குமார் அண்ணா நீங்கள் கடந்து வந்த பாதையினை மிகவும் அருமையாக உள்ளது சிறப்பாக எழுதியுள்ளீர்கள்

அரசியல் தலைவர்களும் அவர்களின் வாரிசுகளும் நம் நாட்டை கூறு போட்டு குதறி வைத்திருக்கலாம். இவர்களை விரட்டி அடிப்பதை விட்டுவிட்டு நாட்டின் பெருமையை, ஒரு சிறப்பான தினத்தை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு அற்ப சந்தோஷம் என்றால் செய்து கொள்ளுங்கள்...

வருத்தமான செய்தி  போற்றுபவர்கள் போற்றட்டும் தூற்றுபவர்கள் தூற்றட்டும் விட்டு விடுங்கள்

இருபது வயது மகள் சாகும் வரை யாரையும் தொட விடாமல் இருந்த தந்தையின் செய்தி கவலையும் ஆத்திரமும் ஊட்டியது

செல்பி எடுத்து உயிரை மாய்த்த சம்பவம் இன்னும் கவலையாக்கியது கொஞ்சம் விசாரித்து பொறுமையாக கையாண்டிருக்கலாம்  அவசர யுகம் அனைத்திற்குமே அவசரம் போய் சேர்ந்து விட்டது ஒரு உயிர்.   அது கவலை

அகம் புறம் குரும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஏக்கங்கள் நிறமியதுதானே வாழ்க்கை ஏக்கங்களும் கனவுகளும் மத்திய கிழக்கில் வாழும் மக்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்
சிறப்பாக பல கதை சொன்ன உங்கள் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்

அப்பாடா! பெரிய்ய்ய்ய்ய பதிவை படிச்சு பின்னூட்டம் போட்டுட்டாரு என் தும்பியார்!  இன்னிக்கு மழைதான் கொட்டும்.  ஆனாலும் உங்களின் பின்னூட்டம் படிக்க ரெம்ப ஆவலாய் தான் இருக்கும்.  ஆரம்ப முதல் இறுதி வரை படித்து எதையும் விடாமல் ரசிக்கும் பின்னூட்டம் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by நண்பன் Sun 16 Aug 2015 - 21:23

நன்றி நிஷா அக்கா  முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by சே.குமார் Sun 16 Aug 2015 - 22:13

அன்பின் நண்பனுக்கு...
தங்கள் கருத்துக்கு நன்றி தெரிவித்தேன் என்று நினைத்திருந்தேன்... இப்போதுதான் பார்க்கிறேன்... கருத்து இடவில்லை...

மிகவும் பொறுமையாக வாசித்து நீண்ட கருத்தைச் சொன்ன தங்களுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா? Empty Re: மனசின் பக்கம் : சுதந்திரமாக பேசலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum