சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Khan11

மகாபாரதப் போர் முடிந்த பிறகு…

Go down

மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Empty மகாபாரதப் போர் முடிந்த பிறகு…

Post by rammalar Mon 21 Mar 2016 - 17:07

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 
காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக 
யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் 
அழிந்துபோனது. 
-
கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. 
தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்து
விட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த 
ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தார்.
-
அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் 
நுழைந்து உயிரைக் குடித்தது.
-
யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி 
ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் 
வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் 
துறந்து செல்லலாம் என்று நினைத்தான். 
-
அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். 
எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் 
உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர்
நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை 
மிகவும் பாதித்துவிட்டது.
-
அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் 
பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை 
விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் 
இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். 
-
உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் 
அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் 
சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் 
சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான 
மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி 
தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். 
-
அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து 
வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் 
சென்றார்கள்.
-

லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Empty Re: மகாபாரதப் போர் முடிந்த பிறகு…

Post by rammalar Mon 21 Mar 2016 - 17:09

பின்தொடர்ந்த நாய்
-
மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் 
பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், 
அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் 
ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் 
தொடர்ந்து நாயும் சென்றது.
-
பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை 
அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் 
தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது 
திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
-
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி 
ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். 
-
தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: 
-
“ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், 
அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். 
அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்
பிடிக்க முடியவில்லை.”
-
சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் 
“சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். 
“தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் 
இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே 
தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.
-
அர்ச்சுனன் வீழ்ந்தான்
-
சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் 
காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை 
என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். 
இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
-
அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை 
குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” 
என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Empty Re: மகாபாரதப் போர் முடிந்த பிறகு…

Post by rammalar Mon 21 Mar 2016 - 17:11

தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். 
தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் 
தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். 
“உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் 
கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் 
தன் கடைசி மூச்சை விட்டான்.
-
ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே 
துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே 
இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.
-
மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Pandavas+and+dog+3
-
மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை 
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே 
விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற 
முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. 
-
“நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் 
தடுத்தான் இந்திரன்.
-
விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்
கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் 
வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர 
முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.
-
அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார்.
 “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி 
வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் 
பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும 
நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த 
சோதனை. 
-
முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். 
இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் 
சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு 
சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் 
மறைந்தார்.
-
--------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மகாபாரதப் போர் முடிந்த பிறகு… Empty Re: மகாபாரதப் போர் முடிந்த பிறகு…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போர் முடிந்த பின்னரும் தமிழர்களை சித்திரவைத செய்து வருகிறது இலங்கை- தம்பித்துரை
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???
» மரணத்தில் முடிந்த விளையாட்டு
» முடிந்த கதைகள் – கவிதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum