சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! Khan11

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Go down

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! Empty தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Post by rammalar Fri Aug 19, 2016 4:11 pm

அறிவிப்பு
குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 போட்டித் ேதர்வை எதிர்பார்த்து நீண்ட நாட்களாகக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. வருடாந்திர கால அட்ட வணையில் கொடுக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை விட சுமார் 500 இடங்களை அதிகரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது டி.என்.பி.எஸ்சி. இந்த வாய்ப்பினை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! 5
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர், ஸ்டெனோ என்று பல்வேறு நிலைகளில் காலிப் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 5,451.  சிறிய இடைவெளிக்குப் பிறகு குரூப்-4 தேர்வில் அதிகமான அளவில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?

-
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 
இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், வரைவாளர், நில அளவையாளர் பணி
களுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியோடு தமிழ் மற்றும் 

ஆங்கிலத் தட்டச்சில் ‘ஹையர்’ கோர்ஸ் முடித்திருந்தால் டைப்பிஸ்ட், ஸ்டெனோ
 பணிகளுக்குச் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! Empty Re: தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Post by rammalar Fri Aug 19, 2016 4:12 pm

தட்டச்சில் ஒரு லோயர், ஒரு ஹையர் முடித்திருப்பவர்களும் காலிப் பணியிடத்திற்கு ஏற்ப பரிசீலிக்கப்படுவார்கள்.வயது வரம்பு 1.7.2016 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அருந்ததியர், பழங்குடி இனத்தவர்கள், அனைத்து இன ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு உயர்ந்தபட்ச வயது வரம்பு 35. நில அளவையாளராக, வரைவாளராகப் பயிற்சி பெற்றவர்களும் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கான வயது உச்ச வரம்பு 32. மற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 30.  சலுகைகள் யாருக்கு?  முற்பட்ட வகுப்பினர் அல்லாதவர்கள், பத்தாம் வகுப்புக்கு மேல் கூடுதலாக எந்த ஒரு படிப்பைப் படிந்திருந்தாலும் அவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
-
கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.,
எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. (அருந்ததியர்), பி.சி. முஸ்லீம் போன்ற வகுப்பினைச் சார்ந்த, பத்தாம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ, டிகிரி, +2 முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. இவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். அதே சமயம், பத்தாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக உயர்கல்வி படித்திருந்தால் அவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

-
விண்ணப்பிக்கும் முறை
-
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, உயர்கல்வித் தகுதி, இனம், சாதி, பிறந்த தேதி, சான்றிதழ்கள் பெறப்பட்ட தேதி, படித்த கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
-
தவறாகக் குறிப்பிட்டுவிட்டால், குறித்த நாட்களுக்குள் பிழையைத் திருத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பிரிவிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே, பத்தாம் வகுப்பைத் தமிழ்வழியில் படித்திருப்பவர்கள் ‘தமிழ்வழி ஒதுக்கீட்டுத் தகுதி கோருகிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று தவறாமல் குறிப்பிடவும்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! Empty Re: தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Post by rammalar Fri Aug 19, 2016 4:13 pm

விண்ணப்பக் கட்டணம்
-
நிரந்தரப் பதிவு உள்ளவர்கள் (அதாவது ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவர்கள்) தற்போது தேர்வுக் கட்டணமாக 75 ரூபாய் செலுத்தினால் போதுமானது. இதனை ஆன்லைன் மோட், போஸ்ட் ஆபீஸ் மோட் அல்லது பேங்க் மோட் என்று ஏதேனும் ஒரு வகையில் செலுத்தலாம். நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி நிரந்தரப் பதிவு செய்துவிட்டு பிறகு ரூ.75 செலுத்தி தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
-
ேதர்வுக் கட்டண விதிவிலக்கு பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி இனத்தவர்கள் ஆகியோருக்குத் தேர்வுக் கட்டணம் இல்லை. பட்டப்படிப்பு படித்த மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து மூன்று முறை விலக்கு உண்டு. அதே சமயம் நிரந்தப் பதிவுக் கட்டணத்திலிருந்து யாருக்கும் விலக்கு இல்லை.
-
தேர்வு முறை
-
நான்கு விடைகள் தரப்பட்டு சரியான விடையைத் தேர்வு செய்யும் கொள்குறி வகையில் (மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் டைப்) தேர்வு நடைபெறும். மூன்று மணி நேரத் தேர்வு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறும்.
-
ேதர்வுக்கான பாடத்திட்டம்
-
தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திலிருந்து 100 கேள்விகளும், ஆப்டிடியூட் (திறனறிதல்) பகுதியில் இருந்து 25 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் இருந்து 75 கேள்வி களும் இடம்பெறும். இவை அனைத்தும் பத்தாம் வகுப்புத் தரத்தில் அமைந்திருக்கும்.  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்ள வேண்டும். பத்தாம் வகுப்பு தரத்திலான திறனறிதல், காலக் கணக்குகள், ரயில் நேரக் கணக்குகள், தனிவட்டிக் கணக்குகள் ஆகியவை ஆப்டிடியூட் பகுதிக்கு அவசியம்.
-
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அமைப்புச் சட்டம் இவற்றோடு சேர்த்து நடப்பு நிகழ்வுகளையும் பொது அறிவுப் பகுதிக்காகப் படித்துக்கொள்ள வேண்டும்.
-
12 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்வில் போட்டி கடுமையாக இருக்கலாம். மொத்தமுள்ள 200 கேள்விகளில் 170 கேள்விகளுக்கு சரியான விடையளித்தால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.
-
முக்கியமான நாட்கள்:  தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.9.16.  தேர்வு நாள்: 6.11.16 காலை 10 மணி.மேலும் விவரங்களுக்குhttp://www.tnpsc.gov.in. என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.தேர்வில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துகள்.
  – ஆதலையூர் சூரியகுமார்
குங்குமச் சிமிழ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை! Empty Re: தமிழக அரசில் 5,451 பேருக்கு வேலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum