சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Khan11

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

2 posters

Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:43

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''முஸ்லிமானதொரு மனிதன், தொழுகைக்கான குறித்த நேரம் வந்த பொழுது, அவன் முறையாக ஒளுச் செய்து, இறையச்சத்துடன் அவற்றைச் செய்து, (பள்ளியை நோக்கிச் சென்று தொழுது) இன்னும் சரியான முறையில் ருகூஉ செய்து இருப்பானேயானால், அது அவனது முந்தைய அனைத்துப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும், எதுவரை எனில் அவன் மிகப் பெரும் பாவங்களைச் செய்யாத வரைக்கும், அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.'' (முஸ்லிம் 1-206 எண்.7-4-2)

மேலும் அவன் எந்தளவு உள்ளசத்துடன் தொழுதான் என்பதனைப் பொறுத்தே அவனது நன்மையின் அளவுகளும் அமையும் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

''ஒரு அடியான் தொழுது இன்னும் அவனது (கணக்கில்) அதனைப் பத்து மடங்காக, அல்லது ஒன்பது மடங்காக, அல்லது எட்டு மடங்காக, அல்லது ஏழாக அல்லது ஆறாக அல்லது ஐந்தாக அல்லது நான்கு பங்காக, அல்லது மூன்றாக அல்லது பாதியாக எழுதப்படாமல் இருப்பதில்லை''. (அஹ்மத், ஸஹீஹ் ஜாமிஇ 1626).

எங்கே அவர் தன்னை ஓர்நிலைப்படுத்தினாரோ இன்னும் தனது கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்திக் கொண்டாரோ அதற்குத் தகுந்த மாதிரி அவரது நன்மையின் பங்குகள் இருக்கும் என்பதை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : ''நீங்கள் உ ங்களது தொழுகையில் எந்தளவு கவனம் செலுத்தினீர்களோ அந்தளவு (நன்மைகளைப்) பெற்றுக் கொள்வீர்கள்.''
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:44

நீங்கள் உங்களது கவனங்களை முறையாக தொழுகையின் மீது செலுத்தினீர்கள் என்றால் இன்னும் அதில் உள்ளச்சம் நிறைந்திருந்தது என்றால் உங்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ''(அல்லாஹ்வின்) அடியான் தொழுகைக்கான நின்று இன்னும் (அவன்) தொழுது கொண்டிருக்கும் பொழுது, அவனது அனைத்துப் பாவங்களும் அவனது தலைக்கும் இன்னும் தோள் புஜங்களுக்கும் கொண்டு வரப்படும். ஒவ்வொரு முறையும் அவன் குனியும் பொழுதும், இன்னும் சுஜுது செய்யும் பொழுதும், அதில் சில பாவங்கள் அவனிடமிருந்து (கீழே) விழுந்து கொண்டிருக்கும், (மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்)''. (பைஹகி - அல் சுனன் அல் குப்ரா, 3-10, இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ லும் இது இடம் பெற்றுள்ளது பார்க்கவும்).

அல் மனாவி என்பவர் கூறுகின்றார் : தொழுகையின் முக்கியத் தூண்களை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி முடிக்கும் பொழுது, பாவங்களின் சில பகுதிகள் அவற்றிலிருந்து வீழ்ந்து விடுகின்றன, எதுவரையெனில் அவன் தொழுகையை முடிக்கும் வரையிலும், அனைத்துப் பாவங்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. இது தொழுகைக்கான அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தல், அதன் அடிப்படையான அம்சங்கள் முழுமைப்படுத்தியிருக்கும் பட்சத்திலும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'அடியான்' மற்றும் 'நிற்பது' என்பது ஒரு மாபெரும் மன்னனின் (அல்லாஹ்வுக்கு) முன் அவனது அடிமை மிகவும் பணிவுடன் நிற்பதைக் குறிக்கும்''. (பைஹகி அல் சுனன் அல் குப்ரா, 3-10 : இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ விலும் இடம் பெற்றுள்ளது பார்க்கவும்).

இறையச்சத்துடன் தொழக் கூடியவர், அவர் தனது தொழுகையை முடித்ததும் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் இறங்கி மிக இலேசாக இருப்பதாக உணர்வார், அவரிடமிருந்து அவரது கவலைகள் நீக்கப்பட்டும் விடும். பாரம் குறைந்ததன் காரணமாக, அவர் புத்துணர்வு பெற்றவராக ஆகி விடுவார், எனவே தொழுகையை நிறுத்தி விட அவர் மனது நாடாது, ஏனென்றால் தொழுகையில் தான் அவருக்கு சந்தோஷமும் இன்னும் இந்த உலகத்தின் சுகமும் அவருக்குக் கிடைக்கின்றது. இன்னும் அடுத்து அவர் தொழ ஆரம்பிக்கும் வரைக்கும் ஒரு குறுகிய சிறைச்சாலையில் இருந்து கொண்டிருப்பது போன்று அவர் உணர்வார்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:45

எவரொருவர் தொழுகையை உவப்பானதாகக் கருதுகின்றாரோ அவர், 'நாங்கள் தொழுகின்றோம், இன்னும் அதில் சுகத்தையும் பெற்றுக் கொள்கின்றோம்' என்று கூறுவார். உதாரணமாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''ஓ பிலால்..! தொழுகையில் நாம் சுகத்தைக் காண்போம்''. வாருங்கள் தொழுவோம், அதனை முடிப்போம்'' என்று கூறாமல், தொழுகையில் சுகத்தைக் காண்போம் என்று கூறியிருப்பதிலிருந்து தொழுகையின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ''என்னுடைய சந்தோஷம் தொழுகையில் ஆக்கப்பட்டிருக்கின்றது''. தொழுகையில் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய எவராவது, தொழுகையில் அல்லாமல் அவர் வேறு ஒரு இடத்தில் சந்தோஷத்தை அவர் தேடுவாரா?, அல்லது அதனை விட்டும் தூரமாகி விலகி (தொழாமல்) இருப்பதற்கு எப்படித் தான் முடிகின்றது? (Al-Waabil al-Sayib, 37).

தொழுகையில் துஆக் கேட்பதற்கான மிகச் சிறப்பு வாய்ந்த தருணங்கள், குறிப்பாக ஸுஜுதில் அல்லாஹ்விடத்தில் உரையாடுவது (தொழுகை என்பது இறைவனிடம் நடத்தக் கூடிய உரையாடல்), யாரிடம் மட்டும் மனிதன் தன்னுடைய பணிவைக் காட்ட வேண்டுமோ அத்தகையவனிடத்தில், அவனிடத்தில் மட்டுமே தன்னுடைய தேவைகளைக் கேட்பது, இன்னும் அவன் கேட்கக் கூடிய அத்தனை உதவிகளும் வல்லோனின் நெருக்கத்தை அடியானுக்குபு; பெற்றுக் கொடுக்கும், இன்னும் அவனிடத்தில் அது குஷு என்ற உள்ளச்சத்தையும் ஏற்படுத்தும். துஆ - பிரார்த்தனை - தனக்குத் தேவையானவற்றை வேண்டிப் பெறுவது என்பதும் ஒரு இறைவணக்கமேயாகும், இன்னும் பிரார்த்தனைகளை அதிகமதிகம் கேட்கும்படி நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் :
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:45

''பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே..'' (6:63)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ''எவனொருவன் அல்லாஹ்வை (ப் பிரார்த்தித்து) அழைக்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்.'' (திர்மிதீ, கிதாப் அத் தாஃவாத், 1-426, ஸஹீஹ் திர்மிதீ, 2686)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகமதிகம் துஆக் கேட்கக் கூடியவர்களாக இருப்பார்கள், அதாவது, ஸுஜூது செய்யும் பொழுது, இரண்டு ஸுஜுதுக்கும் மத்தியில், மற்றும் தஸஹ்ஹுத் (இருப்பில் அத்தஹிய்யாத் ஓதி அதனைத் தொடர்ந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதி முடித்ததன்) பின் உள்ள நேரத்தில்.

இவற்றில் மிகச் சிறந்தது ஸுஜூதின் பொழுது கேட்கும் துஆ தான், இது பற்றி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியான் தன்னுடைய எஜமானனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலை எதுவென்றால் ஸுஜுது நிலையில் இருக்கும் பொழுது தான், எனவே நீங்கள் உங்களது துஆவை அப்பொழுது அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் மா யுகல்லுஃபில் ருகூஉ வல் ஸுஜூது, எண். 215) மேலும் கூறினார்கள் : ஸுஜூதைப் பொறுத்தவரையில், அதிகமதிகம் முயற்சி செய்து துஆச் செய்து கொள்ளுங்கள், அதில் (நீங்கள் கேட்கும் துஆக்களுக்கு) பதிலளிக்கப்படுகின்றீர்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் அல் நஹீ அன் கிராஅத் அல் குர்ஆன் ஃபில் ருகூஉ வல் ஸுஜூது, 207)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுஜூது நிலையில் இருக்கும் பொழுது வழக்கமாக இந்தத் துஆவை ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள்: ''அல்லாஹும்மஃ ஃபிர்லீ தன்பி திக்கஹுவ ஜில்லஹுவ அவ்வலஹு வ அகீரஹு வ அலானிய்யதஹு வ ஸிர்ரஹு'' ("Allaahumma’ghfir li dhanbi diqqahu wa jillahu wa awwalahu wa aakhirahu wa ‘alaaniyatahu wa sirrahu) (யா அல்லாஹ், என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, சிறிய மற்றும், பெரிய, முதலும், இறுதியுமாகவும், இன்னும் வெளிப்படையாகவும் மறைவாகவும் (செய்த பாவங்களை மன்னிப்பாயாக..!) (முஸ்லிம், கிதாப் அல் ஸலாஹ், பாப் மா யுகாலு ஃபில் ருகூஉ வல் ஸுஜூத், 216) இன்னும் அவர்கள், அல்லாஹும்மஃ ஃபிர்லி மா அஸ்ரர்து வ மா அஃலன்து ("Allaahumma’ghfir li maa asrartu wa maa a’lantu) (யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, நான் மறைவாகச் செய்தவைகளையும் இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும்) (அந் நஸஈ, அல் முஜ்தபா 2-569, ஸஹீஹ் அல் ஜாமிஇ 1067).
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:46

இன்னும் ஸஜ்தாக்களுக்கிடையில் ஓதக் கூடிய பல துஆக்கள் இருக்கின்றன.

தஸஹ்ஹுத் க்குப் பின்னால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியிருக்கக் கூடிய துஆக்களை நாம் ஆய்வு செய்தோமென்றால் அவர்களின் துஆக்களிலிருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம்: உங்களில் ஒருவர் தஸஹுத்தை முடித்து விட்ட பின், அவர் அல்லாஹ்விடம் நான்கு வகைகளுக்காகப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளட்டும், நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், மண்ணறையின் வேதனைகளிலிருந்தும், வாழ்விலும், மரணத்திலும் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், இன்னும் மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்னும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்கண்ட துஆவையும் அடிக்கடி ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள்:

''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அமல் ("Allaahumma innee a’oodhu bika min sharri maa ‘amiltu wa min sharri maalam amal) (யா அல்லாஹ், தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன், இன்னும் நான் செய்தவற்றையும் இன்னும் நான் செய்யாதிருக்கின்ற தீமைகளிலிருந்தும் (பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றேன்)

''அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா'' ("Allaahumma haasibni hisaaban yaseeran) ''(யா அல்லாஹ், என்னுடைய (மறுமைக்) கணக்குகளை எளிதாக்கி வைப்பாயாக)''

அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இவ்வாறு கூறி வரும்படி இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹும்ம இன்னீ ழலம்து நஃப்ஸீ ழுல்மன் கதீரன், வ லா யஃக்ஃபிர் அத் துனூப இல்லா அன்த, ஃபஃக்பிர்லி மஃக்ஃபிரத்தன் மின் இன்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம் ("Allaahumma innee zalamtu nafsi zulman katheeran, wa la yaghfir al-dhunooba illa anta, faghfir li maghfiratan min ‘indaka warhamni innaka anta al-Ghafoor al-Raheem) ''(யா அல்லாஹ், எனக்கு நானே தவறிழைத்து விட்டேன், இன்னும் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியாது. எனக்கு மன்னிப்பளிப்பாயாக, இன்னும் என்மீது கருணை புரிவாயாக, நீயே மன்னிக்கக் கூடியவனாகவும், மிகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்)''
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:48

தஸஹ்ஹுத் - தில் ஒரு மனிதர் இவ்வாறு கூறக் கேட்ட இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் : ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க யா அல்லாஹ் அல் அஹத் அஸ் ஸமத் அல்லதீ லம் யலித் வ லம் யூலத் வ லம் யகுல் லஹு குஃபுவன் அஹத் அன் தஃக்ஃபிர்லீ துனூபி இன்னக்க அன்தல் ஃகஃபூர் அர் ரஹீம் (யா அல்லாஹ், யா அல்லாஹ் உன்னிடமே நான் கேட்கிறேன், அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை, (யா அல்லாஹ்) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, நீயே (பாவங்களை) மன்னிப்பவனாகவும், மிகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து, ''அவர் மன்னிக்கப்பட்டு விட்டார், அவர் மன்னிக்கப்பட்டு விட்டார்'' என்றார்கள்.

இன்னொரு தோழர் இவ்வாறு கூறுவதைக் கேட்டார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க பி அன்ன லகல் ஹம்து, லா இலாஹ இல்லா அன்த வஹதுக லா ஷரீக லக் அல் மன்னான் யா பதீ அஸ் ஸமாவாதி வல் அர்ழ், யா தல் ஜலாலி வல் இக்ராம், யா ஹய்யு யா கய்யூம், இன்னீ அஸ்அலுக அல் ஜன்னா வ அஊதுபிக மினன் னார்'' (யா அல்லாஹ், உனக்கேயுரிய அனைத்துப் புகழைக் கொண்டு நான் கேட்கின்றேன், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறில்லை, உனக்கு துணை கிடையாது அல்லது இணையாளர்கள் கிடையாது, நீயே கொடையாளன், வானங்களையும், பூமியையும் படைத்தவனே, புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரித்தானவனே, நிலையானவனே, சுயம்புவானவனே, உன்னிடம் நான் சுவனத்தைக் கேட்கின்றேன், இன்னும் நரக நெருப்பிலிருந்தும் பாதுகாக்கும்படி வேண்டுகின்றேன்).''

(அப்பொழுது அங்கிருந்த) தன்னுடைய தோழர்களைப் பார்த்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ''அவர் எதனைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என்றார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் பதில் கூறினார்கள். அதற்கு, ''எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவனது மிக உயர்ந்த (கண்ணியமிக்க) பெயர்களைக் கொண்டு (அவனிடம் தனக்குத் தேவையானவைகள் குறித்துக்) கேட்கின்றார், அவ்வாறு அல்லாஹ்வினது தன்மைகளைக் கொண்டு அவனை அழைக்கப்படும் போது, அதற்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான், அவ்வாறு அல்லாஹ்வை (நீங்கள்) அழைத்தால், அவன் கொடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்'' என்றார்கள்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by இன்பத் அஹ்மத் Tue 8 Mar 2011 - 20:49

இன்னும் தஸஹ்ஹுத் மற்றும் ஸலாத்துக்கு இடையே இவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்: ''அல்லாஹும ஃக்ஃபிர்லி மா கத்தம்து வமா அக்கர்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்து வ மா அன்த அஃலம் பிஹி மின்னி அன்த அல் முகத்திம் வ அன்த அல் முஅக்கிர், லா இலாஹ இல்லா அன்த'' ("Allaahumma’aghfir li maa qaddamtu wa ma akhkhartu wa maa asrartu wa maa a’lantu wa maa asraftu wa maa anta a’lam bihi minni anta’l-muqaddim wa anta’l-mu’akhkhir, laa ilaaha illa anta) (யா அல்லாஹ், கடந்த காலத்தில் நான் செய்தவைகளை மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் செய்ய இருப்பவைகளையும் மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் மறைத்தவைகளையும், இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும், இன்னும் வரம்பு மீறியவைகளையும், (மன்னித்தருள்வாயாக), என்னை விட நீயே மிகவும் அறிந்தவனாக இருக்கின்றாய். நீயே முற்படுத்துபவனாகவும், இன்னும் நீயே பிற்படுத்துபவனாகவும் இருக்கின்றாய், உன்னையன்றி வேறு ஒரு இறைவன் இல்லை.'' (These du’aa’s and others, along with their isnaads, are to be found in Sifat al-Salaah by al-‘Allaamah al-Albaani, p.163, 11th edn.)

மேற்கண்ட துஆக்களை மனனம் செய்து கொள்வது நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும், அதற்கான தீர்வுகளை வழங்கக் கூடியதாகவும் இருக்கும், ஆனால் இதனை மனனம் செய்யாமல் இருப்பதால், தஸஹுத்தின் பொழுது என்ன ஓதுவது என்பது தெரியாமல் இமாமிற்குப் பின்னால் மௌமான இருந்து விடக் கூடியவர்களாக நாம் இருந்து வருகின்றோம். இந்த நிலை இனிமேலாவது மாற வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு: மேற்கண்ட இறைமறை வசனங்கள் மற்றும் துஆக்களை அதனதன் அரபி உச்சரிப்பில் ஓதுவதுதான் மிகச் சிறந்தது. நம்மில் பலருக்கு திருமறைக் குர்ஆனை அதன் மூல மொழியாகிய அரபி மொழியில் ஓதத் தெரியாது. இந்த ரமளான் மாதத்திலாவது அதற்கான முயற்சியைச் செய்வோம். திருமறையை அது இறக்கப்பட்ட அரபி மொழியில் ஓதப் பழகுவோம். அதன் மூலம் அதன் வார்த்தைகள் மற்றும் அர்த்தம் சிதறாமல் உச்சரிக்கக் கற்றுக் கொள்வோம்.

( جَزَاكَ اللَّهُ خَيْرًا : அறிஞர் ஷேக் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் அவர்களால் தொகுக்கப்பட்ட ''இஸ்லாமிய இல்லம் - 40 வழிமுறைகள்'' கட்டுரையின் ஒரு பகுதி )
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by *சம்ஸ் Tue 8 Mar 2011 - 22:35

நன்றி அன்பு பகிர்விற்க்கு ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்	 Empty Re: உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum