சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

BSNL யூசர்கள் பாவம்! பேசாம வேற SIM வாங்கிடுங்க..  Khan11

BSNL யூசர்கள் பாவம்! பேசாம வேற SIM வாங்கிடுங்க..

Go down

BSNL யூசர்கள் பாவம்! பேசாம வேற SIM வாங்கிடுங்க..  Empty BSNL யூசர்கள் பாவம்! பேசாம வேற SIM வாங்கிடுங்க..

Post by rammalar Thu 4 Apr 2024 - 4:41

பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி அறிமுகத்திற்காக காத்திருக்கும்.. 
பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களின் பொறுமைக்கு ஒரு விருதே 
கொடுக்கலாம்.


ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் 
(Bharti Airtel) நிறுவனங்கள் "கிட்டத்தட்ட" இந்தியா முழுவதும் 
தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டன.


இருந்தாலும் கூட.. கூடிய விரைவில் 4ஜி சேவையும் (4G Network).. 
அதை தொடர்ந்து 5ஜி சேவையும் (5G Service), இந்தியா முழுவதும் 
அறிமுகமாகும் என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 
நம்பிக்கையோடு காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது அந்த 
நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும்படியான ஒரு பகீர் தகவல் வெளியாகி 
உள்ளது!


 அதென்ன தகவல்? இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த 
டெலிகாம் நிறுவனம், தனது 4ஜி நெட்வொர்க்கை வெளியிடுவது 
தொடர்பாக ஒரு புதிய பிரச்சனையில் சிக்கி உள்ளது. பிஎஸ்என்எல் 4ஜி 
சேவைக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பம் 
(Homegrown Technology) ஆனது சரியாக வேலை 
செய்யவில்லையாம்.


சி-டாட் (C-DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டெலிமேடிக்ஸ் 
மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) 
உருவாக்கிய நெட்வொர்க் கோரில் (Network Core) ஒரு சிக்கல் 
கண்டறியப்பட்டு உள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, வெளிப்புற 
சூழலில் பல சந்தாதாரர்கள் ஒரே நேரத்தில் அழைப்புகளை 
(Concurrent calls) செய்ய முடியவில்லையாம்!


 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services - 
TCS) தலைமையிலான கூட்டமைப்பின் ஒரு பகுதியான சி-டாட் ஆனது, 
அம்பாலா மற்றும் சண்டிகரில் உள்ள பிஎஸ்என்எல்-ன் வணிக நெட்
வொர்க்குகளில் எவால்வ்டு பாக்கெட் கோரை (Evolved Packet Core 
- EPC) உள்நாட்டிலேயே உருவாக்கி வெற்றிகரமாக சோதனை 
செய்ததாக கூறி இருந்தது.


அதை தொடர்ந்தே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-க்கு உபகரணங்களை 
வழங்கவும், 4ஜி வெளியீட்டின் போது சிஸ்டம்ஸ் ஒருங்கிணைப்பாளராக 
(Systems integrator - SI) செயல்படவும் சி-டாட்-க்கு உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டது. 


ஆனால் உண்மை நிலவரமானது "வெற்றிகரமான சோதனை" என்கிற 
கூற்றுக்கு முற்றிலும் வேறுபட்டதாக தெரிகிறது.


 இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை வெற்றிகரமாக 
அறிமுகப்படுத்தி, டெலிகாம் சந்தையில் ஒரு பெரிய பங்கை பெற 
மாட்டோமா என்று பிஎஸ்என்எல் நிறுவனமும், அதன் ஊழியர்களும் 
ஏங்கிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் உள்நாட்டிலேயே 
உருவாக்கப்பட்ட மேட் இன் இந்தியா தொழில்நுட்பமானது அந்த 
ஏக்கத்தில் மண்ணை அள்ளி போட்டுள்ளது போல் தெரிகிறது!


தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் சுமார் 90 மில்லியன் பயனர்கள் 
உள்ளனர் மற்றும் ஆக்டிவ் ஆக உள்ள யூஸர் பேஸ் ஆனது 
50 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது. பான்-இந்தியா அடிப்படையிலான 
4ஜி சேவையை அறிமுகம் செய்யாதவரை இந்த எண்ணிக்கை நிசசயம் 
அதிகரிக்க போவதில்லை.


சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் அதிகாரப்பூர்வ செயலியான 
மை பிஎஸ்என்எல் ஆப்பின் (My BSNL App) அம்சங்களை பிஎஸ்என்எல் 
செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) உடன் இணைத்ததும் இங்கே 
குறிப்பிடததக்கது. இந்த திடீர் மாற்றத்தை தொடர்ந்து பிஎஸ்என்எல் பயனர்கள், 
அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் அணுக பிஎஸ்என்எல் செல்ப்கேர் 
ஆப்பை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.


பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய 
2 வெர்ஷன்களிலும் முறையே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) 
மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக பதிவிறக்கம் 
செய்ய கிடைக்கிறது. இந்த ஆப்பை டவுன்லோட் செய்வதன் மூலம் தனது 
வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற அனுபவம் 
கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் கூறுகிறது.


அறியாதோர்களுக்கு பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்பில் பிஎஸ்என்எல் 
நிறுவனத்தின் கீழ் அணுக கிடைக்கும் அனைத்து வகையான சேவைகளையும் 
(ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், லேண்ட்லைன் மற்றும் ஃபைபர்-டு-தி-ஹோம்) 
நிர்வகிக்க முடியும். மேலும் இந்த ஆப் வழியாக டேட்டா பயன்பாட்டை 
(Data usage) கண்காணிக்க உதவும் புள்ளிவிவரங்களை காட்சிப்படுத்தும் 
டாஷ்போர்டுகளையும் (Dashboards) அணுக முடியும்!


-Muthuraj 
source:gizbot.com
&
Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum