சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

ஒரு இங்கீத உறவு சிறு கதை... Khan11

ஒரு இங்கீத உறவு சிறு கதை...

Go down

ஒரு இங்கீத உறவு சிறு கதை... Empty ஒரு இங்கீத உறவு சிறு கதை...

Post by நண்பன் Sun Dec 12, 2010 6:31 pm

வங்கியிலே அடைவு வைத்த நகையொன்றை மீளப்பெறவேண்டியிருந்தது. வரிசையிலே எனது முறைக்காக காத்திருந்து பத்திரத்தில் கையெழுத்துப்போட வேண்டிய இடமெல்லாம் போட்டு சரிபார்த்து முடித்த பின் உத்தியோகத்தர் துண்டைத்தந்து சொன்னார், கொண்டுபோய் காசைக் கட்டி வருமாறு. காசாளரிடம் போய் வரிசையிலே நின்று அடைவு துண்டைக் கொடுத்த போது அவர் கட்ட வேண்டிய தொகையைச் சொன்னார்.

நான் பர்ஸ்சை திறந்து இருந்த காசை கொடுத்தேன். அவர் எண்ணிப் பார்த்துவிட்டு இன்னும் நூற்றி ஐம்பது ரூபாய் குறைகிறது என்றார்! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! பையைத் திறந்து பார்த்தேன், ஐம்பது ரூபா தான் கிடந்தது! இன்னும் நூறு ரூபா வேண்டும். தெரிந்த முகங்களுமில்லை! வீட்டுக்குப் போய் வரவும் முடியாது! அவகாசம் போதாது. மனம் தவித்துக் கொண்டிருந்தது! அந்த இடத்தில் அநாதையாய் ஆதரவற்றுப் போனதாய் உணர்ந்தேன்!

காசாளர் அதட்டலாய் அவசரப்படுத்தினார்! பின்னுக்கு வரிசையில் நின்றவர்கள் என்னை வேடிக்கை பொருளாகப் பார்த்தனர். அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது! எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த நடுத்தரமான ஒருவர் நூறு ரூபாத்தாளை என் முன்னால் நீட்டினார்! கடவுள் வந்து காட்சி கொடுத்தது போலிருந்தது!

நானும் அவதியில் அவசரத்தில் நெருக்கடியில் அவர் முகத்தைக் கூட சரியாகப் பார்க்கவில்லை! கடவுளுக்கு உருவம் இல்லைத்தானே!

நான் பணத்தைக் கட்டிய பின் நகையை எடுத்து கூப்பிடு மட்டும் வெளித்திண்ணையில் இருந்து காத்திருந்தேன். பணம் கொடுத்து உதவி செய்த பெரியவரை சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளாது விட்டேனே, ‘நன்றி’ என்று ஒரு சொல்லேனும் சொல்லாமல் போனேனே என்று வருத்தத்தோடு யோசித்துக் கொண்டிருந்தேன். அவரும் ஏதோ அலுவலாக வங்கிக்கு வந்திருக்கிறார், காரியம் முடிந்ததும் இந்த வழியாகத் தானே வெளியேற வேண்டும், என்று அவர் வரவுக்காக காத்திருந்தேன். என்னைக் கூப்பிடப் போகிறார்களே என்பதிலும் என் மனம் அவ்வளவு நாட்டம் கொள்ளவில்லை!

அவர் உருவத்தைத்தான் ஞாபகத்துக்குக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருந்தேன்! மீசை வைத்திருந்தார் குரக்கன் புட்டில் தேங்காப்பூ இருந்தது போல இங்கொன்றும் அங்கொன்றுமாக நரைமயிர் தெரிந்தது. ஆள் நல்ல நிறம், கன்னப்பகுதியில் ஒரு பெரிய மச்சம் இருந்தது. அவர் நிறத்துக்கு அது எடுப்பாக இருந்தது! வெள்ளை வேட்டி கட்டி மங்கலான மஞ்சள் சட்டை போட்டிருந்தார்... வேறு.... ஞாபகத்துக்கு வரவில்லை, இந்த அடையாளம் போதும்.

எதிர் கொண்டுவருபவரை எல்லாம் துருவித் துருவிதேடின கண்கள்! அவரைத் தான் காணவில்லை உள்ளே போய் தேடலாமா, அதற்கிடையில் கூப்பிட்டால்! துணிவும் வரவில்லை! பெண்கள் எல்லோருக்கும் பொதுவான பலவீனம், உடல்பலம் மனத்துணிவு குறைந்திருப்பதுதான்!

‘காலத்தால் செய்த உதவி மலையினும் மாணப் பெரிது’ என்ற வள்ளுவர் வாக்குப் படி, அந்த நேரத்தில் அவர் செய்த உதவி ஒரு இலட்சம் பெறும்! என் மனம் அப்படிச் சொல்கிறது. பணத்தை வைத்து எத்தனை வகையாக ஆளுகிறார்கள்! பிறருக்கு உதவிசெய்து இன்பம் காண்பவர், பணத்தை தன் வீட்டுக்கு கூட செலவழிக்காமல் சேர்த்து திமிரில் திரிபவர். தங்கள் கீழ்த்தரமான இச்சைகளைத் தீர்ப்பதற்காக உதவிக்கரம் நீட்டுபவர் என்று பலவகை. ஆனால் முதலில் சொன்ன வகையினரைப் பார்ப்பதுதான் அருமையிலும் அருமை!

நான் உள்ளேயிருந்து வெளியேறுவோரையே பார்த்து தேடிக் கொண்டிருக்கும் போது எனது பெயரைச் சொல்லி அழைத்தார்கள்! நான் உள்ளே போய் மீண்டும் உரிய இடங்களில் கையெழுத்திட்டு அடைவு சங்கிலியை மீளப் பெற்றுக் கொண்டு உள்ளே அவதியாகப் போய் அவரைத் தேடினேன். ஆள் இல்லை! எங்கும் தேடினேன் பலனில்லை! நான் நகையை பெறும் அலுவல் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் வெளியேறியிருக்க வேண்டும்! என்ன மனிதனோ, இவ்வளவு பெரிய உதவியைச் செய்துவிட்டு முகம் கொடுக்காமல் அலட்சியமாகப் போய்விட்டாரே!

நேரத்தைப் பார்த்தேன் பதினொன்றரையைத் தாண்டி விட்டது. மூத்தவள் முன் பள்ளியில் படிப்பு முடிந்து எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்! தொட்டிலில் தூங்கவிட்டு கிடத்திய குழந்தை என்ன பாடோ தெரியாது! நடையைத் துரிதமாக்கினேன் பிள்ளைகளைத் தேடி!

வீட்டுக்கு வந்து எந்த பணியைச் செய்தாலும் அந்தப் பெருந்தகையே நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தார்! நினைக்க வேண்டிய மனம்தானது, முகம்தானது!

வேறொருநாள் சந்தைக்குப் போய் மீன் வேண்டி மரக்கறியையும் வாங்கி தேங்காயையும் எடுத்துக் கொண்டு நிமிரும் போதுதான், ஒருவர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார் சிரித்த முகத்தோடு! அவர்தான்....! அவரேதான்....! தெரிந்தவர் போல் சிரித்துக் கொண்டு வந்ததே, அவர்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தியது! எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆனது! இப்போதுதான் அவரை கூர்ந்து பார்த்தேன். நடுத்தரவயதென்றாலும் இப்பவும் அழகாகத்தான் இருந்தார்! கவர்ச்சியான முகம், கம்பீரமான தோற்றம்! இப்பவே இப்படியென்றால் இளமைக் காலத்தில் எப்படியிருப்பார் என்று மனம் எடை போட்டது!

“உங்களைத் தேடினேன், காணயில்ல, பிறகும் சந்திக்க வேணுமெண்டு தேடித்திரிஞ்சநான்”.

“நானும்தான் உங்களத் தேடித்திரிஞ்சன் இண்டைக்கு கண்டது சந்தோஷமாயிருக்கு...” என்று சொல்லிக் கொண்டே, கைப்பையைத் திறந்து நூறுரூபாதாளை அவர் முன் நீட்டினேன், “மெத்தப் பெரிய உபகாரமையா உங்கட உதவிக்கு”. அவர், “வீட்டுக்குத் தேவையான எல்லாச்சாமானும் வாங்கிற்aங்களா” கனிவாகக் கேட்டார். பேச்சிலும் வசீகரம் இருந்ததை உணர்ந்தேன்! எல்லாராலும் இப்படி இனிமையாக பேச முடியாது. முன்னர் நான் கேட்டதில்லை!

“இன்னும் வாங்கக் கிடக்கு அரிசிவாங்க வேணும் செத்தல் வாங்க வேணும்...” நான் முடிக்கவில்லை “அப்படியானால் நீங்க மற்றச் சாமானுகள வாங்குங்க, உங்களுக்கு இடைஞ்சல் இல்லாத நேரமா தரலாம், அல்லது தராமலும் விடலாம். நான் இத கடனாக உங்களுக்குத் தரவில்லை, ஒரு உதவியாகத்தான் தந்த நான்...” பொன்னை விரும்பும் பூமியிலே இப்படியும் ஒரு பொன்மனச் செம்மலா....!

“அப்ப ஏன் என்ன தேடித் திரிஞ்சநீங்க சந்திச்ச நீங்க...?” “உங்களப் பார்க்க வேணும் போல இருந்தது, பார்த்தன், சந்திக்க வேணும் போல இருந்தது சந்திச்சன், இப்ப போக வேணும் போல இருக்கு போறன்....” என்று சொல்லிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்.

நான் ஏக்கத்தோடு அவர் போகும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன்! எதையோ பறிகொடுத்தது போல இருந்தது, நானும் உங்களத் தேடினேன், உங்களப் பார்க்க வேணும் போல இருந்தது, சந்திக்க ஏங்கினேன்’ என்று சொல்லாமல் விட்டேனே என்று மனம் வருத்தப்பட்டது! பெண்மையின் பலவீனம் அங்கே தெரிந்தது! இப்படி சொல்லாமல் விட்ட நினைவுகள் பேச்சுக்கள் ஆசைகள் எவ்வளவோ பெண்களின் ஆழ்மனதில் புதையுண்டு கிடக்கின்றன தெரியுமா....!’ பாலர் வகுப்புப் பிள்ளை, தொட்டிற் பிள்ளை நினைவர கற்பனை கலைந்தது, அவதியாக வீடு சென்றேன்.

அன்று இரவு என் கணவர் என்பக்கத்தில் படுத்துக் கிடந்து பீடி புகையை ஊதிக் கொண்டிருந்தார். சாராய நெடியும் சேர, வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது! போய் பிள்ளைகளோடு படுத்துக் கொண்டேன். நான் தலையணையைத் தூக்கிக் கொண்டு சற்று விலகிப் போய் பிள்ளைகளோடு படுத்துக் கொண்டேன்.

இது நித்தியம்! அவர் குடித்து முடித்து மிச்சம் மீதியிருந்தால்தான், எமது சீவியம்! என்மீதும் அக்கறையில்லை பிள்ளைகள் மீதும் பாசமில்லை! ‘இரண்டையும் பெட்டைகளாகப் பெத்துப் போட்டாய்’ என்று சீறுவார்...! என்னோடு கதைக்கும் போது கத்தி குழறி ஏசித்தான் பேசுவார்! வெறியில்லாவிட்டாலும் இந்த நெறியைத் தான் கடைப்பிடிப்பார்!

இவரும் என்னைக் காதலித்துத்தான் முடித்தார்! இந்த ஊரிலேயே நீ தான் அழகி என்று என் வீட்டை வட்டமிடுவார். போகுமிடமெல்லாம் பின்னால் சுற்றுவார்! கதைக்கும் போது எவ்வளவு பக்குவமாக கதை பேசுவார்! எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கண்கள் இருக்கிறதே, அது தான் பெண்களை வீழ்த்திவிடும் மாயவலை! ஆவல் ததும்பும் அவரின் பார்வையில் நான் சிக்கி விட்டேன்!

எங்கள் குடியிருப்புப் பக்கம் கோழி வளர்ப்பவர்களுக்கு பெரிய எதிரி காட்டுப் பூனை தான்! கோழிகள் மரத்தில் தங்கும். இரவில் வரும் இந்தக் காட்டுப் பூனைகள் மரத்துக்குக்கீழே நின்று கோழிகளை வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்க்கும்! பார்வையின் வேகத்தால் கோழிகள் தொப்புத் தொப்பென்று கீழே விழும்! சில ஆண்களின் கண்கள் அப்படிப்பட்டவை! இவர் காட்டுப் பூனை போல என்னை கொத்திக் கொண்டு போய் விட்டார்!

ஆண்களின் பலமும், பெண்களின் பலவீனமும் இங்கே தான் இருக்கிறது! நாலு நாள் படுத்த பின் நாயிலும் கேடு! துண்டு பீடியில் இருக்கும் பிடிப்புக்கூட நம்மிடம் இல்லை!

விலகிச் சென்று படுத்தாலும் தூக்கம் வரவில்லை. அவர் நினைவுதான் வந்தது! ‘நான் கடனாகத் தரவில்லை, உதவியாகத்தான் தந்தநான், உங்களத் தேடிக் கொண்டு திரிஞ்சன், பார்க்க வேணும் போல இருந்தது. சந்திக்க வேணும் போல இருந்தது... இந்தச் சொற்கள் செவியில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது! ஒவ்வொரு சொற்களையும் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே அலாதியானது, வசீகரமானது! அவரைத் தேடி தேடி சந்திக்க வேண்டும், என்று மனம் ஏங்கியது! என் மன ஏக்கத்தை பார்க்க எனக்கே வியப்பாக இருந்தது! அவரது வயதென்ன எனது வயதென்ன, அவரது நிலையென்ன, எனது நிலையென்ன, அவரை மீண்டும் சந்திக்க ஏங்கும் என மனதின் நிலைதான் என்ன!

நான் குடும்பக்காரி என்று தெரிந்தும் எத்தனை இளசுகள் என் பின்னால் திரிகிறார்கள் சேட்டை விடப்பார்க்கிறார்கள். அவர்களை எல்லாம் மட்டமாக தட்டிக் கழித்துவிட்ட என் மனம், இவர் பின்னால் வட்டமடிப்பதை எண்ண வியப்பாகத் தான் இருக்கிறது! என் மன ஓட்டம் எனக்கே புரியவில்லை!

நான் சந்தையில் தேங்காக் கடையில் வாங்குவதற்காக நல்ல தேங்காயைத் தெரிவு செய்து கொண்டிருந்தேன். குனிந்து கொண்டு ஒவ்வொரு தேங்காயாகத் தூக்கி குலுக்கிப் பார்த்துக் கொண்டு பார்வையை நிமித்தினேன், நல்ல வாட்ட சாட்டமான வாலிபன் வைத்த கண் வாங்காமல் என் மார்பையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான்! பார்த்ததோடு விட்டானா! இது இப்போது இப்படி நடப்பது சர்வ சாதாரணமாகப் போய்விட்டது என்று விட்டு விடலாம்.

ஆனால் அவன், “அக்காட தேங்கா மாங்கா பழுத்தமாதிரி....!” என்று சேட்டைக் கதைகள். நான் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு வந்தேன். அவன் பின் தொடர்ந்து வந்தான். சேட்டைக் கதைகளைத் தொடர்ந்தான்,

“ அக்கா கோவிக்கிaங்களா? உண்மையிலேயே உங்கட மார்பு ரொம்பவும் அழகு! அழக அழகு எண்டு சொல்லுறதில் என்னக்கா தப்பு! “தம்பி தப்புத்தப்பாய் பேசுறாய் இனிச் செருப்பாலத்தான் தருவன்...!” நானும் அதட்டலாக கடின தொனியில் சத்தமிட்டேன்! அவன் மிரண்டு கொண்டு ஓடி விட்டான்.

இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் பருவப் பெண்களை இளம் பெண்களை பார்த்திருக்கிறேன். இம்மாதிரிக் கதைக்கும் போது மெளனமாக ஆமோதிப்பது போல் இரசிப்பது போல் காட்டிக் கொள்வார்கள்! அல்லது எதிர்ப்பை வெளிக்காட்டாமல் எந்தச் சலனமுமற்று அமைதியாயிருப்பார்கள். இதுவும் கூட மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று அவர்களை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்!

ஆனால் அவனோ விடுவதாக இல்லை! சந்தையிலோ கடைத் தெருவிலோ என்னைக் கண்டால் காணும் பின் தொடர்ந்திடுவான்! பின்னால் வந்து பின் வருமாறு சொன்னான் பச்சையாக: “நீங்க உண்மையிலேயே நல்ல அழகு உங்கட மார்பழக பார்க்க ஒரு சந்தர்ப்பம் குடுங்க மறுக்காதீங்க என்ன வெறுக்காதீங்க!....” அவன் கெஞ்சினான்! பெண்களுக்கு இளகிய மனம், கெஞ்சினால் இரங்குவார்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்ற சூட்சுமத்தை அறிந்திருக்கிறான்.

‘இவனுக்கு இண்டைக்கு சரியான பாடம் படிப்பிக்க வேணும்’ என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு பேசாமல் விறுவிறு என்று நடந்தேன். அவனும் விடாமல் பின் தொடர்ந்து வந்தான், சுறுசுறுப்பானான்! வீடுவரை வந்து விட்டான்! நான் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே ஓடினேன், தும்புத் தடியை தேடி எடுத்துக் கொண்டு அவனைத் தேடி வேகமாக வந்தேன்! அவன் ஆசை வழிய சிரித்துக் கொண்டு நின்றான்! நான் தும்புத்தடியை ஓங்கிக் கொண்டு ‘என்னடா வேணும் உனக்கு? அவர்ர ஆசையப்பா! தும்புத்தடியால பூசை தரவா?!” என்று கேட்டுக் கொண்டே நெருங்கினேன்! ஏனடா நிக்கிறாய் நாயே...! சத்தம் போட்டு அயலக் கூப்பிடவா” என்று சொல்லியதோடு நிற்காமல்... “இங்க ஓடியாங்கோ என்னக் கெடுக்ககவந்துற்றான்...” என்று அலறினேன்! அவன் பதறிக் கொண்டு ஓட்டமெடுத்தான்!

ஆனால் இவர் என்னை அணுகுகிறார், காணும் போதெல்லாம் எப்படிச் சுகாமாயிருக்குaங்களா என்பார், ‘ஏதும் கஸ்ரமெண்டாச் சொல்லுங்க, உதவிவேணுமென்டாக் கேளுங்க’ என்பார்! ஏன் இப்படி நடக்கிறார். அவரிடமும்...! இவரைச் சோதிக்கத்தான் வேண்டும், கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்....! போகிற போக்கிலேயே விட்டுப் பார்ப்போம்!

அன்றொருநாள் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக வங்கியில் நீண்ட வரிசையில் காத்திருந்தேன். சரியான வெக்கை, புழுக்கம் அதிகம்! வியர்த்துக் கொட்டியது! மண்டபத்தை விட்டு வெளியே ஓட வேண்டும் போல் இருந்தது!

“இவ்வளவு சனம் நிக்குது, புழுங்கி அவியுது மேல காற்றாடியும் இருக்குது, அது சுழராமல் வேலை நிறுத்தம் செய்யுது! ஏன்?” கெம்பீரமான குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன் அவர் தான், அவரே தான் அந்தப் பேச்சுக்குச் சொந்தக்காரர்! நான் மட்டுமல்ல எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள்!

“பேன் பழுதாப் போயிற்று அதுதான் அப்படி...” உள்ளேயிருந்து ஒரு அதிகாரியின் குரல்!

“நான் வாற நேரமெல்லாம் இது இப்படித்தானே சுழராமல் கிடக்கு! அங்க பாருங்கோ உள்ள வேலை செய்யுற ஜி(விதி!ஸிlழி எத்தின விசிறி சுழருது எண்டு! ஏன் பொது சனத்த இப்படி அலட்சியப்படுத்துaங்க!”

உள்ளேயிருந்து பதிலேதும் வரவில்லை ஒரே மெளனம்! வரிசையில் நின்றோர் தான் சிரிப்பை உதிர்த்தனர், நானும் சேர்ந்து கொண்டேன்! இப்படி வீதிக்கொருவர் இருந்தாலே போதும் நாடுதிருந்திவிடும்! என் மனம் அவரை வாழ்த்தியது!

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மனதில் அவர் மதிப்பு உயர்ந்தது! அவரை அடிக்கடி காணவேண்டும் போல் இதயம் துடித்தது! சந்தையிலோ கடைத்தெருவிலோ கண்டால் நடையை நிறுத்திவிடுவார், “எப்படி சுகமா இருக்கிaங்களா...” என்று கேட்பார். நான் நடந்து கொண்டே சுகமாத்தான் இருக்கிறன், நீங்க சுகமா என்று கேட்டுக் கொண்டே போய்விடுவேன். ஏனோ நின்று கதைக்கத் தயக்கம்! பெண்மையின் குணம் அப்படி!

ஒரு நாள் எதிர்பட்ட போது “கொஞ்சம் நில்லுங்கோ...” என்றார் கனிவாக! நான் நடையை நிறுத்தினேன். “சும்மா ஒப்புக்கு சுகமாயிருக்கிறன் சுகமாயிருக்கிறன் எண்டு சொல்லாதீங்க உங்களுக்கு என்ன கஸ்ரமோ என்னிடம் சொல்லுங்கோ, உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறன்!”

நான் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன்! பொன்னை விரும்பும் பூமியிலே என்னை இப்படியும் விரும்பும் ஒருவர் இருக்கிறாரா! ஏன் என்னில் இவ்வளவு அக்கறை கரிசனை? ஏதும் தவறான நோக்கம் இருக்குமோ! அதை அறிய வேணும் என்ற வேணவா எனக்குள். கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்!

புது நிவாரண முத்திரை கொடுக்கிறார்களாம் எடுக்க வேண்டும். பழைய விதானையை மாற்றிவிட்டார்கள். புதிய விதானை வந்திருக்கிறாராம். அவர் தன் அலுவலகத்தையும் வேறிடம் மாற்றி விட்டார். அவர் இருப்பிடத்தை தேடி விசாரித்து ஒரு தெருவால் போய்க் கொண்டிருந்தேன். மதில் சுவரோடு இருந்த பெரிய வாயிலைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர், எனக்கு அறிமுகமானவர்தான்’ அவர்தான், அவரேதான்!

பெரிய கல்வீடு தெரிந்தது, மாளிகைபோல் இருந்தது! வசதியான ஆள்த்தான் என்ற என் அபிப்பிராயம் சரியாயிற்று! வளவுக்குள் தென்னை கமுகு மா பலா வாழை என்று பிரயோசனமான மரங்கள் காய்த்து அசைந்தாடிக் கொண்டிருந்தன.

நான் நடையை மெதுவாங்கி அவதானித்துக் கொண்டு போனேன். வளவினுள்ளே மதில் கரை ஓரமாக ஒரு பெண்குரல் கண்டிப்பான தொனியில் பேசுவது.... இல்லை திட்டுவது கேட்டது! “எங்க வாய் பார்த்துக் கொண்டு நிண்டு கறிவாங்கினநீ! நாறல் மீன வாங்கி வந்திரக்கிறாய் கெதியா குடுத்து மாத்திநல்ல மீன வாங்கி கொண்டு வாப்பா! என்னத்திலதான் கெட்டித்தனம் இருக்கு! நல்ல வடிவான பொம்புளகளக் கண்டா மட்டும் நல்லா இளிச்சி இளிச்சி நல்லவடிவாக் கதைச்சுப் போட்டு வரமட்டும் தான் தெரியும்! நேற்று வாங்கின தேங்காயும் சரியில்ல... அந்த அம்மாளின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது! நான் மெல்லக் கேட்டுக் கொண்டே மெல்ல நடக்கலானேன். அவரும் தலையைக் கவிழ்ந்தபடி எதிர்ப்பக்கமாக போய்க் கொண்டிருந்தார். என்னைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை! ஏனோ தெரியவில்லை!

ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது, இவருக்கு வீட்டில் நிம்மதியில்லை! மனைவி சொல்வது போல் பெண்களின் பின்னால் சுற்றுபவரா! அதனால்த்தான் என்னை நாடுகிறாரா! வயதுக்கேற்ற குணாம்சம் இல்லாதவரா! போகப் போகத் தெரியும் அந்தப் பூவின் வாசம் புரியும்!

ஒன்றிரண்டு மாதங்கள் சென்றிருக்கும், என் குழந்தைக்கு சுகவீனம் காட்டியதால் அரசாங்க வைத்திய மனைக்கு தூக்கிக் கொண்டு போய் வெளிக்கள நோயாளர் பிரிவில் எனது முறைக்காக காத்திருந்தேன். ஒவ்வொருவராக உள்ளே போகப் போக அரக்கி அரக்கி ஒவ்வொரு கதிரையாக மாறி அமர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தேன்.

அப்போது பலரும் போய்வந்து கொண்டிருந்த அந்த நீண்ட திண்ணைப் பகுதியில், இருத்தி தள்ளும் நடை வண்டியில் ஒரு வயதான மாதுவை இருத்தி தள்ளிக் கொண்டே வந்தார் ஒருவர். நன்றாக உற்றுப் பார்த்தேன், அவர்தான்! அவரே தான்!

அந்த வயதான மூதாட்டி அவர் மனைவியாகத்தான் இருக்க வேண்டும்! முகம் நன்றாக வாடி சோர்ந்து போயிருந்தது! அவர் நல்ல எடுப்பான் தோற்றம்! மிடுக்கான நடை! கவர்ச்சியான முகம்! இருவருக்கும் தோற்றத்தில் ஒற்றுமை இல்லை! கிஞ்சித்தும் பொருத்தமில்லை!

இந்த வேற்றுமை ஏற்ற இறக்கம் தான் இவர்கள் குடும்பப் பிரச்சினைக்குக் காரணமா! அதனால்த்தான் தவறான வழியில் போகப் பார்க்கிறாரா! போகப் போகப் புரியும் பொறுத்திருந்து பார்ப்போம்!

அதிகமாக சந்தையிலேதான் அவரை சந்திக்க முடிகிறது! அன்றும் சந்தையிலே என்னைக் கண்டதும் முகமெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு வந்தார்! “நீங்க கதைகள் வாசிக்கிaங்களா” என்றார். “கதைகள் படிப்பேன், வாசிப்பது தான் எனது பொழுதுபோக்கு!”

“அப்படியா! ரொம்பச் சந்தோஷம்! இண்டைய பத்திரிகையில என்ர கதவந்திருக்கு கட்டாயம் நீங்க படிக்க வேணும்...”

“நீங்க கதைகள் எழுதுற நீங்களா! எனக்கு இப்பதானே தெரியும்! ஆள் பெரிய ஆள்தான்!

“நான் பெரிய ஆளுமில்ல, நீங்க சின்ன ஆளுமில்ல. எல்லோரும் மனிதர்தான்!”

“நீங்க பேச்சிலும் வல்லவர், எழுத்திலும் வல்லவர், குணத்திலும் நல்லவர். சரிதானே!” “நீங்க அதிகம் புகழா தேயுங்க அது எனக்குப் பிடிக்காது! எழுத்தில் வல்லவனா என்று என் எழுத்துக்களைப் படித்தால்த்தானே தெரியும்! குணத்தில் சிறந்தவனா என்று இன்னும் நெருக் கமாகப் பழகினால்தான் புரியும்!”

“பத்திரிகை முடிஞ்சுதோ என்னவோ தெரியாது! கெதியாப் போய் வாங்கி வாசிச்சுப் போட்டுக் கதைக்கிறன்”

சொல்லிக் கொண்டே வேகமாக நடையைக் கட்டினேன் பத்திரிகை வாங்குவதற்கு! நடக்கும் போது வேகமாக சிந்தனை வேல செய்தது! அவர் குரல் ரீங்காரமிட்டது. ‘நெருங்கிப் பழகினால்தானே குணத்தைப் பற்றி தெரியும்...’ அப்படியானால் இன்றும் நெருங்கிப் பழகச் சொல்கிறாரா!

உறவை நெருக்கமாக்க விரும்புகிறாரா! தன் குணத்தைக் காட்டப் போகிறாரா! தன் எண்ணத்தை வெளிப்படுத்தப் போகிறாரா! அல்லது என் குணத்தை அறிய முயற்சிக்கிறாரா! எல்லாம் போகப் போகப் புரியும்! புரியும் வேளையும் நெருங்கி வந்து கொண்டிருப்பதாகவே தெரிந்தது!

மனைவி வருத்தக்காரி, கொடுமைக்காரி இவருக்கு பொருத்தமில்லாதவள், அதனால் இவர் தவறான போக்கில் போகப் பார்க்கிறாரா! பார்வையிலே கனிவு, பேச்சிலே இனிமை, எழுத்தாளனாகவும் இருக்கிறார், இழுக்கான வழியில் போக மாட்டார், கண்ணியமானவராகத்தான் இருப்பார்.... இப்படி பலப்பலதை எண்ணிக் குழம்பியது மனம்!

அடுத்த முறை சந்திப்பின் போது கதையை பற்றி அபிப்பிராயம் கேட்டார். நான் என் மனிதில் பட்டதை பட்டென்று சொன்னேன். “நான் திரும்பத் திரும்ப வாசித்தேன் உங்கள் கதையை. மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது! அவ்வளவு சுவாரஸ்சியமாக இருந்தது! உண்மையாக நடப்பது போலிருந்தது! உலகத்தில் வாழக்கையில் நடப்பதைத் தான் தத்துரூபமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிaர்கள்!

நல்ல கருத்தை முன் வைத்து எழுதியிருக்கிaர்கள். ஆனால்.... ஆனால்.... கொஞ்சம் காமச்சுவை இருப்பது போல் தெரிகிறது! ஏன் ஆபாசமில்லாமல் உங்களால் எழுத முடியாதா! இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா!”

அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்! “நானா இப்படிப் பேசினேன்! எனக்கும் தான் ஆச்சரியம்!

அவர் சிரித்தித்துக் கொண்டே சொன்னார், “நீங்கள் ஒரு நல்ல விமர்சகர் போல் இருக்கிறது! விமர்சனங்கள் எழுதலாமே, ஏன் கதை கட்டுரை கூட எழுதலாமே, பிரசுரமாவதற்கு நான் பொறுப்பு....!”

அவர் பேச்சைக் கேட்டதும் நானும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது! போகும் போது அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டு நடந்தேன். ‘ஏன் ஆபாசமாக எழுதுகிaர்கள்’ என்ற என் கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்பிவிட்டாரே! காமப்பித்தனாக இருப்பாரோ அதைத்தான் எழுத்திலும் காட்டுகிறாரோ! வருத்தக்காரக்கிழவி மனைவியானதால் இப்படி ஆகிவிட்டாரோ!

மறு சந்திப்பின் போது கேட்டே விட்டேன், “உங்கட கதை சம்மந்தமாக நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லையே....?” “அனேகமாக கதை எழுதுபவர்கள் தங்கள் மதிப்பு மரியாதைக்காக, தம்மை கெளரவப் படுத்திக் கொண்டு எழுதுகிறார்கள். உண்மைகளை எடுத்துச் சொல்ல அஞ்சுகிறார்கள்! நான் அசிங்கப்பட்டாலும் கவலைப்படாமல் எல்லா ஆபாசங்களை உண்மைகளை எல்லாம் பட்டவர்த்தனமாக எழுதுகிறேன். என்னைக் காமாந்தகாரன் என்று நீர் மட்டும் சொல்லாமல் இருந்தால் போதும்!”

ஆணித்தரமான அவர் பேச்சு அவரைப் பற்றிய சந்தேகத்தை கொஞ்சம் தெளிவுபடுத்திற்று! என்றாலும் என் மனம் முற்றாக தெளிவு பெறவில்லை! இவரைப் பற்றிய ஐயப்பாடு நீடித்துக் கொண்டுதானிருந்தது! சந்தேகத்தை நீக்க வேண்டும் என்ற வேணவா வளர்ந்து கொண்டே வந்தது!

அதன் விளைவு, இவரை சோதனை செய்ய முற்பட்டேன்! ஒரு விஷப்பரீட்சை!

சந்தையில் ஆலமரநிழலில் அவரைச் சந்தித்தேன். வழமை போல சிரித்துக் கொண்டு வந்தார். கனிவான குரலில். “நலம்தானா? கஸ்ரமேதும் உண்டா? உதவி ஏதும் தேவையா? நீங்கள் இன்னும் ஒரு கஸ்டத்தையும் சொல்லவில்லையே, உதவி ஏதும் கேட்கவில்லையே...!”

“நீங்கள் சந்தை வெளியிலும், சந்தி வெளியிலும் சந்திச்சு சந்திச்சு துன்பம் தொல்லைகளைச் சொல் சொல் எனறால் எப்படி! வீட்டுக்கு வாருங்களன் நல்ல தாராளமாக எல்லாக் கதைகளையும் கதைக்கலாம்! ஆறுதலாக இருந்து அந்தரங்கமாக கதைக்கலாம்! இப்ப எண்டாலும் சரிதான் நான் தனியத்தான் இருப்பன்....!” என் திட்டப்படி வலையை விரித்தேன்! அவர் வீழ்ந்து விடுவார் என்றே எதிர்பார்த்தேன்! தனியே இருக்கும் கனியே, தடையென்ன நமக்கு இனியே! என்று சொல்லமாட்டாரா என்ன? நான் சொன்னதும் ஏதோ சொல்லக்கூடாததை நான் சொல்லியது போல் கைகளை உதறி வாயிலே கையை வைத்தார்! சற்று மெளனத்தின் பின் நிதானமாக உரைத்தார்.... “உலகத்தில் உயர்ந்தது ஒழுக்கம் தான். ஒழுக்கம் தான் மனிதனை உயர்த்தும் ஏணி! ஒழுக்கம் நேர்மையில்லாத எந்த முயற்சியும் பலனளிக்காது! ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்ள வேண்டும்! ஒழுக்கம் கெடும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு என் பதிலுக்காக காத்திராமல் விறு விறு என்று போய்விட்டார்!

எனது சோதனையில் தேறிசாதனை படைத்து விட்டார்! ஆள் ஒழுக்கசீலன் தான்! ஆனால் என்னோடு பழகும் உறவுக்கு அர்த்தம் என்ன? எந்த வகையைச் சேர்ந்தது இந்த உறவு?

என் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தே விட்டது விரைவில்! எனது இந்த சோதனைக்குப் பின் அவர் என்னைச் சந்திக்காமலே விட்டார்! அது என்னை வேதனை செய்தது! நிழலின் அருமை வெயிலில் தெரியும், உறலின் அருமை பிரிவில் தெரியும்! அவர் சந்திப்புக்காக மனம் ஏங்கியது, தவியாமல் தவித்தது!

சில நாட்கள் சென்றிருக்கும் அதே ஆலமர நிழலில் அவர் நின்றிருந்தார்! என் வருகைக்காகத்தான் காத்திருக்கிறார்! மனம் குதூகலத்தால் கூத்தாடியது!

என்னை கண்டதும், “இன்றைய பத்திரிகையில் எனது கதை வந்திருக்கிறது! நீங்கள் கட்டாயம் படிக்க வேணும்! என்னைப் பற்றிய சந்தேகங்கள் பலவற்றுக்கு விடை கிடைக்கும்! கதையை கட்டாயம் வாசிப்பீர்களா?”

“ஓம்! அவசியம் வாசிப்பேன், அதைவிட முக்கியமான வேலை வேறு என்ன எனக்கு இருக்கிறது!”

போன வேகத்தில் நாளேட்டை வாங்கினேன். வாசித்த பின்பு தான் அவர் கூறிய விதமாக எனது கேள்விகள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது! தெளிவு பிறந்தது!

நமது உறவின் கதையைத்தான் அப்படியே அந்தக் கதையில் அழகுற வடித்திருந்தார்! அடைவு எடுக்கப் போனவிடத்தில் அவர் செய்த உதவியால் ஏற்பட்ட முதல் சந்திப்பில் இருந்து ஆரம்பித்த அக்கதை அடிக்கடி சந்தையில் கடைத் தெருவில் சந்தித்து இதமாக வளர்ந்து வரும் தொடர்பாடல்களை எல்லாம் ஒன்றும் விடாமல் எழுதிக் கொண்டே போனார்! தான் சுகமா கஸ்ரமா, உதவி ஏதும் தேவையான என்று கேட்பதையும், நான் துயரங்களைச் சொல்லவோ, உதவி ஒன்றும் கேட்காமல் மழுப்பிக் கொண்டே செல்வதையும், அது தன் இதயத்தை வதை செய்வதாகவும் குறைப்பிட்டார்! உதவி செய்தால்தான் தன் மனம் ஆறுதல் காணும் என்றும் குறிப்பிட்டார். நான் நல்லதொரு இலக்கிய இரசிகை என்று குறிப்பிட்ட அவர், என்னைப் போன்ற துணை என்றும் தன் பக்கத்திலே இருந்தால் இணையில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்! மேலும் தொடரும் அக்கதையில் நான் தனியான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததையும் குறிப்பிட்டு, நான் தன்னை தவறாக விளங்கிக் கொண்டதாகவும், தவறான உறவுக்காய் உறவாடி வருவதாய் தவறாக விளங்கிக் கொள்வதாகவும் விசாரப்பட்டுச் சொல்லி, தான் எதற்காக என் தொடர்பை தொடர்வதை தெளிவாகவே குறிப்பிட்டு கதையை முடித்திருந்தார்!

‘நான் சிரிக்கும் போது இன்று பூத்த ரோஜா போல் இருப்பதாகவும், பழகும் போது தன் இதயத்துக்கு இதமளித்து பொருத்தமான துணை என்று உணர்த்துவதாகவும், இந்த அழகான மலர், என்றும் வாடா மலராக இருப்பதையே பார்க்க வேண்டும், வாடாமல் காக்கவேண்டும், இதயத்துக்கு இதமளிக்கும் இந்த உறவே போதும் இந்த உறவே நீடிக்க வேண்டும் என்று எழுதி கதையை முடித்திருந்தார்! கதைக்கு நல்லதொரு பெயரும் இட்டிருந்தார், “ஒரு இங்கீத உறவு”

எனது மன விருப்பும் அது தான்! இந்த இங்கீத உறவு ஒன்றே போதும்! மனதை தாலாட்டிக் கொண்டே இருக்கும்! உதவி ஏதும் நான் கேட்காவிட்டாலும் உதவும் மனமொன்று என் பக்கத்தில் இருந்தாலே போதும்! இதமான இந்த இங்கீத உறவு பதமாக நடைபோட்டுக் கொண்டுதானிருக்கிறது! நடை போடும்!


சூசை எட்வேட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum