சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

நழுவும் நங்கூரம் – சிறுகதை Khan11

நழுவும் நங்கூரம் – சிறுகதை

Go down

நழுவும் நங்கூரம் – சிறுகதை Empty நழுவும் நங்கூரம் – சிறுகதை

Post by rammalar Tue 20 Oct 2015 - 11:15

அவள் கண்களின் ஆழத்தில் எதைக்கொண்டும் 
நிரப்ப முடியாத வெறுமை இருந்தது. 
அகமே புறமாவதைப் போல அவளின் மனதைக் கண்கள் 
பிரதிபலித்துக் கொண்டிருந்தன. இன்று காலை வரை 
தன்னிடமிருந்த சந்தோசம் சர்ப்பமாய் நழுவுவதைப் 
போலிருந்தது அவளுக்கு.
-
இப்பவும் கூட அவளால் அதை ஏற்க முடியவில்லை. 
ஆனால் எல்லா நேரங்களிலும் நிஜம் நினைப்பது போல 
இருப்பதில்லையே! அப்படித்தான் அவள் விசயத்திலும் 
இருந்தது. பழகிய நாளில் இருந்து இளங்கோவிடம் எந்த 
தீய பழக்கங்களையும் அவள் கண்டதில்லை. 
அந்தக் குணமே அவன் மீது ஒருவித ஈர்ப்பைத் தர 
அதற்குக் “காதல்” எனப் பெயரிட்டு அவனிடம் கொடுத்த 
போது அவனும் மறுக்க வில்லை. 
ஓராண்டு இல்லறத்தில் சந்தோசம் குறைவில்லாமல் 
இருந்தது.
-
நிறுவன மேலாளராக பதவி உயர்வு பெற்றதும் வேலைப் 
பளு எனச் சொல்லிக் கொண்டு வீட்டில் செலவிடும் நேரத்தை 
நான்கு நம்பர் சீட்டில் விழும் பரிசாய் சுருக்கியவன் சில 
மாதங்களாக அலுவலகத்தில் இருந்து விரைவிலேயே வீட்டிற்கு 
வருவதும், தன்னோடு அதிக நேரங்களைச் செலவழிப்பதுமாக
 இருப்பதைக் கணடவளுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
-
திடீரென ஒரு நாள் தன் பெயரில் இருந்த பங்குகளை எல்லாம் 
அவள் பெயருக்கு மாற்றினான். வங்கிக்கு அழைத்துச் சென்று 
அனைத்துச் சேமிப்புகளிலும் அவளை வாரிசுக்குரியவளாய் 
உறுதி செய்தான். சுய தொழில் ஆரம்பிப்பதற்காகத் தன் 
பெயரில் சேமித்திருந்த பெருந்தொகையை அவளின் வங்கிக் 
கணக்கிற்கு மாற்றினான். 
-
நடப்பவை கண்டு எதுவும் புரியாதவளாய்  “ஏங்க சொந்தக் 
கம்பெனி ஆரம்பிக்கனும்னு சேமிச்சு வச்ச பணத்தை எல்லாம் 
என் பெயருக்கு ஏன் மாத்துறீங்க? வேற எதுவும் பிரச்சனையா? 
எதுக்கு இத்தனை அவசரம்?” என்று அவள் கேட்டதற்கு பதில் 
ஏதும் சொல்லாத போதும் அவனுக்குள் பெரும் சுமையை இறக்கி 
வைத்த திருப்தி.
-
மறுநாள் அலுவலகம் சென்றிருந்தவனின் அறையில் திறந்திருந்த 
அலமாரியைச் சாத்துவதற்காக சென்றவள் கீழ் தட்டில் தன் 
பெயரிட்டு ஒட்டப்படாமலிருந்த கடித உறையைப் பிரித்துப் 
பார்த்தாள். இன்னும் முழுதாய் எழுதி முடிக்கப்படாமல் அதில்
 இருந்த கடித்ததைப் படித்தவளுக்கு அந்த அறை முழுவதும் புகை 
மண்டலம் சூழ்வதைப் போலிருந்தது. 
-
சரீரம் நடுங்க இருந்த இடத்திலேயே கடிதத்தை வைத்து விட்டுக் 
கூடத்தில் வந்து அமர்ந்தாள்.
-
அலுவலகத்தில் இருந்து திரும்பும் அவனின் வருகைக்காக 
எப்பொழுதும் ஈரம் கசியக் காத்திருக்கும் அவளின் கண்கள் 
இன்று வறட்சியாய் வாயிலை நோக்கிக் கொண்டிருக்க 
மனமோ புற்றுநோய் முற்றிய நிலையில் நாட்களை எண்ணிக் 
கொண்டிருப்பவனை எதிர் கொள்ளும் தைரியத்தைத் தனக்குத் 
தருமாறு இறைவனைப் பிரார்த்திக்கத் தொடங்கி இருந்தது.
-
-------------------------

மு.கோபி சரபோஜி
நன்றி : தமிழ் முரசு நாளிதழ்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum