சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பழிக்குப் பழி..? Khan11

பழிக்குப் பழி..?

3 posters

Go down

பழிக்குப் பழி..? Empty பழிக்குப் பழி..?

Post by சே.குமார் Sun 16 Aug 2015 - 22:11

பழிக்குப் பழி..? Tamil-Daily-News_16834223271


ழிக்குப் பழி வாங்குவது என்பது சின்ன வயதுப்  பிள்ளைகளிடம் இருக்கும் செயல்... 'நீ என்னை அடிச்சிட்டியா... நானும் உன்னை அடிக்கிறேனா இல்லையா பாரு' என்று சவால் விட்டு அவனையோ அல்லது அவளையோ திருப்பி அடித்தால்தான் ஓய்வார்கள். இது சின்ன வயதில் மனதிற்குள் தோன்றும் வன்மம். இந்தப் பழிக்குப் பழி ரொம்ப நேரம் நீடிக்காது. அடித்துக் கொண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டிய மண்ணைத் துடைக்கும் நேரத்திற்குள் மீண்டும் நட்பாகி சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதே பழி வாங்கும் எண்ணம் பெரியவர்களிடம் வரும் போது அது கொலையில் முடிந்து தீராப் பகையில் கொண்டு போய் விட்டு விடுவதுடன் தொடர் கொலைகளுக்கு ஆரம்பப்புள்ளி ஆகிறது.

'என்னோட எதிரி அவன்... ரொம்ப சந்தோஷமா... நல்லாயிருக்கானே... நல்லா இருக்கலாமா... கூடவே கூடாது' என்று நினைத்து அவனைப் பற்றி அவனுக்கு நெருக்கமானவர்களிடம் போட்டு விட்டு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து சந்தோஷம் அடையும் குரூரப் புத்தி கொண்டவன் தனது எதிரியை மறைமுகமாக பழி வாங்கி விட்டோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வான்.  ஆனால் அவனது சந்தோஷம் நீடிக்குமா என்றால் அதுதான் இல்லை... இவனால் பாதிக்கப்பட்டவனுக்கு எப்படியும் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரியவரும் போது  அவன் இவனைப் பழி வாங்கக் காத்திருந்து அதற்கான நேரம் சரியாக அமையும் பட்சத்தில் அதை கச்சிதமாகச் செய்து முடிப்பான்.  இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை இருவரின் குடும்பத்துக்குள்ளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இப்ப எதுக்கு இதைச் சொல்ல வாறேன்னா ரெண்டு நாளைக்கு முன்னால மனசின் பக்கத்துல ரெண்டு வக்கீலு கொம்பன் படத்தின் நாயகன் எஞ்சாதி... ஓஞ்சாதியின்னு பொஞ்சாதிக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி அடிச்சிக்கிட்டு படிச்ச நாதாரிங்க போட்ட சண்டையில ஒருத்தன் செத்துட்டான்னு சொல்லியிருந்தேன் இல்லையா... கொன்னவன் ஜெயிலுக்குப் பொயிட்டான்... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வருவான்... அவனை நாங்க போடுவோம்ன்னு செத்தவனோட குடும்பம் இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கு...  அவன் எப்ப வந்தாலும் சொன்னபடி அவனைப் போடுவானுங்க... அப்புறம் அவனோட ஆளு இவங்கள்ல ஒருத்தரைப் போடுவாங்க... அப்புறம் இவங்க அங்க ஒருத்தரை... இப்படி பழிக்குப் பழி தலைமுறை தலைமுறையாத் தொடரத்தான் செய்யும்... பகை வளர்க்கும் பகை இது. இது பத்தையில நெருப்பை வச்ச மாதிரி... எல்லாப் பக்கமும் பிடித்து எரியாமல் விடாது.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, ரொம்ப பணக்காரக் குடும்பமெல்லாம் கிடையாது... கஷ்டப்பட்டவங்கதான்... அவங்களோட மகன் தன்னோட மனைவியுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பான் போல...  இந்த அம்மாவும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காது போல... புருஷன் பொண்டாட்டி சண்டையின்னா அவங்க கத்திட்டு சமாதானம் ஆயிருவாங்கன்னு போக வண்டியதுதானே... அதை விட்டுட்டு அப்பத்தான் மாமியாருங்கிற பவுசைக் காட்டும் போல... அவன் அடிக்கும் போதெல்லாம் நல்லா போடுடான்னு சொல்லி அவனை ஏத்திவிடும் போல... ஒரு சில நாட்களில் அவளை வெட்டுடான்னு ஏத்திவிடுவாக போல... ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னால பொண்டாட்டி கூட சண்டை போட்டிருக்கான்... சண்டை  ரொம்ப வலுத்துப் போக, சண்டாளன் கோவத்துல பொண்டாட்டியை வெட்டிக் கூறு போட்டுட்டான். அவனையும் கொலை செய்யத் தூண்டிய அம்மாவையும் அதற்கு உடந்தையாக இருந்த அண்ணன் பொண்டாட்டியையும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க.

அந்தப் பொண்ணோட பொறந்தவனுங்க உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டோம்டான்னு ஒரு வெறியோட திரிஞ்சிருக்கானுக. ஜெயில்ல இருந்து மூணு பேரும் ஜாமீன்ல வந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் காரியத்தை முடிக்க காலநேரம் பாத்துக்கிட்டு இருந்திருக்கானுக... சில நாளுக்கு முன்னால கோர்ட்டுக்கு கையெழுத்துப் போடப் போயிருக்காங்க இவங்க நேரம் கலாம் ஐயா செத்ததால அரசாங்கம் விடுமுறை விட்டிருச்சு. உடனே அண்ணன் பொண்டாட்டி அப்பன் வீட்டுக்குப் போக, ஆத்தாளும் மகனும் பஸ் ஏறி மக வீட்டுக்குப் போயிருக்காங்க... தங்களோட உடன்பிறப்பை சாகக் கொடுத்தவனுங்க ஏற்பாடு பண்ணுன ஆளுங்க வழியில பஸ்ஸை மறித்து எல்லோரையும் இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸூக்குள்ள வச்சே ஆத்தாளையும் மகனையும் அரிவாளால் ஆய்ந்து போட்டுட்டு பொயிட்டானுங்க. பழிக்குப் பழி வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாலும் ஒரு வயதான பொம்பளையை வெட்டிச் சாய்க்க எப்படி மனது வந்தது? பாவம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கும் போல கையில வெட்டியிருகானுக... ஒரு பத்துப் பதினைந்து போட்டோவை மச்சான் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தான்... கொடூரம்ன்னா கொடூரம் அம்புட்டுக் கொடூரம்... பாக்க முடியாம அப்பவே அழிச்சிட்டேன். இந்த பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையால் யாருக்கு லாபம்? இவங்களை வெட்டியவனின் சாவு எந்த விதத்தில் அமையும்..? எவனோ ஒருத்தன் அவனை வெட்டுவான்? இப்படித்தானே மாறி மாறி போய்க் கொண்டிருக்கும். பழி வாங்குவதால் ஒரு பிரயோசனும் இல்லை என்பதை ஏன் நாம் உணருவதில்லை..?

'உன்னை நான் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லையா பார்' என்று சண்டையில் பேசிக் கொண்டாலும் அதை எல்லாம் மறந்து வாழும் சிறுவர்கள் உலகமே சிறப்பானது. அது கள்ளங் கபடமில்லாதது. அடித்து உருண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் நகத்தால் கீறிக் கொண்டாலும் 'பார்றா நீ கீறுனதை... ' என்று ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்வதில் ஆகட்டும்... 'சரிடா... இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று சொல்லி அணைத்துக் கொள்வதில் ஆகட்டும்.... அவர்களின் முன்னே பத்து நிமிடம் கூட வாழாத பழிக்குப் பழி என்னும் சொல் பழி வாங்கப்படுகிறது. பெரியவர்கள் மத்தியில் அந்தச் சொல்லுக்கு பலம் சேர்க்கப்படுகிறதே தவிர அதை தூக்கி எறிய நினைப்பதில்லை. அந்தச் சொல்லை அங்காளி பங்காளி எல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கத்தான் செய்வார்களே தவிர யாரும் அதை விட்டுத் தள்ளுன்னு சொல்றது இல்லை.

பழி வாங்கும் எண்ணம் மனசுக்குள் வந்தாலே அந்த வன்மம் வளர்ந்து வளர்ந்து... மிகப் பெரிய விருட்சமாகிறது. அந்த விருட்சம் விழுதுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... எனக்கு இப்ப வேண்டியது அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பது மட்டுமே என்ற எண்ணத்தின் உந்துதலே மிகப்பெரிய தவறுகளைச் செய்ய வைக்கிறது. அதனால் ஒருவன் பாதிக்கப்படுகிறான்... மற்றொருவன் வாழ்க்கை இழக்கிறான் என்பதுடன் முடிவதில்லை... அதன் பிறகான நாட்களில் அவர்களின் வாரிசுகளும் தங்களின் வாழ்வின் வசந்தத்தை இழக்கிறார்கள் என்பதை யாரும் நினைப்பதில்லை. அந்த நேரத்தில்  என்ன நினைக்கிறார்களோ அது நடக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் வாழ்க்கை...?

இந்தப் பழிவாங்கல் மனிதர்களிடம் மட்டுமல்ல... ஐந்தறிவு ஜீவன்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்க மாமாவின் தோட்டத்தை லீசுக்கு எடுத்து அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் தோட்டத்தைத் தாண்டி உறவினர் ஒருவரின் தோட்டம்... அவரும் தினமும் அந்த வழியாகத்தான் போவார். ஒருநாள் போகும் போது நல்லபாம்பு ஒன்று குறுக்கே நிற்க, இவரும் அதை அடித்து விட்டார். அடிபட்ட பாம்பு குடல் வெளியில் தெரிய அருகில் இருந்த புதருக்குள் புகுந்து விட்டது. தேடிப்பார்த்தார்... மற்றவர்களும் தேடினார்கள்... கண்டு பிடிக்க முடியவில்லை. சரி இந்தளவுக்கு அடிபட்டது எங்கிட்டு பொழைக்கப் போகுதுன்னு பொயிட்டாங்க... ஆனா பாருங்க... மறுநாள் அதே இடத்துல செடிகளுக்கு மத்தியில் வயித்தை இழுத்துக்கிட்டு அவருக்காக வந்து கிடக்குது அந்தப் பாம்பு.. ஆனா அதால ஓடிவந்தெல்லாம் அவரையோ அல்லது மற்றவர்களையோ கொத்த முடியாத நிலை. 'ஷ்ஷ்.. ஷ்ஷ்...'ன்னு தலையைத் தூக்கிக்கிட்டு காத்திருக்கு... அவரு அந்த வழியா போனப்போ அதைப் பார்த்துட்டாரு... சரிதான் நமக்காகத்தான் காத்திருக்குன்னு எங்க வீட்ல கம்பு வாங்கி அதை அடித்து பால், காசு, அரிசி எல்லாம் போட்டு புதைச்சாங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்... எந்த விஷயத்துக்காகவும் யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல நமக்கு ஒருத்தன் கெடுதல் நினைத்தாலும்... அதைச் செய்தாலும் நாம் நம் பாதையில் பயணித்தால் எவன் நமக்கு கேடு நினைத்தானோ அவன் அதை அனுபவித்துக் கொண்டிருப்பான்... கொலை செய்தவனைப் பழி வாங்குவதால் என்ன லாபம்... அவன் இருந்து அணு அணுவாக சித்ரவதை அனுபவித்து தான் செய்த பாவமே இப்ப அனுபவிக்கிறேன் என்று புலம்பிச் சாக வேண்டும். அதை விட்டு ஒத்தைப் போடு போட்டு நல்ல சாவை எதற்காக அவனுக்கு கொடுக்க வேண்டும். பழி வாங்கும் எண்ணம் எந்த விஷயத்திலும் மனசுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கெட்ட எண்ணங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு நன்மையே செய்வோம்... நல்லதையே அடைவோம்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பழிக்குப் பழி..? Empty Re: பழிக்குப் பழி..?

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:33

இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாணநன்னயஞ் செய்து விடல்
 
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்
 
இப்படில்லாம் நமக்கு சின்ன வயதில்  சொல்லித்தான் தந்திருக்கின்றார்கள். ஆனால்  தமக்கென வரும் போது அனைத்தினையும் மறந்து  வீடுக்குள்ளும் நாட்டுக்குள்ளும் பழிக்கு பழி எனத்தான்  வாழ்கின்றோம்.
 
என்னளவில் இன்னா செய்தாரை உறுத்த நான் அவர்களுக்கு நல்லவை செய்து  மனதளவில்  அவர்களை உணர வைத்து விடுவேன். ஆனாலும் செய்த இன்னாவை மறக்காமலும்  இனியொரு தடவை அதே போல் நம்மை நடத்தாமலும் இருக்க  தற்பாதுகாப்பாய் இருப்பேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பழிக்குப் பழி..? Empty Re: பழிக்குப் பழி..?

Post by கமாலுதீன் Tue 18 Aug 2015 - 15:14

சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் குமார். எதற்கெடுத்தாலும் தன்னைத் தானே முன்னிறுத்தும் குணம் மனிதர்களிடையே அதிகமாக வளர்ந்து வருகிறது. அதனால்தான் இந்நிலை. பொறுமை, நிதானம், விட்டுக்கொடுக்கும் தன்மை என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. சிறுவயதிலேயே இவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

பழிக்குப் பழி..? Empty Re: பழிக்குப் பழி..?

Post by சே.குமார் Fri 21 Aug 2015 - 16:47

கமாலுதீன் wrote:சிறப்பான கட்டுரை. வாழ்த்துக்கள் குமார். எதற்கெடுத்தாலும் தன்னைத் தானே முன்னிறுத்தும் குணம் மனிதர்களிடையே அதிகமாக வளர்ந்து வருகிறது. அதனால்தான் இந்நிலை. பொறுமை, நிதானம், விட்டுக்கொடுக்கும் தன்மை என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கிறது. சிறுவயதிலேயே இவைகள் எல்லாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

வணக்கம்...
தங்கள் கருத்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பழிக்குப் பழி..? Empty Re: பழிக்குப் பழி..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum