சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

விவாகம் தேவையா  Khan11

விவாகம் தேவையா

Go down

விவாகம் தேவையா  Empty விவாகம் தேவையா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Apr 2011 - 14:44

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

திருமணத்தின் முக்கியத்துவத்தை போதிக்கும் நபிமொழி

'திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிப்பது திருமணமாகும். திருமணத்தின் மூலமாக ஒரு மனிதனுடைய வாழக்கையில் திருப்பு முனை ஏற்படுகிறது

தனிமனிதனாக வாழந்து வந்த மனிதன் தன் மனம் போன போக்கில் சென்றிருப்பான், ஆனால் திருமனம் என்ற பந்தத்தின் மூலம் அவனுக்கு என்று சில பொறுப்புகள் வந்துவிடுகின்றன அந்த பொறுப்புகளின் மூலம் அவனது வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாற்றப்படுகிறது

அந்தரங்கமான விஷயங்களை பெற்றோரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியாது, தொழில் நுணுக்கங்கள் போன்ற இலாபம் தரும் விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ள முடியாது ஆனால் அனைத்து விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ள முடியும் காரணம் அவர் உங்களின் சுகம் துக்கம் அனைத்திலும் பங்கெடுப்பவளாக இருக்கிறாள். எனவேதான் அல்லாஹ் கணவனுக்கு அவனுடைய மனைவியை ஆடையாக வர்ணிக்கிறான்

பெற்றொரின் அரவணைப்பில் வாழ்க்கை முழுவதையும் கழிக்க முடியாது அவர்கள் முதுமையை அடைந்துவிட்டால் அவர்களை கவனிக்க நல்ல மனைவியைப் போன்ற ஒரு செல்வம் வேறு இல்லை!

திருமணம் செய்துக்கொள்ளாமல் அல்லது மறுமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதையும் உடன் பிறந்தவர்களுடைய அரவணைப்பில் கழித்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள் காரணம் உங்கள் உடன்பிறந்தவர்கள் முதுமையை அடைந்து விட்டால் அவர்களை கவனிப்பதே அவர்களின் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக அமைந்து விடும் எனவே உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களை இறுதிவரை கவனிக்க முடியாது எனவே திருமணமாகாதவன் காலமெல்லாம் உடன்பிறந்தவர்களை நம்பியிருப்பது முட்டாள்தனமாகும். எதிர்காலத்தில் வரவிருக்கும் அவலநிலையைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.

ஒரு மனிதனுக்கு பிள்ளைச் செல்வம் கொடுப்பது அல்லாஹ்வின் அருளாகும் இந்த கிடைத்தற்கரிய அருள் மட்டும் மனைவியின் மூலமாக கிடைக்கிறது இதை நலுவ விடலாமா?

கணவன் தன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவைக்கூட அல்லாஹ் கூலியாக கருதி அதை நிரப்பமாக வழங்குவதாக நபிகளார் (ஸல்) கூறுகிறார்கள் எனவே உங்கள் கூலியை நீங்கள் அறிந்தே இழக்கலாமா?

தரம்கெட்ட மேலை நாட்டு கலாச்சாரம்

மேலை நாடுகளில் நீங்கள் காணலாம் இளமைப் பருவத்தில் திருமணமாகாத நிலையில் உறவு கொண்டு வாழ்ந்து வருவார்கள்

அவர்களுக்கு கணவன், மனைவி, சகோதர, சகோதரிகள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் யாருக்கு பிறந்த அண்ணன், தம்பி, பிள்ளை என்றே கணிக்க முடியாது!

காலையில் ஒருவன் மாலையில் ஒருத்தி என்ற கேவளலமான வாழ்க்கையில் அற்ப சுகம் காண்பார்கள் வயோதிக பருவத்தில் தற்கொலை செய்துக்கொள்வார்கள்!

குழந்தை பிறந்தாலும் தந்தை யார் என்று தெரியாத அவல நிலைக்கு பிள்ளைகள் தள்ளப்படுவார்கள்

முதுமை அடைந்து விட்டால் அநாதை ஆசிரமங்களுக்கும் ஏன் பிச்சை எடுக்கும் அளவுக்கும் தள்ளப்படுகிறார்கள்

வருடத்தில் ஒருநாள் தாய், தந்தையர் தினம் கடைபிடித்து அன்று மட்டும் யாருக்கோ பிறந்த பிள்ளையாக இருக்கும் அவர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும் அவலநிலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

வயோதிகப் பருவத்தில் விம்மி விம்மி அழுவார்கள் பதில் கூற ஆள் இருக்காது மரணித்தாலும் எடுப்பதற்கு நாதியிருக்காது

உடன் பிறந்தவர்கள் என்ற இரத்த பந்தமே பெரும்பாலும் இருக்காது.

ஆடம்பரமாக, மல்டி மில்லியனராக வாழந்துவருவார் ஆனால் வயோதிக பருவத்தில் கவனிக்க சொந்த வாரிசு இருக்காது! கஷ்டப்பட்டு சேமித்த சொத்துக்கள் பயணற்று சென்றுவிடும்.

இன்றைக்கு நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் மாற்றுமதத் துறவிகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் துறவிகளாக வாழந்து வருவார்கள் ஆனால் அவர்களால் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே பெண் துறவிகளை நியமித்து அவர்களுடன் தவறான உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் என்ன விளங்குகிறது அவர்களின் மதம் போதிக்கும் துறவரம் தவறானது மேலும் அவர்களின் கொள்கையும் தவறானது என்பதுதானே!

அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)

உங்கள் மன அமைதிக்காகவே திருமணம்

ஒரு ஆணோ பெண்ணோ திருமணமாகாத நிலையிலோ அல்லது திருமணமாகியும் திருமண ஒப்பந்த முறிவு ஏற்பட்ட நிலையிலோ மன நிம்மதியுடன் வாழ முடியுமா? திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா? இந்த அத்தாட்சியை நாம் இழக்கலாமா?

'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30:21)

அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்'. (அல்குர்ஆன் 13:38)

அநாதைகளுக்கும் திருமணம் முடித்துவைக்க வேண்டும்

அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4-6)

அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும்!

'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

கணவனை இழந்த அல்லது தலாக் பெற்ற பெண்கள் இத்தா முடிந்த நிலையில் மறுமணம் செய்துக்கொள்ள விரும்பினால் அவர்களை தடுக்கக்கூடாது!

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்)

மனைவியர் உங்களுக்கு ஆடை

நீங்கள் அணியும் ஆடை உயர்தரமானதாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், கண்ணியமுள்ளதாக இருக்க வேண்டும் உடலை மறைப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆடையில் ஒரு பொத்தான் விழுந்துவிட்டாலும் உடனே அதை தைத்து நல்ல முறையில் அணிந்துக்கொள்வீர்கள் ஆனால் மனைவி உங்களுக்கு ஆடையாக இருக்கும் பட்சத்தில் அவளை மட்டும் கவனிக்கத் தவறுவது ஏன்?

'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை'. (அல்குர்ஆன் 2:187.)

'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன'. (அல்குர்ஆன் 2:228)

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

மனைவி குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருக்க வேண்டும்!

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விவாகம் தேவையா  Empty Re: விவாகம் தேவையா

Post by நேசமுடன் ஹாசிம் Fri 22 Apr 2011 - 14:45

என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், 'திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!" என்று கேட்டார்கள். நான், 'ஆம்" என்று கூறினேன். 'கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா?' என்று கேட்டார்கள். நான், '(கன்னிப் பெண்ணை) அல்ல் கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)" என்று கூறினேன். 'உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்" என்று கூறினார்கள். (புகாரி பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4052)

திருமணம் உள் உணர்வுகளை கட்டுப்படுத்தும் கேடயம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1905)

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

திருமணத்தால் வறுமை அகலும்.

'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

“எவர் அல்லாஹ்வுக்கு பயந்து நடக்கிறாரோ அல்லாஹ் அவருக்குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி வகையை ஏற்படுத்துவான். அன்றி, அவர் அறிந்திராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை வழங்குவான். (திருக் குர்ஆன் 65: 2-3)

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

அல்ஹம்துலில்லாஹ்

மேற்கண்ட பதிலில் தவறு கண்டால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளலாம்! (இன்ஷா அல்லாஹ்)


விவாகம் தேவையா  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum