சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

தொற்று நோய அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்! Khan11

தொற்று நோய அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்!

Go down

தொற்று நோய அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்! Empty தொற்று நோய அபாயம்! தற்பாதுகாப்பும் முன் எச்சரிக்கையும்!

Post by Nisha Mon 7 Dec 2015 - 2:09

இயற்கையின் சீற்றம் அதன்  கோபத்தினை காட்டி சென்று விட்டது. அதன் பாதிப்புக்களோ நம் முன் மிக நீண்டதாய்   இருக்கின்றது.

இதுவரை அல்ல! இனிமேல் தான்  பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டிய நிலையில்  மனம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாய்  மிகக்கடினமான தொரு சூழலை நாம் எதிர் கொள்ள போகின்றோம்.

மிக முக்கியமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் கழுவு நீர், இறந்த மிருகங்கள், மற்றும்  அழுகிய பொருட்கள் என அனைத்தும் கலந்து விட்டதனால் நோய் தொற்று அபாயம் அதிகமாக இருக்கின்றது.

குடி நீர் குழாய்களில் நீர் வரத்து இருந்தாலும் அவைகளும் உடைந்து சேதமடைந்து உள்ளதால் குடிக்கும் நீரிலும் தொற்று  நோய் அபாயம் அதிகமாகின்றது என்பதனால்  அந்த நீரை குடிப்பதை தவிருங்கள். அப்படியும் வழி இல்லை எனில் மழை நீரையே சேமித்து  நீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி  குடியுங்கள்.

வெள்ளம் வடிய ஆரம்பித்ததும் அழுகிய குப்பைகள் மிருகங்களின் உடல்களஅனைத்தினையும்  எரித்து சாம்பலாக்குங்கள். எங்கோ எவர் வீட்டின் முன்னோ தானே என இருக்காமல் அது உங்களையும் பாதிக்கும் என்பதால் எப்படியேனும்  அவைகளை அப்புறப்படுத்த முயற்சியேனும் செய்யுங்கள்.

உங்கள் பாதிப்பு அதிகம் என்பதையும் வார்த்தைகளால் ஆறுதல், ஆலோசனை சொல்லி தீர்வு கிடைக்காது என்பதையும்  நானும் அறிவேன். எனினும்  மழை  வரும் வெள்ளம் வரும் என  முன்கூட்டியே தெரிந்தும் ஆயத்தமின்றி அசட்டையாய் இருந்தது போல் இனியும் இருக்காதீர்கள் உறவுகளே!

நிதர்சனம் இதுவென புரிந்து  உங்கள் சூழலில் கிருமி நாசினிகளை தெளித்தல், கொசு ஒழிக்கும் புகை தெளித்தல், திறந்திருக்கும் நீர் தேக்கங்கள் மட்டும் அல்ல உங்கள் குடி நீர் தொட்டிகளிலும் குளோரின் தெளித்தல் என அவசர கால முறையில் செயல் படுங்கள்.

வசதியும் வாய்ப்பும் இருப்பின் உங்கள் பகுதிக்கு மருத்துவ குழுக்களை வரச்செய்து மருத்துவ முகாம்களை நடாத்தி தர வேண்டுங்கள்.மன
நிலையில் பாதிக்கப்ட்டிருப்போரை இன்ம் கண்டு ஆறுதலாய் இருங்கள்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் மட்டும் அல்ல வெள்ள நிவாரன உதவியில் ஈடுபடும் அனைவருமே தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் இருப்பதனால் டெட்டனஸ் தடுப்பு ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.

நிலவேம்பு கசாயம் குடிப்பதும் கூட நல்ல தற்பாதுகாப்பு முன்னேற்பாடு தான். 
பொதுமக்கள் தாங்களாகவே அரசு மருத்துவமனைகளை அணுகி நில வேம்பு குடி நீரை வாங்கி பயன் பெறுங்கள். 


 நீரில் சேவை செய்ய இறங்கும் தன்னார்வலர்களே நீங்கள் மிக முக்கியமாக இவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.

டெட்டனஸ் ஊசி போட முடிந்தவர்கள் முன் கூட்டியே போட்டு தற்பாதுகாத்து கொள்ளுங்கள்.திறந்தநிலையில்  காயங்கள் இருந்தால் கவனமாக கையாளுங்கள், அசட்டையாய் இருக்காதீர்கள். தோல் நோய் பரவும் வாய்ப்பும் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. நீரழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். கிருமி நாசினிகளை கைவசம்  தயாராக வைத்திருங்கள்.

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட நோயாளர்களை தூக்கும் போது  கவனமாக கையாளுங்கள். நீங்கள் மருத்துவம் கற்றவர்கள் இல்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்” பேரிடர் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பதையும் மறக்காதிருங்கள்  உங்கள் ஆர்வ வேகம் உங்களுக்கு ஆபத்தாகாத படி
 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொடர்ந்து  செய்ய வேண்டும் எனில் முதலில் நீங்கள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum