சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

காஞ்சி பெரியவர் 10 Khan11

காஞ்சி பெரியவர் 10

Go down

காஞ்சி பெரியவர் 10 Empty காஞ்சி பெரியவர் 10

Post by rammalar Sat 21 May 2016 - 15:05

காஞ்சி பெரியவர் 10 OnzvIAiwQdyDGIiPfkjB+kanchi_2861159f
-


காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியும், 
காஞ்சி பெரியவர், பரமாச்சாரியார் என போற்றப்படுபவருமான 
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 
(Chandrashekarendra Saraswati Swamigal) பிறந்த தினம் 
இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
-

# விழுப்புரத்தில் (1894) பிறந்தார். இயற்பெயர் சுவாமிநாதன். 
மாவட்ட கல்வி அதிகாரியான தந்தையிடம் 8 வயது வரை கல்வி 
பயின்றார். திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப் 
பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்ந்தார். 

பள்ளியில் நடந்த பைபிள் ஒப்பித்தல் போட்டியில் முதல் பரிசு 
வென்றார். பள்ளி நாடகங்களிலும் பங்கேற்று சிறப்பாக நடித்தார்.

# காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இவரது தாய் வழி உறவினர் 
1907-ல் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு தாயுடன்
சென்றிருந்தார் சுவாமிநாதன். உறவினர் திடீரென்று காய்ச்சல் 
ஏற்பட்டு மயங்கி விழுந்ததால், சுவாமிநாதனை ஆச்சாரியராக 
நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது இவருக்கு வயது 13.

# ‘சந்திரசேகரேந்திர சரஸ்வதி’ என்று இவருக்கு பெயர் 
சூட்டப்பட்டது. சமஸ்கிருதம், வேதங்கள், சாஸ்திரங்கள், புராணம், 
இதிகாசம், உபநிடதங்களை ஆழமாக கற்றார். இயல்பான அறிவுக் 
கூர்மையும், ஆன்மிக நாட்டமும் கொண்டிருந்த சிறுவனை 
ஆன்மிகப் பயிற்சிகளும் அனுஷ்டானங்களும் ஆன்மிக ஞானியாக 
மறுவடிவம் பெற வைத்தன. 
நாடு முழுவதும் ஏராளமானோர் இவரது பக்தர்களாக மாறினர்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காஞ்சி பெரியவர் 10 Empty Re: காஞ்சி பெரியவர் 10

Post by rammalar Sat 21 May 2016 - 15:05

# பிரமிக்கத்தக்க நினைவாற்றல் கொண்டவர். தமிழ், ஆங்கிலம், 
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராட்டி, 
ஜெர்மன், பார்சி உள்ளிட்ட 14 மொழிகள் அறிந்தவர். எளிய, இனிய,
சரளமான சொற்களில் வேத சாஸ்திரங்களில் உள்ள அரிய 
உண்மைகளை எடுத்துக் கூறினார். இவரது ஆன்மிக உரைகள் 
பாமர மக்களையும் எளிதில் கவர்ந்தன.

# வேத, சாஸ்திரங்களை மக்களிடம் பரப்பவும், வளப்படுத்தவும் 
பல மாநாடுகளை நடத்தினார். மடத்தில் அறக்கட்டளை தொடங்கி 
வேதம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். பல இடங்களில் வேத 
பாடசாலைகள் தொடங்கப்பட்டன.

# வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஏழை, 
எளியவர்கள் என யார் வந்தாலும் அனைவரிடமும் சமமான 
கருணையும் நேசமும் காட்டுவார். மனிதர்களிடம் மட்டுமல்லாமல் 
விலங்குகளிடமும் அன்பு செலுத்தினார்.

# சீடர்கள், பக்தர்களால் சிவ ஸ்வரூபமாகவே வணங்கப்பட்டார். 
‘நடமாடும் தெய்வம்’ எனப் போற்றப்பட்டார். 
கவிஞர் கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற அரிய 
காவியம் படைக்க காரணமாக இருந்தார்.

# அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் சுதேசி இயக்கம் நடந்த
போது, தனது ஆடைகளை கடலில் எறிந்துவிடச் சொன்னார். 
கதர் ஆடைக்கு மாறினார். தன் சீடர்களையும் அவ்வாறே செய்யுமாறு 
அறிவுறுத்தினார்.

# உண்மையான துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். எல்லா 
இடங்களுக்கும் நடந்தே செல்வார். பாத யாத்திரையாக நாடு 
முழுவதும் சுற்றி ஆன்மிகக் கருத்துக்களைப் பரப்பினார். 
காஞ்சி மடத்தின் தலைவராக 87 ஆண்டுகள் இருந்தார்.

# பரமாச்சாரியார், பெரியவாள், காஞ்சி பெரியவர், காஞ்சி முனிவர், 
மகா பெரியவர் என்றெல்லாம் பக்தர்களால் பரவசத்துடன் 
அழைக்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் 100-வது 
வயதில் (1994) ஸித்தியடைந்தார்.
-
-----------------------------------------
ராஜலட்சுமி சிவலிங்கம் 
தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24165
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum