சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

மனசின் பக்கம் : அகமும் புறமும் Khan11

மனசின் பக்கம் : அகமும் புறமும்

2 posters

Go down

மனசின் பக்கம் : அகமும் புறமும் Empty மனசின் பக்கம் : அகமும் புறமும்

Post by சே.குமார் Fri 23 Oct 2015 - 11:02

லைப்பதிவர் மாநாடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடந்த விழாவில் அன்பு நிறைவாகவும் பணம் பற்றாக்குறையாகவும் அமைந்துவிட்டதென பகிர்வுகள் பார்க்க நேர்ந்தது. பணத்தைப் புரட்டி விடலாம் என்ற நம்பிக்கை புதுகை நண்பர்களிடம் இருக்கிறது. இருப்பினும் வலைப்பதிவர் கையேட்டினை பணம் கொடுத்து வாங்கி உதவுங்கள் என்று சொல்லியிருந்தார்கள். அதை நாம் செய்யலாமே... பற்றாக்குறை முழுவதையும் நிவர்த்தி செய்ய முடியாவிட்டாலும் கையேட்டை பணம் கொடுத்துப் பெறுவதால் நண்பர்களின் சுமையை நம்மால் முடிந்த அளவு குறைக்கலாம் அல்லவா? சிறப்பாக நடத்தியவர்களுக்கு பணப் பற்றாக்குறையை ஈடு செய்யவது என்பது பெரிய விஷயமில்லை... இருந்தாலும் நம் குடும்ப விழா நாமும் நம்மாலான உதவியைச் செய்யலாம் அல்லவா? செய்வோம் என்ற நம்பிகையோடு மிகச் சிறப்பாக விழா நடத்திய புதுகை நண்பர்களை வாழ்த்துவோம்.

மனசின் பக்கம் : அகமும் புறமும் DSC_0708


*

லைப்பதிவர் கையேட்டில் வாசிக்க வேண்டிய பதிவர்கள் என பிரித்துப் போட்டிருப்பதாக ஐயா ஒருவர் பதிவில் தெரிவித்திருந்தார். அது ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. நான் கையேடும் பார்க்கவில்லை. ஒருவேளை பதிவுலகம் வரும் புதியவர்கள் வலைத்தளம் அமைப்பது எப்படி என்ற தொழில் நுட்பங்களைப் தனபாலன் அண்ணாநண்பர் தங்கம் பழனி உள்ளிட்ட பதிவர்களின் பதிவுகளைப் படிப்பதன் மூலம் அறியலாம் என்று போட்டிருக்கிறார்களா... அல்லது இவர்களின் எழுத்துக்கள்தான் பிரபலமானவை என்று போட்டிருக்கிறார்களா... என்பது தெரியவில்லை. விவரம் தெரியாமல் எதையும் பேசக் கூடாது... ஐயாவும் விவரமாக எழுதவில்லை. என்ன இருந்தாலும் இது நம் வீட்டு விழா... எந்த விழா என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்...  பார்த்துப் பார்த்துச் செய்யும் சின்னச் சின்ன வீட்டு விசேசங்களில் கூட குறைகள் வரத்தான் செய்யும். எல்லாம் நிறைவாய்... எல்லாருடைய மனசுக்கும் நிறைவாய் செய்வதென்பது கடினமான ஒன்று. குறைகளைக் களைந்து நிறைகளைப் பகிர்வோம். அப்புறம் கவிதைகள் எழுதி படங்களுடன் அழகாய் காட்சிக்கு வைத்திருந்தார்கள்... நம்ம கவிதை எல்லாம் அதில் இருந்ததா என்று தெரியவில்லை... போன நண்பர்கள் யாரும் இதுவரை சொல்லவில்லை... அப்படியென்றால் இல்லை என்றுதானே அர்த்தம்... சரி யார் யார் கவிதைகள் அதில் இடம் பெற்றன என ஒரு பகிர்வை முத்து நிலவன் ஐயா பகிர்ந்தால் நல்லா இருக்கும்... செய்வீர்களா?

*

லைப்பதிவர் மாநாட்டில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் நடத்திய போட்டிகளுக்கு வந்த கட்டுரைகள், கவிதைகளில் பரிசு பெற்றவையுடன் நல்லா எழுதியிருக்கிறார்கள் என்ற நிலையில் உள்ளவற்றைத் தொகுத்து மின்னூலாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். வரவேற்கத்தக்க செய்தி... வாழ்த்துக்கள்.  எனது கட்டுரையை மின்னூலாக்கலாம் என்று  எழுத்தாளரின் ஒப்புதல் மின்னஞ்சல் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள். இதில் மின்னூலாக்க இருக்கும் கட்டுரைகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெறலாம் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் அனைவருக்கும் மின்னூலாக்கும் ஆசை இருக்கும்... எல்லோரும் ஒப்புதல் மின்னஞ்சல் அனுப்புவோம். கவிதைப் பகிர்வைப் போல் என்னுடையது ஆகவில்லை... உன்னுடையது ஆகவில்லை... என்ற மன வருத்தங்கள் வரலாம். எனவே முதலில் தேர்வு செய்து எழுதிய நண்பர்களிடம் கேட்கலாம்... அவர்கள் வேண்டாம் என்றால் அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதே என் தனிப்பட்ட விருப்பம். இதைமுத்து நிலவன் ஐயாவும் நம் புதுகை நண்பர்களும்தான் செய்ய வேண்டும். 

*

ங்கள் கதைகள் அழ வைக்கின்றன என்று அன்பு ஐயா செல்வராஜூ அவர்கள் சொன்னார்கள் என்று முன்பே எழுதியிருந்தேன்... அதே வேளையில் சினிமா விமர்சனம் எல்லாம் எழுதுறீங்க... அது எதற்கு குறைத்துக் கொள்ளலாமே என்றும் சொன்னார். உண்மைதான் இதை ஐயா சொல்லும் முன்னே என் நண்பன் தமிழ்க்காதலும் போனில் பேசும்போது திட்டியிருக்கிறான்... ரொம்ப அன்பாக ஆரம்பித்து (மூதேவி அன்புதானேங்க) நல்லா எழுதுறே... அதே வழியில போடான்னு சொன்னா எதுக்கு சினிமாப் பின்னாடி போறேன்னு மானே... தேனே... பொன்மானே... எல்லாம் போட்டு அடிக்கடி திட்டுவான்... திட்டுறான்... திட்டுகிறான்... இனி சினிமா விமர்சனங்களைக் குறைக்கலாம்... இருந்தாலும் அப்ப அப்ப நம்ம தளம் இருக்குன்னு எல்லாருக்கும் காட்டுறதே சினிமாப் பகிர்வுகள்தான்... ஏன்னா கதை, கவிதை, கட்டுரைகளுக்கு எல்லாம் இங்கு ஒரு சிலரைத் தவிர பலருடைய பகிர்வுகளுக்கு நல்ல மார்க்கெட்டிங் இல்லை என்பதே உண்மை... சிறுகதை பகிர்ந்தால் 100 பேர் பார்த்தால் சினிமா என்றால் 1000 பேர் வாசிக்கிறார்கள். எனவே சோற்றில் ஊறுகாய் போல அப்ப அப்ப நாமும் வலையில் நிலைத்து நிற்க இதையும் செய்ய வேண்டித்தான் இருக்கிறது. இந்த மனநிலை தவறு என கில்லர்ஜி அண்ணா சண்டைக்கு வரலாம்... ஏனென்றால் அவருக்கு சினிமா பிடிக்காது. இருந்தாலும் இதுதான் இன்றைய பதிவுலகின் நிதர்சனம்.... இல்லையேல் நமக்கென ஒரு பெரிய குழுவைக் கட்டிக் காக்க வேண்டும்... அப்போதுதான் பிரபலமாகலாம். அதற்கெல்லாம் நாமும் அதிகம் பேருக்கு கருத்துக்கள் இட வேண்டும். அதைச் செய்ய முடியாத சூழல்... எழுதுவதும் கருத்துக்கள் இடுவதும் அவரவர் விருப்பமே... ஆனால் இங்கும் பதிவு அரசியல் தலைவிரித்து ஆடுகிறது என்பதே உண்மை... எழுத்தால் சிலர் முன்னேறி வரும் போது அவன் எப்படி முன்னே போகலாம் என்ற சண்டைகளும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படியோ அடுத்தவருக்காக இல்லை என்றாலும் நம் மன திருப்திக்காக முடியும் வரை எழுதுவோம்.

*

ள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதி வேடம் அணிந்து 'அச்சமில்லை... அச்சமில்லை' என மழலைக்குரலில் உரக்கச் சொன்ன விஷாலுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அவனை கொஞ்ச நேரம் மேய்க்க முடியவில்லை... அதிகம் பேசுகிறான் என்று சொன்னாலும் கண்டித்து அடக்கி வைப்பதைவிட அவன் போக்கில் விட்டால்தான் இன்னும் சிறப்பாக வளருவான் என்று நினைக்கிறேன்... அப்படியே வளரட்டும் பேச்சாளனாக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நிழல் தரும் ஆல மரமாக...

*

ந்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சின்,கங்குலி, டிராவிட்டுக்கு அடுத்தபடியாக மிகவும் பிடித்த வீரர் என்றால் அது சேவாக்தான்... எதற்கும் பயப்படாத மிகவும் துணிச்சலான வீரர்... மைதானத்தில் நின்றால் மிக லாவகமாக அடிக்கடி நான்கும் ஆறும் விளாசி ரசிகர்களை மகிழ்விக்கும் வீரர்... மைதானத்தில் நிதானமாக விளையாடு என்று யாராலும் கட்டுப்படுத்த முடியாத வீரர்.... சச்சின் கூட ஐம்பது அடிக்க போகிறார் என்றால் நாற்பதில் வேகத்தடை வரும்... பின்னர் பந்துகள் கடக்கும் ரன் ஒன்றிரண்டாகும்... அதே போல்தான் சதம் அடிக்கப் போகிறார் என்றால் தொன்னூறில் வேகத்தடை வரும்... சாதித்த வீரர் என்பதைவிட தன் சாதனைகளை செதுக்கிக் கொண்ட வீரர் என்றே சொல்லலாம்... ஆனால் சேவாக் நான் விளையாடுவது நாட்டிற்காக... எனது தனிப்பட்ட சாதனைகளுக்காக அல்ல என்று விளையாண்டவர்... நான்கு, ஆறு அடித்து போட்ட ஐம்பதுகளும் நூறும்தான் அதிகம்... முன்னூறுக்கும் இருநூறுக்கும் சொந்தக்காரர்.... அந்த ரன்கள் கூட சாதனைக்காக காத்திருந்து வரவில்லை என்பதை போட்டிகளைப் பார்த்த அனைவரும் அறிவார்கள். 

மனசின் பக்கம் : அகமும் புறமும் Shewag


இப்போது விளையாண்டால் முதலவதாய் களமிறங்கி என்னால் ஆட முடியாது என்றும் அன்று நான் ஆட்டமிழந்தாலும் பின்னணி வீரர்கள் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அடித்து ஆடினேன். இன்று இந்திய அணியில் நடுவரிசை மிகவும் மோசமாக இருக்கிறது அதனால் என்னால் அப்படியெல்லாம் ஆட முடியாது என்று உண்மையை உரக்கச் சொல்லி தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.... சேவாக் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் பெயர்... வாழ்த்துக்கள் சேவாக்... இவரைப் போல் யார்க்கர் மன்னன் ஷாகீர் கானும் ஓய்வை அறிவித்திருக்கிறார்... இந்தியப் பந்து வீச்சாளர்களில் துல்லியமாக ஸ்டெம்பைக் கலக்கிய பந்து வீச்சாளர் இவர். இவரையும் வாழ்த்துவோம்... இந்திய கிரிக்கெட் சங்கம் வீரர்களை வழியனுப்புவதில் இன்னும் திருந்தவில்லை... மற்ற நாடுகளைப் பார்த்தாவது திருந்த வேண்டும். இதே சங்கம்தான் சச்சினுக்காக இந்தியாவில் போட்டியை அமைத்து வழி அனுப்பி வைத்தது... மற்றவர்களை கேவலப்படுத்தித்தான் அனுப்புகிறது.... இதுதான் நாளை தோணிக்கும்தான்... ஏனென்றால் இப்போதே தோணியை வெளியாக்கும் முயற்சிகள் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டன என்பதை நாடே அறியும்.

*

மனசின் பக்கம் : அகமும் புறமும் 1426690042-5311


சென்ற வாரத்தில் சில மலையாளப் படங்கள் பார்த்தேன்... அதில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படமும்... கிளைமேக்ஸ் காட்சியில் வேண்டுமானால் சினிமாத்தனம் இருக்கலாம்... ஆனால் படம் மிகவும் அருமை... அருமையான கதைக்களம்... நல்ல படம். தமிழில் எடுக்க இருப்பதாக செய்தி படித்தேன். இன்னும் SHE TAXI, ஒரு வடக்கன் செல்பி, நீ-நா போன்ற படங்களும் பார்த்தேன்... ஒரு வடக்கன் செல்பி கொஞ்சம் நல்லாப் போச்சு. எனக்கு நிவின் பாலியை ரொம்பப் பிடிக்கும்.. ஒரு எதார்த்த நடிகன்... வடக்கன் செல்பியிலும் நல்லா நடிச்சிருக்கார்... படமும் சென்னை, பழனி, தஞ்சாவூர் என பயணிப்பதால் தமிழ் வாடை அதிகம் இருக்கு...   போதைப் பழக்கத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணமான அவளின் மேனேஜர் மற்றும் அவரின் மனைவிக்கும் இடையில் நடக்கும் கதைதான் நீ-நா.... நீனாவாக தீப்தியும் நளினியாக ஆன் அகஸ்டினும்... அருமையாக நடித்திருக்கிறார்கள்... படமும் பார்க்கலாம்... கொஞ்சம் பொறுமை வேணும்... புத்த பிட்சுக்கள், கோடி மதிப்புள்ள ஓவியங்கள், அதை அபகரிக்க கிளம்பும் வில்லன்கள் என பரபரப்பான கதைக்களமாக அமைத்து டாக்ஸி ஓட்டும் பெண், அவளது பயணம், கொள்ளை அடிக்கத் திட்டமிடும் நாயகனும் அவனது நண்பர்களும் அவர்களின் பயணம் நகைச்சுவையாய் மாற்றி  இறுதியில் ஓவியங்களை யார் எடுத்தார்கள் என்று முடிக்கிறது SHE TAXI. ரொம்ப நல்லாவெல்லாம் இல்லை... பொழுது போகலைன்னா பாக்கலாம்.

*

மனசின் பக்கம் : அகமும் புறமும் 1445424807-6352


ல்லாரும் சிவகார்த்திகேயனை தலையில் வைத்து ஆடும்போது நான் விரும்பும் நடிகன் விஜய் சேதுபதி... கொஞ்ச நாளாகவே நட்புக்காக நடிக்கிறேன்... பாசத்துக்காக நடிக்கிறேன்... என தன் பாதையை மாற்றி தனது இடத்தை இழந்து கொண்டிருப்பதைக் கண்டு வருத்தமாக இருந்தது. ஒண்ணுமே இல்லாமல் ரஜினி இடத்தைப் பிடிக்கிறேன் என மற்றவர்கள் முன்னே போய்க் கொண்டிருக்க, திறமை இருந்தும் எதற்காக இவர் பின்னோக்கி போகிறார் என்று எண்ணியிருக்கிறேன். தன்னோட இடத்தை தக்க வைத்துக் கொள்ள மிகவும் அருமையான வாய்ப்பை வழங்கியிருக்கிறது நானும் ரவுடிதான்... கடைசி வரைக்கும் நகைச்சுவையோடு பயணிக்கும் படக்கதையில்... விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் என சொல்லி அதகளம் பண்ணுகிறார். நயன்தாரா சொல்லவே வேண்டாம்.... நாயகனைவிட இவருக்குத்தான் விசில் பறக்கிறது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். காது கேட்காத பெண்ணாக... கலக்கியிருக்கிறார்... ராதிகா, வில்லன் பார்த்திபன், நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி, அட பயங்கர வில்லனாகப் பார்த்த ஆனந்தராஜ் சூப்பர் காமெடியானாக என ஆளாளுக்கு சிக்ஸர் அடிக்கிறார்கள். படம் பக்கா.... கமல், அஜீத், தனுஷ் என்ற எனக்குப் பிடித்த நாயகர்கள் வரிசையில் விஜய் சேதுபதியும்.... நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் இன்னும் சிறப்பான இடத்தை அடையலாம்... செய்ய வேண்டும்.

*

கல் - பிரதிலிபி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது சிறுகதைக்கு புத்தகங்கள் பரிசாக கிடைத்திருக்கின்றன. போட்டியை நடத்திய இரண்டு இணையத்துக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிடும் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும் பாக்யா இதழ் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்... குடந்தையூர் சரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறம் குறித்த போட்டோக்களும் செய்திகளும் முகநூலிலும் அவரின் குடந்தையூர் தளத்திலும் சில நாட்களாக பதியப்படுகின்றன. படத்தின் டீசரும் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.  வெற்றி பெற வாழ்த்துவோம். அகம் புறம் குறும்பட டீசர் கீழே...





மனசின் பக்கம் தொடரும்
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : அகமும் புறமும் Empty Re: மனசின் பக்கம் : அகமும் புறமும்

Post by Nisha Wed 28 Oct 2015 - 16:25

ள்ளி மாறுவேடப் போட்டியில் பாரதி வேடம் அணிந்து 'அச்சமில்லை... அச்சமில்லை' என மழலைக்குரலில் உரக்கச் சொன்ன விஷாலுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அவனை கொஞ்ச நேரம் மேய்க்க முடியவில்லை... அதிகம் பேசுகிறான் என்று சொன்னாலும் கண்டித்து அடக்கி வைப்பதைவிட அவன் போக்கில் விட்டால்தான் இன்னும் சிறப்பாக வளருவான் என்று நினைக்கிறேன்...

விசாலுக்கு வாழ்த்துகள். பட்  இந்த அவன்  போக்கில் விட்டால் தான் சிறப்பாக வளருவான் என்பதில் தான் நான் மாறுபடுகின்றேன். அவன் போக்கில் விடணும் என்பது இப்போதைக்கு இல்லை . 16,17 வயதுக்கு பின் அவ்ர்கள் எதிர்கால கல்வி, தொழில், வாழ்க்கை என வரும் சூழலில் தான் அவர்கள் போக்கில் விட வேண்டும். 

இப்போதைக்கு சரி பிழை சொல்லிக்கொடுப்பதோடு அதீத பேச்சுக்களில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி கண்டித்து திருத்துவது ரெம்ப அவசியம். சின்ன பையன் தானே என பேசுவதையெல்லாம் ரசித்து விட்டு பின்னாளில் அதை நினைத்து வருந்தாமல் இருக்க இப்பவே முயற்சிக்கணும். 

நிரம்ப பெற்றோர் இவ்விடயத்தில் ரெம்ப தவறு செய்கின்றார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதார்கள். இந்த சமுதாயத்துக்கு ஏற்ப நம் குழந்தை எப்படி வரணும் என்பதை  அவன் பத்து பன்னிரண்டு வயதுக்குள்  நாம் தீர்மானிக்கணும்.  அதன் பின்  நாம் என்ன தான்  தலைகீழாக நின்றாலும் முடியாது குமார். 

என் சொந்த அனுபவம் மட்டுமல்ல என் சூழலைல் இருப்போரை கொண்டும் நான் உணர்ந்தவை இவை. குழந்தைகள் தாம் செய்வதின் நல்லது கெட்டது எது என்பதை இனம் பிரித்து அறிய மாட்டார்கள். அப்படித்தான் பேச்சிலும்.. பெரியவர்கள் பேசுவதை அப்படியே பேசுவார்கள். எனவே அவர்களுக்கு முன்மாதிரியாய் நாம் நடக்கவும் வேண்டும். 

அகமும் புறமும் மொத்தமாய் நல்லா இருக்கு குமார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : அகமும் புறமும் Empty Re: மனசின் பக்கம் : அகமும் புறமும்

Post by Nisha Wed 28 Oct 2015 - 16:26

சிறுகதை போட்டியில் புத்தகபரிசுக்கும் என் வாழ்த்துகள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : அகமும் புறமும் Empty Re: மனசின் பக்கம் : அகமும் புறமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum