சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா Khan11

நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா

Go down

நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா Empty நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா

Post by rammalar Sat 14 Nov 2020 - 11:48

நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா 202009061942107432_I-for-money-Did-not-come-to-act-Actress-Roma_SECVPF

சில வருடங்கள் நடிப்பில் இருந்து விலகியிருந்த இவர், தற்போது வெள்ளப்பம் என்ற மலையாளப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகை ரோமா தமிழ்நாட்டில் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர்.
இவரிடம் சில கேள்விகள்:
நீங்கள் சினிமாவில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்தது ஏன்?
என்னை திருப்திபடுத்தும் விதத்திலான கதையோ, கதாபாத்திரங்களோ கிடைக்காததால்தான் நான் சில வருடங்களாக நடிக்கவில்லை. திரை உலகம் கற்பனைத் திறன்மிக்கது. எனக்கு திருப்தியான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். சினிமாவில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்று 90 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் நான் சினிமாவிற்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன்.
சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைக்காது. அப்படிப்பட்ட வாய்ப்பு நமக்கு கிடைக்கும்போது அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்கவேண்டும். இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் நமக்கு ஒருவித சோர்வு உருவாகிவிடும்.
திருப்தியான கதாபாத்திரங்கள் கிடைத்தால்தான் 100 சதவீத திறமையையும் கொடுத்து நடிக்க முடியும். ரசிகர்கள் மறந்துபோய்விடக்கூடாது என்பதற்காக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கொள்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது.
நான் ஓய்வில் இருந்தபோதும் என்னைத் தேடி வாய்ப்புகள் வரத்தான் செய்தன. ஆனால் அந்த கதைகள் திருப்திதராததால் மூன்று வருடங்கள் நடிக்காமலே இருந்துவிட்டேன். நான் 2006-ல் சினிமாவுக்கு வந்தேன். அப்போதிலிருந்து இடைஇடையே ஓய்வு எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் திரை உலகம் என்னை கைவிட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு இல்லை.
ஒரு இடைவேளைக்குப் பிறகு டிராபிக் என்ற படத்தில் நடித்தேன். அப்படி ஒரு நல்ல படத்தில் மறுபிரவேசம் செய்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. அப்படித்தான் சிறந்த படங்கள் மூலமே ஒவ்வொருமுறையும் மறுபிரவேசம் செய்கிறேன். இனியும் நல்ல படங்கள் என்னைத்தேடி வரும் என்று நம்புகிறேன்.


இந்த இடைவேளை உங்களிடம் எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது?
எதையும் செய்யாமல் சும்மாவே இருக்கும்போதுதான் நம்மைநாமே சுயபரிசோதனை செய்கிறோம். அந்த இடைவேளை காலத்தில் நான் நிறைய பயணங்கள் செய்தேன். பயணத்தில் நிறைய அனுபவங்கள் நம்மை கடந்துபோகிறது. பழமைவாய்ந்த பிரபலமான பல கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்றேன்.
அவைகளோடு தொடர்புடைய கதைகள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தன. பல்வேறு நாடுகளுக்கு சென்றதால் அங்குள்ள வித்தியாசமான கலாசாரங்களை கண்டறிந்தேன். நிறைய சினிமாக்கள் பார்த்தேன். வேலை இல்லாமலே இருந்தபோதும் எனக்கு போரடிக்கவில்லை. அந்த ஓய்வு காலத்தை எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளுக்காக செலவிட்டேன்.
உங்கள் பெயருக்கு பின்னால் ‘எச்’ என்ற எழுத்தை சேர்த்திருக்கிறீர்களே.. இது எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் செய்த மாற்றமா?
எண்கணிதம் என்பது நம்மிடையே வெகுகாலம் இருந்து வரும் நம்பிக்கை. நான் அதில் சிறிதளவு கற்றிருக்கிறேன். ஒரு குருவிடம் இருந்து அதை நான் கற்றுக்கொண்டேன். எழுத்துக்களின் சக்தியை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே அதன் மீது நமக்கு நம்பிக்கை தோன்றும். அந்த நம்பிக்கையில்தான் என் பெயரின் இறுதியில் எச் சேர்த்துக்கொண்டேன்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா Empty Re: நான் பணத்திற்காக நடிக்க வரவில்லை..’ – நடிகை ரோமா

Post by rammalar Sat 14 Nov 2020 - 11:48

ரோமா என்ற பெண் எப்படிப்பட்டவர்?
குடும்பத்தோடு மிகுந்த நெருக்கம் காட்டுபவள். தியேட்டரில் போய் சினிமா பார்க்கவும், மால்களுக்கு ஷாப்பிங் செய்யவும் விரும்புவேன். வீட்டில் இருக்கவும் பிடிக்கும். குடும்பத்தின் மதிப்பை உணர்ந்தவள் நான்.
சோஷியல் மீடியா பற்றி உங்கள் கருத்து என்ன?
சமூகவலைத்தளங்களில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை. அதில் ஈடுபாட்டுடன் இருப்பவர்களில் பலர் என்னையும் அதில் ஆர்வம்காட்டும்படி சொன்னார்கள். ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னோடு தொடர்புடைய விஷயங்களை தினமும் ‘அப்டேட்’ செய்துகொள்ள எனக்கு பிடிக்கவில்லை. நான் சினிமாவிற்கு வந்த புதிதில் சமூகவலைத்தளங்களின் பயன்பாடு இந்த அளவுக்கு இல்லை.
அப்போது ரசிகர்களிடம் எப்படி தொடர்பில் இருந்தேனோ அப்படியே இப்போதும் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். சிலரின் விருப்பத்திற்காக இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கினேன். ஒரு வாரம் அதை உபயோகப்படுத்திப்பார்த்தேன். ஆனால் விருப்பம் உருவாகவில்லை. அதோடு அதையும் கைகழுவிவிட்டு என் உலகத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
பணத்திற்காக மட்டுமே வேலைபார்க்கவேண்டும் என்றால் அதற்கு வேறு துறைகள் இருக்கின்றன. 2006-ல் முதல் படத்தில் நடித்து, 14 வருடங்கள் ஆன பின்பும் இப்போதும் என் மனது பிரஷ் ஆக இருக்கிறது. இன்னும் பத்து வருடங்கள் வேகமாக செயல்படும் அளவுக்கு எனக்கு சக்தி இருக்கிறது.
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum