சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Khan11

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

2 posters

Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by Nisha Wed 13 Jan 2016 - 15:03

தனியார் பல்கலைக் கழகத்திற்கான அனுமதி வழக்கப்படுவது எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணி ஒன்றினை நடத்தியுள்ளனர்.
மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 7 பிரிவுகளை சேர்ந்த 600 மாணவர்கள் இவ்வார்ப்பாட்டப் போரணியில் கலந்து கொண்டுள்ளனர். என்று ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மருத்துவ பீட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்:
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துப பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் அதே வேளை வைத்திய துறையில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையினை நலிவடையச் செய்யும்.
இது மட்டுமல்லாமல் இதுவரை காலமும் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்திய சாலைகளில் பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
இதே போன்று தனியார் துறைகளில் பயிலுபவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலையில் பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் துறைக்குள் உள்ளீர்க்கப்படுபவர்கள் பொதுப் பரீட்சை இல்லாமல் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் வெறுமனே 2 சி எஸ் சித்தி பெற்றவர்கள் கூட தனியார் துறைக்குள் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் 3 பி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.
இனிவரும் காலங்களில் பணம் உள்ளவர்கள் இலகுவாக கல்வியினை தொடர்ந்து செல்லாம் என்ற நிலை உருவாக்கப்படப் போகின்றது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியானது அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் அதே வேளை, வைத்திய சேவையில் மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பும் இல்லாமல் ஆக்கப்படவுள்ளது.
இதனால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பெரும்பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
https://www.facebook.com/JMediicine


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by நண்பன் Wed 13 Jan 2016 - 15:23

சில நாட்களுக்கு முன்பும் இது பற்றி ஒரு செய்தி படித்திருந்தேன் இது மிகவும் வருத்தமான செய்தி நாம் இப்போதே நிறையப் பணங்கள் சேர்த்து வைக்க வேண்டியுள்ளதே  

நல்லாட்சியில் இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by Nisha Wed 13 Jan 2016 - 15:28

இது நிறைவேறினால் பணமிருக்கின்றவர்கள்  இலகுவாக டாக்டராகி விடலாம் என ஆகி விடும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by நண்பன் Wed 13 Jan 2016 - 15:29

Nisha wrote:இது நிறைவேறினால் பணமிருக்கின்றவர்கள்  இலகுவாக டாக்டராகி விடலாம் என ஆகி விடும்.

இன்றும் கூட சில டாக்டர்கள் பணம் கொடுத்துத்தான் வந்திருக்கிறார்கள் இந்தியாவின் நிலை இலங்கையிலும் பரவியுள்ளது  அநியாயம் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by Nisha Wed 13 Jan 2016 - 15:34

நிஜம் தான். உண்மை டாக்டர்களுக்கு மதிப்பில்லாது போகும்
என்ன தான் நல்லாட்சி செய்தாலும் இம்மாதிரி கல்வி விடயத்தில் அடி முட்டாள் தனமாய் முடிவெடுப்பது எதிர்காலச்சந்ததிக்கே கேடான விடயம். 

அரசியல் வாதிகள் இன்றைய தங்கள் இலாபத்தினை கணக்கிட்டு எதிர்கால சந்ததியை படுகுழி நோக்கி தள்ள பார்க்கின்றார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by நண்பன் Wed 13 Jan 2016 - 15:39

Nisha wrote:நிஜம் தான். உண்மை டாக்டர்களுக்கு மதிப்பில்லாது போகும்
என்ன தான் நல்லாட்சி செய்தாலும் இம்மாதிரி கல்வி விடயத்தில் அடி முட்டாள் தனமாய் முடிவெடுப்பது எதிர்காலச்சந்ததிக்கே கேடான விடயம். 

அரசியல் வாதிகள் இன்றைய தங்கள் இலாபத்தினை கணக்கிட்டு எதிர்கால சந்ததியை படுகுழி நோக்கி தள்ள பார்க்கின்றார்கள்.
புனிதமான அரசியலை சாக்கடையாக மாற்றி விட்டார்கள் இந்தியா இலங்கை பங்ளாதேஷ் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது சாக்கடை அரசியல் யாரைச்சொல்லியும் குற்றம் இல்லை ஓட்டுப்போட்டு ஆட்சிக்கு தேர்ந்ததெடுக்கும் மக்களும் குற்றாளி இல்லை இது முடிவில்லாத்தொடர் அன்றும் இன்றும் என்றும் முடிவே இல்லை என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by Nisha Thu 14 Jan 2016 - 0:46

எனது நண்பன் ஒருவன் A/L முதற்தடவையில் சில rank இனால் medicine entrance ஐ தவற விட்டு 2ம் தடவை மீண்டும் A/L படிக்க வசதியில்லாமல் கிடைத்த course இற்கு பல்கலைக்கழகம்சென்றான்...... இம்முறை A/L பரீட்சையில் ஏறாவூர் மாணவன் ஒருவன் கடைகளுக்கு உணவு விற்று engineering technology மாவட்டநிலை 5 இனை பெற்றுள்ளான்... ஏழை மாணவர்களின் கதை இவ்வாறிருக்க 1.2 கோடி இருந்தால் போதும் மருத்துவ பீடம் என்றால் ஏழை மாணவர்கள் எங்கே போவது? மாணவனின் எதிர்காலத்தை அவனது கல்வித்திறமையே தீர்மானிக்க வேண்டுமே அன்றி அவனது பெற்றோரின் வருமானமல்ல......! இந்த நிலை நீடித்தால் கல்வி ஏழைகளுக்கு எட்டாகனியாகி விடாதா....? 3B எடுத்த வறிய மாணவன் கிடைத்த course ஐ படிக்க 2CS எடுத்த மாணவன் மருத்துவபீட அனுமதியை 1.2 கோடிக்கு வாங்குவதுதான் கல்வியின் சமத்துவமா ...?? வைத்தியர்களின் எண்ணிக்கை போதாது எனில் அரசு பல்கலைக்கழக அனுமதியை கூட்டட்டும்... 3 B எடுத்த மாணவர்கள் உள்ளே வரட்டும்.... 3 முறை A/L எழுத இலங்கையில் அனுமதி இருக்க திறமையான மாணவர்களின் தூக்கம் தொலைந்த இரவுகளுக்கு 1.2 கோடி தான் விலையா.........?? ? ஏழைகளின் ஒரே மூலதனமான கல்வி விலை போனால் நாட்டின் எதிர்காலம்........ ...???
https://www.facebook.com/lelukshan.arunasalam/posts/816246815153286?fref=nf


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬ Empty Re: ‎யாழ்_பல்கலைக்கழக_மருத்துவ_பீட_மாணவர்கள்_ஆர்ப்பாட்டம்‬

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum