சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Khan11

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

3 posters

Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by ராஜா Thu 21 Apr 2011 - 22:41

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம் (Global warming and preventive measures)
இன்று உலக மக்கள் எல்லோரும் புதிய புதிய நோய்களைச் சந்தித்து வருவது போலவே நாம் வசிக்கும் இந்த நிலப்பந்தும் பல்வேறுவகையில் வெப்பம் அடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே . இதனால் துருவப்பிரதேசங்கள் தங்களின் பனிப்பாறையை உருக விட்டுக்கொண்டு இருக்கிறது . இந்த பனிப்பாறைகள் உருகுவதால் கடல்மட்டம் உயரும் என்பதும் நாம் அறியாத ஒன்று அல்ல .

உலகின் உயரிய தமிழ நாகரீகம்

அண்மையில் கிடைத்துவரும் பல்வேறு ஆய்வுகள் உலகின் எல்லா கலைகளுக்கும் உரியவர்கள் பழந்தமிழர்கள் என நிலைநிறுத்துகிறது . பாவ்வேறு அறிஞ்சர்களின் ஆய்வுகள் இதே வரிசையில் தொடருகிறது .ஐரோப்பிய , எகிப்திய , கிரேக்க , இலத்தீன , மொழிகளுக்கும் , நாகரீகங்களுக்கும் தமிழர்கலைகள் தான் முன்னோடி என சான்றுகாட்டுகிறது. குமரிக்கண்ட அழிவின் போதும் , சிந்துவெளி அழிவின்போதும் இங்கிருந்து தப்பி உலகெலாம் தமிழர்கள் பரவியது நாமெல்லோரும் அறிந்து கொள்ளவேண்டிய விடயம் .உலகெலாம் பரவியதமிழன் பரவிய இடங்களில் எல்லாம் நம் கலைகளை தொலைத்தனே தவிர எங்கும் தமிழரின் கலைகளை நிலைநிறுத்த வில்லை .

உலகு என்ற சொல்லாடல் ...

முதன்முதலில் இந்த நிலப்பந்தில் பழந்தமிழர்கள் தான் உலகு ... உலகம் என்ற கருத்துகளை பதிவு செய்தனர் .
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (குறள் )
இதேபோல பலமேற்க்கோள் காட்டலாம் . ஆக உலக பார்வையும் உலக நலனை உள்ளடக்கிய கோட்பாடுகளையும் கொண்டிருந்தவர்கள் பழந்தமிழர்களே என அறியலாகும் விடயமாகும் . அதேபோல இன்று உலக நலன் என்று பார்க்கும் போதும் சுற்றுசூழல் பாதிப்பு எனகொண்டலும் . அவற்றால் வந்துற்ற கேடுகளை நீக்கவேண்டுமேனின் பழந்தமிழர் காட்டிய கோட்பாடுகளை கடைபிடிக்கும் போது நோய் நீங்கிக் கொண்டு சுற்றுசூழலையும் பதுகத்துகொண்டு அமைதியாக வாழமுடியும் .

இன்றைய அறிவியல் ....

இந்த நிலப்பந்து (பூமி ) சுமார் 4 .6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் கொண்டது என அறிவியலாளர்கள் கருத்தாகும் . கட்டுபாடு இல்லாத மனித தேவைகள் உலகை அச்சுறுத்துகிறது .அளவிற்கதிகமான நுகர்வு மனிதனை சீக்களியாக்குகிறது . அதேபோல் இந்த போரண்டத்தையும் அழித்துவருவது கண்கூடு .கரிமப் பொருட்களின் அளவற்ற பயன்பாடு நம்மை அழிவிற்கு இட்டுசெல்கிறது . பசுமை இல்ல வளியான(வாயுக்களான )கார்பன் - டை -ஆக்சைடு , நைற்றகசுடைடு,மற்றும் மீதேன் போன்ற வைகளுடன் குளோரோ ஃப்ளோரோ கார்பன் வளியும்(வாயு )
இணைந்து உள்ளது .
இவைகளின் சேர்க்கையால் இந்த நிலப்பந்து அளவுகடந்து வெப்பமடைகிறது . இந்த வெப்பத்தினால் கடல்மட்டம் உயரும் எனக்கண்டரியப்பட்டு உள்ளது . அதுமட்டும் அல்லாமல் கதிரவனிடம் (சூரியன் )
இருந்து வெளிப்படும் கடுமையான வெப்பத்தையும் , புற ஊதாக்கதிர்களையும் நம் வாழும் நிலத்தை தாக்காமல் கத்துவருபவை ஓசோன் படலம் . இந்த ஓசோன் படலத்தை கரிமவளி(வாயு ) பெருக்கத்தால் ஒட்டையாக்குகிறது . ஓசோன் படலம் காக்கப்படவேண்டியது என்பது நாம் அறியாத ஒன்று அல்ல . உலகு வெப்பம் அடைவதால் நாம் வாழும் நிலப்பந்தின் வெப்பநிலை இரண்டு டிகிரி
செல்சியசு கூடும் என்கின்றனர் . இதை தடுக்காவிட்டால் வெப்பம் கூடி இந்த உலக உயிரினகள் முப்பது விழுக்காடு அழியும் எனகூறப்படுகிறது . இன் நூற்றாண்டின் இறுதியில் 2100 ல் கடல் மட்டம் 23 அங்குலம் உயரும் என கண்டறிந்து உள்ளனர் . இதனால் கடலோர பட்டிணங்கள்மூழ்கும் நிலை உண்டாகும் .
வளி மண்டல வெப்பநிலை உயர்வால் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் கொதித்து ஆவியாகிக் கொண்டிருக்கும் . கடலில் இருந்து பல்லாயிரம் கொடி அளவு கரிம வளி வெளிப்பட்டு வளிமண்டலம் எங்கும் புகைமண்டலமாகும் பலகோடி சிற்றினங்கள் முற்றும் அழியும்
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty Re: நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by ராஜா Thu 21 Apr 2011 - 22:42

உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து செய்யும் கொடுமைகள் ...


அதேபோல உலகில்உள்ள நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அணுகுண்டு சோதனை நடத்திக்கொண்டு வருவதால்தான் இந்த நிலப்பந்தின் வெப்பம் வேருவகில் கூடிக்கொண்டே போகிறது .

நிலத்தின் அடியில் நத்தப்படும் அணுகுண்டு சோதனைகளின் போது - அணுகுண்டுகள் அனைத்தும் வெடித்து சிதறி வெளிப்பாத்தும் அணுக்கதிர்கள் மூலம் வெளிப்படும் அளவிற்கதிகமான வெப்பத்தின் தன்மை எவ்வளவு பயங்கரமானது? எவ்வளவு கொடூரமானது?
இப்படிப்பட்ட கொடூர தன்மை வாய்ந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் அணுகுண்டுகளை
பூமிக்கடியில் வெடிக்கவைத்து சோதனை செய்யும் போது நாம் வாழும் சூழல் கேட்டுப் போகுந்தானே ?
நிலத்தின் அடியில் நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகளின் போதுஅணுகுண்டுகள் எல்லாம் வெடித்து சிதறி வெளிப்படுத்தும் கொடுரமான வெப்பங்கள் முழுவதும்பூமியின் வுட்பகுதியில் ஒருவிதமான அழுத்தத்தை உண்டாக்கி பூகம்பம் ஏற்பட அல்லவா காரணமாகிறது . கடலுக்கடியில் நடத்தப்படும் சோதனைகளால் கடல் நீரின் அழுத்தத்தால் மாறுபாடு உண்டாகி ஆழிபேரலை (சுனாமி ) உண்டாகி பலகோடி உயிரிழப்புகளை அல்லவா உண்டாக்குகிறது . வான் வெளியில் நடத்தப்படும் அணுகுண்டு சோதனைகளும் வளிமண்டலமும் மிகப்பெரிய அளவுக்கு பாதிப்பு அடைந்து பூமிபந்தினை தாக்கி அழிக்கிறது .
இப்படிப்பட்ட
காரணங்களினால் இந்த நிலபந்து முழுமையும் கேடு அடைகிறது உணவு உற்பத்தி குறையும் என கண்டறியப்பட்டு உள்ள்ளது . வெப்பத்தையே கண்டிராத நாடுகளெல்லாம் வெப்பத்தைகண்டு அச்சமடைந்து வருகிறது . இப்படிப்பட்ட எல்லாவற்றிற்கும் இலபநோக்கமும் , சுரண்டலும் தனிபெராளுமை (ஏகதிபத்தியம் )மும் , போர்வெறியும் காரணமெனலாம் .
இவற்றால் பருவநிலை மாற்றங்களும், ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு , ஓர்பக்கம் பட்டினிசாவு, வறட்சி,
பலபுதிய நோய்கள் இப்படி மனிதகுலத்தை நாசமாக்குகிறது . மனித இனத்தையே அழிவுக்கு உள்ளக்குகிறது .
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty Re: நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by ராஜா Thu 21 Apr 2011 - 22:42

என்னதான் தீர்வு தமிழ கலைகளே நல்வாழ்வு

நம்
பழந்தமிழரின் அறிவுமரப்பு உயர்ந்தும் தெளிந்தும் உலக மாந்த இனம் அனைத்திற்குமான வாழ்வியலை நெறிப்படுத்துகிறது . தமிழின் உயரிய நூல்களான திருவள்ளுவம்
உலகத்தேடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் ( குறள் )
வாழும் நெறியை போதிக்கிறது இது உலக அமைதியையும் , அன்பையும் போதிப்பதாகும் .
கணியன் பூங்குன்றன் என்ற புலவர்
யாதும் ஊரே யாவரும் கேளீர் என சமத்துவ கொடியை உயரே தூக்கி உலகமக்களுக்கு கட்டுகிறார் .
திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ... எனபாடுகிறார் .
தொல்காப்பியம் மனிதர்கள் வாழும் நெறியை பக்குவமாக போதிக்கிறது .
ஆக தமிழரின் அறிவு மரபு என்றும் குறுகி போனதில்லை எனலாம் .
இந்த பேரண்டம் முழுவதும் தமிழர் காட்டிய நெறியில் மரங்களையும் , மூலிகைகளையும் நடுவத்தின் மூலம் இன்றைய நிலம் முழுவதும் வெப்பமடைவதை தடுக்கலாம் .
மூலிகை, மரங்களை நடுவதின்மூலம் ...
நோயற்ற உலகை காணலாம் .
கடல் ஓரங்களில் அலையாத்தி மரங்களை நடுவத்தின் மூலம் ஆழிப்பேரலை (சுனாமி ) தாக்கத்தில் இருந்து பெரும் மக்களைக் காக்கலாம்.
உலக வெப்பம் தணியும் .
காற்றுமண்டலம் தூய்மை அடையும் .
மழைவளம் பெருகும் .
வேளான் தொழில்கள் வளர்ச்சி பெரும் எழுச்சி அடையும் .
வேலைவாய்புகள் பெருகும் .
மூலிகைகள் ,மரங்கள் தோற்றத்தினால் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்து நெகிழி (பிளாஸ்டிக் )
பொருட்களை நீக்கி சுற்று சூழலை காக்கலாம்.

மனித இனமே அன்பும் மகிழ்வெம் பெருக்குண்டு ஏற்றத்தாழ்வு இன்றி வாழ முடியும் .
சித்தமருத்துவம் காப்போம் மனித இனத்தை அழிவில் இருந்து காப்போம் .
நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Images
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty Re: நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by *சம்ஸ் Fri 22 Apr 2011 - 10:16

நன்றி பகிர்விற்க்கு ராஜா ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty Re: நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by ஹம்னா Fri 22 Apr 2011 - 13:51

##* ##*


நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்  Empty Re: நோய்கள் நீங்கவும் உலக வெப்பமும் தணிக்கும் சித்த மருத்துவம் காப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum