சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


தங்கமீன் – குறும்படம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தங்கமீன் – குறும்படம் Khan11
தங்கமீன் – குறும்படம் Www10

தங்கமீன் – குறும்படம்

Go down

Sticky தங்கமீன் – குறும்படம்

Post by rammalar on Thu 25 Jul 2019 - 15:35

தங்கமீன் – குறும்படம் 3


ரஷ்யாவில் ஒரு கதை இருக்கிறது. ஒரு கிராமத்தில் 
இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான். 
பார்க்க கரடு முரடாக இருப்பான். அழுக்கான உடைவேறு.

அதனால் சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனைப் பிடிக்கவே 
பிடிக்காது. அவர்களைப் பொறுத்தவரையில் அவன் 
ஆபத்தானவன், கெட்டவன், மோசமானவன்.

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி 
தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் 
‘‘தண்ணி தண்ணி…’’ என்று கத்திக் கொண்டு கீழே 
விழுந்து கிடக்கிறாள்.

அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான். அவனைப் 
பார்க்கும் அந்தப் பெண், ‘‘இந்த நேரத்தில் இவனா வரணும்…’’ 
என்று நொந்து கொள்கிறாள். அவன் அந்தப் பெண்ணைக் 
கடந்து செல்கிறான்.

சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான். அந்தப் 
பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்துவிட்டு அவன் 
போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் 
நல்லவனாக மாறலாம். அது மட்டுமில்லாமல் ஒருவனை 
மதிப் பிடுவது, ஒருவனைப் பற்றி முடிவு செய்வது எவ்வளவு 
அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை இது.

‘The Golden Fish’- என்ற பிரெஞ்ச் குறும்படம் 
மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,
மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில் அழகாக 
சித்தரிக்கிறது.

கறுப்பு நிற பூனை ஒன்று இரை தேடி ஆளில்லாத ஒரு 
வீட்டுக்குள் செல்கிறது. அந்த வீட்டில் இருக்கும் கூண்டுக்குள் 
ஒரு பறவை இருக்கிறது. கூண்டுக்கு அருகிலிருக்கும் 
கண்ணாடிக் குடுவைக்குள் அகப்பட்டுக் கிடந்த தங்க மீன் 
வெளியே தாவிக் குதித்து தரையில் விழுந்து உயிருக்கு 
போராடிக் கொண்டிருக்கிறது.

இரை தேடி வந்த பூனையின் பார்வையில் மீனும்,பறவையும் 
அகப்பட்டுவிடுகிறது.

அந்த வீட்டிலிருக்கும் சிறுவன் ஒரு அதிர்ஷ்ட விளையாட்டில் 
வெற்றி பெற்று ஆசையோடு தங்க மீனை வாங்கிவந்து 
ஒரு நாள் கூட ஆகவில்லை. பள்ளியில் அவன் நிச்சயமாக 
அந்த மீனைப் பற்றிய எண்ணத்தில் பாடத்தைக் கூட 
கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் 
பள்ளி முடிந்த பிறகு ஒரு அழகான மலர்க்கொத்தை மீன் 
குடியிருக்கும் கண்ணாடிக் குடுவைக்குள் வைப்பதற்காக 
வாங்கு கிறான்.

மீன் தரையில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும், 
அங்கே பூனை இருப் பதும் சிறு வனுக்குத் தெரியாது.

மகிழ்ச்சியுடன் தன் அன்புக்குரிய மீனையும், பறவையையும் 
பார்க்க வீட்டை நோக்கி வேகமாக ஓடி வருகிறான். வீட்டுக்குள் 
நுழைந்ததும் மீனும் பறவையும் இருக்கும் இடத்துக்குச் 
செல்கிறான். தன் புத்தகப் பையிலிருக்கும் மலர்க் கொத்தை 
எடுத்து கண்ணாடிக் குடுவைக்குள் வைக்கிறான்.

இப்போது அந்த தங்க மீனுடன் சேர்ந்து அந்த மலர் இன்னும் 
அழகாகக் காட்சி தருகிறது.

அந்தச் சிறுவனைப் போல, அந்த தங்க மீனைப் போல, 
அந்தப் பறவையைப் போல, இரை தேடி வந்த அந்த கறுப்பு நிற 
பூனையும் பரிசுத்தமான இதயத்துக்கு சொந்தக்காரன்தான்.

ஆம்; மீனைக் காப்பாற்றியது பூனைதான். அதுவும் மிகுந்த 
பசியில்.எட்மண்ட் சேசன் இயக்கத்தில் 1959-ம் ஆண்டு வெளியான 
இந்தக் குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பது
குறிப்பிடத்தக்கது.
====================================
த.சக்திவேல்
முத்தாரம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum