சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

படித்த சிறந்த சிறுகதைகள்  Khan11

படித்த சிறந்த சிறுகதைகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Feb 2016 - 13:59

வெளிநாட்டு பயணம்
 

நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.
நான் வெளி நாடுகளுக்குப் போனதில்லை. அன்னியர் வீட்டில் நுழைந்து பார்த்து, "அங்கே அது இருக்கிறது; இது இருக்கிறது, நம்மிடம் அதெல்லாம் இல்லையே...' என்று, தம் வீட்டோடு ஒப்பிட்டு ஏங்கி, அங்கலாய்க்கும், அலையும் குணமே, வெளிநாடு சுற்றிப் பார்க்கும் பலரிடமும் நிறைந்திருப்பதாக, எனக்குத் தோன்றுகிறது.

வேடிக்கை பார்ப்பதற்காகச் சிலர் செல்கின்றனர். எனக்கோ, நம் வீதிகளில் நடக்கும் வேடிக்கைகளே, இன்னும் பார்த்துத் தீரவில்லை. புதுமைகளை ரசிப்பது எனில், என்னைத் தேடி வரும் ஒவ்வொன்றுமே, புதுமையாக இருக்கின்றன. கற்றுக் கொள்வதற்காக எனில், என்னைச் சுற்றி இருக்கும் மிகக் குறுகிய வட்டத்தில் கூட, நான் காணவும், கற்கவும், ஏராளமான விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.

ரஷ்ய எழுத்தாளர்களான கோகோல், புஷ்கின், தாஸ்தியேவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனீவ் ஆகியோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். அவர்கள் நேசித்த ருஷ்ய ஆத்மா மிக உயர்வாக இருந்தது. அதன் காரணமாகவே, ரஷ்யாவை காண, நான் ஒருமுறை இசைந்தேன்.

நம் பெருமையை உலகு அறிவதற்காக, அதனால், உலகு பயன் உறுவதற்காக - ஒரு விவேகானந்தர் போல் நம்மால் போக முடியுமா?

அல்லாமல், லண்டனில் இட்லி - சாம்பார், கும்பகோணம் வெற்றிலை - சீவல் கிடைப்பதைப் பற்றி, கதை அளந்து, ஜப்பானிய, "கீய்ஷா' பெண்களைப் பார்த்து, "அப்பப்பா... அச்சச்சோ!' என்று வாய் பிளந்து, ஆச்சரியப் படுவதற்கும் தானா போக வேண்டும்!

சுங்க இலாகா சோதனை, வருமான வரி சர்ட்டிபிகேட், பாஸ்போர்ட், விசா, அறிமுகக் கடிதங்கள், இத்யாதி சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு, ஒரு சர்வதேச கைதி போல, இந்தச் சடங்குகளைச் சுமந்துகொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் ஏறியும், இறங்கியும், நான் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்று எனக்குத் தெரியும். நான் இருக்குமிடத்தில் தான், எனக்குச் சிறப்பு.

எங்கும், எல்லாரும் சுதந்திரமாகத் திரியும் காலம் வரும். அப்போது, எல்லாருக்கும் இந்த மோகம் குறையும். எனக்கு, இப்போது இந்த மோகம் இல்லை.

நன்றி ; ஜெயகாந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Feb 2016 - 14:02

குட்டி காதல் கதை

ஒரு ஊருல ஒரு கணவனும், மனைவியும் இருந்தாங்க. 
இரண்டுப் பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புக் கொண்டவங்க.
அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது,
தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.

ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்..
மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு

எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து  அழுதுகிட்டு இருக்காங்க.
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத்  திறக்குறாங்க 
அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மவைக் கூப்பிடுங்கனு சொல்றான்.
எல்லாரும் என்ன விஷயம் னு கேட்குறாங்க.
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை  நான் பூ வாப்கி வராமல் என் மனைவி ஏமாந்துப் போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டு வா னு சொல்லி பணம் குடுத்தார் னு சொல்றான். 

அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக  அழவே,
அந்தப் பையன் உள்ளப் போய் பார்க்குறான்,
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான். அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை  சடலமாக கிடத்தி இருக்காங்க. 

 இதில் தன் மனைவி ஏமாந்துப் போய்விடக்கூடதுனு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா?
இல்லை, 
தன் இயல்பான வாழ்க்கை மாறியதை உணருமுன்பே இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா?  

நன்றி ; ராஜி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Feb 2016 - 14:05

ஒரு சிறிய காதல் சோக கதை
------------
தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரியாத பெண் எல்லாவற்றையம் வெறுக்க ஆரம்பித்தாள் தன்னை நேசிக்கின்ற தனது காதலனைத்தவிர.

"எனக்கு பார்வை கிடைத்தால்தான் உன்னை திருமணம் செய்துகொள்வேன்" என்று தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தன் காதலனிடம் அவள் கூறுகிறாள்

ஒருநாள் அவளுக்கு பார்வை கிடைக்கின்ற நாள் நெருங்கியது. யாரோ அவளுக்கு கண்களை தானம் செய்து அவள் பார்வை கிடைக்க வழிசெய்தார்கள்.

அவள் கண்களைத்திறந்தாள். உலகத்தைப் பார்த்தாள். தனக்கு உலகமான தன்னை நேசித்த காதலைனைப்பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். ஆம் அவளுடைய காதலனுக்கும் இரு கண்களும் இல்லை.

காதலன் கேட்டான். "இப்பொழுது நீ உலகத்தைப் பார்க்கின்றாய் ..சொல் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?" என்று

"கண்தெரியாத உன்னை என்னால் திருமணம் செய்ய முடியாது" என்று அவள் அவனை மறுத்துவிட்டாள். 

அந்த காதலனும் கண்ணீரோடு , 

"என்னைத்தான் வெறுத்துவிட்டாய் என் கண்களையாவது நன்றாக கவனித்துக்கொள்" என்று சொல்லிவிட்டு சென்றுகொண்டிருந்தான்.

அன்புடன்

ரசிகவ் ஞானியார்

நன்றி Gnaniyar  நிலவு நண்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 9:19

கசங்கிய கடிதம்
------------------
ஆடம்பரமான ஒரு சிறிய  அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று  மாலை போட்டபடி இருக்க,  அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது.

படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில்  தேடுபவர் போலவும்  தலைகுனிந்தபடி  மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார்.

        உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து,  எமக்காகவே தமது  வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து  உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில்  ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில் தமது எந்தக் கஸ்டத்தையும் பாராது. ஓடீ ஓடி வேலைசெய்து, இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த என் நண்பர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதுபோல் நாம்  எமது விடுதலைப் போராளிகளையும் மறக்கக்கூடாது. எமது விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தாலும் அதில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளையும் அரவணைத்து. அவர்களுக்கு கைகொடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்தவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே வேளை மரணமான போராளிகளை மனத்தில் நிறுத்தி எந்நாளும் அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் காயப்பட்ட போராளிகளையும்; அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுடன் நம் மாவீரர்களின் பெற்றோர்களையும் விழிகளைப் பாதுகாக்கும் இமைகளைப்போல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்படியான விழாக்களை நாம்  தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.

        மேடைக்கருகில் நின்ற ஒருவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.  ''இந்த ஆள் நேரகாலம் தெரியாமல் அறுக்குது…  நான் வேலைக்கு போக வேணும். முதலில் ஆளை மேடையைவிட்டு இறக்கு…  '' என்று பக்கத்தில் நின்றவரிடம் சத்தம் போட்டார்.

        அதை உணர்ந்தவர் போல் பேசியவர் தனது பேச்சை நிறுத்தி மேடையை விட்டு இறங்க வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.  இடை இடையே கொத்து ரொட்டித் தாளம்......     காற்றோடு அதன் வாசம்.....        பார்வையாளர்கள் காதும் மூக்கும் அதன்பால் இழுபட மேடையின் முன்பு இருந்த மக்கள் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல  எழுந்து செல்லத் தொடங்கி விட்டார்கள்.

        நடந்தவர்களின் காலில் அகப்பட்டு  நசிந்து, கசங்கிப் போன நிலையில் ஒரு கடிதம், மண்டப நடுவில் தேடுவாரற்றுக் கிடந்தது. குனிந்து எடுத்தேன்.   

நான் என்ன தவறு செய்தேன்.? என்னை ஏன் மற்வர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். என் கால்கள் ஏன்  ஊனமுற்றன. என் கைகள் ஏன் முடமாகின. நான் எம் தேசம் காக்க…. எம் மக்களின் விடுதலைக்காகப் போராடியது தவறா?

இளவதிலே என் பெற்றோரைப் பிரிந்தேன். என் உறவுகளைப் பிரிந்தேன்.  அம்மாவின் பாசமோ அப்பாவின் பாசமோ அறியாமல் காட்டிலே வளர்ந்தேன். என் பிரிவால் என் குடும்பம் கலங்கியது. அவர்களின் துக்கத்தையம் துயரத்தையும் அறிந்தும் நான் அவர்களைப் பார்க்கச் செல்லாமல்  என் தேசத்தை நேசித்து, அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன்.  துப்பாக்கியும் குண்டுகளும் ரவைகளும் என் உறவாகின. என்னைப்போல் இணைந்தவர்கள் நட்பானார்கள்.  நாம் வெற்றி பெற்றபோதெல்லாம் எல்லோரும் பாராட்டினாhர்கள். போராடினோம். ஆவேசத்துடன் போராடினோம்.

போராட்டத்தில் என் அண்ணனை இழந்தேன். அக்காவை இழந்தேன். தம்பியை இழந்தேன். தங்கையை இழந்தேன். இதனால் பாதிப்புற்ற என் பெற்றோரையும் இழந்தேன். நட்புகளும் நடந்து வந்த பாதையில் நடு ஆற்றில் வீழ்ந்தார்கள். போராட்டமும் முடிந்தது.

கைதியானேன். சிறைக்கூடங்கள் என்போன்றோரை வரவேற்றன. கொடுமைகளும் சித்திரவதைகளும் நாளாந்தம் எமக்காகப் பரிசாகக் கிடைத்தன. போராட்ட வடுவைப் பார்த்தவன் வகைவகையாச் சித்திரவதை செய்தான். அதனால் உடல் மேலும் ஊனமுற்றது. நோய்வாய்ப்பட்டேன்.  சிறைக்கு நான் பாரமானேன். பாராமானதை ஏன் வைத்திருப்பான் என எண்ணியவன் என்னைச் சிறையிலிருந்து தூக்கி வெளியிலே போட்டான்.

தத்தித் தத்தி நடந்து வந்தேன். என்னைப் பார்த்தவர் கண்களில் பரிகாசம்தான்; தெரிந்தது. போராட்டத்தைப்  பாராட்டியவர்களோ. எஞ்சிய உறவுகளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருவருப்பான ஒரு பிராணியைப் பார்ப்பதுபோல்  முகத்தைச் சுழித்தபடி  என்னைப் பார்த்தார்கள். என் ஊரை நாடி நடந்தேன்.  என் வீடு இருந்த இடம் தெரியவில்லை. விபரம் அறியக் கூட அங்கு ஆட்களும் இல்லை. உண்ண உணவும் இல்லை. ஒதுங்க  இடமும்; இல்லை. மாற்றிக் கட்டத் துணியும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. யாரும் அற்ற நிலையில் அனாதையாக இப்படியான நிலையில்… வாழ்வதா…? சாவதா…? யோசித்தேன். வாழ்வதற்கு ஏதாவது  ஒரு ஆதரவு வேண்டும். முயற்சித்தேன்…. முயற்சித்தேன்…. முடியவில்லை. எவருமே ஆதரவு கொடுக்கவில்லை. முன்வரவும் இல்லை. இதற்கு முன்னர்   உங்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலும் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்?  எனக்கு ஒரு கயிறுதான் ஆதரவாகக் கிடைத்தது….

''என்ன நடுவில நின்று கடிதம் வாசிக்கிறீங்க… அங்கால கெதியாப் போங்கோ…''      என ஒருவர் என்னை அதட்ட....   வேறொருவர்  ''அண்ணை... உத்தமனின் படம் ஒன்று வேண்டுங்க.... '' என்றார். விழாத் தொடர்ந்தது.  நான் இடத்தைவிட்டு நகர்ந்தேன்

 நன்றி Sembagan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 9:21

பைத்தியங்கள்
---------

இந்த உலகத்தில் பைத்தியங்கள்  அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள்  அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்  அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது .
 
இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் அவதும் அன்னை வளர்ப்பினிலே  இது பலவருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தை வளர்ப்பு முறை ஆனால் ஒரு குழந்தை பிறந்து சிறிது காலம் கழிந்த பின் அந்த குழந்தைக்கு நடை பழக்கி ,கதை பழக்கி உன்மை எது பொய் எது நன்மை எது தீமை எது என்று சொல்லி கொடுக்கிறோம் அதுவே சில ஆண்டுகள் போன பின்பு அந்த குழந்தைக்கு  நீ அங்கே போகதே , அதை செய்யாதே ,அவர்களுடன் சேராதே, என்று ஒரு மனிதனின் குணங்களில் இல்லாத ஒரு மனித பழக்கத்தை அந்த குழந்தைக்கு திணிக்கிறோம்.
 
இப்படித்தான் எனது வாழ்க்கையும்  ஆரம்பிக்கின்றது எனது பெயர் வசந்த்  எனது அம்மா ஒரு பொலிஸ் காண்ஸ்ரபிள்  அப்பா ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர்  இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்கள் ஆனால் எந்த ஒரு விசயத்திலும் எதையும் விட்டுக்கொடுத்து வாழ தெரியாதவர்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சச்சரவுகள்தான் வாய் பேச்சு அடிதடியில் முடியும் இடையில் நான் சிக்கி தவிக்க எனக்கும் அடி விழும் இதற்கு என்ன  காரணம் என்னவென்று அறியாமல் அழுது கொண்டிருப்பேன் அந்த நாளில் நான்.
 
 இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல அப்பா ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அப்பா தூங்கில்  இட்டு அகாலமரணம் அடைய  இன்னும் தனிமைக்கு என் வாழ்க்கை நகரத்தொடங்கியது. என்னை பார்த்த்துக்கொள்வது என் அப்பாதான்  என்னை குளிப்பாட்டி வெளிகிடுத்தி பாடசாலலைக்கு கூட்டி செல்வது எல்லாம் அப்பாதான் அம்மா என்னை கவனிப்பதில்லை காரணம் அவக்கு நேரம் இல்லை  என்று சொல்லுவா லீவு எடுப்பதில்லை அப்பாவுக்கும் சந்தேகம் வந்துதான் வாய்பேச்ச்சு முற்றி  தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது  போக போக எனக்கு புரிய ஆரம்பித்தது   அம்மாவின் போக்கு எனக்கு எனக்கும் பிடிக்கவில்லை வீட்டுக்கு நேரத்துக்கு வருவதுமில்லை என்னை கவனிப்பதுமில்லை என்னை பார்த்துகொள்ள வேலைக்காரி ஒருவரை வீட்டில் வைத்தார் ஒரு குழந்தையை சொந்த தாய் பார்பதை போல வேறு யாராலையும் பார்த்த்துகொள்ள முடியுமா ? அந்த வேலைக்காரியோ வீட்டுக்கு நேரத்துக்கு வரவேண்டும் வெளியில் எங்கையும் ஊர் சுற்ற கூடாது யாருடனும் சேரக்கூடாது  என்று அதட்டும் கட்டளை போடுவாள் நான் நடந்து கொள்ளும் வீதம் பற்றி என் அம்மாவின் தம்பி மாமாவுக்கு போட்டு கொடுப்பது  இவள்தான் என் மாமாவுக்கு எங்கள் அம்மாவின் சொத்தை அபகரிக்க கனநாளா ஆசை அந்த மாமா பயலுக்கு. என்னை  பயமுறுத்திக்கொண்டே இருப்பான் . நீ ஏதாவது தப்பு தண்டா செய்தால்  உன்னை கொன்று விடுவேன் என்பான். 
 
நான் சந்தோசமாக இருக்கும் நாட்கள் அந்த பாடசாலை நடக்கு ஐந்து நாட்கள்தான் நண்பர்களுடன் விளையாடுவது  வெளியில் சுற்றுவது எனது நண்பர்கள் ராஜன், அகிலன் இந்த இருவருமே எனது உயிர் நண்பர்கள்  அன்றைய நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தேன் அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் பேசிய சாரம்சம் மட்டுமே என் காதில் விழுந்தது என்னை விடுதியில் சேர்க்க வேண்டும் என்பது மாமாவின் பேராசை அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்க வில்லை ஒரு சிறிய சந்தோசம் என்றாலும்  என் அம்மவை பற்றி நினைப்பேன் என்னை அவள் அவரசரத்திற்கு பெற்றாளோ அல்லது வெறும் உணர்ச்சிக்கு மட்டும் பெற்றாளோ அல்லது சமுதாயம் தன்னை குற்றம் சாட்ட கூடாது என்பற்கு பெற்றாளோ என்ற கேள்வி மட்டும் என் மனதில் மரதன் ஓட்டம் போல ஓடி கொண்டிருக்கும் . இரவும் தனிமையும் என் வயதும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக என்னை வேட்டையாட தொடங்க நான் அதைச் செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று என்மனம்  ஆட்டம் காண ஆரம்பித்தது. வேலைக்காரிக்கு வேட்டு வைக்க தொடங்கினேன் வீட்டில் இருக்கும் கள்ள வழி அதுதான் யன்னல் வழியாக வெளியில் செல்ல ஆரம்பிக்க தொடங்கினேன்.
 
அன்றைய நாளில் இருந்து யாருக்கும் தெரியாமல் எனது நண்பர்களுடன் பீடி குடிக்க ஆரம்பித்தேன் ,அதில் என்ன ஒரு சுகம் கூட  இல்லையே என்று ,சிகரட் ,கோல்ட்லீவ் என்பன குடிக்க ஆரம்பித்தேன் காசுக்கு வீட்டில் திருட ஆரம்பித்தேன் அதன் சுவையையும் அறிந்து விட்டேனே பிறகு என்ன சாரயம் ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து ஆளாளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு கள் குடிக்க அடுத்த கிரமத்துக்கு சென்று கள் வாங்கி குடித்தோம் புது பழக்கம் என்ற படியால் ஆளாளுக்கு குடித்த கப்புக்கு மேலாக சத்தி எடுத்து கப்பை நிறைத்து கொண்டு மரத்தை பிடித்து கொண்டிருந்தோம் தலை சுற்றால் என்னடா இப்படி ஆகிவிட்டதே எப்படி ஊருக்கு செல்வது என்ற பயத்தினால் யாருக்கும் தெரியாமல் மாலை வரை அந்த ஊரில் உள்ள புதரில் ஒளிந்திருந்தோம் இப்படி யாருக்கும்  தெரியாமல் இந்த பழக்கம் தொடர ,பியரிலிருந்து  எல்லாவற்றையும் ருசிக்க ஆரம்பித்து விட்டோம் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம்  இப்படி சிலகாலமாக எங்கள் வாழ்க்கை ஓடியது வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் சைக்கிளில் இருந்து ஒவ்வொரு பொருளாக  மூவரும் அவரவர் வீட்டில் திருட ஆரம்பித்தோம். படிப்பு என்பது மக்கி போக எப்படி கள்ள வேலை செய்து பிடிபடாமல் வாழ்வது என்று மூவரும் திட்டம் வகுத்து வகுத்து எனக்களது வேலையை காட்ட ஆரம்பித்தோம்.பாடசாலைக்கு போவது போல போய் வெளியில் சுற்றுவதும் விளையாடுவதும் இப்படி போக மச்சான்  நாம அந்த தூள் இருக்குதானே அதை ஒருக்கா போட்டு பார்க்க வேணும் மச்சான் என்று அது தான் கடைசி ஆசை என்றான் திட்டம் ஒன்று போட்டேன் உங்கட சொந்த காரர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என கேட்க ஒம் என்றான் அகிலன் அப்ப சரி நீ உங்கட வீட்ட எப்படியாவது ஒரு காரணம் சொல்லி அங்க போக ஏற்பாடு செய் என்றேன் அவனும் ஏற்பாடு செய்ய  ராஜனோ காசுக்கு என்னடா செய்யுற என்ற கேள்விக்கு நான் எடுக்கிறன் என்று சொல்லி வீட்ட போய் அம்மாவின் காப்பை திருடி விற்று கொழும்புக்கு மூவரும் புறப்பட்டோம் .
 
அன்று இரவு சென்று மருதானையில் ஒரு விடுதியில் றூம் போட்டோம் அங்கு மூட்டை இல்லாத றூமும் இல்லை ஓட்டை இல்லாத  றூமும் இல்லை தானே அங்கு தங்கின ஆட்சளூக்கு தெரியும். றூமில் தங்கியிருந்து மூவரும் யோசிக்க அதுதான் யாரிடம் போவது எங்கே வாங்குவது பற்றி யோசிச்சு கொண்டிருக்கும் போது பக்கத்து றூமில் இருந்து அணுகிற சத்தம் கேட்க எங்கள் சிந்தனை தூளாக இருந்தது துவண்டு எழுந்து பெண்ணாக மாறியது மச்சான் இதையும் ஒருக்கா செய்து பார்ப்பமே என சொல்ல எங்கள்  றூமில் இருந்து அடுத்த றூமுக்கான ஓட்டை பெருப்பிக்கலானோம் இருட்டு என்பதால் ஒன்றுமே தெரியவில்லை சத்தம் மட்டுமே கேட்டது  அன்றிரவு தூக்கம் இல்லாமல் காத்திருத்தோம் அவளை அழைப்பதற்க்கு அடுத்த நாள் காலை அந்த றூம் வாசல் திறபடாத என அலிபாபாவின் மந்திரங்களை மறந்தவர்கள் போல அந்த றூம் கதவினை பார்த்துக்கொண்டிருந்தோம் . கதவு திறபட உள்ளே இருந்து ஒரு நீக்றோ போல கருபான கட்டையன் ஒருத்தன்  வந்தான் என்ன தம்பி நிற்கிற  என்றான்  இல்லை அண்ணை இரவு முழுக்க சத்தம் கேட்டதே அண்ணே அது தான் பார்க்கலாம் என்று வந்த என்று சொல்ல ஓ அதுவா தம்பி எனக்கு இரவு முழுவதும் நடுக்கலும் காய்ச்சலும் என்றான் எப்படியிருக்கும் பரதேசி நாயே அதுக்காடா ஆளை எழுப்புற அளவுக்கு அணுகுவ என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் ஆசை அடங்கவில்லை  அடுத்த நாள் காலை ஆள் பிடிக்க மருதானையை சுற்ற ஆரம்பித்தோம் ஆளாளுக்கு ஒரு திசையில்  மூவரும் சென்று தேட யாரும் கிடைக்க வில்லை நான் அடிக்கடி சுற்றி திரிவதை பார்த்த சி .ஐ. டி காரன் என்னை பிடித்து விசாரிக்க கொண்டு சென்றான் அவர்களின் காரியாலத்திற்கு.
 
அங்கு ஏற்கனவே  என் நண்பர்கள் அங்க கோழியை குந்த வைச்சது போல இருக்க கண்கள் பேசின ஆளாளுக்கு சாத்திரிக்கானுகள் என்பது ஆட்களை பார்க்கவும் தெரிந்துகொண்டேன் விசாரிக்க தொடங்க நாங்கள் சொந்த காரங்கள் வீட்டுக்கு வந்தோம் ஆனால் வழி தெரியவில்லை அதனாலதான் சுற்றி கொண்டிருந்தோம் என்று சொல்லியும் மருதானையில தங்கியிருந்தோம் என்று சொல்ல விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு  விட்டு  சரி நீங்க ஊருக்கு போங்க என்று சொல்லி எச்சரித்து விட்டான் . தப்பினோம் சாமி என்று  ஊருக்கு வந்து சேர வீட்டில் மாமாவும் அம்மாவும் எனக்காக காத்திருந்தனர் எங்கே போன நீ என்று விசாரிக்கும் பொழுது மாமாவின் கைகள் என்னை அடிக்க ஆரம்பிக்க அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றையும்  பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கேட்க என்னை என்னால் பார்க்க முடியாமல் மாமாவுக்கு வீட்டு மூலையில் இருந்த தடியால் ஒன்றை போட மண்டை கிழிந்தது பதினாறு தையல்  உடனே ஆஸ்பத்திரி பொலிஸ் முறைப்பாடு என ஆரம்பித்து  அம்மாவோ பொலிஸ் முறப்பாட்டை சமாளிக்க பார்க்க மாமா விட வில்லை நீதிமன்றதுக்கு சென்றது வழக்கு.  என்னை சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஆணையிட்டார்  நீதிபதி காரணம் நான் மாணவன் என்ற படியால் .
 
அப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டது நாம் எங்கு சென்று தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ளும் கண்கள் உண்டு என்பதை   . அங்கே சீர்திருத்த பள்ளி என்பது கவுன்சிலிங் கோம்  அங்கே ஒவ்வொரு மதத்துக்கும் உரிய பெரியவர்கள் வந்து உபதேசம் செய்வார்கள் எனக்கு அது பிடிக்காது அங்கும் தனிமை என்னை நானே திருத்தி கொள்ள வேணும் என்பதை முடிவு செய்தேன்  மனநலம் பாதிக்கப்படவன் போல நடிக்கலானேன் அப்போதுதான் ஒரு கிறிஸ்தவ பாதரியார் வந்தார் அவரோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பராமரிப்பவர்  அவரிடம் நான் உன்மையை சொல்ல அதாவது எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை எப்படியாவது என்னை உங்க இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்றேன் அவர் மறுத்து விட்டு பின்னர் சரி அப்படியானால் நீ வாழ்க்கை பூரகவும் நடிப்பாயா எனக்கேட்க இல்லை ஐயா எனக்கு எப்ப வாழ பிடிக்கிறதோ அப்போது நான்  தெளிந்தவன் போல விலகிவிடுவேன் என்றேன் அன்று சீர்திருத்த பள்ளியில் இருந்து என்னை பைத்தியம் போல என்னை கட்டி கூட்டி சென்றனர் அங்கே  நான் உள் செல்ல என்னை எல்லா பைத்தியங்களும் சேர்ந்து என்னை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்றது எனக்கு சிரிப்பதா அழுவதா என்பது தெரியவில்லை  இப்படி நாட்கள் சென்றன அந்த வாழ்க்கை பழகி கொண்டது மனதில் வஞ்சகம் இல்லாத ,அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைக்காத மனங்கள் ,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள்  அவர்களுக்கென ஒரு தனி உலகம்  தனி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இவர்களை பார்த்து பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது  இந்த உலகத்தில்.
 
எனக்கு இந்த வாழ்க்கை மிக பிடித்தது என் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார் இதே பாசத்தை ஆரம்பத்தில் என்னிடம் நீங்கள் காட்டியிருந்தால் நான் இப்படியிருந்திருப்பேனா என்றும் கேள்வி எழும் ஆனால்  என் சுய  சொந்த புத்தி எங்கே சென்றது என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
 
சில நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக எழுதினேன்

நன்றி முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 9:27

அலுவலகத்தில் காட்டுப்புலி!
------------
காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...

பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது. அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால், எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார். நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை. இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி, தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.


காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி:

உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ, செல்வமோ கிடையாது. நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!

 ////
நன்றி 
யாழ் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat 12 Mar 2016 - 9:30

என் அறியாமை
------------
பஸ் பயணம் என்பது  ஒரு சிலருக்கு பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது அது என் வேலைக்கு ஒவ்வொரு நாளும் தேவைப்பட்டது. நான் காயத்திரி ஒரு ஆசிரியராக புதிதாக நியமனம் பெற்று மட்டக்களப்பில் ஒரு பாடசாலயில் கல்வி கற்பிக்கிறேன். மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு அல்ல கொஞ்சம் தூரம் செல்லவேண்டும் புதிய நியமனம் என்பதால் அங்கு சில காலம் பணியாற்ற வேண்டும் ஒரு நாள் காலை நான்  எழும்புவதற்கு நேரமாகிவிட்டது அன்றைய நாள் எனக்கு சுடுதண்ணியை காலில் ஊற்றிக்கொண்டால் போல ஆகிவிட்டது சாப்பிடவும் இல்லை .ஒழுங்காக சாறி கட்டவும் தெரியாது அவதிபட்டுக்கொண்டே ஒருபடியாக சாறியை கட்டிக்கொண்டு புறப்பட ஆரம்பித்தேன் அம்மாவும் சாப்பிட்டு போடி என்று சொல்ல நான் தேவை இல்லை பஸ் போயிடும்  என்று சொல்லி ஓட்டமும் நடையுமாக பஸ் தரிப்பிடத்திற்கு  சென்றேன்  நல்ல காலம் பஸ் அந்த நேரத்திற்கு வந்து விட ஏறினேன்.

 அவசரத்தில் ஏறிய நான் சில்லறை காசு எடுக்க வில்லை பஸ் நடத்துனர் ரிக்கட்  கொண்டு வர எனது பையை திறந்து பார்த்தேன் அதனுள் ஆயிரம் ருபாய் இருந்தது அதனை நீட்டினேன் அவர் அதை  பார்த்து விட்டு சில்லறை தரும் படி கூற எனக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை பக்கத்தில் இருந்தவர்களிடம் வினவ யாரிடமும் அந்த காசை மாற்ற இருக்க வில்லை. ஒரு குரல் மட்டும் இந்தாங்கோ என்று என்னிடம் நீட்டியது அவருக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ஒரு படியாக ரிக்கட்டை பெற்றுக்கொண்டேன் ஆனால் பஸ்சில் காலை நேரம் என்பதால் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது எல்லாம் வேலைக்கு செல்பவர்கள்  நின்று கொன்டே செல்ல நேர்ந்தது நிற்பது என்பது எனக்கு பிடிக்காது  .பிடிக்காது என்று ஏன் சொல்ல வந்தேன் என்றால் உள்ள ஒரு சின்ன இடுக்கு ஒருவரே நிற்க முடியாது  அதுக்குள்ள நின்று போவதென்றால் ??? ஒரு சில காமுகர்களால் பெண்கள் படும் வேதனை இருக்கே அம்மா சொல்ல முடியாது  உரசுவது கிள்ளுவது .இடிப்பது  இந்த நரக வேதனையில் இருந்து தப்ப நான் நான் படும் பாடு இருக்கே அம்மா அதை சொல்லவே முடியாது.

 நான் இருக்கும் ஊரில் இருந்து மட்டுநகர் நாற்பது கிலோமீற்றர் தூரம்.  பஸ்சில் பாட்டு போட்டு சென்றார்கள் மாணவர்களும் உள் இருந்தார்கள் படிக்கிறார்கள் இல்லையோ ஆனால் பாட்டு மட்டும் நன்றாக பாடுகிறார்கள் , பஸ் இடையில் நின்றால் பிச்சைகாரர்கள் ஏறுவார்கள்  இவர்கள் தொல்லை ஒரு பக்கம் இருக்க  எனக்கு சில்லறை மாற்றிக்கொடுத்வர் என்னையே பார்த்து கொண்டிருந்தார் .நானும் அவரை உதவி செய்தவர் தானே என்று நினைத்து சிரித்தேன்  அவரும் சிரித்து விட்டு  மீண்டு மீண்டும்  என்னையே பார்த்து கொண்டிருந்தார் அது எனக்கு அருவ ருப்பாக இருந்தது நான் முறைக்க  அவர் அதை பொருட்படுத்தவில்லை என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவ‌ர் கிட்ட வரும் படி  கூறி ஏதோ செய்கை காட்டினார் நான் ஒன்றும் பேசாமல் அவர் கிட்டே சென்று  உதவி செய்யுங்கள் உபத்திரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டேன் .அவர் உடனே நீங்கள்  இங்க இருங்க‌ள் என்ற‌படி எழும்பினார் .நான்  இருக்கையில் அமர்ந்து  கொண்டேன் அவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார் அவர் இறங்கும் இடம் வர அவர் என்னை பார்த்து காயத்திரி தானே நீங்கள் எப்படி  இருக்குறீர்க்ள் என்று கேட்டு விட்டு இறங்கிவிட்டார் அவர் சென்ற பின்பு  யார் அவர் என்ற சிந்தனை ஓடியது.

 

பின்பு அவர்  பக்கத்தில் இருந்தவ்ர் ஒரு ஆண் பார்க்க நல்ல பண்பாக இருந்ததவர்  அவர் வேலையை காட்ட ஆரம்பித்தார் அவர் தொடைகள் என்னை உரசி உரசி உறுத்தியது அவரை  முறைத்து பார்த்தும் அவர் அவரின் வேலையை தொடர்ந்தார் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை  ஒருவனிடம் இருந்து  இன்னொருவனிடம் சிக்கியுள்ளதாக நினைத்து கொண்டு  ஆண்வர்கத்தை நினைத்தும் கல்யாணம் எல்லாம் கட்ட கூடாது என்றும் நினைத்தேன் பொறுத்து பொறுத்து பார்த்தேன் என்னால் முடியவில்லை கூச்சல் இட்டு நடத்துனரை கூப்பிட நினைக்கும் போது அவரோ தம்பி  இங்க வாங்கோ என பஸ் நடத்துனரை கூப்பிட பஸ் நடத்துனர் நீங்கள் இறங்கும் இடமா என்று கேட்க ஓம் என்று சொல்ல ஒரு நிமிடம் பொறுங்கோ என்று சொல்லி விட்டு இரு ஊன்று கோல்களை எடுத்து அவரிடம் கொடுத்தார் அவர் அதை வாங்கிக்கொண்டு ஊன்றி எழும்பி நடக்க ஆரம்பிக்கும் போது தங்கை நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் இருக்கையில் இருக்கும் போது என் கால்கள்  என்னிடம் இருக்காது  அது அங்கும் இங்கும்  இருக்கும் அதனுள் பூட்டப்பட்டிருக்கும்  ஆணிகள் உங்களை குத்தியிருந்தால் என்னை மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு இறங்கி சென்றார் .

 

அப்பொழுது என்னால் எதுவும் பேச‌ முடியவில்லை ஒரு சில ஆண்கள் செய்யும் சம்பவங்களால்  எல்லோரையும் தவறாகவும் தப்பாகவும் நினைக்க தோன்றினாலும் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்  அவரை காணும் போது .பஸ் நடத்துனரோ அவர் போரில் இரு கால்களை இழந்தவர் என்ற் சொன்னார்.
பாடசாலை சென்றேன் அங்க நடந்தை நினைத்தும் என் அறியாமையை நினைத்தும் அவசரபுத்தியை நினைத்தும் கவலையுற்றேன் பாடசாலை நிறைவுற்றதும் மீண்டும் பஸ்சில் ஏறி வீடு வரும் பொழுது எனக்கு காசு மாற்றி தந்தவரை பார்த்தேன் ஆனால் அவர் என்னை பார்த்தும் பார்க்காம‌லும் ஒரு வெளிநாட்டவருடன் சரளமாக ஆங்கிலம் பேசி வருவதையும் அவர் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசியும் வந்தார் .நான் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து அதை கேட்டு வந்தேன் .அதற்கு அந்த வெள்ளகாரன் உடன் கட்டை ஏறுவது பற்றி  கேட்ட போது அது ஒரு காலத்தில் இருந்தது ஆனால் இப்ப இல்லை என்றும்  அவருக்கு தமிழர்களின் கலை கலாச்சாரம் பற்றியும் சொல்லியும்  வந்தார் .

 

 

நான் என் மனதுக்குள் அவரிடம் இவ்வளவு திறமை இருக்குமா  என நினைத்துக்கூட பார்க்க வில்லை நான் அவரிடம் எப்படி என் பெயர் உங்களுக்கு தெரியும் என கேட்க உன் அண்ணனுடன் நான் வெளிநாட்டில் வேலை செய்த நான் அப்ப உங்களது குடும்ப‌ போட்டோவை உங்க அண்ணன் காட்டியிருக்கார்  என்று சொல்ல ஓ நீங்கதானா? மதன் என்றாள் ஓம்  என்று சொல்ல நீங்க நன்றாக படித்தவர் என்று அண்ணா சொன்னாரே ஓம் ந‌ல்லா  படித்தால் இங்க வேலை கிடைக்காதே இப்ப நான் ஒரு பாடசாலையில் சாதாரண பியுனாக‌ வேலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் இறங்கி செல்கிறார் நானும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்துடன் வீடு செல்கிறேன்

பெயர்கள் கற்பனை   
 
முனிவர் ஜீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:32

டெங்கு
---

ஒரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள். 

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

""ஏண்டி ருக்குமணி... உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்'' என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது. 

""என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி'' என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு. 

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான். 

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது''

""ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!'' என்றாள் ருக்குமணி.

""அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்''

""அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?''

""நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே... சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க... தெரியாதா உனக்கு?'' என்றாள் சிந்தாமணி.

""எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!'' என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி. 

""பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா! 

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்'' என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

""நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட? 

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.'' என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

""ஏண்டா துரையரசு... நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு... நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க ...பாவம்... அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல'' என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.  

""முருகேசா முருகேசா... ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?''

""மீனாட்சி... என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது... டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு... இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி... எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி... நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு... நான் செத்துப் போயிட்டா... எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க... எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது'' என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

""ஐயோ என் சாமி... இப்படி நாரா கிடக்குதே!'' அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, ""அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா... போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு... நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்...'' என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி 

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், ""பயப்படாதப்பா... உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது...'' என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

""வாடா அப்புக்குட்டி... காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்... அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு...''

""சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க''. 

""என்னடா சொல்றே?''

""பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி'' என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

""அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க... எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்... இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்... மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது. 

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ''

""சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே... எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி...''

""மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்... இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு... கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா... சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல... அந்த ஐநூறோட... என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்... நாளை  மறுநாள் வாடா'' என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. 

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

""இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே... ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?'' சரஸக்காதான் அவனிடம் கேட்டது! ""அதான பாருங்கக்கா'' என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

""உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா... ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

""இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா... தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க... இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்... இவுரு தான அப்புக்குட்டி?'' என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், ""சாமி நான் தானுங்க'' என்று அவர் காலில் விழுந்தான்.

""இதென்ன பழக்கம்?'' மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் "கொல்'லென்று சிரித்தார்கள். ""எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்'' என்றார்கள்.

""எந்திரிப்பா மொதல்ல நீ... இந்தா இந்தப் பணத்தைப் பிடி... எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க... உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க''...

""சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு! 

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி''.

""உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு... நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?'' என்றார் சண்முகம்.

""இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி... சத்தியமா இனி தொடமாட்டனுங்க!'' என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

""உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா... நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?'' என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

நன்றி ;வாமுகோமு தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:34

திசை தவறி நகரும் நதிகள்...!
--------

மருத்துவமனையில் காய்ச்சல் என்று இவனைத் தவிர மேலும் பத்து பேர் அந்த நீளமான அறையில் படுக்கையில் கிடந்தார்கள். காய்ச்சல் சரியானவர்கள் மருத்துவமனையைவிட்டு கிளம்பிப் போவதும், புதிய காய்ச்சல் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதுமாக ஒரு பெரிய தொடர்சங்கிலி நிகழ்வு நடந்து கொண்டே யிருந்தது. திலீபன் வைரஸ் காய்ச்சல் என்று ஏழாம் எண் படுக்கையில் விழுந்து இன்றோடு நான்கு நாட்களாகி விட்டன. தெளிவாகப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் நேற்றே சற்று தெம்பு வந்திருந்தது. இன்று அவனுள் பிழைத்துவிட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

இந்த அறையின் நோயாளிகளை கவனித்துக் கொள்வதற்கென்றே இரண்டு செவிலிகள் இருந்தார்கள். இருவரில் ஒரு செவிலி அழகாய் இருந்தபடியால் நேற்று மாலை இவனுக்கான மாத்திரைகளை அவள் தரும் சமயத்தில், ""சிஸ்டர், நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யுறீங்களா? உங்களை நான் காலையில பிடிச்சு லவ் பண்ணுறன்... எனக்கொரு முடிவு சொல்லுங்கோ என்று கேட்டிருந்தான். மாறாப் புன்னகையுடன் செவிலி இவன் வாய்க்குள் இரண்டு மாத்திரைகளை வீசி வாட்டர்கேன் தண்ணீர் நீட்டினாள்.

"எங்கேயும் எப்போதும் சினிமாவில அஞ்சலி கமர்கெட்டை ஆக்காட்டச் சொல்லி லவ்வர் வாயில மாத்திரை வில்லை வீசுறாப்ல வீசுறீங்கோ சிஸ்டர். என்னை உங்களுக்குப் பிடிக்கேல்லையா? நான் கேட்டதுக்கு ஒண்டும் சொல்லயில்ல.. இவன் சொல்லச் சொல்ல மாறாப் புன்னகையுடன் பக்கத்து படுக்கை நோயாளியிடம் அவள் சென்றாள். ""சாகுமட்டும் உங்கட நினைவோடயே வாழுவன். அவளுக்கு கேட்கும்விதமாய் சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.

இன்று காலையில் அதே செவிலிதான் இவனுக்கு இன்ஜெக்ஷன் போட கையில் சிரிஞ்சுடன் வந்தவள், ""எப்படி இருக்கிறது திலீபன் உடம்புக்கு? என்று கேட்டாள். ""பதிமூண்டு சைடு ஏக்டர்ஸ் என்ர தலையில ஏறி நிண்டு ஸ்லோ மோசனில் "டான்ஸ் பண்ணுற மாதிரி இருக்கு சிஸ்டர். ஒரு சிகரெட் தாறியோ... என்றான். புன்னகை மாறாமல் இவனுக்கு ஊசி ஏற்றிவிட்டு,""அண்ணே, உங்களுக்குக் கூடிப் போச்சு. எனக் கொரு புரியன் இருக்கிறார். "உன்னில் யாராவது உரசினால் இந்த நகரத்தையே எரித்துப் போடுவன் எண்டுதான் கதைப்பார். அண்ணன் நீர் ஒண்டுக்கும் கவலைப்படாதேயும் உமக்கு ஒரு நல்ல குடும்பத்து பொட்டையா பாக்குறேன். நானல்லோ உமக்கு சோக்கான பொம்புளையா செய்து வைக்கிறது என்று திலீபனிடம் செவிலி சொல்லிவிட்டு அகல, இவன் நிஜமாகவே வருத்தப்பட்டான். தமாசுக்கு இலங்கைத் தமிழ் பேசப் போக... பார்த்தால் நிஜமாகவே அந்தப் பெண் இலங்கைதானோ என்று சங்கடப்பட்டான். ஆனால் அவளும் இவனிடம் இவனைப்போலவே நக்கல் பேச்சு பேசினாள் என்று இவனுக்குத் தெரியாது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படி காய்ச்சல் என்றோ தலைவலி என்றோ திலீபன் மருத்துவமனையில் படுத்ததில்லை. இதுதான் முதல்முறை என்பதால், தான் ஒரு நோயாளி என்ற உணர்வு உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. மரணம் தன் கூர் பற்களைக் காட்டிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் சுற்றிக் கொண்டிருப் பதான உணர்வு இவனுக்குள் பயத்தை விதைத் திருந்தது. இவன் அம்மா பத்து மணிக்குத்தான் இவனுக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தாள். மற்ற நோயாளிகள் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டார்கள். இன்றுதான் பசி என்பதையே உணர்ந்திருந்தான். அம்மா இட்லிதான் கொண்டு வந்திருந்தது. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி. அவசரமாய் விழுங்கினதால் விக்கல் எடுத்தது. ""மெதுவா சாப்பிடு என்று சொல்லி அம்மா தண்ணீர் கேனைத் தந்தாள். அம்மாவிற்கு இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் தண்ணீரைக் குடித்தான்.

அம்மாவிடம் திலீபன் ஆறு மாத காலமாகவே சரியாய் பேச்சு வைத்துக் கொள்வது இல்லை. பல நாட்கள் இரவில் காப்பகத்திலேயே தங்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டான். இதற்கெல்லாம் காரணம் மளிகைக்கடை ஏகாம்பரம்தான். அவரை நினைத்தால்கூட இவனுக்குள் வன்மம் தலைதூக்கிக் கொள்கிறது. திலீபனின் அப்பா இறந்து ஏழெட்டு வருடங் களாயிற்று. வீட்டில் ஒரே பிள்ளை இவன்தான். பெரிதாய் இவனுக்கு சம்பாதித்து வைத்துவிட்டு ஒன்றும் அவர் போய்ச் சேரவில்லை. இவன் அம்மாவைவிட அவர் குடியைத்தான் அதிகம் நேசித்தார். அதனாலேயே ஐம்பது வயதைத் தொடும் முன்பாகவே போய்ச் சேர்ந்து விட்டார். வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகும் ஏகாம்பரத்தை, "உன் அப்பா மாதிரி என்றாள் அம்மா. இவனுக்கு அம்மாமீதும் புதிய அப்பாமீதும் கோபம் மிகுந்தது.

ஏகாம்பரம் கருங்கல்பாளையத்தில் இருபது வருடங்களாக மளிகைக்கடை வைத்து சம்பாதித் தவர். தன் இரண்டு பெண்களையும் சேலத்திற்கு கட்டிக்கொடுத்து விட்டார். மனைவியை காச நோயில் பத்து வருடங்களுக்கு முன்பே பறிகொடுத்தவர். கடைசிப் பெண்ணையும் கட்டிக் கொடுத்துவிட்ட பின்பு சாப்பாட்டு பிரச்சினைதான் அவருக்குப் பெரிதாய்ப் போய்விட்டது. வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டவருக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை. மரகதத்திடம் பேசப் பிடிக்க இருந்து ஒட்டிக்கொண்டார். மரகதம் தினமும் மூன்று வேளை சாப் பாட்டை அடுக்குப்போசியில் எடுத்துக் கொண்டு இரண்டு வீதி தள்ளியிருந்த மளிகைக் கடைக்கு நடந்தாள். திலீபனுக்குள் தீப்பற்றிக் கொண்டது. இந்த நாடகத்தை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போயிற்று.

திலீபன் ஈரோடு திருவள்ளுவர் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்தில் நான்கு வருடமாய் பணியில் இருந்தான். காப்பகத்தில் நூறு ஆதரவற்ற மாணவ மாணவிகள் இருந்தார்கள். 1999-ல் சமூக ஆர்வலர்கள் சாதாரணமாக வாடகைக் கட்டடத்தில் இருவரால் துவங்கப்பட்டபோது பத்து மாணவர்களே இருந்தனர். அவர்கள் இன்று கல்லூரி சென்று வருகிறார்கள். மேலும் இரண்டு சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவும் முறையாக இந்த காப்பகம் அறக்கட்டளை சட்டத்திலும், சமூகநலத் துறையிலும் பதிவு பெற்று பத்து வருடங்களுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

காப்பகத்திற்கென்று ஆறு சென்ட் நிலத்தை தொழிலதிபர் ஒருவர் ஈரோடு திண்டல் பகுதியில் வழங்கவும்... நிறுவனர் கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் அனைவரையும் சந்தித்து நிதி வசூல் செய்து ஐம்பது லட்சம் மதிப்புள்ள கட்டடத்தைக் கட்டி முடித்தார்கள். பொதுப் பணித்துறை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த விழாவும் நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்திருந்தது.

நிறுவனரின் மகன் சக்திவேல் மருத்துவமனையில் இருக்கும் திலீபனை நலம் விசாரித்துவிட்டுப் போகவந்த சமயம், திலீபன் சாப்பிட்டு முடித்து தட்டில் கை கழுவி யிருந்தான். ""எப்படி இருக்கு? என்று கேட்ட சக்திவேலுக்கு இவனைவிட மூன்று வயது அதிகம். ""பரவாயில்லங்க சார்... இன்னைக்கு ஈவினிங் பெரிய டாக்டரை பார்த்துட்டு வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்... ஆபீஸ்ல மாலினி எல்லா வேலையையும் சரியா பார்த்துக்கறாங்களா சார்... நல்ல சூட்டிகை சார் அந்தப் பொண்ணு... சேர்ந்த இந்த ஆறு மாசத்துல என்னோட சிரமங்களைப் பாதியாய் குறைச் சுடுச்சு சார் அந்தப் பொண்ணு. காய்கறி செலவுல இருந்து டியூசன் மாஸ்டர் சம்பளம் வரை துல்லியமா கணக்கு வச்சுக்குதுங்க சார் என்றான் திலீபன். வந்தவன் திலீபனின் எஜமானரோ என்று மரகதம் கைகட்டி கட்டில் ஓரமாய் நின்றிருந்தாள். அப்போது பார்த்துதான் மளிகைக்கடை ஏகாம்பரம் கையில் பழ வகைகள் நிரம்பிய பையுடன் அறைக்குள் நுழைந்தார். மரகதத்திடம் பையை நீட்டிவிட்டு இவனை பாசமாய்ப் பார்த்தார். இவனுக்குள் எங்கிருந்துதான் அப்படி கோபம் வந்ததோ! நிறுவனரின் மகன் நிற்பதைக்கூட மறந்து பழப்பையை அம்மாவிடமிருந்து பிடுங்கி வீசினான். ஆப்பிள், ஆரஞ்சு என்று தரையில் கிரிக்கெட் பந்துகள் உருண்டு ஓடுவது போன்று ஓடின.

தாராபுரத்தில் திலீபன் ஒருவன் மட்டுமே பேருந்திலிருந்து இறங்கியபோது மணி இரவு இரண்டு. அந்த மதுரைப் பேருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்குள்கூட செல்லவில்லை. நேர் சாலையிலேயே நிலையத்தின் வாயிலில் இறக்கி விட்டுவிட்டுப் போய்விட்டது. பேருந்து நிலையம் இருட்டில் கிடந்தது. சாலையில் மட்டும் சற்று தூர தூரமாய் விளக்கொளிகள் தெரிந்தன.. சைக்கிளில் டீ டிரம்மோடு நடுரோட்டில் ஒருவன் பாட்டுப் பாடியபடி வந்து கொண்டி ருந்தான். திலீபன் அவனை நிப்பாட்டினான்.

""டீ முடிஞ்சு போச்சு சார்... வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்... மதுரை பஸ்சுல வந்து இறங்குனியா சார்... இனி மூணு மணி வரைக்கும் ஒரு பஸ் கிடையாதே... எங்க சார் போகணும்? என்றான் பையன்.

""ஈரோடு போகணும். ஒரு மணி நேரம் பஸ்ஸே கிடையாதா?

""சாமத்துல எவன் சார் ட்ராவல் பண்றான்? நீங்க இறங் கனீங்களே கோவை வண்டி... அதோட டைம் ஒண்ணரை சார்... இன்னிக்கி லேட்... மூணே காலுக்கு பழனி வண்டி ஒண்ணு வரும். அதான் மொதல் வண்டி ஈரோட்டுக்கு. சிகரெட் வேணுமா சார்... இப்படி ரோட்டுல நிற்காதீங்க சார்... அப்படி கடையோரமா தூங்குறாப்டி இருட்டுல உட்கார்ந்துக்கங்க. போலீஸ்காரங்க பைக்குல சுத்திட்டே இருப்பாங்க. திலீபன் அவனிடம் இரண்டு சிகரெட் வாங்கிக் கொண்டான். பையன் பாடியபடி கிளம்பிப் போய்விட்டான்.

புகை ஊதியபடி சாத்தியிருந்த கடை ஓரமாய் திண்டில் சாய்ந்து அமர்ந்தான் திலீபன். இப்படி எங்கு வெளியூர் சென்றும் நடந்ததில்லை. காப்பகத்திற்கான நன்கொடை விஷயமாக பல ஊர்களுக்கும் சென்று வந்திருக்கிறான் திலீபன். இன்றும் ஒரு லட்சத்திற்கான காசோலையைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் காலையிலேயே கிளம்பி னான் மதுரைக்கு. நன்கொடை தரும் பெரும்புள்ளி தஞ்சாவூரில் இருந்து வருவதற்கு தாமதமாகிப் போனதால் இப்படி நடந்துவிட்டது. இரவில் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு விரைவு என்பார்கள். தூக்கம் வேறு சொக்கிக் கொண்டு வரும்போல தெரிந்தது. சாலையில் எந்த வாகனமும் செல்லவில்லை. இருட்டு உலகத்தில் நுழைந்து விட்ட மாதிரியும், இவன் மட்டுமே சந்தடியில்லாத அந்த உலகத்தில் தனியாளாய் உயிரோடு இருப்பது மாதிரியும் இருந்தது.

ஒரு பிச்சைக்காரன்கூடவா கண்ணில் தட்டுப்படவில்லை. இவன் தோல் பையில் பிஸ்கட் பாக்கெட்டுகளும் தண்ணீர் கேனும் இருந்தன. யாராவது கடை ஓரமாய் வேட்டியை இழுத்துப் போர்த்திப் படுத்திருந்தால் எழுப்பி கொஞ்ச நேரம் பொழுதைப் போக்க பேசலாம். இருட்டுக்குள் கிடந்த பேருந்து நிலையத்தின் உள்ளே இருந்து வெள்ளை நிறத்தில் ஒரு நாய் சாலையில் வாகன பயமின்றி ஓடி வந்தது. இவன் "இஸ்க்கோ, இஸ்க்கோ என்று நாயை அழைத்தான். அது சாலையில் நின்று இவனை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் போக்கில் இவனை சட்டை செய்யாமல் ஓடிப் போயிற்று. கடைசிக்கு அந்த நாய் தன்னிடம் வந்திருந்தால்கூட பிஸ்கெட் கொடுத்து, அதன் தலையைத் தடவிக் கொடுத்து சிறிது நேரத்தைப் போக்கியிருக்கலாமே என்று நினைத்தான். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாய்க் கழித்தான் திலீபன். கண்ணயர்ந்து விட்டால் பேருந்தைத் தவற விட்டுவிடுவோம் என்ற கருக்கடையும் மனதில் இருந்தது. பையன் சொன்னதுபோலவே டூவீலரில் இரண்டு காக்கி உடுப்புக்காரர்கள் மெதுவாய் ஊர்ந்து சென்றார்கள். தனிமை திலீபனை பயமுறுத்தி எதை எதையோ யோசிக்க வைத்தது. ஆபீஸில் இருக்கும் மாலினியின் உடல் அழகைப் பற்றி யோசித்தான். அவளது இடது கால் சற்று ஊனம். விந்தி விந்தித்தான் நடப்பாள். அதற்காக இரவு இரண்டே முக்கால் மணிக்கு வருத்தப்பட்டான் திலீபன்.

பையன் சொன்னதுபோல நேரத்திற்கு பழனி பேருந்து வரவில்லை. கால் மணி நேரம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. இவனோடு இன்னும் இரண்டு பேர் ஏறிக் கொண்டார்கள். பேருந்தினுள் இருபது தலைகள் இருந்தன. பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது காலை ஐந்தரை ஆகியிருந்தது. நிறுவனரின் மகன் சக்திவேலை அலைபேசியில் அழைத்து ஈரோடு வந்து சேர்ந்துவிட்ட விஷயத்தைச் சொன்னான். சக்திவேல் பார்க்கில்தான் ரன்னிங் ப்ராக்டீஸ் செய்து கொண்டிருப்ப தாயும், இங்கே வந்துவிட்டால் இருவரும் சேர்ந்தே டூவீலரில் சென்று விடலாம் என்றும் கூறினான். திலீபன் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து வெளிவந்து பார்க் நோக்கி நடந்தான்.

பார்க்கில் அதிகாலையிலேயே பெண்களும் ஆண்களு மாய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இதில் டாக்டர் அறிவுரைப் படி எத்தனை வியாதியஸ்தர்களோ என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு டூவீலர் அருகில் வந்தான். வியர்வைப் பூக்களைத் துண்டால் துடைத்துக்கொண்டு டூவீலரைக் கிளப்பவும், திலீபன் பின்னால் அமர்ந்து கொண்டான். கலெக்டர் அலுவலகம் அருகே சந்தில் நுழைந்த சக்திவேல் ஒரு டீக்கடை முன்பாக டூவீலரை நிறுத்தினான். கடையினுள் கணிசமான கூட்டம் இருந்தது. காலை நேரத்திலேயே பெரிய வடைச்சட்டியில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருக்க ஒருவன் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தான். கடை கல்லாவில் முப்பத்தெட்டு வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். கடையினுள் இருந்த ஸ்பீக்கர்கள் கந்தசஷ்டி கவசம் பாடிக் கொண்டிருந்தன. சக்திவேல் இரண்டு டீ ஆர்டர் சொன் னான் பெண்மணியிடம்! ""வா தம்பி என்று புன்னகையுடன் சக்திவேலிடம் பேசியவள் ""ரெண்டு டீ என்று மாஸ்டரிடம் சத்தமாய் ஒலி எழுப்பினாள். திலீபன் "தினத்தந்தி பேப்பரை மேய்ந்தான். ஈரோடு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தை கடத்தல் என்ற செய்தி இருந்தது. தாயார் கண்ணீர் விட்டு அழும் காட்சியை புகைப்படத்தில் பிரசுரித்தி ருந்தார்கள்.

மாஸ்டர் கொண்டு வந்த டீ டம்ளரை பெற்றுக் கொண்டவன் புதிய திரைப்படங்களின் கலர் விளம்பரங் களைப் பார்த்தான். தேவி அபிராமியில் "வழக்கு எண்: 18/9 என்றிருந்தது. நல்ல படம் என்று ஜனங்கள் பேசிக்கொள்வது இவன் காதில் விழுந்திருந்தது. "மாலினியோடுதான் பார்க்க வேண்டும். மாலினி சம்மதம் தெரிவிப்பாளா? இல்லை அவளை வா என்று கூப்பிட தன்னிடம் தைரியம் இருக்கி றதா? தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டான். சக்திவேல் இவனிடம் குனிந்து காதில் கிசுகிசுத்தான்.

""அந்த அம்மாளையும், மாஸ்டரையும், பஜ்ஜி போடுறவனையும் நல்லா ஒருமுறை பார்த்துக்கோ என்று சொல்லவும், இவனும் அவர்களைப் பார்த்துக் கொண்டான். டூவீலரில் செல்லும்போதுதான் சக்திவேல் திலீபனிடம் சொன்னான் விசயத்தை. ""பஜ்ஜி போட்டுட்டு இருந்தான்ல... அவன்தான் அந்தம்மாவோட பையன். அப்பா செத்து ஏழெட்டு வருஷம் ஆயிடிச்சு. டீ மாஸ்டரா இருக்கான்ல... அவன்தான் இப்ப அந்தம்மாவோட புருஷன். இந்தம்மா பையனும் அவனும் வாசவி காலேஜ்ல ஒண்ணா படிச்சவிங்க. ஒரு வருஷமோ என்னமோதான் படிச்சாங்க. அந்தப் பையன் தஞ்சாவூரு. இருவரும் நண்பர்களா பழக வீட்டுக்கு அடிக்கடி வரப் போக இருந்திருக்கான். முன்ன வண்டிக்கடை போட்டிருந்தாங்க ரயில்வே ஸ்டேஷன்கிட்ட.... இட்லி, தோசை வியாபாரம்தான். இந்தப் பையனும் உதவிக்கு கூடமாட நின்னான். அந்தம்மாகூட பழக்கமாயிடுச்சு.

""என்ன சார் சொல்றீங்க? பையன் தன்னோட நண்பனை கொலைதான செஞ்சிருக்கணும் நியாயப்படி பார்த்தா! என்றான் திலீபன்.

""அது உன்னைப்போல முட்டாள்கள் பண்ணுற வேலை என்றான் சக்திவேல்.

""என்ன சார் இப்படி சொல்றீங்க? என்று திலீபன் கேட்டபோது வண்டி திருவள்ளுவர் காப்பகத்தின் காம்பவுண்டினுள் சென்று பெரிய வேப்ப மரத்தின் அடியில் நின்றது.

""நீ மதுரையில் இருந்து கடைசி பஸ் பிடிச்சித்தான் தாராபுரம் வந்து சேரணும்னு திட்டம் போட்டேன் திலீபன். அன்னைக்கு உன்னை மருத்துவமனையில் பார்க்க வந்தப்ப ஒருத்தர் வாங்கி வந்த பழங்களை பிடுங்கி வீசினே ஞாபகம் இருக்கா? உன் அம்மா கிட்ட நான் மறுபடி பேசினேன் திலீபன். ரொம்ப அழுதாங்க. நீ சரியா பேசுறதுகூட இல்லைன்னு சொன்னாங்க! ஒண்ணரை மணி நேரம் தாரா புரத்துல ராத்திரில ஈரோடு பஸ்ஸுக்காக காத்திருந்தியே. 

அப்போ என்ன நினைச்சே?. 

""ஒரு பிச்சைக்காரன் இருந்தால்கூட பேச்சுத் துணைக்கு ஆவானேன்னு நினைச்சேன். சார்... ஒரு நாய் வந்துச்சு சார்... ஆனா என்கிட்ட வரலை! நேரத்தைப் போக வைக்க ரொம்ப சிரமப்பட்டேன் சார் 
என்றான் திலீபன்.

""ஒண்ணரை மணி நேரத்தைப் போக்க முடியாம, துணைக்கு ஆள் இருந்தால் தேவலைன்னு யோசிச்சு தடுமாறி வந்திருக்கியே... உன் அப்பா இறந்து எத்தனை வருஷம் ஆச்சு? நீயும் காப்பகத்துக்கு வந்து நாலு வருஷம் ஆச்சு. நீ வந்தபிறகு அம்மா தனிமையில எத்தனை நாள் தவிச்சிருப்பாங்க. ஒருநாளாச்சும் நீ சாப்பிட்டயாம்மான்னு உன் அம்மாவைக் கேட்டிருப்பியா? திலீபன் யோசனையில் ஆழ்ந்தான். ஒருநாள்கூட அம்மாவிடம் சாப்பிட்டியா? என்று கேட்கவில்லைதான். என்ன ஒரு மடத்தனம்?

""கேட்டதே இல்லங்க சார். காலையில சாப்பிடுவேன். கிளம்புவேன். நைட்டு போனதும் சாப்பிடுவேன், தூங்கிடுவேன் சார்... தப்பு என்மேலதான் சார். அம்மா பாவம் சார் என்றான் திலீபன்.

""அம்மா பாவம்னு என்கிட்ட சொல்லாதே திலீபன். உன் அம்மாகிட்ட மன்னிப்பு கேளு! அனாதைகளா யாரும் சிரமப்படக் கூடாதுன்னு தான் என் அப்பா பத்து வருஷத் துக்கும் முன்னால காப்பகம் ஆரம்பிச்சாரு. நீ உயிரோட இருந்தும் உன் அம்மா அனாதையா யோசிக்கக்கூட கூடாது இல்லையா! என்று சக்திவேல் சொல்லும்போது திலீபனின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:42

மரப்பல்லி 

  வாழ்க்கை கடல் நீர் போல உப்புக் கரிக்கிறது. அதில் வாழும் உயிரினங்கள் நமக்கு பரிச்சியம் அற்றவைகளாக உள்ளன. கடல் பரந்து விரிந்திருக்கிறது வாழ்க்கை போல. கடலில் மூழ்கிப் போவதை கற்றுக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் தவித்து தப்பித்துக்கொள்ள நீச்சலடிக்கிறோம். இதனால் வாழ்வில் அனுபவிக்க வேண்டியனவற்றை தவற விட்டுவிட்டு நீச்சலடித்துக் கொண்டே இருக்கிறோம்.

  ஜெனி உங்களின் அதீத காதலில் நான் வீழ்ந்தேன். நான் நீச்சலடிப்பதை நிறுத்திவிடுகிறேன். நிதானமில்லாமல் நான் வந்திருந்தேன் என்றால் உங்களை தவற விட்டிருப்பேன். உங்கள் கண்களில் காதலின் கண்ணீர் சொட்டுக்கள் சிதறியதை நான் கண்டு கொண்டேன். வாழ்க்கைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா ஜெனி? பெயரே இல்லாமல் போனதால் தான் அதை நாம் வாழ்க்கை என்கிறோம். அதனால் தான் நாம் மெளனம் என்கிறோம் வெறும் மெளனத்தை. மெளனத்தில் ஒன்றுமே இல்லை.

  உங்களின் பரிதவிப்பில் நான் அன்பைக் கண்டேன். அது சரணாகதி அடைவதை விட உயரமானது ஜெனி. சரணடைவது மனதை பொருத்தமட்டிலும் சரியானது. அன்பு இதயத்தில் இருந்து தோன்றுவது. அவனை காதலித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து காதலிப்பதில் காதலே இல்லை. அது வெற்றி பெற்றாலும் பயன் ஒன்றுமே இராது. காதல் வசந்தம் வருவது போல தானே வரும். அப்படி வருகையில் பூக்களும் வாசனைகளோடு நம் முன் வரும்.

  ஒரு அழகான ஆணைப் பார்க்கையில் அவன் வெறும் எலுப்புக் கூடாக தெரிவதாக சொன்னீர்கள் ஜெனி. என்னாலும் அப்படியே ஆண்களை பார்க்க முடியும் என்றும் கற்றுத்தருவதாகவும் கூறினீர்கள். நிஜமாகவே சதை தான் நம்மை மூடியுள்ளது. சதையில் இருந்து தான் அழகு தெரிகிறது. சதை இல்லாவிடில் அனைவருமே எலும்புக்கூடுகள் தான். எலும்புக்கூடுகளை யாரும் ஆசைப்படுவதில்லை. எலும்புக்கூடுகளை யாரும் ரசிப்பதில்லை. எலும்புக்கூடுகளுக்கு மார்பகங்களும் யோனியும் இருந்தால் அவைகளும் ரசனைக்குரிய பொருளாகிவிடும்.

  உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் சிறு வயதிலிருந்தே வாழ்ந்து வந்திருக்கிறீர்கள் ஜெனி. இதற்கெல்லாம் காரணமாய் உங்கள் தந்தை ஒருவர் தான் என்று சந்தோசமாய் சுட்டிக் காட்டினீர்கள். புகைப்படத்தில் இருந்த உங்கள் அப்பாவின் உருவம் அவ்வப்போது உங்களிடம் பேசும் என்றீர்கள். பயம் என்ற உணர்வை சிறுவயதிலிருந்தே மறக்கடிக்க அவர் பல்லிகளையும், பூரான்களையும் உங்கள் கையில் ஏற்றி ஊர்ந்து செல்ல விட்டதாக கூறினீர்கள். இப்படி ஏன் உங்களை அவர் வளர்த்தார் என்பதற்கான காரணங்களை நீங்கள் தேடவே இல்லையா ஜெனி?

  உங்களின் முழு வாழ்க்கையையுமே நீங்கள் என்னிடம் அந்த இரவில் பகிர்ந்து கொண்டீர்கள். உங்களின் மார்பகங்களை பிசைந்து உங்களுக்கு உணர்ச்சியேற்ற தவித்தவர்களின் முட்டாள் தனங்களை நினைத்து அப்போதும் கூட சிரித்தீர்கள். சொந்த அண்ணனே படுக்கையறையில் அருகில் அமர்ந்து உங்களை உசுப்பேற்றும் விதமாக மார்பகங்களை கசக்கி விட்டு எந்த உணர்ச்சியையும் நீங்கள் காட்டாமல் அமர்ந்திருக்க “நீ மண்ணாடி?” என்று எழுந்து போனதை நினைத்து சிரித்தீர்கள்.

  உங்களை காதலிப்பதாக வந்தவர்கள் எல்லோரும் காமத்தையே உங்களிடம் தேடிச் சலித்து ஓடிப்போனதாய் கூறினீர்கள். கல்லூரி வாழ்க்கையில் சக தோழன் ஒருவனுடன் ராகம் தியேட்டரில் படம் பார்க்கையில் அவனும் உங்கள் மார்பகங்களில் கையை வைத்து விளையாடி விட்டு, உனக்கு ஒன்னுமே தோணலையா ஜெனி? என்று கேட்ட போது, என்ன தோணனும் மிஸ்டர்? இந்த திரைப்படத்தில் வரும் பெண் போல உடல்கள் உரசிக்கொண்டதும் கண்கள் செருக ம்! ஹா! என்று நான் முனகினால் தான் உன் உறுப்பு கிளர்ச்சியடைந்து நேர் நிற்குமா? நான் முனகி நடிக்காவிடில் அது செத்துப்போன தவளையாக எப்போதும் போல் கிடந்திடுமா? என்று பேசுகையில் அவன் எழுந்து போய் விட்டதாய் கூறினீர்கள்.

  என் ஊரில் ஒரு அறுபத்தைந்து வயது கிழவன் இருக்கிறான் ஜெனி. அவனுக்கு மூன்று கிழவிகள் மனைவியாக. ஒரு நாள் அவனை ஊரார் முச்சந்தியில் வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணை மடியில் அமர்த்திவைத்து தகாத வேலை செய்து கொண்டிருந்தானாம். சாலையில் போனவர் யாரோ பார்த்துப்போய் பக்கத்து வீட்டாரிடம் சொல்லி ஊரே அதிர்ந்துபோய் விட்டது. அந்தக்கிழவன் தன் வாழ்நாளில் எந்த நேரமும் பெண்களிடம் அப்படியே தான் பேசுவான். ஊரில் எந்தப் பெண்ணை பார்த்தாலும், நேத்து ராத்திரி நல்லா செஞ்சீங்களா? என்றே கேட்பான். அப்போது இந்தப் பெண்கள் சிரித்து வைத்து விட்டுப் போவார்கள்.

  அவனுக்கு முழு வாழ்வுமே காமம் தான். காமத்திற்காகத்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். காமம் அவனை உயிருடன் இன்னமும் பல காலம் வைத்திருக்கும். இருந்து கழியும் வாழ்க்கையை அவன் அனுபவித்துக் கொண்டிருந்தான். எல்லோரும் அடித்தார்கள். அவன் தவறு செய்ததாகவே நினைத்துக் கொள்ளவே இல்லை. திருத்திக் கொள்ளவோ, திருந்தி விடவோ அங்கு ஒன்றுமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான். இன்னமும் ஊராரோடு தான் வாழ்கிறான். யாரும் அவனை ஸ்டேசனில் ஒப்படைக்கவில்லை. நான்கு தர்ம அடிகளில் திருந்தி விடுவான் என்று நம்பினார்கள். பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளை காத்துக் கொள்ள எந்த நேரமும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக் கொள்கிறார்கள்.

  பேப்பரில் படித்தால் அது செய்தி. அதுவே பக்கத்தில் நடந்தால் அதிர்ச்சி. தனக்கே நடந்து விட்டால்? முருகேசன் என்னை கசக்கி கடிக்கையில் பயந்து விட்டேன் ஜெனி. பயத்தில் நான் உளறினேன். எனக்கு பைத்தியம் பிடிக்கப் போகிறது என்று நினைத்தேன். இத்தனை கோரமான உலகிலிருந்து நான் ஓடிவிட முயற்சித்தேன். ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனை அத்தனை வெறியுடன் தாக்கினீர்கள் என்பதே தெரியாது எனக்கு.

  உங்கள் தந்தை புகைப்படத்தில் என்னிடமும் பேசினார் ஜெனி. அவர் எனக்கு புத்திமதிகளை ஒன்றும் அள்ளித் தெளிக்கவில்லை. உன்கிட்ட தைரியம் இருக்கா மகளே? என்றார். அது என்னிடம் இல்லை என்பதை ஒரே பார்வையில் அவர் கண்டு கொண்டார். எனக்கு எல்லா இடத்திலும் பயம் சூழ்ந்திருக்கிறது ஜெனி. பேருந்தில் ஏறினால் செல்லும் இடத்திற்கு பத்திரமாய் சென்று சேர்வோமா? என்று ஆரம்பிக்கிறது மெதுவாக. படிப்படியாக அது உயருகிறது.

  வன்னாத்திப்பூச்சி எங்கள் கிராமங்களில் இருக்கிறது ஜெனி. அது பார்வைக்கு அத்தனை அழகானதல்ல. எல்லா காலத்திலும் அது ஊர்ந்து உணவு தேடியே சலிக்கிறது. அதை யாரேனும் துன்புறுத்தினால் எதிராளியை நோக்கிப் பீய்ச்சியடிக்கிறது. சாதாரண நீர் போல இருக்கும் அது நம் உடலில் பட்டால் கொப்புளங்கள் வந்துவிடுகிறது. இப்படி வன்னாத்திப்பூச்சி மட்டும் அல்ல ஜெனி. டிஸ்கவரி சேனலில் காட்டுகிறார்கள் எத்தனையோ விலங்குகள் தங்களை காத்துக் கொள்ள பயங்கர விஷத்தைக்கூட பீய்ச்சியடிக்கின்றன. என் போன்ற பெண்களுக்கும் அப்படியான தற்காப்பு விசயங்கள் தேவைதான் ஜெனி. சக மனிதனே துன்புறுத்துவான் என்றால் என்னிடம் இயற்கையாகவே அவனை வியாதியுறச் செய்வதற்கு உமிழ்நீர் சுரக்க வேண்டும்.

  நீங்கள் கம்பெனியில் இருந்தீர்கள் சமயத்தில் ஆயிற்று. எந்த நேரமும் என்னை காத்துக் கொண்டே இருப்பது நடவாத காரியம் தான். சாலையில் ஒவ்வொரு ஆணின் பார்வையும் என்னை கூர்ந்து நோக்குகையில் என் உடலில் தீ எரிகிறது ஜெனி. தீ எரியும் உடலை எவனோ ஒருவனுக்குத்தான் விருந்தாக வைக்க வேண்டும் என்று நினைக்கையில் அது இன்னமும் கொடூரமானதாக இருக்கிறது. ஜெனி இந்த உணர்வுகளில் இருந்து சீக்கிரம் நான் விடைபெற வேண்டும். சக மனிதனை எலும்புக்கூடாக கண்கள் என்ற இடத்தில் ஒரு துவாரத்தை மட்டுமே நான் பார்ப்பதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படியான சக்தியை உங்கள் தந்தையின் புகைப்படமே எனக்கு கற்றுத்தரும் என்று நம்புகிறேன்.

  ஒவ்வொரு மனிதர்களின் வாழ்விலும் காலமாற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பிட்ட மாற்றங்களை நாம் சந்திக்கும் போது நாமும் மாறிவிட வேண்டியது இயற்கையாகி விடுகிறது. காமம் வேண்டுமென யாரும் பதினான்கு வயது வரை கேட்பதில்லை. அதற்கும் மேல் உடலே அதற்கு தகுதியானதாகி விடுகிறது. யார் தீண்டினாலும் கொதிப்படைய ஆரம்பித்து விடுகிறது. நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை. அதுபற்றி உணரும்போது காலம் கடந்து விடுகிறது. நடந்தனவற்றை பின் எப்போதும் மாற்ற முடிவதில்லை.

  காம உணர்வு குழந்தைத்தனமானது. தவிர தற்காலிகமானதும் கூட. ஆணிற்கு விந்து வெளியேறி விட்டால் காமம் ஓய்வுக்கு வந்து விடுகிறது. வயது ஆக ஆக காம உணர்வும் தன் பிடியை தளர்த்திக் கொள்கிறது. இது துக்கமான விசயமாகி விடுகிறது. வயது கூடுகையில் யாரும் நீங்கள் அழகாக இருக்கிறீகள்! என்று வார்த்தையை பரிமாறிக் கொள்வதில்லை! வாழ்க்கை ஒரு ஏக்கமாக மாறிவிடுவதால் உபயோகப்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட செல்போனின் நிலைக்கு வந்து விடுகின்றனர். இனி கிறுக்குத்தனங்களை ஆரம்பிக்கின்றனர். ஆண்கள் விக் வைத்தும், டை அடித்தும் மீதி நாட்களை வாழ முயற்சிக்கின்றனர். பெண்கள் தொந்தியை கரைக்க மின்சார பெல்டுகளையும், முகச்சுருக்கங்களை மறைக்கவும், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளவும் தலைப்படுகிறார்கள். சிலர் பட்டினி கிடந்து விட்டு “டயட்” என்கிறார்கள்.

  யாரேனும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மார்பகங்கள் வளருகின்றனவா? யாரேனும் பார்த்து ரசிக்கவே உடை வகைகளை அணிவதாக நினைத்துக் கொண்டவர்கள் தானா நெருங்கி வந்து கட்டியணைக்கிறார்கள்? இது வெறும் உடலியல் அடிமைத்தனமாக இருக்கிறது ஜெனி. இதைத் தாண்டினால் வருவது ஒருவேளை அது நிஜமாகவே காதலாய் இருக்கலாம். அதைத்தான் நான் உங்களிடம் உணர்ந்தேன் ஜெனி.

  சண்டை, சமாதானம், பொறமை, எரிச்சல், அழுகை, பரிசு, இருட்டு, தடவல் என்று காதலில் எல்லா துன்பங்களும் இருக்கிறது ஜெனி. போயும் போயும் எல்லாம் ஒரு ஆடவனோடு என்றிருக்கையில் எனக்கு அதில் ஒன்றும் இருக்கப் போவதில்லை என காட்டி விட்டீர்கள்.

  இரண்டு வருடங்களுக்கு முன்பு அன்று உள்ளூரில் திருவிழா என்று நினைக்கிறேன் ஜெனி. கற்பு கற்பு என்று சொல்கிறார்களே அதை நான் அன்று பனி பெய்யும் இரவில் நட்ட நடுக் காட்டில் உறவுக்காரன் ஒருவனிடம் இழந்தேன். ஐந்து நிமிடத்தில் என்ன நடந்தது என்றே உணர்வதற்குள் அவன் மூச்சு வாங்கிக்கொண்டு எழுந்து தன் பேண்ட் ஜிப்பை மேலேற்றிக் கொண்டான். என்னைச்சுற்றிலும் ரத்தவாடை வேறு வீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் கோவில் திருவிழாவுக்காக ஆர்கெஸ்ட்ரா நடந்து கொண்டிருந்தது. என்னைப்போல திருட்டு உறவுக்கு சென்றவர்களெல்லாம் இருட்டில் முகம் மறைத்து குனிந்து வெட்கப்பட்டபடி இட்டேறியில் போய்க்கொண்டிருந்தார்கள்.

  என் யோனியை பாவாடை கொண்டு மூடிவிட என் கைகள் போகவில்லை. நானும் என் யோனியும் பனியில் குளித்தோம். உறவுக்காரன், போலாம்  எந்திரிடி! என்றான். சற்று முன்தான் ஏகப்பட்ட கெஞ்சலோடு செல்லம் செல்லம் என்றவன் அவன். ஏனோ என்னை டி போட்டு போலாம்டி என்றான். நல்லா இருந்துச்சாடி? அதான் கிளம்ப மனசில்லையா? என்று வேறு கேட்டான் அவன். தவிர பூச்சி பொட்டு வந்து விடும் கிளம்பு என்றான்.

  அவன் ஏதோ காரியத்தை செய்து முடித்து விட்ட திருப்தியில் வீடு போகும் அவசரத்தில் இருந்தான். எனக்கோ இங்கு என்ன காரியம் நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. என்னை பயன்படுத்திய அவன் உறுப்பு என்ன தடிமனில் இருந்தது? அதை ஏன் சீக்கிரம் எடுத்துக் கொண்டான்? என் யோனிக்கு என்னவாயிற்று. புணருகையில் சந்தோசத்தை அவன் முகம் காட்டியதா? இந்த பனி இரவில் எதுவும் எனக்கு தெரியவில்லை.

  அவனுக்கான காரியம் முடிந்து விட்டதும் என்மீதான பற்றுதல் போய்விட்டது அவனுக்கு. அதற்கு காரணம் நானுமல்ல அவனுமல்ல! அவனது குறி. அது என்னையும் அவனையுமே ஏமாற்றி இருக்கிறது. ஜெனி உலகில் நடக்கும் கொடூரங்களுக்கெல்லாம் காரணமாய் ஐந்து நிமிடம் விரைப்பேறிய குறிகளே தான் காரணமா? ஒருவார காலம் அவன் இதற்குத்தானா ஆசைப்பட்டான்? வெறும் ஐந்து நிமிடங்களுக்காக? இதில் அவனும் எந்தவிதமான திருப்தியையும் கண்டது மாதிரி அவன் பேச்சும் இல்லை. அந்த இரவில் எதுவுமே அங்கு நிகழவில்லை. என்ன நடக்கிறது என்பதை உணருவதற்குள் இங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பதுபோல அவன் எழுந்து கொண்டான். எழுந்ததும் வீடு போகலாம் என்று அவன் சொல்லும் போது செத்தும் விட்டான் என்னைப் பொறுத்தவரை.

  காதலோ இல்லை வேறுவிதமான பற்றுதல்களோ கடைசியாய் சென்று முடியும் இடம் யோனியாய் இருக்கையில் அந்த சுகம் சாவுக்கு இணையாக இருக்க வேண்டும் ஜெனி. என்னை யாரும் சாகடிக்க முயற்சி எடுக்கவே போவதில்லை. என்னை சாகடிக்க பனி இரவில் கூட்டி வந்தவன் வந்த ஐந்து நிமிடத்தில் செத்து அவன் திருப்தியாகிவிட்டான். என்னை அவன் சாகடிக்க முயற்சிக்கவே இல்லை. அவன் சாவு மட்டுமே அவனுக்கு குறியாய் என் மேல் படர்ந்து இயங்கி எழுந்து விட்டான். நான் என் செருப்பை அந்த இரவில் கை வைத்துத் தேடி தலைமாட்டுக்கு மேலிருந்து கையில் எடுத்தேன். எடுத்ததும் என் தலையில் பொத்துப் பொத்தென அடித்துக் கொண்டேன் ஜெனி. எனக்கு என்மீதே அவ்வளவு சங்கடமாய் இருந்தது.

  நீ வந்தா வா இல்லாட்டி இங்கியே கிடடி லூசு! என்றவன் மானம் என்ற ஒன்று தனக்கு இருப்பதாகவும் அது கப்பலேறிப் போய்விடும் என்றும் பினாத்திக் கொண்டு தன் செருப்பைத் தொட்டுக் கொண்டு சென்றான். அவ்வளவுதான் அவன் காதல். நல்லவேளை இவனைக் கட்டிக் கொள்ளத்தான் வீட்டில் அம்மா எந்த நேரமும் படித்துப் படித்து சொல்லிக் கொண்டிருந்தாள். இவனுக்கு சம்மதம் சொல்லியிருந்தால் காலம் முழுவதும் ஒவ்வொரு இரவிலும் இவன் சாவை மட்டும் மனதில் கொண்டு நீட்டிய குறியுடன் வருவான். என்னைப்பற்றி எந்தக் கவலையும் இவனுக்கு இருக்கப்போவதில்லை.

  வாழ்க்கை என்னிடம் என்ன தந்ததோ அதை நான் அனுபவிக்கவே இல்லை.அதில் ஏதோ சிறந்தது இருக்கும் போல என்று தான் அந்த இரவிலும் உள்ளக் கிளர்ச்சியுடன் பயப் போர்வையை தூக்கி வீசி விட்டு வந்தேன். ஆனால் கொட்டிப்போன பாலுக்காக அழுவது வீண் தான் ஜெனி. அது நமக்கு திரும்பக் கிடைக்கப் போவதில்லை. வாழ்வுக்கான அடிப்படை விசயமே நம்பிக்கை தான் ஜெனி. அது அங்கு இல்லை.

  நான் இரவில் கைகோர்த்து அவனுடன் பயணப்பட்டது நம்பிக்கையின் மையவேருடன் தான். அந்த நம்பிக்கையை அவன் ஏமாற்றி விட்டான். இவனல்ல. யாருமே அப்படித்தான் செய்வார்கள் போலிருக்கிறது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ஜெனி! அவன் தோற்றுப்போனது அவனுக்கே தெரிந்து விட்டது. தன்னை வீரன் என்று நினைத்து இருளுக்கு இழுத்து வந்தவனால் அவன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அவன் ஓடிவிட்டான் ஜெனி. நான் தனித்து அங்கே எவ்வளவு நேரம் கிடந்தேனென்றே தெரியவில்லை. அன்றே நான் என்னை பனியால் கழுவிக்கொண்டேன்.

  அதன் பின் என்னிடம் காதலைச் சொல்ல வந்தவர்களை என்னால் எதையேனும் நினைத்துக் கொண்டுகூட பார்க்க முடியவில்லை. அவர்கள் நிம்மதிக்காக மட்டுமே காதலிப்பதாக என்னிடம் வருவதாகத்தான் தோன்றியது. எனக்கு நிம்மதியையும் சந்தோசத்தையும் தர யாரும் தயாராக இல்லை. என் சம்பளப் பணம் குறைந்தால் அம்மா கூட என்னை காதலிப்பதில்லை. உன்னை நம்பி பிரிட்ஜ், வாசிங் மெஷின், டிவி என்று வீட்டில் வாங்கிப் போட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் உன் அப்பனா காசு நொட்டுவான்? என்கிறது. இதற்கெல்லாம் அழுது கொண்டிருக்கக் கூட எனக்கு நேரமே இல்லை போல இருக்கிறது ஜெனி.

  இந்தப்பறவை இனங்களெல்லாம் தன் நீண்ட மூக்குகளால் என்னை கொத்திக் கொண்டே இருக்கின்றன. வலி உணராத மிருகமாய் நான் மாறியிருக்கிறேன். ஜெனி தொடர்ந்து என்னை காதலிப்பீர்களா? என் கண்ணீரை துடைத்துவிட உங்கள் கைகள் எப்போதும் அருகில் இருக்குமெனில் நான் மிச்ச வாழ்வை நிம்மதியாய் கழிப்பேன். இந்த உறவுகள் இதுநாள் வரை எனக்கு எதுவும் செய்ததாக தெரியவில்லை. இனியும் அது செய்யப் போவதும் இல்லை. எவனோ ஒருவனுடன் அனுப்பி வைத்துவிட்டு பிள்ளை குட்டி பெற்று வாழ்வதில் வாழ்க்கை இருப்பதாய் இந்த உறவுகள் நம்பிக் கொண்டிருக்கின்றன. என்னுள் எங்கோ மறைந்து கிடந்த திரியைக்கிள்ளி உயர்த்தி பற்ற வைத்திருக்கிறீர்கள் ஜெனி.

  உங்களின் முத்தம் எனக்கு இனித்தது.

  உங்களின் வருடல் எனக்கு சுகமளித்தது.

  உங்களின் அணைப்பு தாயின் அரவணைப்பை விட மிருதுவாக இருந்தது.

  உங்களுக்கு என்னை தின்னக்கொடுத்ததில் சாவை நெருங்கி முத்தமிட்டு வந்தேன்.

  உங்களை கட்டி அணைத்ததில் எனக்கு பயமோ தயக்கமோ இருக்கவில்லை.

  என்னை உங்களுடன் புதைத்துக் கொள்ள முயற்சிக்கையில் நானும் அதற்குத்தான் போராடிக் கொண்டிருந்தேன்.

  இருவரும் இணைந்து காமத்தைக் கொன்றோம் ஜெனி. காமத்தைக் கொல்ல இருவருமே சண்டையிட்டோம். இறுதியில் இருவருமே வென்றோம்.

  ஊரில் நாற்பத்தைந்து வயதுக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இறந்து வருடம் ஒன்று ஓடிவிட்டது. வெளியூரிலிருந்து தனக்கே தனக்கென ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணைக் கூட்டி வந்தான் அவன். அவனது நெருங்கிய நண்பன் உள்ளூரில் சைக்கிள்கடை வைத்து பிழைப்பு ஓட்டிக்கொண்டிருந்தான். அந்தப்பயலுக்கும் மனைவி இறந்து வருடம் ஒன்றாகி விட்டது. திருமணத்திற்கு ஒரு பெண் தயாராக இருந்தாள் அவன் வீட்டில். கூட்டி வந்த பெண்ணை அவன் வீட்டில் தங்க வைத்து விட்டு ஊருக்குள் அவன் வீடு வீடாகப் போய் காலையில் எனக்கு திருமணம் நம் விநாயகர் கோவிலில் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

  ஊராரும் அவன் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி காலையில் கோவில் முன் கூடினார்கள். திருமணம் சைக்கிள் கடைக்காரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடந்தது. காத்திருந்தவன் பெண்டாட்டியை சைக்கிள் கடைக்காரன் தட்டிக்கொண்டான். கூட்டி வந்தவன் ஏக கலாட்டா செய்தான். அந்தப்பெண் அத்தனை கூட்டத்தில் அவனைக் கேட்டது இதுதான்.

  “நீ போடற சோத்துக்கும், உடுத்திக்க குடுக்குற துணிக்கும் நம்பியாடா நானு உங்கூருக்கு உன்னோட வந்தேன்?”

  அந்த வார்த்தைகள்ல் எல்லாம் முடிந்து போனது ஜெனி. அந்த வார்த்தைகளுக்குள் பல விசயங்கள் ஒளிந்திருந்து கண்ணாமூச்சி விளையாடுவதாய் எனக்கு தோன்றியது. இப்போது அந்தப் பெண்ணும் சைக்கிள் கடைக்காரனும் சந்தோசமாய்த்தான் வாழ்கிறார்கள். முதல் மனைவிக்குப் பிறந்த பெண் அம்மா என்று தான் புதியவளை அழைக்கிறது.

  பார்க்கப்போகையில் ஒரே ஒரு கிராமத்தில் எத்தனை விசயங்கள் புதைந்திருக்கிறது! கட்டிக் கொடுத்த ஊரில் பிழைக்க முடியாமல் பத்தே நாளில் தாய் வீட்டுக்கு ஓடி வந்த பெண் என் தோழிதான் ஜெனி. பத்தே நாளில் ஓடிவர அவளுக்கு ஒரே ஒரு காரணம் போதுமானதாய் இருந்தது. அவள் கணவன் இரண்டு லட்சம் கடன்பட்டிருந்தானாம் ஒரு புள்ளியிடம். கடனை திருப்பித் தரவே வேண்டாம் நீ, ஆனால் உன் புது மனைவியை என்னிடம் ஒரு நாள் மட்டும் அனுப்பு என்று அந்தப்புள்ளி கேட்டுக் கொண்டதற்காக இவளிடம் கணவன் பேசியது, ஒரே ஒரு முறை போய் வந்தாயானால் நம் துன்பம் நீங்கிவிடும் கண்ணே!

  இந்தப்பெண் ஓடி வந்து வீட்டில் சொல்லி அழ ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து ஊரே லாரியில் போய் அவள் கணவனை துவைத்து போட்டுவிட்டு வந்து விட்டது. ஜெனி ஏன் இந்த மாதிரியான கொடூரங்கள் நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது? யாரை நாம் குறை சொல்வோம் இதற்காக?

  ஒரீசாவிலிருந்து பிழைக்க வந்த பெண்களும் ஆண்களும் இங்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள்! அந்தப் பெண்கள் கம்பெனியில் பேசும் தமிழ் நாம் பேசுவதை விட அழகாய் இருக்கிறது. அவர்கள் ஊரில் வாசலில் சாணி தெளித்து கோலம் போடும் பழக்கமே இல்லையாம். புதிதாக அவர்கள் அதை கற்றுக் கொண்டு தங்கள் வாசலிலும் கோலம் போடும் அழகு தனிதான் ஜெனி. அவர்கள் தமிழர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் அவர்களும் வாழத்துவங்கி விட்டார்கள். அவர்கள் சகமனிதர்களாகத் தான் நம்மைப் பார்க்கிறார்கள். உண்மையான நேசத்துடன் தான் அக்கம்பக்கம் பழகுகிறார்கள். என் அம்மா கேட்டது ஒருநாள். இவளுக ஏன் இப்புடி செவப்பா இருக்காளுக!

  ஜெனி நீங்கள் உங்கள் அன்பை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்குக் கொடுத்தீர்கள். அதற்கு நான் நன்றியுடையவளாக இருக்க வேண்டும் என்று கூட நீங்கள் எதிர்பார்க்கவில்லை. பயத்தினால் எங்கும் காதல் தோன்றுவதே இல்லை ஜெனி. ஆணின் மீதான என் முந்தைய காதல் பயத்தினால் தான் தோன்றியது.

  எங்கே அவன் இழுத்த இழுப்புக்கு நான் போகவில்லை என்றால் கோபித்துக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம் இருந்தது. தவிர அம்மா அப்பாவின் எண்ணத்தில் மண் அள்ளிப்போட்டு விடுவேனோ என்ற பயமும் இருந்தது. நாம் அன்பைப் பரிமாறிக் கொண்டபோது எல்லாமே வித்தியாசமாக இருந்தது உண்மைதான் ஜெனி. வாழ்வின் அழகான தருணம் அதுதான். உங்களது மார்பகத்தில் நான் முத்தமிடுகையில் கூச்சமோ, பயமோ இல்லை ஜெனி. எனக்கான பொருளை குழந்தையின் ஆசையோடு நாம்பிப் பிடித்து குருத்தில் முத்தமிட்டுக் கடித்தேன். ஜெனி அவைகள் என்னுடையவைகள் தானே என்றுமே?

  ஆணின் காதலில் நான் விழுந்திருந்தால் அவன் இந்த நேரம் என்னை சங்கிலியில் பிணைத்திருப்பான். சிறைக்குள் தள்ளியிருப்பான். என்னோட ஆள் என்று பகிரங்கமாக அறிவிப்பான். மார்பை நிமிர்த்தி மீசையை தடவிக் கொள்வான். முதலில் என் எல்லா சங்கிலிகளையும் உடைத்து வீசினீர்கள் ஜெனி. இவ்வளவு சுதந்திரமாக இருப்பது கூட அழகு தான். சுதந்திரம் அன்பைவிட பெரியது ஜெனி. குழந்தை என்றால் குறும்பு செய்யத்தான் செய்யும். கண்ணாடி டம்ளரை உடைக்கத்தான் செய்யும். நீங்கள் என்னை உடைத்து விளையாடினீர்கள். நானும் அதே விளையாட்டில் குழந்தைமையோடு பங்கெடுத்தேன்.

  யாரிடமேனும் அன்பு இல்லாமல் இருந்தால் அவர் அன்பளிப்பாக எதையும் பிறருக்கு கொடுக்க மாட்டார் தானே! எல்லாம் கொஞ்சம் நேரம் தான் ஜெனி. நீங்கள் என் உதட்டில் இட்ட முதல் முத்தம் ஒன்றே சொன்னது உங்களிடம் தேவைக்கு அதிகமான அன்பு இருப்பதையும் அதில் பாதியை எனக்கு தர விரும்புவதையும்! ஜெனி நீங்கள் என்னை நரகத்திற்கு கூட்டிச் சென்றாலும் உங்களுடன் நான் வருவேன். உங்களின் அழைப்புக்காக எந்த நேரமும் காத்திருப்பேன்.

  தள்ளி நின்று பார்க்கையில் இங்கு எதுவோ நடந்து கொண்டிருக்கிறது ஜெனி. காலையில் நிம்மதியாக குப்புற படுத்து போர்வையால் இறுக்கி மூடி தூங்கும் குழந்தையை விடிந்து விட்டது என்று எழுப்புகிறார்கள். அதேபோல் இரவில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையை நேரமாச்சு படுக்கப்போ, என்று மிரட்டி படுக்க வைக்கிறார்கள்! ஏன் இப்படியே நடந்து கொண்டிருக்கிறது கால காலமாக?

  சமூகம் சமூகம் என்கிறார்கள். சமூகமே தயார்படுத்துகிறது அடங்கி வாழ. சமூக பழக்க வழக்கங்களிலும், மதிப்பிலும் அக்கரையாக இருக்க வேண்டுமென சொல்கிறது. அதுவே பின் ஆட்டிப்படைக்கிறது. மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் அடிமைப்படுத்துகிறது. பலதுன்பங்களையும் அதுவே கொடுக்கிறது. அதற்கும் மதிப்பு கொடுத்து வாழ்ந்தால் முழுமையாக மதிக்கிறது. சுதந்திரமாக இருக்க விரும்பினால் அது கோபமடைந்து தூற்றுகிறது.

  காதலில் ஓடிப் போனவளை ஓடுகாலிக் கழுதை என்கிறது. காதலில் ஓடுபவர்கள் சமூகத்தை மதிப்பதில்லை. சாதிகளை மதிப்பதில்லை. கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு ஓடி வேறு சங்கிலிகள் பூட்டிக் கொள்கிறார்கள். அது ரெண்டும் கெட்டான் நிலை தான். அடுத்தவர்களின் அபிப்ராயங்களை சேர்த்து வைக்காமல் தூக்கி வீசிவிட்டால் பயம் காணாமல் போய் விடும்.

   உங்கள் அறையில் நான் நிம்மதியாகத் தூங்கினேன் ஜெனி ஒரு பூனையைப்போல. எங்கள் வீட்டில் வளரும் பூனை மிக நிம்மதியாக டிவியின் மேல் மாலை நேரத்தில் கால் நீட்டி சுகமாய் தூங்கும். அதற்கு எந்த பயமும், கவலையும் இல்லை. அதை நான் பலமுறை பொறாமைக் கண்களோடு பார்த்திருக்கிறேன் ஜெனி.

  அதற்காக நான் ஆசைப்பட்டேன். தவிர இரவு உணவை நாம் இருவருமே ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக அமர்ந்து உண்டோம். இப்போது யோசிக்கையில் எவ்வளவு இயல்பாய் இருந்தோம் என்று புரிகிறது ஜெனி. இப்போது உங்களை இழந்து இந்த நேரம் என் வீட்டுச் சிறையில் வழக்கமாக கிடக்கிறேன்.

  ஜெனி ஏதாவது செய்யுங்கள்! எந்த நேரமும் உங்கள் அருகில் இருக்க ஆசைப்படுகிறேன். ஆகவே ஏதாவது செய்யுங்கள். இத்தனை காலமும் உங்களின் அறிவுக்கூர்மையால் தான் உங்கள் பிரச்சனைகளை நீங்களே தீர்த்துக் கொண்டு வந்தீர்கள். அது ஒன்றால் இன்னமும் பல பிரச்சனைகளை ஊதித் தள்ளிவிட்டு சிரிப்பீர்கள் ஜெனி. அது உங்கள் தந்தையால் கிட்டிய வெகுமதி.

  இந்த வாழ்க்கையை கூடிய சீக்கிரம் நமக்காகவே சமர்ப்பித்துக் கொள்வோம் ஜெனி!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:45

முடிவு நம்ம கையில இல்லீங்க!
வா.மு.கோமு
--------------
மைதிலி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் என்னவென்ன காரணங்களுக்குத் தான் அரளிக் கொட்டையை அரைத்துக் குடிப்பார்கள் என்ற விபரமெல்லாம் சரிவர தெரிவதேயில்லை. அப்போதைக்கு எது எளிதாக கிடைக்கிறதோ அதை அவர்களின் இறப்பை நிறைவேற்றிவிடுமென தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். போன மாதம் ஒரு முட்டாள் பெண் பக்கத்து ஊரில் சீமெண்ணெயை குடித்து விட்டது. அதுவும் மருத்துவமனை சென்று தப்பித்துக் கொண்டது. அது என்ன காரணத்துக்காக சீமெண்ணெயை தேர்ந்தெடுத்து வயிறு ரொம்ப  குடித்தது என்பது நான் சொல்லப்போகும் சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாதது. எனவே அதை விட்டு விடுவோம்.

பொதுவாக கிராமங்களில் பெண்கள் அரளிவிதையை அரைத்து சத்தமில்லாமல் குடித்து விட்டாலும் கூட யாரோ ஒரு நெருங்கிய தோழிக்கோ தோழனுக்கோ தகவலை சொல்லி விடுகிறார்கள். உயிர் என்பதால் சீக்கிரம் விசயம் பரவி தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வீட்டின் முன்பாக கூட்டம் கூடி விடுகிறது. நாயின் கழிசலை கூசாமல் யாரேனும் கையிலெடுத்து குண்டானில் போட்டு தண்ணீரில் கலந்து வீட்டினுள் நுழைந்து விடுவார்கள். அந்தப்பெண் என்னதான் துள்ளினாலும். வாயை திறக்கவே கூடாதென இறுக்கிக் கொண்டாலும் பயல்கள் விட மாட்டார்கள். எப்படியும் அந்தப் பெண்ணின் வாயினுள் நாயின் கழிசல் கரைசலை ஊற்றி விழுங்க வைத்து விடுவார்கள்.

அந்தப்பெண் சற்று நிமிடத்தில் தன் குடல்களையெல்லாம் வெளியே துப்பி விடுவது போல வாந்தியெடுத்து திரு திருவென முழிக்கும். சன்னமாய் கூட்டம் கலைந்து விடும். பெரும்பாலும் வீட்டில் அம்மா திட்டியது என்றும், காதலனுடன் சண்டை என்றும், தீபாவளிக்கு துணி எடுத்துத் தரலை என்பதற்காகவும் பெண்கள் அரளி விதையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சமீப காலங்களில் ஓரளவு தற்கொலைச் சம்பவங்கள் குறைந்து விபத்துகளின் எண்ணிக்கை தான் அதிகமாகி விட்டன.

மைதிலி அரளிக் கொட்டையைத் தான் அரைத்து குடித்து விட்டதாக அவள் பெரியம்மா சொல்லக் கேட்டு ஊரார் தெரிந்து கொண்டார்கள். இருந்தும் அரசாங்க இலவச வேன் ’கொய்ய்ங் கொய்ய்ங்’கென சப்தமெழுப்பிக் கொண்டு ஊருக்குள் வந்து விட்டது.  அரசாங்க மருத்துவமனைக்கு தான் பாடிய கொண்டு போறாங்க! என்று தகவல் சொன்னவன் அவனாகவே முடிவெடுத்து மைதிலியை பாடியாக்கி விட்டான். அதுவேறு எனக்கு கருக்கடையாக இருந்தது. இருக்கும் பிரச்சனையில் இனி இது வேறு.

‘அந்தம்மா உன் பேரைத்தான் சொல்லிட்டு இருந்துச்சு முருகேசா! நீதான் சித்த முந்திப்போயி அந்தப் பிள்ளையை  மிரட்டி அடிச்சுப் போட்டு வந்துட்டியாமா? நீ அடிச்சங்காட்டி தான் அது  அரளிக் கொட்டையை அரைச்சு குடிச்சுடுச்சாம்ல!’

அடப்பாவிகளா! பாடிங்கறான், சித்த முந்திப்போய் அடிச்சேங்கறான். எப்படி எல்லாம் அரைமணி நேரத்திற்குள் மனிதனுக்கு பீதியாகிறது பாருங்கள். மணி வேறு  மாலை ஆறு தாண்டியிருந்தது. ஒருமணி நேரமாகவே எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக இருக்கிறது. பள்ளிக்கு சென்றிருந்த மீனாவை வேறு காணோம்.

இந்தப் பட்டிக்காட்டில், அப்படி சொல்ல மாட்டாளே கீதா.. ம்! ஒடக்கான் கூட முட்டையிடாத ஊரில் மனுஷி இருப்பாளா? பொழைக்கத் தெரியாத மனுசன் கூட மனுஷி இருப்பாளா?  இப்படி தொட்டதற்கெல்லாம் மனுஷி இருப்பாளா? என்று கேட்டுக் கேட்டே போன வருடம் முடியாது சாமி என்று புகுந்த வீடு போய் விட்டாள் கீதா.  ஆறாவது முடித்து ஏழாவது சென்று கொண்டிருக்கும் மீனாவைக் கூட இந்த ஒரு வருடத்தில் அவள் பார்க்க வரவில்லை. நகரில் அவள் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்று வருவதாக அவள் தம்பி ஒருமுறை சொன்னதோடு சரி.

மைதிலி கிராமத்திலிருந்து ஒன்னரை கிலோ மீட்டரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு இருபது குழந்தைகளை கூட்டிசென்று விட்டு விட்டு மாலையில் அதே போல பள்ளிக்குச் சென்று பத்திரமாக உள்ளூர் குழந்தைகளை  வீட்டுக்கு கூட்டி வந்து கொண்டிருந்தாள். காட்டு வேலைக்கு நேரமே அலையும் ஊர்க்காரர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதற்கான நேரமெல்லாம் கிடையாது. போக பேருந்து வசதியும் இல்லாத ஊர் இது. பேருந்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும்.

இப்படி சிறப்பான ஊரில் படித்த பெண்ணான கீதா  எப்படி என்னுடன் குடும்பம் நடத்துவாள்? என் வேலை என்ன என்றே சொல்லவில்லை பாருங்கள்! வேலை இருந்தால் தானே சொல்வதற்கு! பஞ்சு விற்க கிளம்பினால் மழை கொட்டும் என்பது மாதிரி பல வேலைகள் செய்து பார்த்தும் இன்னும் ஒன்றில் கூட உருப்படியாய் இல்லை. இப்போதைக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது மூன்று வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் நான் கணித்த  ஜாதகங்கள் வெற்றி பெறவே ஏதோ வெளியூர் வரை கொஞ்சம் பேருக்கு இப்போது பரவியிருக்கிறது. திருமணப் பொருத்தம் பார்ப்பதில் கைராசிக்காரனாகி விட்டேன். இப்போது தான் ஒரு டிவியெஸ் மொபெட் ஒன்றை மூன்றாம் கையாக வாங்கியிருக்கிறேன்.

வீட்டில் அம்மா போய்ச் சேர்ந்து வருடம் மூன்றாகி விட்டது. அம்மா இருக்கும் வரை வீட்டின் பின்புறமிருக்கும் காட்டில் எதாவது போட்டு வளர்த்திக் கொண்டே இருக்கும். மரம் வளர்ப்பதில் அம்மாவுக்கு ரொம்பவே பிரியம். எலுமிச்சை மரம் மூன்று இப்போது காய்ந்து விட்டது. முருங்கை மரம் ஐந்தாறு உருப்படியாய் நிற்கிறது. அப்புறம் அது செய்த எல்லாமும் பட்டுப் போய் விட்டது. தண்ணீர் ஊற்றக்கூட ஆள் இல்லை. வீட்டுக்கு ஒத்தை ஆள் நான். தனித்துக் கிடக்கக் கூடாதென நினைத்துத் தான் கீதா தன்னோடு மீனாவை கூட்டிப்போகவில்லை போல.

என் டிவிஎஸ்சில் அரசாங்க மருத்துவமனை வந்த போது, எப்படா வருவான்? என்றே காத்திருந்தது போல மைதிலியின் பெரியம்மா என்னை பிடியாய்ப் பிடித்துக் கொண்டாள். மைதிலிக்கு எப்பிடி இருக்கு? என்று கூட கேட்க முடியவில்லை.

‘என்னால முடியாது சாமி இவளை இனி ஊட்டுல வெச்சிருக்க! நீ எப்ப வந்து அவளை கையை நீட்டி அடிச்சியோ அப்பவே நீயே இவளை கூட்டிட்டு போயி உம்மட ஊட்டுல வச்சிக்கோ! இவ அப்பனும் ஆத்தாளும் செத்த கையோட என் ஊட்டுல வந்து கிடந்தா! சரி பாவம் எங்க போவாள்னு நான் வச்சிருந்தேன். என் பிள்ளைகளை கட்டிக் கொடுத்து தாட்டி உடவே தாவு தீந்து போச்சு எனக்கு. இப்ப என்னடான்னா நீ புள்ளையக் காணமுன்னு  வாசப்படியேறி வந்து இவளை அடிக்கிறே! யாரு கட்டுவா இவளை? நீயே வச்சுப் பொழை!’ அது சத்தம் போட்டுக்கொண்டே போய் விட்டது மருத்துவமனையை விட்டே!

மைதிலி ஒரு பாவப்பட்ட பெண் என்பதால் தான் மாதம் ஒருமுறை ஊராரே ஐம்பது ரூபாயை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மைதிலியின் அப்பாவும் அம்மாவும் ஒரு பேருந்து விபத்தில் இறந்து போனது நான்கு வருடம் முன்பு. அப்படித்தான் இவள் இந்த கிராமத்திற்கு வந்தாள். முப்பது வயதுக்கும் மேலாகக் கூட இருக்கும். பாவம் என்று தான் ஊராரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவளது பெரியம்மாவுக்கு வீட்டு வேலை செய்ய கூலியில்லாமல் ஒரு பெண் கிடைத்த மாதிரிதான் இவள் வந்து சேர்ந்தாள். எப்படியிருந்தாலும் மீனாவைக் காணோமென்றதும் நேராக இவளைத் தேடித்தான் சென்றேன்.

அவளோ மீனாவை பள்ளியிலேயே காணோமென்றும், அவளது டீச்சரிடம் சொல்லிக் கொண்டு தான் வந்ததாகவும் பேசினாள். இதுவா பதில்? வந்த கோபத்தில் ஒரு அப்பு கன்னத்தில் போட்டு விட்டேன். குழந்தைகளை பத்திரமாய் அழைத்து வருவது தானே இவள்  வேலை.

படுக்கையில் மைதிலி ஒரு உலர்ந்த சருகு மாதிரி படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும்  அவள் கண்களில் பொல பொலவென  கண்ணீர் கொட்டியது.  பாப்பா கிடைச்சிட்டாளுங்களா ஜோசியகார்ரே! என்றாள். இல்லை என்று தலையாட்டினேன்.

‘நான் நீங்க அடிச்சதுக்காக இப்படி செய்யலைங்க! பெரியம்மா நீங்க போன பிற்பாடு கண்டபடி என்னை பேசிடுச்சு! அது எப்பயும் பேசும் தான். இருந்தாலும் இன்னிக்கு ஜாஸ்த்தி பேசிடுச்சு! உயிரோட இருக்கறதுக்கு போயி சாவுடின்னு சொல்லிடுச்சு! நீங்க போலீஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துடுங்க ஜோசியகார்ரே! நானே உங்க வீட்டுக்கு வந்து சொல்லி ஸ்டேசனுக்கு போலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள என்ன என்னமோ நடந்துடுச்சு!’ என்றாள்.

‘நான் அதுக்குத்தான் வந்தேன் மைதிலி. பொண்ணைக் காணோம்னு ஒரு கோவத்துல அடிச்சுட்டேன்! விவரமான பொண்ணு தான் மீனா! அப்படியெல்லாம் திடீர்னு சொல்லாம காணாமப் போக மாட்டா! அதனால தான் பயமாயிருக்கு. இப்ப நீ வேற இப்படி பண்ணிட்டதால ஊரே என்னை குத்தம் சொல்லும் போல இருக்குது.’

‘அது எங்க பெரியம்மா பண்ண வேலை. அது அப்படித்தான் சொல்லும். நீங்க மொதல்ல போய் ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் குடுங்க! அப்புறம் அவ எங்க போவாள்னு யோசனை பண்ணுங்க! டீச்சர் கிட்ட கேட்டதுல மீனா மதியத்துல இருந்தே பள்ளிக் கூடத்துல இல்லைன்னு சொன்னாங்க! சரி வீட்டுக்கு மதியமே தனியா வந்துட்டாளோன்னு தான் நான் நினைச்சு மத்த பிள்ளைங்களோட வந்துட்டேன்.’

‘மைதிலி இப்ப உனக்கு பரவால்லியா? உனக்கு துணைக்கு கூட நிற்க ஆள் இல்லையே! உன் பெரியம்மா உன்னை வீட்டுப்பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போகுதே!’

‘எனக்காக கவலப்படாதீங்க நீங்க, எனக்கு இங்க டவுன்ல ஒரு தொண்டு நிறுவனம் இருக்கிறது தெரியும். அங்க அநாதையின்னு சொல்லி நான் சேர்ந்துக்குவேன்.’ அவள் சொல்லச் சொல்ல எனக்குத்தான் அப்படி வருத்தமாய் இருந்தது. இருந்தும் இப்படியான விசயங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டு தான் இருக்கிறது. தனிமனிதன் அதற்காக என்ன செய்து விட முடியும்? ஸ்டேசன் வரை சென்று வந்து விடுவதாக சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.

பார்த்தால் என் மச்சினனும் கூடவே என் மகள் மீனாவும் வந்து கொண்டிருந்தார்கள். கீதா வந்திருக்கிறாளா? என்று பார்க்கும் சமயமே அவளும் தூரத்தே வந்து கொண்டிருந்தாள். மச்சினன் தான் எனக்கு விளக்கமாய் சொன்னான். மீனா பயந்து போய் அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

மீனா வயிற்றை வலிக்கிறதென்று மதியமே பஸ் ஏறி விட்டாளாம் அம்மாவை பார்க்க. இப்படி முன்பாகவே இரண்டு முறை பஸ் ஏறியிருக்கிறாளாம். ஆனால் பள்ளி விடும் சமயம் சரியாக திரும்பி விடுவாளாம். இன்று மாத்திரைகள் போட்டும் வலி நிற்காமல் போய் விட்டதாம். என் செல்போனுக்கு தகவல் சொல்ல மச்சினன் அழைத்த போதெல்லாம் அது செத்துக் கிடந்ததாம். அது எப்படி எடுக்கும்? அந்த போன் தான் தண்ணீரில் விழுந்து நாசமாகி விட்டதே! வேறு எண்ணைத்தானே ஆறேழு வருடமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்.

கடைசியாக இங்கே நான் பயந்து விடுவேனென்று கார் போட்டு வந்து விட்டார்களாம். இவன் விளக்கிக் கொண்டு இருக்கையில் கீதா மைதிலியைப் பார்க்க சென்று விட்டாள். அவள் பின்னே மீனாவும் ஓடி விட்டாள். வீடு போய் பார்த்து விட்டு தகவலறிந்து தான் இங்கு வந்தார்களாம். ஒரு வார்த்தை பெற்ற பெண், அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா! என்று சொல்லவில்லை பாருங்கள். எனக்குத் தெரியாமலே முன்பாகவே பேருந்து ஏறிப்போய் அம்மாவை பார்த்து விட்டு வந்திருக்கிறாள் பாருங்கள்.

மச்சினன் இப்படி பொறுப்பாய் என்னிடம் நின்று பேசுவதெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. முன்பாக, வாங்க மாமா! என்று மாமனார் வீடு சென்றாலும் ஒரு வார்த்தை வந்தவனை விசாரிப்பதோடு சரி. மத்தபடி அதிகம் ஒட்டுறவாய் பேசிப்பழக்கம் இல்லாதவன். காலேஜில் அபோது கடைசி வருடம் சென்று கொண்டிருந்தான். இப்போது எங்கோ கம்பெனியில் வேலை கிடைத்து சென்று கொண்டிருப்பதாய் கேள்விப்பட்டிருந்தான். சம்பாதிக்க ஆரம்பித்த்தும் பக்குவம் வந்து விட்டது போலும்.

நல்லவேளை அக்காவை கொடுமைப்படுத்தியவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! சம்பாதிக்க துப்பில்லாதவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! இப்போதைக்கு மீனாவின் வயிற்று வலி நின்றிருப்பதாகவும் என்ன என்று காலையில் வெறும் வயிற்றில் வந்தால் தான் ஸ்கேன் செய்து பார்த்து சொல்ல முடியுமென்று டாக்டர் சொல்லி விட்டதாகவும் உபரி தகவல் சொன்னான்.

எனக்கு மீனாவை காட்டி விட்டு கூட்டிப் போகும் ஐடியாவில் தான் வந்திருக்கிறார்கள் போல இருக்கிறது இருவரும். சரி மீனா மீது அவளுக்கும் பாசம் இல்லாமலா போய் விடும். கொஞ்சம் நேரத்தில் அவர்கள் வந்த காரிலேயே கிளம்பினார்கள். கீதாவும் மீனாவும் ஒரு வார்த்தை என்னிடம் பேசவில்லை. அட போயிட்டு வர்றேன்னாவது சொல்லிச் சென்றிருக்கலாமே! பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது தான் பாசம் அதிகம் என்று எவன் சொன்னான் என்று தெரியவில்லை. சொன்னவனை கூட்டி வந்து ரை என்று ஒன்று விட வேண்டும். தப்பு தப்பாவே சொல்லி வச்சுட்டு போயிடறாங்க சார்.

சரி போகட்டும். நான் மைதிலியிடமே திரும்பி வந்தேன். மைதிலிக்கு இரவு உணவாக என்ன வேண்டுமென கேட்டுப் போய் வாங்கி வர வேண்டும்.

‘ஜோசியகார்ரே! உங்க மனைவி தங்கமா பேசுறாங்க. ஏன் இப்படி பிரிஞ்சு ஆளுக்கு ஒரு திசையில வாழுறீங்க? ஒன்னுமே புரியலை!’ என்றாள் மைதிலி. அவளுக்கு புரியாமல் இருப்பதே சரி.

கீதா முன்னை விட கொஞ்சம் ஒரு சுற்று பருத்திருந்தாள் போல இருந்தது. கம்பெனி வேலை அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்பா அம்மாவோடு இருப்பது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கைநிறைய சம்பளம் வாங்குவது கூட மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை மிகிழ்ச்சி இருந்தென்ன? அட மாமனாருக்கும், மாமியாருக்குமா அறிவில்லை. இது தப்பு என்று சொல்லி தாட்டி விடாமல் என்ன பொழப்பு இது? பெண்ணை வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவளை ஏன் கட்டிக் கொடுக்க வேண்டும்? சரி பெண்ணிடம் கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு போறதுக்கு சம்மதமா? என்றாவது கேட்டிருக்க வேண்டுமல்லவா! கடைசியில் ஒத்தையில் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பவன் நானாயிற்றே!

எனக்கு சற்று முன்பு கூட மைதிலியின் துயர நிலையை எண்ணி அவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து விடலாமா! என்று கூட சிந்தனை வந்தது. பின் ஒரு மனிதன் அதைத் தானே செய்ய முடியும். எத்தனை நாளைக்கு இப்படி? சோதிடம் பார்த்து கணித்து மற்றவர்களுக்கு சொல்பனுக்கே நிலைமையைப் பாருங்கள். தேடி வரும் சாதகமெல்லாம் நன்றாகவே இருக்கிறது. இனி நான் தான் என் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடிச் சென்று பார்க்க வேண்டும். இப்படியே வாழ்க்கை கழிந்து விடுமா? என்று.

சரி இப்போது என்ன கெட்டு விட்டது? கட்டின பொண்டாட்டி மருத்துவமனை வந்து விட்டு பேசாமல் செல்கிறாள் என்றால் நானாவது எப்படி இருக்கே கீதா? என்று கேட்டிருக்கலாம். ஒரு வீம்பு தான். கடைசியாக மச்சினன் தன் அலைபேசி எண்ணை கொடுத்து சென்றானல்லவா!. அதற்கு போன் போட்டு ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும்.

அந்தக் கார் அவள் ஊருக்கு சென்றதென்றால் அதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த சங்காத்தமே வேண்டாம். அப்போது தான் அடுத்தகட்ட நடவடிக்கையை சீக்கிரம் செய்ய முடியும். காலம் பொன் போன்றதாமே! கிழவாடி ஆன காலத்தில் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் சாவதற்குத் தான் வழி தேட வேண்டும். என்னமோ தெரியவில்லை இந்த மூளை இன்று அப்படி வேகமாய் இயங்க ஆரம்பித்து விட்டது.

மைதிலிக்கு இட்லி பார்சல் வாங்கி வருவதாக சொல்லி விட்டு வெளிவந்தேன். பெண்டாட்டி கீதா ஒரு புரோட்டா ரசிகை. வெளியே டவுன் பக்கம் வந்தால் அவளுக்கு புரோட்டா பார்சலோடு தான் செல்ல வேண்டும். மல்லிகைப்பூ வாங்கிச் சென்றால் சத்தம் தான். இதை தலையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் இருக்கும் நாலு வீதியையா சுற்றி வருவது? என்பாள். உண்மை தான். இவள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஊருக்குள் நடந்தால் பார்ப்பதற்கு கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். எல்லாரும் வேலை வெட்டிக்கு சென்றிருப்பார்கள்.

ஆனது ஆகட்டும் காரைப் போடுகிற சப்தத்தில் திருப்பி விடலாம் கிராமத்துக்கு, என்று அலைபேசியை எடுத்து விட்டேன். கீதாவோடே வாழ்வா? இல்லை மறுமணமா? எதிர்முனையில் சொல்லுங்க மாமா! என்றான் மச்சினன்.

-எங்க கார் சத்தத்தையே காணமே!

-அதை அப்பலையாவே தாட்டி உட்டுட்டமே! பந்தக்கால்ல சாவி இருந்துச்சு எடுத்து வீட்டை நீக்கிட்டோம் மாமா. அக்கா அடுப்பை பார்த்துட்டு இருக்குது. மீனா பெரிய மனுஷி ஆயிட்டா மாமா! உங்களை கூப்பிடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே எனக்கு கூப்புட்டீங்க!, என்றான் மச்சினன்.

000
இந்தச் சிறுகதை ஒரு தவறான இடத்தில் ஆரம்பமாவதற்கு நானே காரணம். வேண்டுமென்றே தேவையற்ற ஒரு இடத்தில் ஆரம்பமான இந்தக்கதை சுற்றி வளைத்து வந்து முடிகிறது. சொல்லல் முறை ஒன்று மட்டுமே இந்தக்கதையை காப்பாற்றி இருக்கவேண்டும். போக சிக்கலான இடத்தில் ஆரம்பித்து முடிக்க இயலுமா? என்ற முயற்சியை மேற்கொண்டதால் தான் இப்படி! நேரான இடம் எது? என்பது வாசகர்களுக்கு புரியலாம் அல்லது புரியாமலும் போகலாம். ஆனாலும் இப்படி என்னை நானே சங்கடப்படுத்தி எழுதிப் பார்ப்பது நடந்தேறி விடுகிறது.
                                                அன்போடே என்றும்

                                                      வா.மு.கோமு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:50

கொங்கு கிராமியக் கதை
---------
ஒரு ஊர்ல சின்னச்சாமின்னு ஒரு விவசாயி இருந்தானாம். அவுனுக்கு வெகு நாளா பொண்ணு அமையாம சடுதிக்கி பக்கத்தூர்ல ஒரு பொண்ணு அமைஞ்சு அவளை கட்டிக்கிட்டானாம். கலியாணம் பண்டி ரெண்டு நா மாமியா வூட்டுல இருந்துட்டு மூனா நாளு புதுப்பொண்டாட்டிய கூப்டுட்டு அவன் ஊருக்கு கெளம்பிட்டானாம் கால்நடையா.

வழியில காடு தோட்டம் வரப்புல புதுப்பொண்டாட்டிய பாத்து வரச்சொல்லி கூட்டிட்டு வந்தானாம். ஊருக்கு வர்ற வழியிலே மாமரம் ஒன்னைக் கண்டு அதோட நெழல்ல சித்த க்கோந்துட்டு போலாம் பிள்ளைன்னு சித்த நேரம் க்கோந்திருந்தாங்க! அப்ப புருசங்காரன் சின்னச்சாமி புதுப் பொண்டாட்டிகிட்ட, ‘இது என்னாடி மரம்?’மின்னு கேட்டான். அதுக்கு அவொ சொன்னா, ‘எனக்கா தெரியும் நானே சின்னப்புள்ள!’ அப்பிடின்னா.

இதென்னடா இப்புடிச் சொல்றாளே இவொன்னு ஒரு கொழப்பத்துல சின்னச்சாமியும் மரத்தடியில கெடந்தது போதும்முன்னு அவளை கூட்டீட்டு கெளம்பிட்டான். உச்சி வெயில் மண்டையப் பொழக்குது அப்ப! இருந்தாலும் ஊரு போயிச் சேரணுமில்ல அவிங்க ரெண்டு பேரும் இருட்டு கட்டுறக்குள்ள! வழியில மருத மரத்தப் பாத்து புதுப்பொண்டாட்டி கிட்ட, ‘இது என்னாடி மரம்?’ அப்பிடின்னான். அவொ மறுக்காவும்,’எனக்கா தெரியும் சின்னப்பிள்ளைக்கி’ அப்படினுட்டா!

ஒரு விசயமும் தெரியாத பிள்ளையக் கட்டீட்டு வந்துட்டமோன்னு சின்னச்சாமிக்கு கொஞ்சூண்டு வருத்தமாவும் இருந்துச்சு! கொஞ்சம் தூரம் அவங்க வந்ததும் ஒரு ஊரைத் தாண்டினாங்க! அங்க ஒரு மாதா கோவில் இருந்துச்சு! அதைப் பார்த்துட்டு சின்னச்சாமி மறுக்காவும் இவளுக்கு இதாச்சிம் தெரியுமான்னு பாக்கலாம்னு, ‘ஏம் புள்ள இதூ என்னா?’ னு கேட்டான். அதுக்கும் அவொ,’எனக்கென்ன தெரியு சின்னப்புள்ளைக்கி!’ அப்பிடினுட்டா. வழியில தென்னை மரங்கள் வரிசையா ரோட்டோரத்துல நின்னுட்டு இருந்துச்சு. கம்முன்னு இருக்காமெ சரி இதாச்சிம் தெரியுதா இவளுக்குன்னு பாப்பமேன்னு அதையும் என்னான்னு கேட்டான். மறுக்காவும் அதே பதிலைத்தான் அவொ சொன்னா. ‘எனக்கா தெரியும் சின்னப்புள்ளைக்கி!’ அப்புறம் காட்டுல ஒரு பெரியவரு ஏர் உழுதுட்டு இருக்கிறதைக் காட்டி இது என்னா? அப்படின்னான். ‘எனக்கா தெரியும் சின்னப்பிள்ளைக்கி!’ அப்படின்னுட்டா!

அவனோட ஊருக்கு இன்னும் மூனு மைலு நடக்கோணும். கடேசியா ஒரு ஆத்தங்கரையோரத்துல அவுங்க ரெண்டு பேரும் நடந்துட்டு இருந்தாங்க! அப்ப புதராட்டும் ஊனாங்கொடி படர்ந்து கெடந்துச்சு அங்க! அதைப் பார்த்த சின்னச்சாமி அதுக என்ன பிள்ளை? அப்படின்னு கேட்டான். அந்த மவொ மறுபடியும் அதே மாதிரி சொல்ல இவுனுக்கு கோவம் தலைக்கு ஏறிடுச்சு. ஊனாங்கொடியை இனுங்கி அவ சூத்தாம்பட்டையில நாலு இணுங்கு இணுங்கினான். அந்த மவொ அடிக்காதீங்க மாமா அடிக்காதீங்க மாமான்னு குதியா குதிக்கிறா! அப்படியே பாட்டு ஒன்னு படிக்கிறா!

“மாமரொ மருதமரொ
மாதா கோயில் தென்னமரோ
ஏர் உழுறது வேலாங்கலப்பெ
என்னையடிக்கிறது ஊனாங்கொடி”


அப்படின்னு அழுதுட்டே வரிசையா அமட்டையுஞ் சொல்றா அந்த மவொ.


நன்றி வா.மு.கோமு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 6:59

பயணம் -சிவேந்திரன்
----------
“உலகம் சுத்திக்காட்டிற இந்த பஸ்ஸில ஏறாத எண்டு சொல்லச்சொல்ல கேட்காமல் ஏறிப்போட்டாய்.இண்டைக்கு ரெண்டு மணித்தியாலம் சரி.”
பின் இருக்கையில் கதவடி மூலையில் இருந்த அந்தோனிப்பிள்ளை நினைவுகள் கலையமேற்கிலிருந்து சுள்ளெண்டு அடிக்கும் சூரியனை தடுக்க கையில் வைத்திருந்த பேப்பரை சிறிது பதித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.இரண்டு பெடியன்கள்.கைகளில் கொப்பிகளைப் பிடித்தவாறுநின்றிருந்தார்கள்.வெள்ளவத்தை மொட் ஸ்டடி சென்டர் தரிப்பிடத்தில் ஏறியிருக்கவேண்டும். யோசனையில் கவனிக்கவில்லை.

“அடேய் நான் 102 இல கொச்சிக்கடையில இருந்து வெள்ளவத்தைக்கு கிளாஸுக்கு வாறதுக்கிடையில மூண்டிடத்தில இறக்கிபோட்டாங்கள்.அதுதான் 102 வேணாம் என்டு 155 இல ஏறுவமெண்டனான்.பிந்திபோனாலும் கொஞ்சம் நிம்மதியாப்போகலாம்.”
பஸ்ஸில் அதிக கூட்டம் இல்லை.ஆனால் இருக்கைகள் நிரம்பியிருந்தன.அந்தோணிப்பிள்ளை தனது ஆறடி உயரமான திடகாத்திரமான உடம்பை சற்று அரக்கி இருந்தவாறு “ மகன் இதில இரு அப்பு” என்று மென்மையான குரலில் கூறினார்.

”கேசவன் நீ இரு.”
கேசவன் என்று கூறப்பட்டவன் நன்றி ஐயா என்றவாறு கிடைத்த இடைவெளியில் பின்னிருக்கையில் முதுகு முட்டாமல் அமர்ந்தான்.
மற்றைய நண்பன் அவனது மடியில் தன்னுடைய கொப்பிகளையும் அடுக்கினான்.கொப்பிகளின் மேல் அன்ரனி, தூயகணிதம்,A/L-95 என்று
எழுதப்பட்டிருந்ததைக் கவனித்த அவர் ”பெயர் என்ன அன்ரனியா?என்ர மகன்ட பெயரும் அதுதான்” என்றார் அதே மெதுவான குரலில். “தம்பியவைன்ட சொந்த இடம் எது?யாழ்ப்பாணமா?”

“ஓம்”
“யாழ்ப்பாணம் எவ்வடம்?”
“வேலணை.அன்ரனி குருநகர்.”
“ஓ.நான் பக்கத்து ஊர்தான். நாரந்தனை.படிப்பிச்சுக்கொண்டிருந்தனான். இடப்பெயர்வுக்கு முதல் வருசம்,எண்பத்தி ஒன்பதில பென்சன் எடுத்திட்டன்.”
“ஐயாவின்ர பெயர் என்ன?”
“அந்தோணிப்பிள்ளை,ஊரில எல்லாருக்கும் மாஸ்டர் என்டால் தெரியும்.”
“இவ்வளவு வளர்ந்த பிறகும் பிள்ளையா?”
“சும்மா இருடா அன்ரனி.உனக்கு யாரோட பகிடிவிடிறதெண்டு ஒரு வரையறை இல்லையா?”கேசவனின் குரலில் சிறிது கடுமை தெரிந்தது.
பெயர் மட்டுமில்லை.வாய்த்துடுக்கும் என்ட மகனை மாதிரித்தான் என்று அவர் நினைத்துகொண்டார்.மீண்டும் பழைய நினைவுகள் அவரை இழுத்துக்கொண்டன.

”இண்டைக்கு நேற்றா?நாங்க தான் பெரியவங்கள் எண்டதை ரெண்டாயிரம் வருசத்திற்கு முதலே திருவள்ளுவர் சொல்லிப்போட்டேரல்லோ.யாராவது இல்லையெண்டு சொல்லட்டும் பார்ப்பம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்தொழுதுண்டு பின் செல்வர் என்டு சும்மாவா சொல்லியிருக்கிறேர் ” என்றுவீட்டுக்கூடத்தில் இருந்து அரட்டையடித்துக்கொண்டிருந்த நண்பர்களுக்குஅந்தோனிப்பிள்ளை அடித்துவிட்டுக்கொண்டிருந்தார்.
“அது நெல்லு நடுறவங்களுக்குச்சொன்னது.போயிலை நட்டு மற்றவங்கட நுரையீரலை புடுங்கிறவங்களுக்கு சொல்லயில்லை.விளங்குதா?.” ஒரே அடியில் அடித்துவிட்டு வெளியே போய்க்கொண்டிருந்தான் அன்ரனி.

அவருக்கு சிரிக்கிறதா கோபப்படுறதா என்று தெரியவில்லை.முகத்தை கஷ்டப்பட்டு இறுக்கமாக்கி கொண்டு ”அது A/L ரிசல்ட் வரேக்குள்ள தெரியும்” என்று சத்தமாகச் சொன்னார்.அவன் இப்பொழுது கேட்கிற எல்லையை கடந்திருப்பான் என்று பிறகுதான் நினைத்தார்.
“மாஸ்டரின்ட மகன் வலுகெட்டிகாரன் தான்”

“என்ன கெட்டித்தனம்.கெட்டித்தனம் எல்லாம் இப்படி குறுக்காலதான் போகுது”என்றார் ஒரு சலிப்புடன்.
முதல்நாள் நடந்தது இன்னமும் மனதில் கொப்பளித்துக்கொண்டே இருந்தது.ஊராத்துறைக்கு போய்டு வந்துகொண்டிருந்தவர் பெரியபுலம் வீதி முடக்கில்சைக்கிளைத்திருப்பினார்.அன்ரனி இன்னுமொருவனை சைக்கிள்ள ஏற்றிக்கொண்டு எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தான்.இவரைக்கண்டதும் சிரிப்பும் பேச்சும் நின்றுவிட்டன.உள் ஒழுங்கை ஒன்றுக்குள் சைக்கிளை திருப்பி வேகமாகசென்றுவிட்டான்.
“யாரை நீ சைக்கிள்ள ஏற்றி ஓடினனி?”
“கண்டனீங்கதானே பிறகேன் கேட்கிறீங்க”
“எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கு.பீற்றரின்ட மகனோட உனக்கென்னகூட்டு?அவன் உன்ர பள்ளிகூடமும் இல்லை.அவங்கள் போற சேர்ச்சும் வேற.”
“ஆறாம் வகுப்பு மட்டும் ஒண்டாத்தானே படிச்சனாங்கள்.அதுக்கு பிறகெல்லாநான் சென் பற்றிக்ஸிலும் அவன் சென்ட் அன்ரனிஸிலும் சேர்ந்தனாங்கள்.மறந்திட்டிங்க போல.கட்டிடங்கள்தான் வேறவேற.நிற்கிற நிலம் ஒண்டுதான்.”

இதற்கு பிறகு மகனுடன் அவர் அதிகம் கதைக்கிறதில்லை.கதைக்கப்போனால் ஏதாவது பிரச்சனைதான் வரும்.வாய்க்கு வாய்காட்டிக்கொண்டிருப்பான்.அப்பன்என்ட மரியாதையும் போயிரும் என்று நினைத்து ஏலுமானவரை பேசுவதை தவிர்த்துவிடுவார்.
இரண்டு மூன்று மாதங்கள் இப்படியே ஓடியது.பீற்றரின்ட மகளோட அவனைக்கண்டதாக பொன்னமாக்கா சொல்லீற்று போனா.இதைக்கேட்கிறதா விடுறதா என்று அவருக்கு குழப்பம்தான்.கேட்கப்போய் ஒண்டும் இல்லாததை நானே உருவாக்கிவிட்டிருவேனோ என்ற பயம் மனசுக்குள்.

இதற்கு சிலநாட்கள் கழித்து செருக்கன் சந்திக்கு போய்விட்டு ஒன்பதாம் கட்டையால வந்துகொண்டிருந்தார்.முன் சில்லில காற்று குறைவாக இருந்ததால் கல்லுகளில் பட்டு டங் டங் என்று எரிச்சலூட்டிக்கொண்டிருந்து. ‘முள்ளுக்கில்லு குத்திப்போட்டுதோ தெரியாது.வீட்டுக்குபோய் உடன காத்தடிச்சு பார்க்கவேண்டும் என்று அவரின் மனதில் ஓடியது.

தூரத்தில் கறுத்தக்கொழும்பான் மாமரத்தடியில் இரண்டு உருவங்கள்.சைக்கிளை வீதியோரமாக வேலியில் சாய்த்துவிட்டு மெதுவாக நடந்து சென்றார்.கிட்டத்தட்ட ஒரு னைபோல.கறுத்தகொழும்பான்சடைத்துப்பரவி உயர்ந்திருந்தது. தாழப்பதிந்திருந்தகொப்பில் அவன்.கால்கள் சைக்கிள் கரியரில் பதிந்திருந்தன.சைக்கிளின் கைபிடியை பிடித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள்.
சூரியன் படத்தொடங்கியிருந்தது.படுவெயிலின் கதிர்களில் இருவரையும் பார்த்தபோதுஅவருக்கு ஏனோ வந்தியத்தேவனும் குந்தவையும் கணப்பொழுதில் வந்து மறைந்தார்கள்.
மறுகணம் இரத்தம் சூடேறியது.அவர்களை நோக்கிவேகமாக அடி எடுத்துவைக்கசற்று தொலைவில் இருவர் பனைவளவிற்குள் இருந்துவருவது தெரிந்தது.நாய் வீட்டை வரட்டும் என்று கறுவிக்கொண்டே சைக்கிளை நோக்கி நடந்தார்.
சைக்கிளை கொண்டுவந்து மோதினவேகத்தில் முன்னால் இருந்த பூச்சாடியில் பட்டுஅது கவிழ்ந்தது.பூக்கன்றுகளுக்கு தண்ணிவிட்டுக்கொண்டிருந்த மனைவி ஏதோசொல்ல வாயெடுத்துவிட்டு அவரின் முகத்தில் தெரிந்த உக்கிரத்தை பார்த்து அமைதியானார்.

”பிள்ளையை ஒழுங்கா வளர்க்கத்தெரியவில்லை.பூக்கண்டு வளக்கிறியா?எட்டிஉதைந்த உதையில் இன்னும் இரண்டு பூச்சட்டி உடைந்தது.உன்ட மகன் பீற்றரின்டமகளோட ஊர் மேயிறான்.இண்டைக்கு அந்த நாய் வரட்டுக்கும் இரண்டில ஒன்று பார்க்கிறன்.”
”நீங்க சும்மா இருங்க அப்படியொன்றும் இருக்காது.வரட்டும் நான் மெதுவாகக்கேட்கிறன்.”
இரவு அவன் வந்த பொழுது இருவருமே அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை.அடுத்தநாள் வெள்ளெண பின்வளவு மாமரத்தில ஏறி இருந்து எதையோவாசித்துக்கொண்டிருந்த அன்ரனியிடம் அவர் வந்தார்.
“கீழ இறங்கெடா”

“என்ன சொல்லுங்க”
“இப்ப எந்த நேரமும் மரத்திலதான் இருக்கிறீங்க போல இருக்கு.இப்ப கொப்புள்ள மரத்தில ஏறிப்பழகினாத்தானே கொப்பில்லாத மரத்தில ஏறலாம்.”
“எனக்கு விளங்கேல்ல.விளங்கிறமாதிரி கதையுங்க.”
“உனக்கு என்னடா பீற்றரின்ட மகளோட கதை?”
“ஏன் கதைக்க கூடாதா? நேற்று நீங்க வந்திட்டு திரும்பிப்போனதை கண்டனான்.நீங்க நினைக்கிறமாதிரி ஒண்டும் இல்லை. நானும்,அவளும்,அவளின்ட அண்ணனும்,சிவம் மாமாவின்ட மகனும் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்கள்.அவங்கள் ரெண்டுபேரும் ஒண்டுக்குப்போறதிற்கு பனைவளவுப்பக்கமா போன நேரத்தில நீங்க வந்திட்டீங்க.”
“ஏதோ பார்த்து நடந்துகொள்ளு. என்ட தோட்டத்தில மிளகாய்,வெங்காயம்,போயிலை நடலாமே தவிர பனையை நடேலாது.அதை ஞாபகம் வச்சிருந்தா சரி.”
பஸ் பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலைக்கடந்தது.கேசவன் வலது கையால் நெற்றியிலும் நெஞ்சிலும் தொட்டுகொண்டான்.

அந்தோனிப்பிள்ளை ஒரு ரெண்டு அங்குலம் எழுந்து அமர்ந்தார். “ஐயா தன்டபெயர் அந்தோனிப்பிள்ளை” என்று சொன்ன மாதிரி இருந்தது
அன்ரனியின் குரலில் ஒரு கிண்டல் இருந்தது.

“என்ட நிறைய சொந்தக்காரங்கள் சைவம்.இப்ப மருமகனும் சைவக்காரன்தான். ஒருவகையில தூரத்துச்சொந்தம்.மகள் விரும்பிறது தெரிஞ்சு வேணாம் என்டு சொல்லிப்பார்த்தன்.கேட்கவில்லை.பெடியன் கொஞ்சக்காலத்தில டென்மார்க் போய்ற்றான்.சரி இனி மறந்திடுவாள் என்று நினைச்சு நிறைய சொந்தக்காரங்க பிரான்ஸில இருந்தும் பக்கத்திலவிட்டால் பிரச்சனை எண்டு கனடாவிற்குஅனுப்பிவைச்சன்.ஒரு வருசத்தில எப்படி போனவளெண்டு தெரியாதுடென்மார்க்கிற்கு போய் அவனைக்கட்டிற்றாள்.சரி மேல்த்தோல சுரண்டிப்பார்த்தாநானும் சைவக்காரன்தானே என்டு விட்டுப்போட்டன்.இப்ப அவங்களுக்கு இரண்டுபிள்ளையளும் இருக்கு.நாலுமாதம் அங்க போய் நிண்டிட்டு போன கிழமைதான்வந்தனான்.”என்று பொதுப்படையாக கூறினார்.
“ஏன் அங்கையே நிண்டிருக்கலாமே?”
“எங்கட நாடுதான் திறம்.அங்கத்தை குளிரும் எனக்கு பிடிகேல்ல.அறுபத்தஞ்சு வருசம் இங்க இருந்து பழகிட்டன்.இனிக்கஷ்டம்.பனையைகொண்டு போய் பனிக்க நடேலுமா? “என்று சிரித்தார்.
அவருக்கு இன்னும் கொஞ்சக்காலம் பேரப்பிள்ளைகளுடன் இருந்திருக்கலாம்என்றுதான் நினைப்பு வரும்.டென்மார்க் வீதியொன்றில் நடந்த சம்பவத்திற்குபின்னர்தான் கெதியில நாட்டுக்குத்திரும்ப வேணும் என்று முடிவெடுத்தவர்.ரோட்டில போகும்போது ஒரு டேனிஷ்காரனை தவறுதலாக இடித்துவிட்டார்.அவன் டேனிஷில் ஏதோ கூறியவாறு ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டுசென்றுவிட்டான்.அவன் கூறியது அவருக்கு புரியவில்லை.ஆனால் அந்த பார்வைபுரிந்தது.தெருவில் கிடக்கும் சொறிநாயை பார்க்கும் அதே பார்வை.
அந்த சம்பவம் அவரை கடுமையாக தாக்கிவிட்டது.வீட்டுக்கு வந்து மகளிடம்திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்.இந்த நாட்டு மக்கள்மிகவும் நல்லவர்கள்.நட்புணர்வு மிகுந்தவர்கள்.ஒரு சிலர்தான் இவ்வாறுநிறவெறியுடன் நடந்து கொள்வார்கள் என்று மகள் திரும்பத்திரும்ப சொன்னாலும்அவரின் மனது கேட்க மறுத்தது.

ஸ்ரீலங்கா போகப்போவதாக கூறிவிட்டார்.எப்படிச்சமாதானப்படுத்தினாலும் அப்பாகேட்கவில்லை என்பது மகளைக் கோபப்படுத்தியது.
“அங்க போய் சிங்களவனிடம் அடி வாங்குங்க.அப்பதான் சரியா இருக்கும்.”
“சிங்களவன் வெட்டினாலும் சுட்டாலும் அவன்ட அடிமனதில பயமும் மரியாதையும்இருக்கு.அவங்கள்ள எவனோட பேசினாலும் கண்ணில அது தெரியும்”
இன்னும் கொஞ்ச காலம் நிண்டிட்டு வர போறன் எண்டு சொன்ன மனைவியை விட்டிட்டுஅடுத்த கிழமையே கொழும்புக்கு திரும்பிவிட்டார்.

பேருந்து தும்புள்ள சந்தியை நோக்கி திரும்பியது.எல்லாரும் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு இறங்குங்க என்ற நடத்துனரின் குரல் சிங்களத்தில் கேட்டது.
அடையாள அட்டையின் முன்னுள்ள புகைப்படத்தையும் ஆளையும் மீண்டும் மீண்டும் பார்த்து உறுதி செய்துகொண்டு மறுபுறத்தை திருப்பினான் பச்சை சீருடை அணிந்தவன்.
நாகநாதர் அந்தோனிப்புள்ளே என்று வாசித்தவன்.வேலுப்புள்ளே இல்லையா என்று கூறியவாறு விசாரிக்க தொடங்கினான்.
“எங்க போறீங்க?”
“வத்தளைக்கு”
“என்னத்திற்கு?”
“வீடு பார்க்க”
“இப்ப இருக்கிறது எங்க?”
“வெள்ளவத்தையில.வாடகை கூட.வத்தளை என்றால் இதைவிடக்குறைவாய் கிடைக்கும்”
அனைவரினதும் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு சோதனை முடிந்தது.
கேசவனையும் அன்ரனியையும் கேள்விமேல் கேள்விகேட்டு கடைசியாகத்தான் பஸ்ஸில ஏறவிட்டாங்கள்.

அதுவரைக்கும் அந்தோனிப்பிள்ளை கண்ணாடிக்கு வெளியில் தலையை விட்டு ஐயோ பிள்ளையளை விட்டிட வேணுமே என்ற பதட்டத்துடனேயே இருக்கை நுனியில் இருந்தார்.
மீண்டும் பஸ் புறப்பட்டது.
“தாண்டிக்குளத்தை தாண்டினால் நிப்பாங்கள்தானே.அங்கபோய் பிடிக்கவேண்டியதுதானே. அதுக்கு பயம்.இங்க சும்மா எங்களைபோட்டு” என்று தாழ்ந்த குரலில் அன்ரனி நக்கலடித்ததை இடைமறித்து முறைத்த கேசவன் “வாயை மூடிக் கொண்டுவா” என்றான்.
“ஐயாவிற்கு எத்தனை பிள்ளையள்?” கேசவன் பேச்சை திசைமாற்றினான்.
ரெண்டு.டென்மார்க்கில இருக்கிறவா மூத்தவா.மற்றது மகன்.”
“அவரும் வெளிநாட்டிலா?”
“ம்” அவரின் முகத்தில் சிறு குழப்பம் தெரிந்தது.
“எந்த நாடு?”
“தெரியெல்ல.வேற சாதியில கலியாணம் கட்டிக்கொண்டு போய்ற்றான்.என்னோட தொடர்பில்லை.
அவரின் கற்பனையில் மகனை அவ்வாறுதான் நினைக்கவிரும்பினார். தொண்ணூறாம் ஆண்டு வலம்புரி இராணுவ நடவடிக்கையின் மூலம் சிங்களப்படைகள்யாழ்ப்பாணத்தின் மேற்கிலுள்ள தீவுகளை கைப்பற்றிகொண்டன.பெரும்பாலான மக்கள் குடாநாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள்.அன்ரனி,பீற்றரின்ட மகன் செபஸ்டியான், பீற்றரின்ட மகள்,சிவத்தின்ட மகன் என்று நிறையப்பேர் இயக்கத்திற்கு போய்விட்டார்கள்.

தொண்ணூற்றியொண்டில ஆனையிறவுச்சண்டையில காயப்பட்டு கிடக்கேக்கதான் அவர் அன்ரனியை கடைசியாக பார்த்தவர்.அவனும் இன்னும் சில போராளிகளும் காயப்பட்ட பொழுது செபஸ்டியான் தலைமையிலான மீட்பு அணிதான் அவர்களைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததாகவும் அதன் பின்னர் அவ்விடத்தில் விழுந்து வெடித்த எறிகணையில் அவனும் வேறுசில போராளிகளும் வீரச்சாவடைந்து விட்டதாக மகனின் மூலம் அறிந்து கொண்டார்.
“விலகிவா அப்பன்.உன்னை விட்டா எனக்கு யார் இருக்கிறாங்க?”

“அக்கா இருக்கிறா.அது போதும் உங்களுக்கு”
அதுதான் கடைசி.அதன் பிறகு அம்மாவும் அப்பாவும் தனிய இருக்கவேணாம்.கொழும்பில் வந்து இருங்க என்று மகள் நெடுகலும் வற்புறுத்தினதால கொழும்புக்கு வந்துவிட்டார்.
வழமைபோல வெரித்தாஸ் தமிழ்பணி செய்தியை போட்டார்.செய்திகேட்க வானொலியைப்பிடிக்கிற கையில் எப்போதும் ஒரு நடுக்கம் இருக்கும்.கடலில் நடந்த கடும் சண்டையை செய்தி சொல்லிகொண்டிருந்தது.இந்தச் சண்டையில் லெப்டினன்ட் கேணல் தமிழேந்தி எனப்படும் யாழ்மாவட்டத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரனிதாஸ்..
“அந்தோனியாரே என்னை கைவிட்டுடீரே”
பஸ் இப்பொழுது மருதானையை சந்தியில திரும்பியது.
கேசவன், “ஐ யா அழுகிறேர் போல இருக்கு”
“ஒண்டும் இல்லையப்பன்.கண்ணாடி போடவேணும்.போட இல்லை.அதுதான்.”
பஸ் ஆமர்வீதி சந்தியை அடைந்தது.இருவரினதும் தலைகளை தடவியபடி வாறன்
பிள்ளையள் என்றவாறு இறங்கினார்.சந்தியைக்கடந்துவந்து 107 பஸ்ஸில் ஏறி நாயக்க கந்தையில் இறங்கினார்.
சேர்ச்சுக்கு இடதுபக்கம் திரும்பினால் சரி.அப்படித்தான் புரோக்கர் சொல்லி இருந்தவன்.மேல் பொக்கற்றில் கையைவிட்டுப்பார்த்தார் விலாசம் இருந்தது.
“மாஸ்டர்”
திரும்பிப்பார்த்தார்.

பீற்றர்.
“எங்க மாஸ்டர் இந்தப்பக்கம்.நான் இங்க இடதுபக்கமாத்தான் இருக்கிறன்.வீட்ட வந்திட்டு போங்க.”
“பிள்ளையள் எப்படி இருக்கிறாங்க?”
“மூத்த ரெண்டின்ட கதையும் உங்களுக்கு தெரியும்தானே.மூண்டாவதும் நாலாவதும் பிரான்ஸில.கடைக்குட்டி இப்ப A/L படிக்கிறாள்.”
“இந்த வீட்டை இப்பதான் வாங்கித்திருத்தினனாங்கள்.”
“மாஸ்டர் டீ குடிப்பீங்களா?”
“இதென்ன கேள்வி அதெல்லாம் பழைய காலம்”
“டீ நல்லா இருக்கு.”
“ஊரைப்பற்றி கதைத்துக்கொண்டு இருந்ததில நேரம் ஓடியதே தெரியேல்ல.இருட்டப்போகுது.
அப்ப நான் வாறன்.”
“சரி மாஸ்டர் இங்கால என்ன விஷயமா வந்தனீங்க?”
“நாயக்க கந்த சேர்ச்சை பற்றி கேள்விபட்டன்.அதுதான் ஒருக்கா பார்த்திட்டு
போவம் எண்டு வந்தனான்.”
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 7:12

ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா …நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட  அவன் பொறந்து நாலாவது  மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..? டூ யு நோ திஸ் பிஃபோர் ரா….?



நோ….பார்…….!

தெரியாதுங்கறியா….? இல்ல ‘நோ பார்’னே சொல்றியா..

இல்ல பார்கவி தெரியாதுன்னு சொல்றேன். நானும் உன்கூட சேர்ந்து இப்பத்தான் இதைப் படிக்கறேன்..

யூ…சோம்பேறி …டெய்லி இந்த வழியாத் தானே வரே நீ…அதெப்படி உன் கண்ணுலேர்ந்து இவ்ளோ பெரிய ஹோர்டிங் தப்பிச்சது ?

இதெல்லாம் உங்க கண்ணுக்குள்ள மட்டும் தான் சிக்கும் ….நான் பாட்டுக்கு ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கிட்டு எனக்கு முன்னாடி யார் வண்டி ஓட்டறா..? ஏதாவது அம்ச ஃபிகர் கண்ணுல மாட்டாதான்னு  டைம் பாஸ் சைட் அடிச்சுண்டு இருப்பேன்..போயும் போயும் இதெல்லாம் யாருக்கு வேணும்? நான் தனியா வெளில வந்தாச்சுன்னா அவ்ளோ தான். சென்ட் பெர்செண்ட் பாச்சலர் ரா…!

அதே .தான் நானும் திங் பண்ணேன்…உன்னைப் பத்தி….நீயே  அதை அக்செப்ட் பண்ணீட்டே…ஹேய் மிஸ்டர் கிரி….நீ தான் மிஸஸ் பார்கவியாகி ரெண்டு வருஷமாயாச்சு….அதுக்கு அடையாளமா..?

உன் கழுத்துல தாலி தொங்கலை….!

ம்கும்….உன் காதுல கடுக்கண்  மின்னறது மச்சான்….மண்டைக்கு சூடு போட்டுக்கோ  சொல்லிட்டேன்….ஒழுங்கா ஆபீஸ் போனமா….வேலையை மட்டும் பார்த்தோமா…பார்கவிக்கும், கீட்சுக்கும் பிடிச்சதை வாங்கித் தந்தோமான்னு நல்ல பையனா லட்சணமா சமத்தா நடந்துக்கணம்…..சரியா….காரை ஒட்டிக் கொண்டிருந்த கிரியின் காதைத் திருகி அழகு காட்டினாள் பார்கவி.

அங்க பாரேன்… பார்….அந்தப் பொண்ணு எப்படி பைக்குல அவனோட ஒட்டிக்கிட்டுப் போறாள்னு….நீயும் இருக்கியே….ஆயிரம் சொல்லு பைக் பைக்கு  தான் கார் ….கார்…தான். இல்லியா பார்….!

நீ திருந்தவே மாட்ரா ..! உன்னோட லொள்ளும்…ஜொள்ளும் ..

என்னோட கவச குண்டலங்கள் மாதிரி…!

வீட்டுக்கு வா…அம்மா காதுல போட்டு வைக்கிறேன்…..உன்னோட திருவிளையாடலை….! உங்கம்மா பண்ற அர்ச்சனைக்கு மட்டும் தான் நீ அடங்குவே..!

வேண்டாண்டி…பார்….என் பாவமான மூஞ்சியைப் பாரேண்டி ..! அம்மாவுக்கு, ஆரம்பிச்சா நிறுத்தத் தெரியாதுன்னு உனக்கே தெரியுமே.

.சரி.சரி…ஜோக்ஸ் அபார்ட்…..இப்ப விஷயத்துக்கு வா……நம்ம கீட்ஸுக்கு நல்ல ஸ்கூல் கிடைச்சாச்சு…நாளைக்கே போயி விசாரிக்கணம்….அட்ரெஸ  மெசேஜ் பண்ணி சேவ்ல போட்டு வெச்சுக்கோ.

கஷ்டம் கஷ்டம்..இவன் பொறந்து வெறும் நாலே  மாசம் தானே ஆறது….அதுக்குள்ளே உனக்கு என்னாச்சு பார்  .? இவ்ளோ அவசரப் படறே.  அட…நான் தான் மறந்தே போய்ட்டேன்….நீ தான் ஒன்பது மாசம் முடிஞ்சதுமே ஹாஸ்பிடல்ல ரூம் போட்டு, இன்னிக்கு இந்த நட்சத்திரத்துல தான்  என் குழந்தை பொறக்கணும்னு அடம் பிடிச்சு சிசேரியன் கேஸாச்சே.உன் கிட்ட என் பருப்பு வேகாது…..!.

ஆஸ்பத்திரி வாசல்ல  நாதஸ்வரம் ஏற்பாடு பண்ணி வெச்சு குழந்தை பொறந்த உடனே  வாசிக்க சொல்லியிருந்தேனே அதை நீ பாராட்டவேயில்லை…கிரி ….!

ஆமாமா…..அதான் குழந்தை பயத்தில்,  பிறந்ததும் இன்குபேட்டர்ல போய் படுத்துண்டான்…இதெல்லாம் என்னமோ…தெரியலை….நீ மட்டும் தான் அப்படியா இல்லை உன் குடும்பத்துல வேற யாராச்சும் இப்படி மரை கழண்ட கேஸுகள் இன்னும் இருக்கா…?

உனக்குத் தெரியாதா….? இதெல்லாம் கூட வாஸ்து மாதிரி தான்…இப்பல்லாம் இதெல்லாம்  ஃபேஷனாவே ஆயாச்சு.. இப்படில்லாம் பண்ணாதவா தான் குறைவு.


நான் இதுல ஜீரோ….பட் நோ..பெயின் ……நோ கெய்ன்டி பார்….!

ம்கும்…நோ பெயின்  பட் கெய்ன்..கீட்ஸ்…!

நான் உன்ன மாதிரி..என்னை மாதிரியெல்லாம் நம்ம குழந்தையை வளர்க்க மாட்டேனாக்கும். எனக்குன்னு ஒரு ப்ளான். என் கசின் சிஸ் திவ்யா தெரியுமா.?..ஞாபகம் இருக்கா?

ம்ம்….அந்த பரட்டைத் தலை…..அச்சச்சோ….அந்த பாப் தலைவி…!

அது…..! அவள்….குழந்தை வயித்தில இருக்கும்போதே அதுக்குன்னு எதோ ஒரு கிளாசுக்கு போயிருக்கா…அதனாலத் தான் அவ குழந்தை பிரேமுக்கு ஒரு வயசு தான் ஆறது…அதுக்குள்ளே புத்தகத்துல இருக்கும் அத்தனை படத்தையும் ஐடெண்டிஃபை
பண்ணி டக்கு டக்கு ன்னு சொல்றானாம். இவளுக்கு ரொம்பப் பெருமையா இருக்காம்…போன வாரம் கூட ஃபோன் பண்ணிச் சொல்லி சந்தோஷப் பட்டாள் .

ரொம்ப முக்கியம்….!  இல்ல…..இல்ல….பிரேம் இப்பவே நம்ம கீட்ஸ் க்கு வில்லனாயிட்டானா..? ன்னு.

என்ன நீ கிரி…..நம்ம கீட்ஸ் கூட அவனை மாதிரி வரவேண்டாமா…? அதுக்குத் தான் இந்த ஸ்கூல்.

இந்த விஷயத்தில் நீ அவசரப் படாதே பார்…! அம்மாட்டயும் கேட்கணும்..அவாளுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இருக்காது நீ வேணாப் பாரேன்……எவனோ காசு பிடுங்க போடற ஐடியாவில் நீங்க முதலீடு செய்யாதேங்கோன்னு சொல்வா.

ஆமாமா…அப்டித் தான் சொல்வா…நான் சொல்ற எதுக்கு உங்கம்மா உடனே அப்படியா சரின்னு சொல்லிருக்கா..?அதெல்லாம் கேட்டுண்டு இருந்தா நம்ம குழந்தை கடைசி பெஞ்சுல கண்ணைக் கட்டிண்டு உட்காரணம், பரவாயில்லையா..? உங்களுக்கு வேணா பரவாயில்லைன்னு இருக்கலாம்….என்னால முடியாது.ஐ வில் மேக் ஹிம்  தி பெஸ்ட் கிட் …! உலகம் எவ்வளவு வேகமா போறது தெரியுமா? அதுக்கேத்த வேகம் இருந்தாத் தான் வர காலத்துல பிழைக்க முடியும்.

வீட்டுக்குள் போனதும் என்ன மாதிரியான  வாக்குவாதம் நடக்கப் போறதோ….இப்பவே மனத்தில் 70mm அளவுக்குத் திரை விழுந்து  அதில் பார்கவி ஃபுல்  ஸ்க்ரீனில் முறைத்துக் கொண்டு தெரிந்தாள் . அதை ஜூம் அவுட் பண்ணுவதற்குள் வீடு வந்து விட்டது.

காரைப் பார்க் செய்து விட்டு, ஹேய்….கமான் பார்…..பி ரிலாக்ஸ்ட்….இங்கேர்ந்தே மூஞ்சியைத் தூக்கி வெச்சுக்காதே….அம்மா கண்டு  பிடிச்சுடுவா…! ஒ கே. கூல் பேப்..கொஞ்சம் சிரியேன் .

எனக்குத் தெரியாதா..? உங்கம்மாக்கு உடம்பெல்லாம் கண்ணுன்னு..இதுக்கொண்ணும் குறைச்சலில்லை…..ஈஈஈஈ ……போதுமா…?

அது சரி…ரொம்ப வாராதே..! ரொம்ப ஜாஸ்தி….கொஞ்சம் குறைச்சுக்கோ பரவாயில்லை ‘சின்ன  இ’ யே…போதும்.

நான் என்ன இங்க ஈயாப்  பிடிக்கறேன்….’சின்ன ஈ’  போதும்…வெ வெ வெ வெ ..கிரியைப் பார்த்து அழகு காட்டினாள்…இங்க பாரு .அம்மாக்கிட்ட எனக்கு நீ சப்போர்ட் பண்ணிப் பேசணம் ..புரிஞ்சுதா? நான் என் குழந்தைக்கு எது செஞ்சாலும் அவன் நல்லதுக்குத் தான் செய்வேன்.

அது சரி…..எல்லாருக்குமே  அப்படித்தான் குழந்தை மேல பாசம் உண்டு பார்.

யார் இல்லைன்னா…..அப்டி இருந்தால் எனக்கு யார்ட்டயும் இதுக்காக கெஞ்சவே வேண்டாமே..நாளைக்கே அந்த ஸ்கூல்ல சேர்த்துடலாம்….இல்லையா?

வீட்டுக்குள் நுழையும் வரை பேசிக் கொண்டே செருப்பைக் கழற்றி விட்டு, உள்ளே நுழைந்ததும்,

ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டே ‘சரவணன் மீனாட்சி ‘ சீரியலில் ஐக்கியமாகி பார்த்துக் கொண்டிருந்த  சுபத்ரா , ஊஞ்சலை நிறுத்தி விட்டு, ஷாப்பிங் போய்ட்டு வந்தாச்சா…?  கீட்ஸ் பசிச்சு அழுதானா….முதல்ல அவனுக்கு திருஷ்டி சுத்திப் போடணம். என்றபடி  ஊஞ்சலிலிருந்து இறங்கினாள் .

ம்மா…..உன் மருமகள் சொல்வா….கேளேன்…..நம்ம கீட்ஸ்சை நாளையிலேர்ந்து ஸ்கூல்ல சேர்க்கப் போறாளாம்..

என்னடாது கூத்தாயிருக்கு…?.பொறந்து நாலு மாசம் கூட கழியலை…இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கெல்லாம் யார் ஸ்கூலை கட்டி வெச்சுண்டு உட்கார்ந்திருக்கா . நன்னாருக்கு போ..!

அதெல்லாம் இருக்கு. குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போதே சொல்லித் தர ஸ்கூல் எல்லாம் கூட வந்தாச்சாம். பார்கவி சொல்றா. நமக்கு தான் இதெல்லாம் ஒண்ணும் தெரியலை.

அதுக்குள்ளே ஸ்கூலாவது….கீலாவது … நான் இதுக்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன். ப்ளே ஸ்கூலுக்கு போக மூணு வயசானவட்டு பார்த்துக்கலாம்.

ம்மா…நீ கொஞ்சம் சும்மா இரேன்….கிரி அம்மாவின் வாயை அடைத்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைந்த பார்கவி,
ஏன் நிறுத்திட்ட கிரி…நீயே  அம்மாட்ட சொல்லியாச்சா..?

இல்லையில்ல இப்பத் தான் சொல்லிண்டு இருக்கேன்.

இதோ பார் பார்கவி…அவன் எல்லாம் சொன்னான்….ஆனா அதெல்லாம் நம்மாத்து குழந்தைக்கு இந்தக் கூத்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பொறந்து நாலு மாசம் ஆகும் குழந்தையை யாராவது ஸ்கூல்ல சேர்ப்பாளா ? இன்னும் முகம் பார்க்கவே முழுசா ஆரம்பிக்கலை.

இப்பல்லாம் வயித்தில் இருக்கும் குழந்தைக்கே பாடம் சொல்லித் தர ஸ்கூல் இருக்கு தெரியுமா?

அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கெதுக்கு? யாரோ பைத்தியம் பிடிச்சவா பண்ணினா நம்மளும் பண்ணணமா ? குழந்தைக்கு செர்லாக் கரைத்துக் கொண்டே சொல்லும் சுபத்ராவைப் பார்த்து,

அதெல்லாம் ஒண்ணுமாகாதும்மா . கீட்ஸ் கண்டிப்பா இந்த ஸ்கூல்ல சேருவான். ஒரே வருஷத்தில் அத்தனையையும் கத்துப்பான்…நீங்களே பார்த்து அசந்து போயிடுவேள்.

கிரிதரனை நாங்க அஞ்சு வயசுல தான் ஸ்கூல்லயே சேர்த்தோம்…அவனுக்கு என்ன படிப்பா வரலை…? அவன் அப்பா பள்ளிக் கூடம் போன வயசென்ன தெரியுமா..? பத்தோ பன்னெண்டோ…அவர் என்ன வக்கீலாகலையா?

அது அந்தக் காலம்…நீங்க அந்தக் காலத்துலேயே இன்னும் இருந்தாக்கா நான் என்ன செய்றது? காலத்துக்கேத்தா மாதிரி மாறித் தானே ஆக வேண்டியிருக்கு.  கோபத்துடன் அடம் பிடிக்கும் கீட்ஸின் வாயில் செர்லாக்கைத் திணித்தபடியே சொன்னாள் பார்கவி.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் சொன்னால் கேளு. காலம் ஒண்ணும் அப்படியே தலை கீழா மாறிப் போகலை. கொஞ்சம் மாடர்னா இருக்கு..ஒத்துக்கறேன்.கட்டினவனை வாங்கோ…போங்கோ..ன்னு கூப்பிடறதிலிருந்து வா..போ..ன்னு பேசறது வரைக்கும்…மத்தபடி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை.

நீங்க இந்த வீட்டுக்குள்ள இருந்துண்டு இவ்ளோ தான் மாற்றம்னு சொன்னா ஆச்சா?

இல்லையே…டீவி சீரியல்ல இப்பத் தான் கேட்டேன்..சரவணனை மீனாட்சி…வாடா…போடான்னு ஏலம் போடறாளே, அதை வெச்சுத் தான் சொல்றேன். ஏன்….நம்மாத்தில் நடக்கலையா?

இதைக் கேட்டதும், படக்கென்று குழந்தையை மடியிலிருந்து வாரியெடுத்து தோளில் சார்த்திக் கொண்டு கிண்ணங்களை தொப் தொப்பென்று கிட்சன் சிங்கில் போட்டு விட்டு விருட்டென்று படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொள்கிறாள் பார்கவி.

ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்ளோ கோபமா? சிவ சிவா….! இந்தக் காலத்துப் பொண்களுக்கு பேருக்கு ஆம்படையான் பேரைப் பின்னாடி வாலாட்டமா எழுதறாப்பல.முன்னால கோபிஷ்டின்னு சேர்த்தாலும் தேவலை போலத் தோணறது.

டேய்…கிரி….நீங்க ரெண்டு பேரும் சாப்டாச்சா? வெளில வாசல்ல போயிட்டு வந்தாலே கூடவே ஏதாவது பிரச்சனையையும் சேர்த்து வாங்கீண்டு வந்தால் நான் என்ன பண்ணுவேன் ? எல்லார் சௌகரியம்…நான் சொல்லியாச்சு…கேட்டால் கேளுங்கோ…கேக்காட்டா எப்படியோ ஆகட்டும்….அறுத்தவ சொல்லு அந்த அடுக்களை முட்டும் தான் எந்த அம்பலமும் ஏறாதுன்னு தெரியும்…..இருந்தும் நான் மாமியார் பவுசு காட்டறேன் பார்…என் புத்தியைச் சொல்லணம் …அவாள்லாம் படிச்சவா….பல இடம் போறவா….வரவா……ம்ம்ம்ம்….டேய்…கிரி……பார்கவியை சாப்பிடக் கூப்பிடு. மத்தபடி அவளோட எந்த விஷயத்துலயும் நான் என் ஜலதோஷ மூக்கை நுழைக்கலை. சொல்லிக் கொண்டே வாஷ்பேசினை நோக்கிச் சென்று மூக்கைச் சீந்தி அலம்புகிறாள்.

ம்ம்மா….போகட்டும் .விடேன்…நீ வீணா இதுல தலையிடாதே. அவளுக்கு நம்ம கீட்ஸ் ரொம்ப சின்ன வயசிலயே நிறைய படிச்சுடணம்னு ஆசைப்படறா . நான் ஏற்கனவே சொல்லிப் பார்த்தாச்சு…உனக்குத் தான் அவ குணம் தெரியுமே.

நல்ல குணம்..!தான் பிடிச்ச முயலுக்கு மூணே காலுன்னு ….!

கொஞ்சம் விட்டுப் பிடிச்சா சரியாயிடும்மா..!

என்ன…தும்ப விட்டு வாலைப் பிடிக்கச் சொல்றே? நான் விடறேன் நீ பிடிச்சுக்கோ. நீயாச்சு…உன் பொண்டாட்டியாச்சு. நானா சம்பாத்திக்கறேன்…நானா காசு கட்டப் போறேன்…?

அப்போ சும்மா இரேன்…!

எப்பவும் நான் சும்மா இருந்தா உங்களுக்கு சந்தோஷம் தானேப்பா.

ம்மா, பார்த்தியா கோச்சுக்கறே.

இப்பல்லாம் உங்க காட்ல மழை…..ஜமாயிங்கோ. நான் ஏன் கோவிச்சுக்கப் போறேன்..? அந்தக் காலம் போலையா இந்தக் காலம்…அதான் இந்தக் காலத்துக்கு புதுசா கம்ப்யூட்டர் கொம்பு முளைச்சிருக்கே…!

இந்த ஒரு வார்த்தை பச்சைக் கொடியில் , பார்கவி ‘கீட்ஸ்’ஸுக்கு அடுத்த நாளே அட்மிஷன் போட்டு விட்டாள். நம்ம கீட்ஸ் கிட்ட ஒரு போட்டோவை காண்பிக்க, அவன் எவ்வளவு உன்னிப்பா அதையே பார்த்துண்டு  இருந்தான் தெரியுமா..?

ஏதோ பெரிய விஷயமாக அதைச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஆமா…..எல்லாம் சரி தான்..இதுக்கு அவாளுக்கு  எவ்வளவு தட்சணை எடுத்து வெச்சேள் ?

நாலு மாசத்திலேர்ந்து ஒரு வயசு வரைக்கும் இருபதாயிரம் ஃபீஸ். அதுக்கப்பறம் கூட பத்தாயிரம் ஆகுமாம்.

பேஷ்….பேஷ்…ரொம்ப நன்னாருக்கு….முகம் பார்க்க ஆரம்பிக்கிற குழந்தைக்கு என்னத்தை அப்படி சொல்லித் தந்துடுவா? அப்போ என் பேரன் ஐஸ்டின் மாதிரியோ இல்லாட்டா அப்துல் கலாம் மாதிரியோ வரப் போறானா?

இந்த நக்கல் தானேம்மா வேண்டாங்கறது…நிச்சயமா என்னை மாதிரியோ உங்க பிள்ளை மாதிரியோ இருக்க மாட்டான்…முகத்தில் பெருமை பொங்கச் சொன்னவள் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டாள் .இவனும் ஏதாவது புதுசாக்  கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பான். அதுக்கு இப்பல்லாம் நிறைய ஆப்பர்ச்யூனிட்டி இருக்கு. இவாளுக்குத் தான் இனிமேல் நிறைய ஓபனிங்ஸ். அம்மா…இன்னைக்கு நிஜம்மா நீங்க இவனுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கோ…அப்டியே எனக்கும்…! என்று சொன்ன பார்கவியைப் பார்த்து,

அது சரி….! என்னமோடிம்மா …உன் ஆசைக் கனவு ஜெயிச்சால்  நான் நல்ல மாமியார்…தான்..என்று கேலியாகச் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் நுழைகிறாள் சுபத்ரா.

என்னம்மா நீங்க…இதுக்குப் போயி அலட்டிகறேள். ஐம் சாரிம்மா…..கெஞ்சலான குரலில் ஐஸ் வைத்து சொல்வதைக் கேட்டதும் சுபத்ராவும் உருகித் தான் போனாள்.




காலச் சக்கரச் சுழற்சியில் பத்து வருடங்களை முழுங்கியிருந்தது. சுபத்ரா தெய்வமாகி சட்டத்துக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்….மென் மேலும் பதவி உயர்வில் கிரி நேரமே இல்லாமல் தவித்தான். பார்கவி கூடிப்போன பத்து கிலோவை தன் உடம்பிலிருந்து கரைக்க அரும்பாடு பட்டு டயட்டில் தவித்துக்  கொண்டிருந்தாள். கீட்ஸ் மட்டும் பத்து வயது சிறுவனா அல்லது இருபது வயது வாலிபனா என்று அனைவரையும் சிந்திக்க வைத்தான்.

கீட்ஸ்…படிச்சுட்டியா…ஹோம் வொர்க் பண்ணியாச்சா?

ஓவர்….நத்திங் பெண்டிங். படிக்க ஒண்ணுமேயில்லை …ஐம் கோயிங் டு  வாட்ச் மூவி நௌ .

மா….இட்ஸ் ஸோ போரிங் …எனக்கு வெளில போகணும்….கார் சாவி தாயேன் ..ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்..

அய்யய்யோ வேண்டாம்டா ப்ளீஸ்….!

….ம்ம்ம்மா……ஐ கான்ட் டாலரேட் யூ .மாம்…நீங்க சும்மாயிருங்க ..எனக்கு இப்பவே காரை எடுத்துண்டு வெளில போகணும்…நான் போறேன்…பை….என்று துள்ளிக் குதித்து வெளியில் ஓடும் போது, பார்கவி ஆடித்தான் போவாள்.

ஒண்ணா….ரெண்டா….பத்து வயதுப் பையனுக்கு என்ன தோணுமோ, அதெல்லாம் அவனுக்கு மூணு வயசிலயே தெரிஞ்சு போன மாதிரியும், இப்போ அவன் ஒரு காலேஜ் படிக்கிற பையனைப் போல நடந்து கொள்ளும்போது மனசு கலங்கித் தான் போனது பார்கவிக்கு.

நாளாக நாளாக , இதுவே பெரிய தலைவலியாகிப் போனது அவளுக்கு.

டாட்….எனக்கு ஐ போன், வேணும்….ப்ளூ ரே கேம் சிடீஸ் வாங்கிக்கறேன்…ஒரு டென் தௌசண்ட் செக் எழுதுங்கோ.

இவன் பார்க்கும் தோரணையில், கிரியின் கை,  தானாக செக்கில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விடும்.

டாட்…எனக்கும் ஒரு பேங்க் அக்கௌண்ட், கிரெடிட் கார்ட் எல்லாம் வேணும்..ப்ளீஸ் டூ இட். ஒரு பெரிய பிஸ்னெஸ் பண்ணப் போறேன்….கேமிங்….!

போச்சுடா…! ரெண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொள்வார்.

ஸ்கூல் டீச்சர் தினசரி போன் செய்து, உங்க சன் கீட்ஸ் மத்த பசங்களைக் கெடுக்கிறான்….பர்ஸ்ட் ரேங்க் மட்டும் வாங்கினாப் போதாது…மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்கக் கூடாது..அவனுக்கு நாங்க டபிள் ப்ரமோட் பண்ணி வேற கிளாஸ்ல போடலாம்னு யோசிக்கறோம்..ஹி இஸ் ஓவர் ஸ்மார்ட்…வெரி வெரி இன்டெல்லிஜென்ட். அதான்…என்று தயங்க.

பெருமை ஒரு பக்கம் இருந்தாலும்…..இது எங்கே கொண்டு விடுமோ என்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பயந்து கொண்டே இருந்தாள் பார்கவி.

ஒரு நாள் அவள் பயந்தது கூட நடந்தது.

டபிள் பிரமோஷனில் இன்னும் துளிர் விட்டுப் போனது கீட்ஸ்ஸுக்கு. தன்னுடன் படிக்கும் பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போக, மைனர் பெண்ணின் கவனத்தைச் சிதறல் செய்கிறான் என்று அவர்கள் வீட்டிலிருந்து நாலு பேர்கள் இவர்கள் வீட்டை முற்றுகையிட்டு எச்சரித்து விட்டுப் போகையில், பார்கவிக்கும், கிரிக்கும்…கீட்ஸ்ஸுக்குமிடையே பூகம்பமே வெடித்தது.

கடைசியில் இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பார்கவி நீ ?  நீ நினைச்சது ஒண்ணு …நடக்கறது ஒண்ணாச்சே….ஆரம்பத்தில் அம்மா சொன்னதைக் கேட்டிருந்தால்…இப்படியெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ.?

கற்றுக்கொள்ளும் வயதில் அத்தனையும் தெரிந்து விட்ட நிலையில் அடுத்தது என்ன என்ற தேடலின் உச்சியில் இருந்தாலும் அங்கு அவனுக்கென்று ஒன்றுமே இல்லாதது போலவும்…உலகப் பாடத்தில் கற்றுக் கொள்ளவென்று எதுவுமே தனக்கு இல்லை என்றும் உணர்வுகளோடு நடந்தான்  கீட்ஸ்.

எப்போதும் எல்லோரையும் பார்க்கும் போதும் தனக்கு மட்டும் எல்லாம் தெரிந்து விடுகிறது என்ற ஆளுமையும் அதிகார உணர்வும் மேலோங்கிய  அவனை யார் கண்டாலும் ‘திமிர் பிடித்தவன்’ பெரிய கர்வம் பிடிச்சவன்….என்றெல்லாம்  பட்டம் கொடுத்து கேலி பேசுவார்கள். இவன் வருவதையும் தவிர்ப்பார்கள்.

பட்டமும், கேடயமும், பரிசுக் கோப்பைகளும் ஒரு புறம் நிரம்பி வழிந்தாலும்…அதைத் தரை மட்டமாக்கும் நிகழ்வுகளும் கூடவே நடக்கத் தொடங்கி அவனை நிலை குலைய வைத்தது.

அது கோபமாக வெளியேறத் துவங்கிய போது பார்கவிக்கும் கிரிக்கும் பிள்ளைப் பாசத்தைக் கடந்து ‘இவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது கடினம் என்று தோன்றியது’.

பார்…இப்பப் பார்….! எவ்ளோ சொன்னேன்…அப்பவே சொன்னேன்…இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு. உலகத்தோட ஒத்துப் போகத் தெரியாமல் உன்னோட பேராசைக்கு நம்ம பையனை பலியாடாக ஆக்கி வைச்சுட்டியே..

டாக்டரே சொல்லிட்டார். அதுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இன்ஃ பாக்ட் சின்னக் குழந்தையா இருக்கும்போதே அவன் படு சுட்டி..ஹைபர் ஆக்டிவ் சைல்ட். தெரிஞ்சுக்கோ. வாட்ஸ் நெக்ஸ்ட்….! இது இப்ப அவனை மனசுக்குள் ரொம்பப் படுத்தறதுன்னு நினைக்கறேன்.

அவனை ஒரு சைக்கியார்டிஸ்ட்ட அழைச்சிண்டு போனால் எல்லாம் சரியாய்டும். பார்கவி சமாதானப் படுத்தினாள் .

இப்பத் தானே பதினைந்து வயசாறது. அதுக்குள்ளே எங்க வந்து நிக்க வெச்சுட்டான் பாரேன் ? பார்.கிரி புலம்பிக் கொண்டிருந்தான்..எல்லாம் உன்னால…வந்த வினை.

அதே சமயம் அவனைப் பாராட்டு கிரி…..அவன் ஷேர் ட்ரேட் பண்றான்….ரியல் எஸ்டேட்ல என் பேர்ல இன்வெஸ்ட் பண்ணிருக்கான். லேப்டாப் ரிப்பேர் பண்றான்…கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்றான்…இதெல்லாம் அவனோட பிளஸ்…தெரியுமா?
வி ஷுட் கவுண்ட் ஹிஸ் குட் திங்க்ஸ் டூ…! எவ்ளோ அட்வான்ஸ்டா திங் பண்றான்.

அவனுக்கு எது வேணும் எது வேண்டாம்னு நம்மால சிந்திக்க முடியலை. நம்ம நினைக்கறது எல்லாமே அவனுக்கு அவுட் டேட்டட்டா இருக்கு. இப்பவாவது உனக்கு புரியறதா? என்னால நிம்மதியா இருக்க முடியலை பார்.

இதெல்லாம் ரொம்ப காமன் தான்…கிரி. நாம தான் இன்னும் கொஞ்சம் அவனுக்கேத்தா மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

நாம பண்ணிக்கலாம்….வெளி உலகம் பண்ணிக்குமா? போடா சர்தான்னு சொல்லிட்டுப் போகும். எல்லாத்துலயும் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புன்னு இருந்தா, ஹௌ எனி ஒன் வில் டாலரேட் திஸ்.? இப்பக் கூட ஒரு நல்ல ஃப்ரெண்ட் இல்லை அவனுக்கு.

நீ சொல்றாப்பல லாப்டாப், கம்ப்யூட்டர், ன்னு எல்லாத்தையும் பிரிச்சு மேயறான்…சரி தான். அதே நேரம் அவனுக்குக் கோபம்  வந்தால் அதே கம்ப்யூட்டரைத் தூக்கிப் போட்டு உடைக்கிறானே. கேட்டது கிடைக்கலைன்னு தெரிஞ்சா  சுவத்துல ஓங்கி குத்தி தன் கையைத் தானே காயப் படுத்திக்கறானே….எல்லாம் அவனுக்கு சாதகமா நடக்கணும்னு யோசிக்கறானே இதெல்லாம் தப்பில்லையா ?  அஃப் கோர்ஸ்….அது ஜெனெடிக்னு வெச்சிக்கலாம்.

கோபத்தில் தன் கையிலிருந்த காப்பி டம்ப்ளரைத் தூக்கி எறிகிறாள் பார்கவி.

இத…இத….இதத் தான் சொன்னேன்…என்று கிரி சொல்லவும்

பார்கவி ‘ஓ’ வென தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.

சரி…சரி….ஸாரி …அழாதே…நீ மட்டும் என்ன செய்வே.?..நாளைக்கு டாக்டர்கிட்ட  போகலாம். அப்பாயின்ட்மென்ட் வாங்கிடறேன் சரியா…அவளை சமாதானப் படுத்தி விட்டுப் படுத்துக் கண்களை மூடிக் கொள்கிறார் கிரிதரன். வழக்கம் போலவே தூக்கம் அவருக்கு ‘டா டா…பை பை ‘ சொல்லிக்கொண்டு ஓடியது. எத்தனை இரவுகள் தூக்கம் போயிருக்கும்..? தூக்கம் மட்டுமா…அப்படியே தலையைத் தடவிப் பார்க்கும் போது மொழு மொழுவென்று வழுக்கைத் தலையில் விரல்கள் வழுக்குகிறது.




அடுத்த நாள் இரவு…!

என்னங்க மேடம் இது…இதுக்குப் போயா உங்க பையனுக்கு கவுன்சிலிங் பண்ண அழைச்சிட்டு  வந்தீங்க. தயவுசெய்து உங்க வீணான கவலையை விட்டுத் தள்ளுங்க.  நான் அவன்கிட்ட தனியாப் பேசிப் பார்த்த பிறகு தான் இதைச் சொல்றேன்….உங்க சன் செம ஸ்மார்ட். மூளைதான்  அவனோட மூலதனம். எங்க போனாலும் பின்னிப் பெடலெடுப்பான் . டோன்ட் வொர்ரி. என்ஜினீயரிங் சேர்த்து விடுங்க…கோல்ட் மெடல அள்ளிட்டு வந்திடுவான். அப்பப்பப்பப்பா….எதைக் கேட்டாலும் டக்கு டக்குன்னு நெத்தியடியா பதில் சொல்ற பிள்ளைய கைல வெச்சிட்டு நீங்க கலங்கினா…ஐம் சாரி….உங்களைத் தான் பார்க்கறவங்க தப்பு சொல்லுவாங்க…சம்திங் ராங்ன்னு…! இப்ப இருக்குற காலத்துக்கு இவ்ளோ ஸ்பீட் ரொம்ப ரொம்ப அவசியம். உங்களுக்கு இப்பப் புரியாது. போகப் போகப் பாருங்க..!

டாக்டர் சொல்லியனுப்பியத்தை நினைத்துக் கொண்டே கண்களை வெறுமனே மூடியபடி படுத்திருந்தாள் பார்கவி.

நிம்மதியா தூங்குவதா…..? இவ்வளவு இண்டெலிஜெண்ட் கீட்ஸ்ஸுக்கு ஏன் அடிக்கடி விரக்தி வருகிறது…? கோபம் வருகிறது?
வீட்டிலும் இருக்கப் பிடிப்பதில்லை…..பள்ளியில் இருக்கவும் பிடிப்பதில்லை…..மனம் அமைதியில்லாமல் அலைபாய்கிறது.
எங்க போனாலும் தனக்கு மிஞ்சியவர் யாருமே இல்லைங்கற ஒரே எண்ணத்தில் தானே நுழைகிறான். அவனுக்குள் இருக்கும் சுபீரியர் தாட்ஸ் தான் எல்லாத்துக்கும் காரணம். அவன்கிட்ட சொல்லிப் புரிய வைக்கலாம்னு நினைச்சால்..பேசவே விட மாட்டேங்கறான். என்னன்னு சொல்லறது..?

நாட்களும் வாரங்களும் மாதங்களுமாக ஓடி வருடங்களைக் கடத்திச் சென்றன.

மனசுக்குள் புகுந்து கொண்டு இறங்க மறுத்த வருத்தம் பார்கவியின் வயதை இருபது வருடங்கள் கூட்டியது.சுகரும், இரத்த அழுத்தமும்  கூட துணைக்கு வந்து அவளுடன் கைத்தடி போலச் சேர்ந்து கொண்டது.

பாதி நாட்கள் வீட்டுக்கே வராமல், படிப்பையும் முடிக்காமல்  கீட்ஸ், இமயமலை வரைக்கும் சென்று வந்து…மாம்….ஐ லைக் ஒன்லி ஹில்ஸ்…அதும் ஹிமாச்சல் ..நான் அங்கயே கூட போய் இருந்துக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்…..கீட்ஸ் இதைச் சொன்னதும், அவள் தலையில் இமயமலையையே  ஏற்றி வைத்தது போலிருந்தது பார்கவிக்கு.

என்னடா சொல்றே….கீட்ஸ்..? உனக்கு இப்பத்தான் முப்பது வயசாகுது….ஒரு கல்யாணம் காட்சி செய்யாமல்…குடும்பம்னு ஒண்ணு இருந்தால் இந்த மாதிரி தாட்ஸ் எல்லாம் வராது…! வாழ வேண்டிய வயசில் நீ இப்படிச் சொல்றது கொஞ்சம் கூட சரியில்லை.

மாம்….டாட்…நீங்க தான் நான் இன்னும் சின்ன வயசா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..பட் ….எனக்கு இந்த மெட்டீரியல் வேர்ல்ட்ல எதுவும் பெரிசா இருக்கறதாத் தெரியலை. ஐ ஹேட் எவெரிதிங். ப்ளீஸ் லீவ் மீ அலோன். ஐ கான்ட் ஸ்டே எனிமோர் ஹியர்.
ஐ நீட் பீஸ்….அமைதி மட்டும் தான் நிரந்தரம்…அது தான் எனக்கு வேணும்.இந்த உலகம் ரொம்ப ஸ்லோ…அதனால தான் ஒரு அமைதியான இடத்தில் என்னை அமைதியாக்கிக்க பழகிக்கப் போறேன்..ஏன்னா எனக்கு இந்த மைண்ட் ஸ்பீட் பிடிக்கலை.

இதைக் கேட்டு அதிர்ந்தே போனாள்  பார்கவி. அவள் தலை தானாகக் குனிந்தது. கிரிதரன் விழிகளில் கண்ணீர் நிறைந்த பார்வை  அவனது அம்மாவின் படத்தின் மேல் விழுந்தது.

இந்த வார்த்தை தான் அவர்களை பெற்றவர்களாக அழைத்து  மதித்து அவன் பேசிய கடைசி பேச்சு. அன்று தான் கீட்ஸை அவர்கள் கடைசியாகப் பார்ப்பது என்பதை  அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மகன் கிளம்பிப் போய் வீடு வெறிச்சென்று சூனியம் பிடித்தாற்போலிருந்தது. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த செல்வந்தரின் நிலை போல உணர்ந்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்துவது போல ஒரு அழைப்பு மணி அடித்தது.

மீண்டும் மகன் வந்து விட்டானோ….? ஓடிச்சென்று கதவைத் திறந்த பார்கவியால் நம்ப முடியவில்லை..

அங்கு, கையில் ஆறு மாதக் குழந்தையுடன் அழகானப்  பெண்றொருத்தி  ” ஐ ம் தீட்சா…திஸ் இஸ் கீட்ஸ்’ஸ் சன்…”  சொல்லிக் கொண்டே பார்கவியைத் கடந்து வீட்டுக்குள் நுழைகிறாள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 7:15

கணேசன் ஓய்வெடுக்கப் போகிறார்:

-----------------
” இன்னக்கி புது மேனேஜர் வறார். டிஃபன் ரெடியாப்பா” கணேசனின் மகன் குமாரின் குரல் இது. மகனுக்கு வயது 50ஐ நெருங்கும். இவருக்கே 75ஐத் தாண்டுதே!. இந்த வயதிலும் பரபரவென்று வேலைகளை முடித்துவிடுவார். வேறு வழி கிடையாது. மருமகள் காலாட்டிக்கொண்டு இவரை வேலை வாங்கும் மகராசி.

கணேசனின் மனைவி, குமார் பிறந்தவுடனேயே இறந்துவிட்டாள். அதன்பிறகு மறுமணம் பற்றி சிந்திக்காமலேயே கணேசன் அலுவலகமும் போய்க்கொண்டு குமாரையும் கவனித்துக்கொண்டார். வேறு யாராவது குமாரை சரியாகக் கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை கணேசனுக்கு அறவே இல்லை. எனவே காலம் இப்படியே ஓடிப்போனது. வயது வந்ததும் ,குமாருக்கு திருமணமும் செய்து வைத்தார். வீட்டுக்கு வந்த மருமகளோ கணவனைத் தன்னுடைய பிறந்த வீட்டுக்குக் கூட்டிப் போக பிரயாசைப்பட்டாள். என்னதான் காதல் திருமணம் என்றாலும், மனைவியின் இந்த மாதிரியான சுயநலத்துக்கு குமார் செவி சாய்க்கவில்லை. நெருங்கிய உறவினர் யாருமற்ற கணேசனுக்கு கேட்க யாருமில்லை என்றுதானே இப்படியொரு திட்டம் போட்டாள், மருமகள். ஆனால், எதற்கும் அதிகம் பேசாத குமார், அப்பாவை விட்டுப் பிரிந்து வர மட்டும் தயாரில்லை என்பதால், மருமகள் ரேகாவுக்கு வேறு வழியில்லாமல் இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதாகி விட்டது. ” கணேசா, மருமக வந்துட்டா. இனி நீ உட்கார்ந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம் என்று அத்தை சொன்னது கதையாகிப் போனது.

ஆனால், புகுந்த வீட்டு நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்டுவிட்டாள், மருமகள். இத்தனை காலமாக சமையல், வீட்டு வேலை, குமாரை பள்ளிக்குக் கொண்டு விடுதல் என்று உழைத்து, உழைத்து காலம் தள்ளிய கணேசன், இந்த வயதிலும் அதே விதமாக ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாள், ரேகா. தனக்கு சமையல், வீட்டு வேலைபற்றியெல்லாம தெரியாது என்று சொல்லி, உட்கார்ந்த இடத்துக்கு மாமனாரை காஃபி கொண்டு வந்து தரவைத்தாள். ” 75 வயது தெரியாமல் எப்படி ப்ரிஸ்காக இருக்கிறீர்கள்!” என்று புகழ்வதுபோல் நடித்தே , எந்த வீட்டு வேலையிலும் ஈடுபடமாட்டாள் ‘ அப்பாவை விட்டுப் போகாமல் இருப்பதே போதும்’ என்று எதற்கெடுத்தாலும் பணிந்து போகும் குமாரும், வாய் பேச வழியற்ற அப்பாவி கணேசனும் தணிந்து போகும் வரை ரேகா காட்டில் மழைதான் பெய்தது.

பேரன் அருணுக்கும் திருமண வயது வந்துவிட்டது. ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை பார்க்கும் அவனுக்கு ஒரு நல்ல சம்பந்தமும் வாய்க்கும் நிலைமையில் உள்ளது. அதுவும் பெரிய இடத்து சம்பந்தம். பெண் வீட்டுக்காரர்கள் வருவதும் போவதுமாக இருக்கும் இந்த நேரத்திலும் கூட அப்படி இபப்டி அசைய மாட்டாள், ரேகா. இந்த லட்சணத்தில் மகன் கல்யாணம் நிச்சயமானதற்காக அதுவும் பெரிய இடம் என்பதற்காக ட்ரீட் கேட்கும் தோழிகளையும் வீட்டுக்கு வரவழைத்து விருந்து கொடுப்பாள், ரேகா. அன்றும் அப்படித்தான். எங்கோ புறப்பட ஆயத்தமானவள் ” மாமா, இன்னைக்கி என் ஃப்ரண்ட்ஸ் 4 பேர் வராங்க. இங்கதான் சாப்பிடுவாங்க. விருந்து கொஞ்சம் கௌரவமா இருக்கணும்” என்றாள் அமர்த்தலாக. ” அதுக்கென்னம்மா? ஜமாய்ச்சுடலாம்” என்பார் கணேசன். ஆனால், அன்று என்னவோ, அந்தக் குரல் வரவில்லை. ஒரு சமயம் துணுக்குற்ற ரேகா, அதை அலட்சியப்படுத்திவிட்டு புறபப்ட்டுப் போய்விட்டாள். மதியம் 1 மணி சுமாருக்கு தோழிகளுடன் திரும்பி வந்தவள், ஹாலில் இருந்தபடியே கிச்சன் பக்கம் திரும்பி ஒரு குரல் கொடுத்துப் பார்த்தாள். ஆனால், கணேசனிடமிருந்து பதில் வரவில்லை. 

எழுந்துபோய்ப் பார்த்தவளுக்கு அங்கு கணேசன் இல்லாதது எரிச்சலை மூட்டியது. ” வரவர இந்த்க் கிழம் ரொம்பத்தான் திமிர் காட்டுது” என்று முணுமுணுத்தாள். கிச்சனில் சாப்பாடு ரெடியாக இருக்கவே மாமனாரைத் தேடுவதை விட்டுவிட்டு சாப்பாட்டை டைனிங் டேபிள் மீது பரப்பி, தோழிகளை அன்புடன் உபசரித்துவிட்டு, தானும் சாப்பிட்டபின் அப்படியே களைப்படைந்து தன்னுடைய அறைக்குச் சென்று உறங்கிப் போனாள். மாலை , இருட்டிப் போஉ விட்டது. மணி 6க்குமேல் இருக்கும்போலிருக்குதே. எங்கே யாரையும் காணோம் எழுந்து ஹாலுக்கு வந்தாள்” இத்தனை நேரமாகியும் இன்னும் காஃபி ரெடியாகலையா?. ” என்று கோபத்துடன் சுற்றிலும் தேடினாள், அந்த வாயில்லாப் பூச்சியை. .

“அப்பா, மெதுவா, மெதுவா” என்றபடி, அப்பாவைப் படுக்கவைத்தார், குமார்.” ரேகா, அப்பாவுக்கு நல்ல ஜுரம். நீ தெரியாமல் தூங்கிகொண்டிருந்தாய். நான் டாக்டரிடம் அழைத்துப் போய் ஊசி, மருந்தெல்லாம் போட்டு அழைத்து வந்திருக்கிறேன். டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். நீ கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்து அப்பாவைக் கவனிச்சுக்கோ” என்று சொன்ன குமார்” அப்பாவுக்கு வயசாதாகுதே, எதுவும் ஆகாமல் இருக்கணும்” என்று உருகிப்போன மகனையும், வீம்பாகப் படுத்துவிட்ட கணேசனையும் முறைப்பாகப் பார்த்த ரேகா, இரவுச் சாப்பாட்டை ஹோட்டலிலிருந்து வரவழைத்துவிட்டு, பொழுது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும்போதே, தன் தாய் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனாள்.

ஒரு வாரம் கழித்துத்தான் திரும்பி வந்தாள். அவள் திரும்பி வரவும், வீட்டில் அருண் கல்யாண வேலைகள் களை கட்ட ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. பணக்கார சம்பந்தம்! சம்பந்தி 4,5 ஃபேக்டரிகளுக்கு சொந்தக்காரர். அருணின் படிப்புக்கும் அவனுடைய திறமைக்கும் கிடைத்த நல்ல சம்பந்தம் இது. அவன் வேலை பார்க்கும் கம்பெனி ஓனரே தன் பெண்ணைத் தருகிறார். குடும்பத்தில் ஒரே குதூகலம்தான். வயதுக்கு மீறிய சுறுசுறுப்போடு வளைய வந்து கொண்டிருந்தார், கணேசன். பேரனின் திருமண சந்தோஷத்தில் பூரித்துப் போய், வேலைகளை இழுத்துப் போட்டு ஆடிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக கல்யாணமும் முடிந்து, ஆர்ப்பாட்டங்களும் கலாட்டாக்களும் ஓய்ந்து போய், பொண்ணு மாப்பிள்ளையும் அழைப்பு, மறு அழைப்பெல்லாம் முடித்து வீடு வந்து விட்டார்கள்.

காலையில் படுக்கையிலிருந்து எழும்போதே ‘ புதுப் பெண்ணை தன் ஃபில்டர் காஃபியால் ஒரு அசத்து அசத்தவேண்டும்’ என்ற எண்ணத்தோடு எழுந்து வேக வேகமாக அடுப்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். என்னதான் மனதில் எண்ண ஓட்டம் வேகமெடுத்தாலும், உடம்பு ஒத்துழைக்க மறுத்து வயதை ஞாபகப்படுதுகிறது. கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் அவரை நோக்கி வந்த ஸ்மெல்லை முகர்ந்தபடி, ” என்ன இது?, காஃபி ஸ்மெல்லா?” என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டார். ” தாத்தா, அப்படியே இருங்க . காஃபி எடுத்துவரேன்.” என்றபடியே அடுப்படியிலிருந்து ஓடிவந்த ரோஷு என்ற அந்த்ப் புதுப்பெண் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து, சோஃபாவில் உட்கார வைத்தாள். ” இந்தாங்க தாத்தா, காஃபி சாப்பிடுங்க” என்றபடி காஃபியை அவர் கையில் தந்துவிட்டு ,அவர் அருகில் அமர்ந்து புன்னகைத்தாள் புது மருமகள் ரோஷு. எதையும் நம்ப முடியாதவரானார், கணேசன்.

 “உனக்கு காஃபி போடத் தெரியுமாம்மா?” என்று கேட்டார், கணேசன். ” சமையல் எல்லாமே தெரியும் தாத்தா. அம்மா எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஏதாவது தெரியலேன்னாலும் நீங்க சொல்லித் தருவீங்கல்ல?” என்றாள், ரோஷு. அதிசயித்துப் போனவர் அவளையே வியப்போடு பார்த்தபடி அமர்ந்துபோனார். காஃபியை அவர் வாயில் வைத்து குடிக்க வைத்தாள், அவள். ” அருண் எல்லாம் சொன்னார். தாத்தாவை கவனிச்சுக்கோன்னார். இனிமே நீங்க கோவிலுக்குப் போங்க உங்களுக்குப் பிடித்தபடி இருங்க. வாக்கிங்கெல்லாம் போங்க நானும் உங்ககூட வரேன்” என்றாள் ரோஷு. அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத கணேசனுக்கு ரோஷு ஒரு தேவதைபோலத் தெரிந்தாள், ரோஷு.

இன்று முதல் கணேசன் ரெஸ்ட் எடுக்கப் போறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நன்றி ;மூன்றாம் கோணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 7:17

இன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது … இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவுட்டு வந்து விடுவான் … அவுட்டு வருவதால் என் வாழ்க்கை மாறப்போவதில்லை , ஆனால் அவன்  கொண்டு வரும் மூணு கோடி ரூபாய் என் வாழ்க்கையை மாற்றப் போகிறது … அவன் வருவதற்குள் நீங்கள் என்னை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் …

வாழ்க்கைக்கு எது முக்கியம் ?  மன நிம்மதி , சந்தோசம் , சந்ததி , பதவி , புகழ் என்று எவ்வளவையோ அடுக்கிக்கொண்டே போகலாம் , ஆனால் இவையெல்லாம் பணத்திற்கு முன்னாள் பம்மாத்து என்பது என்னைப் போல வாழ்க்கையில் அடிபட்ட எவனுக்கும் நன்றாகவே தெரியும் … ஆமாம் பணம் மட்டும் தான் எனது கடவுள் , கர்த்தா , குரு எல்லாமே … பணம் இல்லாததால் தான் பெற்றோர்களால் என்னை நினைத்தது போல வளர்க்க முடியவில்லை … அவர்களிடம் பணம் இல்லாததை பற்றி நான் குற்றம் சொல்லவில்லை , ஆனால் அதை அடைவதற்காக அவர்கள் எந்த முயற்சியையும் செய்யாமல் விலங்குகள் போல வாழ்ந்துகொண்டிருந்ததை தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை …

அதனால் தான் எனக்கு விவரம் தெரிந்த வயதுக்கு மேல் அவர்களோடு இருக்க முடியாமல் சென்னைக்கு ஓடி வந்துவிட்டேன் … கெட்டும் பட்டணம் போ என்பார்கள் , நான் பெரியவர்கள் சொன்னதில் செய்தது  இதை மட்டும் தான் … முதலில் ஏதேதோ வேலை செய்து வயிற்றை கழுவிக் கொண்டிருந்த  என் வாழ்க்கை  பால் சேட்டின் நட்பு கிடைத்த பிறகு தான் மாறத்தொடங்கியது … என் போன்ற படிக்காதவர்கள் கூடிய விரைவில் பணம் பார்ப்பதென்பது நடக்காத காரியம் , எனவே என்னைப் பொறுத்தவரை எப்படி பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை , எப்படியோ சம்பாதிக்க வேண்டும் … சேட் மூலமாக இரண்டு மூன்று பொருட்களை கை மாற்றி விட்ட போது நல்ல பணம் கிடைத்தது , கிடைத்த  பணத்தை நண்பர்களுடன் உடனே குடித்தழித்தேன்.

இங்கே நண்பர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது , கடத்தல் தொழிலில் எவனும் எப்பொழுது வேண்டுமானாலும் எதிரியாக மாறலாம் , இருந்தாலும் ஒன்றாக அமர்ந்து குடிக்கும் போது எல்லோரும் சந்தோசமாகவே இருப்போம் … குடிக்கு எவ்வளவோ சைடிஷ் இருந்தாலும் எங்களுக்கு அவுட்டு தான் ஊறுகாய் … அவனுக்கு அவுட்டு என்பது இயற்பெயரா அல்லது யாராவது வைத்த பெயரா என்றெல்லாம் தெரியாது , ஆனால் நாங்கள் அப்படித்தான் கூப்புடுவோம் … ஆறடிக்கு வளர்ந்திருந்தாலும் அவுட்டு அறிவா கிலோ என்ன விலை என்று கேட்பான் , அதனால் தான் சில ரிஸ்கான வேலைகளை அவனிடம் தள்ளி விடுவோம் , எங்களைப் பொறுத்தவரை அவுட்டு ஒரு பலிகடா … இங்கே பாவ , புண்ணியமெல்லாம் பார்த்தால் பிழைப்பு நடத்த முடியாது …

அவுட்டு தான் இப்படி ஆனால் அவன் மனைவி அழகி , பேரழகி … ஒரு முறை நல்ல போதையில் பெண்களை பற்றிய பேச்சு வந்தது , நானும் சேட்டும் போதையில் இருக்கும் போது மட்டும் தான் பெண்களை பற்றி பேசுவோம் , அது என்னவோ அந்த வஸ்து உள்ளே போய் விட்டாலே காம வெறி தலைக்கு ஏறி விடுகிறது…சேட் வழக்கமாக கூட்டிச் செல்லும் பெண்ணிடம் போக வேண்டாமென்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன் , என்னமோ சலித்து விட்டது , ஆனால் சேட்டுக்கு மட்டும் அவள் நடிகை என்பதாலோ என்னமோ அலுக்கவே இல்லை … இந்த முறை நான் பிடிவாதமாக மறுத்துவிட்டேன் , வேறு எங்காவது போகலாம் என்று முடிவு செய்த பின் சேட் என்னை ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்றான் … நான் அவளை பார்த்தவுடன் அசந்துவிட்டேன் , அவள் அவ்வளவு அழகு … ஆனால் அவள் அவுட்டுவின் மனைவி என்று தெரியவந்ததும்  கொஞ்சம் அதிர்ச்சி , சேட் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாத போதே அவன் அடிக்கடி இங்கே வருகிறான் என்று தெரிந்து கொண்டேன் …

” ஒன்னும் யோசிக்காத  இதெல்லாம் அவுட்டுக்கு தெரியாது , சேட்டுக்கு அப்புறம் நீ தான்” அவள் எத்தனை பேரிடம் இப்படி சொல்லியிருப்பாள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு எனக்கு அப்போது நேரமில்லாததால் நான் வந்த வேலையில் இறங்கினேன் … எல்லாம் முடிந்த பிறகு சேட்டுடன் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவுட்டு வந்தான் .. ” எப்போ வந்தீங்க சார் , சொல்லியிருந்தா நானே உங்கள கூட்டியாந்திருப்பேனே”  அவன் சொன்ன போது என் கண்கள் அவனை நேரடியாக பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டது … அங்கிருந்து இருவரும் திரும்பி வரும் வழியில் தான் சேட் என்னிடம் அந்த விஷயத்தை சொன்னான் …

இது வரை சின்ன சின்ன சரக்குகளை கை மாற்றி விட்டு சில லட்சங்களை பார்த்த எங்களுக்கு இது போட்டியில் கலந்து கொள்ளாமலேயே கைகளில் கிடைக்கப் போகும் மூணு கோடி … இந்த முறை கடத்தப் போவது விலையுயர்ந்த போதை வஸ்து , மாட்டினால் தொலைந்தோம் , அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது … ஆனாலும் இந்த வாய்ப்பை விட எங்களுக்கு மனதில்லை என்பதால் ரிஸ்க் எடுக்க முடிவெடுத்தோம் … வழக்கம் போல அவுட்டுவை வைத்து பொருளை கை மாற்றிவிடலாம் , அவன் மாட்டினாலும்  எங்களுக்கு பிரச்சனையில்லை , அவன் உயிரே போனாலும் எங்களை காட்டிக் கொடுக்க மாட்டான் … இருவரும் முடிவு செய்த பின் அவுட்டு வீட்டிற்கு திரும்பி சென்றோம் …

வழக்கம் போல சில ஆயிரங்களை கொடுத்து விஷயத்தை சாதித்துக் கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு அவுட்டுவின் மனைவி பெரிய ஷாக் கொடுத்தாள்.. “உயிரை பணயம் வச்சு உங்களுக்காக வேல செய்யுராறு , அதான் இந்த தடவ வரதுல சரி  பங்கு கொடுத்தீங்கன்னா , சொந்த ஊருக்கே போயி செட்டிலாயிடலாம்னு இருக்கோம் ” அவள் தீர்க்கமாய் சொன்னதிலிருந்தே அவுட்டு மாதிரியில்லை என்று தெளிவாக தெரிந்தது … ” நீ நினைக்கிற மாதிரியெல்லாம் பெருசா ஒண்ணுமில்ல, வேணுமின்னா எப்பவும் தரத விட ஜாஸ்தியா தரோம் ”  சேட் சொன்னவுடன்  , அவள் கோணலாய் சிரித்தபடி” என்ன மூணு கோடியா ” என்று கேட்ட போதே அவள் நிறைய விஷயம் தெரிந்தவள் என்பது எங்களுக்கு தெளிவாக புரிந்தது … நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் … எங்கள் இருவருக்குள்ளும் ஒரே எண்ணம ஓடவே நாங்கள் அவள் சொன்னபடி பங்கை இரண்டுக்கு பதில் மூன்றாய் போட முடிவெடுத்தோம் … இதில் எதிலுமே சம்பந்தம் இல்லாதது போல் அவுட்டு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் … அவனுக்கு இந்த பணம் ரொம்ப அதிகம் தான் என்றாலும் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை …

” மூணு கோடி கைக்கு வந்ததும் முதல்ல அவுட்டையும் , அவளையும் போட்டுரனும் ” நான் மனதில் நினைத்ததையே சேட்டும் சொன்னான் … நான் ஆமாம் என்பது போல தலையாட்டினேன் , அந்த நொடி சேட்டையும் போட்டுவிட்டால் மூணு கோடியும் எனக்கே என்று என் மனம் நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது … இதோ நினைத்தது படியே அவுட்டு வேலையை முடித்துக்கொண்டு பணத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்று சேட் செல்போனில் சொன்ன போதே என் திட்டத்தை மனதிற்குள் நான் பட்டை தீட்டிக் கொண்டிருந்தேன் … சந்தோசமோ , துக்கமோ சேட் சரக்கடிக்காமல் இருக்க மாட்டான் , நான் ஏற்கனவே திட்டமிட்டபடி சரக்குடன் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டால் சேட் மூர்ச்சையாகி விடுவான் , அவுட்டு சரக்கடிக்க மாட்டான் , எனவே அவன் வந்தவுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கைத்துப்பாக்கியை  வைத்தே அவன் கதையை  முடித்து விடலாம் …

எங்கள் திட்டப்படி சேட் அவள் மனைவியை இந்நேரம் முடித்திருப்பான் , நினைக்கும் போதே என் செல்போன் சினுங்கியது …  ” சொல்லு சேட் ” அவன் விஷயத்தை சொன்னவுடன் என் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது … ” சரி நான் அவ பாடிய வர வழில டிஷ்போஸ் பண்ணிடுறேன் , நீ நம்ம அயிட்டத்த வாங்கி வை ” அவன் அயிட்டமும் அவனுக்காக நான் வாங்கிய அயிட்டமும் தயாராகவே இருந்தன …
” வா சேட் எல்லாம் ரெடியா இருக்கு ” போனை வைத்துவிட்டு ஒரு முழு சிகரெட்டை முழுவதுமாய் புகைத்தேன் … சேட் வந்தவுடன் கத்தியின்றி ரத்தமின்றி அவன் கதை முடிந்தது , வாயெல்லாம் நுரையுடன் ஒரு பக்கம்  கோணிக் கொண்டே அறைக்குள் செத்துக் கிடந்தவனை வெறித்துப் பார்த்தபடியே இரண்டு சிப் அடித்தேன் …

எனக்கு புது வாழ்க்கையை காட்டியவனின் வாழ்க்கையை முடித்துவிட்டேன் , லேசாக ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாக்க அதை தவிர்ப்பதற்காக டி.வி யை ஆன் செய்தேன் … வெஸ்டர்ன் ஆல்பத்திலிருந்து சுட்ட பாடலுக்கு தமிழ் பட ஹீரோயின் இடுப்பை ஆட்டிக் கொண்டிருந்தாள் … டி.வி சத்தத்தை மீறி கதவை தட்டும் சத்தம்  கேட்கும் போதே வந்தது அவுட்டு தான் என்று எனக்கு விளங்கியது … ” இருடா வரேன் ” சேட் செத்துக் கிடந்த அறையை சாத்தி விட்டு கதவை நோக்கி நான் போவதற்கு முன் டேபிளின் மேல்    துப்பாக்கி  இருப்பதை ஒரு முறை உறுதி செய்து கொண்டேன் … ” வாடா ஏதாவது சாபுட்றையா ” வேகமாக மண்டையை ஆட்டினான் .. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு சேட்டுக்காக வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை அவனிடம் கொடுத்தேன் …

சேட் தான் சாப்பிடமாலேயே போய் சேர்ந்து விட்டான் , இவனாவது சாபிடட்டுமே என்ற எண்ணத்தை விட அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் பணத்தை எண்ணி முடித்து விடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது … பணத்தை பல தடவை மோர்ந்து பார்த்துக் கொண்டேன் , அதை அழகாக பைக்குள் அடுக்கி வைத்து விட்டு கைகளில் உறைகளை மாட்டிக் கொண்டேன் , அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் … வாசல் கதவு தாழ்ப்பாள் சரியாக  போட்டிருக்கிறதா என்பதை ஒரு முறை சரி பார்த்து விட்டு திரும்பிய போது தான் கூர்மையான ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் வேகமாக இறங்கியது …

கைகளில் கத்தியுடன் அவுட்டு நின்று கொண்டிருந்தான் , அவன் கழுத்தை நெறிக்க நான் நினைப்பதற்குள் மறு முறை முன்பை விட வேகமாக கத்தி என் வயிற்றுக்குள் இறங்கியது … மயக்கத்தில் கண்கள்  சொருக அவன் மேல் விழுந்த என்னை தள்ளி  விட்டு விட்டு  அவுட்டு பணம் இருந்த அறையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தான் … கண்கள் சொருகி செத்துக் கிடந்த சேட் ஒரு முறை என் நி…னை..வு…க்..கு  வ..ந்….தா …

நன்றி மூன்றாம் கோணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 May 2016 - 7:19

தேனிலவு – சிறுகதை – சபீனா
---------

மெட்ராஸ் நகரத்தின் பரபரப்பான வேப்பேரி.தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் அமைத்து கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு .அது ஒரு சிறிய பிளாட்.ஒரே ஒரு படுக்கை அறையும்,சிறிய  ஹாலும்,மிக சிறிய கிச்சென்னும் உள்ள 10 X 10  வீடு .இது தான் நம் கதை களம் .

அங்கே குடி இருக்கும் சுந்தரம்பாள்,ராஜரெத்னம் தம்பதியர்,இவர்களின் பிள்ளைகள்  பிரேம்,பிரியா ….

இவர்களுடன் அந்த வீட்டு  மருமகள் சத்யா…… அவளை பற்றி சொல்லாமல் கதைக்குள் நுழைய முடியாது .அவள் பெற்றோர் வரிசையாக மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் ஆசை பட்டு,எட்டு வருடம் கழித்து தவம் இருந்து  பெற்ற பிள்ளை.எட்டு ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே பெண் வாரிசு.நடுத்தர வர்க்கம்தான் என்றாலும் இப்போது மூன்று அண்ணன்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் இவள் கேட்டு யாரும் இதுவரை எதையும் இல்லை என்று சொன்னதில்லை . அவள்  அண்ணிகளுக்கும் இவளையும்,இவள் செய்யும் குறும்புகளையும் ரொம்ப  பிடிக்கும். இவள் வயதில் சிறியவள் என்பதாலும், வீட்டிலேயே முதன்முதலில் மேற்படிப்பு படிப்பவள் என்பதாலும் , ஹாஸ்டெலிலேயே இருந்து விட்டு விடுமுறைக்கு மட்டுமே வீட்டுக்கு  வருவதாலும் எல்லாருக்குமே  அத்தனை செல்லம் .

இனி கதைக்குள்  போவோமா ?

அன்று காலை முதலே ,சென்னையின் பரபரப்புக்கு சற்றும் குறையாத மாமியாரின் பரபரப்பை பார்த்து கொண்டு தான் இருந்தாள் சத்யா .மாமனாரிடம் ” என்னங்க! பொண்ணு வர போறா,மச மசனு நின்னுகிட்டு  இருக்கிங்க.போய் மல்லி பூ வாங்கிட்டு வந்து பிரிட்ஜெல போடுங்க , வித்து முடிச்சிட்டு கிளம்பிற போறா பூக்காரம்மா …..”

அடுத்து சமையலறையிலிருந்து  குரல் கேட்டது, ” தோ பாரு….இப்போ தானே சொல்லிட்டு போனேன், வாழக்கா பஜ்ஜிக்கு மெலிசா சீவுனு .மாப்பிள்ளைக்கு மொத்தைமொத்தையா இருந்தா  பிடிக்காதாம், அப்படியே முடிச்சிட்டு  பால்  கொழுக்கட்டை பண்ணிடு  , பிரியா சொன்னா…அவருக்கு ரொம்ப  பிடிக்கும்னு .”

டிவி பார்ப்பதும்  , விரிப்பை சரி செய்வதும் , கிச்சென் உள்ளே போவதும் வருவதுமா இருந்தார். அவரால் ஒரு இடத்தில்  உக்கார முடியவில்லை .

சற்று  நேரம் கழித்து ” அம்மா முடுச்சிட்டேன், நைட்டுக்கு சப்பாத்தி குருமாவாம்மா ? என்ன பண்ணட்டும் ? வேலைக்காரி. 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம், சாயங்காலம்   காபி டிபன் மட்டும் முடுச்சிட்டு, உடனே கிளம்பி சினிமாக்கு போய்டுவாங்க, நைட்டுக்கு வெளியே பாத்துக்குறோம்னுட்டாங்க. நீ எப்பவும் போல இட்லி ஊத்திட்டு  “ என்று சொல்லவும், மாமனார் பூ வங்கி கொண்டு உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.

” வந்துட்டிங்களா ! மாப்பிளைக்கு இந்த மாதம்  தான் பிறந்த நாளாம்.பிரியா  சொன்னா. புரஷவாக்கம் மதர்ஷா  போய் ஒரு சூட் எடுக்கணும் . நம்ப வீட்டு மாப்பிள்ளை. நம்ப பொண்ணே அசந்து போற மாதிரி எடுக்கணும் , வெல எவ்ளோனாலும் பரவாயில்லை . அப்படியே இந்த ப்ரியாவுக்கும் இரண்டு ஜீன் பான்ட் , இரண்டு  மிடி ஸ்கர்ட்டும் , அதுக்கு டாப் சேர்த்து  எடுக்கணும்”.

அவர் திரு திரு என்று விழித்த படியே….. “அதெல்லாம் அவ போடுவாளா ? அதுவும் இல்லாம  இப்போ தானே கல்யாணம் எடுத்தோம் ?   திரும்பவும் எதுக்கு  இப்போ இவ்வளோ செலவு ? புரிஞ்சு தான் பேசுறியா ?”

அதற்கு அவள் , “ஏன் சொல்றேன்னா மாப்பிள்ளைக்கு மாடர்ன் டிரஸ் தான் புடுச்சி இருக்காம். உங்க பொண்ணு தான் சொன்னா. அதுவும் இல்லாம அடுத்த வாரத்துல அவங்க கிளம்பி ஹனி மூன் போறங்களாம் ஊட்டிக்கு சின்ன சிறுசுங்க.நாலு இடம் போவாங்க ,வருவாங்க.ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி அங்க இங்கனு.இதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு சகஜம் தானே  . இப்போ சந்தோசமா இருக்காம எப்போ சந்தோசமா இருக்க போறாங்க ? இதுக்கு போயி கணக்கு பாத்துட்டு ….நம்ப பொண்ணுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம். நமக்கு இருக்கறதோ ஒரே பொண்ணு. போய்ட்டு  போகுது விடுங்க . ஒவ்வொரு மாசமும் ஒரொரு செலவு வந்து கிட்டு தானே இருக்கு. இதுல   மிச்சம் பிடித்து தான் கோடிஸ்வரர் ஆக போறோமா ? அவளுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம் சொல்லுங்க .அவ சந்தோசம் தான் நமக்கு  முக்கியம் “ என முடித்தாள்.

“நீ சொன்னா  எல்லாம் சரியாய் தான்  இருக்கும் ” என்று ஆட்டோ  பிடிக்க சென்றார்  ராஜரெத்னம் .

பார்த்துகொண்டு இருந்தசத்யாவுக்கு  சிரிப்பதா ? அழுவதா என்றே புரியவில்லை.

அவள் தன் ஐந்து மாத குழந்தையை எடுத்து கொண்டு குளிப்பாட்ட சென்றாள்.

குளிப்பாட்ட குளிப்பாட்ட  நினைவுகள் பின் சென்றன. 

மூன்று  வருடங்களுக்கு முன் ,

சத்யாவுக்கு நேற்று  தான் திருமணம் முடிந்து இருந்தது.  புதுத் தாலியின் பொலிவோடு சேர்த்து முகமும் மின்னியது .மகிழ்ச்சியின் மிச்சங்கள் முகத்தில் ஒட்டி கொண்டு இருந்தது.முந்தைய இரவில் கணவன் “ மிடி,டாப் ல குஷ்பு மாத்ரி இருக்கே …. ” என காதோரத்தில் கிசுகிசுத்ததை எண்ணி சிரித்த படியே வெளியே வந்தவளை மாமியார் அழைத்தார்.” சத்யா வா இங்கே.நேத்து ராத்திரி புடைவைல தானே உள்ள போனே.இது என்ன …கந்தர கோலம் ….தலையணைக்கு  உறை போட்டு விட்ட மாதிரி ….” திடுக்கிட்டாள் சத்யா.”இல்ல அத்தே. இதே  போட்டு பழகிட்டேனா…….” 

“என்னத்த பழக்கமோ  போ, அதெல்லாம் உங்க வீட்டோடு விட்டுடு .உங்க அம்மா இதெல்லாம் சொல்லி குடுத்து  வளர்கல  போலிருக்கு . இந்த காலனில எங்களுக்குன்னு ஒரு பேரு இருக்கு.சரி .. சரி.. போய் துணிய  துவச்சி போடு…. “  

ஒன்றும்   புரியவில்லை   சத்யாவுக்கு 

கல்யாணம் ஆனா மறு நாளேவா ? . மீண்டும்  குரல் கேட்டது ” உங்க புருஷன் துணி தான் , என்ன யோசனை ,வாங்க  இங்க  ” இது  நாத்தனார் பிரியாவின் குரல்  .  துணி துவைத்தே  பழக்கமில்லை. இது வரை  காலேஜ் , ஹாஸ்டல்  , லாண்டரி என்று இருந்தவள் .தான் தன்    வீட்டில் செல்ல மகள்  என்றலும் , இனி வேலை செய்து தானே ஆக வேண்டும் மணமாகி விட்டதல்லவா என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு துவைக்க   ஆரம்பித்தாள்.  மொட்டை மாடியில் துணி காய போட போனவளுக்கு உச்சி  வெயில் சூடு   மண்டையிலும் குதிகாலிலும் தாக்கியது . அதே நேரத்தில்  மனதுக்குள் சூடாய் ஒரு கேள்வி. ”  மொத நாளேவா இப்படி   சொல்வாங்க ? “.

திருமணத்துக்கு  ஊரிலிருந்து வந்து இருந்த நெருங்கிய உறவினர் கூட்டம்  இன்னும் வீட்டில் மிச்சமிருந்தது . அதில்  ஒரு புது மண தம்பதியர் . இவர்களுக்கு ஒரு  வாரத்துக்கு முன் தான் அவர்களுக்கு திருமணம் ஆனதாம். சுந்தரம்பாளின் அக்கா மகள் .

தன் அக்கா மகளையும் , மருமகனையும்  உள்ளங்கையில் வைத்து தாங்கினார் சுந்தரம்பாள் . புது துணி என்ன ? புது கொலுசு என்ன ? என சீராட்டி பாராட்டியதோடு நில்லாமல் ,ஒரு படி மேலே போய் ஒரு வாடகை டாக்ஸியை  புக் செய்து ,அவர்களை மகாபலிபுரம் அனுப்பி வைத்தாள். கடைசி நேரம் வரை காத்து  இருந்தாள் சத்யா, நம்மையும் அவர்களோடு சேர்த்து கிளம்ப சொல்வார்களோ ? என்று.

ஆனால் அந்த  வீட்டில் யாரும் இவளை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.ஏன்?அவள் கணவனே கூட அதை பெரிதாய் எடுத்து கொள்ளவில்லை.ஆனால் இவளுக்கு மட்டும் ஏனோ ஏமாற்றமாய் இருந்தது.”ஏன் நாங்க எல்லாம் புதுசா கல்யாணம் ஆனவங்க இல்லையோ ? இல்ல நாங்க ஏறினா அம்பசிடர் நகராதா ? பொறுக்க மாட்டாமல், கணவனிடம் கேட்டே விட்டாள் .

“யேய் ! என்ன நீ?அவங்க எல்லாம் எப்போவாவது ஊருலருந்து வீட்டு விசேஷத்துக்கு வரவங்க”,நம்ப அப்படியா ? இங்க,இதே மெட்ராஸ்ல தான் இருக்க போறோம் , மகாபலிபுரம் எங்கயும் ஓடிடாது . அப்பறமா பாத்துக்கலாம்” என்றான் பிரேம் .

அன்றே தானா வர வேண்டும்  அந்த மூன்று நாட்கள்   .ஒரே வயிற்று வலி.  ஊர் சுற்றிய கூட்டம் வேறு வந்து விட்டிருந்தது.

மாமியார் ” சத்யா . எல்லாருக்கும் தோசை ஊற்று ” . ” அத்தே ! “ எனக்கு கொஞ்சம் முடியல”என்றாள். பதிலில்   தேள்  கொட்டியது .

“ புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு  எல்லாம் இதே வேலை . ஏதோ ஒரு சாக்கு  போக்கு  சொல்லி தட்டி கழிக்கணும். புள்ளைய பெத்துட்டா  மட்டும்  போதாது , நல்ல பழக்க வழக்கம் சொல்லி  குடுத்து  வளக்கணும் ,  எப்படியோ எல்லோருமா  சேந்து  நம்ப தலைல கட்டிடாங்க ” என்றாள். 

அதற்கு மேல் ஏதும்தோன்றாது , உடனே  எல்லாருக்கும் தோசை ஊத்த  ஆரம்பித்தாள் .ஊத்தும் போது நிற்க  கூட  முடியவில்லை.   முடித்து விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தாள்.

பெட் ரூமில் ஒரே ஒரு கட்டிலுக்கு  மட்டுமே இடம் இருக்கும். அதை தான் இவர்களுக்கு தாராளமாக விட்டு தந்து இருந்தார்கள் அந்த வீட்டு  பெரியவர்கள். ஆனாலும் அனைவருடைய படுக்கை விரிப்பு, தலையணை எல்லாமே அந்த கட்டிலில் தான் இருக்கும். அவர்கள் அதை எடுத்து சென்றால் தான் , இவர்கள் படுக்க இடம் கிடைக்கும். வெளியே புது மாப்பிளை பெண்ணோடு கும்பலே கேலியும் கிண்டலுமாய்  சிரித்து விளையாடியபடி   இருந்தது. இப்போது எல்லாம்  படுப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அந்த கட்டிலில்  சாய்ந்து அமர்ந்து  கொண்டாள் சத்யா.

பிரேமுக்கு   என்ன தோன்றியதோ தெரியவில்லை, “ பிரியா ! அண்ணிக்கு படுக்கணும் ….பெட்ஷீட் எடுத்துட்டு போயேன்  . பதில் வந்தது . ” உங்க பொண்டாட்டி அவசரத்துக்கு எல்லாம் நாங்க படுக்க முடியாது, எங்களுக்கு எப்போ படுக்கணுமோ அப்போ தான் எடுக்க முடியும் “  சுரீர் என்ற பதிலில் சுருண்டு தான் போனாள்.  அந்த வீட்டு  பெரியவர்கள்  யாரும்  அதை கண்டு கொண்டது போல தெரியவில்லை.ஒருவழியாக ஓய்த்து கொடுத்தார்கள்  . படுத்த படியே ” யாருக்கு அவசரம் ? எதற்கு அவசரம் ? ” என்று மனதுக்குள் பொருமி கொண்டு இருந்தவளிடம் கணவன் ,

” செல்ல குட்டி! மூட் அவுட் ஆ? என்றான்.” இல்லையே “ என்றாள் .”  உங்க வீடு சிஸ்டம் வேற.இங்க வேற.அவங்க அப்படி தான் சொல்லி கிட்டு இருப்பாங்க . நீ ஒண்ணும் கண்டுக்காதே. போக போக எல்லாம் சரியாயிடும்.அத விடு . இப்போ உனக்கு ஒரு குட் நியூஸ்.நாளை மறுநாள் நாம கொடைக்கானல் போறோம் . அங்க போய்….தனியா…ஜாலியா….எந்த டிஸ்டர்பும் இல்லாம……….ஏதேதோ பேசிய படியே , நெருங்கி வந்தான் . காது கூசியது   அவன் பேச்சில்லா ? இல்லை மூச்சிலா? கட்டி அணைத்த போது கண் சொருகி  போனாள் . கொடைக்கானல் வந்தது . படகுக் குழாம். கணவனோடு ஒரே ஷால் போர்த்தியபடி இவள். கையில் பாப் கான். எடுத்து இவள் ஊட்ட…அப்படியே நடக்கையில் ஐஸ் கிரீம் வண்டிக்காரன்…. மணி சத்தம். ….

சத்தம் கேட்டது, மாமியார் சத்தம், “சத்யா …சத்யா ….பால்காரன் பெல் அடிக்குறது காதுல விழல ஐந்து மணிக்கு மேல நல்ல குடும்பத்து பொண்ணு தூங்குவளா?…’” துள்ளி எழும்பியவளுக்கோ தூக்கி வாரி போட்டது ” ச்சே ..கனவா ?”  ….கதவைத் திறந்து பால் வாங்கி வைத்து விட்டு குளிக்க போனாள். விருந்தாளிகள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தார்கள் .அவர்கள் போனதும் , பிரேம் சமையலறையில்   தன் அம்மாவிடம்  கெஞ்சுவது  கேட்டது

” அம்மா ப்ளீஸ்  மா. நான்  அவ கிட்டே சொல்லிட்டேனே , ஹனி  மூன் கூட்டி கிட்டு போறேன்னு  நாலு நாள்  இல்லைல்ல…..மூணு நாள் மா . போய்ட்டு வந்துடுறோம். ” .அம்மாவிடமிருந்து பதில் வந்தது “ ஏன்டா   சொன்னா புரிஞ்சிக்க  மாட்டியா ? நம்ப குடும்பத்துல  இது எல்லாம் பழக்கம் கிடையாது. அதும் இல்லாம இப்போ  தான்   இவ்ளோ செலவு செஞ்சி கல்யாணம் எடுத்து இருக்கு . இப்போ எதுக்கு இது வேற அனாவசிய செலவு. நானும் உங்க அப்பாவும் இப்படி எல்லாமா போனோம் ? இன்னிக்கு நாங்க நல்ல இல்ல ?. அவனோ விடாது ” அம்மா உங்க காலம் வேற, இதெல்லாம் ஒரு செலவா ? ” என …” ஏன்டா , நீ சம்பாதிச்சு  குடுக்குற  தைரியத்துல அம்மாவை எதிர்த்து   பேசுறியா ? நீ குடுத்த பணம் மொத்தமும் கல்யாண செலவுக்கே சரியாய் போச்சி , இனி நீ அடுத்த மாசம் சம்பளம் வாங்கின தான் …. .இதுல ஹனி மூன் ….அது …இது.…னுகிட்டு ….  எரிச்சலான பிரேம் ,”சரி…சரி…  நான் எங்கயும் போல சரியா ? என்றபடி விலகினான்.

முகம் வாடி போனது  பிரேமுக்கு .குளியலறையில் கேட்டு கொண்டு இருந்த சத்யாவுக்கு கண்ணீர் முட்டியது,அழுது தீர்த்தாள் .வெளியே வந்தவள்  கணவன் முகத்தை பார்க்க தவறவில்லை . பாவமாக இருந்தது.

இன்னொரு நாள்  திடீரென ,வெளியே போய் வந்த  பிரேம் அழைத்தான் “சத்யா,கிளம்பு சிக்கிரம் ….காமராஜ் ஹால்ல, மியூசிக் அகெடமி ப்ரோக்ராம் . என்  பிரண்ட் டிக்கெட் குடுத்தான் , என்றவன் அம்மாவிடம் போய் ” அம்மா , ஆட்டோவுக்கு பணம் குடும்மா” . ” ஏன்டா , இங்க இருக்க தேனம் பேட்டைக்கு எதுக்கு ஆட்டோ ? அப்படியே பஸ் புடுச்சா போய் இறங்கிடலாம். “ என அதற்க்கு மேல்  பேசாமல் , ரெடி ஆகி வந்த சத்யாவை கூட்டி  கொண்டு , பஸ்க்கு காத்திருந்து, ஸ்ட்ரைட் பஸ் கிடைக்கததால் , இரண்டு பஸ் மாறி, ஒரு வழியா போய் சேர்ந்த போது ப்ரோக்ராம் முடிவுக்கு வந்து இருந்தது . மீண்டும்   அதே பஸ் பயணம் செய்து வீடு திரும்பினர்.

இப்படியே நாட்கள்  நகர்ந்தன ……

அவளுக்கு பிறந்த நாள் வந்தது . பச்சை பட்டு  சேலை   அவள் அம்மா எடுத்து கொடுத்தது புதிதாய் இருந்தது . ஆனால் அதற்க்கு மாட்சிங்  ப்ளவுஸ் எடுத்து தைக்க  டைம்  இல்லாமல் வந்து விட்டாள். கணவனை அழைத்தாள் ,” பிரேம் ,  பர்த் டேக்கு புது புடவை இருக்கு , ஆனா மாட்சிங்  ப்ளவுஸ் தான் இல்லை , போய் எடுக்கலாமா ?.” ” ஐயோ, என் கிட்ட காசு இல்ல அம்மா கிட்ட  போய் வாங்கிட்டு வரேன் ” என்றான் .

அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது , இந்த காலத்தில் இப்படி ஒரு மகனா ? தான் சம்பாதிக்கும் மொத்த  பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விட்டு, சின்ன சின்ன செலவுகளுக்கும் அம்மாவின் கையை எதிர் பார்க்கும் இவன் நல்ல மகன் என்று பூரித்து போவதா ? இல்லை இப்படி ஒன்றோனுற்றுக்கும் அம்மாவிடம் கேட்டு அந்தம்மா முடியாது என மறுத்ததும் என்னிடம் வந்து தலை குனித்து போகிறானே என்று வேதனை படுவதா என்று புரியவில்லை. எதிர் பார்த்த படியே,அவன் அம்மாவின் பதில் கேட்டது ” ஏன்டா ! கல்யாணமாகி புருஷன் வீட்டுக்கு வர பொண்ணு.தனக்கு தேவையான ப்ளவுஸ் கூடவா எடுத்து வர மாட்டா ? இது எல்லாம் கூடவா இங்க வந்து எடுத்து தைப்பாங்க ? ஏற்கனவே கல்யாணத்துக்கு இவளுக்கு  எடுத்த பட்டு தான் வில ஜாஸ்தி , பத்தாததுக்கு நிச்சய பட்டு வேற …..என்னமோ போ ” என்றது கேட்டது. 

அதற்கு மேல் அந்த ப்ளவுஸ் தேவையே இல்லை என்று தோன்றியது “ ஏங்க  ! ப்ளவுஸ் கிடைச்சிருச்சி “என்றாள்.அவள்  கையில் கருப்பு ப்ளவுஸ். எல்லாவற்றுக்கும் மேட்ச் ஆகுமே.

பிறந்த நாளுக்கு  முந்தைய நாள் . அவன் அம்மாவிடம்  கேட்டான். ” அம்மா , நாளைக்கு சத்யா பர்த் டே இல்ல,”பூவெல்லாம் கேட்டு பார் ” படம் போய்ட்டு ஹோட்டெல சாப்டுட்டு வந்துடுறோம் “.

அம்மா சொன்னாள் ” ஹோட்டல் சாப்பாடு எல்லாம்  நல்லது கிடையாது. சூர்யா படம்  தானே.அது பிரியா கூட பாக்கனும்னு சொல்லிட்டு  இருந்தா ,நான் அப்பா கிட்டே சொல்லி எல்லோருக்குமா சேர்த்து டிக்கெட் எடுக்க சொல்றேன் என்றாள். இனி சரிபடாது என்று விட்டுவிட்டான் .

மறுநாள் விடிந்தது . ” ஹாப்பி பர்த் டே செல்ல  குட்டி , சீக்கிரம் கிளம்பு , சினிமா போறோம், மெதுவாக சொன்னான் ” .எழும்பியவளிடம் ” யார் கிட்டவும் சொல்லாதே “. சொல்லாம எப்படி ? அவள் . நான் ஏற்கனவே அம்மா கிட்டே கோயிலுக்கு போறோம்னு சொல்லிட்டேன் . ஒருவழியாக சினிமா தியேட்டர் வந்து சேர்ந்து உட்கார்ந்தால் ,அங்கே படம் பார்க்க விட வில்லை . நொடிக்கு ஒரு தரம் “ போய்டலாமா  ? அம்மா ஏன் லேட்? கோயிலுக்கு போய்ட்டு வர இவ்ளோ  நேரமானு கேப்பாங்க ? ” ..கடைசியில் இடைவேளை வந்ததும் எழுப்பி  கூட்டி  கொண்டு வந்து விட்டன். சத்யாவுக்கு எரிச்சலாக வந்தது .

எதுக்கு என்ன இங்க கூட்டி கொண்டு வந்தீங்க ? நான் நிம்மதியா வீட்டிலேயே  இருந்து இருப்பேனே என்றாள் ….

வாசலில் கார் சத்தம் கேட்டது. பின்னோக்கிய நினைவலையிலிருந்து மீண்ட சத்யா இப்போது குழந்தையை குளிப்பாட்டி முடித்து இருந்தாள்

குழந்தையை எடுத்து  , துடைத்து , பவுடர் பூசும்  போது , பிரியா வந்து விட்டாள் . மாமியாரின் உபசரிப்பு , மகளின் புகுந்த வீட்டு புராணம் , எல்லாம் காதில் விழுந்தது .

இவளும் போய் நலம் விசாரித்தாள். பிரியாவின் கணவன் குழந்தையை வாங்கி கொண்டார்.

பஜ்ஜி , பாயசம் எல்லாம் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டார்கள் சினிமாவுக்கு .போனவர்கள் 11 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள் . இவள் தான் போய் கதவை திறந்து விட்டாள் . இப்போது முறை அவர்களுக்கு . அந்த பெட் ரூம் அவர்களுடையது .அனைவரும் ஹாலில் தான் படுத்திருந்தார்கள்.கதவு திறக்கும் ஓசை கேட்டு எழுந்த குழந்தை அதன் பின் இரவு முழுவதும் தூங்கவும் இல்லை . இவளையும்  தூங்க விடவில்லை.

காலை மணி 9 .30 ஆகி  விட்டது . குழந்தைக்கு மருந்து  கொடுக்க வேண்டும் . மருந்து  பெட் ரூம் ஷெல்பில் இருக்கிறது . கதவு இன்னும் திறந்த பாடில்லை. தட்டவா ? வேணாமா ?  என்று யோசித்தபடி , கதவை நெருங்கியவளுக்கு , தட்டி நிறுத்தியது மாமியாரின் குரல் .

” ஏய் , உனக்கு இங்கிதம் தெரியாதா   ? புதுசா கல்யாணம் ஆனவங்க ? மெதுவா தான் எழும்பி வரட்டுமே ? இங்க என்ன குடியா மூழ்கி போகுது ? எல்லாம் உனக்கு  சொல்லி தரணுமா ? என்று போதிக்க ஆரம்பித்தார் .

அவ்விடம் விட்டு நகர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள் . அவளுக்கு இது ஒன்றும் புதிதல்லவே ?

சிறிது நேரம்  கழித்து, பிரியா ட்ரான்ஸ்பரென்ட் நைட் ட்ரஸில் மொபைலில் யாருக்கோ  வழி சொல்லியபடி  வெளி வர …

அவளை பார்க்க வந்த பிரெண்ட் கைனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள். ” என்னடி பிரியா , எப்படி இருக்கே , கல்யாணத்துக்கு தான் வர முடியல. அதுவும் இல்லாம மேடம் ஹனி  மூன் வேற கிளம்பிட்டு இருக்கீங்க ,  ரொம்ப பிஸி போல  , உன்ன இப்போ விட்டா பிடிக்க முடியாது, பை தி வே இதெல்லாம் நீ போட்டு நான் பாத்ததே இல்லையே , எனி ஹவ் , நல்ல இருக்கு ! கலக்குறே ! என்றாள்

அப்போது தான் வெளியே வந்த மாமியார் “வாம்மா அனிதா! எப்படி இருக்கே ? பிரியா…. ஐயோ என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அனிதா சொன்னது  சரி தான்  ” என்றாள் .

பிரியா ” இது  என்கேஜிமென்ட் முடுச்சிட்டுஅவர் சிங்கபூர் போயிருந்தபோவே எனக்காக  வாங்கி  வச்சி இருந்தாரு “

தலையணைக்கு உறை போட்டு  கொண்டு இருந்த சத்யா நிமிர்ந்து பார்த்தாள்,நைட்டி அழகாக தான் இருந்தது. ஆனால் அத்தனையும் தெரிந்தது. குளித்து விட்டு வந்த பிரேம் குழந்தை விடாமல் அழும் சத்தம் கேட்டு  ,” சத்யா ! குழந்தே ! அழுகுது பாரு, காதுல விழல  ” என்றான் .

சத்யா மனதுக்குள் , குழந்த சத்தமா அழுறதுனால உங்களுக்கு கேட்டது . சத்தமே இல்லாம இங்க நான் ஒருத்தி அழுறது உங்களுக்கு புரியவே இல்லையா ? என்று  நினைத்த படியே ” அது விடிய விடிய அழுது அழுது உயிரை எடுக்குது . நான் என்ன செய்யட்டும் ? ” என்றாள் .

திரும்ப பிரேம் ,” என்ன பொறுப்பில்லாத பதில்!ஒரு நல்ல அம்மாவா  நடந்துக்க முயற்சி பண்ணு ” என்றான்.

” இந்த பதில்  எனக்கு  மட்டும் தானா பிரேம் ? “, நுனி நாக்கு  

 வரை வந்து  விட்ட கேள்வியை கேட்க  நினைத்து கேட்காமலே  மரத்து போன உணர்ச்சிகளுடன் மரமாகி நின்றாள் சத்யா.

..சபீனா ..

நன்றி ;மூன்றாம் கோணம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:23

கார் ஓட்டம் 
------
தம்பி, இது நல்ல விறுத்தம். பாக்கிறதுக்குத் திறமாய் இருக்குது.  இப்பிடி ஒண்டை இந்தப் பக்கத்திலை, நானெண்டால் ஒரு நாளும் காணேல்லை.  இதுக்கு என்ன பேர், தம்பி?'

'இதை வொக்சோல் வெலொக்ஸ் எண்டு சொல்லறது, பெரியையா!'

'நல்ல விசாலமான கார் தான், ஒரு சப்பறம் மாதிரி.  கண்ணைப் பறிச்சுக் கொண்டு மினுங்குது. அதோடை, கதவைத் திறந்த உடனை சடார் எண்டு மூக்குக்கை வந்து அடிக்கிற இந்த வாசனையையும் நான் வேறை ஒரு வண்டிலிலும் காணேல்லைத் தம்பி . . .  அங்கை! ஏதோ தூசி மாதிரி இருக்குது. துடையும்!'

'ஓம் பெரியையா. இதைப் புதிசாய்த் தானே வாங்கின நான்.  அது தான் பளிச்செண்டு மினுங்குது, நல்லாய் மணக்குது.'

'இங்கையும் வைச்சு ஓடுறாங்கள், இரண்டு கசவாரங்கள். முந்தி உனக்கு கார் பழக்க மறுத்த மருதங்குளத்துச் சின்னராசன்ரை ஒசுட்டின் ஏ-போட்டியும், கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை படான் போட்டும், உன்ரை இந்த வொசுக்கோல் காரிட்டைப் பிச்சை எடுக்க வேணும் தம்பி.  உன்ரை இந்தக் கார் எந்த ஊரிலை தம்பி செய்தது?'

'இதுகும் அவையின்ரை போட்டு, ஏ-போட்டி, மொறிசைப் போலை இங்கிலாந்திலை தான், பெரியையா.'

'அதுதானே நானும் பாத்தன். இங்கிலீசக் காறர், அவங்கள் வெள்ளையங்கள் எல்லே. எப்பிடியும் கெட்டிக்காறர் தான்!'

'ஓம் பெரியையா, அவையிட்டை நாங்கள் படிக்கிறதுக்கு எத்தினையோ விசயம் இருக்குது தான். எண்டாலும் நாங்களும் முன்னேறி வாறம் தானே?  நாங்களும் இப்ப இப்ப நல்ல வடிவான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய தார் றோட்டுகள் எல்லாம், கொழும்பிலையும் மற்றஇடங்களிலையும் கட்டுறம் தானே?'

'அது சரி ராசா.  அது தானே உன்னைக் கோபாலுத் தம்பியும் நானும் எஞ்சினியருக்குப் படிக்க வைச்ச நாங்கள், உன்ரை கொம்மா செத்தாப்போலை. உனக்குத் தெரியுமோ தெரியாது, கோபாலு வருத்தமாய் யாழ்ப்பாணம் திரும்பி வர முன்னம், குருநாகல், குளியாப்பிட்டியா, தண்டகமுவவிலை எட்டுக் கடையள் எல்லாம் வித்துப் போட்டுக் கொந்துறாத்து வேலை செய்ததெல்லே, புத்தளம், சிலாபம் பகுதியிலை. அப்ப கோபாலு சந்திச்ச ஆகப் பெரிய உத்தியோகத்தர், ஒரு எஞ்சினியர் தான். அது தான், அவரைப் போலை உன்iயும் படிப்பிக்க வேணுமெண்டு . . . . .   இப்ப சரி. தூசி போட்டுது. '

'ஓம் பெரியையா.  ஐயா செத்து இந்த ஆண்டு பன்ரண்டு வருசமாகுது. உங்கள் இருவருக்கும் பெரிய மாமாவுக்கும், நானும் அண்ணரும் பெரிய கடமைப் பட்டிருக்கிறம். ஓரு நாளும் மறக்க மாட்டம். அதோடை தம்பியன் இன்னும் படிக்கிறான் தானே. அவனும் வளந்து வந்து ஆளானாப் போலை மறக்கான். '

'சீச்சீ. அப்பிடி எல்லாம் சொல்லாதை தம்பி. நாங்கள் என்ன, எங்கடை கடமையைத் தானே செய்தம். நீங்கள் உங்கடை காலத்திலை கலியாணம் செய்து பிள்ளையள் குட்டியள் பெத்து அதுகளைப் படிப்பிச்சுக் கரையேற்ற வேணும்.  அதுதான் உங்கடை கடமை! . . . 

'அதோடை தம்பி, நாங்கள் இண்டைக்கோ இல்லை நாளைக்கோ எண்டு இருக்கிற ஆக்கள். எங்களுக்குச் சன்மானம் ஏன்? ஒண்டுமே திருப்பித்தர வேண்டாம், என்ன! '

'இதைத் தான் மாமாவும் சொல்லுறார் பெரியையா. தனக்கும் ஒரு சதமேனும் தர வேண்டாமாம். அது சரி, நாளைக்கு ஒருக்கால் யாழ்ப்பாணம் போட்டுவருவமே, என்ரை புதுக் காரிலை? எனக்கும் கச்சேரியிலை ஒரு சின்ன வேலை இருக்குது. அதோடை, முந்தநாள் நான் கொழும்பிலை இருந்து வரையுக்கை, உங்களைப் பக்கத்திலை முன்னுக்கு வைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கும், பிறகு சாவச்செரிக்கும் ஓடித் திரிய வேணும் எண்ட ஆசையோடை தான் வந்தநான்.  நீங்கள் தானே முதலிலை எனக்குக் கார் ஓடப் பழக்குவிச்சுத் தர இஞ்சை எத்தினையோ தரம் தெண்டிச்சனியள், பெரியையா? '   

(அடுத்த நாள் காலை பத்து மணிக்குப் பெறாமகன் கால்சட்டை சேட்டுடனும், பெரியையா புது வேட்டி உடுத்துச் சால்வையால் உடம்பைப் போர்த்திக் கொண்டும் இன்னுமொரு துண்டால் ஒரு தலைப்பாகை கட்டிக் கொண்டும், கைதடி நுணாவிலிலிருந்து கதைத்துக் கதைத்துக் கொண்டே காரில் கைதடியையும், செம்மணியையும் தாண்டி யாழ்ப்பாணம் செல்கின்றனர்.) 

'பெரியையா, பயமில்லாமல் வசதியாய் இருங்கோ. நான் உங்கடை பக்கத்தின் கதவைச்; சாத்திச் சிக்காராய்ப் பூட்டியும் விட்டிருக்கிறன். '

'எனக்கென்ன பயம் தம்பி, உன்னோடை வாறத்துக்கு?  நீர் கொழும்பிலை முறையாய்ப் பழகி லைசென்சும் எடுத்ததெண்டு சொன்னநீர் தானே? இங்கை தான் அந்த இரண்டு அறுவான்கள் கதிரவேலனும் சின்னராசனும் உனக்குக் கார் பழக்காமல் எத்தினை சாட்டுச் சொன்னவங்கள். போன வருசத்துக்கு முந்தின வருசம், நீர் படிப்பு முடிக்க முந்தி, நான் அவங்களை எவ்வளவு மண்டாடிக் கேட்டநான். '

'அதுகள் எல்லாம் இப்ப ஏன் பெரியையா? அவைக்கும் வேறை பிரச்சினையள் எத்தினை இருந்து இருக்கும். நீங்கள் இப்ப வடிவாய் இருங்கோ, அக்கம் பக்கத்திலை கையை வைச்சுக் கொண்டு. '

'நான் வலு சோக்காய் இருக்கிறன், தம்பி. நீர் முன்னுக்குப் பாத்து ஓடும்.  அங்கை லொறி ஒண்டு வருகுது. அவங்கள் கொழும்புக்குப் போறவங்கள். வெங்காயமும் மிளகாயும், சில வேளை யாழ்ப்பாணச் சுறுட்டும் ஏத்திக் கொண்டு அந்தரத்திலை, அரைக்கரைவாசி நித்திரைத் தூக்கத்திலை, கண்ணும் மண்ணும்; பாராமல் சைட்டும் தராமல் அமத்திக் கொண்டு போறவங்கள். எங்கடை இந்த றோட்டும் அவ்வளவு அகலமில்லைத் தானே! '
'ஓம், பெரியையா. கொழும்பு-காலி றோட்டு, கொழும்பு-கண்டி றோட்டுகளைப் போலை இது அகலம் இல்லை. தமிழரின்ரை யாழ்ப்பாணம்-கண்டி றோட்டுத் தானே எண்டாக்கும்!                           

'அதோடை, றோட்டை அகலமாக்கிறது எண்டால் அக்கம் பக்கத்திலை இருக்கிற காணியளை அரசாங்கம் வாங்க வேணும். பல இடங்களிலை பாருங்கோ கல் வீடுகள் வரிசையிலை றோட்டுக் கரையிலை கட்டியிருக்கினம். அதோடை எங்கடை ஆக்கள் சுயநலக் காறர் தானே. அதிலையும் சிலர் பிரக்கிராசிமார்.  தங்கடை காணியளை விட்டுக் குடுப்பினமே? எதுக்கும் நான் வலு கவனமாய்ப் பாத்து, மெல்ல ஓடுறன், பெரியையா. '

'நீ சொல்லுறது சரிதான் தம்பி. இஞ்சை, ஒருக்கால் அங்கை அதிலை பார், இடது பக்க வேலியை. அந்தப் பூவரச மரம் ஞாபகமாய் இருக்குதே? . . . 'பத்தோ பன்ரண்டு வருசங்களுக்கு முன்னை, அப்ப நீ சாவச்செரியிலை இங்கிலீசு படிக்கேக்கை, ஒருநாள் என்ன நடந்ததெண்டு ஞாபகமே? '

'அதையும் நான் மறப்பனே பெரியையா, நீங்கள் மறந்தாலும்? நீங்கள் எனக்குச் சைக்கிள் ஓடப் பழக்கேக்கை விசையாய்த் தள்ளி விட்டியள். நானும் உழக்கத் துவங்கி வேகமாய் ஓடிப்போய் அந்தப் பூவரச மரத்திலை அடிபட்டு விழுந்து, துடையிலை காயப்பட்டதைப் பற்றித் தான் சொல்லுறியள். என்ன? '

'ஓம் தம்பி, இப்ப நல்லாய்ப் பாக்கட்டும் அந்தக் கிழட்டு மரம், நீ புதுக் காரிலை ராசா மாதிரி ஓடிப் போறதை. சரி, துடையிலை அண்டைக்கு வந்த அடையாளம் இப்பவும் இருக்குதே தம்பி? '

'சைய். அழிஞ்சுட்டுது. அது சரி பெரியையா, ரவுணிலை உங்களுக்கு என்ன செய்ய விருப்பம்? நான் என்ன வேண்டித் தாறது உங்களுக்கு? சம்பளம் எடுத்துக் கொண்டு தான் வந்தநான். '

'காசை உன்ரை சிலவுகளுக்கு வைச்சிரு தம்பி. எனக்கு ஒண்டும் வேண்டாம். ஆனால் முனியப்பர் கொயிலையும், கச்சேரியையும், மணிக்கூட்டுக் கோபுரத்தையும், பெரிய ஆசுப்பத்திரியையும் மற்றது நீர் படிச்ச சென்ர்றல் கொலிச்சையும், டச்சுக் கோட்டையையும், நீதி மன்றத்தையும் காட்டி விட்டால் போதும். சாக முந்திப் பாத்திட்டுச் சாவம். ஊரிலை இருக்கிற ஆக்கள் எல்லாம் அதுகளைப் பற்றி எப்பவும் கதைக்கிறவை. '

'சரி ஐயா. நீங்கள் சொன்னது எல்லாம் கிட்டக் கிட்டத் தான். முதலிலை, கச்சேரியோடை துவங்குவம். அது போற வழியிலை. என்ரை வேலையையும் ஒரேயடியாய் முடிச்சிடலாம்.  பிறகு, காரை நாங்கள் ஒரு இடத்திலை விட்டிட்டு, நீங்கள் சொன்ன மற்ற சில இடங்களை, நடந்து போயும் பாக்கலாம். பிறகு, பெரியையா, கோட்டைக்கு உள்ளாலை காரிலையே ஓடிப் போவம். இறங்கத் தேவையில்லை. அத்தோடை, யாழ்ப்பாண ஆசுப்பத்திரிக்குப் போற வழியிலை தான் மணிக்கூட்டுக் கோபுரமும். கோட்டைக்குக் கிட்ட முனீசுவரர் கொயில். எல்லாம் முடிச்சிட்டுப் பெரியகடையுக்கை உங்களுக்கு வருசத்துக்கு, ஒரு சோடி வேட்டி-சால்வையும் இரண்டு வெள்ளை பெனியனும் வேண்டிக் கொண்டு, ஆஸ்பத்திரிக்கு முன்னாலை இருக்கிற சைவக் கடையிலை சாப்பிட்டுட்டு, ஒரேயடியாய் வீட்டை போவம். என்ன? '

'உனக்கு வீண் கரைச்சலும் சிலவும் தாறன் போலை இருக்குது தம்பி. உன்ரை வசதியின்படி ஏதோ விருப்பத்துக்குச் செய் தம்பி. எனக்கு எதுவும் சரிதான். உன்னை இனி . . . எப்ப . . . நான் காணப் போறனோ? '
(யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு மேலதிகமாக நல்லூர் கந்தசாமி கோவிலையும் தரிசித்து விட்டு இருவரும் ஆறுதலாகக் கதைத்துக் கொண்டே வீடு திரும்புகிறனர்.)

'இந்த நல்லூர் கந்தசாமி கொயில் முன் பக்கம், இப்ப நல்லாய்க் கட்டியிருக்கினம், என்ன தம்பி?  நான் முந்திப் போகேக்கை உப்பிடி இல்லை. ஆனால் றோட்டுகள் எல்லாம் படான் போலை இருக்குது. இங்கை இருக்கிற எஞ்சினியர் மார் சரியில்லைப் போலை இருக்குது.  அல்லது . . . றோட்டுத் திருத்த எண்டு குடுக்கிற காசிலை, அரைக்கரவாசி தங்கடை பையளுக்கை போடீனமோ? ஏன் தம்பி, எங்கடை நல்லூர் கொயிலைப் போலை, எங்கடை றோட்டுகளையும், அப்பப்ப திருத்தி, முறையாய் வைக்கேலாது? '

'அதிலை எத்தினையோ விசயம் இருக்குது பெரியையா. கொயில், சனங்களாலை காசு போட்டுப் பாக்கிற விசயம். அதோடை நம்பிக்கை, நேர்த்திக் கடன் எண்டும் மனம் சம்பந்தமான பயங்களும் இருக்குது தானே? . . .
'றோட்டுத் திருத்த, கவுண்மேந்து தான் காசும் குடுக்க வேணும். சரியான அளவிலை காசு கிடைக்காட்டில் எஞ்சினியர் மாரோ ஓவசியர் மாரோ ஒண்டும் செய்ய ஏலாது. உங்களுக்கும் தெரியும்தானே, அரசியல் பிரச்சினையளைப் பற்றி. 

'அந்தச் சிங்களப் பெரும்பான்மை ஆக்கள் நடத்திற அரசாங்கங்கள் இப்பிடியான புனருத்தாரணம், கட்டுமானம், அபிவிருத்தி வேலையளுக்காக, தமிழ்ப் பகுதியளுக்கு, எப்பவுமே போதிய பணம் தருவதில்லை. எம் சுதந்திரத்தின் பிறகு, நடந்த எட்டு வருசங்களையும் பாத்தால், சிங்களப் பகுதியளுக்கு நன்மை செய்து, எமக்கு ஓரவஞ்சனையாயே நடந்திருக்கினம். '

'எனக்கு உதுகளெல்லாம் விளங்காது தம்பி. நான் ஒரு பேப்பரும் படிக்கிறதில்லை. ஆனால் என்ரை அனுபவமும் உள்மனமும் சொல்லூது, தமிழ் ஆக்களைத் தமிழர் தான் தமிழிலை ஆளுறது நல்லது எண்டு. ஏன், எங்கடை ஆக்கள் என்ன குறைவே? இதைத்தானே செல்வநாயகம் பிரக்கிராசியும் மெல்ல மெல்லமாய்ச் சொல்லித் திரியுது எண்டு கேள்விப்பட்டன், எங்கடை இலெக்சன் பேச்சுகளிலை. '

'அவர் அப்புக்காத்து, பெரியையா! பிரக்கிராசி மாருக்குக் குரு!! இப்ப என்னெண்டால், இளைப்பாறீட்டு அரசியலிலை எங்களுக்காகக் களத்திலை இறங்கி வந்திருக்கிறார். அவரை அரசியலுக்கு அழைச்ச பொன்னம்பலம், சிங்களவரோடை சேர்ந்து நடந்து கொண்டு ஒவ்வொரு ஏதும் கட்டத்திலையும் இலங்கை முழுதிலும் தமிழர் சமவுரிமைக்குச் சண்டை பிடிக்க வேணும் எண்ட கொள்கை. செல்வர் சொல்லுறார், இல்லை, எங்கடை தமிழ்ப் பகுதியளிலை எங்கடை உரிமையளை எழுத்திலை வேண்டிக் கொண்டு இரண்டு பகுதியும் இலங்கையிலை ஒற்றுமையாய் இருப்பம் எண்டு. அதுதான் இப்ப பிரிஞ்சிட்டினம். ஒருதருக் கொருதர் போட்டியாய் தேர்தலிலையும் ஆள் போடீனம். '

'நீரும் இலெச்சன் நடத்தத் தானே இந்தமுறை இங்கை வந்தநீர். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லும் தம்பி. '

'கனக்கச் சொல்ல இல்லை ஐயா, அதிலை.  நாளையிண்டைக்குத் தானே தேர்தல். நான் சங்கத்தானை இந்துக் கல்லூரியிலை இருக்கிற வாக்கீடு நிலையத்துக்குப் பிரதம தேர்தல் அதிகாரியாய்ப் பொறுப்புத் தந்திருக்கினம். ' 

'வேறை, என்னோடை வேலைக்கு, ஒரு உதவி அதிகாரியும் இரண்டு லிகிதர்களும். அவை தங்கடை பாட்டிலை நேரை அங்கை வருவினம். சில இடாப்புகளும் மற்றச் சாமான்களும் என்ரை பொறுப்பிலை தந்து, நான் என்ரை காருக்கை, பின்னாலை, பூட்டி வைச்சிருக்கிறன். நாங்கள் எல்லாரும் அங்கை முதல் நாள் இரவே போய்ப் படுத்திட்டு வெள்ளண எழும்பி ஆயத்தப் படுத்தி வாக்காளர் வர முன் நிலையத்தைத் திறந்து வைக்கவேணும். இரவே இரண்டு பொலிசுக்காறர் வந்திடுவினம், பாதுகாப்புக்கு. சில சாமான்களை அரசார் நேரை தந்திட்டுப் பிறகு எடுப்பினம். நான் ஒரு பியோன் மட்டும் கொண்டு போக வேணும். '  

'தம்பி, நான் உன்ரை பியோனாய் வரட்டே? எனக்கும் உதுகள் எல்லாம் பாக்க நல்ல ஆசை. அதோடை நானும் ஒரு நாளாவது கவுண்மேந்தின்ரை சின்ன வேலை எண்டாலும் செய்தால் கொஞ்சம் பெருமையாய் இருக்கும் தானே? '

'எனக்கு நம்பிக்கையான, இளம் பொடியன் எண்டால் தான் நல்லது, பெரியையா.  நான் தம்பியனைக் கூட்டிக் கொண்டு போகத்தான் இனைச்சது. ஆனால் நீங்கள் விரும்பினால் சில நிபந்தனையளோடை வரலாம். அப்பிடி உங்களுக்குச் சரிவருமோ தெரியாது. நான் சொல்லுறன். விருப்பம் இல்லாட்டில் அந்த எண்ணத்தை விட்டிடுவம். இது பொது மக்களின்ரை விசயமெல்லே? கவனமாய் இருக்க வேணும். முதலிலை நீங்கள் ஒரு சவரம் செய்து சட்டை போட்டுக் கொண்டு விறுத்தமாய் வரவேணும். . . 
'. . . 
மற்றது நான் அங்கை உங்களைப் பெரியவர் எண்டு தான் கூப்பிடுவன். பெரியையா எண்டு சொல்லவே மாட்டன். மற்றவையும் சும்மா உங்கடை பேரை மட்டும் தான் சொல்லிக் கூப்பிடக் கூடும், பியோன் பொடியள்மாரைக் கூப்புடற மாதிரி. 

'. . . அதோடை, நீங்கள் வாக்குப் பெட்டியள் போன்ற சாமான்களைத் தூக்கிக் கச்சேரி வானுக்கை வைக்க வேண்டி வரும், பெரியையா. '

'அதெல்லாம் என்னாலை செய்ய முடியும் தம்பி. நான் கவுண்மேந்துக்கும் உனக்கும் தானே வேலை செய்யப் போறன். அதிலை குறை என்ன? '

'இன்னும் ஒண்டு பெரியையா . . .

'உங்கடை சொந்த வோட்டு, மாமான்ரை சித்தி விநாயகர் பள்ளிக்கூட நிலையத்திலை எண்டு நினைக்கிறன். என்னோடை வாறதெண்டால் உங்கடை வோட்டுப் போடேலாது. அதோடை இந்த இலெக்சனிலை போட்டி போடுற குமாரசாமியையும் நவரத்தினத்தையும் உங்களுக்கும் நல்லாய்த் தெரியும். சங்கத்தானையும் இந்த ஊரும் ஒரே தொகுதி. அப்ப அங்கை நாங்கள் வேலை செய்யேக்கை அவையள் அங்கை வரவும் கூடும். இவருக்கோ அவருக்கோ பாரபட்சமாய் எப்பவும் ஒண்டுமே கதைக்கப் படாது. நடு நிலைமையிலை நாங்கள் நிண்டு நீதவான்கள் போலை வேலை செய்ய வேணும். சரிதானே? '

'அது எல்லாம் சரி தம்பி. எங்கடை வீடும் கிட்டீட்டுது. அப்ப நாளை இரவு தானே சங்கத்தானைக்குப் போய்ப் படுக்கப் போறம். என்ன? நாளைக் காலமைதானே சாவச்செரிக்குப் போறதெண்டு சொன்னநீர்? '

'நீங்கள் பிறகு என்னோடை இலெக்சன் வேலைக்கு வாற படியால் நாளைக்காலமை வெள்ளெண, நாங்கள் சாவச்செரிக்குக் கெதியாய் ஓடிப்போட்டு வருவம், மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னம். என்ன பெரியையா? '

'எல்லாமே சரி தம்பி. எல்லாம் விளங்குது. எனக்கு எல்லாமே சரி. நீர் பக்கத்திலை காரை நிறுத்திக் கதவைத் திறந்து விடுமென். நான் இறங்கிச் சடக்கெண்டு தட்டியைத் திறந்து விடுறன். நீர் காரை வளவுக்குள்ளை விட்டிட்டுக் குளிச்சுப் போட்டு, கெதியாய் வாரும். ஏதும் தேத்தண்ணி குடிச்சிட்டுக் கொஞ்சம் ஆறுவம். காலமை போய், இப்ப தானே வாறம். நாங்கள் மத்தியானம் சாப்பிட்டாலும் இரண்டு பேரும் நல்லாய்க் களைச்சிட்டம். என்ன? '
(அடுத்த நாள் இருவரும் அதே புதுக் காரில் சாவகச்சேரிக்குச் சென்றனர். திரும்பும் வழியிலே முந்திய நாளைப் போல, இருவரும் பத்தையும் பலதையும் பற்றிக் கதைத்துக் கொண்டு செல்கின்றனர்.)

'தம்பி, நாங்கள் சாவச்செரி மாக்கெற்றிலை வாங்கின காய்கறி எங்கள் ரண்டு பேருக்கும் போதும், என்ன சொல்லுறீர்? '

'மீனும் வாங்கினது தானே. போதும் எண்டு நினைக்கிறன், பெரியையா. இப்ப வேறை ஒண்டு கேக்கப் போறன். கேக்கட்டே? 

'ஐயா, நாங்கள் அப்போதை வாற வழியிலை புறக்ரற் கந்தசாமிக்கு நாங்கள் முந்தி வித்த நுணாவில் சந்தியில் வளவைச் சுத்திப் போட்டிருக்கிற மதிலைக் காட்டினியள் எல்லே?  அதுக்கு ஆரிட்டை அனுமதி எடுத்திருப்பர் அவர், கந்தசாமி?  இங்கத்தையில் கிராமச் சங்கத்திட்டையோ? யாழ்ப்பாணம் கச்சேரியிலோ? அல்லது பெருஞ்சாலைத் திணைக்களத்திலையோ? '

'அவர் ஆரிட்டையும் அனுமதி கேக்காமல் கட்டினாரோ தெரியாது. ஆனால் கிராமச் சங்கம் தான் அதைக் கண்காணிக்கிறது முறை எண்டு நான் நினைக்கிறன். ஏன் தம்பி கேட்டனி, அதைப் பற்றி? '

'இல்லை ஐயா, உங்களுக்கும் அப்பிடி ஒரு மதில் கட்டித் தர எனக்கு விருப்பம். இப்ப யோசிச்சு வைச்சால் நான் அடுத்த முறை வரேக்கை கட்டலாம். கட்ட ஒரு கிழமை தான் எடுக்கும். '  

'அதைப் பற்றி ஆற அமர இருந்து யோசிப்பம் தம்பி.        

'எனக்கெண்டால் கிடுகு அல்லது பனை ஓலையோ கிஞ்ஞாக் கம்போ பாவிச்சுப் போடுற வேலியிலும் நன்மையள் இருக்குது போலைத் தெரியுது. ஏனெண்டால் ஒண்டு, பச்சைக் கதியாலுகளாலை வளவும் நல்ல குளிர்மையாய் இருக்கும். தோட்டம் செய்யிறதுக்குக் குழையும் வரும். மற்றது லொறிக்காறர் தற்செயலாய் உடைச்சாலும், திருத்திறதும் சுகம், எண்டு இனைக்கிறன். நீர் என்ன நினைக்கிறீர் தம்பி, அதைப் பற்றி? '

'சரி, யோசிப்பம் பெரியையா. அங்கை, பொலீஸ் ஸ்ரேசனுக்கு முன்னாலை ஒரு லொறி நிக்குது. என்னவாக்கும்? ஏதும் கள்ளச் சாமான் கொண்டு போய்ப் பிடிபட்டினமோ? நான் மெல்லப் போறன். நீங்கள் ஒருக்கால் உற்றுக் கவனமாய் பாத்துக் கொண்டு வாருங்கோ பெரியையா. எனக்கு நிக்கவும் விருப்பமில்லை. பிராக்கும் பாக்கக் கூடாது எண்டதும் என்ரை பழக்கம். '

'தம்பி, அது ஏதோ அக்சிடன்ர்ற் போலை இருக்குது. லொறியின்ரை இடது பக்கம் நெளிஞ்சிருக்குது. பொலிசின்ரை மதிலும் உடைஞ்சிருக்குது.'

'அப்ப, நீங்கள் நேற்றும் இண்டைக்கும் சொன்னதிலை எவ்வளவோ உண்மையள் இருக்குது தான். எங்களுக்கு மதில் வேண்டாம். இருக்கிற மாதிரி கிடுகு வேலியோடை வைச்சிருப்பம்! ஐயா, அது தானே நாகலிங்கத்தார் வீடு, ஒம்பதாம் கட்டைக்குப் பக்கத்திலை? 

'.அவற்றை மக்கள் வெளியிலை ஒவ்வொரு திக்கிலை வேலை எண்டு அறிஞ்சன். இப்ப ஆர் உதுக்கை இருக்கினம்? '

'நீர் சொன்னது சரி, தம்பி. மகன்மார் ஒருத்தர் டாக்குத்தர். மற்றவர் பிரக்கிராசி. இரண்டு பேரும் வெளி நாட்டிலை. மகள்மார் எல்லாம் கலியாணம் செய்து அங்கை அங்கை புருசன் மாரோடை. கடைசியான் பிள்ளை தான் இருக்குதாக்கும், இங்கை, இப்ப. அல்லது வாடைக்குக் குடுத்திட்டினமோ தெரியாது. '

'பெரியையா, அங்கை கொஞ்சம் பாருங்கோ, முன்னுக்கு இடது பக்கம் இருக்கிற பலசரக்குக் கடையை இப்பவும் கனகர் தான் நடத்திறாரோ? அல்லது அவற்றை பிள்ளையளோ? '
'அவர்தான் நடத்துறார் தம்பி. பிள்ளையள் இருந்திட்டு உதவியாக்கும்! ஆனால் அவருக்கு அதுதான், சீவியத் தொழில். ஊர் ஆக்களுக்கும் அவர் கையாலை சாமான் வேண்டுறது தான் விருப்பமாம். '

'பெரியையா, அங்கை பாருங்கோ, வலது பக்கத்திலை. நாங்கள் இப்ப கதைச்சது இங்கை கூட நடந்திருக்குது போலை கிடக்குது. கந்தசாமியற்றை மதிலுக்குள்ளையும் ஒரு கார் அடிபட்டுக் கொண்டெல்லே நிக்குது, சத்தாருக்கு. ஒரு பழங்காலத்து போட் கார் போலை தெரியுது. எங்களுக்கு மதில் வேண்டவே வேண்டாம், பெரியையா. வேலி போதும்! '

'ஓம் தம்பி. பக்கத்திலை கார்க்காரச் சின்னராசன் நிக்கிறான். என்னையும் கண்டுட்டுக் கையையும் காட்டுறான், சின்னராசன். கொஞ்சம் நில்லு தம்பி, ஒரு பக்கத்திலை. என்னெண்டு கேட்பம். ஆனால் உது கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை காரெல்லோ, அடி பட்டு நிக்கிறது?  அதை மருதங்குளத்துச் சின்னராசன் ஏன் காவேந்து பண்ணிறான்? வேண்டீட்டானோ? எண்டாலும் போய்ப் பாப்பம் தம்பி.'  
(காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி றோட்டுக்கு மற்றப்பக்கம் செல்கின்றனர். ஓடிவந்த மருதங்குளச் சின்னராசன் இவர்களுடன் கதைக்கத் தொடங்குகிறார்.)

'அண்ணை! அண்ணை! அண்ணை! கடவுள் மாதிரி வந்திருக்கிறியள். எனக்கு உதவுறதுக்கு! இதார், உங்கடை பெறாமகன், எங்கடை எஞ்சினியர் தம்பி போலை எல்லோ இருக்குது? 

'அவற்றை புதுக்காராக்கும். இவன் கதிரவேலன்ரை காரிலை நான் தொத்திக் கொண்டு சாவச்சேரிப் பக்கம் நாங்கள் போகேக்கை பின்னாலை இருந்து ஒரு லொறி வந்து எங்களை அடிச்சு இந்த மதிலுக்கை தள்ளிப்போட்டு நில்லாமல் ஓடீட்டான். காரோட்டி வந்த கதிரவேலு மூச்சுப் பேச்சில்லாமல் இருந்து இப்ப எழும்பிக் காரின்ரை பின் சீற்றிலை படுத்திருக்கு. ஒருக்கால் அவனை ஆசுப்பத்திரிக்கும் பொலீசுக்கும் கொண்டு போக முடியுமே அண்ணை? உங்கள் இரண்டு பேரையும் காலிலை விழுந்து மண்டாட்டமாய்க் கேக்கிறன் அண்ணை, எங்கடை கதிரவேலுவுக்கும் எனக்குமாக. முந்தி எத்தினை தரம் நீங்கள் மாறி மாறிக் கேட்டபோது கார் பழக்கித் தராதது எல்லாத்தையும் மன்னிச்சிட்டு எங்களுக்குத் தயவுசெய்து உதவுங்கோ அண்ணை! தம்பி! '

(பெரியையாவும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். ஒரு தயக்கமும் இருவரின் முகத்திலும் இல்லை. உடன் முடிவு. கார் திரும்பியது. கதிரவேலுவை ஆஸ்பத்திரியிலும் சின்னராசனைப் பொலிசிலும் விட்டு விட்;டு வீடு சென்றனர். பெரியையாவின் முகத்தில் பெருமிதம் தாண்டவமாடியது. அதைப் பெருமூச்சு ஒன்றுடன் கவனித்த மகன், தேர்தல் வேலையை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பினார். அவர் மறுமுறை கைதடி நுணாவிலுக்கு வந்தது அடுத்த ஆண்டு, பெரியையாவின் மரணக் கிரிகைகளுக்கு!)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:27

மீன் முள்!
------------
நான் அந்த விடுதிக்கு வந்து சில மாதங்கள் இருக்கும்.இன்னும் இந்த முப்பது நாட்களை கடந்தால்  ஒரு வருடம் ஆகிவிடும்.நான் புதுவருடத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தேன்.

என்னை எல்லோரும் பொதுவாக சித்தர் என்றே அழைப்பர்.ஆனால் என் உண்மை பெயர் குமார்.பெயரை சூட்டியவர்கள் இன்று இல்லை அதனால் என்னவோ சமூகம் எனக்கு  சித்தன் என பெயரிட்டிருந்தது.

என்னை சித்தன் என அழைப்பதால் நான் ஒன்றும்  கவலைபட்டதும் இல்லை.எழுத்தை தொழிலாக கொண்டவன் நான்.இதுவரை  என்னுடைய கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. சிலவற்றின் சன்மானம் என்னை அடைந்தும் பலவற்றின் சன்மானம் இன்னும் வந்தடையாமலுமுள்ள நிலை. நான் அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை.நான் அதை எடிட்டர்கள் நல்வாழ்வுக்கு என தியாகம் செய்துவிடுவேன்.

அவ்வப்போது நான் பாடுவது உண்டு.எனக்கு வீணையும் வாசிக்க தெரியும்.இதனால் எனக்கு ஒரு சில வயதான ரசிகர்கள் உள்ளனர். நான் வெகுதூர பயணத்தில் இருக்கும்போது சாலையின் ஓரத்தில் பாட ஆரம்பித்துவிடுவேன் நின்றுகொண்டே.சில்லறைகள் பல கொட்டும்.நோட்டுகள் சில விழும்.இது நான் எழுதி சம்பாதித்ததைவிட அதிகமாக இருந்தது.

நானும் மனிதன் தானே என நிருபிக்க ஒரு பெண்ணை காதலித்தேன்.அவள் பெயர் மாதவி.அவளுக்கு இப்போது இரு ஆண் குழந்தைகள்.நிச்சயம் நான் ஒரு துரதிருஷ்டசாலி.என் காதலியின் கல்யாணம்  என் மனதின் முன்பே நடந்தேறியது.அன்றிலிருந்து தெரிந்தது நான் மனிதன் அல்ல.நாம் சிரிப்பதும்,சந்தோஷப்படுவது வீண் என.அவளின் கல்யாண நாளில் இருந்தே நான் என் மகிழ்ச்சியுடன் விவகாரத்து பெற்றிருந்தேன்.

வரவர என் தொழிலும் வீழ்ச்சி தான்.அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்து உங்கள் படைப்பு நிராகரிக்கப்படுகிறது என்றே பதில் வந்தது.வேறு வழியில்லாமல் சிற்றிதழ்களுக்கு அனுப்பி பார்த்தேன்.ஒன்றும் நடக்கவில்லை.அவர்கள் அனைவரும் பெயர் பிரபலமானதா என்று பார்த்தார்களே ஒழிய படைப்பை பார்க்கவில்லை.

தரமான இலக்கியம் பிரசுரமான காலம் போய் நவீனத்துவம் என்ற பெயரின் பெயரில் நகைச்சுவை இலக்கியமும்,தனிநபர் விமர்சனமும் பத்திரிக்கைகளை கோலோச்சின.எனக்கு அந்த மாதிரியெல்லாம் எழுத தெரியாது.எனக்கு தெரிந்தது எல்லாம் ஜெயகாந்தனும்,நகுலனும்,பிரமிளும்,மெளனியும்,சுந்தர ராமசாமியும் ,ஆத்மாநாமும்  தான்.இதனால் என்னவோ என் படைப்புக்கள் நிராகரிக்கப்பட்டது என்றே எனக்கு பொருள்கொள்ள தோன்றியது.

இதனால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை ஆனால் என் எழுத்துக்களுக்கு வருத்தம் அதிகம் தான்.அதை இதுவரை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை.நான் என் எழுத்துக்களுக்கு உயிர் உண்டு என்றே நம்புகிறேன்.உயிர் இல்லாமல் உணர்ச்சி சாத்தியமா என கேட்டுக்கொண்டதால் எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை .

இதனால் நான் அடிக்கடி அவற்றுடன் பேச ஆரம்பித்துவிடுவேன்.இப்போது வரை என் சொத்து ஒரு 300 வெள்ளை தாள்களும்,இருபதுக்கும் மேற்பட்ட கைப்பிரதி நாவல்களும்.அந்த காகிதங்களில் குடியிருக்கும் எழுத்துகள் பதிப்பகம் போவோமா போகமாட்டோமா என ஏங்குவதே எனக்கு பெரும் கவலை தருவதாக இருந்தது.இதனால் தான் நான் குடிக்க ஆரம்பித்தேன்,புகைபிடிக்க ஆரம்பித்தேன்.

என் விடுதியில் சில நாட்களாக பூனை ஒன்று சுற்றிகொண்டிருந்தது.அனைவரும் அதை அபசகுணமாகவே கருதினர் ஏனெனில் அது கறுப்பு நிறம் ஆனால் அப்படி ஒரு வசீகரம்.நான் மாமிசம் சாப்பிடும்போதெல்லாம் அந்த பூனைக்கு விருந்து தான்.அந்த பூனைக்கு மீன் குழம்பு  என்றால் உயிர் போல.அது ஒரு பாவப்பட்ட மனிதன் போன்ற பாவனையில் அந்த மீன் முள்ளை சாப்பிடும் அதை காணும் போதெல்லாம் எனக்கு இது போன்று யாரும் இல்லை என தோன்றியது.

இதனால் என்னவோ எனக்கு அந்த பூனை மிகவும் பிடித்து போனது.அதற்கு நான் மாதவி என பெயரிட்டிருந்தேன்.அது பெண் பூனை ஆயிற்றே.பல நேரங்களில் அது காணாமல் போய்விடும்.எப்படி மாதவி மர்மமாக இருந்தாளோ அப்படியேதான் இந்த மாதவி என பெயரிடப்பட்ட பூனையும்.

காலப்போக்கில் மாதவி எனக்கு மிகவும் நெருக்கமாகி இருந்தது.என் அறையில் அதற்கும் உரிமை உண்டென முடிவெடுத்திருந்தேன்.நான் நள்ளிரவில் தீவிரமாக எழுதிக்கொண்டிருப்பேன் மாதவி என் அருகில் அமர்ந்திருந்து உருளும்,புரளும்.செருப்பை நகர்த்தி விளையாடும்.பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

இப்படி நான்,மாதவி,என்னிடம் பேசும் எழுத்துகள் சந்தோஷமாக சென்றுகொண்டிருந்தது எனக்கு அந்த கடிதம் வரும் வரை.என்னை ஒரு பிரபலமான இலக்கிய வட்டத்தின் சந்திப்பில் பங்கேற்று பேசுமாறு எழுதியிருந்தது.என்னை அவர்கள் ஒரு பிரபல எழுத்தாளரை பற்றி புகழ்ந்து பேச அழைத்திருந்தனர் என்பது சற்று தீவிரமாக அந்த கடிதத்தை படித்த போது புரிந்தது.நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்பதும் எனக்கு தெரியாது.பங்கேற்பது எளிய விஷயம் தான்.ஆனால் பேசுவது என்பது என்னை பொறுத்தவரை கடினமானதும்,கடினமாக்குவதும்.ஏனெனில் என்னை கட்டுபடுத்தும் பழக்கம் எனக்கு கிடைக்காது இது இருத்தலியத்தின் மீது இருந்த காதலால்.

நான் அப்போது சமீபத்தில் தான் ஒரு அரசியல் கட்சியால் எச்சரிக்கப்பட்டிருந்தேன் என் சமீபத்திய கட்டுரைக்காக.எனக்கு உள்ளுக்குள் பயம் இருள் போல பரவ ஆரம்பித்தது .நான் அந்த மேடையில் ஏதாவது பேசிவிட்டால் என்ன செய்ய? மேடையில் உள்ளவர்கள் எல்லோரும் பெரிய பெரிய எழுத்தாள பிரபலங்கள்.ஒருவேளை புறக்கணித்தால் எனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஒரு பத்திரிக்கையையும் அவமானப்படுத்திய மாதிரி ஆகிவிடும் என தோன்றியது.மனதை தைரியமூட்டிக்கொண்டு அங்கு பேசுவது என முடிவெடுத்து கொண்டேன்.

அன்று இரவு வானம் இருளே மூச்சென கிடந்தது மற்றநாட்களை விட பயங்கரமாக.அவ்வளவாக நட்சத்திரங்களோ,நிலவோ இல்லை.கிறிஸ்துமஸ் காலம் என்பதாலே எல்லா வீடுகளிலும் அன்றைய நட்சத்திர பற்றாக்குறை தீர்க்கவே  செயற்கை மின்சார நட்சத்திரங்கள் தொங்கியது.அன்றைய தினம் மாதவியை காலையில் இருந்தே காணவில்லை.இத்தனைக்கும் அன்று மாதவிக்கு பிடித்து மீன் குழம்பு.எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது.ஏதோ என் முன்னாள் காதலிக்கு அன்று தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்தது.உள்ளுக்குள் அழுதது வெளியில் சிரித்தது உள்ளிருந்த குரங்கு .

எப்படி ஆசைபட்டது கிடைக்காமல் ஆசைபடாதது கிடைக்குமோ அப்படி கிடைத்தது தான் இந்த வாழ்க்கை என எனக்கு நினைக்க தோன்றியது.நான் மெளனியின் சிறுகதையில் படித்திருக்கிறேன் இயற்கையின் இழந்ததை பெறும் முயற்சி நடந்தே தீரும் என்பது.எனக்கு அந்த இரவில் அப்படியெல்லாம் யோசிக்க தோன்றியது.எனக்கு அந்த ஐந்து நிமிடத்தில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட அத்தனை தோல்விகளும் நினைவுக்கு வந்தது.

என்னை பிடிக்காமல் அனாதை ஆசிரமத்தில் சேர்த்த பெற்றோர் ,படிக்க லாயிக்கில்லாதவன் என சொன்ன ஆசிரியர்,திருடன் என சொன்ன காவல்துறை அதிகாரி ,பைத்தியம் என சொன்ன பக்கத்து அறைக்காரன்,பாராட்டுக்கு தானே எழுதுற என சொன்ன எடிட்டர்,என்னை பிடிக்கவில்லை என சொன்ன மாதவி,என்னை விட்டு சென்ற என் நேசத்திற்குரிய பூனை என நினைவில் ஓடியது.இப்படி வாழ்வே துயரமாக மாறிவிட்டதே என என்னை அறியாமல் கண்ணீர் வந்தது .

வாசலில் வானம் பார்த்து நின்றுகொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அறைக்குள் போனேன்.அங்கு  என் அலமாரியில் பிரமிளின் கவிதை புத்தகத்தின் அருகில் ஒரு குப்பி பிராந்தி  இருந்தது.அதை எடுத்துக்கொண்டேன்.எங்கேயாவது போகவேண்டும் போல இருந்தது.என் தோல்விகளை நினைத்துகொண்டே இருந்தேன்.அந்த சம்பவங்கள்  இப்போது நடந்தது போல இருந்தது.

நான் என் அறையை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து அறையில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு  வெளியே கிளம்பினேன்.எனக்கு அந்த நகரத்தின் சத்தமான மெளனமில்லா சூழல் பிடிக்கவே இல்லை.என் விடுதிக்கு பின்னால் ஒரு அடர்ந்த வனம் இருந்தது.என் மனம் என்னை அங்கே போ அங்கே போ என பிடித்துதள்ளியது.

அப்போது தான் நினைவுக்கு வந்தது இன்று தான் அந்த இலக்கிய வட்ட சந்திப்பு என.இது என்னை மேலும் கவலைப்பட செய்தது.குப்பியில் இருந்த பிராந்தியை முழுவதும் குடித்து அந்த காலி குப்பியை  வீசினேன்.அது அநேகமாக நொறுங்கி போனது.மெதுவாக கால்களும்,கண்களும் ,மனதும் தடுமாற ஆரம்பித்திருந்தது அதை கூட என்னால் உணர முடிந்தது.எனக்கு எதையோ தேடுவது போல தோன்றியது.மறுபடியும் தள்ளாடி தள்ளாடி விடுதியை நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தேன்.கடைசி வரை மாதவியும் கிடைக்கவில்லை, மாதவியும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக்கு.அப்போது தான் எனக்கு நினைவுக்கு வந்தது  என்னை விட்டால் என் எழுத்துக்களுக்கு  யாருமில்லை என்பது.அதனால் நான் அப்போது தற்கொலை முடிவை எடுக்க வில்லை.

அப்படி தள்ளாடிக்கொண்டே விடுதி வரை வந்தாயிற்று.உள்ளே நுழைந்தேன்.ஒரளவு அமைதியாக இருந்தது.நான் என் பக்கத்து அறையை தட்டினேன் உள்ளே என் பிரியத்திற்குரிய பூனை அவனுடைய செருப்பை உருட்டி விளையாடிகொண்டிருந்தது.ஆனால் உள்ளே இருந்து மீன் குழம்பு வாடை வந்து கொண்டிருந்தது.நான் சாவியை வாங்கி கொண்டு  என் அறையை துறந்தேன்.அந்த விநாடியில் காலச்சாவி என்னுள் எதையோ திறந்து விட்டது போன்ற உணர்வு.அப்போது கூட என் தோல்விகள் பெரிதாக படவில்லை.

எனக்கு அப்போது ஒரே ஒரு சிந்தனை  தான். ஒரு மீன் முள்ளுக்காக என்னை விட்டுப்போன பூனையும்,வெறும் பிரபலத்துவத்துக்காக தரமிழந்து விலை போன இலக்கியத்தை பற்றி தான்.பின்னதை விட முன்னதே எப்போதுமே வருத்தம் தருகிறது எப்போதும்.இதிலும் வாழ்க்கையிலும்.காலத்தின்  உதட்டை இழுத்து வைத்து முத்தமிட்டால் உணர்வு பெருகி காலம் நகராமல் நின்றுவிடுமா என்ன? காலம் ஓடுகிறது நானும் கூட ஓடத் தயாராகிவிட்டேன்.

நன்றி ; நேதாஜிதாசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:30

கண்களின் வார்த்தை புரியாதோ ...?
----
அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது. 

உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது. 

இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

இளமை துள்ளுமா? அதைத்தான் அவளிடம் நான் அன்று கண்டேன். பொன்னிறத்தில் முழப்பாவாடை சட்டை அணிந்து, குருத்துப் பச்சை அரைத்தாவணியில் அவள் அழகாகாக இருந்தாள். ரொறன்ரோவில் நடந்த தமிழ் மரபுத் திங்கள் விழாவிற்குத் தன்னார்வத் தொண்டராக நான் சென்றிருந்த போதுதான் அங்கே அவளைக் கண்டேன். ரொறன்ரோவில் உள்ள பிரபல நடன ஆசிரியை ஒருவரின் நடனக் குழுவில் அவளும் இடம் பெற்றிருந்தாள். பண்பாடு, கலாச்சாரத்தை மறந்து எங்கேயோ போய்க் கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தைப் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் பிடித்திழுத்து நிறுத்தியிருந்தது இந்த தமிழ் மரபுத் திங்கள். ஆமாம், கடந்த சில வருடங்களாக என்னைப் போன்ற இளம் தலைமுறைக்கு இந்த மரபுத்திங்கள் கொண்டாட்டம் எங்கள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உணர்த்துவதாகவே இருக்கின்றது. ஆர்வத்தோடு பல பகுதிகளில் இருந்தும் இளம் தலைமுறையினர் பங்கு பற்றுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இளைஞர்கள் பட்டு வேட்டி, சட்டை, சால்வையில் கம்பீர நடைபோட, பதுமவயதுப் பெண்கள் பாவாடை சட்டை அரைத்தாவணியில் அழகு நடை நடந்து செல்ல அந்த மண்டபமே பண்பாட்டுக் கோலம் போட்ட சொர்க்கமாய்த் தோன்றயது.

இடைவேளையின் போது உணவகத்தில் சர்க்கரைப் பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் இலவசமாகக் கிடைத்தது. அப்போது அவளும் தோழிகளுடன் அங்கே உட்கார்ந்திருந்தாள். அவளது இடத்திற்கு நானாகவே சென்று அவளது நடனத்தைப் புகழ்ந்து பாராட்டினேன். அவள் வெட்கப்பட்டு ‘தாங்ஸ்’ என்று சொல்லி விட்டுத் தோழிகளுடன் ஓடிமறைந்தாள். 

மீண்டும் ஒரு கிராமிய நடனத்தில் அவள் பங்கு பற்றியிருந்தாள். சுளகுடன் வந்து நடனமாடிய போது அசல் கிராமத்தவள் போலவே இருந்தாள். விழா முடியும் போது அவளை மீண்டும் பாராட்டினேன். ‘நடனத்தில் ஆர்வம் இருக்கிறதா’ என்று கேட்டாள், இருக்கிறதோ இல்லையோ ‘ஓம்’ என்று பதில் சொன்னேன். இனிய புன்னகையோடு எங்கள் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டோம். அதன் பின் செல்பேசியின் துணையுடன் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தோம். செல்பி எடுத்துக் கொண்டோம். ஒரு வாரத்தின் பின் நடன நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும் அதற்கு வர முடியுமா என்றும் அவள் கேட்டிருந்தாள். 

அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. தனியே அவள் நடனமாடப்போதாகச் சொன்னாள். ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை, அவளிடம் சொல்லாமலே திரும்பி வந்திருந்தேன். மறுநாள் இருவரும் சந்தித்தபோது அவள் கேட்டாள்,

‘நடனம் முடிஞ்சதும் ஓடி வந்தேன், ஆனால் உன்னைக் காணவில்லை, ஏன் போய்விட்டாய், சொல்லி விட்டுப் போயிருக்கலாமே.’
நான் எதுவும் பேசவில்லை, மௌனமாக இருந்தேன்.

‘ஏன் உனக்கு அந்த நடனம் பிடிக்கலையா?’ எனது முகபாவத்தை அவள் கவனித்திருக்க வேண்டும், அவளாகவே கேட்டாள். 

‘ஆமா..!’ கொஞ்சம் உரக்கவே சொன்னேன்.

‘உனக்கு நடனம் பிடிக்கும் என்றுதான் நான் நினைத்தேன். அதனால்தான் உன்னையும் அங்கே வரச் சொன்னேன்.’

‘ஆமா எனக்கு நடனம் பிடிக்கும்தான், ஆனால் இப்பிடிக் கூத்தடிக்கிறதல்ல!’

‘ஏன் எனன்னாச்சு உனக்கு, ஏன் அப்பிடி சொல்கிறாய்?’

‘வேற எப்படிச் சொல்லுறது, எனக்குப் பிடிக்கவே இல்லை. நீ நடனம் ஆடினபோது உன்னைச் சுற்றி இருந்தவங்களைக் கவனிச்சியா?’

‘இல்லையே, நான் என்னையே மறந்துதானே ஆட்டத்தில் மூழ்கிப் போகிறேன்’

‘தெரியும் உன்னை மறந்து நீ மூழ்கிப் போய் நடனம் ஆடினதால, சுற்றி இருந்தவங்களும் அப்போ முத்துக் குளிச்சாங்க தெரியுமா?’
‘என்ன சொல்லுறாய்?’

‘நான் சொன்னால் நம்பமாட்டாய், இப்போ இதைப்பார்’

எனது செல்போனை அவளின் கையில் திணித்தேன்.

செல்போன் திரையில் அவள் பார்த்த காட்சி அவளையே நம்பமுடியாமல் ஒரு கணம் கண்களை மூடவைத்தது.

‘அவள் சுடிதாரோடு கைகளை மேலே தூக்குவதும், மெதுவாகக் கைகளை இறக்கி பின்னால் கைகளை கட்டுவதும் பாடலுக்கு ஏற்ப மாறிமாறிச் செய்து கொண்டிருந்தாள். அவள் நடுவிலே தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கச் சுற்றிவர வேட்டை நாய்கள் போல நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிலர் வெறித்த பார்வையோடு அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.’ 

‘அவர்களது பார்வையைப் பார்த்தால் உனது நடனத்தை அவர்கள் ரசித்தது போல எனக்குத் தெரியவில்லை. இதைத்தான் நீ நடனம் என்று சொல்லுறியா?’

‘இல்லை இது எங்க ரீச்சருக்குத் தெரியாது, ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி அம்மாவின் சினேகிதி கேட்டதால அம்மா தான் என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவா, மேடையில் தான் ஆடுவதாக இருந்தது. இப்படி ஆட்களுக்கு நடுவிலே நின்று ஆடவேண்டி வரும் என்று நான் நினைக்க வில்லை.’

‘கும்பலுக்கு நடுவே ஆடமாட்டேன் என்று மறுத்திருக்கலாமே’

எதுவும் சொல்லாமல் தலை குனிந்தவள் ‘என்னுடைய சினேகிதிகளும் இதைத்தான் சொன்னார்கள்’ என்றாள்.

‘பரதநாட்டியக் கலைக்கே இதனாலே இழுக்கைத் தேடித்தராதே, நீ நல்லதொரு நாட்டிய தாரகை, தயவு செய்து இப்படியான இடங்களுக்கு நடனமாடப் போகாதே!’

அவள் மீதும், பரதநாட்டியக் கலை மீதும் மதிப்பு இருந்ததால், அவன் தனது எண்ணத்தை மனம் திறந்து சொன்னான். 

புரதநாட்டியம் என்பது ஒரு தெய்வீகக் கலை மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளம். அதைப் பக்தியோடுதான் அணுக வேண்டுமே தவிர வெறியோடு அல்ல. கல்லிலேதான் சிலை வடிக்கப்படுகின்றது. கோயிலிலே இருந்தால் அது பூஜிக்கப்படும் இல்லாவிட்டால், வீதியிலே கிடந்தால் அது வெறும் கல்தான், அப்படித்தான் இந்தக் கலையும், புரியுதா?’

அவன் சொல்ல அவள் ‘புரிகிறது’ என்பது போலப் புன்கையோடு விழி அசைத்தாள். அவளது கண்களின் வார்த்தை அவனுக்குப் புரிந்திருக்கும்.

நன்றி . குரு அரவிந்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:34

என் சுண்டெலி செத்து விட்டது 
------
இன்று சடுதியாக என் சுண்டெலிக்கு வலிப்பு! நேற்று மட்டும் நன்றாய்த் தான் இருந்தது.  புதுமெருகூட்டப்பட்ட என் பழையகவிதைகளில் ஐந்தைக் கணினியில் தட்டெழுதிப் பிரசுரத்துக்கு அனுப்பிவிட்டே படுக்கச் சென்றேன். இன்று காலையில் நான் வழக்கமாக மேயும் இணையத் தளங்கள் மூன்றையும் தேடிப் பிடித்து ஈழத் தமிழர் உரிமைப்போரின் கடைசியான திருப்பு முனைகள் என்னவென்று அறிந்த பின்னர் என் எழுத்து வேலையை ஆரம்பிப்போம் என எண்ணிக் கணினியின் தொடங்கு குமிழ்களை அழுத்தினேன். கணினியும் விழித்து என்னைப் பார்த்துச் சிரித்துக் காலை வணக்கம் சொல்லி இன்முகத்துடன் வரவேற்றது. 

ஒரு வினாடிகூட விரயம் செய்ய விரும்பாது, கணினியின் உள்ளே செல்ல எண்ணி, காத்திருந்த விநாயகரின் வாகனத்தை அதன் புறமுதுகின் முன்பக்க இடது முனையில் முதல்விரலால் அழுத்தி, முன்னே தள்ளினேன். சுண்டெலி அசைந்தது. ஆனால் கணினி, சிரித்த முகத்துடன் உறைந்தே காணப்பட்டது. சுண்டெலியைத் தலைகீழாகத் தூக்கி அதன் தொப்புளிலே எரிந்து சிகப்புநிற வெளிச்சம் வீசும் வட்டம் அணைந்து இருந்ததைக் கவனித்தேன். என் சுண்டெலி லேஸர்க் கதிர்ச் சத்திரசிகிச்சை பெற்றால்தான் இனி விழித்தெழுந்து இயங்கக் கூடும் என உணர்ந்தேன். அது என் சில தினங்களையும் பணப் பவுண்டுகளையும் ஏப்பம் விடக்கூடும் எனவும் சிந்தித்தேன். என் சட்டைப் பைக்குள் இருந்த உள்ளங்கைத் தொலைபேசியின் சிறு பொத்தான்களை மெதுவாக மாறிமாறி அழுத்தி ஹரோவிலிருந்த பீசீ-உலகக் கடையுடன் பேசினேன். 

என் சுண்டெலியை நான் குப்பைக்குள் வீசிவிட்டு வந்தால், அதை உயிர்ப்பிக்க வேண்டிய அதே பதினைந்து பவுண்டுக்கு ஒரு புதிய சுண்டெலியை விற்பதாக வலை விரித்தனர். நான் சிந்தித்தேன்: 

இந்தச் சிணுங்கு மூஞ்சிச் சுண்டெலிக்குப் பதினைந்து பவுண்டுகள் ஏன்? இது இன்றைய ரகத்து லேஸர்ச் சுண்டெலி என்ற படியாலேயே! இது என் மேசைக் கணினியுடன் சேர்த்து வியாபாரப் பேரத்தில் கிடைத்தது.

ஏன், அன்றைய பாணியான குண்டோட்டச் சுண்டெலி ஒன்று என் கணினியை ஓட்டாதா? என விசாரித்து அது தாராளமாக ஓட்டும் என அறிந்தேன். அத்துடன் ஹரோவின் பவுண்டுக் கடையில், அதாவது ஒரு பவுண்டுக்கு, அப்படியான சுண்டெலிகள் விற்பனைக்கு உண்டெனவும் சொன்னார்கள். மனம் ஓரளவு ஆறியது. ஈழத்தில் அடைமழை பெய்கின்ற படியால் அங்கிருந்து ஒரு காத்திரமான செய்தியும் சில நாட்களுக்கு வரப் போவதில்லை. வந்தாலும் நான் இங்கிருந்து ஆக்கமாக ஒன்றுமே செய்ய முடியாது. இருந்து துக்கித்து முனகுவதே யதார்த்தம். எனவே ஒரு நாள் ஆறுதல் எடுத்து எனது பிரத்தியேக வீட்டு நூல்நிலையத்தில் உள்ள இன்றைய நிலையின் அறிவுத் தேட்டங்களை மீளாராய முடிவு செய்தேன்.

முதலில், கணினிகள் அரசோச்சும் முன்னறை. ஈலாப் (ELAB) எனும் எம் இலக்கியவட்டம் வழக்கமாக மாதாமாதம் கூடிவரும் முன்னறை. கணினி-மேசைக்கு முன் காட்சியளிக்கும் திறந்த நாலடுக்கு அலுமாரிகள் நான்கு. மேற்தளத்திலும், மேலிருந்து இரண்டாம், மூன்றாம் தட்டுகளிலும் என் அன்புத் துணைவியாரால் கவனமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆங்கில, தமிழ் வீடியோப் படங்கள்! இன்றோ, வில்லை முறையான டீவீடீ இறுவெட்டுகளே சாதாரணமான பாவனையில் வந்துள்ளன. எனவே, காந்த-நாடா முறையில் அமைந்த 'அன்றைய நாகரீகச்' சாதனங்களாகிய எமது வீடியோப் படங்கள் இன்று அனேகமாக உறங்குகின்றன.

 

எனினும் என் லேஸர் சுண்டெலியை வீசுவது போல், இவைகளையும் வீசி விட முடியுமா? இவற்றில் சில, எத்தனையோ தினங்கள் பற்பல மணிக் கணக்கில் விழித்திருந்து, பல நாட்கள் ஆராய்ச்சி செய்து தெரிந்தெடுத்து, தொலைக் காட்சியிலிருந்து பதிவு செய்த உலகப் பிரசித்தி பெற்ற சினிமாச் சாதனைப் படங்களின் பிரதிகள் அல்லவா? எனக்கும் என் இனியாளுக்கும் எத்தனையோ தினங்கள், நாம் சென்று பார்க்காத உலகின் நாடுகளைப் பற்றி அவற்றின் மக்கள், கலாச்சாரங்கள், வரலாறு, இயற்கை வளங்கள் முதலிய அறிவுகளை ஊட்டிய களஞ்சியங்கள் அல்லவா? இவை எல்லாம் இன்றைய டீவீடீக்களின் உருவில் வந்ததாக அறியவில்லையே! அப்படி வரும் எனவும் கேள்விப்படவில்லையே! வந்தாலும் அவற்றை வாங்குவதற்குப் பணம்? எனவே இவைகளை எல்லாம், தொடர்ந்து காப்பாற்றவே வேண்டும்!! 

இப்படியாக முடிவெடுத்து விட்டு, எழுந்து நின்று என் வலப் பக்கம் பார்த்தேன். ஒன்றின்மேல் ஒன்றாக இரு புத்தக நிலைப்-பெட்டிகள். அறையின் உட்கூரை மட்டும், எட்டுத் தட்டுகள். ஓர் எழுத்தாளனுக்கு வேண்டிய கடுதாசித் தாள், பேனாக்கள், கத்தரிகள், பிசின் போத்தல், தாளில் துவாரம் செய்யும் கருவி, விலாசக் கோவைகள், கடித உறைகள், முத்திரைகள், குண்டூசி, இப்படியாகப் பல பொருட்கள், குறித்த இடங்களில் காணப்பட்டன. அத்துடன், பல ஆங்கில அகராதிகளும், வெவ்வேறு கலைக் களஞ்சியங்களும் இருந்தன. ஆனால் என் கண்களோ, மனமோ சாதாரணங்களேயான அவற்றை மதிக்கும் நிலையிலில்லை. 

என்னைப் பெருமூச்சு விட வைத்தவை என்னவெனில், மேல்த் தட்டுகளில் கம்பீரமாக வீற்றிருந்த, இரு துறைகளின் நூல்கள். இவ் இரண்டு கூட்டமுமே, தடித்து, அகல-உயரமாக, மிருகத் தோலாலான வெளியட்டைகளுடன், பொன் நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு, தைத்து அமைக்கப்பட்ட ஆங்கில நூல்கள். 

மேல் தட்டில், பல்லாண்டுகளின் இலக்கிய மதிப்பீட்டின் பின் ஒரு பிரபல நூலாக்க நிறுவனத்தினால் வெளியிடப் பட்ட, உலகின் வெவ்வேறு  பகுதிகளில் எழுதப்பட்ட மிகச் சிறந்த, இன்றைய சிறுகதைத் தொகுதிகள். இவை, என் தெருப்பக்க அலுமாரியில் சொகுசாக உறங்கும், பழைய உலக வழக்கின் அன்றைய 1000 சிறுகதைக் களஞ்சியம் என்ற பத்து நூல்களின் பின்னோடித் தம்பிமார் எனலாம். கீழ்த்தட்டிலே, நோபல் பரிசுத் திட்டம் தொடங்கி நடக்கும் ஒரு நூற்றாண்டுக்குள் இலக்கியப் பரிசுகள் பெற்ற முக்கியவர்களின் பிரதான ஆக்கங்கள் அடங்கிய புத்தகப் பொக்கிசங்கள். இவற்றை எல்லாம் பற்பல கனவுகளுடன், எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிப் பணச் செலவும் செய்து, ஆண்டுகளாகச் சேர்த்து வைத்தும், நான்என்றும் முழுமையாகப் படிக்க வில்லையே என்னும் துக்கம் மேலிட, பத்து நிமிடங்கள் இளைப்பாறி விட்டு, அதே சுவரின் வலப்பக்கம் நகர்ந்தேன்.

அங்கு நான் காண்பது என்ன? மேல் தட்டிலே, புதினப் பத்திரிகைகள் போன்ற, அன்றன்று வாசித்து விட்டு எறியும் பிரசுர ஆக்கங்களுள், எனக்கு ஆர்வமுள்ள கருப் பொருள்களிலே வெட்டி எடுத்துப் பிரித்துச் சேமித்த உபயோகமான கட்டுரைகள், கத்தரிப்புகளுடன் ஒரே வரிசையிலே, குத்தி-நிறுத்தி அடுக்கப் பட்டிருந்த 24 பெட்டிகள் பூரண கர்ப்பமுற்றுத் தெரிந்தன. கீழ்த்தட்டில், ஆங்கில 'வாசகர் மஞ்சரி' மாசிகையின் பழைய பிரதிகள், 50 ஆண்டுகளின் சேமிப்பாக, வருடம்-மாதம் வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டு உறங்கின. 

இவ்விரண்டு தட்டுகளுக்கும் இடையே உள்ள ஐந்து தட்டுகளில், பிரபல ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு நூல்களும், தனிக் கவிஞர்களின் கவிக் கோவை நூல்களும், உலகின் பிரசித்தி பெற்ற நாவல்களின் பிரதிகளும் ஆசிரியரின் பெயர்களின் எழுத்து வரிசையில் நிம்மதியாகக் குறட்டை விட்டன. 

அவற்றில் படிந்திருந்த தூசியையாவது, நேரம் கிடைத்தவுடன் தட்டித் துடைக்க வேண்டும் என மனதில் பதித்துக் கொண்டு, 90-பாகை திரும்பி, அடுத்த தட்டுகளைப் பரிசீலித்தேன்.     

இவற்றில் இருப்பவை, முக்கியமாக, எமது எழுதும் தொழிலைப் பற்றிய நூல்களே. இன்றைய எழுத்தாளராகப் பயிற்சி பெற விரும்பும் இளையோருக்கும் புதியோருக்கும் பலன்தரும் முறையில், தம் அனுபவத்தையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக, தாராளமனம் படைத்த, முதிர்ச்சியடைந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. நாவலிலக்கியம், நாடகங்கள், சிறுகதைகள், கவிதைப் படைப்புகளாகிய எல்லாத் துறைகளிலும் இவை பரந்து அடங்கியன. இவற்றுடன், இந்த அடுக்குப் பலகைகளில், கேலிச் சித்திரங்கள் உட்பட, வெவ்வேறு ரகப் படக் கலையாக்க முறைகள் பற்றிய நூல்களும் உண்டு. பல அளவுகளிலிருந்த இந்நூல்கள் ஒழுங்கீனமாகக் காணப் பட்டன. 

இவற்றையும் சீர்ப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன், அறையின் நான்காவது பக்கத்தின், பதிந்த அலுமாரியைத் திறந்து உற்று நோக்கினேன். இப்போ வேறுவகை அனுபவங்கள் காத்திருந்தன.

அதன் சறுக்குப்பலகை மூடியைத் தள்ளியவுடன் உள்ளேயிருந்த ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு விட்டத் தட்டுகள், அதாவது சீடீக்களும் டீவீடிக்களும், தலை நீட்டின. அத்துடன் எனது நிழற்படக் கமெராக் கருவிகளும், கணினிக்கு உதவக் கூடிய, முன்னர் பாவித்து, எறிய விருப்பமின்றிக் கருமிக் காத்து வைத்திருக்கும் பலவித உபகரணங்களும், மின்சார, மின்னணு உதிரிப் பாகங்களும், சீரான சிறு அடுக்குகளில் காட்சியளித்தன. வில்லைகளை, தமிழ், ஆங்கிலப் படங்கள், பாட்டுக்கள், என இனங்கண்டு வெவ்வேறு  ஆன கட்டுக் கட்டுகளாக, கூட்டம் கூட்டமாக என் தருமபத்தினியார் (அவாள் நீடூழி வாழ்க!) அடுக்கி இருந்தார். வீடியோக்களை, என்றாவது, எமக்கு ஒருநாளில் 24-அல்ல, 48-மணிகள் என வரம் கிடைக்கும் காலம் வில்லைகளாக்கி, இங்கேதான் வைக்க வேண்டுமென எண்ணிக் கொண்டு அடுத்த அறைக்கு அசைந்து சென்றேன். 

அது எனது படுக்கையறை. நான் இரவிரவாக வாசித்த களைப்பில் கண்கள் தாமாகவே மூடும்போது தனித்து உறங்கும் அறை. எனினும் அங்கும் ஆறுசோடி நாற்தட்டு நிலைப் பெட்டிகளுள் நெருக்கமாகத் திணித்து நிற்கும் நூலழகிகள், நாயகரைத் தேடும் காதலிகள் போன்று தவம் செய்கின்றன. அண்மையில் எனது நவீன ஆங்கில இரணைக் குறள்களைச் சமைப்பதற்கு முன்னறைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கீழ்த்தட்டு ஒன்றில் திரிசங்கின் சுவர்க்கத்தில் இருக்கும் என் திருக்குறள் இலக்கியத் திரவியங்கள் தவிர, எனது தமிழ் தேட்டங்களெல்லாம் இவ்வறையிலேயே வசித்து என் இன்ப இரவுகளைப் பகிர்கின்றன. 

இவ்வழகிகளில் மூதாட்டிகள், கிழவிகள், நடுத்தர மங்கையர், குமர்களுடன் அழகிகளாக வரவிரும்பித் தாறுமாறான சில்லறைக் கடை நகைகளுடனும், பளிச்சிடும் பலவகையான புடவைகள், சட்டைகளை அரைகுறையாக அணிந்து கொண்டும் ஆடம்பரிக்கும் மயக்குக் கன்னிகைகளும் உண்டு. எனினும் தமிழ் என்றால் தள்ளி வைக்க ஏதோ ஒரு தயக்கம்! (அது என் நோய்களில் ஒன்றா?)

என் படுக்கைக்கு எதிர் நேரேயுள்ள மேற்தட்டிலேயே நான் தினமும் பல தடவை வணங்கி வரும் கடவுளர்கள் வீற்றிருக்கின்றனர். நான் விரும்பாத பாம்பு அவர் கழுத்திலிருந்து கண்சிமிட்டி நாக்கைநீட்ட, சிவன், நட்டுக்குநடுவில் நாயகனாக! அவரைச் சுற்றிப் புத்தர், இயேசு, வள்ளுவர், இஸ்லாமின் ஒளியுருவமாக ஒரு பிறையும் நட்சத்திரமும், ஒரு பித்தளை மணி, மெழுகுதிரிதாங்கி, முதலியவையே எனக்கு இன்று வாழ்வில் பலம் அளிக்கும் வழிகாட்டிகள். 

இவை இந்த இடத்தில் இருப்பது ஏன்? ஏனெனில் இவற்றின் கீழ்த் தட்டுகளிலேயே சமயம்சார்ந்த என் நூல்ச் சேமிப்புகள் எல்லாம் இடம் பெறுகின்றன. 

சைவம், புத்தம், இந்து ஆசாரம், கிறிஸ்துவங்கள், இஸ்லாம், அகமதியம், சாய்பாபா, மகரிஷி, காந்தி, போன்ற துறவிகளின் சிந்தனைகள் எல்லாம் இத் தட்டுகளிலிருந்து என்னை அழைத்தன. மேற்கூறிய கூட்டத்துக்கு வலது பக்கத்தில் உள்ள தட்டுகளில், எனது இடைக் காலத்து அன்றைய வாழ் நிலைக்குப் பலமளித்த திட-பாதங்களான எந்திரிகத் தொழில் நுட்பத்துக்கும் முகாமைத்துறைப் பரிபாலனத்து இயலுக்கும் ஆதாரமாய் இருந்தவையில், நான் பரிசளித்தோ, தாமாக மறைந்தோ போனவையை விட, மீதியானவையில் ஒரு சில ஞாபகார்த்த நூல்களும், என் ஆங்கிலக் கவிதைகள் தனித் தனியாக வெளிவந்த உலகக் கவிதைத் தொகுப்பு நூல்களும், என்னால் எழுதப்பட்ட மற்றைய தமிழ், ஆங்கில நூல்களும், ஈழத்தின் வரலாறும், அரசியலும், சம்பந்தமான ஆதார ஏடுகளும், பலமுறை நுகர்ந்த அடையாளங்களுடன் புன்னகித்தன.

அவ்வறையின் யன்னலுக்குக் கிட்டவுள்ள ஆறு அலுமாரிகளில், மேற் கூறியுள்ள என் தமிழிலக்கிய நூல்களுடன் கூட்டுக் குடித்தனம் நடத்துவது, ஆங்கில நாடகங்களும் முற்கால ஆங்கிலக் கவிகளில் மிகவும் புகழ்பெற்ற, நான் விரும்பிய, இருபது வரை கவியரசர்களின் முதற் பதிப்புத் தொகுப்பு நூல்களுமே.

அவற்றுடன், தமிழ் அரசியல், இலக்கிய மாசிகைகள் போன்ற பல பத்திரிகைகளின் ஆண்டு ரீதியான கட்டுக்களும், தனிமனிதர் தம் வாழ்வினில் முன்வர உதவக் கூடிய, நான் பின்பற்றி நலன்கண்ட, சுய-திருத்தத் துறை நூல்களும் அத் தட்டுகளில் இருந்தன.

இவற்றைப் பார்வையிட்ட பின், அந்த அறையில் உள்ள ஒரேயொரு மேசைக்கு எனது கண்கள் மேவின. இம்மேசை என் கட்டிலுக்கு அருகாமையில், படுத்திருந்து கொண்டே சாமான்களை வைத்தெடுக்க வசதியாக நிலைக்கப் பட்டுள்ளது. தலையணைக்குக் கிட்ட அமுக்குப் பொத்தானுடன் ஒரு மின்சார விளக்கு.  நித்திரை வருமட்டும் வாசித்து, எழுந்து சிரமப்படாமல் அப்படியே அணைத்துவிட்டுத் தூங்குவதற்கு வசதியாக அமைந்துள்ளது. அத்துடன் அம் மேசையில், ஒரு பழைய கணினியும், ஒரு புதிய மடி-ரகக் கணினியும், ஒரு பழைய கைத்தட்டெழுத்து யந்திரமும், அண்மைத் தினங்களில் வாசித்து முடிக்காத ஓரிரண்டு நூல்களும் காணப்பட்டன. படுக்கையோ என்னை வா!, வா! என அழைத்தது.

இன்றைய காலத்தில் ஒவ்வொரு நாளும் அரைவாசி நேரம் இந்தத் துணைவியுடனும் (கழிப்பது அல்ல, உண்மையில்...) களிப்பது வழக்கமாகி விட்டதே! அந்தச் சொகுசுத் துணையையும் உதாசீனப் படுத்த முடியாது அல்லவா? எனவே அப்படியே சாய்ந்து, கண்களை மூடி இளைப்பாறினேன். என் மனத் திரையில், பழைய, அன்றைய, அறுபது வருடக் காட்சிகள் கடுகெதியில் ஓடத் தொடங்கின.  அவற்றைப் பார்த்து மகிழவோ மனம் வருந்தி ஏங்குவதற்கோ ஆயத்தமானேன். முதற் காட்சியிலே நான் ஈழத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன். பன்னிரண்டு வயசு. கட்டைக் களிசான், புத்தகக் கட்டு, முதலியனவுடன். 

நான் பெற்றோரை இழந்து தஞ்சம் புகுந்திருந்த என் தாய்மாமனார் வீட்டிலிருந்து, என் கல்லூரி மூன்றே கால் மைல்க்கட்டை தூரம். வெறுங்காலுடன் நடந்தே தான் போக வேண்டிய நிலை. அண்ணனார், மாணவர் கூட்டுறவுக் கடைக் கணக்குகளை ஓர் ஆசிரியரிடம் பாரம் கொடுத்த பின்னரே வரமுடியும். எனவே நான், மாணவர் சிலருடன் சங்கத்தானையின் யாழ்-கண்டி றோட்டால் நடந்து, சாவகச்சேரியை அடைந்து, வழக்கு மன்றத்துக்கு முன் இருந்த சரஸ்வதி புத்தகக் கடையில் பல நிமிடங்கள் கழித்த பின் அண்ணருடன் என் பயணத்தை முடிப்பேன். கடைச் சொந்தக்காரர், தாடிக்காரக் கனகசபை என்பவர். 

தன் காதலில் தோற்ற நாள் முதலே தாடி வளர்த்தார் என்பார்கள், பையன்கள். நான் ஒருநாள் அதைப்பற்றிக் கேட்டேன். அதனால் அன்று அவரின் கோபத்தின் சுவாலையால் சுடுபட்டதை இன்றும் என்னால் மறக்க முடியாது. ஆனால் அதன்பின்னர் நாம் நண்பர்கள். அவர், பல மாசிகைகளை இரவல் தருவார்.

நான், வீட்டில் அன்றன்று இரவில் வாசித்துவிட்டு அடுத்த நாள் காலை கல்லூரிக்குப் போகும் வழியில் தவறாமல் அவற்றைப் புதுச் சஞ்சிகைகளென விற்பதற்காக, திரும்பக் கொடுத்து விட்டே போக வேண்டும். தென் இந்தியத் தமிழ்நாட்டிலிருந்து அன்றும் இறக்குமதி செய்யப்பட்ட கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், பேசும்படம் எல்லாம் நான் அந்நாளில் கரைத்துக் குடித்தவை.

அவை, எனக்கு எழுதுவதில் ஒரு நெருப்பாசையை ஏற்றி விட்டன. அன்று, இலங்கையில் வெளிவந்த சஞ்சிகைகள் மிகக் குறைவு. வீரகேசரி ஞாயிறு இதழ், ஒரு விதிவிலக்கு. எனவே, என் சிறுவயதின் நாயகர்கள், பெரும்பாலும் இந்தியரே:- காந்தி, நேரு, ராஜாஜி, பாரதி, கல்கி, நேதாஜி, சுத்தானந்தர், விவேகானந்தர் முதலியோரே! ஈழத்தில், என் தந்தையாரும், தமிழாசிரியர் இணுவிலின் வித்துவான் சபா-ஆனந்தரும், கணக்கு மாஸ்டர் பாலசுப்பிரமணியமுமே என் நாயகர்கள். 

தந்தையாரோ, இந்தியாவில் இருந்து இராமாயணம் இரண்டு கட்டு, மகாபாரதம் நாலு கட்டு, விக்கரமாதித்தன் கதை, நல்லதங்காள் கதை போன்ற நூல்களை வாங்கி வந்து பெரியதொரு பெட்டகத்துள் அடுக்கி வைத்து, அதன் நூதனப்  பூட்டை எப்படித் திறப்பது என்றும் காட்டித் தந்தார். தான் அதிகம் கற்கா விடினும், தனது உலகறிவுடன், தன் பையன்களுக்குக் கல்வியில் விருப்பையும், வாசிப்பதில் ஆர்வத்தையும், மேடைப் பேச்சு, எழுத்துக் கலையின் மகிமைகள், எல்லாம் சொல்லித் தந்து ஊக்கினார். 

இதுவே, பிஞ்சில் விளைந்த ஒரு புத்தகப் பூச்சியாகி, பூச்சியாகவே நான் தொடர்ந்து வாழ்வதன் மர்மம். 

அன்று நான் விரும்பிப் படித்த சஞ்சிகைகளில் பேசும்படமும் ஒன்று. நான் முதன்முதல் பிரசுரிக்கப் பட்ட பத்திரிகை, பேசும்படமே. அதன் பின்னர் வீரகேசரி. பேசும்படத்துக்கு ஒரு விகடத் துணுக்கையே அனுப்பினேன். அடுத்த மாதம் அதைப் பிரசுரித்தது மட்டுமல்ல, அதன் பரந்த-மன முன்னோடி ஆசிரியர், இரண்டு ரூபாவுக்கு ஒரு போஸ்டல் ஓடரையும் அனுப்பி இருந்தார்! பதினான்கு வயதில், பணம்உழைத்த எழுத்தாளனானேன்! என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்!!

அதற்கு முதல், 30-01-1948 அன்று மகாத்மா காந்தி சுடப்பட்ட செய்தியை, தில்லைநாயகம் எனும் என் அண்ணன் தன் கையாலேயே உருவாக்கிய சிறு 'படிகைக்கல்' வானொலியில் கேட்டு, அழுதுகொண்டே, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு கவிதைகள் எழுதியதும் நினைவில் வந்தது.  அதேஆண்டு என் 14-ம் வயதில் நூல்நிலையங்களில் பெற்ற அறிவுடன் எழுதி, வீரகேசரியில் வெளியிடப் பட்ட, வான்வெளி வாயுமண்டலங்கள் பற்றிய கட்டுரையே, என் பிரசுரிக்கப்பட்ட முதல் முழுநீளக்கட்டுரை. பின்னர் அதே கருவில் 2-3 வெளிவந்தன.

அதன்பின், கொழும்பு பல்கலைக் கழகத்துக்குப் பொறியியல் படிக்கத் தெரிவு செய்யப் பட்டது, குடிசார் பொறியியல் கற்றுச் சேவையாற்றிப் பட்டயம் பெற்றது, இங்கிலாந்தில் மேற்படிப்பும் ஆராய்ச்சியும் செய்து மேலும் பல பட்டங்களையும் பட்டயங்களையும் பெற்றது, மணம் முடித்து நான்கு பிள்ளைகளைப் பெற்றது, பேராசிரியராக இளைப்பாறி, பல்லாண்டுகளின் பின், திரும்பவும் எழுத்தில் காலடி வைத்தது, எல்லாம் என் மனதிலே படங்களாக ஓடி ஓடி என்னைக் களைக்கச் செய்து, எழுதி எழுதி இந்த மட்டில் என்னதான் சாதித்து விட்டேன் என்ற விரக்திக் கேள்வியுடன் சோர்ந்து உறங்கவே வைத்து விட்டன.

"என்ன, இண்டைக்கு ஆறுதலே எடுக்கிறியள்? எல்லாம் சுத்திச் சுத்திப் பாத்தியள். கண்டியளே புத்தகங்களாலை வீட்டுக்குள்ளை வந்து சேருற தூசியும் ஊத்தையும்! இருந்திட்டு ஒரு நாள் எண்டாலும், இதுகளைத் தட்டித் துடைச்சு, அடுக்கி வைக்க வேண்டாமே? விடிஞ்சால் பொழுது பட்டால் எழுத்து, எழுத்து, எழுத்து எண்டு மாரடிக்கிறியள். இதாலை கடைசியிலை என்ன பலன் வரப் போகுது? யோசியுங்கோ! அதுசரி, உங்கடை சுண்டெலி செத்தே விட்டுதோ?" 

இப்படியான கூக்குரல் அரிச்சனைக்குப் பின் தன்மானமுள்ள கணவர்கள் எவரும் படுத்திருக்க முடியுமா? எழுந்து ஓடினேன், நான், ஹரோவின் பவுண்டுக் கடையை நோக்கி, ஒரு குண்டோட்டச் சுண்டெலி வாங்கி வருவதற்கு!

நன்றி ;பேராசிரியர் கோபன் மகாதேவா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:37

மஞ்சள் பட்டு!
------------
1
திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் .

நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் .

இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல சம்பளம் ,இரண்டு கார்கள் ,மூத்தமகனுக்கு ஏழு வயது,இளைய மகளுக்கு நாலு வயது . இனி இதைவிட பெரியதொரு வீடு தேவை என்று தீர்மானித்து அடுத்த வீடு தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது .இம்முறை இன்னொருவரின் வீட்டை வாங்காமல் புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்குவது என்று தீர்மானித்து எந்த இடத்தில் வாங்குவது ,எந்த வீடு கட்டும் நிறுவனத்திடம் கட்டக்கொடுப்பது என்ற ஆராய்ச்சியில் இருவரும் இறங்கிவிட்டார்கள் .

இருவரும் தினமும் வேலையால் வந்து இதே ஆராய்சிதான் .வேலைக்கு செல்ல போக்குவரத்து வசதி ,பிள்ளைகளின் படிப்பு என்று பார்த்து வீட்டை மார்க்கம் நகரில் வாங்குவது என்றும் ,புது வீடு கட்டும் நிறுவனங்கள் Mattamy , Greenpark , Remington போன்றவர்களின் விளம்பரங்களை பார்ப்பதும் பின்னர் அவர்களின் மாதிரி வீடுகளுக்கு செல்லுவதும் என்று திரிந்து முடிவில் அகண்ட காணியுடன் சதுரமா திறந்த உள்ளக அமைப்பை கொண்ட Mattamy  நிறுவனத்திடம் நாலு அறைகள் மூன்று குளியலறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்க முடிவெடுத்துவிட்டார்கள் .ஒரு சனிக்கிழமை காலை பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு Mattamy நிறுவனத்திடம் போய் வீடு கட்டி முடிய ஒன்றரை வருடங்கள் ,கட்டு காசு இருபது வீதம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு அவர்ளே அந்த நிறுவனம் வைத்திருந்த வரைபடத்தில் இவர்கள் வீட்டின் மேலே ஒரு பச்சை பட்டனை குத்த சொல்ல அதை சந்தோசமாக மகளை கொண்டு குத்திவிட்டு வீடுதிரும்பிவிடார்கள் .

அவர்கள் கட்ட கொடுத்த வீட்டின் பின்பக்கம் ஒரு பெற்றோல் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் மாதத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ காரை கொண்டுபோய் பெற்றோல் நிலையத்தில் விட்டு விட்டு தாம் கட்ட கொடுத்த வீடு எந்த நிலையில் இருக்கு என்று அத்திவாரம் போட தொடங்கியதில் இருந்து அதை பார்ப்பதும் படம் எடுப்பதாகவும் இருந்தார்கள் .

இப்போ வீடு கட்டும் நிறுவனம் தாம் கட்டும் வீடுகளை சுற்றி பாதுகாப்பிற்கு வேலியையும் அடைத்து உள்ளே பொதுமக்கள் எவரும் புகமுடியாமல் ஒரு காவலாளியையும் போட்டுவிட்டார்கள் .இப்போ வீடு எந்த அளவில் இருக்கு என்று பார்க்க இரண்டு முறை முயற்சித்தும் காவலாளி அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துவிட்டார் .பின்பக்கம் வந்து வேலியால் எட்டி பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள் .

அன்று வேலையால் வந்த நித்தியா செல்வனிடம் ஒரு குண்டை தூக்கி போட்டாள் .புது வீடு கட்டுபவர்கள் கோயிலில் பூசை வைத்து நூறு சங்குகள் அத்திவாரத்தில் புதைக்கின்றார்களாம் .வீடு கட்டும் நிறுவனமும் அதற்கு அனுமதி கொடுக்குதாம் ,உங்களுக்கு இவற்றில் நம்பிக்கை இல்லை என்று எனக்கு தெரியும் , நீங்கள் ஒருவாறு என்னையும் இப்ப கொஞ்சம் உங்களை மாதிரி மாத்திப்போட்டீர்கள் ஆனால் புது வீடு கட்டிய பலரும் தாங்கள் சங்கு தாட்டதாக சொல்ல எனக்கும் அதை செய்யவேண்டும் போலிருக்கு .வீடு இப்ப அத்திவாரம் தாண்டி மேலே எழுந்துவிட்டது சங்கு தாக்காவிட்டாலும் பரவாயில்லை என்ரை மனதிருப்திக்கு ஐயரிடம் ஒரு பூசை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்துவிடுவம் . மனைவியின் மனத்தை நோகடிக்க விரும்பாமல் செல்வன் அடுத்த வெள்ளிகிழமை மனைவி பிள்ளைகளுடன் கோயிலுக்கு செல்ல ஐயர் ஒரு சிறிய வெள்ளிகுடத்தில் மஞ்சள் தண்ணி,விபூதி ,சந்தனம் ,அஷ்டலட்சுமிற்கு போர்த்தது என்று ஒரு மஞ்சள் பட்டுத்துணியும் கொடுத்தார் .

வீட்டின் நிலகீழ் அறைக்குள் போய் நிலத்தில் மஞ்சள் தண்ணியை தெளித்து சுவரில் திருநீறு சந்தனத்தை பூசி ஏதாவது ஒரு வீட்டு கூரையுடன் இருக்கும் நிலையில் மஞ்சள் பட்டை கட்ட சொல்லிவிட்டு இருநூறு டொலரை வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டார் .

காருக்குள் மனைவியுடன் சண்டை போட தயாராக ஏறிய செல்வன் பிள்ளைகளுக்கு முன் வேண்டாம் என்று விட்டுவிட்டான் .வீடு கட்டும் இடத்திற்கு போய் காவலாளிக்கு தமது சம்பிரதாயம் என்று எவ்வளோ விளங்கபடுத்தியும் அவன் புது வீட்டிற்குள் போவது பாதுகாப்பு இல்லை என்று உள்ளே விட மறுத்துவிட்டான்.

எல்லோரும் மனத்தாங்கலுடன் வீடு திரும்பிவிட்டார்கள் .இரவு பத்துமணி இருக்கும் செல்வன் நித்தியாவை கூப்பிட்டு யோசிக்கவேண்டாம் தான் எப்படியும் ரகசியமாக வேலி தாண்டி அலுவலை முடித்து விடுவதாக சொன்னான்.

செல்வன் ஐயர் கொடுத்த பொருட்களுடன் தனது நண்பனையும் அழைத்துகொண்டு பயம் தெளிய சற்று ஏற்றிவிட்டு புதுவீட்டை நோக்கி புறப்படுகின்றான் . பெற்றோல் நிலையத்தில் காரை நிற்பாட்டி நண்பனை காவலுக்கு விட்டு விட்டு செல்வன் தெருவில் இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மெதுவாக வேலி பாய்ந்துவிட்டான்.

ஒரே இருட்டு .தனது வீடு இருக்கும் குறிப்பு அறிந்து பாதி கட்டிமுடிந்து விட்ட கதவில்லாத வீட்டின் முன்புறம் போய் நிலக்கீழ் அறைக்கு போகும் படிகளில் தட்டு தடுமாறி இறங்கி மஞ்சள் தண்ணியை நிலமெங்கும் தெளித்துவிட்டு விபூதியை சுவரில் பூசி அதற்கு மேல் சந்தனத்தை வைத்து விட்டு மஞ்சள் பட்டை எடுத்து கூரையுடன் இருக்கும் ஒரு சிலாகையில் கட்டிவிட்டு அலுவலை கனகச்சிதம் ஆகமுடித்த திருப்தியில் திரும்ப வேலி பாய்கின்றான்

ஏதோ பெரிய இராணுவ தாக்குதல் செய்த திருப்தியில் பெருமிதத்துடன் வீடு போய் சேர்ந்த செல்வன் நித்தியாவின் அதி உச்ச வரவேற்புடன் படுக்கப்போய்விட்டான் .

 

2

புது வீடு குடி புகுந்து நாலு வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் செல்வனும் நித்தியாவும் நிம்மதியை தொலைத்தும் நாலு வருடங்கள் .

இரண்டு மாதங்கள் புல்லு வெட்டாததால் ஒரு அடிக்கு மேல் வளர்ந்திருந்த புல்லை வெட்டுவதற்கு செல்வனுக்கு சரியான சிரமமாக இருந்தது .Lawn Mower ஐ நாலாம் நம்பருக்கு உயர்த்தி ஒருக்கா வெட்டிவிட்டு பின்னர் முதலாம் நம்பருக்கு இறக்கி திரும்ப ஒருமுறை வெட்டினால் தான் சரி என்ற முடிவிற்கு வந்தவனாக செல்வன் புல்லைவெட்டி தள்ளிக்கொண்டு மனதில் பொருமிக்கொண்டு இருந்தான் .

இந்த வீட்டிற்கு வந்து நாலு வருடங்கள் ஆகின்றது .புது வீடு என்று தளபாடங்கள் ,Curtain என்று தொடங்கி பின்னர் Backyard இல் பெரிய Deck அடிக்க Home Depot ஐ கொண்டு செய்து ,பின்னர் வீட்டிற்கு முன்பக்கம் கார்கள் தரிக்க ஒரு இத்தாலி கொம்பனியை கொண்டு Interlock என்று விலை கூடிய கல்லுகளை பதித்து கட்டியாகிவிட்டது .முதல் வருடத்திலேயே அளவுக்கு மீறிய செலவால் Line of Credit எடுத்து குடும்ப பொருளாதாரம் சற்று தடுமாறத் தொடங்குகின்றது .பிள்ளைகளின் படிப்பு ,அவர்களின் செலவுகள் இன்னும் அதிகரிக்க எடுத்த கடன்களை கட்டமுடியாமல் வாழ்க்கை பெரும் நெருக்கடியில் தொடர்கின்றது .

வீட்டின் விலை கூடிக்கொண்டு போகும் விடயம் ஒன்றுதான் அப்போ அவர்களுக்கு ஆறுதலை கொடுப்பதாக இருந்தது .ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு செல்லுபவர்கள் இந்த இரு வருடங்களும் அதற்கும் செல்லவில்லை .

புது வீடு பற்றிய கனவு மறைந்து பிள்ளைகள் படித்தால் காணும் என்ற நிலையில் வாழ்க்கை ஓடத்தொடங்கிவிட்டிருந்தது .அடிக்கடி உறவினர்கள், நண்பர்களுக்கு வைக்கும் பார்டிகளும் படிப்படியாக குறைந்துகொண்டு போய்விட்டது .

அடுத்த வருடம் சற்று பண கஸ்டத்தால் சற்று நிமிருவது போல ஒரு நிலைவர நித்தியாவிற்கு வேலையால் Layoff , கொஞ்ச பணமும் வேலை செய்த அனுபவத்திற்காக கொடுத்திருந்தார்கள் . இனி இந்த பண கஷ்டத்தில் இருந்து மீள்வது என்றால் இரண்டாவது வேலைக்கு போகவேண்டியதுதான் என்று செல்வன் முடிவுசெய்கின்றான் .கனடா வந்து பதினைந்து வருடங்கள் இரண்டாவது வேலை ஒன்றையே நினைத்திருக்காத செல்வன் தனக்கு வந்த விதியை நொந்து மரத்தொழிற்சாலை வேலை முடிய Swiss Chalet யில் Delivery தொடங்கிவிட்டான் .

இப்போ ஆறுநாள் வேலை, காலை போனால் வீடு திரும்ப பத்து மணியாகிவிடும். மனைவி பிள்ளைகளை சந்திப்பதே அரிதாகிவிட்டது .பிள்ளைகள் ஒழுங்காக படித்து வந்தததால் அவர்களை குழப்பாமல் செல்வனும் நித்தியாவும் செலவுகளை முடிந்தவரை குறைத்து வரும் வருமானத்தில் கையும் கணக்குமாக காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார்கள்

ஆசையாக வாங்கிய வீடு ,தோட்டம் ,பூமரங்கள் எல்லாம் கவனிப்பராற்று இப்போ Backyard இல் புல்லு ஒரு அடிக்கு வளர்ந்து பத்தையாகி விட்டிருந்தது. அதைத்தான் இப்போ செல்வன் வெட்டிக்கொண்டு இருக்கின்றான் .

ஞாயிற்றுகிழமை எப்படியும் புல்லை வெட்டவேண்டும் என்று முன்னரே முடிவெடுத்து இருந்த செல்வன் இப்ப தன்னை தானே திட்டிக்கொண்டு, புது வீடு வாங்கியதில் இருந்து மனுசர் ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கமுடியவில்லை என்று நொந்தபடி இந்த வீட்டை வாங்கித்தானே இவ்வளவு கஷ்டமும் வந்தது, ஏன் இந்த வீட்டை விற்றுவிட்டு இதிலும் சிறிதாக வேறு வீடு வாங்கினால் என்ன நினைப்பும் வந்து போகின்றது .

பக்கத்து வீட்டில் இருந்தும் புல்லு வெட்டும் சத்தம் கேட்கின்றது. தொடங்கி விட்டான் வெள்ளைக்காரன் என்று மனதில் சிறு எரிச்சல் செல்வனுக்கு வந்தது . பக்கத்து வீட்டில் இருப்வர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் உடுப்பு நடப்பு செல்வனுக்கு வீடு வாங்கிவந்த நாட்களில் இருந்தே பிடிக்காமல் போய்விட்டிருந்தது . அயலில் இருக்கும் வெள்ளை இனத்தவர்களுக்கு காணும் நேரம் எல்லாம் வணக்கம் சொல்லுவதும் வீட்டின் முன்பக்கத்தில் சற்று குப்பைகள் சேர்ந்தாலும் உடனே துப்பரவு செய்துவிட்டு நாங்கள் கனடாவில் இப்படிதான் இருக்கவேண்டும் என்றும் புத்திமதி சொல்லும் பிலிப்பன்ஸ்காரரை செல்வனுக்கு கண்டாலே ஆகாது .

கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டு விலை ஏறுவது பற்றியும், வங்கி வட்டி வீதம் பற்றியும் கதைத்து செல்வனை வெறுப்பேற்றி வைத்திருந்தார் . Hockey Season தொடங்க Maple Leafs கொடியை காரில் ஏற்றிவிட்டு சும்மா ஒரு வலம் வருவார் .விடுமுறை நாட்களில் ஒரு பியர் போத்தலை வைத்து உறிஞ்சிக்கொண்டு சுங்கானில் அவர் புகை விட செல்வனுக்கு பத்திக்கொண்டு வரும் .

புல்லு வெட்ட வெளிக்கிட்டால் ஒரு கண்ணாடி ,வேலை செய்பவர்கள் அணியும் Safety shoes , தொப்பி ,உடம்பு முழுக்க மறைக்கும் நீள அங்கி எல்லாம் போட்டுக்கொண்டு ஏதோ சந்திர மண்டலத்திற்கு செல்வது போல காட்சியளிப்பார் . இ ற்றை பார்த்துத்தான் செல்வன் அவருக்கு வெள்ளைக்காரன் என்று பட்டம் வைத்து இந்த மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களின் கனவே வெள்ளைகளை போல வாழுவதுதான் என்று நித்தியாவிற்கு சொல்லி சிரிப்பான் .அவன்தான் சரி நீங்கள் தான் மாறமாட்டீர்கள் என்று நித்தியா அவனுக்கு வக்காலத்து வாங்குவார்

ஒருநாள் செல்வன் வீட்டு Backyard இல் BBQ பார்ட்டி, பழைய பாடசாலை நண்பர்கள் ,கிரிக்கெட் விளையாடும் உறவுகள் என்று பலர் வந்திருந்தார்கள் .மணிக்கணக்கில் பார்ட்டி இழுபட்டு இறுதியில் பாட்டு கச்சேரி தொடங்கிவிட்டது . நேரம் அதிகாலை இரண்டை தாண்ட யாரோ வாசல் மணியடித்தார்கள் போய் பார்த்தால் போலிஸ் . சனிக்கிழமை என்று தெரியும் இருந்தாலும் நேரம் நன்றாக போய்விட்டது அயல்வீட்டுக்காரர்கள் அழைத்து சொன்னதால் தான் வந்தோம் அவர்கள் நித்திரை கொள்ளவேண்டும் எனவே பாட்டு கச்சேரி வைப்பதென்றால் வீட்டுக்குள் அல்லது கராஜுக்குள் வையுங்கள் என்றுவிட்டு போலீஸ்காரர்கள் போய்விட்டார்கள் ,செல்வனுக்கு பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் தான் பொலிசிற்கு அடித்திருப்பான் என்று ஒரு சந்தேகம் .

இப்போ செல்வன் இரண்டு வேலைகள் செய்வதால் வெள்ளைகாரனை போன சம்மருக்கு பிறகு சந்திக்கவில்லை .இப்போ அவரும் மெசினை தள்ளிக்கொண்டு வருகின்றார் போல என செல்வன் நினைக்க ,

Hello Buddy என்றபடி சந்திரமண்டலத்திற்கு செல்வது போல ஆள் வருகின்றார் .வழக்கம் போல வீட்டு விலை நல்லா கூடிவிட்டது என்று தொடங்கி தனது வீடு மிகவும் ராசியான வீடு . Bombardier இல் நிரந்தரம் இல்லாமல் வேலை நிறுத்தம் என்று இழுத்துகொண்டிருந்த தனது வேலை நிரந்தரமாகிவிட்டது ,வேலை தேடிகொண்டிருந்த மனைவி நேர்சிங் படித்து வேலை எடுத்துவிட்டார் .கல்யாணம் செய்து பன்னிரண்டு வருடங்கள் பிள்ளை இல்லாமல் இருந்த எங்களுக்கு பிள்ளை பிறந்திருக்கு என்று அடிக்கிகொண்டு போகிறார் .

By the way  வாற சனிக்கிழமை மகனின் முதலாவது பிறந்த நாள் .ஒரு சின்ன பார்ட்டி வைக்கின்றேன் நீ கட்டாயம் குடும்பத்துடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்து செல்வன் தலையாட்ட Don't forget it  என்றபடி போகின்றார் .

மனைவியும் பிள்ளைகளும் என்னப்பா அவர்களுடன் அவ்வளவு பழக்கம் இல்லை என்று பார்ட்டிக்கு வர மறுத்துவிட வெள்ளைகாரனின் மகனுக்கு வாங்கி வைத்த பரிசையும் கொண்டு செல்வன் பக்கத்து வீட்டு பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்கின்றான் .சில அயலவர்களும் பல உறவினர்களும் வீடு முழுக்க நிரம்பியிருகின்றார்கள் .பரிசை கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்துவிட்டு வெள்ளைகாரனின் கையை குலுக்க எங்கட பார்ட்டி பேஸ்மெண்டிற்குள் தான் என்றபடி செல்வனை கீழே படிகளால் அழைத்து செல்லும் போது இன்னமும் நான் பேஸ்மென்ட் முடிக்கவில்லை தேவையும் வரவில்லை என்கிறான் .

பல வகை குடிவகைகள் ,உணவு வகைகள் அடுக்கி வைக்கபட்டிருக்கு .செல்வனை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு என்ன குடிகின்றாய் என்று செல்வனை கேட்டுவிட்டு பின் பிளக் லேபலை ஊற்றி ஐஸ் போட்டு கொடுத்துவிட்டு Help Yourself எனக்கு மேலுக்கு வேலை இருக்கு என்று மேலே செல்கிறான் வெள்ளைக்காரன் .

கிளாசுடன் அங்கிருந்தவர்களுக்கு சியேர்ஸ் சொல்லிவிட்டு வாயிற்குள் விஸ்கியை விடும்போது சற்று நிமிர்ந்தால் பேஸ்மென்ட் கூரையின் சிலாகையில் மஞ்சள் பட்டும் சற்று தள்ளி சுவரில் அழிந்தும் அழியாத நிலையில் விபூதிக்குள் சந்தனம் தெரிகின்றது

நன்றி பரதன் நவரத்தினம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 May 2016 - 4:45

முட்கள்
-------
தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை... எல்லாத்தையும் உள்ளடக்கிய‌  துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் ...சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான். அந்த துணிப் பையை சப்வேயில் அல்லது வேறெங்கேயும் தவற விட்டால் 'பெ.. பெ'என விழிக்கக் கூடாது! என்பதற்காக 5 டொலர் தாளை எடுத்து கால்ச்சட்டையின் பிற்பொக்கற்றிலும் வைத்துக் கொள்கிறவன்.வேலையால் வருகிற போது வீதியில் கோப்பிக் கப்பை நீட்டிக் கொண்டு அங்காங்கே இருக்கிறவர்களில் இப்படி தவற விட்டவர்கள் சிலரும் இருக்கலாம் என்பது அவன்  நினைப்பு  .

“நாள், மாசம் போறதே தெரியிதில்லை.ஆனால், டாக்சி ஓடின பிறகு  உடம்பு    உலைச்சலாக இருக்கிறதடா” ராதாவிடம் சொன்ன போது,ஊரிலே தோழனாக இருந்தவன். இங்கேயும் தோழன் தான்."டேய்,நான் சம்மரிலே சைக்கிளிலே வாரது ஏன்?வேலை ஒன்றும் உடற்பயிற்சி கிடையாது, அதற்கென்று புறிம்பா செய்ய‌வேண்டும்.ஊரிலே நெடுக சைக்கிளிலே திரியிறதிலே உடற் பயிற்சி நடக்கிறதே  ...தெரியிறதில்லை. இங்கே பணத்தை குறியாய் வைத்து வேலையை   செய்கிறோம். ‘ பயிற்சியே’ வலியை பலன்ஸ் பண்ணுறது. இது  பலருக்கு தெரியாதபடியால் கொஞ்ச வயசிலே செத்துப் போறாங்கள் .கிடைக்கிற நேரத்தில் ஓடு அல்லது நட, நல்லதடா! "என்கிறான். 

கையிலே கிடக்கிற பையை என்ன செய்வது? அது தான் எடுத்து கழுத்திலே மாட்டியிருக்கிறான்.நகரக்காவலரின் கார் ஒன்று வீதியில் அவனை கடக்கையிலே, ஒரு மாதிரியாப் பார்த்துக் கொண்டு போனது. இவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் சந்தேகம் தான்.கறுப்பு வெள்ளை தான் தோலிலே இருக்கிறதே! மெல்லிய குளிர்காற்று வீச கைகளை ஸ்சுவிங் பண்ணி நடக்க நல்லாய் தான் இருக்கிறது. அவனும் ராஜகுமாரன் தான்.நகரமே இன்னும் விடியவில்லை.வீதி ஒரிருவரைத்தவிர அமைதியாய் கிடந்தது.சப்வே கிடங்குள் படிகளில்  இறங்கினான்.சப்வே என்கிற சிறிய ரயில் வர 3 நிமிசம் ஆகும் என மேலே தொங்கிற தொலக்காட்சிப் பெட்டியில் காட்டியது.அதிலே வந்து கொண்டிருந்த சிறிய சதுரத்தில் பேசுற செய்தியையும்,கீழே எழுத்தில் போற செய்தியையும் கவனித்தான்."ரஸ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது..."என்று போய்க் கொண்டிருந்தது. சிறிய திருப்பம்!இனி சிரியாப் போரில் உண்மைச் செய்திகள் கொஞ்சம் வெளியே வரலாம்.சிறிலங்கா துயரம் போய்,இப்ப சிரியாத் துயரம்.இந்த நாடு  பெருந்தன்மையுடன் பெருமளவு சிரியா அகதிகளை ஏற்கிறது. எங்களையும் இப்படித் தான் ஏற்றது.

முந்திய அரசில் இந்த நாடும் உள்ளடக்கலாக ...நேட்டோ நாடுகள் அனைத்துமே,ஜேர்மனியைத் தவிர அகதிகளை ஏற்காததிற்குக் காரணம்,அகதிகள் திரையில் வந்து,தமது துயரங்களைச் சொல்வார்கள்.போரின் கோரம் அம்பலமாகும்.நிறை கூடிய குண்டுகளைப் போட்டு நகர‌ங்களையும்,மக்களையும் அழிக்கிற இவர்களின் வீரத்தை, குரூரத்தை...இந்த நாட்டு மக்களே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.போரைத்  தொடர முடியாது என்பதால் தான்.இனி மக்கள் தான் கதாநாயகர்கள் ;பேசப் போகின்றார்கள்.போர் வெறியர்களின் உடம்பு கதிரையில் இருந்து போது நெளியப் போகிறது.சிறிலங்காவில், புலிகள் போரில் வெல்லா விட்டாலும் செத்துக் கொண்டிருக்கிற போதிலும் இந்த காரியத்தை செப்பனாக செய்து விட்டிருக்கிறார்கள்.அது,இன்று போர்க் குற்றம் பேசுற‌ளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.புதிய தொழினுட்பம் எங்களை அழிக்கிறதை மட்டும் செய்யவில்லை,விடியலையும் கொஞ்சம் கொண்டு வரவும் செய்கிறது. ஆனால், இந்த‌  அகதிப்பிரச்சனைகளுக்கு பெரிதும் காரணமான ....அமெரிக்கா,’கனக்க’ கதைக்கிறது.அகதிகளை ஏற்கிறதில் பயப்படுகிறது என்றில்லை,தட்டிக் கழிக்கிறது. ஜேர்மனியை விட மற்ற நாடுகளிலும் அதே தொடர் தான்.

இனிமேல் போரை அவ்வளவாக தொடர முடியாது

குயின் சப்வேயில் இறங்கி வெளிய வந்து,பஸ்ஸிற்காக‌ காத்து நின்றான்.

'பாபு' சினிமாவில் வருகிற சிவாஜி அணிகிற உடையில்,ஜமேக்கனாக இருக்க வேண்டும்,மூலையிலிருந்த பெரிய 'ஆடைக் கடையின் சோகேஸ் கண்ணாடியில் தன்னுடைய அசைவுகளைப் பார்த்துக் கொண்டு தீவிரமாக அரசியல் பேசிக் கொண்டிருக்கிறான்.மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்ற கவலை இல்லாது,அந்த நாட்டில் இருக்கிற ஆளும் கட்சியை ஏசுகிறானோ?இப்படி மூளை சுகமில்லாத ஈழத்தமிழ‌ர்களைக் கூட தில்லை வீதிகளில் கண்டிருக்கிறான். நல்ல உருவம்.நல்லா இருக்க வேண்டியவன்.நீதியற்ற படையினரின் வதை முகாம்களிற்குள் கொண்டு செல்லப்பட்டவர்களை அல்லது கொடூர நிகழ்வுகளை நேரிலே பார்த்தவர்களை சொந்தங்கள் சிலர் வெளிய எடுத்து விட,தாக்கம் சிலோமோசனில் வெளிப்பட...பரிதாபமாக திரிகிறார்கள்.தொண்டைத் தண்ணீ வற்ற கதைக்கிறானே,இந்தக் குளிர் நேரத்தில் கோப்பி குடித்தான் என்றால் நல்லாயிருக்கும்.ம்! யாரிடமாவது கையை நீட்டுறானா?இல்லையே!அவன் உட்பட மேலும் 2 பேர்கள் நிற்கிறார்கள். பார்வையாளர்கள். கையை நீட்டிக் கேட்டால் மட்டுமே இவன் பின்பொக்கற்றிலே இருக்கிற காசை எடுத்து கொடுப்பான்.வருகிற போதோ,போகிற போதோ...ஒரு தடவை மட்டும் தான் இந்த தானம் கூட‌ .

பல தடவைகள் வேலையால் வார‌ போது அதே சந்தியில் ஒரு வயதான பொம்பிள்ளையைப் பார்க்கிறவன்.அதனுடைய கப்பில் சில்லறைகளாக, ...தானமளிப்பவர்களிற்கு இதயம் சின்னதாக கிடக்கிறது போல இருக்கிறது,பசியாற்ற பத்தாது.அவன் 5 ரூபாய்யைப் போட்டதும் "நன்றி"சொல்லிப் போட்டு உடனே எழும்பிப் போய் விடுவாள்.எல்லா நாளும் எதிர் பட மாட்டாள்.அவனை விட வேறு சிலரும் போடுகிறார்கள் தான்.கடைசியாக பார்க்கிற போது,கப் கீழே விழுந்து கிடக்க, அவளும் விழுந்து கிடந்தாள். பரிதாப‌மாக இருந்தது!

போகிற ஒரு தமிழ்ப் பெட்டை...அவளிற்குக் கிட்ட போய் "மம்.மம்"என எழுப்பிப் பார்த்தாள்.செத்து விட்டாள் போல இருக்கிறது.என்ன செய்யிறது எனத் தெரியாமல் அவளும் விட்டுட்டுப் போய் விட்டாள்.பிறகு நகரக் காவலருக்கு தெரிந்து எடுத்துச் செல்லப் போறாள் தான்.  அகதியாய் வார எல்லாருக்குமே  இந்த நாடு மேலான நாடாக இருப்பதில்லையா?. அணில் ஒன்று வீதியில் குறுக்கே ஓடியது.இது எங்கே இருந்து வந்தது?கட்டிடங்களிற்கு தள்ளி மரங்களும் இருக்கின்றன தான்.

அவன், பசுமையான நினைவுகளுடன்  இருக்கிற‌ பிறந்த நாட்டை எவ்வளவு மிஸ் பண்ணுகிறான்."அங்கே இருக்கிற ஆளும் இனம் “கட்டாயம் பாடம் படிக்கவே போகிறது” "சாப மும் உடனே வருகிறது.நெஞ்சிலே இருந்து வெப்பக் காற்று  வெளி வருகிறது.மனிதாபமற்றச் சட்டங்களில் காதல் கொண்டவர்களாய் இருக்கிறார்களே! இங்கேயும் கூட அப்படியான சட்டங்கள் சமயங்களில் எட்டிப் பார்த்து விடுகின்றன‌. அப்ப, தலையை எந்த சுவரிலே கொண்டு போய் மோதுறறென்று தெரியிறதில்லை.  

இங்கேயிருந்து பஸ் ஏறி  டக்சி எடுக்கிற கராஜ்ஜுக்கு சிறிது தொலைவிலே போய் இறங்கிறவன்.பக்கத்திலேயே இறங்கலாம் தான். ஆனால்,கொஞ்சம் திரும்பவும்  ஓடினால் நல்லம் என்று...இறங்கி நடந்தும்,ஓடித்தான் போறான்.

உடற்பயிற்சி  எடுக்க இதை விட்டால் ஏது நேரம்? 

இருள் எங்கே பிரிகிறது.இறங்கிய பிறகு அதே மாதிரி கழுத்தில் மாட்டிக் கொண்டு ராஜநடை போட்டான்.ஒன்று இரண்டு நாய்களோடு திரிகிற சனங்கள் மட்டும் தான் எதிர்ப் பட்டனர்.பாலத்தடியை அடைந்த பிறகு மப்ளரை எடுத்து துணிப்பையின்  கைவளையத்தில் சுற்றினான்.அப்படி சுற்றா விட்டால்...கைவளையம் கழுத்தில் அண்டச் செய்யும். பார்த்தீர்களா !,ஒன்றிலே இறங்கின பிறகே, அதிலுள்ள‌ பிரச்சனைகளை  எப்படி கையாளுறது என்றதும் தெரிய வருகிறது.

நம்மவர்கள்,  ஈழப்போராட்டத்தில் இறங்காவிட்டால் ‘விடுதலையே கிடைக்கவே மாட்டாது’ என்ற உண்மையும் உறைக்கிறது.
அவன் 16 வயசில்  ஓடத் தொடங்கிய  போது  வழியில் பார்த்த அக்காட சினேகிதியிட தம்பிக்காரன் ஒருவன் தான் "ஓடு,ஓடு ...ஓடுறதை விடாதே,உடம்பு வைக்கும்"என்று இதிலே நிரந்தரமாக‌வே  தள்ளி விட்டவன்.பிறகே, ‘ஓடுற என்ற ஒரு உலகம் இருக்கிறது’ ...தெரிய வந்தது. அங்கே சிறிலங்கா பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து தட்டுப் பட்ட திருஞாவுகரசு, மரதன் வீரனாக நெடுகவே இருந்தான்.இந்தியனாமி (இருந்த காலத்தில் )அவன் மனைவி சுட்டுக் கொன்று விட்டது. 

ஓட்டதில் பல சின்னச் சின்ன விசயங்கள் எல்லாம் அவனுக்குத் அத்துப்படி.'ஓடுவது அவசியமானது' என்று தெரிகிறதே! அதாலேயே ஊரிலே  பல இடங்களைப் பார்த்திருக்கிறான்.நாய் விரட்ட குடல் தெறிக்கவும் ஓடி  தப்பியிருக்கிறான். அவனுக்கு தெரியாத சிலர் இங்கேயும் கூட‌ "நீ ஊரிலே மரதன் ஓடுறவனில்லையா?"என்று தோளிலே தட்டிக் கேட்டிருக்கிறார்கள்.

இங்கே ஒரே பகுதியை மட்டுமே பார்க்கோணும் என்று  விதி  இருக்கிறது

குளிருக்கு சிகரட் பத்திக் கொண்டு எதிரே வந்த கறுப்பன் "இ ட்ஸ் வெரி குட்"என்றான்.அதிக செரிவுடைய...குடியை பாவிக்கிறவர்,சிகரட் பத்துறவர்களால் பெரிதாக ஓட முடியாது.வேணுமென்றால் ஓடிப் பாருங்கள் ஓடுவது எவ்வளவு கஸ்டம் என்பது தெரிய வரும்.அவன் பள்ளி ஆசிரியனாக இருக்க வேண்டும்.நட்பாக சிரித்த முகத்துடன் அவனை என்கரேஜ் பண்ணி விட்டு போய்க் கொண்டிருந்தான்.

கராஜ்ஜில் நின்ற‌ டக்சியில் பையை வைத்து விட்டு,வெளிப்புறம் ஊத்தையாய் இருக்கிறதா?எனச் சுற்றி  வர பார்த்தான்.கதவுகளின் கீழ்ப்பகுதிகளில் வெள்ளை பூத்திருந்தது இன்னம் கறுப்பு பரவ வில்லை.பனிநாடு.ஒரு தடவை வீதியில் ஓடிப் போட்டு வந்தாலே வெள்ளைப் படிவு ஏற்பட்டு விடும்.கறுப்பு நிறம் ஊத்தை.அதுகூடி விட்டால் கழுவவே வேண்டும்.அல்லது கதவை திறக்கிற‌ போது கையிலே  சேர்ட்,கால்சட்டையிலே படுற பகுதியில் எல்லாம் பிரளும்.உள்ளேயும் ஒரு நோக்கு.காலுக்கு கீழேபோடுற றபர் விரிப்புகளில் மண் தெரிய‌ எடுத்து ஒரு உதறல்.திரும்பப் போட்டான்.பரவாய்யில்லை.முன் சீட்டுக்குப் பின்னால் உள்ள செய்திப் பேப்பர்கள் வைக்கிற பையை தடவினான்.காலி சிகரட் பெட்டி,கசங்கிய கை துடைக்கிற பேப்பர்,டொபி உறை...என கிடந்த குப்பைகள். எடுத்து வெளியில் அதற்கென கிடந்த கூடையில் எறிந்தான். பையின் அடியில் என்னவோ நெருடின மாதிரி இருந்தது.திரும்ப கையை விட பொக்கற் பேர்ஸ் ஒன்று கிடைத்தது. திறக்க அந்த நாட்டிலே வேலை செய்ய கொடுக்கப்படுற சோசல் இன்சுரன்ஸ் நம்மர் அட்டை உட்பட நிறைய கார்ட்டுகளுடன் ...தம்பியன் முக்கியமான ஒன்றை தான் தவற விட்டிருக்கிறான்.தில்லைக்கு அனேகமாக‌இரவு நேரம் ஓடுற ஓட்டியினுடையதாக தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.அதை ஏன் பயணிகள் பகுதியில் போய் செருகினான்?

அலட்சியம் தவிர வேற என்ன‌!

எடுத்துக் கொண்டு போய் கராஜ்காரனிடம் கொடுத்தான்.அவன் பெயரைப் பார்த்து விட்டு "இங்கே ஓடுற ஓட்டியினுடையதில்லை"என்றான்.' சொலமன்'என்று முடியிறது எந்த நாட்டுப் பெயர்? தேவையில்லாத ஆராய்ச்சி.உள்ளே அவனுடைய மனைவியின் ,மகளின் சிறிய படங்களும் இருந்தன.வங்கி அட்டைகள் ...எல்லாத்திலும் எண்கள் இருந்தன தவிர வீட்டு விலாசம் இருக்கவில்லை.தொலைபேசி நம்பராவது இருக்கிறதா?மேலும் குடைந்தனர். ஒன்றும் கிடைக்க‌வில்லை."நீ வேலையைப் போய் பார்,நான் இன்னொரு தடவை பார்க்கிறேன்"என்று சொல்ல டக்சிற்கு வந்தான். வேலையில் காம் வானொலிக்கூடாக கதைக்கிற டிப்பாஜ்ஜர் 'யாரும் தவற விட்டிருக்கிறார்?'என்று அறிவிக்கவில்லை.பொதுவாக அவனுடைய தாமரை ட்க்சிக் கொம்பனிக்கூடாக வார ஓடர்களில் தவற விட்டவ‌ர் தொடர்பு கொண்டு கேட்கிறது வழக்கம்.கொண்டு போய் கொடுப்பார்கள்.தூரமாக இருந்தால் மினக்கெட்டு வாறதுக்கான டக்சிக்கட்டணத்தில் அரைவாசியாவது கொடுப்பார்கள்.

இது இப்ப தொலையவில்லை.கனகாலமாக கிடந்திருக்கிறது. யார் போட்டிருப்பார்கள்?.இவனுடன் இரவு கேளிக்கைக்கு கூட வந்த நண்பனே,'சிறைச்சாலை...' என்ற வசனம் குழப்ப‌ அவனுக்குத் தெரியாமல் எடுத்து போட்டிருப்பானோ?உள்ளே பணம் நிச்சியமாக இருந்திருக்க வேண்டும்.காணனேல்லை.யாரும் பிக்பொக்கற்காரன் ஒருத்தன் அதை அடித்து பணத்தை எடுத்து விட்டு,டக்சியில் ஏறி அதை செருகி விட்டு போய்யிருப்பான்?இது தான் சரி வருகிறது.

“இந்த நகரத்தில் பிக்பொக்கற்காரன் இருகிறானா?!”

இங்கே யாரும் பேர்ஸ் திருடறதாக செய்திகள் வருவதில்லை.கீழே விழுந்து கிடந்து எடுக்கிறது....நடந்திருக்கலாம். அடித்தால் பெரிய கொள்ளை,போதைப் பொருள் வர்த்தகம் தாம் நடைபெறுகின்றன.ஒவ்வொரு நாளும் துவக்குச்சூடுகளுடனே விடிகின்றன.வங்கிக் கார்ட்டுகளில் கை வைக்கவில்லை என்பதால் போதிய பணம் இருந்திருக்க வேண்டும்.நிறைய கமராக்கள் பாவிக்கிற இடங்களிலே இருக்கிறதாலும்... தவிர்த்திருக்கலாம்.அல்லது பாவித்து பார்க்க வேலை செய்யாதும்  விட்டிருக்கலாம். 

அடியில் பார்த்தலால் தான் தில்லைக்கு கிடைத்திருக்கிறது. எப்படியோ போய்ச் சேர வேண்டும்.வேலை முடிந்து போன போது கராஜ்காரன் மேசையில் ஒரு ஓரத்தில் போட்டிருந்தான்."ஒரு துப்பும் கிடைக்கவில்லை.நீ இதை தாமரை டக்சி ஒபிசிலேயே நாளைக்கு கொண்டு போய் கொடுத்து விடு"என்றான். "எதற்கும் ஒரு தடவை பார்த்து விடுகிறேன்"என்று தில்லையும் அட்டைகளை விட்டு தடவினான்.இரண்டு மூன்று மடியலில் சிறிய பேப்பர்த் துண்டு கிடைத்தது.விரித்தான்..இது மூன்று அங்குல சதுர துண்டில். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம். இந்த அளவில் பார்த்தேயில்லை. 
அவனுடையதே புல் சைஸ் பேப்பரில். 

அப்பா,அம்மாட பெயர்,பிறந்த இடம்.....சிறைச்சாலையில் 1972இல் என இருந்தது.உடனே கராஜ் காரனிடம் காட்ட "அடடா, இவன் நோட்டட்டான‌ ஆள்!,நல்ல காலம் அவசரப்பட்டு டக்சி ஒபிசில் கொடுக்காதது"என்றான்.

தற்போது இந்த அரசு மனிதாபிமானத்துடன் சிரிய அகதிகளை ஏற்றாலும் இதற்கு முதல் கடும் போக்குடைய‌ அரசாங்கமே இருந்தது.அது "அகதிகளில் பயங்கரவாதிகளும் இருக்கிறார்கள்"என்று சொல்லி ஏற்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தது. சிரியப் பிரச்சனை தொடங்கி கனகாலமாகி விட்டிருந்தது.நிறைய படகுகள் கவிழ்ன்ற சோகங்கள் நடந்தேறி விட்டன.பத்தாற்குறைக்கு கடும் சட்டங்களை இயற்றி ஏற்கப் பட்டு சமபிரஜைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற தில்லை போன்றவர்களுக்கும்  கிடைத்திருக்கிற‌ சமபிரஜா உரிமையிலே கூட   கை வைத்து விட்டிருந்தார்கள். அதை இரண்டு வகைகளாகவே பிரித்து விட்டார்கள்.அந்த அரசு பெரும்பான்மையாக  இருந்தாலே அந்த ஆட்டம்.

.தற்போதைய பிரதமரின் தந்தையார்,இந்த நாட்டின் சரித்திரத்தையே ஒரு காலத்தில் மாற்றி எழுதியவர்.1972 இல் சிறிலங்கா சிங்கள குடியரசான போது,இவருடைய தந்தை,இங்கே "பிரெஞ்சு,ஆங்கில நாடு"என இந்த நாட்டை பிரகடனப்படுத்தினார்.அங்கே ஈழத்தமிழர்களின் நெஞ்சிலே கத்தி பாய்ந்த போது இங்கே பிரெஞ்சுக்காரர்களின் கைகளில் பூக்கொத்துக்கள் கொடுக்கப்பட்டன.அதற்கு முதல் பிரெஞ்சுமொழி பேசுகிற மக்கள் ,ஆங்கிலேயர்களால் ஈழத்தமிழர்களைப் போலவே இங்கேயும் அல்லல்பட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

இந்த நாடு அதற்கு முதலேயே பல்வேறு அகதிகளை ஏற்றும்  கொண்டே..தான் இருந்தது. சிறிலங்காவைப் போல சேற்றிலே குளிக்கிற யானையாக அல்ல,லேக்கிலே குளித்து மெல்ல,மெல்ல அழுக்குகளை கழுவுற மேபிள் மரமாக இருக்கிறது.

பிரெஞ்சு மொழி பேசுகிற பெரிய மாநிலமும் முதலில் தனிநாடாகவே இருந்தே இதனுடன் இணைந்தது. நாடு முழுவதற்கும் ஒரு ராணுவம் என ஏற்பட்ட பிறகே  பிரெஞ்சு மக்களை அடக்கி ஒடுக்கவும் முற்பட்டது. எல்லாம் பார்ளிமெண்ட் கதிரைகள் தந்த தைரியத்தால்(ஜனநாயகத்தால்..) தான்.இவருடைய தந்தையார் தான் துணிச்சலாக செயல்பட்ட கதாநாயகர் அதோடு, இதை பல்கலாச்சாரநாடு என அறிவித்தார் கடவுள் சில பேர்களிற்குத் தான் விரிந்த மனதை அளிக்கிறார். 

எல்லாருக்கும் சமபிரஜாவுரிமையும் கிடைத்தன. 

இதே போலில்லாமல் வேறு வலத்தில் மெக்சிக்கோ நாட்டின் பெரிய மாகாணங்களான டக்சஸ்,கலிபோர்னியா,நியூஇங்கிலாண்ட் ..ஆகிய மாநிலங்களை சேர்த்துக் கொண்ட அமெரிக்கா,  இன்று வரையும் கூட அந்த இடத்தில் வாழ்கிற இஸ்பானிய மக்களின் மொழியான இஸ்பானிஸை இங்கே அறிவித்தது போல அங்கே தேசியமொழிகளில் ஒன்றாக‌ அறிவிக்கவில்லை. பரந்த உலகத்தில்  சிங்களவர்களிற்கு தோழர்களும் இருக்கிறார்கள்.நல்லாய் வெடி கொளுத்தலாம். 

தற்போதைய அரசு  பெரும்பான்மையுடன் வென்றவுடனேயே கடந்த அரசு ஏற்கத்தவறிய அகதிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு இரண்டு,மூன்று மாசங்களிலேயே இருபத்தையாயிரம் பேர்களை ஏற்பதாகக் கூறி,செயலிலும் இறங்கி விட்டது. வரும் காலத்தில்.இரண்டு பிரஜாவுரிமைச் சட்டத்தையும் செப்பனிட ப் போவதாகவும் சொல்லி இருக்கிறது.

அப்பருக்கு தப்பாமல் பிறந்த மகன்.

இனிவரும் நாலு வருசங்களில் இந்த நாட்டில் மனிதநேயங்கள் பலதை பார்க்கத் தான் போகிறோம்.ஆனால், மெல்ல மெல்ல தானே விடியும்!   
மேலும் பேர்ஸைக் குடைந்ததில் சிகரட் மட்டைத் துண்டில் இரண்டு தொலைபேசி நம்பர்களும் கிடைத்தன‌.

'முக்கியமான கார்ட்டுகள் இருக்கின்றன 'அவனிடம் சேர்ப்பித்து விடவே விரும்புகிறார்கள்.சிறைச்சாலையில் பிறந்தது ...என்றது தான் குழப்புறது.
சோசல் இன்சுரன்ஸ் நம்மர் இருக்கிறது.எனவே வேலை செய்து கொண்டிருக்கிறவன்.

மனைவி பிள்ளை என இருக்கிற‌ சந்தோசமான‌ குடும்பஸ்தன்.

சிறைச்சாலையில்  இருந்த பெற்றோருக்கு அல்லது கருப்பிணியான தனிப்பெண் ஒருத்திக்கு.. பிறந்ந்திருக்க வேண்டும்.இந்தப் பேரைப் போலவே  இந்த ‘அகதி’ப் பெரும் வரும் சந்ததியிலும் ஒட்டிக் கொண்டு கிடக்கப் போகிறதோ?. 

அவர்களும் அகதிகளாய் வந்து பிடிபட்டு ,சிறிலங்காச்சிறைச்சாலையில் இருக்கிறமாதிரி பிரச்சனைகளிற்குள்ளாகியவர்களாக ....இருந்திருக்கலாம். .1972இற்குப் பிறகே மேலும் மாறின சூழல்.அதற்கு முதல் இந்த நாடும்  சிறிதளவு சிறிலங்கா தான்!  

கடந்த கால அரசு, நகரக்காவருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றன‌. அதையும்... தற்போதைய அரசு கவனிக்க வேண்டும். அவர்கள் கடிநாய்கள் போலவே இருக்கப் போகிறார்கள். ரேசிசமும் கலந்தவர்கள்.

உதவி செய்யப் போய் உபத்திரவத்தை தேடிக் கொண்டதாகி விடும். சந்தேகக் கண் கொண்டு பார்த்து அலுப்புகள் தரவே சாத்தியம் அதிகமாக இருக்கின்றன.

டக்சி ஒபிசிலே கொடுத்தாலும் அவர்களும் காவலரிடமே கொடுக்கப் போறார்கள்.இரண்டு பேர்களிடமும் கொடுக்கிறதும் ஒன்று தான்.
கராஜ்காரன், புத்திசாலித்தனமாக‌ முடிவெடுத்தான் ."இந்த பேர்ஸைப் பற்றிக் கவலைப் படுறதை விட்டு விடு.நாளை தபால் பெட்டி ஒன்றிலே போட்டு விடுகிறேன்"என்றான்.

அவர்களும் நகரக்காவலரிடமே சேர்ப்பிக்கப் போகிறார்கள்.    இனி அதிலே கைரேகையை வைத்து ...என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் எதற்கு. திரைந்து போன சட்டங்கள் முட்களாகவே நாடுகளில் எல்லாம் குத்துகின்றன.‌ ஒரு பிரஜை, தொலைத்தவனிடம் போய்ச் சேர்பிப்பதற்கு எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கிறது. 

வீட்ட வருகிற போது சப்வே நிலையத்தில் தூண் ஓரமாக சிமார்ட்டான இளம் ஆண் ஒருத்தன் கோப்பிக்கப்பை முன்னால் வைத்து விட்டு நிலத்தில் இருந்தான்.பார்வையில் ஒரு பரிதாபம்.நிச்சியமாக இவன் இப்படி பிச்சை எடுக்கிறவன் இல்லை.இவன் எதை தொலைத்து விட்டு இங்கே இப்படி இருக்கிறானோ? 

நன்றி 'கடல்புத்திரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jun 2016 - 13:48

ஆண்களும் பூதமும்
++++++

ஓர் ஆண் எவ்வாறான தேவைகளுக்கெல்லாம் (அல்லது சேவைகளுக்கு) லாயக்கானவன் என்பது சில சந்தர்ப்பங்களில் வேடிக்கைக்குரிய விஷயமாயிருக்கிறது. ஆண் என்பவன் ஆணாக மட்டுமன்றி மனைவிக்குக் கணவனாகவும், பிள்ளைக்கு அப்பாவாகவும் இருக்கிறான். சரி, அப்பாவின் கதைக்குப் பிறகு வரலாம். உங்களை இப்போது நேரடியாக கதை மையத்துக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. கொழும்பிலுள்ள அந்த வைத்தியசாலையின் குறிப்பிட்ட ‘வார்ட்’டிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை ஐந்து மணியாகியிருந்தது. வெளியார், நோயாளரைப்  பார்வையிடும் நேரமாகையால் பரபரப்பாகவும், 

கலகலப்பாகவும் இருந்தது. (பொதுவாக வைத்தியசாலைகளில் நோயாளரைப் பார்வையிடும் நேரங்கள் கலகலப்பாகிவிடுகின்றன என்பதும் என்னவோ உண்மைதான்) நான் வைத்தியசாலைக்கு எந்த நோயாளரையும் பார்ப்பதற்காகப் போயிருக்கவில்லை. என் மகனை அந்த வார்ட்டில் அட்மிட் பண்ணவேண்டியிருந்தது. பத்து வயது மகன். முதல் நாள் இரவிலிருந்து வயிற்று நோவினால் துடித்துச் சோர்ந்துபோயிருந்தான். பிள்ளையின் வேதனையைத் தாங்கமுடியாது அவனைவிட நான் அதிகம் சோர்ந்துபோயிருந்தேன். அரச வைத்தியசாலையாயினும் அதன் தோற்றம் ஆச்சரியப்படும்வகையில் தூய்மையாயிருந்தது. மருந்து மணங்கள் இல்லை. குழந்தைகளுக்கான அந்த வார்ட் பலவிதமான விளையாட்டுப் பொம்மைகளால் நிறைந்திருந்தது. குழந்தைகள் பலர் தம் நோய் மறந்து, விளையாட்டுப் பொருட்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 

நான் என் மகனின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியான ஒரு புன்முறுவல் அவனிடத்தில் தோன்றியது. அவனது மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்கள் மட்டுமல்ல, ஆஸ்பத்திரியின் தூய்மையான தோற்றமும் ஒரு காரணம் என்பது எனக்குத் தெரியும். 

முதல் நாள் இரவு ஒன்பது மணியைப்போல் வயிற்றைக் கைகளால் அழுத்திகொண்டு அழத்தொடங்கினான். அடி வயிற்றில் வலி. முதலுதவியாக பனடோல் கொடுத்துப் பார்த்தோம். மனைவி, வேறு விதமான கை வைத்தியங்களையும் செய்து பார்த்தாள். அதற்கும் கேட்கவில்லை. படுக்கையில் சுருண்டு துடித்துக்கொண்டிருந்தான் மகன். பதினொரு மணியளவில் அண்மையில் இருந்த வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றேன். மகனைப் பரிசோதித்த வைத்தியர் முதலில் கேட்ட கேள்வி “பிள்ளையின் அம்மா வரவில்லையா?”என்பதுதான். 

“இல்லை நான் அவரது அப்பா!”

“இவரை வார்ட்டில் தங்கவைத்து, பரிசோதிக்கவேண்டும். கூடத் தங்குவதற்கு அம்மா தேவை!”

நான் பக்கத்தில் இல்லாது மகனை ஆஸ்பத்திரியில் விட்டுப் போக எனக்கோ மனச்சம்மதம் இல்லை.

“கிட்டத்தான் இருக்கிறோம். தேவையானால் கொண்டுவருகிறேன். இப்போது ஏதாவது மருந்து கொடுங்கள். போதும்!”

டொக்டர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார். பிறகு சில குளிசைகளைத் தந்தார். “இது வலியைப் போக்க உதவும். இது பிள்ளையை உறங்கவைக்கும்.”

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் மகன் உறங்கிவிட்டான். அவ்வளவு நேரமும் துடித்துக்கொண்டிருந்த என் மனது சற்று ஆறுதல் அடைந்தது. எனினும் உறங்காமல் விழித்திருந்தேன். மகன் நிம்மதியாக உறங்குகிறானா, வயிற்று வலி அவனது உறக்கத்தைக் கெடுக்குமா என்று கவனித்துக்கொண்டிருந்தேன். மெதுவாக அவனது அடி வயிற்றை அழுத்திப் பார்த்தேன். அழுத்தும்போது அவனுக்கு வலிக்கிறது. உறக்கத்திலும் முறுவலித்தான்.

அதிகாலை திரும்பவும் மகனை வைத்தியசாலைக்குக் கொண்டோட வேண்டியிருந்தது. உறக்கத்திலிருந்து விழித்ததும் அல்லது வலி தாங்கமுடியாது விழித்து அழத்தொடங்கி விட்டான். உடனடியாக  ‘வார்ட்’டில் அனுமதிக்கப்படவேண்டும் என வைத்தியர் கூறினார். சிறிய சத்திர சிகிச்சை செய்யவேண்டி ஏற்படலாம். மகனைத் தள்ளுகதிரையில் இருத்தி வார்ட்டிற்கு கொண்டு சென்றோம்.

வார்ட்டை அடைந்ததும், உள் நுழைவது கஷட்டமாயிருந்தது. நடைபாதையில் பலர் நின்றுகொண்டிருந்தனர். பலர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த அதிகாலையில் நோயாளரைப் பார்க்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களா?... அவர்களையெல்லாம் உள்ளே வரவிட்டிருக்கிறார்களே என்றெல்லாம் யோசித்தேன். ஒருவரிடம் இதுபற்றி விசாரித்தேன்.

“எங்களுக்கு படுக்கை… கட்டில் இல்லை. சிகிச்சைக்காக இந்த வார்ட்டிற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் நாங்கள். கட்டில் வசதி இல்லாததால் இப்படி உட்கார்ந்திருக்கிறோம்.”

எல்லாக் கட்டில்களையும் ஒரு கண்ணோட்டம் விட்டேன். சில கட்டில்களில் இருவர் படுத்திருந்தார்கள்.

மகனுக்கு சேலைன் ஏற்றவேண்டும் என டொக்டர் குறிப்பிட்டிருந்தார். என்ன செய்யப் போகிறார்களோ என எனக்குள்ளே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தேன். அங்கிருந்த தாதிமார்களிடம் விசாரித்தேன்.

“கொஞ்சம் பொறுங்கள்… வார்ட்டைக் கவனிக்கும் டொக்டர் வந்ததும் முடிவெடுக்கலாம்!”

பொறுத்தேன். மகன் பொறுமை இழந்துகொண்டிருந்தான். வெளியே மழை பெய்யத்தொடங்கியது. அரைச்சுவரூடாக வார்ட்டிற்குள்ளும் தூவானம் அடித்தது. நோயாளிகள் மழைக்கு ஒதுங்கினார்கள். இன்னும் இடைஞ்சல் ஏற்பட்டது.

டொக்டர் வந்ததும் நோயாளிகளெல்லாம் பரபரத்து ஒரு வரிசையில் (கியு) நின்றனர். வரிசைக் கிரமமாக ஒவ்வொருவராக அவர் முன் சென்று பரிசோதிக்கப்படுவது வழமையான ஒழுங்கு போலிருந்தது. இவ்வளவு அடிப்படை வசதிகள் போதாத ஒரு வைத்தியசாலையில், அவர்கள் பெரிய மனதுடன் பணிபுரிவதை மனதிற் பாராட்டினேன். நோயாளிகளின் கஷ்ட நிலைமை பற்றிய இரக்க உணர்வும் ஒரு பக்கம்.

டொக்டரின் பணிப்பின் பேரில் ஓரளவுக்கு இயலுமான ஒரு நோயாளியை (அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.) இறக்கிவிட்டு அந்தக் கட்டிலில் மகனைக் கிடத்தினார்கள். இலையான்கள்(ஈக்கள்) அங்குமிங்குமாகக் கட்டில்களிலும் மொய்த்துக்கொண்டிருந்தன. இந்தக் களேபரங்களில் மகனுக்கு வலி மறந்துவிட்டதுபோலிருந்தது. அவன் வேறு விதமாக அழத் தொடங்கினான்.

“இங்கை இருக்கமாட்டான். வெளியே கொண்டுபோங்கோ!...”

நான் அவனது கையைத் தடவி, காலைத் தடவி…தாக்காட்டிக்கொண்டிருந்தேன். ஓரிரு மணித்தியாலங்கள் போய்க்கொண்டிருந்தன. இடையிடையே தாதிகளிடம் விசாரித்தேன்.

“அவருக்கு இரத்த சோதனை செய்யுமாறு டொக்டர் எழுதியிருக்கிறார். அதற்காக வெயிட் பண்ண வேண்டியிருக்கிறது.”

எனக்கு வெயிட் பண்ண இயலவில்லை. 

“அதைச் சீக்கிரம் பண்ணமுடியாதா?”

“அது சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.” அந்த விளக்கம் எரிச்சலை ஊட்டியது.. “இப்ப என்ன செய்வது?”
நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஒரு தந்தையின் துடிப்பை விளங்கிக்கொள்வது முடியாமலிருக்கலாம். எனக்குக் கொதி ஏறியது.

“மகனை இங்கிருந்து விடுவித்துவிடுங்கள்… நான் கொழும்புக்குக் கொண்டுபோய்க் காட்டுகிறேன்.”

“அதற்கு டொக்டரிடம் கேளுங்கள். நாங்கள் முடிவெடுக்க முடியாது.”

டொக்டரும் இணங்கவில்லை. நான் வற்புறுத்தலாயும் தயவுடனும் கேட்டேன்.

“உங்களுடைய சுயவிருப்பத்தின் பேரில் மகனைக் கூட்டிக்கொண்டு போவதாக எழுதிக்கொடுத்துவிட்டுப் போகலாம்….”

அப்படியே செய்தேன்.

கதையின் மையத்துக்கு உங்களைக் கொண்டுவருவதாகக் கூறிவிட்டு, பிறகு வெளியே சென்றுவிட்டேன் போலிருக்கிறது.

சரி, இதோ வந்தாயிற்று!

கொழும்பு வைத்தியசாலைக்கு வர நேர்ந்தது இவ்வாறுதான். கொழும்பு வந்து, முதலில் ஒரு குழந்தை ஸ்பெஷலிஸ்ட் டொக்டரிடம் காட்டியபோது, அவர் பரிசோதித்தபின் இந்த வைத்தியசாலைக்கு கொண்டுபோகுமாறு கூறினார்.

இங்கேயும் அதே மாதிரியான ஒரு பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

“பிள்ளையின் அம்மா வரவில்லையா?” வார்ட்டிக்குப் பொறுப்பான தாதி கேட்டார்.

“இல்லை அவசரத்தில் வந்தது. வீட்டில் மற்ற பிள்ளைகளுடன் தாயாரை விட்டு, நான் மட்டும் மகனோடு வந்தேன்.”

“பிள்ளையுடன் இரவு வார்ட்டில் தங்குவதற்கு அவரது அம்மா அல்லது யாராவது பெண்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள்.”

அந்தத் தாதிஅம்மா கடுமையான தொனியிற் கூறினார்.

“நான் புத்தளத்திலிருந்து வந்திருக்கிறேன். உடனடியாக அம்மாவைக் கூப்பிடமுடியாது…. நான் பிள்ளையின் அப்பா. இன்று இரவுமட்டும் என்னை அனுமதியுங்கள்… காலையில் தாயாரைக் கூப்பிட்டுவிடலாம்.!”

“இங்கு நோயாளருடன் தங்குவதற்கு ஆண்களை அனுமதிப்பதில்லை!”

நான் ஒரு பாசத்துக்குரிய அப்பாவின் முகத்துடன் அவ்விடத்தில் நின்றேன். ஆனாலும் நான் ஓர் ஆணின் முகத்தையும் கொண்டிருந்தேன். அந்த ஒரு காரணத்துக்காக, பிள்ளைக்கு நான் செய்யவேண்டிய கடமை (அல்லது உரிமை) மறுக்கப்படுவதுபோலிருந்தது. பிள்ளைகளுக்குத் தாயிடமிருந்து கிடைக்ககூடிய பரிவு, பணிவிடை, ஆதரவு அரவணைப்பு  அனைத்தையும் என்னாலும் தரமுடியும்.

எனக்குப் படபடப்பு ஏற்பட்டிருந்தது. பிள்ளையை மட்டும் ‘வார்ட்’டில் மறித்து வைத்துக்கொண்டு, ஆண் என்ற காரணத்துக்காக எனக்கு அனுமதி கிடைக்காமற் போய்விடுமோ? இப்படிக் கடுமையான சட்டதிட்டங்கள் இருப்பது எனக்கு ஏற்கனவே தெரியாது. இந்நிலைமையில் மகனைத் தனியே விட்டுப் போக எனக்குச் சம்மதமுமில்லை.

இயன்றவரை அவர்களிடம் தயவுடன் கேட்டேன். வார்ட்டிற்குப் பொறுப்பான டொக்டரிடம் கேட்டுப்பார்க்குமாறு கூறினார்கள். இவற்றையெல்லாம் ஒரு பக்கத்திலிருந்து அவர் கவனித்துக்கொண்டிருந்தார். ஆரோக்கியமான இதயத்துடன் பல டொக்டர்கள் உள்ளனர் என்பதற்கு டொக்டராயிருந்த அந்த இளம்பெண்ணும் ஒரு சான்று!

அவருக்கு முன்னால் போய் மிகவும் மரியாதையுடன் நின்றேன். இன்னொருமுறை அவருக்கு விளக்கம் கூறினேன். 

“இன்று இரவு நில்லுங்கள்…. காலையில் தாயாரை அழைத்துவிட வேண்டும்… சரியா..?”

“சரி” (உங்களுக்கு பலகோடி நமஸ்காரம் தாயே!)

வார்ட் அரைச் சுவர்களினால் ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் ஆறு படுக்கைகள். ஒரு பக்கமாக எல்லா வார்ட்களையும் தொடர்பு படுத்தும் நடைபாதை.

நடைப்பாதையின்  அரைச்சுவர் ஓரமாக உள்ள ஒரு படுக்கையை மகனுக்குக் கொடுக்குமாறு டொக்டர் பணித்தார். அப்படியானால் நான் வார்ட்டிற்குள் நுழையாமல் சுவர் ஓரமாக நின்றபடியே மகனைக் கவனித்துக்கொள்ளலாமாம். சட்டதிட்டங்களை மீறாமலும், எனது இக்கட்டான நிலமைக்கு உதவும் முகமாகவும் டொக்டர் இப்படியான ஒரு ஒழுங்குமுறையை மேற்கொண்டிருந்தார்.

இரவெல்லாம் நான் சுவர் ஓரமாகவே நின்றேன். மகனுக்கு சேலைன் ஏற்றினார்கள். அரைச் சுவருக்கு மேலாக கையை வார்ட்டிற்குள் செலுத்தி மகனைத் தடவிக்கொடுத்தேன்.

எனக்கு அசதியாகவும், களைப்பாகவும் இருந்தது. முதல்நாள் இரவிலிருந்து நித்திரையில்லை. நெஞ்சுப் படபடப்பு.

மனதுக்குள் மகனுக்காகப் பிராத்தனை. நித்திரைத் தூக்கம்.. சிலவேளைகளில் சுவருடன் தலையை அடித்தது. 

நடைப்பாதையில் ஒரு சில கதிரைகளும் போடப்பட்டிருந்தன. இரவுப்பணிக்காக வந்திருந்த தாதிமார்களில் சிலர் என்னிடம் வந்து: “அந்தக் கதிரையில் அமர்ந்து தூங்கலாமே!” எனப் பரிந்துரைத்தனர்.

நான் பெரிய மனதுடன், அவர்களது பரிந்துரையை நன்றி கூறி நிராகரித்தேன். இந்தளவு வாய்ப்பே எனக்குப் போதுமென்றிருந்தது. அதைவிடவும் மேலான ஒரு காரணம், எனக்கு மகனை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போக விருப்பமில்லை.

ஒவ்வொரு விதமான நோய்களுடன் ஒவ்வொரு குழந்தைகளும் இருந்தார்கள். உபாதை தாங்காத சில குழந்தைகளின் அழுகைச் சத்தங்களும் கேட்டன. அவர்களைத் தாய்மார் தேற்றி உறங்கவைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்துப் படுக்கையில் குழந்தையை வைத்திருந்த தாயார் எனக்குத் தேநீர் தாயாரித்துத் தந்தார்.

இரவாக ஆக, குழந்தைகள் உறக்கமடைந்துகொண்டிருந்தார்கள். அழுகைச் சத்தங்கள் குறைந்து கொண்டிருந்தன.

ஒரு கட்டத்தில் என்னாலும் தாங்கமுடியவில்லை. தூக்கம் அந்த அளவுக்குக் கண்ணுக்குள் முட்டிப்போயிருந்தது. கண்கள் மூடி மூடிச் சொருகிக்கொண்டிருந்தன. மகனும் உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருந்தான்.

காலாற அமரவேண்டும் போலிருந்தது. பக்கத்தில் இருந்த கதிரையிற் போய் அமர்ந்துவிட்டேன். கண்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று தாமாக மூடிக்கொண்டன. ஒரு குழந்தையின் வீரிட்ட அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. உறக்கத்திலும் அந்த சத்தம் எனக்குக் கேட்டது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஒரு நிலை.

எனினும் நான் அந்த சத்தத்தைப்பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் உபாதையில் அழுகின்றனர். அவற்றைக் கவனிப்பதற்குத் தாய்மாரும், தாதிமாரும் இருக்கிறார்கள். நான், எனது மகனைப்பற்றி மட்டும் (உறக்கத்திலும்) கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். 

நித்திரை இன்னுமின்னும் என்னைக் கவ்விப் பிடித்துக்கொண்டிருந்தது. 

யாரோ என்னைத் தட்டினார்கள்.

திடுக்குற்று அரைகுறையாக விழித்தேன். என் முன்னே இரவு பணிபுரியும் தாதியொருவர் நின்றார். 

“ஓ” வெனக் குளறும் ஒரு குழந்தையின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. மற்றப்படி அவரவர் பாட்டில் அரைத்தூக்கத்திலோ, முழுத்தூக்கத்திலோ அமைதியாய் இருந்தார்கள். 

“என்ன?” எனத் தாதியிடம் கேட்டேன்.

“ஒரு உதவி செய்ய முடியுமா?”

நான் தடுமாறினேன். “என்ன உதவி?” 

“என்னோடு கொஞ்சம் வர முடியுமா?.. 

இப்போது என் கண்கள் முழுமையாகத் திறந்து விழித்துக்கொண்டன.

“குழந்தையொன்று அழுது குளறிக்கொண்டிருக்கிறது. அழுது அழுது களைத்துவிட்டது. என்ன செய்தும் அடக்க முடியாமலிருக்கிறது…”

“நான் வந்து என்ன செய்வது?” (எனக்கு எவ்வித மந்திர மாயவித்தைகளும் தெரியாதே!) 

“அழுகையை நிறுத்தாவிட்டால் பூதம் வந்து உன்னைப் பிடிச்சுக்கொண்டு போய்விடும் என்று குழந்தைக்குச் சொல்லியிருக்கிறோம். நீங்கள் வந்து கொஞ்சம் பயமுறுத்திவிடுங்கள்!”

அடக் கடவுளே! என்னை பார்க்கப் பூதம்மாதிரியா இருக்கிறது? என்னைப் பார்க்க அவ்வளவு விகாரமாகவா தோன்றுகிறது?

இரண்டு நாட்களாக நித்திரை இல்லை, அலைச்சல். ஒருவேளை அப்படித்தான் தோன்றியிருக்கிறதோ என்னவோ! அந்தப் பெண்ணின் முன் எனது முகத்தைக் காட்டிக்கொண்டு நிற்பதற்குக் கூச்சமாகக்கூட இருந்தது. தலைமுடியைக் கையினால் கோதிவிட்டு சரிசெய்தேன். கண்களைத் துடைத்தேன். 

“வர முடியுமா?... ஒரு சின்ன உதவிதானே?”

சங்கடமாய் இருந்தது. குழந்தைகளைப் பயமுறுத்துவது எவ்வாறு என்பது எனக்குத் தெரியாது. அதில் சம்மதமும் இல்லை. அதிலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு குழந்தையைப் பயமுறுத்துவது என்பது எவ்வளவு மோசமான செயல்? 

“வாருங்கள்!” என்றவாறு நடந்தாள். செய்வதறியாது தாதியின் பின்னே மெல்ல நடந்து போனேன். ஓர் ஆணாகிய என்னைத் தயைகூர்ந்து இங்கு தங்குவதற்கு அனுமதியளித்தமைக்குக் கைமாறாக இப்படிப் பேய் வேடம் போடவேண்டியிருக்கிறதே?

போகிற போக்கில் கேட்டேன். “குழந்தை ஏன் அழுகிறது?”

“அப்பா வேண்டுமாம்!... இந்த நேரத்தில் எப்படி அப்பாவைக் கொண்டுவருவது?...”

குழந்தை அழுதுகொண்டிருந்த பகுதிக்குள் போனோம். தாயார் குழந்தையைத் தூக்கி வைத்திருந்தார். குழந்தை அழுது அழுது மாய்ந்துகொண்டிருந்தது. முகம் முழுவதும் கண்ணீர் வழிந்திருந்தது. மூக்கும் வடிந்திருந்தது. 

“புத்தே..!” (மகன்..!)

எனது அழைப்புக் குரல் கேட்டதும் குழந்தையின் அழுகை சட்டென நின்றது. ஓர் அதிர்ச்சி போலவும், ஆச்சரியத்துடனும் அதன் பார்வை திரும்பியது.
நான் முகத்தை சற்று மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டு கைகளை நீட்டினேன். 

அது என்னிடத்தில் வந்துவிட்டது! 

(மல்லிகை - 2004) 
 சுதாராஜ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 7 Jun 2016 - 13:52

பிறழ்வு
--------
அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.

அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் வருவார்கள். அவள் முகம் சுளிக்காது எல்லோருக்கும் சமைத்துப் போடுவாள். மதியச் சாப்பாடு மட்டும்தான் அவள் தருகிறாளா அல்லது இரவுப் போசனமும் கொள்ளமுடியுமா என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை. அதை அவள்; ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறாளா அல்லது தன் ஜீவனோபாயத்திற்காகவா என்பதும் தெளிவில்லாமலிருந்தது. அதுபற்றி யாரும் அலட்டிக்கொண்டதில்லை. சாப்பாடு கிடைக்கிறது.. அதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்?

அந்தக் கட்டுமானப்பணிகள் எப்போது தொடங்கின என்று தெரியவில்லை. அது இனி எப்போது முடிவுறும்; என்பதையும் ஊகிக்கமுடியாதிருந்தது. அங்கு எண்ணற்ற தொகையினர் பணி புரிந்தார்கள். சிலரது பணிக்காலம் முடிந்து விலகிப் போவதும், புதியவர்கள் வந்து சேர்வதும் நடைமுறையிலிருந்தது. வேலையில் ஈடுபட்டிருக்கும்போதே சிலர் இறந்தும்போயிருக்கிறார்கள். இறப்பதற்கு ஒரு காரணமா தேவைப்படுகிறது? விபத்துக்கள் நேரலாம்.. அல்லது கொல்லப்படலாம்.. அதெல்லாம் சகஜமான சங்கதிதானே?

அங்கு இளைஞனொருவன் புதிதாக வந்து சேர்ந்தான். மேற்பார்வையாளனாகவோ பொறியியலாளனாகவோ ஒரு பதவிக்கு நியமனம் பெற்று வந்திருந்தான். பெரிய பதவிக்கு வந்தவன் உயர்மட்ட செல்வாக்கு உள்ளவனாகத்தானிருப்பான் என ஏனையவர்கள் கருதினார்கள். அதனால் அவனுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செய்வதற்குத் தங்களுக்குள் போட்டி போட்டார்கள். தன்னை யாரென்று அறியாத அவர்களது செய்கை அவனுக்கு அவர்கள்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது.

சில நாட்களாக அவனுக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இன்னும் அவனுக்குப் புதிய இடம் பிடிபடாமலிருந்தது. சாப்பாடு கிடைக்கக்கூடிய ஓரிடம் தேடி அவன் சில வேளைகளில் அலைந்து திரிந்தான். அது அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் ஒருவனால் பட்டினி கிடக்கமுடியும்.. அவன் சோர்ந்துபோனான். அது தெரியவந்ததும் சிலர் துடித்துப்போனார்கள். அவனை அழைத்துச்சென்று அவளை அறிமுகம் செய்துவைத்தார்கள். பெண்களென்றால் ஏற்கனவே அவன் கூச்ச சுபாவம் உள்ளவன். அதனால் வற்புறுத்தலாகத்தான் அவனைக் கொண்டுவரமுடிந்தது.  கூச்சத்தைப் பார்த்து சாப்பாட்டை விடமுடியுமா? பழகப் பழகக் கூச்சம் விடுபட்டுப்போனது. அவனுக்கு அவளுடன் இன்னுமின்னும் நெருக்கம் ஏற்பட்டது. அக்கா அக்கா.. என மிக அன்னியோன்யமாக உறவு கொண்டாடினான். சாப்பாட்டுநேரம் மட்டுமின்றி வேறு வேளைகளிலும் அங்கு வந்துபோகத் தொடங்கினான்.

அந்தச் சின்ன வீடு அவளுக்கு வசதியற்றதாயிருப்பதான மனக்குறை அவனுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. அது அவளுக்குச் சொந்தமான வீடா அல்லது வாடகைக்குக் குடியிருக்கிறாளா எனவும் தெரியாமலிருந்தது. சாப்பிட வருகின்ற சிலர் கடன் சொல்லிப் போவதையும் கவனித்திருக்கிறான். அப்படிக் கடன் கொடுத்துக்கொண்டே சீவிப்பவளுக்கு எப்படி ஒரு வீட்டுக்குச் சொந்தமாவது சாத்தியமாகும்? 

அந்தக் குறுகிய இடத்திலிருந்துகொண்டு எப்படி அவ்வளவு பேருக்கும் சமைத்துப்போடும் வல்லமையைக் கொண்டிருக்கிறாள் எனத் தன் மனதுக்குள்ளேயே வியந்தான். சமையலுக்கான பாத்திர பண்டங்களையோ தட்டுமுட்டுச் சாமான்களையோ எங்கும் காணக்கிடைக்கவில்லை. சமையல் தயாராகும்போது பாத்திரபண்டங்கள் எங்கிருந்து வருகின்றன என்றே தெரியவில்லை. அவை பிறகு எங்கே சென்று மறைகின்றன? உள்ளே களஞ்சிய அறைபோல ஏதோ ஒன்று இருக்கக்கூடுமோ? உள்ளே போகமுடியுமானாற் கண்டுகொள்ளலாம். சமையல் சாப்பாட்டை எந்த அடுப்பிலிட்டுக் கொதிக்கவைக்கிறாள் என்பதும் புதிராயிருந்தது. 

அவள் தனி ஆளா அல்லது கூட யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகளும் அவனுக்குள் தோன்றின. அவளது புருஷன் எங்கே இருப்பான்..? இதையெல்லாம் அவளிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு இல்லை. அது அவளுக்குக் கோபமூட்டும் கேள்வியாயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டு அவளது உறவைக் கெடுத்துக்கொள்ளவும் அவனுக்கு விருப்பமில்லை. எனினும் அவள் யார்.. அவளைச் சேர்ந்தவர்கள் யார் என்றெல்லாம் மனது கிளர்ந்தவண்ணமே இருந்தது. 

‘உனக்கு யாரும் உறவுக்காரர்கள் இல்லையா.. தனியாகவா இங்கே இருக்கிறாய்..?’

அந்தக் கேள்வி இயல்பாகவே ஓர் உந்துதலில் வெளிப்பட்டுவிட்டது. கேட்டபிறகுதான் உறைத்தது.. தனது தனிப்பட்ட விடயங்களில் தலையிடுகிறானென அவள் கோபமடையக்கூடும்.

‘இருந்தார்கள்.. செத்துப்போய்விட்டார்கள்.. நான் தனியாகத்தான் இருக்கிறேன்..’

‘செத்துப்போய்விட்டார்களா..?’

‘யுத்தத்தில் மக்கள் கொல்லப்படுவது சாதாரண விஷயம்தானே..!’

அதை அவள் மிகச் சாதாரணமாகக் கூறினாள். அவள்மீது அவனுக்கு இரக்கம் சுரந்தது. தனது சொந்த பந்தங்களை இழந்துதான்; அவள் யுத்தப்பிரதேசத்திலிருந்து இங்கு வந்திருக்கிறாள். அவளது புருஷனும் அங்கே இறந்திருக்கக்கூடும். தனிமைப்பட்டுப்போயிருக்கும் அவளுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துகொடுப்பதுதான் நியாயம். முதல் அலுவலாக வசதிகள் குறைந்த அவளது சிறிய குடிமனையை செப்பனிட்டுக் கொடுக்கலாம்.

‘உள்ளே வீட்டைப் பார்க்கலாமா..?’

‘பாரேன்..!’ கதவைத் திறந்து விட்டாள்.

ஒரு சிறிய அறை.. அது அவளது படுக்கையறை. ஒரே ஒரு சிறிய கட்டில். ஒரே ஒருத்திக்கு ஒரே ஒரு கட்டில் மட்டுமே உள்ளதில் ஏதும் புதுமை இல்லைத்தான். ஆனால் அது இவ்வளவு சிறிதாயிருக்கவேண்டுமா? அவளது உடலளவுகளை மனக்கண்ணிற் கொண்டுவந்து கட்டிலின் அளவுடன் ஒப்பிட்டுப்பார்த்தான். ஒத்துவரவில்லை. கால்களைக் குறண்டிக்கொண்டு படுப்பாளோ?

கட்டிலை வடிவமைத்தவர்கள் மிகத் திட்டமிட்டுத்தான் அந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். இந்தப் படுக்கையை வேறு யாரும் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்பதில் அக்கறையாயிருந்திருக்கிறார்கள்!

அல்லது அவளாகவே அப்படியொரு கட்டிலைத் தேடி வாங்கியிருக்கக்கூடுமோ? மனிதர்களிடம் அவதானமாயிருக்கவேண்டும் என்ற எச்சரிக்கையுணர்வு, பெண் என்ற ரீதியில் இயல்பாகவே அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒருத்தி படுப்பதற்கு எதற்காக டபிள் பெட் என, அவளது நடத்தை பற்றிய வீண் கதைகளையெல்லாம் சோடிப்பவர்களிடமிருந்து தப்பிக்கவேண்டுமே! 

‘இந்தக் கட்டில் உனக்குப் போதுமா.. எப்படி இதிலே படுத்துக்கொள்கிறாய்..?’

‘படு.. படு.. படுத்துப்பார்..!’ 

அவள் சிறுபிள்ளையைப்போல கைகளைத் தட்டியவாறு துள்ளல் போட்டாள். அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரலைப்போல இல்லாமல் குயிலின் கூவலைப்போலிருந்தது.

கட்டிலில் நல்ல பஞ்சணை இல்லை. அழுக்கூறிய தலையணையொன்று கிடந்தது.

அவன் அந்தப் படுக்கையில் மெல்லச் சாய்ந்தான்.

தலையணையின் அழுக்கு நாற்றமடிக்குமோ எனும் மனச்சுளிப்புடன்தான் படுத்தான். ஆனால் ஒருவித நறுமணம் நாசியிற் பரவியது. அந்த வாசைன எங்கிருந்து வருகிறது என அவனுக்கு வியப்பாயிருந்தது. பெண்களின் கூந்தலுக்கு ஏதோ நறுமணம் உள்ளது என்று கூறுகிறார்களே, அது இதுதானோ?
படுக்கைக்கு நேரெதிரே சுவரில் ஒரு செங்கல் அளவில் துளையொன்று தென்பட்டது. வீட்டைக் கட்டும்போது உயரக் கூரைவேலைகள் செய்வதற்காக குறுக்குச் சிலாகை போடுவதற்கு விலக்கப்பட்ட கல்லாக இருக்கலாம். பின்னர் அதை நிரவாமலே விட்டுவிட்டார்கள். அது சரியில்லாத வேலையென்றே அவனுக்குப் பட்டது.  உள்ளே நோட்டமிடும் உள்நோக்கம் அவர்களுக்கு இருந்திருக்கிறது!

‘சுவரிலே ஓட்டையொன்று உள்ளதே.. யாராவது உள்ளே பார்க்க வாய்ப்பாயிருக்குமே..?’

‘அதற்காகத்தான்.. அப்படிக் கண்காணிப்பதற்காகத்தான்.. அந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள்..’

‘கண்காணிப்பதற்கா.. எதற்கு..?’

‘யுத்தப்பிரதேசத்திலிருந்து வந்தவள்மீது அவர்களுக்குச் சந்தேகம் விட்டுப்போகுமா..?’

அப்போது சொல்லிவைத்ததுபோல அவன் கட்டிலிற் படுத்திருப்தை அந்தத் துளையினூடு ஒரு கண் பார்த்தது.

‘ஐயையோ அவர்கள் பார்க்கிறார்கள்..’ என அவன் சத்தமிட்டான்.

அவர்கள் தன்னைப்பற்றி வேவு பார்த்து தகவல்களைச் சேகரிக்கும்; சங்கதி அவனுக்கு ஏற்கனவே ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இப்போது அது இன்னும் ஊர்ஜிதமாகியது.

எழவிடாத சுகானுபவத்தைத் தந்துகொண்டிருந்த படுக்கை ஒரு துர்நிலைமையை ஏற்படுத்திவிட்டதே என்ற கலக்கத்துடன் எழுந்தான். அப்போதுதான் திறந்துகொண்ட ஜன்னற் கதவுபோல மறுபக்கச் சுவரில் ஒரு வெளி தென்பட்டது. அது கதவில்லாத ஜன்னல்போலவும் அல்லது இன்னும் ஜன்னல் பொருத்தப்படாத சுவர்போலவுமிருந்தது.

‘இது உனக்குப் பயமாக இல்லையா..?’

‘என்ன பயம்?’

‘யாராவது உள்ளே வரக்கூடுமே..’

‘யார் வருவாங்க..? வரட்டுமே பார்க்கலாம்..!’

அவளது பேச்சு அவனுக்கு ஆச்சரியமூட்டுவதாயிருந்தது. இவ்வாறானதொரு பாதுகாப்பற்ற இடத்தில் தனிமையாக இருக்கும் தைரியம் தனக்கென்றால் வரவே வராது என நினைத்தான். மவளே.. உனக்கு அவ்வளவு துணிச்சலா?

அவளைப் பயமுறுத்திப் பார்க்கவேண்டும்போல அவனுக்கு வேடிக்கையுணர்வு தோன்றியது.. ‘தனிமையாக இருக்கும் பெண்ணைத் தேடி இரவில் பேய் பிசாசுகள் வரக்கூடுமே?’

‘நானே ஒரு பிசாசுதானே..!’

‘பிசாசா..?’ சட்டென அவன் உடல் புல்லரித்து சிறு நடுக்கத்துக்குள்ளானான். கலைந்த கூந்தலுடனான அவளது வசீகரிக்கும் கோலம் கண்களைக் கூசியது.

பிசாசுகள் இவ்வளவு அழகாயிருக்குமா..?

பொதுவாக மோகினிப்பிசாசுகள் அழகாயிருக்கும் என்ற அபிப்பிராயம் அவனுக்கும் உண்டு. இது ஒரு மோகினிப்பிசாசாக இருக்குமோ?
பிசாசுகளை அஃகிர்திணையிலா உயர்திணையிலா விழிப்பது என்றும் தெரியவில்லை. தவறுதலாக ஏதாவது பேசி, அது வேறு வில்லங்கத்தில் கொண்டுபோய் விடப்போகிறது.

‘அக்கா நீங்கள் விளையாட்டுக்குத்தானே அப்பிடிச் சொன்னீங்கள்..? பேய் அது இது என்று சொல்லி சும்மா என்னைப் பயமுறுத்தத்தானே பார்க்கிறீங்கள்..?’

‘ஏன் தம்பி.. அது உண்மையாயிருக்கக்கூடாதா..? யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கெல்லாம் வேறு போக்கிடம் ஏது..?’

இது நல்லதுக்கல்ல, இந்த இடத்தை விட்டு நழுவிவிடுவதுதான் உத்தமம் என்று அவனுக்குத் தோன்றியது.
பிறகு, சாப்பாட்டுக்குக்கூட அந்தப் பக்கம் வருவதை அவன் தவிர்த்துக்கொண்டான். அதற்கு வேறு காரணமும் இருந்தது.. தொடர்ந்து வேவு பார்க்கும் அவர்கள் தன்னை ஏதாவது பொறிக்குள் விழுத்திவிட முனைகிறார்களோ என்பது பற்றிய பயம். அல்லது அப்படியொரு பயத்தை உண்டாக்கிக் குழப்ப அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு நடக்கும் தில்லுமுல்லுகளையம் ஊழல்களையும் அவன் கண்டுகொள்ளக்கூடாதாம். அதுபற்றி வெளியே பேசக்கூடாதாம். அந்தப் பயம் இருக்கணும்!

அப்படிக் கண்களை மூடிக்கொண்டு வாழ்வது அவனுக்குச் சாத்தியப்படாமற்தான் இருந்தது. அநியாயங்களைக் கண்டுகொள்ளாது தானுண்டு தன் பாடுண்டு என்று எப்படியாவது வாழ்ந்துவிட்டுப் போகிறவர்களைப்போல, இனித் தானும் இருக்கவேண்டியதுதான் என எண்ணிக்கொண்டான். போதும்.. ஆளை விடுங்கடா சாமி!

ஆனால் அவள் அவனை விடவில்லை. அவனைத் தேடித் தேடி வரத்தொடங்கினாள். மாலை நேரங்களில் சந்தித்துக் கொள்வது வழக்கமாகியது. அவர்களிடம் அவன் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென அவள் அறிவுறுத்தவும் செய்தாள்.

அவனும் தனது உயிர் பற்றிய அவதானத்துடன்தான் நாட்களைக் கடந்துகொண்டிருந்தான். எனினும் ஒருநாள் மேற்தட்டில் வேலையாக நின்றபோது அந்த சம்பவம் நடந்தது.. தெரியாத ஒருவன் அப்போது ஏணியொன்றைக் கொண்டுவந்து சுவரில் சாத்தி வைத்துவிட்டு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும்  நோட்டம் பார்த்தான். இவனுக்கு இங்கே என்ன வேலை என எண்ணிக்கொண்டிருக்கையில், ஏணியில் ஏறி மேலே வந்தான். தனது காலைப் பிடித்து இழுத்துவிடத்தான் வருகிறானோ என உள்ளுணர்வு தட்டியது. தப்பிக்க வழியில்லாத அரும்பொட்டான இடம் அது. ஏறுபவன் கிட்டத்தட்ட மேற்தட்டை எட்டும் தறுவாயில் ஏணி சமநிலை இழந்து சரிவது தெரிந்தது. விழுந்து தொலையப்போகிறானே என அவன் சட்டெனப் பாய்ந்து ஏணியைப் பிடித்துக்கொள்ள முற்பட்டான். ஆனால் பிடிபடமுதலே ஏணி தடாலென தரையில் விழுந்தது. ஏறி வந்தவன் முகம் குப்புறச் சப்பளிந்துபோய்க் கிடந்தான்.

அவசரத்துக்கு இறங்கமுடியாத இடத்தில் நின்ற அவன் பதகளித்துப்போனான். இறங்கி ஓடிப்போக நேரம் பிடித்தது. விழுந்து கிடந்தவனைப் புரட்டிப் பார்த்தால்.. மூக்கும் முகமும் உடைந்து இரத்தம் பெருகியது. கடுமையான கொங்கிரீட் தரையில் அந்தமாதிரி விழுந்தவன் செத்துத்தான்போயிருப்பான் என்று நினைத்தால், மீள உயிர் பெற்றவன்போலப் பேசத் தொடங்கினான்.

‘என்ன.. என்னைத் தள்ளிவிட்டுக் கொல்லப் பார்க்கிறாயா..?’

என்னடா இது, உதவி செய்யப்போனாலும் வீண்பழி.. ஒதுங்கிப் போனாலும் விடறாங்க இல்லியே என ஒருவித அச்சம் அவனைக் கலக்கியது. அவள் வந்து அவனுக்கு ஆறுதல் கூறினாள். ஏற்கனவே அவளை அந்தச் செய்தி எட்டியிருந்தது.. ‘உன்ன முடிக்கிறதுக்குத்தான் பார்க்கிறாங்க கவனமாயிரு..!’
சுகமான தூக்கத்துக்குரிய இரவுகள் அவனிடமிருந்து பறிபோயின. ஒவ்வொரு இரவுகளும் பயமுறுத்தும் சமிக்ஞைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. தூக்கம் ஆழ்த்தும் வேளைகளில் கதவைத் தட்டும் சத்தம் உறக்கத்தைக் கெடுக்கிறது. எழுந்து கதவைத் திறந்தால் துவக்குடன் நிற்பார்களோ என்ற பயம். தொலைபேசி ஓயாது ஒலித்து அழைக்கிறது. திடுதிப்பென எழுந்து கையிலெடுத்தால் ஓய்ந்துபோகிறது. யாரோ வெளியே குரல் கொடுத்து அழைக்கவும் செய்கிறார்கள். அது அவளது குரலல்லவா? தூரத்தில் ஒலிக்கும் குயிலின் கூவல்! தனக்கு ஆபத்து நேரப்போகும் தருணங்களில் பாதுகாப்பதற்காக அவள் வந்துவிடுகிறாளோ? 

கனவும் விழிப்பும் கனவுமாகக் கலையும் இரவுகள்.. வேலை செய்யுமிடம் நாளுக்குநாள் வேறுவேறு தோற்றங்களைக் கொள்கிறது. மாடித் தட்டுக்களில் ஏறும்போது தடுக்கிவிடுவதுபோல தடுமாற்றம் ஏற்படுகிறது. நடக்கமுடியாது விழுத்தும் பொறிகளைக் கொண்டிருக்கும் படிகள். கால்களை எங்கே எப்படிப் பதிப்பது என்றும் குழப்பமாயிருக்கிறது. ஓவ்வொரு தட்டுகளாக ஏறிஏறி மேலே போனான். அது எத்தனையாவது மாடி என்றும் நினைவில்லை.. ஒருவனைக் கட்டிப்போட்டுக் கதறக் கதற சவுக்கினால் விளாசிக்கொண்டிருந்தார்கள். ‘என்ன இது’ என்று கேட்டால், ‘தண்டனை’ என்றார்கள். யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்தக் கதிதானாம்! அல்லது இந்த உயரத்திலிருந்தே போட்டுத் தள்ளியும் விடுவார்களாம்!

திறந்துகொண்ட ஜன்னற் கதவுபோல சுவரில் ஒரு வெளி இங்கேயும் தென்பட்டது! அது கதவில்லாத ஜன்னல்போலவும் அல்லது இன்னும் ஜன்னல் பொருத்தப்படாத சுவர்போலவுமிருந்தது. அதனூடு அவன் வெளியே எட்டிப் பார்த்தான்.. எவ்வளவு உயரத்திலிருந்து விழுவேண்டி வரும்? 
அந்தப் பக்கம் பலநூறாண்டுகள் முற்பட்ட காலத்துக் கோட்டையொன்று எரிந்துகொண்டிருந்தது. சாம்பல் நிறத்திலான குதிரைகள் அந்த நெருப்பில் கால்களை உதறியபடி உயிர் விட்டுக்கொண்டிருந்தன.இயல்பாகவே அவை சாம்பல் நிறம் கொண்டவையா அல்லது தீயில் வெந்ததனால் பொசுங்கி நிறமிழந்தனவா என்பதும் புரியவில்லை. முடிகளும் கேடயங்களும் கொண்ட மனிதர்களும் தீயில் வெந்து மடிந்துகொண்டிருந்தார்கள். அவனுக்கு எல்லாம் பட்டெனத் தெளிவானது. இதே இடம்தான்! தண்டனை கொடுத்த மன்னவர்களும் இப்போது இல்லை! தண்டனை பெற்ற அப்பாவிகளும் இப்போது இல்லை. அந்தக் கோட்டை இருந்த தடயமே இப்போது இல்லை. இப்போது அதே இடத்தில் இந்தக் கட்டடம் எழுந்துகொண்டிருக்கிறது. இன்னொரு காலத்தில் இதன் தடயங்களும் அற்றுப்போகலாம்… இந்த மன்னர்களும் அழிந்துபோகலாம்!

சவுக்கடிபடுபவனின் உயிரடங்கும் அவலக்குரல் அந்த விடியப்புற நேரத்திலும் கேட்டுக்கொண்டிருந்தது. இனிமேலும் தாமதிக்காது இங்கிருந்து நீங்கிவிட நினைத்தான்.

காலகாலமாகப் பெய்த மழையில் புதைகுழிகளை மூடிய மண்திட்டிகள் கரைந்துபோயிருந்தன. நடக்கும்போது மனித எலும்புகளும் மண்டையோட்டுத் துண்டுகளும் கால்களில் இடறின. எதிர்ப்பட்டவர்கள் அறிமுகமற்றவர்களாயிருந்தார்கள். ஊரே மாறிப்போயிருந்தது. ஆனால் அவனது வீடு மட்டும் மாறாமலிருந்தது!  எப்போதோ இறந்துபோன அம்மா அங்கே நின்றிருந்தாள். அப்போதுதான் பதுங்கு குழியிலிருந்து வெளியேறி வந்தவள்போல புழுதி படிந்த கோலத்துடன் நின்றாள். அவன் தன் சிறு பராயத்தவனாக மாறிப்போயிருந்தான்.

அவன் ஓடி விளையாடிய அந்த இடமும் மரம் செடிகளும் குதூகலமூட்டின. யுத்தமும் குண்டுகளும் அந்த இடத்தை ஏதும் துவம்சம் செய்யாத அதிசயம் நிகழ்ந்திருந்தது. மாரி மழையில் வீட்டுக் கிணறு நிறைந்துபோயிருந்தது. கடலொன்று அங்கு வந்து நிரம்பியதுபோல கிணற்றுநீர் நீல நிறம் கொண்டிருந்தது. அவனுக்கு கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்கவேண்டும்போலிருந்தது. அதற்குத் துலாவும் கயிறும் தேவைப்படாது. தண்ணீர் முட்டிய கிணற்றில், நின்ற நிலையில் ஒரு வாளியால் அள்ளிக் குளிக்கலாம்.. அது ஒரு விளையாட்டு.

‘கவனம் அப்பு..!’ என அம்மாவின் குரல் கேட்டது. அம்மா எப்போதும் அப்படித்தான். கண்ணுக்குக் கண்ணாகத்தான் அவனைக் காத்து வளர்த்தாள்.
‘அம்மா.. நானும் இறந்துவிட்டேனா..?’ அந்தக் கேள்வியை அவன் அம்மாவிடம் கேட்டானா அல்லது அப்படிக் கேட்க நினைத்தானா என்றும் தெரியவில்லை.

அதற்கு அம்மாவிடமிருந்து பதிலுமில்லை.

நாளாக ஆக, அவன் காணாமல் போய்விட்டான் என்ற கதை பரவத்தொடங்கியிருந்தது.

நன்றி சுதாராஜ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படித்த சிறந்த சிறுகதைகள்  Empty Re: படித்த சிறந்த சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum