சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Khan11

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு

Go down

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Empty புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 13:58

மது அருந்துவதில் உங்களுக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லாமல் போனால் அருந்தாமல் இருந்துவிடுங்கள். நண்பர்களின் தூண்டுதல், “கம்பெனி” கொடுப்பதற்க்காக தண்ணி அடிப்பது போன்ற பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம், உங்கள் இருதய நலனை பேணிக் காக்க!
நம்ம சூர்யாவோட வாரணம் ஆயிரம் படம் பார்த்த எல்லாருக்குமே தெரியும், அந்தப் படத்துல கதாநாயகனா வர்ற சூர்யா தன்னோட காதலி சமீரா ரெட்டி, ஒரு எதிர்பாராத விபத்துல இறந்துபோக, அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாம, கொஞ்சம் கொஞ்சமா மது, புகைப்பழக்கம், கஞ்சா, போதை மருந்து ஊசி இப்படி எல்லாம் கலந்த, நரகத்தைவிட மோசமான போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆயிடுவாரு!
அப்புறம் “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல”ன்னு பாட்டெல்லாம் பாடிட்டு, ஒரு வழியா போதைப்பழக்கம்ங்கிற நரகத்துல இருந்து மொத்தமா மீண்டு வெளியே வர்றதுக்கு, உடற்பயிற்ச்சின்னு ஆரம்பிச்சி (8 மாசம் கஷ்டப்பட்டு?) கடைசியில சும்மா அட்டகாசமான ஒரு “சிக்ஸ் பேக்”கோட சிக்ஸ் பேக் சூர்யாவா ராணுவத்துல சேர்ந்துடுவாரு!
புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Smoking-cigarette_181
இப்படித்தான் நம்ம சமுதாயத்துல, இளைஞர்கள் பல பேரு வாழ்க்கையில ஏற்படுற பல்வேறு கசப்பான அனுபவங்கள், இழப்புகள எதிர்கொள்ள முடியாம, பல்வேறு போதைப்பழக்கங்களுக்கு அடிமையாயிடுறாங்க. அதுல ஒரு முக்கியமான போதைப்பழக்கம்தான் புகைப்பழக்கம்! ஒருவர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனா, புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்க்கு காரணங்களா, அதிகமான புகைப்பழக்கமுள்ள என்னோட கல்லூரி கால நண்பர்கள் சொன்னது……
சும்மா ஸ்டைலுக்காக/போர் அடிச்சதுனால
வேலைப்பளு
மன உளைச்சல்
காதல் தோல்வி
சும்மா ஒரு கிக்குக்காக (நண்பர்களால் தூண்டப்பட்டு)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Empty Re: புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 13:59

இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக புகைப்பிடிக்கத் தொடங்கி, காலப்போக்கில் அந்தப் பழக்கத்துக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்பது தெரியாமலே புகைப்பிடித்திருக்கும் பலரை நாம நம்ம அன்றாட வாழ்க்கையில, நண்பரா, அக பணியாளரா, பெற்றோரா, சகோதரரா, உறவினரா பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, இப்படிப்பட்டவர்கள்ல பெரும்பாலனவங்க, அந்தப் பழக்கத்துலயிருந்து எப்படியாவது விடுபடனும்னு முயற்ச்சி செய்றாங்க, ஆனா அப்படி முயற்ச்சி செய்யுறவங்கள்ல வெகுச்சிலரைத்தவிர மத்தவங்க தோத்துப்போயிடுறாங்கங்கிறதுதான் நிதர்சனம்!
அது சரி இந்த அவல நிலையை மாற்ற என்னதான் வழி?
இந்தக் கேள்விக்கான விடையுடன், புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறது அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. இந்த ஆய்வுல என்ன செஞ்சாங்க, புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்க்கான வழியென்ன அப்படீங்கிறதப் பத்தித்தான் நாம இனிமே பார்க்கப்போறோம்…..

மூளையின் பகுத்தறிவுப் பகுதியும், புகைப்பழக்கத்துக்கான சிகிச்சை முறைகளும்!
புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Prefrontal_cortex
கடந்த 20-ஆம் நூற்றாண்டில் சுமார் 100 மில்லியன் மக்களை காவு வாங்கிய புகைப்பழக்கத்தை கைவிட, திட்டமிடப்பட்ட சிகிச்சை முறைகள் உண்டு. அதில் புகைப்பழக்கத்தின் மோசமான பின்விளைவுகளை எடுத்துச்சொல்லி புரியவைக்கும் ‘காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரப்பி’ அல்லது ‘காக்னிட்டிவ் சைக்கோதெரபி’ என்று ஒருவகை சிகிச்சை முறை உண்டு. இந்த முறையில்…..
ஒருவர் தன் போதைப்பழக்கத்தினால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைப் பற்றி தெரிந்துகொண்டு அதை கைவிடுவது
எந்தவொரு விஷயத்திற்க்கு இரண்டே முடிவுகள்தான். உதாரணத்துக்கு வாழ்வா சாவா? என்பதைப் போல ஒரு நிலைப்பாடை எடுத்து புகைப்பழக்கத்தை கைவிட முயற்ச்சிப்பது
ஒரு விஷயத்தினால் ஏற்படும் கெடுதல்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவது. உதாரணமாக, புகைப்பழக்கத்தினால் ஏற்படும் நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில்கொண்டு அதைக் கைவிட முயல்வது
இந்தவகையான சிகிச்சை முறையினால் பயனுண்டு என்பதற்க்கான விஞ்ஞானப்பூவமான ஆதாரங்கள் இதுவரை இல்லாமலிருந்தது, இம்முறையின் பயன்/தரம்குறித்த ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது! ஆனால், இம்முறையினால் நிச்சயம் பயனுண்டு என்பதற்க்கான மூளைசம்பந்தப்பட்ட நரம்பியல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளார் யேல் பல்லகலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர், முனைவர் திரு.ஹெடி கோபர்!
அதாவது, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையின்போது, புகைப்பழக்கத்தின் நீண்டகால பின்விளைவுகளைப் பற்றி சம்பந்தப்பட்ட ஒருவருக்கு எடுத்துச்சொல்லும்போது, ஒரு மனிதனின் பகுத்தறிவு மற்றும் சுயக்கட்டுப்பாடுக்கு அடிப்படையான மூளைப்பகுதியான ப்ரீஃப்ரான்டல் கார்டெக்ஸ் (prefrontal cortex), என்னும் பகுதி தூண்டப்பட்டு, செயல்படத்தொடங்கியதாகவும், அதேசமயம் போதைமருந்துக்காக ஏங்கும் அல்லது எதாவதொரு பொருளுக்காக தீராத மோகத்துடன் அலையும் செயல்களுக்கு அடிப்படையான ஸ்ட்ரையேட்டம் (striatum) என்னும் மூளைப்பகுதியின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் கோபர்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Empty Re: புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு

Post by *சம்ஸ் Sun 13 Mar 2011 - 14:00

சரி, அதனாலென்ன இப்போ அப்படீன்னு கேட்டீங்கன்னா, “புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நிச்சயமாக அதிலிருந்து மீண்டு வர முடியும். ஆனால், எப்படி மீண்டு வருவது என்பதை தகுந்த சிகிச்சை முறைகள் மூலம் அவர்களுக்கு எடுத்துச்சொன்னால் போதும்” என்கிறார் கோபர்!
அதுமட்டுமில்லாமல், சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் ப்ரீஃப்ரான்டல் கார்டெக்ஸ் என்னும் பகுத்தறிவுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. ஆனால், புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் இது நன்றாக செய்ல்பட்டு முற்றிலும் எதிர்மறையாக இருப்பது வியப்பளிக்கிறது என்றும், இந்தப் பகுதியின் அதிகமான செய்ல்பாட்டினால், புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தங்களின் ஏக்கம்/போதை எண்ணங்கள் குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றும் கூறுகிறார் விஞ்ஞானி கோபர்!
இந்த ஆய்வுச்செய்தியப் பார்க்குறப்போ, எனக்கென்னவோ இந்த வகையான சிகிச்சை முறை பலனளிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆமா, எனக்குத் தோன்றதுனால என்ன புண்ணியம்? சம்பந்தப்பட்டவங்க என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலையே? அது இருக்கட்டும், இந்த ஆய்வு முடிவைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு Empty Re: புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum