சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... Khan11

லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா...

Go down

 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... Empty லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா...

Post by rammalar Tue 26 Dec 2023 - 11:10

 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... B0ca350f73da7f5536d8fc12e33b7956d5b466439da5dca33905c67a08b3469b

-
லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை... 
பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?


என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள 
முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி 
செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை.


மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் 
நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்.... 
சிகிச்சை தேவைப்படுமா?


பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் 
எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
-
 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... 3d0de9614e4c52063049f066bca5b0001bf21bbeca3cc6d52de0c95230b6efe9

ஸ்பூர்த்தி அருண்

----------------------


இதை மருத்துவமொழியில் 'கோல்டு இன்டாலரென்ஸ்' 
(Cold intolerance) என்று சொல்வோம். இந்தப் பிரச்னை 
உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்
கொள்ளவே முடியாது.


உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் 
'ஹைப்போதெர்மியா' ( Hypothermia) பிரச்னையும் இதுவும் 
வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு 
உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். 


ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. 
இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமாக 
உடலின் கொழுப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தால், 
இப்படி உணரலாம். அதாவது நம் சருமத்தின் அடியில் 

சப்கியூட்டேனியஸ் கொழுப்பு என ஒன்று இருக்கும்.
-
 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... 2bcc3e2752d76a6a33de921af8fd44694338a6805017d35160094c3e169c797b
ஏசி செய்யப்பட்ட இடம்

---


அதுதான் உடல்வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது. இது 


குறைவாக இருந்தால் அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள 


இயலாமல் போகலாம். குளிர்ச்சியான சூழல்களில் இருந்து 


பழக்கமில்லாதவர்களுக்கும் இப்படி நிகழலாம். 






திடீரென அப்படிப்பட்ட சூழலில் இருக்க வேண்டி வரும்போது 


ஆரம்பத்தில் சில நாள்களுக்கு அப்படித்தான் இருக்கும். பழகப் பழக 


உடல் அந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ளும்.






அனோரெக்ஸியா என்ற உணவுக்குறைபாடு பிரச்னை சிலருக்கு 


இருக்கலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் எடை 


அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும். 


அதனால் உணவு விஷயத்தில் அதிதீவிர எச்சரிக்கை உணர்வோடு 


இருப்பார்கள். இதனாலும் அவர்களது உடலில் கொழுப்பு அளவு 


குறைந்து, அதன் தொடர்ச்சியாக குளிரைத் தாங்க முடியாத நிலை 


ஏற்படலாம்.


---

 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... C5e43b44fcd79a7a66b723b0a4b3cf11ebe07c4ab3134ef9e2dfcc6ec0818de7

-



ரத்தச்சோகை
-
அடுத்த காரணம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை. அதாவது 
ரத்தச்சோகை காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். 
அதனாலும் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். இரும்புச்சத்துக் 
குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ரத்தச்சோகை 
வரும். அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.


தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு 
பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை 
ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, 
மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் 
சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். 
அதை 'ரேனாட்ஸ் டிசீஸ்' (Raynaud's disease) என்று சொல்வோம்.
-
 லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை...   பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா... Be9f7c6f7eb5078a72d15e0d3aa424a6fe79798f0b5d09230500a76e42f45c33
-

 தைராய்டு
-
இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் 
பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக 
மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் 
தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது 
காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை 
எடுக்கவும்.
-

நன்றி-டாக்டர் விகடன் & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum