சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு Khan11

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு

Go down

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு Empty காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு

Post by rammalar Mon 31 Oct 2016 - 10:35

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு XXSEE0jdR5GNlyUNax6C+201610310258055567_The-funeral-of-slain-soldierTook-place-with-full-state_SECVPF
---
குருஷேத்ரா,

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. இந்த சம்பவத்துக்கு, சரியான பதிலடி தரப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வீரரை கொன்றனர்


காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதுங்கி முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு, இந்திய ராணுவம் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தியநாள் (28-ந்தேதி) இரவு, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பாகிஸ்தான் படையினர் உதவியுடன் பயங்கரவாதிகள் தாண்டி வந்து, தாக்குதல் நடத்தி இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) சுட்டுக்கொன்றனர். அத்துடன் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி சிதைத்து, குப்வாரா மாவட்டத்தின் மாசீல் செக்டாரில் வீசினர். இது நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு கண்டனம்


இந்த செயலுக்கு மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், “இத்தகைய கோழைத்தனமான செயல்களால் நாம் அடிபணிந்து விடமாட்டோம். நமது படையினர் சரியான பதிலடி தந்து வருகின்றனர். நமது தேசம் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும்” என கூறினார்.

தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “பாகிஸ்தான் என்ன செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதோ, அதெல்லாம் அந்த நாட்டுக்கு எதிராக அப்படியே திரும்பும்” என எச்சரித்தார்.

உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், “மன்தீப் சிங் உடலை சிதைத்து வீசியது கொடூரமான செயல்” என கூறி கண்டனம் தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி, “இது வக்கிரமான செயல்” என வேதனை வெளியிட்டார்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு Empty Re: காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு

Post by rammalar Mon 31 Oct 2016 - 10:35

வீரர் மன்தீப் சிங்கின் பின்னணி

எல்லையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் மன்தீப் சிங், அரியானா மாநிலம், குருஷேத்ரா பகுதியில் உள்ள அந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்தீப் சிங், 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, 17-வது சீக்கிய படைப்பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. அவரது மனைவி பிரேர்ணா, அங்குள்ள ஷாபாத் மார்கண்டா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.

பதிலடி தர தந்தை வேண்டுகோள்


மன்தீப் சிங் கொல்லப்பட்ட தகவல், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு ராணுவ வீரர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காட்டுத்தீ போல அந்த தகவல், ஊர் முழுக்க பரவியது. உறவினர்களும், நண்பர்களும் மன்தீப் சிங்கின் வீட்டில் குவிந்தனர்.

மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.

மனைவி கண்ணீர்


மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் அவர்கூறும்போது, “என் கணவர் 6 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வந்தார். தீபாவளிக்கு விடுமுறையில் வருவதாக இருந்தார். ஆனால் எல்லையில் மாசீல் பகுதியில் பதற்றம் நிலவிவந்ததைத் தொடர்ந்து அவரது விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் வர முடியாமல் போய்விட்டது” என வேதனையுடன் கூறினார்.

மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.

இறுதிச்சடங்கில் முதல்-மந்திரி பங்கேற்பு

நாட்டுக்காக உயிர்நீத்த வீரர் மன்தீப் சிங்கின் உடல், மூவர்ணக்கொடியில் சுற்றி அவரது வீட்டுக்கு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் நேற்று எடுத்து வரப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டார மக்கள் ஏராளமான பேர் திரண்டு வந்து, மறைந்த வீரருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். பின்னர் அவரது உடல், சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இறுதிச்சடங்கில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மூத்த ராணுவ அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

முழு அரசு மரியாதை


பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார். மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை.

அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.

மறைந்த ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் குடும்பத்தாருக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆறுதல் கூறினார்.

அப்போது அவர், அவர்களிடம், “நாம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். பழிக்குப் பழி வாங்குவோம். நாட்டுக்காக இந்த வீரர் உயிர் நீத்திருக்கிறார். இந்த துயரமான தருணத்தில், உங்களுடன் இணைந்து நிற்கிறோம். உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அத்தனையும் செய்வோம்” என உறுதி அளித்தார்.
-
------------------------

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்.. மீண்டும் சர்ச்சையில் அமேசான்
» இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
» உடலில் கேமராவுடன் இந்திய எல்லையில் இறந்துக் கிடந்த 'மர்ம பறவை': பாகிஸ்தான் உளவு வேலையா?
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum